Friday, 10 January 2014

தி இந்து – பொங்கல் மலர் 2014 (ஒரு பார்வை)
பேப்பர் போடும் பையன் “ சார் இந்து பொங்கல் மலர் வேண்டுமா?என்று கேட்டார். ஆமாம் வேண்டும் என்றேன். தாமதமாகச் சொன்னதால் இந்துவின் முதல் தீபாவளி மலர் (2013) கிடைக்காமல் போனது. எனவே அவரே கேட்டுவிட்டார்.அந்த பையன் சொன்னபடியே இன்று காலை (10.01.2014) தி இந்துவின் பொங்கல் மலரைக் கொடுத்து விட்டார். எப்போதும் போல புதிதாக வாங்கிய புத்தகத்தை புரட்டினேன்.

எனக்குத் தெரிந்து மற்ற பத்திரிககைகள் பொங்கல் மலரை சிறப்பாக வெளியிட்டது கிடையாது. பெரும்பாலும் அவை தீபாவளி மலர் வெளியிடுவதில்தான் அக்கறை காட்டும். மேலும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இடையில் இடைவெளி, கொஞ்ச நாட்கள் என்பதும் ஒரு காரணம்.

வடிவமைப்பு:

இந்த ஆண்டு தி இந்துவின் முதல் பொங்கல் மலரை சிறப்பாகவே வெளியிட்டு இருக்கிறார் இந்து என் ராம் அவர்கள். உலகத் தமிழர்களுக்கு வணக்கம் கூறி ஆசிரியர் கே அசோகன் அவர்கள் வரவேற்கிறார். ஆசிரியர் பக்கத்தில். மலரை வெளியிடுபவர், ஆசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் குழு, வடிவமைப்பாளர்கள் பெயர்கள். பொங்கல் மலரின் உள்ளே என்ன இருக்கிறது என்பதனை பொருளடக்கமாக சொல்லியுள்ளனர். இதன் மூலம் பத்திரிகை உலகில் தாங்கள் பழமையானவர்கள் என்பதனை உணர்த்தி இருக்கின்றனர்.

படங்களும், புகைப்படங்களும்:

பத்திரிகைகளில் மலர் என்றாலே, புகைப்படங்கள்தான் பிரதானமாக இருக்கும். பழைய தீபாவளி மலர்களில் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் கண்ணைக் கவரும். தெளிவான படங்களுடன் கூடிய செய்திகள் வெளியிடுதல் இந்துவின் சிறப்பம்சங்களில் ஒன்று. இந்த ஆண்டு வந்த இந்துவின் பொங்கல் மலரில் இவற்றைக் காணலாம். காமிராவின் கண் தடங்கள் தலைப்பில் வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் சென்னையில் ஒரு மார்கழிக் காலை விடியல் படங்கள் நல்ல உதாரணம்.

கட்டுரைகள்:


காட்டுயிர்த் தடங்களில்  ப ஜெகநாதன் அவர்கள் அழகிய புகைப்படங்களுடன் தகவல்கள் தந்துள்ளார். சமூகம் பண்பாடு என்ற பகுதியில் ஜல்லிக்கட்டு, சேவக்கட்டும் பொங்கல் பற்றிய சமூகச் செய்திகளை அழகிய வண்ணப் படங்களுடன் காணலாம். தமிழ் சிறுகதை இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கு.ப.ராஜகோபாலனின் வீரம்மாளின் காளைஎன்ற சிறுகதையை  பெருமாள் முருகன் என்பவர் விமர்சனம் செய்துள்ளார். இதற்கான அழகிய படங்களைத் தந்தவர் ஏ.எம்.சுதாகர்.                   வாழும்போது வைக்காதேடா சேத்து
               ஏதும் அனுபவிக்காம போய்விடுவேடா செத்து

என்று பாடுகிறார் மரணகானா விஜீ.

 
சாவு வீடுகளில் பாடப்படும் கானா பாடல்கள் பற்றி நல்ல அலசல் செய்து இருக்கிறார் த. நீதிராஜன். 

