நான் சிறு வயது முதல் திமுக அனுதாபியாக இருந்தவன். கட்சி உறுப்பினர் கிடையாது.
ஆனாலும் எம்ஜிஆரின் ரசிகன். கண்மூடித்தனமான ரசிகன் கிடையாது. படங்களை ரசித்தவன். அப்பொழுதெல்லாம்
திமுகவின் பிரச்சாரம் என்பது மேடைப் பேச்சுதான். பள்ளி மாணவனாக இருந்தபோது
என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீதி வீதியாக “ போடுங்கம்மா ஓட்டு உதய
சூரியனைப் பார்த்து” என்று முழங்கியபடி சென்றவன். கட்சியிலிருந்து ஒன்றையும்
எதிர்பார்த்தது கிடையாது. ஒரு சிங்கிள் டீ சாப்பிட்டுவிட்டு சுவர் விளம்பரம்
எழுதும் கட்சிக்காரர்களோடு இரவு நேரம் உதயசூரியனை வரைந்தது ஒரு காலம்.
எம்ஜிஆர் பிரிந்த போது:
அறிஞர் அண்ணா மறைந்தபோது கட்சிக்கு அப்படி ஒன்றும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பின் கலைஞர் பொறுப்பேற்றவுடன் எல்லாமே சுமுகமாகவே முடிந்தது. எம்ஜிஆரே கருணாநிதிக்கு ஆதரவு என்றவுடன் எல்லாம் அடங்கிப் போனார்கள். நாவலர் நெடுஞ்செழியனுக்கு என்று அவர் பின்னால் ஒரு கூட்டம் கிடையாது. ஈ.வெ.கி. சம்பத்தை உசுப்பி விட்டதுபோல் அவரையும் உசுப்பி விட்டார்கள். அவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார்.
அறிஞர் அண்ணா மறைந்தபோது கட்சிக்கு அப்படி ஒன்றும் பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பின் கலைஞர் பொறுப்பேற்றவுடன் எல்லாமே சுமுகமாகவே முடிந்தது. எம்ஜிஆரே கருணாநிதிக்கு ஆதரவு என்றவுடன் எல்லாம் அடங்கிப் போனார்கள். நாவலர் நெடுஞ்செழியனுக்கு என்று அவர் பின்னால் ஒரு கூட்டம் கிடையாது. ஈ.வெ.கி. சம்பத்தை உசுப்பி விட்டதுபோல் அவரையும் உசுப்பி விட்டார்கள். அவர் புத்திசாலித்தனமாக இருந்து விட்டார்.
ஆனாலும் அந்த எம்ஜிஆரே திமுகவை விட்டு விலக்கப்பட்ட (விலகிய) போது கட்சியில்
ஒரு பூகம்பம். எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், கருணாநிதியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும்
அப்படியே சென்று விட்டனர். ஆனாலும் திமுகவுக்கென்று இருந்த தீவிர தொண்டர்களும்
திமுக அனுதாபியாக இருந்த எம்ஜிஆர் ரசிகர்களும் கட்சியை விட்டு போய்விடவில்லை.
இதனால் திமுக முற்றிலும் சிதைந்து விடவில்லை. என்னைப் போன்ற கட்சி அனுதாபியான எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆருக்காக அவருடைய கட்சியின்
அனுதாபியாகப் போனது கிடையாது.
நெருக்கடி நிலைமையில்:
இந்தியாவில் நெருக்கடி நிலைமை இருந்த நேரம். திமுக ரொம்பவே நெருக்கடிக்கு
உள்ளானது ஆனாலும் திமுகவை தனது சாமர்த்தியத்தால், தான் கலந்து கொண்ட திருமண
நிகழ்ச்சிகளில் தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து, சிதறாமல் பார்த்துக்
கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
கோபால்சாமி ஸ்டண்ட்:
கட்சிக்கு கடுமையாக உழைத்த எத்தனையோ பேர் இருக்க வை கோபால்சாமியை மூன்றுமுறை ராஜ்யசபா எம்பியாக்கி பிரபலப் படுத்தியவர் கலைஞர். ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கும் வை கோபால்சாமிக்கும் உரசல் ஏற்பட்டது. தான் எப்போதும் எம்பியாகவே இருந்து டெல்லியில் லாபி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர். சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களோடு படம் எடுத்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வார்கள். அதைப்போல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததை ஒரு விளம்பரமாக்கியவர் வை கோபால்சாமி அவர்கள். உண்மையில் அவர் ஒரு அட்வகேட். அவர் தொழிலை அவர் செய்து வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவருக்கு அரசியல்.. தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மனதில் வைத்து, தேர்தலில் ஓட்டு போடுவதில்லை. நேற்று திமுக. இன்று அதிமுக. நாளை எப்படியோ? இப்படித்தான் அரசியல் மாறிக் கொண்டு இருக்கிறது.. ஆனாலும் வை கோபால்சாமி அதனை மையப்படுத்தி தனிக்கட்சி தொடங்கி திமுகவை பிளவுபடுத்திட முயன்றபோது கட்சியைக் காப்பாற்றியவர் கருணாநிதி.
கருணாநிதிக்கு எதிரி கருணாநிதி:
திமுகவில் கருணாநிதிக்குப் பின் யார் என்று அடையாளம் காணப்பட்டவர் ஸ்டாலின் . கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அதிகமாகவே விமர்சிக்கப்பட்டவர். அதிக தாக்குதல்களுக்கு ஆளானவர். ஆனாலும் கருணாநிதி தனது குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தின் பேரில் மற்ற குடும்ப உறவுகளையும் கட்சியில் திணித்தார். இந்த விஷயத்தில் கருணாநிதியை யாராலும் கண்டிக்க இயலவில்லை. குடும்ப நெருக்கடி காரணமாக கட்சியினரையும் அவரால் கட்டுப்படுத்த இய்லவில்லை. கடந்த திமுக ஆட்சியில்,கேட்க ஆளில்லாததால், சாதாரண கவுன்சிலரிலிருந்து மேல்மட்டம் வரை புகுந்து விளையாடினார்கள். அவர்களைக் கண்டிக்க ஆளில்லை. பொது மக்களின் வெறுப்பு காரணமாக திமுக ஆட்சியை இழந்தது.
இப்போது கட்சிக் கட்டுப்பாடு என்பது நீர் மேல் எழுதிய எழுத்தாக, கலைஞரின் கையை
விட்டு போய்க் கொண்டு இருக்கிறது. அதன் எதிரொலிதான் ஸ்டாலின் – அழகிரி உச்சகட்ட பூசல். அரசியல் தலைவர்கள் சிலர் கனிமொழியையும்
உசுப்பிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே எதிர்காலத்தில்
திமுக.வானது 1.ஸ்டாலின் திமுக 2. அழகிரி
திமுக 3. கனிமொழி திமுக. என்று மூன்றாக உடைய வாய்ப்புகள் அதிகம்.அப்போது உண்மையான
தி.மு.க விசுவாசிகள் வெறும் பார்வையாளர்களாக இருப்பார்கள் காலப்போக்கில் கனிமொழி
அரசியலை விட்டே விலகவும் நேரலாம்..
( நான் இப்போது எந்த கட்சியின் அனுதாபியும் கிடையாது ஒரு காலத்தில் என்னைப்
போன்றவர்கள் அனுதாபியாக இருந்த திமுக இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான்
இந்த கட்டுரை )
( PICTURES : THANKS TO “ GOOGLE ” )
இரு உறவினர்கள் சொன்னது கிட்டத்தட்ட உங்களின் எண்ணங்களின் போலவே உள்ளது... பலருக்கும் இது போல் ஆதங்கள் இருக்கிறதும் உண்மை...
ReplyDeleteசுயநல மனம் - தனக்கு தானே எதிரி என்பது பகிர்வின் மூலம் நிரூபணமாகிறது...
U said 3. But 2 already exist: 1. Stalin Group 2. Alagiri Group.
ReplyDeleteIf 1 becomes stronger, Kanimozhi will stay with no 1. But in future, if she is not given importance she may leave it. If 2 is not popular with people, or she is not welcome there, she won't start a new DMK as she knows she has no mass base in TN. She is close to high society of TN and in Cong society of Delhi. My guess is she will join Cong if RG becomes its chief and he thinks she will be an asset as a young woman who can reach Tamils.
So, there will be only 2 DMK. Finally 1 only. Because No.2 is knowin as a gang of rowdies in Madurai and surroundings.
உண்மைதான். நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. எனினும் என் மனதிலும் இந்த எண்ணங்களே நிழலாடுகின்றன. நிஜமாகக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
ReplyDeleteமறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி . Anonymous said... ( 1 )
ReplyDeleteThank you for your Comments!
மறுமொழி . துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
உடன் சுடச் சுட
ReplyDeleteசூடான அரசியல் அலசல்
இன்னும் இரண்டு நாளில்
ஒரு முடிவுக்கு வரமுடியும் என நினைக்கிறேன்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteஇளங்கோ!
ReplyDeleteமு.க. செய்த ஒரே தவறு! காலத்தினால்...ஸ்டாலினை திமுக ஆட்சில் இல்லாதபோது அறிவித்து இருக்கவேண்டும் (ஆட்சியில் இருக்கும் பொது முக,முதலவர்).
தனது பத்திர்க்கைகளுக்கு உதரணாம தினகரன் மாதிரி உள்ள பத்திரிக்கைகளுக்கு திமுக ****சூத்திர அபிமானிகளை பதவியில் அமர்த்தி இருக்கணும்.
**பெரியார் விளக்கம்:---பிராமணர் அல்லாத எல்லோரும் சூத்திரர்களே!
சரியாக எழுதவில்லை...முக ஸ்டாலினை என்று முதல் அமைச்சர் ஆக்கி இருக்கவேண்டும். இது முதல் தவறு!
ReplyDeleteராஜீவ் வயதில் இளைய பிரதமர்.
மு.க 46 வயதில் முதல்வர்
ஜெயலலிதா 43 வயதில் முதல்வர்
ஸ்டாலின் வயது இப்போ...60 வயது ...அரைக்கிழம்; தவறு கருணாநிதி மேல் தான்.!
திமுக இனி உடையாது....அழகிரி கனிமொழி எல்லாம் ஜூ ஜூ பீ..
ஊடங்கங்கள் ஈரை பேனாக்கும்; அப்புறம் பேனை பெருமாளாக்கும்! கூலிக்கு மாரடிக்கும் கும்பல் தான் தமிழ் ஊடகங்கள்!
+ 1 வோட்டும் போட்டாச்சு!
அப்படியும் நடக்க வாய்ப்புண்டு
ReplyDeleteஇப்போது மதுரை திமுக பிரமுகர்கள் வீட்டில் இந்தப் பாடல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ReplyDelete// சேத்த (திருட்டு) பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அண்ணன் கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணு, அவரு நூற ஆறு ஆக்குவாரு செல்லக்கண்ணு //
கே. கோபாலன்
தமிழினம் சிந்தித்து சிரிக்க இந்தப் பாடல்
தமிழக்த்திற்கு படித்த பண்புள்ள முதல்வர் அண்ணாவுக்குப் பிறகு கிடைக்கவில்லை.
ReplyDeleteசாதியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அன்புமணி என் கண்ணுக்குத் தெரிகிறார்.
கே. கோபாலன்
பாசம் கண்ணை மறைத்ததால் வந்த வினை இது. ஆனால் இதுவும் கடந்துபோகும். யார் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்களே தலைவராக போற்றப்படுவார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.
ReplyDeleteமறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDeleteகவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
// உடன் சுடச் சுடசூடான அரசியல் அலசல் இன்னும் இரண்டு நாளில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என நினைக்கிறேன்
பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள் //
அப்படி வர வாய்ப்பில்லை. டெல்லி ஆசீர்வாதம் யாருக்கு என்பதைப் பொறுத்தது இந்த அரசியல்.
