அண்மையில் சமூக வலைத் தளங்களிலும் விவாதக் களங்களிலும் ‘சேரி பிகேவியர்’
(Cheri behaviour) என்ற வார்த்தை அடிபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது சில குறிப்புகள்
மட்டும் எடுத்து வைத்து இருந்தேன். வீட்டு சூழ்நிலை காரணமாக, கட்டுரையாக அப்போதே வெளியிட
இயலவில்லை.
சேரி என்ற சொல்
உண்மையில் சேரி என்பது மக்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகும்.
சங்க காலத்தில் உயர்ந்த பொருளில் பொதுப் பெயராக இருந்த அது, இன்றைக்கு குறிப்பிட்ட
சாரர் மட்டும் இருக்கும் இடத்தை குறிப்பதாக இருக்கிறது.
பிக்பாஸ் எனும் டீவி தொடரில் ( நான் இந்த பக்கம் போவதே கிடையாது
) காயத்ரி என்பவர் ஓவியா என்பவரைத் திட்டும்போது இந்த சேரி பிகேவியர் என்ற வார்த்தையைச்
சொன்னதாக சொல்லுகிறார்கள். இவரும் இந்த வார்த்தையை உள் நோக்கத்தோடு சொன்னதாகத் தெரியவில்லை.
திட்டு வாங்கிய ஓவியா என்பவரும் இதுபற்றி வருத்தம் அடைந்ததாகத் தெரியவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தி இருக்கிறது. சிலர் சில காரியங்களைச்
செய்தால் “ஒன்னோட புத்தி ஒன்னை விட்டு போகலே” என்று சொல்லுவார்கள். இதையே தொழில் ரீதியாக,
குழு அடிப்படையில் இப்படியே வாத்தியார் புத்தி, போலீசு புத்தி என்று சொல்லிக் கொண்டே
போகலாம். இந்த அடிப்படையில், அந்த அம்மணி ‘சேரி பிகேவியர்’ (Cheri behaviour) என்ற
வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.
அதற்குள் நாட்டு நடப்பில் ஒருவர் இந்த பிக் பாஸ் டீம் மீது வழக்கு
போடுவேன் என்கிறார்; இன்னொருவர் கோடி கொடுத்தால் தான் ஆச்சு என்கிறார். மற்றவர்கள்
‘கம்முனு’ இருக்கிறார்கள். கோர்ட்டுக்குப் போனால் இவை எல்லாம் நிற்காது. ஏனெனில் நம்நாட்டில்
ஜாதியைச் சொல்லி உள்நோக்கத்தோடு திட்டினால்தான் கேஸ்.
பழைய செய்திகள்
’ஹரிச்சந்திரா’ என்ற தமிழ் திரைப்படம் 1968 இல் வெளிவந்தது. நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் அரிச்சந்திரனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தில், மயானத்தில்
அரிச்சந்திரன் பாடுவதாக ஒரு காட்சி. அதில் ‘பேய் உலவும் காட்டில் திரியும் ஈனப் பறையனே’
என்று சந்திரமதி வசனம் பேசுவாள். அதற்கு மறுமொழியாக அரிச்சந்திரன் பாடும் பாடலின் துவக்க
வரிகள் இவைதான்.
ஆதியிலும் பறையன் அல்ல
ஜாதியிலும் பறையன் அல்ல
நீதியிலும் பறையன் அல்லவே – நானே
பாதியில் பறையன் ஆனேனே
‘பாடும் வானம்பாடி’ 1985 இல் நடிகர் ராஜிவ் நடிகை ஜீவிதா நடித்து
வெளிவந்த படம். இதில் ’வாழும்வரை போராடு’ என்று
துவங்கும் பாடலில்,
மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு – அட
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
என்ற வரிகள் வரும். பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.
அடுத்து ‘ஒன்னா இருக்கக் கத்துக்கனும்’ (1992 இல் வெளிவந்தது) என்ற
படத்தில் நடிகர் கவுண்டமணியும், அடுத்து ‘பிறகு’ என்ற படத்தில் (2007 இல் வெளிவந்தது)
வடிவேலுவும் வெட்டியான்கள் வேஷத்தில் நடித்து இருக்கிறார்கள். இருவரும் பேசும் வெட்டியான்
வசனங்கள் நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே நையாண்டிகள்.
நம்ம ஊர் என்று சொல்லிக் கொள்ளும் சுப்ரமண்யன் சுவாமி ஒருமுறை இண்டர்நேஷனல்
பறையா (International Pariah) என்று சொல்லி சிக்கலுக்கு ஆளானார். அப்போது அவர் “கேம்பிரிட்ஜ்
அகராதியில் இருப்பதைத்தான் நான் சொன்னேன்; தலித்துகளைக் குறிப்பிட்டு சொல்லவில்லை.
அந்த அகராதியில் Pariah என்பதற்கு சொல்லப்படும் பொருளை நீக்க முயற்சி செய்வேன்” என்றும்
சொன்னார்.
மேலே சொன்ன செய்திகளில் யாரும் பெரிதாக தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை.
பெரும்பாலும் இவற்றை சம்பந்தபட்ட சமூகத்தினரும் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உதாசீனம் செய்து விட்டார்கள்.
போராட்டம் போராட்டம்
இன்றைக்கு எதற்கெடுத்தாலும் மறியல், போராட்டம், வழக்கு என்று தமிழ்நாடு
அல்லோல கல்லோல பட்டுக் கொண்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு மனு கொடுத்து தடுத்து நிறுத்த
வேண்டியவற்றிற்கு எல்லாம் ரத்தக்களரியாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பிரச்சினையை
முழுதாக தீர்ப்பதற்குள் அடுத்த ஒன்றிற்கு தாவி விடுகிறார்கள். சிம்புவின் பீப் சாங்
போன்று இந்த ‘சேரி பிகேவியர்’ (Cheri Behaviour) கொஞ்ச நாளைக்கு பேசப்படும். மக்களுக்கு
இருக்கும் எவ்வளவோ பிரச்சினைகளை மக்கள் நினைக்காமல் இருக்கவும், திசை திருப்பவும் இது
போன்ற மடை மாற்றும் வேலைகள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும்.
இப்போது எல்லாமே பிரச்சனை தான் தமிழகத்தில்....
ReplyDeleteநல்ல அலசல்.
நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கு நன்றி.
Deleteநல்லா லாஜிக்கலா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். இதுபோன்றே பேச்சு வழக்கில், "low class mentality" என்று திட்டுவதும் சாதாரணம். "மடை மாற்றும் வேலை" - உண்மை
ReplyDeleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.
Deleteநீங்க சொன்னது முற்றிலும் உண்மை.
ReplyDelete//இவரும் இந்த வார்த்தையை உள் நோக்கத்தோடு சொன்னதாகத் தெரியவில்லை. திட்டு வாங்கிய ஓவியா என்பவரும் இதுபற்றி வருத்தம் அடைந்ததாகத் தெரியவில்லை.//
ஆனால் ஜாதி வெறுப்பை வளர்ப்பவர்கள் இதை தாங்கள் கையில் எடுத்துள்ளனர்.
நண்பர் வேகநரி அவர்களுக்கு நன்றி.
Deleteஇந்த "paria" என்கிற பதம் அயல் நாடுகளில் தடையின்றி பயன்படுத்தப் படுகிறது.
ReplyDeleteபறை சாற்றும் குலத்தை சார்ந்தவர்தான் பறையர். இவர்கள் எளிமையுடன் ஏழ்மையில் வாழும் வாழ்க்கை முறையைதான் தூரத்தில் இருந்து பார்க்கும் மக்கள் இவர்களை ஏதோ புதுவித நூதன அசிங்கமான பிறவிகளை பார்ப்பதுபோல் நடந்து கொள்கின்றனர்.
பொதுவாக இன்றைய உலக அனைத்து பெரிய மதங்கள் அனைத்திலும் தத்தம் மக்களின் மண்டையில் அடிப்படையில் மனிதன் மாசடைந்தவன், பாவம் செய்தவன், கடவுளுக்கு கடன்பட்டிருப்பவன் என ஆணியால் கீறி எழுதப்படுகிறது. மனிதன் சிறுமையாக்கப்பட்டு அடிமை ஆக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்டு, விலாசங்கள் அழிக்கப்பட்டு, மதக்கோட்பாடுகள் எனும் மாபெரும் சங்கிலிகளால் கட்டப்பட்டு ஒரு திறந்த வெளி கைதியாகி நடை பிணமாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனவே, மண்ணின் தற்போதைய கைதி அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, பிறவியின் முழு பயனை அடைந்து, இறந்து பின் மோட்சத்தை அடைய வேண்டின், இவை அனைத்தையும் கழுவி நீக்கிய பிறகே முடியும் என போதிக்கப் படுகிறது. எனவே கடவுளை நம்பும் அனைவரும் தங்களுக்குள் ஏகப்பட்ட (கற்பனை) அசிங்கமான அழுக்கு மூட்டைகளை சுமந்து வாழ்கின்றனர். இவர்கள்தான் உண்மையான முட்டாள்கள், அடிமைகள், கைதிகள், அசுத்தமானவர்கள். மேலும், இவர்கள் பயங்கரமானவர்கள். தமது மூளைகளை இல்லாத கடவுளுக்கும், கற்பனை மதங்களுக்கும் அடகு வைத்த இவர்கள்தான் தீண்டப்படாதவர்கள்.
தோழர் மாசிலா அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Deleteஅருமையான அவசியமான அலசல்
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
கவிஞர் அவர்களுக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு. நல்லாகக் கேட்டீர்கள்
ReplyDeleteநண்பர் வர்மா அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல விளக்கம். பிக் பாஸ் தமிழக மக்களைப் பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Deleteமடை மாற்றும் வேலைகள்தான் ஐயா
ReplyDeleteஅருமையான அலசல் நன்றி ஐயா
தம +1
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
Deleteடைம்லி அவசிய பதிவு! ஒவ்வொரு காலத்தில் உபயோகிக்கப்படும் சொல், சிறிது காலத்தில் உபயோகிக்கத் தகாத சொல்லாக மாறுகிறது! இது அரசியல்வாதிகளின் சொந்த நலனுக்காகவே!!
ReplyDeleteமேடம் அவர்களது கருத்தினுக்கு நன்றி.
Deleteதூக்கு தூக்கி படத்தில் கூட ,ஒரு சாதி பெயரைச் சொல்லும் பாடல் 'ஆனந்தக் ...அறிவுக் கெட்டுத்தான் போனாரே 'என்று வரும் ,வானொலியில் ஒளிபரப்ப அந்த பாடல் தடை செய்யப் பட்டது என்று நினைக்கிறேன் :)
ReplyDeleteதோழரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட பாடலை நானும் முன்பு இலங்கை வானொலி மூலம் கேட்டு இருக்கிறேன்.
Deleteஅருமையாக எடுத்துக்காட்டுகளுடன் சொன்னீர்கள்.
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteநல்லதொரு அலசல் ஐயா...
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்ல அலசல். சினிமாவுல செய்யாததை பிக்பாஸ்ல செய்யலதான். டி.ஆர்.பி ரேட்டிங்காக பண்ணுற வேலை
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமாசிலாவின்பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.
Deleteதமிழ் ஒளிபரப்புக்கள் மக்களை மடையர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.
ReplyDeleteசகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி.
Deleteசேரி பிஹேவியர் என்பதற்குப் பதிலாக, காயத்திரி, அங்கரஹாரத்து பிஹேவியர் அல்லது சாணான் பிஹேவியர், கோணான் பிஹேவியர், கள்ளன் பிஹேவியர் என்று ஜாதிகளையோ அல்லது அஜ்ஜாதியின் குறியீடுகளை வைத்து ஓவியாவை திட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
ReplyDelete//சேரி பிஹேவியர் என்பதற்குப் பதிலாக, காயத்திரி, அங்கரஹாரத்து பிஹேவியர் அல்லது சாணான் பிஹேவியர், கோணான் பிஹேவியர், கள்ளன் பிஹேவியர் என்று ஜாதிகளையோ அல்லது அஜ்ஜாதியின் குறியீடுகளை வைத்து ஓவியாவை திட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்?//
Deleteநல்லததொரு கேள்வி.பாப்பான் ஜாதிகாரர்களின் பிஹேவியர் என்று காயத்திரி சொசால்லியிருந்தா அவர் தான் தமிழகத்தின் வருங்காலல முதல்வராக தகுதி கொண்டவர்.
P Vinayagam அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது போல் நடந்து இருந்தால், தமிழ்நாட்டில் பெரிதாக மாற்றம் ஒன்றும் நடந்து இருக்காது; அந்தந்த ஜாதிக் கட்சியினர் கொடி தூக்கிக் கொண்டு இருந்திருப்பார்கள்.
Deleteசரியே.
Deleteசாதிகள் இல்லையடி பாப்பா - எப்போதோ யாரோ பாடியதாக நினைவு.
ஆய்வு நன்று! த ம 8
ReplyDeleteபுலவர் அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல ஆய்வு.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
Deleteஎது எப்படியோ இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டு விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி இது சமூக வளர்ச்சிக்கு நிச்சயம் கேடு
ReplyDeleteஓவியா என்பவள் மற்றவனிடம் என்னை கிஸ் பண்ணு என்று வெட்கமில்லாமல் கேட்கிறாள் அவள் நடிகை இப்படித்தான் இருப்பாள் குடும்த்துடன் பார்க்க இயலாத நிகழ்ச்சி ஆனால் குடும்பங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteகிஸ் பண்ணுங்க என்று கேட்பதில் என்ன தவறு?
Deleteதிரு அப்பாதுரை அவர்களின் கேள்விக்கு நன்றி. டீவியில் பிக்பாஸ் தொடரை நான் பார்ப்பது இல்லை. எனவே யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்றும், இதன் முழுக் கதையும் என்னவென்றும் எனக்கு தெரியாது. யூடியூப்பில் இது சம்பந்தப்பட்ட காட்சி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
Deleteஒரு வார்த்தை...சொன்னால் போதும்...அதை வைத்து பெரிய பப்ளிசிட்டி செய்துகொள்வது - இப்படி இது திட்டமிட்டு செய்யப்படும் தொடர் செயல்களோ என்று சில நேரம் தோன்றுகிறது !
ReplyDeleteகவிஞர் பி.பிரசாத் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. சினிமாவுலகில் ‘பஞ்ச் டயாலக்’ என்பது இப்படித்தானே உருவாக்கப் படுகிறது.
Deleteஇந்த BIGG BOSS நிகழ்ச்சி தாங்கள் சொன்னதுபோல் மக்களின் கவனத்தை திருப்பும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், விளை நிலங்கள் பறிபோகும் நிலை ஆகியவற்றிலிருந்து திசை திருப்ப நடந்த முயற்சியில் வெற்றியடைந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நாம் அதைப்பற்றி பேசாமல் இருப்பதே மேல்.
ReplyDelete