எங்கள் வீடு இருப்பது புறநகர். இன்று காலையிலேயே வெளியே டவுன் பக்கம்
கொஞ்சம் சில வேலைகள். முடித்து விட்டு மதியம் வீடு வந்தேன். வீட்டில் யாரும் இல்லாததால்
எனக்கு வந்த தபாலை வராண்டாவில் போட்டு விட்டு சென்றிருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி. புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக் கிழமை
11.10.2015 அன்று நடக்க இருக்கும் “நான்காம் ஆண்டு, வலைப்பதிவர் திருவிழா – 2015” இற்கான
அழைப்பிதழ்தான் அது. கூடவே நண்பர்களுக்கு கொடுக்க இன்னும் நான்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்த “கணினித் தமிழ்ச் சங்கம் – புதுக்கோட்டை” நண்பர்களுக்கு
நன்றி.
எனக்கு வந்த அழைப்பிதழை, சிறிய எழுத்துக்கள் தெளிவாக தெரியும் வண்ணம் ஸ்கேன்
செய்து இங்கு வெளியிட்டுள்ளேன். (படங்களை தனியே ஒரு folder இல் சேமித்து, க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)
அன்பர்கள் யாவரும் நகல் எடுத்துக் கொள்ளலாம்.
அனைவருக்கும் எனது உளங்கனிந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா வாழ்த்துக்கள்!