உலக மக்களின்
நன்மைக்காக உலகில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், வானொலி தினம், புற்றுநோய்
தினம், ஆஸ்துமா தினம் - என்று பல்வேறு
தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் பல தினங்கள் ஐநா சபையால் சுட்டிக்
காட்டப்பட்டு கொண்டாடப் படுகின்றன. உலகம் முழுக்க இப்போது வலைப்பதிவில் எழுதும்
பதிவர்கள் (BLOGGER) நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். உலக
ப்ளாக்கர்கள் தினம் ( WORLD BLOGGERS DAY ) என்று அங்கீகரிக்கப் பட்ட ஒருதினம் இருக்கின்றதா என்று
கூகிளில் (GOOGLE ) தேடிப்
பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும், BLOGGERSDAY.ORG என்ற அமைப்பின் கீழ் 2007 – இலிருந்து அக்டோபர், 16 ஆம் நாளை ( OCTOBER , 16 ) BLOG ACTION DAY _ என்று
கடைபிடித்து
வருவது தெரிய வந்தது.
BLOG ACTION DAY -என்றால்
என்ன?
COLLIS மற்றும் CYAN TA’EED ஆகிய இருவரும் ENVATO என்ற ஆஸ்திரேலிய ஆன்லைன் வர்த்தக
நிறுவனத்தின் நிறுவனர்கள். அவர்களுக்கென்று ஒரு குழு இணையத்தில் உண்டு. அவர்கள் தங்களது குழுவினரின் துணையோடு சேவை எண்ணத்தில் 2007, அக்டோபர், 15 ஆம் நாளை BLOG
ACTION DAY என்று
ஒருநாளை அறிவிப்பு செய்தனர். அப்போது அன்றைய நாளில் சுற்றுப்புறச் சூழல் ( Environment ) என்ற ஒரே தலைப்பின் கீழ் அனைத்து வலைப் பதிவர்களையும் எழுதுமாறு அழைத்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு
இணங்க நிறைய பதிவர்கள் அந்த தலைப்பில் எழுதினர். எதிர்பார்த்ததை விட அந்த நிகழ்ச்சி அதிக வெற்றியைத் தந்தது. 2009 இல் இவர்கள் தாங்கள் துவக்கிய, BLOG
ACTION DAY – நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணியை தாங்கள் சார்ந்த CHANGE
என்ற அமைப்பிடம் தந்தனர். 2011 இல்
அவர்கள் VOICE BLOGGING PROJECT
என்ற அமைப்பை நடத்தும் Karina Brisby , Jason Wojciechowski. ஆகிய இருவரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர், 16 ஆம் நாள் இந்த அமைப்பின் கீழ் உள்ள வலைப்பதிவர்கள் அனைவரும், குறிப்பிட்ட
ஒரு தலைப்பில், மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக குரல்
எழுப்பி. எழுதி வருகின்றனர்.(
நமது தமிழ் வலைப் பதிவர்களில் பலரும் ஒருங்கிணைப்பு இல்லாமல் அந்தந்த தினங்களில்
எழுதுவதைக் காணலாம் ) இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒருமித்த குரலில் எழுதுவதால், மக்கள்
மத்தியில் விழிப்புணர்வும், போராட்ட எழுச்சியும் உண்டாகின்றன.
Stop acid attacks: lend your voice to the campaign ( A photo
of acid attack victim Laksmi at the office of NGO Stop Acid Attack in New Delhi. (Gurinder
Osan/Hindustan Times )
2006 ஆம் ஆண்டு,
டெல்லியில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லட்சுமி என்ற 15 வயது மாணவியிடம் நஹீம்
கான் ( 32 வயது ) என்பவன், தனது ஒருதலைக் காதலைச் சொன்னான். அவள் ஏற்றுக்
கொள்ளாததால், லஷ்மியின் முகத்தில் நஹீம்
கான் ஆசிட் வீசீனான். கீழ்க் கோர்ட்டில்
சரியான நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளி நஹீம் கான் பெயிலில் வந்தான். விடுதலையும்
பெற்றான். லஷ்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவரது நியாயமான
கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ஒரேநாளில் வலைப்பதிவில் எழுதினர்.
“STOP ACID ATTACKS “ என்ற குரல்
எழுந்தது. இவரைப் போன்று ஆசிட் வீச்சால் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் குரல்
எழுப்பினர். இதன் எதிரொலியாக லஷ்மிக்கு நியாயமும் இழப்பீடும் கிடைத்ததது. குற்றவாளி
நஹீம் கான் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான். மத்திய அரசும் ஆசிட் விற்பனை தொடர்பாக சில
கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
இதுவரை WORLDBLOGGERSDAY.ORG
அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து அனைவரும் எழுதிய தலைப்புகளைக் கீழே காண்க.
