Sunday, 2 November 2014

வாழ்வின் விளிம்பில் – ஆசிரியர் G.M.Bதமிழ் வலைப்பதிவில் அய்யா G.M.B அவர்களை அறியாதவர் இருக்க முடியாது. G.M.B என்று அன்பாக அழைக்கப்படும் திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்கள் எழுபத்து ஐந்து வயது ஆனாலும், வலைப் பதிவில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வோடு கருத்துக்களை தருபவர். சென்ற மாதம் மதுரையில் நடந்த சந்திப்பு விழாவில்,  அய்யா G.M.B அவர்கள் தான் எழுதிய  வாழ்வின் விளிம்பில் என்ற நூலை எனக்கு தந்தார். அங்கே அரங்கத்தினுள் நான் வாங்கிய மற்ற நூல்களை விட, இந்த நூல் அதிகம் என்னை ஈர்த்ததால், மதுரையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய மூன்று தினங்களில் படித்து விட்டேன்.

நூல் முழுக்க தான் பட்டறிந்த அனுபவக் கருத்துகளை கதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல் புதுமையான வெளிப்பாடாக சொல்லி இருக்கிறார்.

(படம் மேலே) நூலின் பின்பக்க அட்டை

உறவுச் சிக்கல்கள்:

சமுதாயத்தில் வெளிப்படையாக சொல்ல முடியாத ஆனால் உள்ளுக்குள் நடக்கும் சில உறவுச் சிக்கல்களை நூழிலை போல் தொட்டுச் செல்வார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். (உதாரணத்திற்கு அவர் எழுதிய “அம்மா வந்தாள்” )  எழுத்தாளர் சாவியும் இதுபோல் (உதாரணம் “ வேத வித்து ”) எழுதி இருக்கிறார். ஆனால் கவிஞர் கண்ணதாசன் இது போன்ற சமச்சாரங்களை “அரங்கமும் அந்தரங்கமும்என்ற நாவலில் படாரென்று போட்டு உடைப்பார். திரைப்படங்களில் இயக்குநர் கோபாலகிருஷ்ணனின் “சாரதாமற்றும் இயக்குநர் பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்படங்களைச் சொல்லலாம்.

நமது G.M.B அவர்களுக்கும் உள்ளுக்குள் போட்டு உடைப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது. அவரும் இது மாதிரியான உறவுச் சிக்கல்களை கவிஞர் கண்ணதாசன் போன்று வெளிப்படையாகவே சொல்லுகிறார்.

மனசாட்சி , என்ற கதையில் காதல் கல்யாணத்திற்குப் பிறகு தன்னை மணந்தவன் ஒரு இம்பொடெண்ட் என்று அறிந்த பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சூறாவளியை விளக்குகிறார்.

அந்த காலத்தில் கேரளாவில் நடைமுறைச் சம்பிரதாயம் என்ற பெயரில் ஆதிக்கச் சாதியின் ஒரு பிரிவினர், ஒடுக்கப்பட்ட மக்களின் பெண்களை நாசமாக்கியதைச் சொல்வது  இப்படியும் ஒரு கதை. கண்கள் இரண்டையும் இழந்த பெண்ணுக்குள்ளும் உணர்வுகள் உண்டு என்பதை பார்வையும் மௌனமும் என்ற கதையின் வழியே சொல்கிறார்.

சிலருக்கு இந்த கதைகள்  பிடிக்காமல் போனாலும் எதார்த்தம் அதுதான்

நடுத்தர வர்க்கம்:

மேலேயும் போக முடியாமல் , கீழேயும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்டு அல்லாடும் நடுத்தர குடும்ப பிரச்சினைகளை தனக்கே உரிய எளிமையான நடையில் சுவையாகச் சொல்லுகிறார். உதாரணத்திற்கு லட்சுமி கல்யாண வைபோகம் என்ற கதை. லட்சுமிக்கு திருமணம் நிச்சயமாகி நடக்கப்போகும் நேரத்தில் மாப்பிள்ளையின் தங்கையின் கணவன் இறந்து விடுகிறான். மாப்பிள்ளையின் அம்மாவும் , தங்கையும் லட்சுமியை சம்பந்தம் போட்ட நேரம் என்று நினைக்கின்றனர். கல்யாணம் எப்படி நடக்கிறது என்பதே கதை.

