Saturday 15 November 2014

நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க! – ஆசிரியர் வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்



தமிழ் வலையுலகில் “ Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision “ என்ற பதிவினை ( http://sattaparvai.blogspot.in ) எழுதி வரும் வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்களைப் பற்றி அறியாத வலைப் பதிவர்கள் இருக்க முடியாது. இவருடைய வலைப்பதிவு வாசகர்களில் நானும் ஒருவன். வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக இருந்தபோது இவரது வலைத்தளத்தைப் பாராட்டி எழுதி இருக்கிறேன். (http://blogintamil.blogspot.in/2013/02/6.html) .

அண்மையில் மதுரையில் நடந்த (26.09.2014) வலைப் பதிவர்கள் சந்திப்பினில், வழக்குரைஞர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்களதுநல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க! என்ற  நூல் வெளியிடப்பட்டது.

படம் உதவி நன்றி:  http://sattaparvai.blogspot.in/2014/10/2014.html

அன்று மதுரையில் வாங்கிய இந்த நூலை அண்மையில் படித்து முடித்தேன். இது விதிமுறைகளைப் பட்டியலிடும் சட்ட புத்தகம் இல்லை. ஆசிரியர் தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும் சிந்தனைகளையும் இங்கே தருகிறார்.

எப்படி வாழ வேண்டும்?

எல்லோருமே வாழ வேண்டும் அதிலும் நல்ல வசதி வாய்ப்போடு வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். இதற்கு ஒரு நம்பரை நமது வழக்குரைஞர் சொல்லுகிறார்.

பெரும்பாலும் எண் ராசியில் நம்பிக்கை உள்ளவர்கள், கூட்டுத் தொகையாக வரும் ஒற்றை இலக்க எண்ணையே (எனக்கு ராசி எண் 7, எனக்கு ராசி எண் 9 என்று ) சொல்வது வழக்கம். ஆனால் நம் ஆசிரியர் அவர்கள்  6 5 4 3 2 1 0 என்று ஏழு இலக்கங்கள் கொண்ட எண்ணை தனக்குப் பிடித்த எண்ணாகச் சொல்லி, அதனைப் பற்றிய சுவாரஸ்யமான விளக்கங்களையும் சொல்லுகிறார். (அத்தியாயம்.2)

6 – DIGIT SALARY
5 – DAYS WORK
4 - WHEELER VEHICLE
3 -  BHK FLAT
2 – CUTE CHILDREN
1 – SWEET HEART
0  - TENSION

இவைதான் அந்த விளக்கம். அதாவது இந்த ஏழு அமசங்களும் பொருநதி வாழ வேண்டும்.

புத்தகம் வாசித்தல்

உண்மையில் புத்தகம் வாசித்தல் என்பது ஒருவிதமான தியானம் எனலாம். காரணம் படிக்கும்போது அதில் ஒன்றிவிடுகிறோம். அதிலும் ஆழ்ந்து படிக்கும்போது நம்மை மறந்து விடுகிறோம். நூலின் ஆசிரியர் வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா? என்று மூன்று ( 3 5) பக்கம் காரணங்களை அடுக்குகிறார். கண்ணதாசன் கவிதைகளை ரசிக்காதவர் யார்? “நெஞ்சம் மறப்பதில்லை என்ற தலைப்பில் தான் ரசித்த கண்ணதாசன் பாடல்களை ஆர்வமாகச் சொல்லுகிறார்.


மனிதரில் எத்தனை வகை?

ஒரு தமிழ் திரைப் படத்தின் பெயர் “மனிதரில் இத்தனை நிறங்களா?”. ஜெயகாந்தன் எழுதிய ஒரு நாவலின் பெயர் “ சில நேரங்களில் சில மனிதர்கள்”. ஆக, எழுத்தாளர்கள் பலரும் மனிதனை எடைபோட்டு பார்த்து இருக்கிறார்கள். ந்மது வழக்குரைஞர் அவர்கள் தொழில் ரீதியாக பல மனிதர்களைச் சந்தித்தவர் என்பதால், மனிதர்களைப் பற்றிய தனது பார்வையை சில கட்டுரைகளில் தருகிறார்.

ஒவ்வொரு ஆணுக்கும் அவ்வாறே ஒவ்வொரு பெண்ணுக்கும் ராசி உண்டு. தமிழில் ராசி பலன்களைச் சொல்லாத பத்திரிகைகளே இல்லை எனலாம். ஆனால் நமது வழக்குரைஞரோ “பல்வேறு பெண்களின் இராசி பலன்கள் என்றும், “பல்வேறு ஆண்களின் இராசி பலன்கள் என்றும் சில  பொதுக் கருத்துகளை குணாதிசயங்களை வைத்து சொல்லுகிறார்.

சிலர் ஒனறும் தெரியாத அப்பாவிகள் போல இருப்பார்கள். அவர்களை “பேக்குகள் என்போம். ஆனால் அவர்களில், சில விவரமானவர்கள். தனக்கு வேண்டியவற்றை சாதித்து அவர்களைக் கவிழ்த்தும் விடுவார்கள். அவர்களைப் பற்றி அறிய அத்தியாயம் 11 (பேக்கு   வர்மம் பற்றி தெரியுமா?) வர வேண்டும். இன்னும் சில ஆசாமிகள் இருக்கிறார்க்ள். எந்த பிரச்சினையையும் குத்தி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். இவர்களிடமிருந்து விலகுவது எப்படி என்பதனை “குத்திவிடும் ஆண்கள் என்ற தலைப்பினில் அடையாளம் காட்டுகிறார்.

சில எச்சரிக்கைகள்:

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ?“ என்று சொல்லுவார்.

ஒரு கண்டக்டர் பாக்கி சில்லறை தராமல் இழுத்தடித்த விஷயத்தை நமது ஆசிரியர் ‘பேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையாஎன்ற இடத்தில் ரொம்பவும் சீரியஸாகவே கணக்கு பார்த்து சொல்லுகிறார். இதே போல ஒரு சம்பவத்தினைச் சொல்லி “மருத்துவர்களே ... உடன் இருப்பவரால் உங்கள் நற்பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்!“ என்று கோடிட்டுக் காட்டுகிறார். “கிரிடிட் கார்டு பற்றிய சில எச்சரிகைகள்,  தகவல் அறியும் சட்டத்தைப் பற்றிய தகவல்கள் என்று ஆங்காங்கே காணலாம்.

குடும்பநல வழக்குகள்:

இபோதெல்லாம் காலையில் கல்யாணம் மாலையில் விவாகரத்து என்ற அளவில் அதிகம் செய்திகள் வருகின்றன. அதிலும் பல பெண்கள் கணவன் வீட்டை பழிவாங்க எப்படி எல்லாம் பொய் வழக்குகள் போடுகிறார்கள் என்பதனையும் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்த ஆசிரியர் “மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காக்க ஒரு சட்டம் வேண்டும் “ என்று சொல்லுகிறார் ( அத்தியாயம்.13)

ஒரு சில வழக்குகளில் பிரிந்த தம்பதியினரைச் சேர்த்து வைக்க நீதிபதிகள் சில தடலாடி யோசனைகளைச் சொல்லி சேர்த்தும் வைத்து இருக்கிறார்கள். அவற்றுள் பிரியாணி சாப்பிடுங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள் என்ற ஆலோசனைகளும் உண்டு என்று ஒரு அத்தியாயத்தில் (15) நகைச்சுவையாக சொல்கிறார். இன்னும் “மணமுறிவைத் தவிர்க்க இதோ சில ஆலோசனைகள் உண்டு. குடும்பத்தில் மனைவியை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? எப்படி புகழ வேண்டும்? மனைவியின் சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் உண்மையான அர்த்தம் என்ன என்பதை யெல்லாம் சில அத்தியாயங்களில் சொல்லுகிறார்.

பொதுவாகப் பார்க்கும்போது, சட்ட  நுணுக்கங்களையும், தனது அனுபவங்களையும் ஒருசேர வைத்து வழக்குரைஞர்  எழுதிய பல்சுவை நூல் என இதனைச் சொல்லலாம்.

(படம் - மேலே) நூலின் பின்பக்க அட்டை.