2007 – சுற்றுப்புறச் சூழல் ( Environment )
2008 – வறுமை ( Poverty )
2009 – பருவகால மாற்றம் (Climate Change)
2010 – தண்ணீர் ( Water )
2011 – உணவு ( F ood )
2012 – நமது சக்தி ( Power of
We )
2013 – மனித உரிமைகள் ( Human
Rights )
BLOG ACTION DAY - இல் பங்கு கொள்வது எப்படி?
இந்த அமைப்பானது
தனிப்பட்ட வலைப்
பதிவரை மட்டுமல்லாது லாப
நோக்கம் ஏதுமின்றி செயல்படும் மற்ற தொண்டு
நிறுவனங்களையும் பதிவு செய்து கொள்ள அழைக்கின்றனர். இந்த தொண்டு நிறுவனங்கள், BLOG
ACTION DAY இல் பங்கு கொள்ள வலைப் பதிவர்களாக இருக்கும்,
தமது உறுப்பினர்களை அழைக்கின்றனர். மேலும் புதிய வலைப்பதிவாளர்களையும் உருவாக்குகின்றனர்..பெரும்பாலும்
ஆங்கிலத்தில்தான் அவர்கள் தரும் தலைப்பின் கீழ் அன்றைய தினம் எழுதுகின்றனர்.
சென்ற ஆண்டு
(2013) அக்டோபர் 15 முதல் 17 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்ட BLOG ACTION DAY இல் மனித
உரிமைகள் ( Human Rights ) என்ற தலைப்பின் கீழ், 130 நாடுகளிலிருந்து 2416 வலைப்பதிவுகள் (BLOGS) 26 மொழிகளில் எழுதப்பட்டன.
இந்த ஆண்டு “BLOG
ACTION DAY 2014” இற்கு பதிவு செய்ய வலைப் பதிவர்களை அழைத்துள்ளனர். விவரம் வேண்டுவோர்
செல்ல வேண்டிய இணையதளம் : http://blogactionday.org/register-to-take-part/#.UsfGMftSHEQ
இந்த தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி
பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.
இதற்கான முயற்சியில், அண்மையில் சென்னையில் வெற்றிகரமாக தமிழ் வலைப்பதிவர்
மாநாட்டை நடத்திய மூத்த வலைப்பதிவர்களும் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமமும (http://www.tamilbloggers.info ) ஒருங்கிணைய வேண்டும்.
கட்டுரை எழுத துணை
புரிந்தவை:
PICTURES THANKS TO : GOOGLE
;))))) மிகவும் அருமையான புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பாக உள்ளது நீங்கள்சொல்வது உண்மைதான் ஐயா. தேடலுக்கு வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > 2008rupan said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ADHI VENKAT said...
ReplyDeleteசகோதரி ஆதி வெங்கட் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
அறியாத செய்தி ஐயா
ReplyDeleteதாங்கள் முன்வைக்கும் யோசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐயா
ஒன்றிணைவோம் ஐயா
அன்புடையீர்..
ReplyDeleteநல்லதொரு சிறப்பான தகவலைப்
பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
புதிய தகவல்... தகவலை பலருக்கும் அறியத் தந்த உங்களுக்கு நன்றி...
ReplyDeleteபுதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete//இந்த தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.//
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
அறியாத புதிய தகவல் ஐயா... நன்றி... பலரும் முகநூல் வலையில் சிக்கி / மூழ்கி விட்டதால் சிறிது சிரமம் தான்... இருந்தாலும் சில வலைத்தள நண்பர்களிடம் ஆலோசிக்கிறேன்...
ReplyDeleteஅண்மையில் சென்னையில் வெற்றிகரமாக தமிழ் வலைப்பதிவர் மாநாட்டை நடத்திய மூத்த வலைப்பதிவர்களும் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமமும (http://www.tamilbloggers.info ) ஒருங்கிணைய வேண்டும்.//
ReplyDeleteநல்ல யோசனை. டிடி சொல்வதுபோல் சமீப காலமாக பல முந்நாள் ப்ளாகர்கள் முகநூலில் ட்விட்டரில் மும்முரமாமக இருக்கின்றனர். ஒரு பக்க பதிவு எழுத அவர்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது. மேலும் தரமான சிந்தனைகளை பதிவிடுபவர்களுக்கு அத்தனை வரவேற்பும் கிடைக்காததால் பல நல்ல சிந்தனையாளர்கள் ப்ளாக் எழுதுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் உண்மை.
சிறப்பான தகவல். அனைவரும் முயன்றால் நிச்சயம் நாமும் எழுதலாம்.....
ReplyDelete
ReplyDeleteசிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா...
