Friday, 31 October 2014

எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?



பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். எனவே பழைய பாடல்களை அடிக்கடி கேட்பதற்கு வசதியாக, கம்ப்யூட்டரில் MP3 வடிவில் ஒரு போல்டரில் (FOLDER) போட்டு வைத்துள்ளேன். இவற்றை அப்படியே எனது செல்போனுக்கும் மாற்ற்ம் செய்து கொண்டேன். அதேபோல சில பாடல்களின் வரிகளையும் இணையம் வழியே சேமித்து வைத்துள்ளேன். அவற்றில் பாடல் முதல் வரி, படத்தின் பெயர், படம் வெளி வந்த ஆண்டு, பாடலாசிரியர், பாடியவர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் ஆகிய விவரங்கள் இருக்கும். கிடைக்காத சில பாடல்களுக்கு பாடலைக் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு வரியாக டைப் செய்து வைத்துள்ளேன்.

அவ்வாறு அடிக்கடி நான் கேட்கும் தததுவப் பாடல்களில் ஒன்று, எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம் என்று துவங்கும் பாடல். படத்தின் பெயர் “பாசமும் நேசமும்”. 1964 இல் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா நடித்து வெளிவந்த படம். பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ். இசையமைப்பாளர் வேதா. (இணையத்தில் சிலர் தவறாக வேறு ஒரு இசையமைப்பாளர் பெயரைச் சொல்லுகின்றனர். வேதா என்பதே சரி)

இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான கருத்துள்ளவை. இசையமைப்பும் அருமை. இந்த காட்சியில் நடனமாடும் பெண்களின் அசைவுகளும் இசையும் கைகோர்த்து செல்வதை உணரலாம்.
 
நான் எவ்வளவோ முயற்சித்தும் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் பெயரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே உறுதியாகத் தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த பாடலின் இறுதி வரிக்கு முதலில் வரும் வரியில் “ போய்விடு தாயே “ என்பதா அல்லது “போய்விடுவாயேஎன்பதா என்று சரியாக விளங்கவில்லை.

இந்த படம் (பாசமும் நேசமும்) ராஜ்கபூர் (RAJKAPOOR) - நர்கிஸ் (NARGIS) நடித்த அனாரி (ANARI) என்ற இந்தி (1959) திரைப்படத்தின் தமிழாக்கம் என்பார்கள். இந்தியில் இசை அமைத்தவர் சங்கர் ஜெய்கிஷன். அறுபதுகளில் வெளியான சில தமிழ் படங்கள் மற்றும் பாடல்கள் இந்தி படங்களின் தழுவல்களே. பாடல்களின் மெட்டும் அப்படியே காப்பி செய்யப்பட்டு இருக்கும்.


இந்த பாடலை தமிழில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)

இந்த பாடலை இந்தியில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



தமிழ் பாடலின் வரிகள்:

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

பார்ப்பதை அறிவேன் பார்த்தவை தானே
பால்போல் மனதை கெடுத்தவள் நீயே
பாடுவதறியேன் பாட வைத்தாயே
பாடலை பாதியில் நீ முடித்தாயே

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேடிககை உலகம் செல்வர்கள் இல்லம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்
வேதனை உலகம் ஏழைகள் உள்ளம்

தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரியா நிலையில் தோழியும் ராணி
தெரிந்து விட்டால் அவள் ராணியின் தோழி

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

உண்மையில் ஒருநாள் பொய்மையில் பலநாள்
ஒவ்வொரு நாளும் உங்களின் திருநாள்
எங்களின் இதயம் சிறியது தாயே
இதையும் ஏனோ உடைத்து விட்டாயே
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்

புரியா மனிதன் எதையோ சொன்னால்
புரியா மனிதன் எதையோ சொன்னால்
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
பொறுத்தருள்வாயே போய்விடு தாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
நடந்ததையெல்லாம் மறந்திடுவாயே
மாளிகை கிளியே வாழிய நீயே

பாடல் முதல் வரி:  எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
படம்: பாசமும் நேசமும்  ( 1964 )
பாடல்:
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
இசை: S. வேதா
நடிகர்கள்: ஜெமினி கணேசன், சரோஜாதேவி, M.R.ராதா
டைரக்‌ஷன்: D.யோகானந்த் Dasari Yoganand shorty D. Yoganand

மறுபடியும் நினைவூட்டுகிறேன் உறுதியாகத் தெரிந்தவர்கள் இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

24 comments:

  1. எனது நண்பர் ஒருவரைக் கேட்டிருக்கிறேன்;பார்க்கலாம்.

    ReplyDelete
  2. வணக்கம் !

    பாடல்கள் மீது தாங்கள் கொண்டுள்ள நாட்டத்தினையும் அதன்
    பின்னணியில் உள்ளவர்கள் பெயர்களைச் சேகரித்து வைக்கும்
    பண்பினையும் கண்டு வியந்தேன் !வாழ்த்துக்கள் சகோதரா இப் பாடலினை
    எழுதியவர் பெயரும் தங்கள் எண்ணம் போல் கிட்டட்டும் .மிக்க நன்றி
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா, வணக்கம். இதுபற்றி எனக்கு சரியாகத்தெரியவில்லை. சினிமா + சினிமா பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒருவர் இருக்கிறார். அவரை சந்தித்தால் கேட்டுச் சொல்கிறேன். அன்புடன் VGK

    ReplyDelete
  4. சிறந்த பாடல்
    சிறந்த விளக்கம்
    சிறந்த அறிமுகம்
    எனக்குப் பிடித்த பாடலும் கூட
    தொடருங்கள்

    ReplyDelete
  5. அருமையான பாடல்! ஆனால் இதுதான் முதல் தடவையாகக் கேட்கின்றோம்! படமும், பாடலும். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! எங்களுக்கும் பழைய படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இதைப் பற்றித் தெரியவில்லை. தாங்கள் இங்கு சொல்லியதன் மூலம் அறிய உதவியது! நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி! இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

    ReplyDelete
  7. உலகமே நாடகமேடை..நாமெல்லாம் நடிகர்கள் என்றார் சேக்ஸ்பியர்..

    பாடல் அருமை.பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  8. மெட்டுக்காக எழுதிய வரிகள் போல் தோன்றுகிறது.
    /பால்போல் மனதை கெடுத்தவள் நீயே / உங்கள் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது.

    ReplyDelete
  9. மறுமொழி> சென்னை பித்தன் said...

    // எனது நண்பர் ஒருவரைக் கேட்டிருக்கிறேன்;பார்க்கலாம். //

    தங்களது தேடுதல் முயற்சிக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  10. மறுமொழி> அம்பாளடியாள் said...

    சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete

  11. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்பின் V.G.K அவர்களின் தேடுதல் முயற்சிக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> Mathu S said...
    சகோதரரின் கருத்துரை இல்லாத த.ம வாக்களிப்பிற்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி> வே.நடனசபாபதி said...
    // அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி! இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். //
    முதல் தகவலுக்கு நன்றி அய்யா! நீங்கள் சொன்னால் உறுதியாகத்தான் (CONFIRMED) இருக்கும் அய்யா!


    ReplyDelete
  16. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    // உலகமே நாடகமேடை..நாமெல்லாம் நடிகர்கள் என்றார் சேக்ஸ்பியர்.. பாடல் அருமை.பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.! //

    ஆமாம் சகோதரி! ஷேக்ஸ்பியரின் அருமையான மேற்க்கோள் வரியைச் சொன்னீர்கள்.

    All the Word’s a stage and all the men and women are merely players _ Shakespeare

    தங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி> G.M Balasubramaniam said...

    // மெட்டுக்காக எழுதிய வரிகள் போல் தோன்றுகிறது.
    /பால்போல் மனதை கெடுத்தவள் நீயே / உங்கள் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது. //

    ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரியே! இந்த படமும், பாடலும் இந்திப் படத்தின் அப்பட்டமான தழுவல். எனவே மெட்டுக்கு ஏற்ப எழுதப்பட்ட பாடல்தான்.

    ReplyDelete
  18. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... ..

    // பட்டுக்கோட்டையார்... //
    நீங்கள் சொன்னவுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் முழுமையாக உள்ள வலைத்தம் சென்று பார்த்தேன். அதில் இல்லை. என்வே இந்த பாடலை எழுதியது பட்டுக்கோட்டையார் இல்லை. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது தேடல் முயற்சிக்கும் இங்கு வந்து சொன்னதற்கும் நன்றி!

    ReplyDelete
  19. அனாடி படப் பாடலைக் கேட்டதுண்டு..... தமிழ் பாடல் கேட்ட நினைவில்லை.

    தமிழ்ப் பாடலை எழுதியது யாரென்று எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete
  20. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // அனாரி படப் பாடலைக் கேட்டதுண்டு..... தமிழ் பாடல் கேட்ட நினைவில்லை. தமிழ்ப் பாடலை எழுதியது யாரென்று எனக்குத் தெரியவில்லை. //

    இந்தி மொழி அறிந்த தாங்கள் இந்த பாடலை நனறாகவே ரசித்து இருப்பீர்கள். தமிழ்ப் பாடலை எழுதியது கண்ணதாசன் என்று அய்யா வே.நடனசபாபதி அவர்களும் , பட்டுக்கோட்டையார் என்று திண்டுக்கல் தனபாலன் அவர்களும் சொல்லி இருக்கிறார்கள். இதில் பட்டுக்கோட்டையார் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. பார்ப்போம்.

    கருத்துரை தந்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete