Saturday, 19 August 2017

தமிழ் – திரு 2017 விருதிற்கான எனது தேர்வு - ஆசிரியர் நா.முத்து நிலவன்



தி இந்து (தமிழ்) தினசரி இதழின் ஆயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அண்மையில் இவ்விதழ் 16 ஆகஸ்ட் 2017 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தமிழ் – திரு விருதுகள்:

// தமிழ் மொழிக்காக அளப்பறிய பணியாற்றிவரும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் எளிய அடையாளம் ‘தமிழ் – திரு’ விருதுகள். எல்லா விஷயங்களையும் வாசகர்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இந்த விருதுக்கான ஆளுமைகளைப் பரிந்துரைக்கும் பெரும் பொறுப்பையும் வாசகர்களிடமே ஒப்படைக்கிறது //

முழு விவரம் மேலே படத்தில்.

தேர்வுக்கான படிவம்:

மேலும் வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஒரு அறிவிப்பை 18 ஆகஸ்ட் 2017 அன்று வெளியிட்டு, ‘என் தேர்வு’ என்று ஒரு படிவமும் வெளியிட்டு இருந்தார்கள். (படம் கீழே)

பத்திரிகையில் வந்த, மேலே சொன்ன படிவத்தையே பரிந்துரை படிவமாகப் பயன்படுத்தி அஞ்சலில், தி இந்து, தமிழ் - திரு விருதுகள், கஸ்தூரி மையம், 124,வாலாஜா சாலை, சென்னை 600002) என்ற விலாசத்திற்கு அனுப்பலாம். அல்லது www.yaadhumthamizhe.com என்ற இணையதளம் சென்றும், பரிந்துரை செய்யலாம்.

எனது தேர்வு மற்றும் பரிந்துரை:

தி இந்து (தமிழ்) இதழ் – தமிழ்திரு விருதுகள் 2017 இற்கான படிவத்தில் ஒவ்வொருவரும் கல்வி, ஆய்வு, கலை, இலக்கியம், தொழில்நுட்பம் என இந்த 5 துறைகளுக்கும், துறைக்கு ஒருவர் என்று பரிந்துரைக்க வேண்டும். நான் இலக்கியத்திற்கு மட்டுமே பரிந்துரை` செய்துள்ளேன்.

எனக்கு அஞ்சலில் அனுப்புவதைவிட, இணையதளம் வழியே பரிந்துரைப்பது எளிதாக இருந்த படியினால், நான் இலக்கியத்திற்கான பரிந்துரையில், ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் பெயரை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளேன். 

யார்:
நா.முத்துநிலவன், சீனிவாசநகர் 3ஆம் தெரு, மச்சுவாடி, புதுக்கோட்டை-622 004. செல்பேசி -94431 93293 - மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

எதனால்:
புதுக்கோட்டையில் வசிக்கும் திரு நா.முத்துநிலவன் அவர்கள் பணிஓய்வு பெற்ற தமிழாசிரியர்; சிறந்த கவிஞர்; முற்போக்கு எழுத்தாளர்; பட்டிமன்றப் பேச்சாளர்; வலைப்பதிவர்; கல்வி மற்றும் இலக்கிய சிந்தனை நூல்களை எழுதியுள்ளார்: இணையதள பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தி பல வலைப்பதிவர்களை உருவாக்கியவர். இன்னும், 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்தவலைப்பதிவர் திருவிழாவை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியவர்

வேண்டுகோள்:

எனவே, இந்த விருதுக்கான படிவம் அனுப்பும், தி இந்து (தமிழ்) வாசகர்களில், புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் மீது அன்பு கொண்ட அன்பர்கள் அனைவரும், இலக்கியத்திற்கான தேர்வில் அவரது பெயரையே தேர்வு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அதிக வாசகர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுக்கான இறுதிப்பட்டியல் உருவாகும் என்பதால், பரிந்துரைகள் ஆசிரியரின் பெயரில் குவியட்டும்.  


45 comments:

  1. நானும் முத்துநிலவன் அண்ணனுக்காக அனுப்புறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. நானும் முத்துநிலவன் ஐயா அவர்களையே பரிந்துரை செய்கிறேன்

      Delete
  2. .அன்பு வழியும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்...மேலும் இதை முன்னெடுத்து வெல்வோம்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டை ஃபேஸ்புக் மற்றும் வலைத்தள நண்பர்களிடம் முன்னெடுத்து சொன்னால் நல்லது.

      Delete
  3. அய்யா!
    உங்களன்பிற்குத் தகுதியுடையவனாக
    என்னை வளர்த்துக்கொள்ள
    தங்களின் ஊக்கவுரைகள்
    என்னைப் பணிக்கின்றன.
    நன்றி கலந்த வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  4. மிகச் சீரிய தேர்வு ஐயா,
    நானும் அனுப்புவேன் ஐயா
    இதை விட மகிழ்ச்சியான பணி வேறு என்ன இருக்கப் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. சரியான தேர்வு ,நானும் வழி மொழிகிறேன் :)

    ReplyDelete
  6. தகுதி உள்ளவர்தான் நானும் அனுப்புகிறேன்

    ReplyDelete
  7. சமர்பித்து விட்டேன் ஆன்லைனில்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. மிகப் பொருத்தனமானவர். நானும் பரிந்துரை சமர்ப்பித்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. நல்ல செயலே நானும் இணைந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  10. இதுவரை இது மாதிரி விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை. எனினும் நம் வலையுலக நண்பர்,பன்முகத்திறமை கொண்டவர் திரு முத்துநிலவன் பெயரை நானும் நீங்கள் சொல்லியிருக்கும் வழியில் அனுப்பி வைக்கிறேன்.

    தம மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி. நானும் உங்களைப் போலவே, இது மாதிரியான விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. ஆயினும் ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை காரணமாகவே இதை முன்னெடுத்தேன்.

      Delete
  11. நல்ல விஷயம் நானும் அனுப்புகிறேன்

    ReplyDelete
  12. தகுதி வாய்ந்த திரு முத்துநிலவன் அவர்களின் பெயரை நானும் தமிழ்-திரு விருதிற்கு பரிந்துரை செய்துள்ளேன்.

    ReplyDelete
  13. அருமை.... நானும் அனுப்புகிறேன். சார்...

    ReplyDelete
  14. திரு முத்துநிலவன் அவர்களின் பெயரை நானும் தமிழ்-திரு விருதிற்கு பரிந்துரை செய்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நூலகர் பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. அருமை வாழ்த்துக்கள் அய்யா , நானும் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  16. இது ஒருபுறமிருக்கட்டும்
    நமது வலைப்பதிவர் சந்திப்பு, 2015இல் புதுக்கோட்டையில் நடத்தியபிறகு, ஓராண்டு (2016) நடத்தப்படாமலே போனதற்காக வருந்துகிறேன்
    இந்த 2017இல் நடத்திட நம் தமிழ்வலைநண்பர்களின் ஆலோசனைகளை புதுகை கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள் எதிர்பார்க்கிறோம் இது மிகவும் முக்கியம்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். வலைப் பதிவர்கள் சந்திப்பு குறித்தான உங்களது ஆதங்கம் எல்லா வலைப் பதிவர்களுக்கும் உண்டு. அன்று 2015 இல் புதுக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பான சந்திப்பு போன்ற இன்னொரு நிகழ்வு நடக்க வேண்டும் என்பதே எனது ஆவலும். இதுகுறித்து தாங்கள் வலைப்பதிவில் வேண்டுகோள் வைத்தால், ஒரு நல்ல ஆலோசனை கிடைக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  17. எங்கள் அய்யா அவர்களின் பெயரை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டையில், மின்னஞ்சல் வைத்து இருக்கும் ஒவ்வொரு தமிழ் இலக்கிய ஆர்வலரையும், இந்த தமிழ் - திரு பரிந்துரையில் ஒருங்கிணைப்பதை உங்களைப் போன்ற ஒருவர் முன்னெடுக்கலாம் என்பதே எனது வேண்டுகோள்.

      Delete
  18. நல்ல முயற்சி. கலந்துகொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  19. நண்பரே, என் பரிந்துரையை சமர்ப்பித்து விட்டேன். அந்த கலகக்காரனிடம் தெரிவித்து விடவும். அன்பன் அஸ்வத்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. ‘அந்த கலகக்காரனிடம் தெரிவித்து விடவும்’ என்று குறிப்பிட்டதின் விவரம் என்னவென்று தெரியவில்லை அய்யா

      Delete
  20. நீங்கள் சொன்னபிறகு தான் இது போல் பரிந்துரை வந்திருப்பதை அறிந்தேன். அண்ணன் முத்துநிலவன் அவர்களின் பெயரைத் தெரிவு செய்திருப்பது மிகவும் பொருத்தமே. விரைவில் நானும் பரிந்துரையைச் சமர்ப்பேன். நன்றி.

    ReplyDelete