மறுமொழி > நம்பள்கி said... ( 1 )
ReplyDeleteஅவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > நம்பள்கி said... ( 2 )
ReplyDelete// சரியாக எழுதவில்லை...முக ஸ்டாலினை என்று முதல் அமைச்சர் ஆக்கி இருக்கவேண்டும். இது முதல் தவறு!
ராஜீவ் வயதில் இளைய பிரதமர். மு.க 46 வயதில் முதல்வர்
ஜெயலலிதா 43 வயதில் முதல்வர் ஸ்டாலின் வயது இப்போ...60 வயது ...அரைக்கிழம்; தவறு கருணாநிதி மேல் தான்.! //
நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம்.
// திமுக இனி உடையாது....அழகிரி கனிமொழி எல்லாம் ஜூ ஜூ பீ.. //
உங்கள் கருத்தையும், யூகத்தையும் சொல்ல உங்களுக்கு உரிமையுண்டு.
// ஊடங்கங்கள் ஈரை பேனாக்கும்; அப்புறம் பேனை பெருமாளாக்கும்! கூலிக்கு மாரடிக்கும் கும்பல் தான் தமிழ் ஊடகங்கள்!//
இது எப்போதும் நடப்பதுதான்.
// + 1 வோட்டும் போட்டாச்சு! //
உங்களைப் போன்றவர்கள் இந்தப் பதிவிற்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுக் கொண்டே இருக்க, இன்னொரு க்ரூப் ( ஒரு ஆள்?) மைனஸ் ஓட்டு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க!
ReplyDeleteமறுமொழி > ராஜி said...
// அப்படியும் நடக்க வாய்ப்புண்டு //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > K Gopaalan said... ( 1 )
ReplyDeleteதிரு K கோபாலன் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > K Gopaalan said... ( 2 )
// சாதியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அன்புமணி என் கண்ணுக்குத் தெரிகிறார். //
இப்படியே ஒவ்வொரு அரசியல்வாதியிடமும் இருக்கும் ஒரு பிரதான குணத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் எப்படி இருக்கும்?
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// பாசம் கண்ணை மறைத்ததால் வந்த வினை இது. ஆனால் இதுவும் கடந்துபோகும். யார் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்களே தலைவராக போற்றப்படுவார்கள். இதற்கு காலம் பதில் சொல்லும். //
அன்பினாலே உண்டாகும் இன்பவலை! பாசவலை! நீங்கள் சொல்வது போல், இதுவும் கடந்துபோகும்
திமுக உடைவது கலைஞரின் காலத்திற்குப் பிறகுதான் நடக்க வாய்ப்புள்ளது. ஸ்டாலினின் உடல்நிலையைப் பற்றி அழகிரி சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அழகிரிக்கு அடிமட்ட தொண்டர்களிடம் மட்டுமே ஆதரவு இருக்கும். இன்று முகவுடன் விசுவாசமாக உள்ள பல தலைவர்கள் அவருக்குப் பிறகு ஸ்டாலினுடம் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். அழகிரிக்கு எதையுமே டீசன்டாக செய்யத் தெரியாது. பேச்சிலேயே ஆணவம் தெறிக்கிறது. மேலும் கனிமொழிக்கென்று எந்த ஆதரவாளரும் இருக்க வாய்ப்பில்லை. தொண்டர்களும் அப்படித்தான். ஆகவே கட்சி எத்தனையாக உடைந்தாலும் ஸ்டாலின் தலைமையிலுள்ள கட்சிக்கே திமுக என்ற பெயர் நிலைக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த கழகங்களே பிடிக்காது. ஆனால் முகவையும் அவருடைய திறமையையும் பிடிக்கும். ஸ்டாலினையும் கூட பிடிக்கும். யார் என்ன சொன்னாலும் அவர் ஒரு நல்ல திறமைசாலி. அவர் சென்னை மேயராக இருந்த காலத்தில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் பல இன்றும் சென்னை வாசிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
ReplyDeleteதமிழினத்தை கன்னபின்னாவென்று வெவ்வேறு வகைகளில் கெடுத்து குட்டிச் சுவராக்கி முன்னேற விடாமல் தடுத்து ஒழித்த கட்சி மஞ்சள் துண்டு தலைமையிலான தில்லு முல்லு 'கலகம்'. ஒரே காரணம் தானும் தனது குடும்பமும் கோடியில் புரள வேண்டும், அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தை குவிக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு சன்மன் தமிழகத்தில் பிறந்தது துரதிர்ஷ்டம், அதன் பின்னால் போய்க் கொண்டிருக்கும் வரை தமிழன் இன்னமும் நாசமாய்ப் போவது உறுதி.
ReplyDeleteவை.கோ. வாய்ச் சவடால் மன்னர், பிரபாகரனுக்கு ஏதாவது ஆனால் தமிழகமே பற்றி எரியும்னு உடான்ஸ் விட்டார், அவருக்கு துர்மரணம் நிகழ்ந்தது, இந்த பகுத்தறிவு வாதி அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று கூச்சமேயில்லாமல் பிளேட்டை மாற்றிப் போட்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறார்.............
