Tuesday 18 November 2014

வழுக்கைத்தலை மாப்பிள்ளைக்கு கல்யாணம்.




அண்மையில் சகோதரி அருணா செல்வம் அவர்கள் வாழ்க்கையும் வழுக்கையும்!! (அனுபவம்) என்று ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்கள்.http://arouna-selvame.blogspot.com/2014/11/blog-post_17.html  அந்த பதிவினில் வழுக்கத்தலை உள்ள ஒருவர் பெண் பார்க்க வந்தபோது, பெண் மறுத்து விட்டதாக தனது அனுபவத்தினை எழுதி இருந்தார். இதற்கு நேர் எதிர்மறையானது எனது அனுபவம்.

பேராசிரியர் வீட்டில்:

ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரை அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். பேராசிரியரும் அவரது மனைவியும் ( அவரும் ஓய்வு பெற்ற பேராசிரியர்) சமூக சேவைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். தாங்கள் பணிபுரிந்த காலத்தில் படிக்க வசதியற்ற எத்தனையோ மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள். அவர்கள் வீட்டிற்கு தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் வரன் இருந்தால் சொல்லுங்கள் என்று, பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக நிறையபேர் வருவார்கள்..

ஒருமுறை அவர் வீட்டிற்கு போயிருந்த போது ஒருவர் தனது பையனை அழைத்து வந்து இருந்தார். பையனின் அப்பா மத்திய அரசில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு அதிகாரி என்பதால், பணிக்காலத்தில் அடிக்கடி பல ஊர்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் மாறுதல் ஆனவர். அவருக்கு இரண்டு பையன்கள். இப்போது மூத்த பையனின் திருமண விஷயமாக பேராசிரியரைப் பார்க்க வந்திருந்தனர். பையனைப் பார்த்தேன். நல்ல சிவப்பு, இளைஞர், . ஆனால் தலை வழுக்கை. தலையில் முடியே இல்லை. பூனை மயிர் போல ஒன்றிரண்டு இருந்தன. பேராசிரியரின் வீட்டில் இருந்த அவரது BIO DATA விவரங்களை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல படிப்பு. சாப்ட்வேர் என்ஜீனியர். கைநிறைய சம்பளம். வெளிநாடு ஒன்றில் டெபுடேஷன் வேலை பார்த்து விட்டு இப்போது இந்தியாவிற்கு வந்து வேலை பார்க்கிறார். எல்லாம் இருந்தும் இந்த தலை வழுக்கை என்பது அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் பெரிய கவலை.

அந்த பையனிடம் பேசினேன் “ இந்த தலைமுடிப் பிரச்சினை எப்போதிருந்து இருக்கிறது? சின்ன வயதிலிருந்தா? என்று கேட்டேன். அவர் “சார், சின்ன வயதில் இந்த பிரச்சினை இல்லை. தலைமுடி நன்றாகவே அடர்த்தியாக கருகரு என்று இருந்தது. ஹைஸ்கூல் படிக்கும்போது, அப்பா வடக்கே, குடும்பத்தோடு ஊரு விட்டு ஊரு மாறுதல் ஆனபோது சில ஊர் தண்ணீர் ஒத்துக் கொள்ளாததால் தலைமுடி கொட்டி எனக்கு இப்படி ஆகிவிட்டது. என்றார். உங்கள் தம்பிக்கு எப்படி என்று கேட்டேன். அவருக்கு ஒன்றும் இல்லை. எனக்கு மட்டும்தான், எந்த வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை என்று கவலையோடு சொன்னார்.

ஏதாவது செயற்கையாக விக் அல்லது தொப்பி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்டேன்.

அப்படி எல்லாம் வேஷம் போட்டு நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் ப்ரோபைல் போட்டோவையும் கொடுத்து இருக்கிறேன். எனக்கு தலைமுடிதான் பிரச்சினை. மற்றபடி உடம்புக்கு ஒன்றும் இல்லை. என்னைப் பார்த்து விருப்பப்பட்டு எந்த பெண்ணாக இருந்தாலும் கட்டிக் கொள்வதாக இருந்தால் கட்டிக் கொள்ளட்டும். அல்லது எனக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும் பரவாயில்லை என்று பேசினார்.அவரது ம்னோ தைரியத்தையும் வைராக்கியத்தையும் பாராட்டிவிட்டு, அங்கே கொஞ்ச நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்து விட்டேன்.

பையனுக்கு திருமணம்:

சில மாதங்களுக்கு முன்பு அந்த பையனுடைய அப்பா, பேராசிரியரிடம் விலாசத்தை தெரிந்து கொண்டு, என்னுடைய வீட்டிற்கு அந்த பையனுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வைக்க வந்தார். அவரிடம் பேசியதில், பெண் வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் என்றும், அந்த பெண்ணிடமே பையன் நேரில் பேசி சம்மதம் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். மறக்காமல் அந்த திருமணத்திற்கு சென்றேன். மண மேடையில் அந்த பையனும்  பெண்ணும்  சிரித்தபடி சந்தோஷமாகவே இருந்தனர். எல்லாம் இனிதே நடந்தது.

ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களிலும் தலை வழுக்கை உண்டு. அவர்கள் நிலைமைதான் ரொம்பவும் பரிதாபம். தலை வழுக்கையான  பெண்களிலும் திருமணமாகி குழந்தைகளோடு இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். எனவே வழுக்கை வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை. எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம்.

பிரபல ஹாலிவுட் வழுக்கைத் தலை நடிகர்கள்

(படம் மேலே)  பிரபல ஹாலிவுட் நடிகர்  Yul Brynner

(படம் மேலே) ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ  Bruce Willis

(படம் மேலே)  பிரபல ஹாலிவுட் நடிகர்  Patrick Stewart

(All Pictures Thanks to "GOOGLE IMAGES" )


43 comments:

  1. நீங்கள் சொல்வது 100க்கு100 உண்மையே முடி முழுமையாக இருப்பவன் மூளை இல்லாதவனாக இருந்தால் என்ன செய்வது மணமுடிக்க மனம் போதும்.

    ReplyDelete
  2. //வழுக்கை வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை.
    எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம்//

    வழுக்கை பற்றிய பதிவு - இளநீரின் வழுக்கை போல சிறப்பு!..

    ReplyDelete
  3. ஆம்... எல்லாவற்றிக்கும் பக்குவப்படாத மனசு தான் காரணம்...

    ReplyDelete
  4. பெண்ணுக்கு பிடித்தால் சரிதான் ,கட்டாயப் படுத்தி கட்டி வைத்தால் வழுக்கையே ..தப்பு ,தப்பு ..வாழ்க்கையே வெறுத்து விடும் :)
    த ம 2

    ReplyDelete
  5. கணவன் வழுக்கை தலையாக இருப்பது மனைவிக்கு ஒரு "பெரிய" பாதுகாப்பே. வேற எந்த பொறம்போக்கு சபல புத்தி பொம்பளையும் இவனுக்கு ரூட் போட மாட்டார்கள்;; அவன் தான் வழுக்கையாச்சே!

    ---ரூட் போடுவது என்றால் அவனை மடக்க வழி வகைகள் செய்வது (இந்த வட்டரா வழக்கு இது நாங்க கல்லூரியில் படிக்கும் போது)

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    வழுக்கை வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை. எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம். சரியாக சொல்லியுள்ளீர்கள்.. த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நல்ல மனிதர்
    நல்லபடி திருமணம் ஆனது மகிழ்வு ..

    ReplyDelete
  8. வெளியே அதிகம் இருப்பதை விட
    தலைக்கு உள்ளே விஷயம் இருந்தால் சரி
    என்பதே என் கருத்தும்
    பதிவு தந்த சுவாரஸ்யமான பதிவு அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    //வழுக்கை பற்றிய பதிவு - இளநீரின் வழுக்கை போல சிறப்பு!.. //

    சுவையான இளநீரின் வழுக்கையோடு ஒப்பீடு செய்து, கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் கே.ஏ.பகவான்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி > நம்பள்கி said...

    கருத்துரை சொன்ன நம்பள்கி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது அன்பான
    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  15. மறுமொழி > Mathu S said.. (1, 2).

    ஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    கவிஞர் எஸ்.ரமணி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. எல்லாவற்றிற்கும் மனம்தானே காரணம்
    மனதையும், குடும்ப உறவினர்களையும் பார்க்காமல்,
    தலை முடியைப் பார்த்து திருமணம் செய்து கொள்பவ்ர்கள்தான்
    இன்று நீதி மன்றங்களில் விவாகரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  18. வழுக்கை என்பது மரபு அல்லது சூழ்நிலையால் ஏற்படுவது.இது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். இதற்காக அந்த வாலிபனை எந்த பெண்ணாவது வேண்டாம் என்று சொன்னால் அதற்கு காரணம் அறியாமைதான். அவர்களுக்கு திருமணம் ஆனபிறகு கணவருக்கு வழுக்கை வந்தால் என் செய்வார்கள்? செயற்கை முடி வைத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்ன அந்த வாலிபரின் துணிச்சல் பாராட்டதற்குரியதே.

    ReplyDelete
  19. அப்படிப் போடுங்க ஐயா ....

    ReplyDelete
  20. Perceptions about looks matter.Beauty lies in the eyes of the beholder என்றும் சொல் வழக்கு உண்டு.சிலரைக் கேட்டால் அதுதான் ஃபேஷன் என்றும் சொல்லலாம். சுவையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. மனம் தான் எல்லாவற்றிகும் காரணம். அந்த பையனின் மனோதிடம் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  22. எனவே வழுக்கை வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல் இல்லை. எல்லாவற்றிற்கும் இந்த மனசுதான் காரணம்.// அதே. அந்தப் பையனும் மிக நல்லவராகத் தெரிகின்றார். அனம் போல் அமையும் அவருக்கு வாழ்க்கை!

    ஜிஎம்பி சாரின் அந்த ஆங்கில வாக்கை வழிமொழிகின்றோம். நம் கண்ணோட்டத்தில்தான் இருகின்றது நமது வாழ்க்கையே மட்டுமல்ல உண்மையான அன்பு இருந்துவிட்டால் மற்றதெல்லாம் ஒன்றுமே இல்லையே ஐயா.

    மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  23. இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் முடியே இல்லாதவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்! இளங்கோ!

    ReplyDelete
  24. எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம்! சரியாகச்சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  25. மனிதர்களுக்கு வாழ்க்கையும் வழுக்கையும் இறைவன் கொடுத்த வரம் தான் போல....

    தவிர அனைவருக்குமே தெளிவான மனது அமைந்து விடுவது இல்லை ஐயா.
    பதிவை ஒரு கட்டுரை போல் வடிவமைத்து இருக்கிறீர்கள். அருமை.

    ஆனால் கடைசி படங்களில் நம் சத்தியராஜ் சாரையும் சேர்த்து இருக்கலாம்....((

    ReplyDelete
  26. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )

    ஆமாம் அய்யா எல்லாவற்றிற்கும் காரணம் அவரவர் மனதுதான். கருத்துரை தந்த சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // செயற்கை முடி வைத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்ன அந்த வாலிபரின் துணிச்சல் பாராட்டதற்குரியதே //

    ஆமாம் அய்யா, அவர் துணிச்சலானவர்தான். நீண்ட கருத்துரை தந்த அய்யா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  28. றுமொழி > ஆத்மா said...

    சுருக்கமான கருத்துரை தந்த சகோதரர் ஆத்மா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  29. மறுமொழி > G.M Balasubramaniam said..

    அய்யா G.M.B அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    ”ஆரண்ய நிவாஸ்” அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. மறுமொழி > ADHI VENKAT said...

    கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    நீண்ட கருத்துரை தந்த சகோதரர் V. துளசிதரன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  33. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    கருத்துரை தந்த புலவர் அய்யாவிற்கு நன்றி!

    // இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் முடியே இல்லாதவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்! இளங்கோ! //

    நீங்கள் சொல்லும் செய்தி வியப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. அப்படியானால், இனிமேல் தமிழகத்தில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியும் இருக்காது.

    ReplyDelete
  34. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் ‘தளிர்’ சுரேஷ்’ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  35. மறுமொழி >அருணா செல்வம் said...

    // மனிதர்களுக்கு வாழ்க்கையும் வழுக்கையும் இறைவன் கொடுத்த வரம் தான் போல....தவிர அனைவருக்குமே தெளிவான மனது அமைந்து விடுவது இல்லை ஐயா.//

    ஆமாம் சகோதரி! நீங்கள் சொல்வது சரிதான். அனைவருக்குமே தெளிவான மனது அமைந்து விடுவது இல்லை அதனால்தான் அந்த பையனுக்கு படிப்பு வசதி வாய்ப்புகள் இருந்தும் திருமணம் உடனே நடைபெறாமல் தள்ளிக் கொண்டே போனது.

    //பதிவை ஒரு கட்டுரை போல் வடிவமைத்து இருக்கிறீர்கள். அருமை.ஆனால் கடைசி படங்களில் நம் சத்தியராஜ் சாரையும் சேர்த்து இருக்கலாம்....(( //

    கட்டுரையின் முடிவில் தமிழ்நாட்டு நடிகர்கள் சோ, சத்தியராஜ் மற்றும் செந்தில் ( ஊமை விழிகள் படம்) ஆகியோரது படங்களையும் இணைப்பதாக இருந்தேன். அப்புறம் எதற்கு என்று எடுத்து விட்டேன். சகோதரியின் நீண்ட கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    இந்த பதிவின் மையக்கருத்திற்கு உங்கள் பதிவும் ஒரு காரணம். எனவே பதிவை எழுத காரணமாக இருந்த உங்களுக்கு மீண்டும் நன்றி.



    ReplyDelete
  36. வழுக்கைத் தலை ஆசாமிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் எனக்கு தலை முடி அதிகம். முடி சீக்கிரம் வளர்ந்து விடுவதும் தொல்லையாக இருக்கிறது. சாருக்கு முடி வெட்ட நேரம் இல்லையா என்று கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்.

    ReplyDelete
  37. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  38. வழுக்கைத் தலையுள்ளவர்களும், வழுக்கைத்தலையினைப் பெறப் போகின்றவர்களும் படிக்கவேண்டிய பதிவு. அவர்களுடைய மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். இன்னும் சில வருடங்களில் எனக்கும்கூட.

    ReplyDelete
  39. வடநாட்டில் பலபேர் வழுக்கையாகத்தான் திருமணம் செய்வார்கள்

    ReplyDelete