”வலையுலகுக்கு டாட்டா ,பை பை :(’ என்ற தலைப்பை எனது டேஷ்போர்டிலும்,
தமிழ்மணத்திலும் நண்பர் பகவான்ஜி அவர்களின் இன்றைய காலைச் செய்தியாக படித்தேன். நீண்டகாலமாக,
அதுவும் ஜோக்குகளை மட்டுமே எழுதி தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருந்த பிரபல வலைப்பதிவர்
திடீரென வலையுலகை விட்டுச் செல்வேன் என்பது வலைப்பதிவர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்தான்.
இப்போது மூத்த வலைப்பதிவர்கள் நிறையபேர் வலைப்பக்கம் எழுதுவதும்
இல்லை வருவதும் இல்லை. சிலர் ஃபேஸ்புக் பக்கம் நண்பர்கள் குழுக்களில், லைக்கை விரும்பியும்,
குறுஞ்செய்திகளை எழுதுவதில் ஆர்வமாயும், சென்று
விட்டனர். ஆனாலும் வலைப்பக்கம் ஆர்வம் உள்ளவர்கள் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களில் மதுரை நண்பர் பகவான்ஜி அவர்களும் ஒருவர். இப்போது பகவான்ஜி ( ஜோக்காளி http://www.jokkaali.in ) அவர்களும் டாட்டா சொல்லி
இருக்கிறார். ( இன்னும் சில நண்பர்கள் வலைத்தளம், ஃபேஸ்புக் என்று இரண்டிலும் சிறப்பாக
எழுதி வருவதைப் பார்க்கலாம்.) இப்படியே போனால் தமிழ் வலைப்பக்கம் எழுதுபவர்களும், படிப்பவர்களும்
நிறையவே குறைந்து விடுவார்கள்.
நண்பர் பகவான்ஜியின் நகைச்சுவை முழுக்க முழுக்க, வாழ்வில் நாம்
எதார்த்தமாக சந்திக்கும், குடும்பம் மற்றும் பொதுவாழ்வு குறித்தே அமைந்து இருக்கும்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கருத்துகள் கொண்டவை. இருந்தபோதிலும், பெண்களின்
செயல்பாடுகள் குறித்த நையாண்டியே அதிகம். நானும் இதுபற்றி, மதுரையில்(2014) நடந்த வலைப்பதிவர்கள்
சந்திப்பில் அவரிடம் நேரில் சொல்லி இருக்கிறேன். அவரும் இதனை ஜோக்காகவே எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று சொன்னார்.
படம் மேலே: மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் (2014) (இடமிருந்து வலம்)
வலைச்சரம் ஆசிரியர் அன்பின் சீனா, கவிஞர் ரமணி, பகவான்ஜி மற்றும் பேராசிரியர் தருமி
படம் மேலே: புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் (2015) (இடமிருந்து
வலம்) T.N.முரளிதரன், தில்லைக்கது துளசிதரன்,
மணவை ஜேம்ஸ் மற்றும் பகவான்ஜி
தமிழ் வலையுலகில், நகைச்சுவை எழுத்தாளராக இவர் மட்டுமே எழுதிக்
கொண்டு இருந்தார். தமிழ்மணத்தில் தொடர்ந்து ஒருவர் முதலிடத்திலேயே இருந்தார் என்பது
பெரிய விஷயம்தான். பகவான்ஜி அவர்களிடம் நல்ல எழுத்துத் திறமையும், வலையுலகின் மீது
ஆர்வமும் இருக்கிறது. அவர் இந்த ஜோக்காளி வலைத்தளத்தில் தொடர்ந்து ஜோக்குகளை எழுதுவதை,
கஷ்டம் என்று நினைத்தால், பகவான்ஜி என்ற பெயரில் புதிதாக ஒரு வலைத்தளம் தொடங்கி தொடர்ந்து
வலைப்பக்கம் வரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்
தொடர்புடைய எனது பிற பதிவு: