உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து எனக்கு ஒரு பழக்கம்.
ஒரு தனி நோட்டுப் புத்தகத்தில் அல்லது பழைய டைரியில் எனக்குப் பிடித்தமான தமிழ் அல்லது
ஆங்கில பொன்மொழிகளை, பழமொழிகளை, மேற்கோள்களை எழுதி வைத்துக் கொண்டு அடிக்கடி படிப்பது.
இந்த பழக்கம் காரணமாக நான் வேலைக்குப் போனதும் புத்தகக் கடைக்குள் அல்லது புத்தகக்
கண்காட்சிக்குள் நுழைந்தால் முதல் வேலையாக நல்ல ENGLISH QUOTATIONS உள்ள புத்தகங்களை
வாங்கி விடுவேன். இப்போது குறைத்துக் கொண்டேன்.
பொன்மொழி ஸ்டாண்டு
அதேபோல, ஞாயிறு விடுமுறையில் வீதியோர கடைகளில் விற்கப்படும், பொன்மொழிகள்
அடங்கிய சுவர் சித்திரங்களையோ அல்லது மேஜை மீது வைக்கும் சிறிய ஸ்டாண்டுகளையோ பிடித்தால்
வாங்குவது வழக்கம். அவைகளுள் பல காணாமல் அல்லது பழையன கழிதழில் இல்லாமல் போய் விட்டன.
இருப்பினும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு,
நான் வாங்கிய டெஸ்க் டாப் பொன்மொழி ஸ்டாண்டு ஒன்று மட்டும் தப்பி அப்படியே உள்ளது.
எங்கள் வீட்டு ஹாலில் இருந்த, அந்த ஸ்டாண்டை நானும் அடிக்கடி எடுத்து படித்துப் பார்ப்பது
வழக்கம்.. ஆனால் அதில் உள்ள Rules of Living என்ற பொன்மொழிக்குச் சொந்தக்காரர் யார்
என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அதில் சொல்லியவர் பெயர் குறிப்பிடப் படவில்லை. நானும்
’யாரோ’ என்று தெரிந்து கொள்ள முயற்சிக்க வில்லை.
(படம் மேலே) இப்போது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் மேஜையில் உள்ள
அந்த பொன்மொழி ஸ்டாண்டு)
(படம் மேலே) இந்த பதிவிற்காக வீட்டு வாசலில் உள்ள பூச்சாடியில்
அந்த ஸ்டாண்டை வைத்து எடுத்த படம்)
சொன்னது யாரோ – விடை
சென்ற மாதம் எங்கள் வீட்டிற்கு ஒரு நிகழ்வின் போது, வந்து இருந்த
எனது உறவினர் ஒருவர் அந்த ஸ்டாண்டை எடுத்துப் பார்த்து விட்டு விவரம் கேட்டதோடு பொன்மொழியைச்
சொன்னது யார் என்றும் கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. “’இது பொறுப்பதில்லை
தம்பி’” என்ற வீமனின் ஆவேசம் போல, அன்று இரவே கூகிளில் Never put off till
tomorrow what you can do today – என்று அந்த பொன்மொழியின் முதல் வாசகத்தை கொடுத்து
தேடினேன். சொல்லியவர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) என்று விடை கிடைத்தது. பின்னர்
Google Image இல் அவரது படத்தோடு முழு பொன்மொழி வரிகளும் கிடைத்தன.
(PICTURES
ABOVE TWO - COURTESY: GOOGLE IMAGES)
தாமஸ் ஜெபர்சன் பற்றிய சில சுவையான தகவல்கள் (கூகிள் தேடுதல் உதவியில்
எழுதப்பட்டது)
தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson 13.04.1743 – 04.071826) அவர்கள்,
ஐக்கிய அமெரிக்காவின் (United States of America) மூன்றாவது குடியரசுத் தலைவராக
(1801 – 1829) இருந்தவர். மேலும் இவர் ஒரு அரசியல் தத்துவஞானி (Political
Philosopher), ஜனநாயகத் தூதுவர் (The Apostle of Democracy) மக்களின் மனிதர் (Man
of the People) மற்றும் The Pen of the Revolution என்றெல்லாம் அன்பாக அழைக்கப்பட்டவர்.
