Friday, 14 November 2014

வெளிநாடு செல்லும் V.G.K - வாழ்த்துக்கள்!கடந்த பத்து மாதங்களாக ( 01.01.2014 தொடங்கி 09.11.2014 வரை) தமிழ் வலைத் தளத்தில் V.G.K சிறுகதை விமர்சனப் போட்டி “ நடத்திய மூத்த வலைப் பதிவர் அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களை நேரில் தெரிவிக்கலாம் என்று எண்ணி இருந்தேன். (இந்த ஆண்டு துவக்கத்தில் (ஜனவரியில்) தொடங்கிய இந்த போட்டியைப் பற்றி தொடர்ந்து 10 மாதங்களுக்கும் மேலாக, தனது வலைத்தளத்திலும் தமிழ் வலையுலகிலும் அனைவரும் பேசும்படி ஒரு சாதனை செய்து விட்டார் என்பதே உண்மை.) மழையின் காரணமாக அவரை சந்திப்பதற்கு   இன்று செல்லலாம், நாளை செல்லலாம் என்று தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன். இதற்கிடையே வரும் 15 ஆம் தேதி (நாளை) தான் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் திரும்பி வர ஒருமாதம் ஆகலாம் எனவும் ஒருசில புதிய தகவல்கள்  என்ற சிறிய தலைப்பில், தனது பதிவினில் தெரிவித்து இருந்தார். (http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html )

எனவே இன்று (14.11.2014) எப்படியும் அவரை சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலில் புறப்பட்டேன். அதற்கு முன்னர் அவரோடு தொடர்பு கொண்டு பேசலாம் என்று செல்போனில் பேசினால் “ நெட் ஒர்க் பிஸி என்ற தகவலே வந்தது. அவர் குடியிருக்கும் திருச்சி வடக்கு ஆண்டார் வீதி புறப்பட்டுச் சென்றேன். நல்லவேளை மழை இல்லை. அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை  அடைந்ததும் கீழே இருந்து மறுபடியும் தொடர்பு கொண்டேன். என்னை வரச் சொன்னார். மேலே சென்றேன். உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கிளம்பிக் கொண்டு இருந்தார்.

வீட்டில் V.G.K அவர்களும் அவரது மனைவியும் இரண்டாவது மருமகளும் இருந்தனர். எல்லோரும் என்னை இன்முகத்துடன் வரவேற்றனர். எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் முன்னதாகவே நடந்து கொண்டு இருப்பதை, அங்கே ஹாலில் கிடந்த பெரிய பெரிய டிராவல் பேக்குகளை வைத்து தெரிந்து கொண்டேன். V.G.K   அவர்களோடு பேசிய்தில், அவர் தனது மூத்த மகன் இருக்கும் துபாய் நாட்டிற்கு தனது மனைவி மற்றும் மூத்த சம்பந்திகளோடு செல்வதாகச் சொன்னார். மேலும் அங்கு (துபாயில்) பள்ளியில் படித்து வரும் சிறுமியான  அவரது ஒரே பேத்தி (செல்வி. பவித்ரா) சாதனை புரிவதற்காகவே  அவள் படித்துவரும் புகழ்பெற்ற பள்ளியின் சார்பில் தனியாக  U.A.E., to U.S.A.,  ஒருவாரப் பயணம் மேற்கொள்கிறாள் எனவும், அவளை ஆசீர்வதித்து அனுப்பி வைக்கவும் திரும்ப அவளை பெருமையுடன் வரவேற்கவும்  திடீரென்று கிளம்பியதாகவும் சொன்னார். (அவரது பேத்தி பவித்ராவுக்கு வாழ்த்துக்கள்)

தமிழ் வலைத்தளத்தில் அவர் ஆற்றிய சிறந்த பணிகளுக்கும் மற்றும் அவரது அயல்நாட்டு பயணத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு , அவருக்கு பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலினைப் பரிசாக வழங்கினேன். (இந்த நூலை இப்போது நான் படித்துக் கொண்டு இருக்கிறேன் ) பின்னர் அவர்கள் வீட்டில் சூடான சுவையான ஒரு டம்ளர் காபியை அருந்திவிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள்:நாளை வெளிநாடு சுற்றுலாப் பயணம் செல்லும் அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்! அவர்களது  பயணங்கள் இனிதாகவும்  பாதுகாப்பானதாகவும்  மகிழ்ச்சியாகவும் அமைய  இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!


இணைப்பு (16.11.2014)

அய்யா V.G.K அவர்கள் நலமாக சென்று சேர்ந்ததாக நேற்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதன் நகல் கீழே:

Dear All,

Good Evening !
I would like to inform you that We are safely landed at United Arab Emirates today 15.11.2014 at 5.00 PM here which is equal to 6.30 PM - Indian Standard Time.
We are now So Happy with our Grand Children here.
This is just for your information, please.
Thanks for your kind Wishes, Greetings, Prayers etc.,
Yours,
GOPU [VGK]  


24 comments:

 1. வி. ஜி. கே. சாரின் வெளி நாட்டுப் பயணம் சிறந்து , மகிழ்வடைய எனது
  நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. துபாய்க்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அன்புக்குரிய திரு V.G.K. அண்ணா அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  நல்ல செய்தியினை பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 3. வை.கோ. அவர்களின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க எனது வாழ்த்துகள்.....

  த.ம. +1

  ReplyDelete
 4. அன்புள்ள தி. தமிழ் இளங்கோ ஐயா,

  வணக்கம் ஐயா.

  என் இல்லத்திற்கு இன்று தங்களின் எதிர்பாராத திடீர் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது, ஐயா.

  தங்களின் பேரன்புக்கும், இதனைச் சுடச்சுட இன்றே இங்கு பதிவாக வெளியிட்டதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  முடிந்தால் நாளை இரவு தங்களை, நான் செல்லவிருக்கும் வெளிநாட்டிலிருந்து மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன் ஐயா.

  தங்களின் அன்பான பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா.

  அன்புடன் VGK

  ReplyDelete
 5. வி ஜி கே சாருக்கும் அவர்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ;ஐயாவுக்கு வாழ்த்துகள் இனிய பயணமாக அமையட்டும்!

  ReplyDelete
 7. எனது
  நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. மகிழ்ச்சியோடு உலா சென்று வாருங்கள்

  ReplyDelete
 9. அவர்களது பயணங்கள் இனிதாகவும் பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  ReplyDelete
 10. பயணம் சிறக்க வாழ்த்துவோம்
  அவரது பெயர்த்தியையும் வாழ்த்துவோம்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
 11. இனிய பயணம் அமையட்டும்
  த ம ஐந்து

  ReplyDelete
 12. பயணம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. திரு வை.கோ அவர்கள் வெளி நாட்டு பயணம் இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்! அவரது பெயர்த்தி செல்வி பவித்ராவுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்!

  ReplyDelete
 14. அயல்நாடு செல்ல இருக்கும் கோபு சாருக்கும், அதுபற்றிப் பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. கோபாலகிருஸ்ணன் ஐயாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் !பயணம்
  மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளைத் தந்து மகிழ்விக்கட்டும் .இளங்கோ
  ஐயா தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  மேலும் இந்த நட்பானது இனிதே தொடரட்டும்

  ReplyDelete
 16. வலையுலகின் சுறுசுறுப்புத் தேனீ VGK ஐயா அவர்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. வி.ஜி.கே அய்யாவின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 18. கோபாலகிரிஷ்ணன் ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
  அன்புடன்
  தங்களின் நண்பன்
  கில்லர்ஜி.

  ReplyDelete
 20. வாழ்க விஜிகே!
  வெல்க அவரின் வெளி நாட்டுப் பயணம்!

  ReplyDelete
 21. மறுமொழி > மேலே கருத்துரைகள் தந்த அனைவருக்கும்

  திரு V.G.K அவர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 22. சாரின் பயணம் இனிமையாக அமைந்து இருக்கும்.
  உங்களிடம் நலமாக வந்து விட்டதை பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 23. அய்யா V.G.K அவர்கள் நலமாக சென்று சேர்ந்ததாக நேற்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதன் நகல் கீழே:

  Dear All,

  Good Evening !
  I would like to inform you that We are safely landed at United Arab Emirates today 15.11.2014 at 5.00 PM here which is equal to 6.30 PM - Indian Standard Time.
  We are now So Happy with our Grand Children here.
  This is just for your information, please.
  Thanks for your kind Wishes, Greetings, Prayers etc.,
  Yours,
  GOPU [VGK]

  ReplyDelete