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
ReplyDelete// அறியாத செய்தி ஐயா!தாங்கள் முன்வைக்கும் யோசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐயா ஒன்றிணைவோம் ஐயா //
கரந்தை ஆசிரியர் சகோதரர் ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// அன்புடையீர்.. நல்லதொரு சிறப்பான தகவலைப்
பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. //
தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDelete// புதிய தகவல்... தகவலை பலருக்கும் அறியத் தந்த உங்களுக்கு நன்றி... //
சகோதரர் தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி! தமிழில் வலைச்சரம் மூலமாகவும் BLOG ACTION DAY யை நாம் வேறு விதமாகவும் செய்யலாம்.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete/// புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
//இந்த தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.//
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். ///
அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// அறியாத புதிய தகவல் ஐயா... நன்றி... பலரும் முகநூல் வலையில் சிக்கி / மூழ்கி விட்டதால் சிறிது சிரமம் தான்... இருந்தாலும் சில வலைத்தள நண்பர்களிடம் ஆலோசிக்கிறேன்... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துக்கு நன்றி!
பல்வேறு வலைததள நண்பர்களிடம் உங்களுக்கு தொடர்பு இருப்பதால் உங்களுக்கு இது சாத்தியம்தான். மேலும் FACE BOOK இல் இருப்பது போல அவசரமான நண்பர்களுக்காக, வலைப் பதிவில் LIKE வைத்தாலும் சரி போல் தோன்றுகிறது.
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDelete// நல்ல யோசனை. டிடி சொல்வதுபோல் சமீப காலமாக பல முந்நாள் ப்ளாகர்கள் முகநூலில் ட்விட்டரில் மும்முரமாமக இருக்கின்றனர். ஒரு பக்க பதிவு எழுத அவர்களுக்கு நேரமில்லை போலிருக்கிறது. மேலும் தரமான சிந்தனைகளை பதிவிடுபவர்களுக்கு அத்தனை வரவேற்பும் கிடைக்காததால் பல நல்ல சிந்தனையாளர்கள் ப்ளாக் எழுதுவதையே நிறுத்திவிட்டனர் என்பதும் உண்மை. //
அய்யா டிபிஆர் ஜோசப் அவர்களின் ஆழமான கருத்துரைக்கு நன்றி! சமீப காலமாக வலைப்பதிவர்கள் அதிகம் எழுதுவது குறைந்து வருகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. திண்டுக்கல் தனபாலன் போன்ற நண்பர்கள் ஏதாவது செய்தால் நல்லது.
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// சிறப்பான தகவல். அனைவரும் முயன்றால் நிச்சயம் நாமும் எழுதலாம்..... //
சகோதரர் வெங்கட் நாகராஜின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > MTM FAHATH said...
ReplyDelete// சிறப்பான தகவல் தான்...பகிர்வுக்கு நன்றி ஐயா...//
அன்புச் சகோதரர் எம் டி எம் பஹத்திற்கு நன்றி!
புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்வலைப் பதிவர்களை ஒன்றிணைப்பது ஒரு சவாலான விஷயம். டிடியின் முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
ReplyDeleteநாமும் அப்படி ஏதாவது எழுதலாமே!
தமிழ்மணம் +1
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழ்வலைப் பதிவர்களை ஒன்றிணைப்பது ஒரு சவாலான விஷயம். டிடியின் முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும். //
மூத்த பதிவர், அய்யா GMB அவர்களுக்கு வணக்கம்! ஆமாம் அய்யா! திண்டுக்கல் தனபாலனுக்கு சாத்தியமான விஷயம்தான். தமிழ் வலைப்பதிவர்கள் குழுமமும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
மறுமொழி > நம்பள்கி said...
ReplyDelete// தகவலுக்கு நன்றி! நாமும் அப்படி ஏதாவது எழுதலாமே!
தமிழ்மணம் +1 //
நம்பள்கி அவர்களுக்கு நன்றி! ஜாதி, மதம், அரசியல் இவைகளைக் கடந்து நடுவு நிலையோடு எழுத வேண்டும். மேனாட்டினருக்கு சாத்தியமான இந்த அணுகுமுறை நம்நாட்டவருக்கு எப்படி என்று தெரியவில்லை!
தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக இது சத்தியமே. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteBLOG ACTION DAY தினத்தன்று நமது தமிழ் வலைப் பதிவர்களும் ஒருங்கிணைந்து தமிழில் எழுதி பங்கு பெற வேண்டும். தனிப்பட்ட முயற்சியாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்தால் நல்லது.
ReplyDeleteமுதல் அடி எடுத்துவைத்து ஆரம்பிக்கப்படவேண்டிய மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அறியாத தகவல்
ReplyDeleteஅறிந்திருக்கவேண்டிய தகவல்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நல்ல விதையை அருமையாக விதைத்துள்ளீர்கள்
நிச்சயம் விளைந்து பலன் தரும்
tha.ma 6
ReplyDeleteமறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDelete// தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக இது சத்தியமே. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று பார்க்கிறேன். //
சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// முதல் அடி எடுத்துவைத்து ஆரம்பிக்கப்படவேண்டிய மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..! //
ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// அறியாத தகவல் அறிந்திருக்கவேண்டிய தகவல்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி நல்ல விதையை அருமையாக விதைத்துள்ளீர்கள் நிச்சயம் விளைந்து பலன் தரும் //
// tha.ma 6 //
கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!