(மேலே படத்தில்) இடமிருந்து வலம் 1.ஜார்ஜ் வாஷிங்டன் 2. தாமஸ் ஜெபர்சன்
3.தியோடர் ரூஸ்வெல்ட் 4.ஆப்ரஹாம் லிங்கன்)
ஐக்கிய அமெரிக்காவை ( United States of America) உருவாக்கிய முன்னோடிகளில்
இவரும் ஒருவர். அதனாற்றான், மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) என்ற, தேசிய நினைவிடத்தில்
உள்ள சிற்பங்களில் இவரது சிலையும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இவர் எழுதிய ’சுதந்திரத்தின் பிரகடனம்’ (United States
Declaration of Independence) என்ற அறிக்கை (1776) உலகப் புகழ் பெற்ற ஒன்று. இவ்வாறு மனித
உரிமை பற்றி உரக்கப் பேசி, அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய
தாமஸ் ஜெபர்சன் ஐநூறு அடிமைகளுக்கு சொந்தக்காரர், அடிமை வியாபாரி என்றும் சொல்லப்படுகிறார்.
இவரது தந்தை வழி, இவை இவருக்கு வந்து இருக்கலாம். ஆனால் பிற்பாடு இவரேதான், இந்த அடிமை
வியாபாரத்தைக் கடும் கண்டனம் செய்ததோடு 1807இல் International Slave Trade ஐ தடை செய்தவர்
என்பதும் குறிப்பிடத் தக்க செய்தியாகும்.
1791 இல் இவர் உருவாக்கிய ’பழங்குடியினர் மொழிகளின் சொற்களஞ்சியம்’
பழங்குடி, மொழியியல் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.
தான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையில் முதன்முதலாக
(1805 இல்) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடச் செய்தவர்,
தாமஸ் ஜெபர்சன்,
. .xxxxxxxxxxxxx.
பிற்சேர்க்கை (08 ஆகஸ்ட் 2017 – 03.00 p.m)
’காணாமல் போன கனவுகள்’ http://rajiyinkanavugal.blogspot.com
வலைப்பதிவர் சகோதரி ராஜி அவர்கள், ” என்னை மாதிரி ஆளுங்களுக்காக தமிழ்ல மொழிப்பெயர்த்திருக்கலாம்
“ என்று கருத்துரை சொல்லி இருந்தார். உடனே மூத்த வலைப்பதிவர் Er செல்வதுரை https://sigmafashions.blogspot.in அவர்கள்,
மேலே சொல்லப்பட்ட தாமஸ் ஜெபர்சன் பொன்மொழிகளை தமிழில் தந்துள்ளார் .( இருவருக்கும்
நன்றி)
இனிய தமிழில் இதோ பொன்மொழிகள்:
1. இன்று செய்ய முடிந்ததை நாளைவரை தள்ளிப்போடாதே
2. உன்னால் செய்ய முடிந்த வேலையை அடுத்தவர் செய்யும்படி அவரை சிரமப்படுத்தாதே
3. பணத்தை ஈட்டுமுன் அதை செலவழித்துவிடாதே.
4. மலிவு என்பதினால் மட்டுமே தேவையற்ற ஒரு பொருளை வாங்காதே, ஏனெனில் ஒருபோதும் அது நீ விரும்பும் பொருளாக இருக்காது.
5. தற்பெருமையானது பசி, தாகம் மற்றும் கடுங்குளிர் ஆகியவற்றைவிட நம்மை அதிகமாகப் பாதிக்கும்.
6. குறைவாகச் சாப்பிட்டுவிட்டது குறித்து ஒருபோதும் நீ கலங்கவேண்டியது இல்லை.
7. விருப்பத்தோடு செய்யும் பணி ஒருபோதும் உனக்கு அலுப்பதில்லை.
8. நிகழாத தீமைகள் ஒருபோதும் உன்னைக் காயப்படுத்த அனுமதிக்காதே
9. எந்தக் காரியத்தையும் முறையாகக் கையாளு.
10. கோபமாய் இருக்கும்போது பத்துவரை எண்ணு. அதீதக் கோபமாய் இருக்கும்போது நூறுவரை எண்ணு.
1. இன்று செய்ய முடிந்ததை நாளைவரை தள்ளிப்போடாதே
2. உன்னால் செய்ய முடிந்த வேலையை அடுத்தவர் செய்யும்படி அவரை சிரமப்படுத்தாதே
3. பணத்தை ஈட்டுமுன் அதை செலவழித்துவிடாதே.
4. மலிவு என்பதினால் மட்டுமே தேவையற்ற ஒரு பொருளை வாங்காதே, ஏனெனில் ஒருபோதும் அது நீ விரும்பும் பொருளாக இருக்காது.
5. தற்பெருமையானது பசி, தாகம் மற்றும் கடுங்குளிர் ஆகியவற்றைவிட நம்மை அதிகமாகப் பாதிக்கும்.
6. குறைவாகச் சாப்பிட்டுவிட்டது குறித்து ஒருபோதும் நீ கலங்கவேண்டியது இல்லை.
7. விருப்பத்தோடு செய்யும் பணி ஒருபோதும் உனக்கு அலுப்பதில்லை.
8. நிகழாத தீமைகள் ஒருபோதும் உன்னைக் காயப்படுத்த அனுமதிக்காதே
9. எந்தக் காரியத்தையும் முறையாகக் கையாளு.
10. கோபமாய் இருக்கும்போது பத்துவரை எண்ணு. அதீதக் கோபமாய் இருக்கும்போது நூறுவரை எண்ணு.
நல்லதொரு பழக்கம் ஐயா... அனைவரும் கடைப்பிடித்தால் (பொன்மொழிகளை) நன்று...
ReplyDeleteநண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்ல பழக்கம் தான் சமயத்தில் பயன்படும்! த ம 2
ReplyDeleteஇவ்வளவு நல்லது செய்திருக்கிறார் ,ஆனால் மற்ற ஜனாதிபதிகள் அளவுக்கு இவர் பேசப் படவில்லையே :)
ReplyDeleteதோழர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட தகவல், யோசிக்க வேண்டிய ஒன்று.
Deleteதாமஸ் ஜெபர்சன் அவர்கள்பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteபொன்மொழிகளை அம்மா தொகுத்து வைத்து இருந்தார்கள் (குமுதம் வார இதழ்) அது இப்போது என்னிடம்.
மேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteபொன் மொழிகள் வழக்கத்தில் புழங்கப்பட வேண்டும் நானும் பல பொன்மொழிகளால் அவ்வப்போது பதிவுகளை அலங்கரித்திருக்கிறேன்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.
Deleteஜெபர்சன் சொல்றதுக்கு நூற்றாண்டுகள் முன்பே ஔவை சொல்லியிருக்கிறார்
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா.
Deleteதூங்கற்க தூங்காது செய்யும் வினை (மயிலாப்பூர் தாடிக்காரர் சொன்னது :-)
ReplyDeleteதங்களது இரண்டாவது வருகைக்கு நன்றி அய்யா. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு அல்லவா.
Delete//தான் அமெரிக்க அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையில் முதன்முதலாக (1805 இல்) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடச் செய்தவர், தாமஸ் ஜெபர்சன்
ReplyDeleteஇதற்கு ஆதாரம் எதுவும் இல்லை சார். ஒபாமாவும் அவருடைய அரசியல் கோணங்கிகளும் கிளப்பி விட்டது. ரமதான் நேரத்தில் வெள்ளை மாளிகை விருந்தொன்றுக்கு இஸ்லாமிய விருந்தினர் ஒருவர் வந்திருந்தது மட்டுமே ஆதாரம். ஜெபர்சன் காலக் கட்டத்தை வைத்துப் பார்க்கையில் பிற மத அனுசரிப்புக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. அந்நாளில் இஸ்லாமியர் எண்ணிக்கையும் அமெரிக்காவில் மிக மிகக் குறைவு. உள்ளூர் கிறித்தவக் கறுப்பர்களையே அவர்களால் சமமாக ஏற்க முடியவில்லை. அமெரிக்காவின் முதல் மசூதி 1920களில் எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஜெபர்சன் அவர்களின் திறமைக்கு இப்படியெல்லாம் கதை கட்டி அலங்கரிக்க வேண்டிய அவசியம் இல்லை - இருந்தாலும் மக்கள் மக்களே :-)
தங்களது மூன்றாவது வருகைக்கு நன்றி அய்யா. வெள்ளை மாளிகையில் ரம்ஜான் விழா - பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பயனில்லே என்று , அதை மையிலே நனைச்சு பேப்பரிலும் அடித்து விட்டார்கள்.
Deleteநல்ல தகவல். 'Dont let the evils' மாத்திரம் நன்கு வாசித்துப் புரிந்துகொண்டேன். (பிக் பாஸில் இருப்பவர்கள் இதை மட்டுமாவது தெரிந்துகொள்ளவேண்டும். அதுதான் அவர்கள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை).
ReplyDeleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகம்ப்யூட்டர் டேபிள் இத்தனை சுத்தமா இருக்கே! இது தப்பாச்சே!
ReplyDeleteசகோதரி அவர்களின் சந்தேகம் நியாயமானது தான். வங்கியில் பணிபுரிந்த போதும் நான் எனது கம்ப்யூட்டர் மேஜையை சுத்தமாகவே வைத்துக் கொண்டேன். அந்த நேரத்து பணிக்கான ஆவணம் அல்லது பணம் மட்டுமே மேஜையில் இருக்கும். மற்றவை மேஜை டிராயரில் இருக்கும்.அந்த பழக்கம் இப்போதும் வீட்டில் தொடர்கிறது. இருப்பினும் சிலசமயம் குப்பையாகி விடும். ஆனாலும் உடனுக்குடன் சுத்தம் செய்து விடுவேன்.
Deleteஎன்னை மாதிரி ஆளுங்களுக்காக தமிழ்ல மொழிப்பெயர்த்திருக்கலாம்
ReplyDeleteசகோதரி அவர்களே உங்கள் கருத்தினை மனதில் இருத்திக் கொண்டேன். உங்கள் கருத்துரையைக் கண்ட மூத்த வலைப்பதிவர் Er செல்வதுரை https://sigmafashions.blogspot.in அவர்கள், மேலே சொல்லப்பட்ட தாமஸ் ஜெபர்சன் பொன்மொழிகளை தமிழில் தந்துள்ளார். அந்த மொழி பெயர்ப்பினை மேலே உள்ள எனது பதிவினில் பிற்சேர்க்கையாகவும் இணைத்துள்ளேன். உங்கள் இருவருக்கும் நன்றி.
Deleteபத்து கட்டளைகள் மாதிரி தாமஸ் ஜெபர்ஸனின் பொன்மொழிகள் அருமை.
ReplyDeleteபல இயல்பாய் எல்லாருக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது தான் அந்த அருமையின் சூட்சுமம்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபோற்றுதலுக்கு உரிய பழக்கம் ஐயா
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
Deleteநல்ல பொன்மொழிகள்... பல சமயங்கள் பொன்மொழிகள் படிக்க மட்டுமே என்றாகி, கடைபிடிப்பது அரிதாகிவிடுகிறது.
ReplyDeleteசில காலம் நானும் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருந்தேன்!
த.ம. ஐந்தாம் வாக்கு.
நண்பருக்கு நன்றி.
Deleteஅழகிய பொன்மொழிகள். அனைவரும் கடைப்பிடிக்கலாம்! பொதுவாக தான் செய்ய முடியாததை அடுத்தவர்களுக்கு அறிவுரையாய்ச் சொல்வது வழக்கம்!!!!!! இவை பொன்மொழியாகி விடுகின்றன!!!!
ReplyDeleteதம ஆறாம் வாக்கு.
நண்பருக்கு நன்றி. எது எப்படியோ பொன்மொழிகள் என்பவை, வசீகரமான வார்த்தைகளால் ஆனவை.
Deleteஇனிய தமிழில் இதோ பொன்மொழிகள்:
ReplyDelete1. இன்று செய்ய முடிந்ததை நாளைவரை தள்ளிப்போடாதே
2. உன்னால் செய்ய முடிந்த வேலையை அடுத்தவர் செய்யும்படி அவரை சிரமப்படுத்தாதே
3. பணத்தை ஈட்டுமுன் அதை செலவழித்துவிடாதே.
4. மலிவு என்பதினால் மட்டுமே தேவையற்ற ஒரு பொருளை வாங்காதே, ஏனெனில் ஒருபோதும் அது நீ விரும்பும் பொருளாக இருக்காது.
5. தற்பெருமையானது பசி, தாகம் மற்றும் கடுங்குளிர் ஆகியவற்றைவிட நம்மை அதிகமாகப் பாதிக்கும்.
6. குறைவாகச் சாப்பிட்டுவிட்டது குறித்து ஒருபோதும் நீ கலங்கவேண்டியது இல்லை.
7. விருப்பத்தோடு செய்யும் பணி ஒருபோதும் உனக்கு அலுப்பதில்லை.
8. நிகழாத தீமைகள் ஒருபோதும் உன்னைக் காயப்படுத்த அனுமதிக்காதே
9. எந்தக் காரியத்தையும் முறையாகக் கையாளு.
10. கோபமாய் இருக்கும்போது பத்துவரை எண்ணு. அதீதக் கோபமாய் இருக்கும்போது நூறுவரை எண்ணு.
ஆகா, நன்றி!
Deleteமூத்த வலைப்பதிவர் திரு Er.செல்வதுரை அவர்களின் இனிமையான தமிழாக்கத்திற்கு நன்றி. இந்த மொழி பெயர்ப்பினை மேலே உள்ள எனது பதிவினில் பிற்சேர்க்கையாகவும் இணைத்துள்ளேன். உங்கள் இருவருக்கும் நன்றி.
Deleteஅழகிய தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஐயா வலைப்பதிவர் திரு Er.செல்வதுரை அவர்களுக்கும் நன்றி
நானும் இந்த ஜாதிதான் பொன்மொழி சேமிப்பாளன். காப்பி செய்து கொண்டேன் தினம் படிப்பதற்கு
நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteநானும் கூட .... ஆனால் எதுவும் ஹி ஹி...பின் பற்றுவதில்லை.
ReplyDeleteமேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதாங்கள் குறித்துள்ள பொன்மொழிகளில் -
ReplyDeleteதெரிந்தோ அல்லது தெரியாமலோ - சிலவற்றை கைக்கொண்டிருக்கின்றேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது..
பொன்மொழிகள் என்றும் பொன்மொழிகளே..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதாங்கள் தந்துள்ள பொன்மொழிகளில் பலவற்றை கடைபிடித்து வருகிறேன். இதுபோன்ற, பொன்மொழிகளை பின்பற்றும் பழக்கங்கள் நம்மை மென்மேலும் மேம்படுத்தும்.
ReplyDeleteமுனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி.
Deleteபடிக்கும் போது புதிய உத்வேகம் தரக்கூடியவை பொன்மொழிகள்...! அருமை !
ReplyDeleteகவிஞரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதாமஸ் ஜெஃபர்சன் அவர்களின் வாழ்க்கைக்கான அருமையான பத்து விதிகளை எங்களுக்காக பகிர்ந்தமைக்கு நன்றி! எல்லோரும் கடைப்பிடிக்கக்கூடியவைகள் தான். ஆனால் யாருமே அதை செய்வதில்லை.
ReplyDeleteநன்றி அய்யா.
Delete