Tuesday 27 May 2014

அஞ்சல் துறை தேர்வு - விவரம் தெரிந்தவர் சொல்லுங்கள்


                                                    

இன்றைய (மே, 27, 2014) தி இந்து (தமிழ்) நாளிதழில் Details of Admitted/Rejected candidates  Multi-Tasking Staff Examination to be held on 01.06.2014 சம்பந்தமாக செய்தி வெளியாகி உள்ளது. இது விஷயமாக TAMILNADU POSTAL CIRCLE  இணையதளம் சென்று சம்பந்தப்பட்ட போஸ்டல் டிவிஷன் லிங்கை BROWSE  செய்தால் விவரம் வரவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் உறவினருக்கு இது விஷயமாக உதவ வேண்டும். இணையதளத்தில் வேறு வழியாக எப்படி பார்ப்பது என்பதை விவரம் தெரிந்தவர்கள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்தி கீழே.


அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.

வரும் ஜூன் முதல் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகான நுழைவுச் சீட்டை அஞ்சல் துறை அனைத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் துரித அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் (www.tamilnadupost.nic.in.) வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு வட்டார தலைமைப் பொது அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்தி - (நன்றி: தி இந்து (தமிழ்) தேதி (மே, 27, 2014)

(PICTURE: THANKS TO www.indirvip.com (GOOGLE)








13 comments:

  1. அன்புடையீர்..
    தாங்கள் கேட்டிருந்தபடிக்கு -
    தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்களை - தங்களது Gmail முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
    உடன் கவனிக்கவும்.

    ReplyDelete
  2. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // அன்புடையீர்.தாங்கள் கேட்டிருந்தபடிக்கு - தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்களை - தங்களது Gmail முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன். உடன் கவனிக்கவும். //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்புக்கு நன்றி! நானும் ஏற்கனவே நீங்கள் சொல்லியபடி முயற்சி செய்து பார்த்து விட்டுத்தான் இந்த பதிவினை எழுதினேன். ஒருவேளை XLSX adobe Reader ஐ தரவினை எனது கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை. நாளை திருச்சி தலைமை தபால் நிலையம் சென்று விசாரிக்க வேண்டும்

    ReplyDelete
  3. அன்புள்ள சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு, நீங்கள் அனுப்பிய கும்பகோணம் டிவிஷன் பட்டியல் நன்றாக தெரிகிறது. தஞ்சாவூர் டிவிஷனை விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. அன்புடையீர்..
    கும்பகோணம் டிவிஷனின் பட்டியல் - Ms Word ல் செய்யப்பட்டு Adobe Acrobat Document ஆக வெளியாகி உள்ளது.
    தஞ்சாவூர் டிவிஷனின் பட்டியல் - Ms Excel -ல் வெளியாகி உள்ளது.
    மேலதிக தகவல்களுக்கு விசாரித்துக் கொள்ளவும் . வாழ்க நலம்..

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    பலர்அறிய முடியாத தகவலை பதிவாக சொல்லியமைக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் தகவல் பயனுள்ளது நன்றி ஐயா

    ReplyDelete
  8. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // அன்புடையீர்.. கும்பகோணம் டிவிஷனின் பட்டியல் - Ms Word ல் செய்யப்பட்டு Adobe Acrobat Document ஆக வெளியாகி உள்ளது.
    தஞ்சாவூர் டிவிஷனின் பட்டியல் - Ms Excel -ல் வெளியாகி உள்ளது. மேலதிக தகவல்களுக்கு விசாரித்துக் கொள்ளவும் . வாழ்க நலம்.. //

    உதவ வேண்டும் என நல்லெண்ணத்தில் உடனுக்குடன் கருத்துரையும், பட்டியல்கள் விவரத்தினையும் தந்த, அன்புள்ள சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

    அஞ்சல் துறையினர் எளிமையான ஒரே முறையை விடுத்து, ஒவ்வொரு டிவிஷனையும் வெவ்வேறு பைல்களில் தந்து இருக்கின்றனர்.

    ReplyDelete
  9. மறுமொழி >

    கருத்துரை தந்த

    கவிஞர் ரூபன்,
    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்,
    கவிஞர் எஸ்.ரமணி,
    சகோதரி ஆசிரியை பவித்ரா நந்தகுமார்,
    சகோதரர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் –

    அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் ஐயா... நன்றி...

    ReplyDelete
  11. தம 3
    நற்பணி தொடரட்டும்..
    www.malartharu.org

    ReplyDelete
  12. உங்களின் சந்தேகத்தின் மூலம் நானும் சில தகவல்களை தெரிந்து கொண்டேன் ,நன்றி !
    த ம +1

    ReplyDelete
  13. கருத்துரை தந்த
    சகோதரர் திண்டுக்கல் தனபாலன்,
    மது.எஸ்,
    பகவான்ஜீ கே.ஏ
    ஆகிய மூவருக்கும் நன்றி!

    ஆனாலும் யாரும் இதுவரை அந்த பைலை எப்படி திறப்பது என்பது பற்றி ஆலோசனை சொல்லவில்லை.



    ReplyDelete