நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க , எல்லாவற்றையும் விட்டுவிட்டு ,
தேர்த்ல் அறிவிப்பு வந்ததிலிருந்து சிலர் வாயில் வருவது ”நோட்டா” என்ற சொல். அபபடி என்ன
நோட்டாவில் இருக்கிறது. ஐ.நா சபையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தும்
” வீட்டோ
”
போன்று அதிக அதிகாரம் படைத்ததா என்றால் இல்லை. நோட்டோ என்பது ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
யாரையும் ஒரு வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால், இருக்கின்ற வேலையை எல்லாம்
விட்டுவிட்டு அந்த வாக்காளர் நடந்தோ அல்லது சொந்த வண்டியிலோ வந்து வேர்க்க விறுவிறுக்க
கியூ வரிசையில் நின்று, தான் இன்னார்தான் என்று நிரூபித்துவிட்டு “நோட்டா” பட்டனைத் தட்டிவிட்டு செல்ல
வேண்டும். நோட்டா (NOTA) என்ற ஆங்கில சொல்லுக்கு NONE OF THE ABOVE என்று சொல்லிக் கொள்கிறார்கள். கிராமத்து
மக்களிடம் சொன்னால்.அது என்ன லோட்டா? என்று கேட்கிறார்கள். வழக்கம் போல சமூக
ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் இதைத் தூக்கிக் கொண்டு நோட்டீஸ் கொடுப்பதிலும்,
வீடுவீடாகச் சென்று பிரச்சாரம்
செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்காள். அவர்கள் உண்மையிலேயே நோட்டா ஆர்வலர்களா
அல்லது வேறு ஏதேனும் எண்ணம் கொண்டவர்களா என்று தெரியவில்லை.
சாதாரணமாக ஒரு சிறு குழந்தைகூட தனக்கு ஒரு சின்ன கோபம் என்றாலும் தனது
கோபத்தைக் காட்ட சாப்பாட்டை புறக்கணிக்கிறது. வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட
நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள். இதுபோல அவரவர் நிலைக்கு ஏற்ப புறக்கணிப்பு செய்கிறார்கள்.
சரி அப்படியே நோட்டா ஓட்டு போட்டாலும் என்ன நடந்து விடப் போகிறது? உதாரணத்திற்கு
ஒரு தொகுதியில் வேட்பாளர்களுக்கு விழும் ஓட்டுகளை விட நோட்டோ அதிகம் இருந்தால்
என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஒரு தொகுதியில்
X - 10000 வாக்குகள்
Y - 20000 வாக்குகள்
Z - 30000 வாக்குகள்
NOTA –
40000 வாக்குகள்
என்று வாக்குகள் விழுந்தால் என்ன செய்யப் போகிறார்கள். 30000 வாக்குகளைப்
பெற்ற Z ஐத்தான் வெற்றி பெற்றவராக
அறிவிப்பார்க்ள்.
தினமணி
தரும் செய்தி “ நோட்டாவுக்கு ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானால்
என்ன செய்வது என்பதற்கு இப்போதுள்ள மக்கள்
பிரதிநிதித்துவ சட்டத்தில் பதில் இல்லை. இது குறித்து விவாதித்து
உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் நோட்டாவை வேகமாகப் பிரபலப்படுத்த முடியும்.”
அப்புற்ம் எதற்கு அய்யா நோட்டோவுக்கு என்று ஒரு பட்டன். அதை எண்ணுவதற்கு
ஏகப்பட்ட அலுவலர்கள். இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது. வேண்டுமானால்
சிலர் எங்களால்தான் நோட்டோ ஓட்டுக்கள் அதிகம் விழுந்தன என்று சொல்லி விளம்பரம்
செய்து கொள்ளலாம். சில வேட்பாளர்கள் எதிர்
வேட்பாளருக்கு ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டோவை தவறாகப்
பயன்படுத்தவும் வழியுண்டு.
இப்போது தேர்தலுக்கு முன்னர் சில கூட்டணி காட்சிகள். நாம் தேர்தலில்
வாக்களித்த பின்னர் , ரிசல்ட் வந்த பின்னர் மறுபடியும் கூட்டணியை கலைத்து
போடுவார்கள். அப்போது தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்ட்ணி. வழக்கம் போல எல்லாம்
நடைபெறும். மளிகைக்கடையை மாற்றுவது போலத்தான்.
எனவே மக்களே உங்கள் ஓட்டை அடுத்தவர் போட்டு விடுவதற்கு முன்னர் போய் போட்டு
விடுங்கள். உங்கள் விருப்பம்!
PHOTOS THANKS TO GOOGLE IMAGES