Tuesday 15 August 2017

நடிப்பு சுதேசிகள்



இன்று (15.08.2017) இந்தியாவின் 71 ஆவது சுதந்திரதினம் (15 ஆகஸ்ட் 1947) இந்தியா, சுதந்திரம் என்றவுடனேயே, எனது பள்ளிப் பருவத்தில், அந்நாளில் வரலாற்றுப் பாடத்தில் படித்த இந்திய விடுதலை வரலாறும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரம் பிள்ளை, போன்ற தலைவர்களின் படங்களும் நினைவில் வந்தன. கூடவே நான் பெரியவன் ஆனதும், பிற்பாடு பார்த்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தமிழ் திரைப்படமும் நிழலாடியது. இந்த படம் 1961 இல் வெளிவந்தது. இன்றும் வ.உ.சி என்றால், இந்த படத்தில்,  சிவாஜி கணேசன் உருவாக்கிய பிம்பம்தான் முதலில் மனக்கண்ணில் வரும். அப்புறம்தான் வ.உ.சி.யின் உண்மையான தோற்றம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வ..உ..சி.யாகவே மாறி உருக்கமாக நடித்து இருக்கிறார் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் எழுதியது ஆகும். 

இவற்றுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ’நெஞ்சில் உரமுமின்றி’ என்ற பாடல், நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று. (திரைப்படத்தில் பாரதியின் இந்த பாடலில் ஒருசில வரிகளை மட்டுமே கையாண்டுள்ளனர்)

                           நடிப்பு சுதேசிகள்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
-    மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டிட படத்தில் ‘க்ளிக்’ செய்யுங்கள்.
                           
 
( Video Courtesy – Youtube - https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg )

    அனைவருக்கும் எனது இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.
   

31 comments:

  1. மிக் மிக மிக மிக பிடித்த பாடல்.

    சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றியும், சுதந்திரதின வாழ்த்துகளும்.

      Delete
  2. அன்பின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிகவும் பிடித்த பாடல்..

    இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி பெருமக்களே! வாழ்த்துகள்.

      Delete
  4. படித்தாலே உணர்ச்சி ஊற்றெடுக்கும் பாடல் வரிகள் ! சுதந்திரதின வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. கவிஞருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

      Delete
  5. அருமையான பாடல்....இதுவரை கேட்டது இல்லை..இன்று உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன்...நன்றி பல

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. இதுவரை நீங்கள் இந்த பாடலை கேட்டது இல்லை என்றவுடன் எனக்கு ஆச்சரியம்தான்.

      Delete
  6. நான் அடிக்கடி கேட்கும் பாடலிது.
    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
    த.ம.பிறகு.

    ReplyDelete
  7. உண்மை தான்! எப்படி வ.உ.சியை நினைத்தால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை நினைக்கிறோமோ, அது போலவே தான் கர்ணன் என்றாலும் அப்பர் என்றாலும் சிவபெருமான் என்றாலும் நடிகர் திலகமும் அவரின் தீந்தமிழ் உச்சரிப்பும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை!

    இந்தப்பாடலை சீர்காழி மிக அருமையாக, கணீரென்று பாடியிருப்பார்!இந்தப்படத்திலேயே சீர்காழி பாடிய பாரதியின் ' ஓடி விளையாடு பாப்பா!' பாடலும் மிக இனிமையாக இருக்கும்!

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // ... .. கர்ணன் என்றாலும் அப்பர் என்றாலும் சிவபெருமான் என்றாலும் நடிகர் திலகமும் அவரின் தீந்தமிழ் உச்சரிப்பும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை!//

      நீங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன் மேடம்.

      Delete
  8. வ.உ.சி படமும் நல்லா இருக்கும். பாடல்களும் பிரமாதம் (ஆனால் அவ்வளவு சிரத்தை எடுத்து நடிகர் திலகம் நடித்திருந்தும் படம் ப்ளாப். இதை நினைத்து சிவாஜி மிகவும் வருத்தப்பட்டார், இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு தமிழக மக்கள் இப்படி ரியாக்ஷன் குடுத்துட்டாங்களேன்னு).

    எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நமது தமிழ் சினிமா ரசிகர்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருந்தால்தான் தியேட்டர் பக்கம் போவார்கள். கப்பலோட்டிய தமிழன் படத்தை டாகுமெண்டரி படமாக நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

      Delete
  9. நம் தலைவர்களை திரைப்படம் மூலம் அறிய வேண்டி உள்ளது காந்திஜி என்றால் பென் கிங்ஸ்லியின் தோற்றம்தான் வரும்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களுக்கு, அப்படி ஒட்டு மொத்தமாக எல்லோரையும் நினைத்து விட வேண்டாம் அய்யா. எனக்கே காந்தி என்றால், அந்த மகாத்மா காந்தியின் முகமும், உருவமும் மனத்திரையில் வரும்போது, என்னில் மூத்த மற்றவர்களுக்கு, காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லியா வருவார்?

      Delete
  10. எனக்குப் பிடித்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! எப்போது கேட்டாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது.

    விடுதலை நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உருக்கமான பாடல். உங்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா.

      Delete
  11. சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. என்றும் நினைவில் இருக்கும் பாடல் த ம 4

    ReplyDelete
  13. பாடல் பகிர்வு அருமை.
    இந்த படத்தில்
    சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாட்டும், 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' லோகநாதன் அவர்கள் பாடிய பாடலும் மிக அருமையாக கண்ணில் நீர் வரவைக்கும் பாடல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  15. மகாகவி பாடலின் வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறதே :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழரே! இந்த பாடலின் வரிகள் இன்றைய நாட்டு நிலைமைக்கு இன்றும் பொருந்தும். அதனால்தான், முதலில், யாரேனும் ஒரு அரசியல்வாதியின் படத்தைப் போட்டு இந்த பாடலின் வரிகளை அதன் கீழே எழுதலாம் என்று இருந்தேன். அப்புறம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  16. அற்புதமான பாடல் .சமீபத்தில் வ.உ.சி., காந்தி தொடர்பான சில தகவல்களை அறிந்தேன் அதைப் பற்றி எழுத எண்ணமும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. உங்கள் படைப்புகளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
      ReplyDelete

      Delete