மரண பயம்:

ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் என்ன நினைப்பான் அல்லது என்ன நினைத்து இருப்பான் என்பதனை புத்தகத்தின் தலைப்பாக உள்ள “வாழ்வின் விளிம்பில் என்ற முதல் கதையில் சொல்லுகிறார். கதையினில், போகும் உயிர் பொசுக்கென்று போகவேண்டும் , பயம் இல்லாமல் சாகவேண்டும் என்று சொன்னாலும், “ நான் வாழ்ந்தே தீருவேன் என்ற மனவுறுதி (WILL POWER) இருந்திருந்தால் சாவு எப்படி நெருங்கியிருக்கும்என்பது உள் கருத்தாக மிளிர்கிறது. விளிம்புகளில் தொடரும் கதை என்ற இன்னொரு கதை இதன் இரண்டாம் பகுதி போன்று செல்கிறது.

அன்றாட நிகழ்வுகள்:

தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பார்த்த மனிதர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் மையமாக வைத்து சில கதைகள் படைத்துள்ளார். 

குழந்தை ஏக்கம் மிகுந்த தம்பதியினர் தங்கள் குறை நீங்க அம்மாஜி அப்பாஜி என்று சாமியார்களை நம்பி ஏமாறுவதை ஒரு கதையினில் ( கேள்விகளே பதிலாய் ) கண்டிக்கிறார்..
குழந்தை பெறுவதோ, முடியாமல் போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து  கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் எதுவும் செய்ய முடியாது. (பக்கம் 23)

நண்பனின் குடும்ப நிலைமை கண்டு வருந்திய நண்பர் ஒருவர் தனது நண்பனுக்கு ஏணியாக இருந்து உதவுகிறார். நண்பனுக்குப் பின் அவனுடைய மனைவியோ மகனோ ஏணியாக இருந்தவரைப் பற்றி கொஞ்சமும் நினைப்பதில்லை.(ஏறி வந்த ஏணி)

நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல் இருந்து விட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை. (பக்கம் 33)

இன்னும் அனுபவி ராஜா அனுபவி , வாழ்க்கை ஒரு சக்கரம் , எங்கே ஒரு தவறு முதலான கதைகளையும் சொல்லலாம். சௌத்வி க சாந்த் ஹோ என்ற கதையில் சொல்லப்படும் ஒரு கருத்து இது

எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார விரதம், காரடையான் நோன்பு, ரக்‌ஷ பந்தன், இத்தியாதி இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்ட ஏதாவது செய்கிறார்களா என்ன.?  (பக்கம் 93)

அய்யா G.M.B அவர்களின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் இவருடைய வெளிப்படையான புரட்சிகரமான கருத்துக்களை வியக்காமல் இருக்க முடியாது.

நூலின் பெயர் வாழ்வின் விளிம்பில்
ஆசிரியர்      - G.M.பாலசுப்ரமணியம்
பக்கங்கள் 130  விலை ரூ 60/=
வெளியீடு மணிமேகலைப் பிரசுரம், சென்னை.


  
( படம் - மேலே) திரு G.M.B அவர்கள் திருச்சிக்கு (03.07.2013) வந்திருந்த போது எடுத்த படம் இது. படத்தில் திரு V.G.K,  திரு G.M.B மற்றும் அடியேன்

43 comments:

 1. நானும் இந்த சிறுகதைகள் தொகுப்பை படித்திருக்கிறேன். இந்த சிறுகதைகள் பற்றி மதிப்புரை எழுதவேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் முந்திவிட்டீர்கள். கதைகளை அருமையாக திறனாய்வு செய்து, மதிப்புரை வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி சார்.அய்யா அவர்கள் மதுரை விழாவில் தான் முதன் முறையாக சந்தித்தேன்

  ReplyDelete
 3. இன்றைக்கு படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்துள்ளேன்...