சேவக்கட்டு எனப்படும் சண்டைக் கோழிகள் பற்றி ஒரு கட்டுரை (ஏ வி பி தாஸ்)


ஆர்.சி.ஜெயந்தன், ஜல்லிக்கட்டு காளைகள் பற்றியும், இப்போது மாறி வரும் சூழ்நிலையைப் பற்றியும் ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகிறார்.ஊர்மணம் பகுதியில் வடுவூரின் கபடி விளையாட்டு, நெல்லை மற்றும் கொங்கு பகுதிகளின் பொங்கல், வடசென்னை வாழ்க்கை என்று பல சுவையான செய்திகள். மலைமக்களின் வாழ்க்கைக்கு உற்ற நண்பர்களாக இருக்கும் அகமலைக் குதிரைகள் பற்றி சுவையான செய்திகள் தருகிறார் ஜெயந்தன் .(படங்கள் பயஸ்)


இலக்கியப் பக்கங்கள
இலக்கியம் என்ற வரிசையில் கவிதைகள், சிறுகதைகள் வருகின்றன. சிறுகதைகளை ஒருநாள் உட்கார்ந்து ரசித்துப் படிக்க வேண்டும். கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள். இறைமணம் என்ற பெயரில் பக்திமணம்.

கண்ணாடிகள் “ என்ற தலைப்பினில் நா.முத்துகுமாரின் ஒருபக்கக் கவிதை. அதிலிருந்து சில வரிகள்

லிப்டில், சலூனில்,
பைக்கில்,நகைக்கடையில் என
எங்கே கண்ணாடி தெரிந்தாலும்
தன்னிச்சையாகத் திரும்பி
தன்னைத்தானே பார்த்துக்கொள்ளாதவர்கள்
யார் இருக்கிறார்கள் உலகில்?
“எத்தனைமுறை பார்த்தாலும்
நீ காட்டும் பிம்பம் மட்டும்
ஏன் சலிப்பதேயில்லை?என்று
கண்ணாடியிடம் கேட்டேன் “

என்று கேட்கும் கவிஞருக்கு கண்ணாடி சொன்ன பதிலைத் தெரிந்து கொள்ள தி இந்துவின் பொங்கல் மலரில் சென்று பார்க்கவும்.

என்மனதில் ஓடும் ஆறுஎன்ற தலைப்பினில் பிரபஞ்சன் அவர்கள் காவிரியைப் பற்றி சொல்லுகிறார். பாலாறு படும் பாட்டினை வேதனையோடு எழுதுகிறார் அழகிய பெரியவன். இன்னும் வைகை, தாமிரபரணி ஆறுகளைப் பற்றியும் காணலாம்.

சினிமா! சினிமா!

எல்லாவற்றையும் பேசிவிட்டு சினிமாவை அதிலும் தமிழ் சினிமாவைப் பற்றி சோல்லாமல் இருக்கலாமா? எனவே தி இந்துவின் பொங்கல் மலரில் அதுபற்றியும் சுவையான தகவல்கள். ஸ்டுடியோக்களில் செட்டிங்க்ஸில் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமா மண்வாசனை தேடி கிராமங்களுக்கு வந்த கதையினைச் சொல்லுகிறார் சுபகுணராஜன். ராஜ் கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும். வடிவேலுவின் முதல் வெற்றி பாரதிராஜாவிடமிருந்தே துவங்குவதாகச் சொல்கிறார் வெ.சந்திரமோகன்.

பொங்கல் படையல்:

முத்தாய்ப்பாக பொங்கல் படையல் என்ற பகுதியிலும் சுவையாகவே சுடச்சுட படைத்துள்ளனர். நமது அனைவருக்கும் தெரிந்த “ஸ்ரீ முனியாண்டி விலாஸ்பற்றி சுவையாகப் படைத்துள்ளார் ரெங்கையா முருகன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த தனுஷ்கோடி அழிந்த கதையை மறக்க முடியுமா? நினவூட்டுகிறார் ராமேஸ்வரம் ராக்ஃபி என்பவர். வேடந்தாங்கல் பற்றி அழகிய படங்களுடன் ஒரு மீள் பயணக் கட்டுரை. பயணம் செய்பவர்கள் ஆதி வள்ளியப்பன் மற்றும் போட்டோ கிராபர் கணேஷ் முத்து.

முடிவுரை:

நல்ல சுவையான சூடான பொங்கல் மலரைப் படைத்துள்ளனர் தி இந்து குழுமத்தினர்.அவர்களுக்கு நன்றி!

