படத்தில் – கில்லர்ஜியுடன் நான் (படம் - நன்றி கில்லர்ஜி)
“ இனிய நண்பரே தங்களை
தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும், - அன்புடன் தங்களின் நண்பன் கில்லர்ஜி. என்று ஒரு குறுஞ்செய்தி
வந்தது. ந்ண்பர் கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி (1) | Killergee
http://killergee.blogspot.in/2014/11/1.html
என்ற பதிவினை சென்று பார்த்தபோது என்னையும்
சேர்த்து 10 பேரை ஒரு தொடர் பதிவினை எழுதச் சொல்லி கேட்டு இருந்தார். பள்ளிப்
படிப்பின்போது “நான் பிரதமர் ஆனால் “ என்று கட்டுரை எழுதச் சொன்னதுண்டு.
கில்லர்ஜியின் கேள்விகளையும் பதில்களையும்
படித்ததும் எனக்கு கல்லூரி மாணவப் பருவத்தில் படித்த யுடோபியா (UTOPIA) என்ற நாவலைப் பற்றிய கட்டுரை (AN ARTICLE) ஒன்றுதான் நினைவுக்கு வந்தது.
அந்நூலில் THOMAS MORE அவர்கள் தனது இலட்சிய சமுதாயம் அடங்கிய கனவுலக நாட்டை
படைத்துள்ளார். நமது கம்பன்கூட கனவு கண்டு இருக்கிறான்.
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
- (கம்பராமாயணம்
–
நாட்டுப்படலம்.53)
FOX நிறுவனத்தார் UTOPIA கருத்தினை மையமாக வைத்து, ஒரு நேரலை காட்சி (REALITY
SHOW) ஒன்றை தொடங்கி எதிர்பார்த்த
வரவேற்பு இல்லாததால் பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள்.
(படம் GOOGLE
– இற்கு நன்றி)
ஞானி ஸ்ரீபூவு :
கில்லர்ஜியின் கனவில்
வந்த இருவரில் மகாத்மா காந்தியை எல்லோருக்கும் தெரியும். இன்னொருவர் ஞானி ஸ்ரீபூவு
என்பவர் யார் என்று தெரியவில்லை. அவருடைய வலைத் தளத்திலேயே இதற்கு விடை
கிடைத்தது. ஞானி ஸ்ரீபூவு வகையறா என்ற
தலைப்பினில் http://killergee.blogspot.in/2012/05/blog-post_26.html
ஒரு பதிவை எழுதி இருக்கிறார். எனவே ஞானி
ஸ்ரீபூவு பற்றிய குழப்பம் இல்லை ஆனாலும் அவரைப் பற்றிய முழு விவரம் இல்லை.. (
நண்பர் கில்லர்ஜி ஞானி ஸ்ரீபூவு பற்றிய விவரங்களை தலபுராணம் போன்று இன்னொரு பதிவாக
படங்களுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் )
கேள்விகள் பத்து:
தொடர் பதிவு எழுதிட
இதற்கு முன்னரும் சில அன்பு வலைப் பதிவர்கள் அழைத்து இருந்தனர். எழுத நேரம்
இல்லாமல் போய்விட்டது. இப்போதும் அப்படியேதான். இருந்தாலும் ஓரளவு எனக்குத்
தெரிந்த அளவில் பதில் அளித்துள்ளேன்.
1. நீ
மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
பிறவாதிருக்க வரம்
ஒன்று வேண்டும் என்றார் பட்டினத்தார். எனவே மீண்டும் பிறவாமை நல்லது.
2. ஒரு
வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம்
உன்னிடம் இருக்கிறதா?
எல்லோரும் (ஆட்சியாளர்கள்
மட்டுமன்றி குடிமக்கள் உட்பட் அனைவருமே)
அரசாங்கத்தின் சொத்தாக அறிவிக்கப்படுவர். இதே போல அனைவருக்கும் கல்வி,
மருத்துவம் இலவசம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிமன்றக்குழு
மாற்றியமைக்கப்படும். ஒருவருக்கு ஒருமுறைதான் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
-
பாடல்: கண்ணதாசன் ( படம்: கருப்புப்பணம் )
இந்த பாடலை கண்டு
கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)
3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
எல்லோருக்கும்
இங்கேயே வேலை வாய்ப்புகள் தரப்படும். வெளிநாட்டு இந்தியர்கள் என்று யாரும் இருக்க
அனுமதி இல்லை. சுற்றுலா செல்ல மட்டுமே அனுமதி.
4. முதியோர்களுக்கு
என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் அனைவருக்கும்
உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே
உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக
கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில்
வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம்.
5. அரசியல்வாதிகளுக்கு
என்று புதிய திட்டம் ஏதாவது?
அரசியல்வாதிகள் என்று
யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் மக்கள் பணியாளர்கள்
6. மதிப்பெண்
தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
சட்டத்திற்கு
மதிப்பளிக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
7.விஞ்ஞானிகளுக்கென்று
ஏதும் இருக்கிறதா?
விஞ்ஞானிகளுக்கு
அரசாங்கமே வேண்டிய உதவிகளைச் செய்யும்.
8. இதை
உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
தொடர்ந்து கடை
பிடித்திட இந்த ஆட்சியிலேயே அடுத்து வர வேண்டியவர்கள் பட்டியல்கள்
தயாரிக்கப்பட்டு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுவிடும். ஒரு முறைதான் ஒருவருக்கு ஆட்சிப் பணியாளராக இருக்க அனுமதி.
பதவியை விட்டு இறங்கியதும் அவருக்குண்டான பணியினைச் செய்ய சென்றுவிட வேண்டும்.
9.மற்ற
நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
தேர்தல் செலவுகளை (அதாவது
நிர்வாகச் செலவுகளை) அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். தேர்தலில் வேறு செலவுகள் செய்ய
யாருக்கும் அனுமதி இல்லை.
10. எல்லாமே
சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து
விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி
வேண்டுமென இறைவன் கேட்டால்?
பிறவியே வேண்டாம்.
மீண்டும் தொடக்கத்தில் இருந்து.
சுவையான கேள்விகள், தங்களின் பதில்களும் அதற்கேற்றாற்ப் போல் இருந்தன சார்.
ReplyDeleteஅழகான பதில்கள் ஐயா
ReplyDeleteஅருமை.. ஐயா..
ReplyDeleteநல்ல கருத்துக்களக் கூறியமைக்கு மகிழ்ச்சி!..
சுவையான பதில்கள் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகேள்வியும் பதிலும் நன்று!
ReplyDeleteநண்பரே எமது வார்த்தைக்கு மதிப்பளித்து அழகாக பதில் அளித்து உள்ளீர்கள் மேலும் எமது பதிவுக்குள் ஊடுறுவி ‘’ஞானி ஸ்ரீபூவு வகையறா’’ பதிவை கண்டுபிடித்து அதன் இணைப்பையும் பிறரின் பார்வைக்கு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி தங்களின் பதில்களை காந்திஜி மறுமுறை வரும்போது சமர்ப்பித்து விடுகிறேன் நன்றி.
ReplyDeleteஇந்த மாதிரி தொடர்கள் குறுகிய காலத்தில் சலிப்பேற்றிவிடும் என்றே தோன்றுகிறது. என்னையும் சேர்த்திருக்கிறார்கள். சில நாள் பட்டு எழுதுவேன்.
ReplyDeleteஅய்யா G M B சொன்னதுபோல் சலிப்பு வந்துவிடக் கூடாதுன்னு ரொம்பவும்தான் யோசித்து உள்ளீர்கள் !
ReplyDeleteத ம 2
மறுமொழி > ADHI VENKAT said...
ReplyDelete// சுவையான கேள்விகள், தங்களின் பதில்களும் அதற்கேற்றாற்ப் போல் இருந்தன சார். //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDelete// அழகான பதில்கள் ஐயா //
சகோதரியின் சுருக்கமான பாராட்டுரைக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// அருமை..ஐயா..நல்ல கருத்துக்களக் கூறியமைக்கு மகிழ்ச்சி!.. //
சகோதரருக்கு நன்றி!
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDelete// சுவையான பதில்கள் பகிர்வுக்கு நன்றி! //
சகோதரருக்கு நன்றி! உங்கள் வலைத்தளம் பக்கம் வரவேண்டும்.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// கேள்வியும் பதிலும் நன்று! //
புலவர் அய்யாவுக்கு நன்றி!
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// நண்பரே எமது வார்த்தைக்கு மதிப்பளித்து அழகாக பதில் அளித்து உள்ளீர்கள் மேலும் எமது பதிவுக்குள் ஊடுறுவி ‘’ஞானி ஸ்ரீபூவு வகையறா’’ பதிவை கண்டுபிடித்து அதன் இணைப்பையும் பிறரின் பார்வைக்கு கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி தங்களின் பதில்களை காந்திஜி மறுமுறை வரும்போது சமர்ப்பித்து விடுகிறேன் நன்றி. //
இந்த கட்டுரையை எழுதுவதற்கு காரணமாக இருந்த சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களுக்கு நன்றி!
// இந்த மாதிரி தொடர்கள் குறுகிய காலத்தில் சலிப்பேற்றிவிடும் என்றே தோன்றுகிறது. என்னையும் சேர்த்திருக்கிறார்கள். சில நாள் பட்டு எழுதுவேன். //
ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். தொடர்பதிவு ... என்றாலே நிறையபேர் ஓடிவிடுகின்றனர். அதனால்தான் நான் யாரையும் அழைக்கவில்லை. உங்கள் தொடர்பதிவை ஆவலோடு எதிர் பார்க்கின்றனர்.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// அய்யா G M B சொன்னதுபோல் சலிப்பு வந்துவிடக் கூடாதுன்னு ரொம்பவும்தான் யோசித்து உள்ளீர்கள் ! த ம 2 //
சகோதரர் பகவான்ஜீ சரியாகவே கண்டு பிடித்து விட்டீர்கள். கேள்வி – பதில் என்று நேரடியாகவே போனால் வாசகர்கள் நம்மை ஓரம் கட்டி விடுவார்கள். எனவே கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் சினிமா என்று கலந்து எழுதினேன். தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி!
சுவாரஸ்யமாய் இருந்தன பதில்கள்!
ReplyDeleteதமிழ்மணம் (3)
ReplyDeleteகேள்விகளுக்கானப் பதில்களை மிகவும் ரசித்தேன் தமிழ் சார். மீண்டும் பிறவாமை என்னும் வரம் கிடைக்க வேண்டும் என்று தான் நானும் நாளும் வேண்டுகிறேன்.இறைவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ் சார்.
அய்யா........ அட அட அனுபவம்... தெளிவு... அருமை போங்க... எங்க பட்டிமன்றம் மாதிரி நடுவுல கொஞ்சம் பாட்டெல்லாம் போட்டு அசத்த்ல் அ்யயா. ரொம்ப நல்லாருந்திச்சு.... 5-புதுமை. 6,7 வழமை. நன்றி
ReplyDeleteமறுமொழி > அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... ( 1, 2 )
ReplyDeleteமயிலாடுதுறை சகோதரருக்கு நன்றி!
மறுமொழி > rajalakshmi paramasivam said...
ReplyDeleteசகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > Muthu Nilavan said...
ReplyDeleteஆசிரியர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.
அருமை
ReplyDeleteஅருமை ஐயா
பதில்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா
நன்றி
தம4
ReplyDeleteபதில்கள் சுருக்கமாக இருந்தாலும் அருமை ஐயா...
ReplyDeleteகேள்விகளுக்கு நறுக்கென்று பதில் அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! என்னையும் பதிலெழுத நண்பர் திரு KILLERGEE பணித்துள்ளார். விரைவில் பதில் அளிப்பேன்.
ReplyDeleteபதில்கள் அனைத்தும் மிகவும் அருமை ஐயா!
ReplyDeleteபாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பிறவா வரம் தாரும் பெம்மானே என்ற பாடல் நந்தனார் படத்தில். பாடியவர் தண்டபாணி தேசிகர்.
ReplyDeleteலிங்க் இதொ http://www.thamizhisai.com/video/dhandapani-desikar/pirava-varam-thaarum.php
இந்தப் பாடல் பல கர்நாடக கச்சேரிகளிலும் பாடப்படுகின்றது அருமையான பாடல்.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )
ReplyDeleteஎன்னுடைய எல்லா பதிவுகளுக்கும், தொடர்ச்சியாக மறக்காமல் வந்து கருத்துரையும், தமிழ்மணத்தில் வாக்கும், எனக்கு ஊக்கமும் தரும் சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசுருக்கமான கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. தங்களின் கைவலி எப்படி இருக்கிறது? நலமா?
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்களுடைய கில்லர்ஜிக்கான பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... (1)
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி.
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... ( 2 )
ReplyDelete// பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய பிறவா வரம் தாரும் பெம்மானே என்ற பாடல் நந்தனார் படத்தில். பாடியவர் தண்டபாணி தேசிகர். லிங்க் இதொ http://www.thamizhisai.com/video/dhandapani-desikar/pirava-varam-thaarum.php
இந்தப் பாடல் பல கர்நாடக கச்சேரிகளிலும் பாடப்படுகின்றது அருமையான பாடல். //
எனக்கும் பழைய பாடல்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும். தகவலுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த இணைப்பை எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் Book Mark செய்து கொண்டேன். இன்று இரவு அல்லது தனிமையில் இருக்கும்போது கேட்க வேண்டும்.