  நல்ல விமர்சனம் ஐயா...

  இன்றைய தினமலர் நாளிதழுடன் இணைப்பாக வரும் "சண்டே ஸ்பெசஷல்" நான்காவது பக்கத்தில் "வலைப்பூக்களின் பூங்கா" எனும் தலைப்பில்...

  தினமலருக்கு நன்றி...

  வாசிக்க இணைப்பை சொடுக்குக :

  http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/11/02/ArticleHtmls/02112014122003.shtml?Mode=1

  ReplyDelete
 4. திரு G.M.B அவர்கள் எழுதிய சிறுகதைத்தொகுப்புகள் பற்றி
  அருமையான மதிப்புரை..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 5. அய்யா அவர்கள் வழங்கிய அந்த புத்தகத்தை நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் ,உங்கள் விமர்சனமும் ,அவரின் புரட்சி கருத்தை வெளிப்படுத்தியது !
  த ம 2

  ReplyDelete
 6. ஐயா,

  எங்கள் மதிப்பிற்கும், எங்கள் அன்பிற்கும் உரிய திரு ஜி.எம்.பாலசுப்பிரமணியம் சாரின் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி! அருமையான விமர்சனம்..அவரது எழுத்துக்களும் மிகவும் ரசனை மிக்கவை மட்டுமல்ல, சிந்திக்க வைப்பவை! அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது அவர் நமக்கு மிகவும் அருகாமையானவர் போன்று தோன்றி, மனதைத் தொட்டுச் செல்பவர். அவருடன் நமக்கு ஏதோ ஒரு நெருக்கம் உள்ளது போன்ற ஒரு எண்ணம் உருவாகும்.

  இதே போன்ற ஒரு எண்ணம் எங்க்ளுக்கு உங்கள் பதிவுகளை வாசிக்கும் போதும் தோன்றும்! ஒருவேளை அனுபவம் மிக்க உங்களைப் போன்றவர்களின் சக்தியோ அது!?

  மிக்க நன்றி! வாங்கி விடுகின்றோம்! வாசித்தும் விடுகின்றோம்!

  மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு!

  ReplyDelete
 7. தங்கள் மதிப்புரை மதிப்பு வாய்ந்ததாகவே .......

  பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 8. ஐயாவின் புத்தகம் குறித்து அழகாக விமர்சித்து உள்ளீர்கள்மங்கு வரும் போது வாங்கி வர வேண்டும்.

  துளசி ஐயா சென்னது போன்று உங்கள் பதிவுகளை படிக்கையில் அப்படித்தான் இருக்கிறது.
  (அருகாமை)

  நன்றி ஐயா. தம 3

  ReplyDelete
 9. வணக்கம் !

  மதிப்புரையைக் காணும் போது அவர்களினது படைப்பினைக் காண
  ஆவல் எழுகிறது சிறப்பான மதிப்புரை !வாழ்த்துக்கள் சகோதரா ஐயாவின்
  படைப்புகள் அகிலமே கண்டு வியக்கும் அளவிற்கு பரவட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .

  ReplyDelete
 10. ஏற்புடைய நூல் விமர்சனம்
  ஏற்றமிகு கருத்துக்கள் ஏற்ப்புடைய கருத்துக்கள்!
  வரவேற்கின்றோம் இதுபோன்ற வர்வேற்பு விமர்சனங்களை!
  கண்டிப்பாக நண்பர்களிடம் சொல்லி வரவழைத்து படித்து விடுகிறேன் நண்பரே!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 11. மதிப்புமிக்க மதிப்புரை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அன்பின் இளங்கோவுக்கு வ்ணக்கம் உங்கள் மதிப்புரை என் நூலினைப் படிக்க ஆர்வமேற்படுத்தும் . நன்றி

  ReplyDelete
 13. ஒரு முறை பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் வீட்டுக்கு செண்டிருந்தபோது இந்த நூலை அளித்தார். படித்து முடித்து விட்டேன். நூல் விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தள்ளிக் கொண்டே போய் விட்டது.தாங்கள் எழுதி விட்டீர்கள்
  மதுரையிலும் தங்கள் இருவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 14. நல்லதோர் மதிப்புரை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // நானும் இந்த சிறுகதைகள் தொகுப்பை படித்திருக்கிறேன். இந்த சிறுகதைகள் பற்றி மதிப்புரை எழுதவேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் முந்திவிட்டீர்கள்.//

  அய்யா நீங்களும் உங்கள் நடையில் இந்த நூலைப் பற்றிய விமர்சனம் செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

  // கதைகளை அருமையாக திறனாய்வு செய்து, மதிப்புரை வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! //

  தங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 16. மறுமொழி > r.v.saravanan said...

  சகோதரர் குடந்தையூர் ஆர். வி. சரவணன் அவர்களது கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 17. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // இன்றைக்கு படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்துள்ளேன்...//

  படித்து முடித்தவுடன் மறக்காமல் நீங்களும் இந்த நூலினைப் பற்றிய விமர்சனப் பதிவு ஒன்றினை எழுதவும்.

  // நல்ல விமர்சனம் ஐயா... இன்றைய தினமலர் நாளிதழுடன் இணைப்பாக வரும் "சண்டே ஸ்பெசஷல்" நான்காவது பக்கத்தில் "வலைப்பூக்களின் பூங்கா" எனும் தலைப்பில்...தினமலருக்கு நன்றி... வாசிக்க இணைப்பை சொடுக்குக : //

  .நீங்கள் கொடுத்த தினமலர் இணைப்பை படித்தேன். சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் தகவலுக்கும் நன்றி  ReplyDelete
 18. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 19. மறுமொழி > Bagawanjee KA said...

  // அய்யா அவர்கள் வழங்கிய அந்த புத்தகத்தை நானும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் ,உங்கள் விமர்சனமும் ,அவரின் புரட்சி கருத்தை வெளிப்படுத்தியது ! த ம 2 //

  நீங்கள் எதையும் வித்தியாசமாக பார்ப்பவர். எனவே நீங்கள் உங்கள் பார்வையில் இந்த நூலினைப் பற்றி எழுதவும்.

  ReplyDelete
 20. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

  சகோதரர் V துளசிதரன் அவர்களது வருகைக்கும் அன்பான நீண்ட கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said..

  அன்புள்ள V.G.K அவர்களின் சுருக்கமான பாராட்டுரைக்கு நன்றி!.

  ReplyDelete
 22. மறுமொழி > R.Umayal Gayathri said...

  சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 23. மறுமொழி > அம்பாளடியாள் said...

  சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 24. மறுமொழி > yathavan nambi said...

  சகோதரர் யாதவன் நம்பி அவர்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 25. மறுமொழி > Ramani S said...

  கவிஞர் அய்யாவுக்கு நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > G.M Balasubramaniam said...

  // அன்பின் இளங்கோவுக்கு வ்ணக்கம் உங்கள் மதிப்புரை என் நூலினைப் படிக்க ஆர்வமேற்படுத்தும் . நன்றி //

  அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  சகோதரர் மூங்கிற் காற்று முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! தள்ளிப் போட்டது போகட்டும். தாங்கள் இப்போதும் இந்நூலினைப் பற்றிய விமர்சனத்தினரை, கல்வித்துறை அலுவலரான உங்களின் பார்வையில் எழுத வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 28. விரைவில் நூல் வாங்கி வாசிக்கின்றேன்.மதிப்புரைக்கு நன்றிகள்

  ReplyDelete
 29. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 30. அருமையான மதிப்புரை ஐயா
  நான் ஏற்கனவே ஐயா அவர்களின் இந்நூலினைப் படித்துவிட்டேன்
  அருமையான நூல்
  நன்றி ஐயா

  ReplyDelete
 31. பொன் குடத்திற்குப் பொட்டு வைப்பது போன்ற அருகையான பதிவு! இளங்கோ!

  ReplyDelete
 32. அன்பு நண்பர் அவர்களை மதுரையில் சந்தித்தது மகிழ்ச்சி, ஐயா GMB அவர்கள் எமக்கும் ''வாழ்வின் விளிம்பில்'' கொடுத்தார் இன்னும் தொடங்கவில்லை காரணம் பதிவர் சந்திப்பு வேலையின் மும்முரம் தாங்கள்வேறு பிரமாண்டமாய் எதிர்பார்ப்பதாய் எழுதிவிட்டீர்கள். அதுவரை எமது புதியபதிவு தற்போது ''காற்று''

  ReplyDelete
 33. நான் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் GMB ஐயாவின் தளமும் ஒன்று.

  அவரது புத்தகத்தினை வாசிக்கும் ஆவல் உஙக்ள் பதிவினைப் படித்ததும் அதிகமாகி விட்டது. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

  த.ம. +1

  ReplyDelete
 34. அவரைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் ஒவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே போகிறது!

  ReplyDelete
 35. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!

  // அன்பு நண்பர் அவர்களை மதுரையில் சந்தித்தது மகிழ்ச்சி, ஐயா//

  ஆமான் அய்யா! மதுரை சந்திப்பு ஒரு மகிழ்ச்சியான சந்திப்புதான்.

  // GMB அவர்கள் எமக்கும் ''வாழ்வின் விளிம்பில்'' கொடுத்தார் இன்னும் தொடங்கவில்லை காரணம் பதிவர் சந்திப்பு வேலையின் மும்முரம் தாங்கள்வேறு பிரமாண்டமாய் எதிர்பார்ப்பதாய் எழுதிவிட்டீர்கள். அதுவரை எமது புதியபதிவு தற்போது ''காற்று'' //

  படித்து முடித்தவுடன் மறக்காமல் எழுதவும். மதுரை சந்திப்பு பற்றிய உங்கள் அனுபவத்தை படிக்க விரும்புகிறேன். சில நாட்களாக வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் செல்ல இயலவில்லை. விரைவில் உங்கள் பக்கம் வருகிறேன்.


  ReplyDelete
 36. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 37. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  // அவரைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் ஒவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே போகிறது! //

  தங்கள் கருத்துரைக்கு நன்றி. எப்படியும் அவர் மீண்டும் திருச்சிக்கு வருவார். அப்போது எல்லோரும் சேர்ந்தே அவரைப் பார்ப்போம்.

  ReplyDelete
 38. ஜிஎம்பி ஐயாவின் எழுத்துவன்மையும் எண்ணப் பகிர்வுகளும் அனுபவப் பகிர்வுகளும் ஆழ்ந்து சிந்திக்கவைப்பவை. அவருடைய நூல் அறிமுகத்தை இங்கு தந்ததன் மூலம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 39. மறுமொழி > கீத மஞ்சரி said...

  சகோதரி அவர்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி!

  ReplyDelete
 40. ஐயாவின் நூலைப் படித்து எழுதவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். தாங்கள் முந்திக்கொண்டதறிந்து மகிழ்ச்சி. மதுரையில் அவரைச் சந்தித்தபோது நூலைத் தந்தார். பிற பணிகள் காரணமாக எழுதமுடியவில்லை. விரைவில் அவரது நூலைப் பற்றி எழுதுவேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி. அவர்கள் எழுதிய ‘வாழ்வின் விளிம்பில்’ என்ற இந்த நூலினை, விக்கிபீடியாவில் தாங்கள் இணைத்துள்ள விவரத்தினை அவரது பதிவொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நான் அந்த இணைப்பினில், எடிட் செய்து, “நூல் விமர்சனம்: தி.தமிழ் இளங்கோ - வாழ்வின் விளிம்பில் – ஆசிரியர் G.M.B http://tthamizhelango.blogspot.com/2014/11/gmb.html “ என்று எனது நூல் விமர்சனத்தினை சுட்டியுள்ளேன். உங்கள் இருவருக்கும் நன்றி.

   Delete