இங்கு பலரும் கருத்து கூறியபடி தி.மு.க. மூன்றாக உடைய வாய்ப்பு இல்லை. ஸ்டாலின் குரூப் கட்சியை வைத்துக் கொள்ளும். மற்ற இரண்டும் இனைந்து பின் காங்கிரஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது. உண்மையில், இப்போது உள்ள 58 to 68 வயது உடைய தமிழர்களின் வேலை வாய்ப்பு/எதிர்காலம் ஆகியவற்றை தன் அரசியல் ஆதாயத்திற்காக கெடுத்த/குறைத்த பெருமை மு.க. அவர்களுக்கு சென்று அடையும். முக்கியமாக இவர்களால் மத்திய அரசு பணிகளில் வேலை வாய்ப்பு கிடைக்க முடியாமல் / கிடைத்த சில வேலைகளில் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் என கஷ்டப்பட்ட இளைஞர்கள்.......சாரி. மன்னிக்கவும். தடம் மாறி விட்டது. நான் கூற வந்தது, ஒரே தி.மு.க. தான் இருக்கும், அதுவும் ஸ்டாலின் தலைமையில் இருக்கும். ஸ்டாலின் திறமை அவர் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் தெரிந்தது. கடந்த ஒரு வருடமாக ஆட்சியில் இல்லாத போதும் கட்சியை நடத்தி, கட்சியை (மு.க.வையும்) தன் முழு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஓரளவு கிளீன் இமேஜ் வைத்திருப்பது போன்ற நிரூபிக்கப்பட்ட தலைமை குணங்களால் அவருடைய தி.மு.க. மட்டும் இருக்கும் என எண்ணுகிறேன்.
ReplyDeleteஎந்த ஒரு கட்சியும் ஆரம்பித்து ஒரு நாற்பது ஆண்டுகள் ஆனது என்றாலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அடித்தளம் ஆட ஆரம்பித்துவிடுவது சாதாரணம்தான். இது கட்சிகளுக்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஆரம்பித்து வளர்கிற நிலையில் ஒரு set up -ல் தொடங்குவது காலச்சூழலாலும், சமூகத்தில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களாலும், புதிய புதிய மனிதர்கள் வந்து சேர்வதனால் ஏற்படும் மாறுதல்களினாலும் மாற்றங்கள் சாதாரணமே.
ReplyDeleteதிமுகவைப் பொறுத்தவரை கருணாநிதியின் உழைப்பும் திறமையுமே அக்கட்சியை இதுநாள்வரையிலும் ஒரு மாபெரும் சக்தியாக வைத்திருக்கிறது. கருணாநிதி இன்னமும் தம்மை ஒரு 'தன்னிகரில்லாத நேர்மையான தலைவராக' மட்டும் வைத்துக்கொண்டிருப்பாரேயானால் அவரை மிஞ்ச யாரும் ஆளில்லை. அதே சமயம், அவருக்கான 'மேலிடத்து எதிர்ப்புகள்' ஒன்றும் சாதாரணமானவை அல்ல. நிறைய பலவீனங்களுக்கு அவர் ஆளாகிவிட்டதனால் எதிர்ப்பாளர்களுக்கான பலன்களை அவரே தேடிக்கொடுத்துவிட்டார் என்பதுதான் உண்மை.
அதற்காக இப்போதைய 'அரசியல் அறிஞர்கள்' அவர் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களுக்கும் அவரை ஆளாக்குவதை ஒப்புக்கொள்வதற்கில்லை.
எம்ஜிஆரே எப்படி அரசியலுக்கு 'வரவழைக்கப்பட்டார்' அவரை இயக்கியது யார், என்னென்ன நடைபெற்றது என்பதையெல்லாம் இன்னமும் கருணாநிதியைப் போன்றவர்களே சொல்லவில்லை என்பதும் பலருக்கும் தெரியும். அந்த ஒரே காரணம், எம்ஜிஆர் மீது இருந்த, அல்லது இன்னமும் இருக்கும் 'புனித பிம்பம்' பலவற்றைத் திரைப்போட்டு மறைத்துவிட்டது. அவற்றையெல்லாம் சொன்னால் ஏற்றுக்கொள்ளவேண்டிய அளவுக்கு மற்ற அரசியல் தலைவர்கள்(இதில் கலைஞரும் அடக்கம்) இங்கே தூய்மையானவர்களாய்த் தங்களை வைத்துக்கொள்ளவில்லை என்பதுதான் எம்ஜிஆர் போன்ற புனித பிம்பங்களுக்கு இப்போதும் பாதுகாப்பாக இருக்கும் கவசம்.
இன்றைய நிலையில் ஸ்டாலின் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பெரியார் போன்ற ஒரு நிலையைக் கலைஞர் எடுத்தாலேயே எல்லாம் சரியாகிவிடும். அவரது மனநிலை அதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே. காலச்சூழல் அதற்கான கட்டாயத்தை அவருக்குத் தந்தால் ஒதுங்குவதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை.
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDeleteஅய்யா டிபிஆர் ஜோசப் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!
// திமுக உடைவது கலைஞரின் காலத்திற்குப் பிறகுதான் நடக்க வாய்ப்புள்ளது. //
எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்.
// ஸ்டாலினின் உடல்நிலையைப் பற்றி அழகிரி சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.//
நாளைக்கே ” ஊடகங்கள் நான் சொன்னதை திரித்து வெளியிட்டு விட்டன. தலைவரும் நம்பிவிட்டார்” என்ரு அறிக்கை வந்தாலும் ஆசசரியப்படுவதற்கில்லை.
// அழகிரிக்கு அடிமட்ட தொண்டர்களிடம் மட்டுமே ஆதரவு இருக்கும். இன்று முகவுடன் விசுவாசமாக உள்ள பல தலைவர்கள் அவருக்குப் பிறகு ஸ்டாலினுடம் மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள்.//
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
//அழகிரிக்கு எதையுமே டீசன்டாக செய்யத் தெரியாது. பேச்சிலேயே ஆணவம் தெறிக்கிறது.//
அவர் ஒரு முன் கோபக்காரர்.
//மேலும் கனிமொழிக்கென்று எந்த ஆதரவாளரும் இருக்க வாய்ப்பில்லை. தொண்டர்களும் அப்படித்தான்.//
அவர் சும்மா இருந்தாலும், அவருடைய அம்மா ராஜாத்தி அம்மாள் ஆதரவாளர்கள் சும்மா இருக்க விட மாட்டார்கள்.
//ஆகவே கட்சி எத்தனையாக உடைந்தாலும் ஸ்டாலின் தலைமையிலுள்ள கட்சிக்கே திமுக என்ற பெயர் நிலைக்கும் என்று நினைக்கிறேன்.//
அப்படித்தான் தேர் ஓடி, ஒரு இடத்தில் நிலைக்கு வரும்.
// எனக்கு இந்த கழகங்களே பிடிக்காது. ஆனால் முகவையும் அவருடைய திறமையையும் பிடிக்கும். ஸ்டாலினையும் கூட பிடிக்கும். யார் என்ன சொன்னாலும் அவர் ஒரு நல்ல திறமைசாலி. அவர் சென்னை மேயராக இருந்த காலத்தில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் பல இன்றும் சென்னை வாசிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதை மறுப்பதற்கில்லை. //
ஒரு கட்சியை விரும்புவதும் விரும்பாததும் அவரவர் விருப்பம். தனிமனித சுதந்திரம்.
மறுமொழி > Jayadev Das said...
ReplyDeleteசகோதரர் ஜெயதேவ் தாஸின் விரிவான கருத்துரைக்கு நன்றி!
// தமிழினத்தை கன்னபின்னாவென்று வெவ்வேறு வகைகளில் கெடுத்து குட்டிச் சுவராக்கி முன்னேற விடாமல் தடுத்து ஒழித்த கட்சி மஞ்சள் துண்டு தலைமையிலான தில்லு முல்லு 'கலகம்'. ஒரே காரணம் தானும் தனது குடும்பமும் கோடியில் புரள வேண்டும், அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தை குவிக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு சன்மன் தமிழகத்தில் பிறந்தது துரதிர்ஷ்டம், அதன் பின்னால் போய்க் கொண்டிருக்கும் வரை தமிழன் இன்னமும் நாசமாய்ப் போவது உறுதி.//
ஒவ்வொரு மாநிலத்திலும் எல்லா கட்சியிலும் இப்படி நிறையவே இருக்கிறார்கள்.
// வை.கோ. வாய்ச் சவடால் மன்னர், பிரபாகரனுக்கு ஏதாவது ஆனால் தமிழகமே பற்றி எரியும்னு உடான்ஸ் விட்டார், அவருக்கு துர்மரணம் நிகழ்ந்தது, இந்த பகுத்தறிவு வாதி அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று கூச்சமேயில்லாமல் பிளேட்டை மாற்றிப் போட்டு வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறார்............. //
அவர் இங்கிருக்கும் தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டு, இலங்கைத் தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். .
மறுமொழி > Paramasivam said...
ReplyDelete// இங்கு பலரும் கருத்து கூறியபடி தி.மு.க. மூன்றாக உடைய வாய்ப்பு இல்லை. ஸ்டாலின் குரூப் கட்சியை வைத்துக் கொள்ளும். மற்ற இரண்டும் இனைந்து பின் காங்கிரஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது. //
நிறையபேருக்கு இப்படித்தான் தோன்றுகிறது.
// நான் கூற வந்தது, ஒரே தி.மு.க. தான் இருக்கும், அதுவும் ஸ்டாலின் தலைமையில் இருக்கும்.//
சேவல், புறா என்று அ.தி.மு.க அல்லாடி இப்போது ஒரு வழியாய் இரட்டை இலைக்கு வந்தது. திமுகவிற்கு எப்படியோ?
// ஸ்டாலின் திறமை அவர் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் தெரிந்தது. கடந்த ஒரு வருடமாக ஆட்சியில் இல்லாத போதும் கட்சியை நடத்தி, கட்சியை (மு.க.வையும்) தன் முழு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஓரளவு கிளீன் இமேஜ் வைத்திருப்பது போன்ற நிரூபிக்கப்பட்ட தலைமை குணங்களால் அவருடைய தி.மு.க. மட்டும் இருக்கும் என எண்ணுகிறேன்.//
எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கருணாநிதி அரசியலிலிருந்து ஒதுங்கி ஸ்டாலினிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பின் நடந்த கேலிக்கூத்து போன்று ஆகிவிடும். உ.பி.யில் பாருங்கள், முலாயம்சிங் யாதவ் மகன் அகிலேஷிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார். இங்கே கலைஞர் ஏன் கடைசி வரைக்கும் விடாப்பிடியாக கட்சித்தலைமையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்? பதிவி ஆசைதானே! ஏதோ ஒரு பதவி இல்லாவிட்டால் எப்படித்தான் இருப்பார் இந்த மனிதர்?
ReplyDeleteவிதைத்தவர்களே தானே அறுவடையும் செய்ய வேண்டும். இன்னும் நடக்கும். நடக்க வேண்டும்.
ReplyDeleteமறுமொழி > Amudhavan said...
ReplyDeleteஅமுதவன் அய்யா அவர்களின் வருகைக்கும் நீண்ட விரிவான கருத்துரைக்கும் நன்றி!
// எந்த ஒரு கட்சியும் ஆரம்பித்து ஒரு நாற்பது ஆண்டுகள் ஆனது என்றாலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அடித்தளம் ஆட ஆரம்பித்துவிடுவது சாதாரணம்தான். இது கட்சிகளுக்கு மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஆரம்பித்து வளர்கிற நிலையில் ஒரு set up -ல் தொடங்குவது காலச்சூழலாலும், சமூகத்தில் நடைபெறும் பல்வேறு மாற்றங்களாலும், புதிய புதிய மனிதர்கள் வந்து சேர்வதனால் ஏற்படும் மாறுதல்களினாலும் மாற்றங்கள் சாதாரணமே.//
இந்தியாவில் கட்சி, கார்ப்பரேட் கம்பெனிகள் இருக்கும் ஒரே மாடிரியான நிலைமையைப் புரியும்படிச் சொன்னீர்கள்!
// திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதியின் உழைப்பும் திறமையுமே அக்கட்சியை இதுநாள்வரையிலும் ஒரு மாபெரும் சக்தியாக வைத்திருக்கிறது. கருணாநிதி இன்னமும் தம்மை ஒரு 'தன்னிகரில்லாத நேர்மையான தலைவராக' மட்டும் வைத்துக்கொண்டிருப்பாரேயானால் அவரை மிஞ்ச யாரும் ஆளில்லை. அதே சமயம், அவருக்கான 'மேலிடத்து எதிர்ப்புகள்' ஒன்றும் சாதாரணமானவை அல்ல. நிறைய பலவீனங்களுக்கு அவர் ஆளாகிவிட்டதனால் எதிர்ப்பாளர்களுக்கான பலன்களை அவரே தேடிக்கொடுத்துவிட்டார் என்பதுதான் உண்மை.
அதற்காக இப்போதைய 'அரசியல் அறிஞர்கள்' அவர் மீது வைக்கப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களுக்கும் அவரை ஆளாக்குவதை ஒப்புக்கொள்வதற்கில்லை. //
கலைஞரைப் பற்றிய அலசல் அருமை!
// எம்ஜிஆரே எப்படி அரசியலுக்கு 'வரவழைக்கப்பட்டார்' அவரை இயக்கியது யார், என்னென்ன நடைபெற்றது என்பதையெல்லாம் இன்னமும் கருணாநிதியைப் போன்றவர்களே சொல்லவில்லை என்பதும் பலருக்கும் தெரியும். அந்த ஒரே காரணம், எம்ஜிஆர் மீது இருந்த, அல்லது இன்னமும் இருக்கும் 'புனித பிம்பம்' பலவற்றைத் திரைப்போட்டு மறைத்துவிட்டது. அவற்றையெல்லாம் சொன்னால் ஏற்றுக்கொள்ளவேண்டிய அளவுக்கு மற்ற அரசியல் தலைவர்கள்(இதில் கலைஞரும் அடக்கம்) இங்கே தூய்மையானவர்களாய்த் தங்களை வைத்துக்கொள்ளவில்லை என்பதுதான் எம்ஜிஆர் போன்ற புனித பிம்பங்களுக்கு இப்போதும் பாதுகாப்பாக இருக்கும் கவசம். //
திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தார். எம்ஜிஆரால் திமுக வளர்ந்தது.
// இன்றைய நிலையில் ஸ்டாலின் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பெரியார் போன்ற ஒரு நிலையைக் கலைஞர் எடுத்தாலேயே எல்லாம் சரியாகிவிடும். அவரது மனநிலை அதற்கு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே. காலச்சூழல் அதற்கான கட்டாயத்தை அவருக்குத் தந்தால் ஒதுங்குவதைத் தவிர அவருக்கும் வேறு வழியில்லை. //
கருணாநிதிதான் திமுக. திமுகதான் கருணாநிதி. இவர் போக எத்தனித்தாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள்.
மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said...
ReplyDeleteசகோதரர் கவிப்ரியன் ஆர்க்காடு அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// கருணாநிதி அரசியலிலிருந்து ஒதுங்கி ஸ்டாலினிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் எம்.ஜி.ஆர். மரணத்திற்குப் பின் நடந்த கேலிக்கூத்து போன்று ஆகிவிடும். உ.பி.யில் பாருங்கள், முலாயம்சிங் யாதவ் மகன் அகிலேஷிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்.//
// இங்கே கலைஞர் ஏன் கடைசி வரைக்கும் விடாப்பிடியாக கட்சித்தலைமையை பிடித்துக்கொண்டு இருக்கிறார்? பதிவி ஆசைதானே! ஏதோ ஒரு பதவி இல்லாவிட்டால் எப்படித்தான் இருப்பார் இந்த மனிதர்? //
மேலே சொன்ன பதில்தான் இங்கேயும். கருணாநிதிதான் திமுக. திமுகதான் கருணாநிதி. இவர் போக எத்தனித்தாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள்.
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// விதைத்தவர்களே தானே அறுவடையும் செய்ய வேண்டும். இன்னும் நடக்கும். நடக்க வேண்டும். //
உண்மைதான்! கருணாநிதிக்காக திமுகவிற்கு ஓட்டு என்ற நிலைமை மாறி வருகிறது. சகோதரர், ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி! இந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையில், நீங்கள் பதிவுகள் எழுதாமல் இருப்பது எங்கள் துரதிர்ஷ்டம்தான்.
திமுகவால் எம்ஜியார் வளர்ந்தார். எம்ஜீயாரால் அதிமுக வளர்ந்தது. எம்ஜீயார் அதிமுகவால் செல்வி ஜயலலிதா வளர்கிறார் அண்ணா நாமம் வாழ்க. எம்ஜீயார் நாமம் வாழ்க. எல்லோருக்கும் நாமம் ...வாழ்க....!
ReplyDeleteநான் அப்படி நினைக்கவில்லை!
ReplyDeleteசுவரசியமான தகவல்கள்.
ReplyDelete//என்னைப் போன்ற கட்சி அனுதாபியான எம்ஜிஆர் ரசிகர்கள்,எம்ஜிஆருக்காக அவருடைய கட்சியின் அனுதாபியாகப் போனது கிடையாது.//
அப்போ எல்லாம் தரமான ரசிகர்கள் இருந்திருக்காங்க என்று அறிய முடிகிறது.
வைகோ என்பவர் பயங்கரமான ஒரு விளம்பர பிரியரே தான். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மனதில் வைத்து தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என்று நீங்க சொன்னது முழுக்க உண்மை.இன்னொரு நாட்டு பிரச்சனையை வைத்து சொந்த நாட்டில் வாக்களிப்பது சொந்த செலவில் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வதாகும்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// திமுகவால் எம்ஜியார் வளர்ந்தார். எம்ஜீயாரால் அதிமுக வளர்ந்தது. எம்ஜீயார் அதிமுகவால் செல்வி ஜயலலிதா வளர்கிறார் அண்ணா நாமம் வாழ்க. எம்ஜீயார் நாமம் வாழ்க. எல்லோருக்கும் நாமம் ...வாழ்க....! //
உங்கள் கருத்துரையைப் படித்ததும் சிரித்து விட்டேன்! எல்லோருடைய நாமமும் வாழ்க!
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// நான் அப்படி நினைக்கவில்லை! //
புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி! அப்படி நடக்காமல் இருந்தால் திமுகவுக்கு நல்லதுதான்!
பலருக்கும் இது போல் ஆதங்கள் இருக்கிறதும் உண்மை...
ReplyDeletetha.ma.12
ReplyDeleteநான் ஒரு பார்வையாளனாகவே இருந்து அனைத்தையும் படித்துச் செல்கிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம், இறை நாட்டம். நன்றி!
ReplyDeleteverum oru pakka paarvai.. vai.kovai patri eluthi irupadhai paarthale therigiradhu thangal manak kaazhppu! dmk-il irundu mk, azhagiri, stalin anaivaraiyum vilakki vittu.. puthiyavargaludan anna kanda unmaiyana dravida kazhagamaga uruvaaga vendum!
ReplyDeleteஎம்.ஜி.ஆருக்கும்,வைகோவுக்கும் பின்னால் அனுபவம் உள்ள தலைவர்களும் தொண்டர்களும் இருந்தார்கள்.அழகிரிக்குப்பின்னால் அப்படி யாரும் இல்லை.ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரியையும் கனிமொழியையும் அரசியல் அரங்கில் இறக்கியது கலைஞர் செய்த மகா தவறு.ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு தலைவர் ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
இந்த பதிவை பார்த்த மட்டில்... இது ஒரு அரசியல்..களம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுமையுடன் பொறுத்திருந்து பார்த்தால் நன்று... நிகழ் தகவாக இருக்கலாம்(இது அரசியல்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தி.தமிழ் இளங்கோ சார்,
ReplyDeleteமஞ்சத்துண்டை அல்லது தமிழக அரசியலை சரியாக கணிக்கத்தவறிவிட்டீர்கள்!!!
ஸ்டாலின் தான் திமுகவின் தூணா?
இல்லை.அப்படி உருவாக்க மஞ்சத்துண்டு செயற்கையாக பிளாண் போட்டார்,அதன் விளைவே எல்லாம்.
ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி ஆனால் அவருக்கு முன் எப்படி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கிடைத்தது? இத்தனைக்கும் ஆரம்பத்தில் மிக மோசமான நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர் ஆனவர் ஸ்டாலின்,கழக வட்டாரத்திலேயே அனைவரும் அறிவார்கள்.
அண்ணா எப்படி வாரிசுனு யாரையும் உட்கார வைக்கலையோ அப்படியே நடக்கட்டுமே இப்பவும்.
அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.பரிமளம் கடன் தொல்லையால் தண்ணியில்லாத கிணத்துல குதிச்சு ,மண்டைய உடைச்சு தற்கொலை செய்துக்கிட்டதை பல சோ கால்டு திமுக அனுதாபிகள் அறிவதில்லை அவ்வ்!
# எம்.ஜி.ஆர்,வைகோ,டி.ஆர் என ஏற்கனவே மூன்றாக உடைச்ச கட்சி தானே,இன்னொரு உறை 3-4 ஆக உடைஞ்சு அதில் நிக்கிற பெரிய பீஸ் மட்டும் திமுக என அறியப்படும்.
எது பெரிய பீசாக உருவெடுக்கும் என்பதில் மாறன்கள் கை இருக்கும்.மாறன் பிரதர்ஸை கணிக்க தவறிட்டீங்க!
மறுமொழி > வேகநரி said...
ReplyDeleteவேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// சுவரசியமான தகவல்கள். //என்னைப் போன்ற கட்சி அனுதாபியான எம்ஜிஆர் ரசிகர்கள்,எம்ஜிஆருக்காக அவருடைய கட்சியின் அனுதாபியாகப் போனது கிடையாது.// அப்போ எல்லாம் தரமான ரசிகர்கள் இருந்திருக்காங்க என்று அறிய முடிகிறது. //
அன்றைய எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் இன்று பேரன் பேத்தி எடுத்த கிழவர்கள். இப்போது எல்லோருடைய பார்வையும் புதிய பார்வையாகத்தான் இருக்கும்.
// வைகோ என்பவர் பயங்கரமான ஒரு விளம்பர பிரியரே தான்.//
வை கோபால்சாமின் பேச்சுகளில் மேற்கோள்கள் அதிகம் இருக்கும். அவரது பேச்சுக்களை ரசித்தவர்களில் நானும் ஒருவன்.
// தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மனதில் வைத்து தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என்று நீங்க சொன்னது முழுக்க உண்மை.இன்னொரு நாட்டு பிரச்சனையை வைத்து சொந்த நாட்டில் வாக்களிப்பது சொந்த செலவில் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வதாகும். //
தமிழனாய்ப் பிறந்த எல்லோருக்கும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் அனுதாபம் உண்டு. இருந்தாலும் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒரு அளவு கோலாக தேர்தலில் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. இந்திராகாந்தி காலத்திலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு எல்லாமே தலைகீழ் ஆகிவிட்டது.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
ReplyDelete// பலருக்கும் இது போல் ஆதங்கள் இருக்கிறதும் உண்மை... //
சகோதரர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said..
ReplyDelete.
// நான் ஒரு பார்வையாளனாகவே இருந்து அனைத்தையும் படித்துச் செல்கிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம், இறை நாட்டம். நன்றி! //
சகோதரருக்கு நன்றி! நானும் ஒரு பார்வையாளனாகவே இந்த கட்டுரையை எழுதினேன்.
மறுமொழி > Anonymous said... ( 2 )
ReplyDeleteAnonymous ( 2 ) அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// verum oru pakka paarvai.. //
வலைப் பதிவில் ஒரு அளவுக்குத்தான் எழுத முடியும். அனைத்து பதிவர்களும் எழுதுவது பெரும்பாலும் ஒரு பக்கக் கட்டுரைகள்தான்.
// vai.kovai patri eluthi irupadhai paarthale therigiradhu thangal manak kaazhppu! //
வைகோவின் ஆரம்பகால அரசியலில் அவரது பேச்சுக்களை ரசித்தவர்களில் நானும் ஒருவன். எனக்கும் அவருக்கும் இடையில் எந்த வாய்க்கால் வரப்பு தகராறும் கிடையாது. அவர் மீது எனக்கு எந்த காழ்ப்பும் கிடையாது.
வலைப்பதிவு உலகில், வைகோ என்றாலே ஏதோ ஒரு புனித பிம்பம் போல், அவரைப் பற்றி உருவகித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரைப் பற்றி யார் எழுதினாலும் எழுதியவர்கள் மீது பாய்கிறார்கள். பொது வாழ்வில், அரசியலில் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே!
// dmk-il irundu mk, azhagiri, stalin anaivaraiyum vilakki vittu.. puthiyavargaludan anna kanda unmaiyana dravida kazhagamaga uruvaaga vendum! //
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு.
மறுமொழி > வர்மா said...
ReplyDeleteசகோதரர் வர்மா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// எம்.ஜி.ஆருக்கும்,வைகோவுக்கும் பின்னால் அனுபவம் உள்ள தலைவர்களும் தொண்டர்களும்இருந்தார்கள். அழகிரிக்குப் பின்னால் அப்படி யாரும் இல்லை.//
எம்ஜிஆருக்குப் பின்னால் சென்ற தொண்டர்கள் அதிமுகவில் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால் வைகோ பின்னால் சென்றவர்களில் பலர் திரும்பி விட்டனர். அழகிரி விஷயம் என்ன ஆகும் என்று இன்று தெரிய வரும்.
// ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரியையும் கனிமொழியையும் அரசியல் அரங்கில் இறக்கியது கலைஞர் செய்த மகா தவறு.ஸ்டாலினை முதல்வராக்கிவிட்டு தலைவர் ஒதுங்கி இருந்திருக்க வேண்டும் //
கலைஞருக்கு இன்றைய அரசியலில் மூன்று (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ) கண்கள்.
மறுமொழி > 2008rupan said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்!
// இந்த பதிவை பார்த்த மட்டில்... இது ஒரு அரசியல்..களம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுமையுடன் பொறுத்திருந்து பார்த்தால் நன்று... நிகழ் தகவாக இருக்கலாம் (இது அரசியல்) //
நானும் அரசியல் கட்டுரைகளை எழுதுவதற்கு ரொம்பவே தயங்கினேன். அதனால் ஒரு பார்வையாளனாகவே எழுதினேன். இதனால் எனது இலக்கிய நண்பர்கள் பலர் கருத்துரை தரவில்லை. தனிப்பட்ட முறையில் யோசிக்க வேண்டிய விஷயம்.
மறுமொழி > வவ்வால் said..
ReplyDelete// தி.தமிழ் இளங்கோ சார், மஞ்சத்துண்டை அல்லது தமிழக அரசியலை சரியாக கணிக்கத்தவறிவிட்டீர்கள்!!! ஸ்டாலின் தான் திமுகவின் தூணா இல்லை. அப்படி உருவாக்க மஞ்சத்துண்டு செயற்கையாக பிளாண் போட்டார், அதன் விளைவே எல்லாம்.//
// ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி ஆனால் அவருக்கு முன் எப்படி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கிடைத்தது? இத்தனைக்கும் ஆரம்பத்தில் மிக மோசமான நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர் ஆனவர் ஸ்டாலின்,கழக வட்டாரத்திலேயே அனைவரும் அறிவார்கள்.//
// அண்ணா எப்படி வாரிசுனு யாரையும் உட்கார வைக்கலையோ அப்படியே நடக்கட்டுமே இப்பவும்.//
வவ்வால் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!. உங்களைப் போல என்னால் எழுத இயலாது.
// அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.பரிமளம் கடன் தொல்லையால் தண்ணியில்லாத கிணத்துல குதிச்சு ,மண்டைய உடைச்சு தற்கொலை செய்துக்கிட்டதை பல சோ கால்டு திமுக அனுதாபிகள் அறிவதில்லை அவ்வ்! //
வருத்தமான விஷயம்தான்
// # எம்.ஜி.ஆர்,வைகோ,டி.ஆர் என ஏற்கனவே மூன்றாக உடைச்ச கட்சி தானே,இன்னொரு உறை 3-4 ஆக உடைஞ்சு அதில் நிக்கிற பெரிய பீஸ் மட்டும் திமுக என அறியப்படும். //
"Survival of the fittest" என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
// எது பெரிய பீசாக உருவெடுக்கும் என்பதில் மாறன்கள் கை இருக்கும்.மாறன் பிரதர்ஸை கணிக்க தவறிட்டீங்க! //
கலைஞரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் தொழில் அதிபர்களான மாறன் சகோதரர்கள் , கலைஞருக்குப் பின் அரசியலை விட்டு ஒதுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
நல்ல அலசல்.....
ReplyDeleteநடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நானும்....
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// நல்ல அலசல்..... நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நானும்.... //
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
இந்திய பாராளுமன்ற தேர்தல் – 2014 முடிவுகள் வெளிவந்த இன்று (16.05.2014) இந்த பதிவினை நினைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅழகிரியை நீக்கியது தவறு. தென் தமிழக கட்சியினரிடம் இப்போதும் அழகிரி மேல் மதிப்பு உள்ளது. அவர் நீக்கப்பட்டிருக்கவிட்டால் மூன்று நான்கு இடங்களாவது கிடைத்திருக்கும்.
ReplyDeleteமறுமொழி > Paramasivam said...
ReplyDeleteசகோதரர் பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்களுக்கான மறுமொழியை எழுத மறந்தமைக்கு மன்னிக்கவும்.
// அழகிரியை நீக்கியது தவறு. தென் தமிழக கட்சியினரிடம் இப்போதும் அழகிரி மேல் மதிப்பு உள்ளது. அவர் நீக்கப்பட்டிருக்கவிட்டால் மூன்று நான்கு இடங்களாவது கிடைத்திருக்கும். //
காலச்சக்கரம் இன்னும் சுழலும். அப்போது இப்போதைய சூழ்நிலைகள் இன்னும் மாறலாம்.