நூலின் பெயர்: நல்லா எழுதுங்க..! நல்லதையே எழுதுங்க...!
நூலாசிரியர் :வழக்குரைஞர் பி.ஆர்.ஜெயராஜன்
நூலின் விலை: ரூ 75/=   பக்கங்கள்: 138
நூல் வெளியீடு: ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், 69/42 சி, மீனாட்சி நகர்,
               அஸ்தம்பட்டி, சேலம் 636 007 போன் 0427 2403402


18 comments:

  1. நூல் வாங்கி படிக்கிறேன் நண்பரே...

    இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
  2. எங்களது நூலாசிரியர் ஜெயராஜன் சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ஆசிரியரின் ராசி எண் பிடிப்பு எனக்கும் பிடிப்பு :)

    ReplyDelete
  3. ஒரு லட்சம் சம்பளமா? அம்மாடி,,,,,,,,,,,,, தலைப்பு நல்லாயிருக்கு. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!
    ஆழ்ந்த கருத்துகள்..!

    ReplyDelete
  5. சிறப்பாக நூலைப் படித்து அலசி உள்ளீர்கள்.
    பயன் தரும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. வழக்குரைஞர் திரு. பி.ஆர். ஜெயராஜன் அவர்கள் எழுதிய பல்சுவை நூல் விமர்சனம் மிக அருமை.

    ReplyDelete
  7. “நல்லா எழுதுங்க! நல்லதையே எழுதுங்க!’ நூல் பற்றிய தங்களது மதிப்புரை அதை உடனே படிக்கத் தூண்டுகிறது. நூல் ஆசிரியருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மதுரை வலைப் பதிவர்கள் சந்திப்புத் திருவிழாவில்
    வழக்கறிஞரை சந்தித்ததும் உரையாடியதும்
    பசுமையாய் நினைவில் உள்ளன ஐயா
    அருமையான நூல்
    நன்றி

    ReplyDelete
  9. நூல் விமர்சனம் அருமை ஐயா...

    ReplyDelete
  10. மதுரைப் பதிவர் சந்திப்பில் மதியமே சென்று விட்டதால் நூல் வெளியீட்டு விழாவுக்கு இருக்கவில்லை. நல்ல புத்தகம் என்று உங்கள் மதிப்புரை கூறுகிறது. வாங்கிப் படிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல புத்தகம் பற்றி விமர்சித்து..எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  12. புத்தகவிமர்சனம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  13. மதுரைப் பதிவர் சந்திப்பில் இந்நூல் வெளியீட்டினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நூலை முழுமையாகப் படித்த உணர்வு ஏற்படும்படி மதிப்பீடு செய்துள்ளீர்கள். பயனுள்ள நூல். நன்றி.

    ReplyDelete
  14. மதுரை வலைப்பதிவர் விழாவில் நூல் வெளியீட்டினைக் கண்டேன். முழு நூலையும் படித்தது போன்ற எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்தும் அளவு நிறைவாக மதிப்பீடு செய்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  15. அருமையான நூல் விமர்சனம் ...
    நன்றி

    ReplyDelete
  16. மறுமொழி > மேலே கருத்துரைகள் தந்த அனைவருக்கும்
    எனது நன்றி.

    ReplyDelete
  17. பெருமதிப்பிற்குரிய ஐயா திரு தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம்.

    எனது "நல்லா எழுதுங்க ...! நல்லதையே எழுதுங்க...!!" என்ற புத்தகத்திற்கு ஒரு தனிப்பதிவாக தாங்கள் தந்துள்ள மதிப்புரையை வாசித்தேன். அதற்கு முதற்கண் எனது கனிவான நன்றிகளை அய்யா அவர்களுக்கு உரித்தாக்குகின்றேன். அணிக்கு அணி சேர்த்தார் போன்று தங்கள் மதிப்புரை அமைந்திருந்தது. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து மிகச் சிறந்த மதிப்புரை தந்துள்ளீர்கள்.

    அதுபோல தங்கள் மதிப்புரையை வாசித்து வாழ்த்துரைத்தும் பாராட்டியும் பின்னூட்டம் இட்ட சக வலைப்பதிவர் பெரு மக்களுக்கும் எனது நெஞ்சு நிறை நன்றி.

    என்றும் அன்புடன்,
    பி.ஆர்.ஜெயராஜன்.

    ReplyDelete