படங்கள் நன்றி: தி இந்து.
முக்கிய குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும் தி இந்து பொங்கல் மலர் 2014 இலிருந்து கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.


அனைவருக்கும் எனது உளங்கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
 

39 comments:

 1. வணக்கம் ஐயா !

  ஆஹா மிக அருமையான விளக்கமான அசத்தலான கட்டுரையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 2. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 3. ஒவ்வொன்றையும் பற்றி விரிவான தங்கள் விளக்கங்களே சர்க்கரைப் பொங்கலைவிட தனிச்சுவை மிகுந்ததாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 4. இவ்வளவு தகவல் உள்ளதென்றால் உடனே வாங்க வேண்டும்... நன்றி ஐயா...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. //ஆசிரியர் பக்கத்தில். மலரை வெளியிடுபவர், ஆசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் குழு, வடிவமைப்பாளர்கள் பெயர்கள். பொங்கல் மலரின் உள்ளே என்ன இருக்கிறது என்பதனை பொருளடக்கமாக சொல்லியுள்ளனர். இதன் மூலம் பத்திரிகை உலகில் தாங்கள் பழமையானவர்கள் என்பதனை உணர்த்தி இருக்கின்றனர்.//

  ஆம் பத்திரிகை உலகில் அவர்கள் மிகப்பழமையானவர்களே! தமிழ் பதிவுக்குத்தான் அவர்கள் புதியவர்கள் ....... இப்போது புதுமை செய்பவர்களாகவும் மாறியுள்ளதாகத் தங்களின் இந்தப்பதிவின் மூலம் அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வாங்குவோமா வேண்டாமா என
  யோசித்துக் கொண்டிருந்தேன்
  தங்கள் பதிவைப் படித்ததும் வாங்க
  முடிவுசெய்துவிட்டேன்
  படங்களுடன் பகிர்வு அருமை
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தி.தமிழ் இளங்கோசார்,

  பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  தி இந்து(தமிழு) பொங்கலுக்கு எல்லாம் சிறப்புமலர் போடுதா?நல்ல முன்னேற்றம்,ஆனால் இலவச மலரா இல்லைகாசு கொடுக்கணுமா?

  ஹி...ஹி காசுக்கொடுத்துலாம் "பொங்கல் மலர்"வாங்கிப்படிச்சு பொங்கல் பத்தி தெரிஞ்சுக்கும் அளவுக்கு எனதுதமிழ் கலாச்சாரம் இன்னும் விட்டுப்போகலை:-))

  ReplyDelete
 8. இம்புட்டு விசயமிருக்கா!? வாங்கிட வேண்டியதுதான்!

  ReplyDelete
 9. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த தனுஷ்கோடி அழிந்த கதையை மறக்க முடியுமா? நினவூட்டுகிறார் –//

  படங்களுடன் அருமையான பொங்கல் மலர் விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. உடனே வாங்குகின்றேன் ஐயா நன்றி
  த.ம.5

  ReplyDelete
 11. வணக்கம், வாழ்க வளமுடன்.
  பொங்கல் மலர் பார்வை அருமை.
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வணக்கம்.. வாழ்க வளமுடன்..
  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, 3 )

  // வணக்கம் ஐயா ! ஆஹா மிக அருமையான விளக்கமான அசத்தலான கட்டுரையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். //

  அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // படங்கள் அத்தனையும் அழகோ அழகு.//

  படங்கள் அனைத்தும் தி இந்து – பொங்கல் மலர் 2014 இல் உள்ளவை. எனவே உங்கள் பாராட்டு அவர்களையே சேரும்.

  // ஒவ்வொன்றையும் பற்றி விரிவான தங்கள் விளக்கங்களே சர்க்கரைப் பொங்கலைவிட தனிச்சுவை மிகுந்ததாக உள்ளது.//

  இன்னும் அந்த நூலை முழுமையாகப் படிக்கவில்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 14. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  //இவ்வளவு தகவல் உள்ளதென்றால் உடனே வாங்க வேண்டும்... நன்றி ஐயா...//

  உண்மையில் இந்த மலர் ஒரு இலக்கியப் பெட்டகம். வாங்கிப் படியுங்கள்.

  // இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... //

  சகோதரருக்கு நன்றி! வாழ்த்துக்கள்!


  ReplyDelete
 15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )

  // ஆம் பத்திரிகை உலகில் அவர்கள் மிகப்பழமையானவர்களே! தமிழ் பதிவுக்குத்தான் அவர்கள் புதியவர்கள் ....... இப்போது புதுமை செய்பவர்களாகவும் மாறியுள்ளதாகத் தங்களின் இந்தப்பதிவின் மூலம் அறிய முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். //

  புதிதாகத் தொடங்கிய பத்திரிகை போன்று இல்லாமல், பழம்பெருமையோடு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு குழுமமாகவும் உள்ளது.  ReplyDelete
 16. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  // வாங்குவோமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். தங்கள் பதிவைப் படித்ததும் வாங்க
  முடிவுசெய்துவிட்டேன்//

  அவசியம் வாங்கவும். நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.

  // படங்களுடன் பகிர்வு அருமை பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள் //

  கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
 17. மறுமொழி > வவ்வால் said...

  // தி.தமிழ் இளங்கோசார், பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்! //
  வவ்வால் சாருக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  // தி இந்து(தமிழு) பொங்கலுக்கு எல்லாம் சிறப்புமலர் போடுதா? நல்ல முன்னேற்றம்,ஆனால் இலவச மலரா இல்லைகாசு கொடுக்கணுமா? //
  தி இந்து பொங்கல் மலரின் விலை ரூ 120/=. நல்ல இலக்கியப் பெட்டகமாகவே பார்க்கிறேன். இதே நூலை ஒரு பல்கலைக் கழகம் வெளியிட்டு இருந்தால் ஐந்து நூறு வைத்து இருப்பார்கள்.

  // ஹி...ஹி காசுக்கொடுத்துலாம் "பொங்கல் மலர்"வாங்கிப்படிச்சு பொங்கல் பத்தி தெரிஞ்சுக்கும் அளவுக்கு எனதுதமிழ் கலாச்சாரம் இன்னும் விட்டுப்போகலை:-)) //

  எப்போதும் போல உங்கள் நகைச்சுவையை ரசிக்கின்றேன். நன்றி!

  ReplyDelete
 18. மறுமொழி > ராஜி said...
  // இம்புட்டு விசயமிருக்கா!? வாங்கிட வேண்டியதுதான்! //

  சகோதரியின் வருகைக்கு நன்றி! நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.

  ReplyDelete
 19. மறுமொழி > நம்பள்கி said...

  // +1 //
  நம்பள்கி சாருக்கு என்மீது கோபம் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நீங்கள் வித்தியாசமானவர்தான்.

  ReplyDelete
 20. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // படங்களுடன் அருமையான பொங்கல் மலர் விமர்சனம் ..பாராட்டுக்கள்..! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! //

  சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
  // உடனே வாங்குகின்றேன் ஐயா நன்றி த.ம.5 //

  சகோதரருக்கு நன்றி! ஆசிரியராகிய உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

  ReplyDelete
 22. மறுமொழி > கோமதி அரசு said...

  // வணக்கம், வாழ்க வளமுடன். பொங்கல் மலர் பார்வை அருமை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். //

  சகோதரியின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  // வணக்கம்.. வாழ்க வளமுடன்..தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் //

  சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 24. பொங்கல் மலர் பற்றிய விமரிசனம் மிக அருமை சார். கண்ணாடியின் பதிலை, " வெள்ளித் திரையில் காண்க " என்பது போல் " பொங்கல் மலரில் காண்க "சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே! ரசித்தேன்.
  கேமிராவில் படமெடுத்து போஸ்டில் போட்டு அசத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 25. புகைப்படங்களுடன் அழகான அறிமுகம். நன்றி.

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனைவருக்கும் எங்களுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 26. ‘இந்து’ வின் பொங்கல் மலர் பற்றி வெளியீட்டு வாங்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள். படங்கள் அருமையாய் இருக்கின்றன. அதற்கு தங்களின் பங்களிப்பும் உண்டு என்பது உண்மை. (அருமையாய் படம்பிடித்து வெளியிட்டமைக்கு.) பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  // பொங்கல் மலர் பற்றிய விமரிசனம் மிக அருமை சார். கண்ணாடியின் பதிலை, " வெள்ளித் திரையில் காண்க " என்பது போல் " பொங்கல் மலரில் காண்க "சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே! ரசித்தேன். கேமிராவில் படமெடுத்து போஸ்டில் போட்டு அசத்தி விட்டீர்கள். //

  சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

  ReplyDelete
 28. மறுமொழி > Packirisamy N said...
  // புகைப்படங்களுடன் அழகான அறிமுகம். நன்றி.//
  // தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனைவருக்கும்

  எங்களுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !//
  சகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // ‘இந்து’ வின் பொங்கல் மலர் பற்றி வெளியீட்டு வாங்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள். படங்கள் அருமையாய் இருக்கின்றன. அதற்கு தங்களின் பங்களிப்பும் உண்டு என்பது உண்மை. (அருமையாய் படம்பிடித்து வெளியிட்டமைக்கு.) பகிர்ந்தமைக்கு நன்றி! //

  அய்யா வே நடனசபாபதி அவர்களின் பாராட்டு நிரம்பிய கருத்துரைக்கு நன்றி! தி இந்துவின் வாசகர்களின் நானும் ஒருவன் என்ற வகையில் எனது பங்களிப்பு !

  ReplyDelete
 30. [[[தி.தமிழ் இளங்கோ said... மறுமொழி > நம்பள்கி said...
  // +1 //
  நம்பள்கி சாருக்கு என்மீது கோபம் ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நீங்கள் வித்தியாசமானவர்தான்.]]

  என்ன இளங்கோ?
  சார் மோர் என்றெல்லாம்! ஏன் இப்படி? நாமெல்லாம் சமவயது தானே! உங்கள் மீது கோபம் கொள்ள எனக்கு என்ன இருக்கு! நீங்கள் சொல்லும் கருத்துக்கு -எனக்கு உடன் படாதவைகளா இருந்தாலும்----எனக்கு கோபம் எனக்கு வராது!

  அதே சமயம், நான் கூறும் கருத்துக்கள் அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தால் அதற்கு கோபப்படுவது தமிழர்களே!

  நாளை வரும் எனது பதிவைப் படியுங்கள்! புரியும்!

  ReplyDelete
 31. அருமையான விமர்சனம். நீங்க சினிமா விமர்சனமும் எழுதலாம்.

  ReplyDelete
 32. மறுமொழி > நம்பள்கி said...

  // என்ன இளங்கோ? சார் மோர் என்றெல்லாம்! ஏன் இப்படி? நாமெல்லாம் சமவயது தானே! உங்கள் மீது கோபம் கொள்ள எனக்கு என்ன இருக்கு! நீங்கள் சொல்லும் கருத்துக்கு -எனக்கு உடன் படாதவைகளா இருந்தாலும்----எனக்கு கோபம் எனக்கு வராது! //

  நம்பள்கி அவர்களின் அன்புக்கு நன்றி!

  // அதே சமயம், நான் கூறும் கருத்துக்கள் அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தால் அதற்கு கோபப்படுவது தமிழர்களே! //

  வலையுலகில் கோபப்பட்டுக் கொள்வது அப்புறம் சமாதானம் ஆவதும், அதற்கப்புறம் நண்பர்களாக ஆவதும் சர்வ சாதாரணம்.

  // நாளை வரும் எனது பதிவைப் படியுங்கள்! புரியும்! //

  படிக்கின்றேன். நன்றி!

  ReplyDelete
 33. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

  // அருமையான விமர்சனம். நீங்க சினிமா விமர்சனமும் எழுதலாம். //

  அய்யா டி பி ஆர் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி! தியேட்டரில் கடைசியாக என்ன படம் எப்போது பார்த்தேன் என்றுகூட எனக்கு ஞாபகம் இல்லை. அவ்வளவு நாட்களாகி விட்டன.

  ReplyDelete
 34. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  ReplyDelete
 35. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  // தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து //

  புலவர் அய்யாவுக்கு நன்றி!

  ReplyDelete
 36. நல்ல பகிர்வு.....

  தில்லியில் இருப்பதால் இது போன்ற மலர்கள் வாங்க முடிவதில்லை.....

  வெ. சந்திரமோகன் முன்பு தில்லியில் இருந்தவர். நல்ல நண்பர்.

  ReplyDelete
 37. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete