Sunday, 4 May 2014

சாய்வுநாற்காலி விமர்சகர் (ARMCHAIR CRITIC )



தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசியலில் தனக்கு எதிரானவர்களைப் பற்றி பேசும்போது சிலசமயம் சில ஆங்கில மரபுச் சொற்களை (IDIOMS) எடுத்து வீசுவார். எதிராளி அந்த வார்த்தையைக் கண்டு ஒன்றுமே சொல்லாது மவுனம் காத்து விடுவது வழக்கம்.

ஒருமுறை அப்போதைய பிரதமர் நரசிம்மராவிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் கருத்து வேறுபாடுகள். இருவருமே ராஜீவ்காந்தி கொலையான சமயம் பதவிக்கு வந்தவர்கள். இத்தனைக்கும் இருவரும் ஒரே கூட்டணியில்தான் இருந்தார்கள். இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. எனவே ஜெயலலிதா, நரசிம்மராவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவருக்கும் தனக்கும் தலைமுறை இடைவெளி (GENERATION GAP) இருப்பதாகச் சொன்னார்.

                         ( Picture above thanks to    http://emrefirat.edublogs.org/2012/12/20/gap)

தலைமுறை இடைவெளி (GENERATION GAP) என்பதற்கு இரு தலைமுறைகளுக்கு இடையில் கருத்தொருமிப்பு இல்லாமை மற்றும் நாகரிகம் மற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடு என்று பொருள் சொல்லப் படுகிறது.

இன்னொருமுறை பா.ஜ.க தலைவர் அத்வானியைப் பற்றிகுறிப்பிடும்போது, அவருக்கு செலக்டீவ் அம்னீஷியா(SELECTIVE AMNESIA) என்ற நோய் இருப்பதாகச் சொன்னார்.

செலக்டீவ் அம்னீஷியா(SELECTIVE AMNESIA) நோயுள்ளவர்கள் சில நினைவுகளை இழந்து விடுவார்கள் என்பார்கள்.

அண்மையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பந்தமாக தி.மு.க தலைவர்  கருணாநிதி ஜெயலலிதாவை குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்

ஆங்கிலத்தில் ஆர்ம்சேர் கிரிட்டிக்' என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

என்று குறிப்பிட்டு , கருணாநிதியை “ARMCHAIR CRITIC”  என்று கிண்டலடித்து இருந்தார். இதற்கு ஆங்கில அகராதியில்

An armchair critic is someone who offers advice but never shows that they could actually do any better.”

என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

“ சாய்வுநாற்காலி விமர்சகர் உருப்படியாக தன்னால் எதையும் செய்ய முடியா விட்டாலும், அடுத்தவருக்கு அறிவுரை சொல்லுவார் “

என்பது இதன் தமிழாக்கம்.


ஊரில் இளைஞர்கள் “ என்ன பெரிசு நல்லா இருக்கியா?. என்றும் “பெரிசு கொஞ்சம் தள்ளிக்கோ என்றும் பெரியவர்களை சர்வசாதாரணமாக அழைப்பதுண்டு. சில பஸ் கண்டக்டர்கள் வயதானவர்கள் என்றாலே, பஸ்ஸில் ஏறும் போதும், இறங்கும் போதும் பெருசு சீக்கிரம் ஏறு என்றும், பெருசு சீக்கிரம் இறங்கு என்றும் அவசரப் படுத்துவார்கள். சில வீடுகளில், பெரியவர்கள் எதையாவது சொன்னால் “பெருசு சும்மா இருக்க மாட்டியா? என்பார்கள். கிட்டதட்ட ஜெயலலிதாவின் அறிக்கையில் உள்ள கிண்டலும் இவ்வாறாகவே உள்ளது. இதற்கு ப்திலளித்த கருணாநிதி “யார் சுகவாசி என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும் அம்மாவும் ஒரு சீனியர் சிட்டிசன்தான்  என்பதை மறுக்க முடியாது.

புதியபூமி என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த தமிழ் திரைப்படம். அதில் நான்தாண்டி காத்திஎன்று தொடங்கும் பாடலைக் கண்டு களிக்க கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்குங்கள் (CLICK BELOW)  

(PICTURES AND VIDEO THANKS TO "GOOGLE") 





     

49 comments:

  1. நிச்சயம் நாம் சுகவாசி அல்ல
    உண்மைதானே ஐயா
    காணொளி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. படிப்பு அப்படி...! பண்பு இப்படி...! ம்...

    ReplyDelete
  3. எதிர் கட்சியை - எதிரிக் கட்சியாகவே ஆக்கியது தான் தமிழகத்தின் அவலம்!..
    இரண்டு கட்சிகளுமே - ஏழை எளியவர்களை இலவசத்துக்கு நிரந்தர அடிமையாக ஆகி வைத்திருப்பதில் வல்லவர்கள்!..

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    அன்றும் இன்றும் உள்ளவர்கள் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் அரசியல் என்பது நாணயத்தின் இருபக்கங்கள்.....போல.
    (ARMCHAIR CRITIC) இதற்கான விளக்கமும் நன்று வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அவலமான சில திரைப்படங்களின் மூலமாகவே - பெரியவர்களை, ‘’ ஏ.. பெருசு!..’’ என்று ஏளனம் செய்வது எங்கும் பரவியது.

    பொது சேவையில் உள்ள பேருந்து நடத்துனர்கள் - , கொஞ்சமும் கூச்சமின்றி இப்படிச் சொல்வதை நாளும் கேட்டு மனம் வருந்தியிருக்கின்றேன்.

    திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கு எத்தனை வழிகள்?.. தானும் போகாமல் - அடுத்தவனையும் போக விடாமல் ரகளை செய்யும் சந்தடியில் நானும் குழம்பி - தடுமாறியிருக்கின்றேன். அப்படி ஒருமுறை -

    தில்லை நகர் வழியாக செல்லும் பேருந்தில் - விவரம் புரியாமல் ஏறிவிட்ட வெளியூர் பெரியவரைத் தரக்குறைவாகப் பேசினான் - அந்தப் பேருந்தின் ஊழியன். அருகிருந்த நான் - ஏனிப்படி பேசுகின்றீர்கள் என்றதற்கு - என்னையும் அவமதித்தான் அந்த கடையன்..

    சீற்றம் தாளாமல் - நான் வாங்கியிருந்த பயணச்சீட்டை அவன் மூஞ்சியில் கிழித்து எறிந்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன்.

    அந்தப் பேருந்தில்இருந்தவர்கள் எங்கோ ஆப்பிரிக்காவில் இது நடக்கின்றது. நமக்கென்ன!.. என்ற பாவனையில் இருந்தது தான் அவலம் ..

    ReplyDelete
  6. முன்னாள் முதல்வர்கள் யாராய் இருந்தாலும் சாய்வுநாற்காலி விமர்சகர்என்ற பட்டம் பொருந்துமே !
    த ம 2

    ReplyDelete
  7. பாழாய்ப்போன பத்திரிகைகளும் ஒருதரப்பாய் ஒத்து ஊதுவதுதான் வேடிக்கையான வேதனை!

    ReplyDelete
  8. நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை இழிந்து பேசும் வழக்கத்திற்கு முக்கிய காரணம் சினிமா என்பதில் ஐயமில்லை,தனுஷ்,விவேக்,சந்தானம் போன்றவர்களுக்கு முக்கிய பங்கு இதில் உண்டு.
    அரசியல் தலைவர்கள் பேச்சு நாகரிகம் கடைபிடிப்பதை என்றோ மறந்து விட்டார்கள்

    ReplyDelete
  9. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // நிச்சயம் நாம் சுகவாசி அல்ல! உண்மைதானே ஐயா
    காணொளி கண்டு மகிழ்ந்தேன் ஐயா! நன்றி //

    ஆம்! அய்யா! ஓட்டு போட்ட நாம் நிச்சயமாக சுகவாசிகள் கிடையாது! ஆனால் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுமே சுகவாசிகள்தான்! காம்ரேடுகள் கூட தேர்தல் கமிஷனில் சொத்து கணக்கு காட்டும்போது மனைவி பெயரில்தான் கணக்கு காட்டுகின்றனர்.

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // படிப்பு அப்படி...! பண்பு இப்படி...! ம்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

    // வணக்கம், நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் 2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.தற்போது பதிவை இணைக்கலாம்.
    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.//

    வணக்கம்! தங்கள் ஆலோசனைக்கு நன்றி! உங்கள் தளத்தில் சேருவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை! யோசித்து செய்கிறேன்!


    ReplyDelete
  12. மறுமொழி > துரை செல்வராஜூ said... ( 1 )
    // எதிர் கட்சியை - எதிரிக் கட்சியாகவே ஆக்கியது தான் தமிழகத்தின் அவலம்!..இரண்டு கட்சிகளுமே - ஏழை எளியவர்களை இலவசத்துக்கு நிரந்தர அடிமையாக ஆகி வைத்திருப்பதில் வல்லவர்கள்!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இந்த கட்சிகள் மட்டுமல்ல. கூட்டணி என்ற பெயரில் இவர்களுக்கு ஆதரவு தந்த எல்லா கட்சிகளுக்குமே இதில் பங்கு உண்டு.

    ReplyDelete
  13. மறுமொழி >ரூபன் said...

    //அன்றும் இன்றும் உள்ளவர்கள் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் அரசியல் என்பது நாணயத்தின் இருபக்கங்கள்.....போல.(ARMCHAIR CRITIC) இதற்கான விளக்கமும் நன்று வாழ்த்துக்கள் ஐயா//

    கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said... ( 2 )

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // அவலமான சில திரைப்படங்களின் மூலமாகவே - பெரியவர்களை, ‘’ ஏ.. பெருசு!..’’ என்று ஏளனம் செய்வது எங்கும் பரவியது.//

    அந்த காலத்தில் பழைய படங்களில் குடும்ப ஒற்றுமையையும் நல்ல பழக்க வழக்கங்களையும் மக்கள் மனதில் நிலை நிறுத்தினார்கள். இப்போது அப்படி இல்லை. சமூகம் கெட்டுப் போனதற்கு இந்த சினிமாவின் பங்கு நிறையவே உள்ளது.

    //பொது சேவையில் உள்ள பேருந்து நடத்துனர்கள் - , கொஞ்சமும் கூச்சமின்றி இப்படிச் சொல்வதை நாளும் கேட்டு மனம் வருந்தியிருக்கின்றேன். //

    இது நாட்டின் எல்லா இடத்திலும் இப்படித்தான் இருக்கிறது.

    //திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கு எத்தனை வழிகள்?.. தானும் போகாமல் - அடுத்தவனையும் போக விடாமல் ரகளை செய்யும் சந்தடியில் நானும் குழம்பி - தடுமாறியிருக்கின்றேன். அப்படி ஒருமுறை -
    தில்லை நகர் வழியாக செல்லும் பேருந்தில் - விவரம் புரியாமல் ஏறிவிட்ட வெளியூர் பெரியவரைத் தரக்குறைவாகப் பேசினான் - அந்தப் பேருந்தின் ஊழியன். அருகிருந்த நான் - ஏனிப்படி பேசுகின்றீர்கள் என்றதற்கு - என்னையும் அவமதித்தான் அந்த கடையன்..

    சீற்றம் தாளாமல் - நான் வாங்கியிருந்த பயணச்சீட்டை அவன் மூஞ்சியில் கிழித்து எறிந்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன். அந்தப் பேருந்தில்இருந்தவர்கள் எங்கோ ஆப்பிரிக்காவில் இது நடக்கின்றது. நமக்கென்ன!.. என்ற பாவனையில் இருந்தது தான் அவலம் .. //

    திருச்சியில் இது சர்வ சாதாரணம். காரணம் பஸ்ஸில் எழுதப்பட்டுள்ள ரூட் எண், பஸ்ஸின் சைடில் எழுதப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்கள் – இவற்றிற்கும் அந்த பஸ்ஸுக்கும் சம்பந்தமே இருக்காது. இதனைப் பார்த்து பஸ்ஸில் ஏறும் வெளியூர் பயணிகள் அவதிக்கு ஆளாகிறார்கள். இதனை யாரும் கண்டு கொள்வதில்லை.


    ReplyDelete
  15. மறுமொழி > Bagawanjee KA said...

    // முன்னாள் முதல்வர்கள் யாராய் இருந்தாலும் சாய்வுநாற்காலி விமர்சகர்என்ற பட்டம் பொருந்துமே ! த ம 2 //


    சகோதரர் பகவான்ஜீ K.A அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...
    // பாழாய்ப்போன பத்திரிகைகளும் ஒருதரப்பாய் ஒத்து ஊதுவதுதான் வேடிக்கையான வேதனை! //

    சகோதரர் கவிப்ரியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  17. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை இழிந்து பேசும் வழக்கத்திற்கு முக்கிய காரணம் சினிமா என்பதில் ஐயமில்லை, தனுஷ்,விவேக்,சந்தானம் போன்றவர்களுக்கு முக்கிய பங்கு இதில் உண்டு.//

    நீங்கள் சொவது நூற்றுக்கு நூறு உண்மை!

    // அரசியல் தலைவர்கள் பேச்சு நாகரிகம் கடைபிடிப்பதை என்றோ மறந்து விட்டார்கள் //

    தமிழ்நாட்டில் இப்போது மேடைப் பேச்சு என்பது குறைந்து வருகிறது. மேடையில் சவால் விடும் பேச்சாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள். இப்போது அறிக்கைப் போர்தான்.

    ReplyDelete
  18. இந்த அம்மா இப்படிக்கூட பேசுவார்களா !! ஆத்திரத்தின் உச்சமென்றெ பொருள் படும்
    இவ்வாறான நையாண்டிகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  19. லேடியும் டாடியும் இப்படி ஒருவரையொருவர் சொல்லிக்கொள்வது பழக்கம்தானே? ஆனால் பல சமயங்களில் டாடி சரியான புள்ளி விவரங்களுடன் பேசுவார். ஆனால் லேடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதை பேசுவார். இது மட்டும்தான் இவர்களுக்கிடையிலுள்ள வித்தியாசம்.

    ReplyDelete
  20. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. //“ சாய்வுநாற்காலி விமர்சகர் உருப்படியாக தன்னால் எதையும் செய்ய முடியா விட்டாலும், அடுத்தவருக்கு அறிவுரை சொல்லுவார் “//

    உண்மை தான். அதனால் நானும் இப்போ எதையும் சொல்வதாக இல்லை. ;)))))

    இன்றைய பச்சை இலைகளும் ஒரு நாள் பழுத்துத்தானே போகும் !

    ReplyDelete
  23. "ஆர்ம் க்ரிடிக்" என்று சொன்னதற்கு நீங்களாகவே "பெருசு" என்று பொருள் எடுத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    அய்யா திரு V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    - - - -
    //“ சாய்வுநாற்காலி விமர்சகர் உருப்படியாக தன்னால் எதையும் செய்ய முடியா விட்டாலும், அடுத்தவருக்கு அறிவுரை சொல்லுவார் “//
    உண்மை தான். அதனால் நானும் இப்போ எதையும் சொல்வதாக இல்லை. ;))))) //

    நானும் சில சமயம் வீட்டில் பிள்ளைகளிடம் வாங்கி கட்டிக் கொள்கிறேன் அய்யா!

    // இன்றைய பச்சை இலைகளும் ஒரு நாள் பழுத்துத்தானே போகும் ! //

    ஒருமுறை நம்ம ஊரு டவுன் பஸ்ஸில் பஸ் ஸ்டாப்பிங்கில், ஒரு பெரியவரை தள்ளாத குறையாக இறக்கி விட்டார் ஒரு கண்டக்டர். அவரிடம் நீங்களெல்லாம் இப்படியே இருந்து விடுவீர்களா? என்று கேட்டு அந்த ஆளின் கோபப பார்வை என்மீது பட்டதுதான் மிச்சம்.



    ReplyDelete
  25. மறுமொழி > குட்டிபிசாசு said...

    வாங்க குட்டிப் பிசாசு! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // "ஆர்ம் க்ரிடிக்" என்று சொன்னதற்கு நீங்களாகவே "பெருசு" என்று பொருள் எடுத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். //

    நானாகவே எந்த பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை.

    ‘ஆர்ம்சேர் கிரிட்டிக்' என்பதற்கு என்ன பொருள் என்று ஜெயலலிதா அவர்கள் சொன்னதையும், ஆங்கில அகராதி சொன்ன விளக்கத்தினையும், எனது தமிழாக்கத்தினையும் பதிவினில் தந்துள்ளேன். படித்து இருப்பீர்கள்.

    ஜெயலலிதாவின் அறிக்கையில் உள்ள கிண்டலில் உள்ள தொனி என்ன என்பதற்காக மட்டும் ”பெருசு” விளக்கம். மற்றபடி அம்மா என்றால் எல்லோருக்குமே பயம்தான். எனவே யாரும் பதிவின் மையக் கருத்தினுக்கு செல்லாமல் ”பெருசு” பற்றியே கருத்துரை தர ஆரம்பித்து, நானும் பதில் தர வேண்டியதாயிற்று. உங்களுக்கு அதுவே முதன்மைக் கருத்தாக தெரிந்துள்ளது


    ReplyDelete
  26. சார் உங்கள நினைச்சா சிரிப்பா வருது, இதுவே உங்களுக்கு இடும் கடைசி பின்னூட்டம், வயது முதிர்ந்த காலத்துல நிம்மதியா பதிவு போட்டு வாழ்வாங்கு வாழவும்! வாழ்த்துக்கள்!

    என்ன கொடுமை சார் இது அவ்வ்!

    ReplyDelete
  27. selective amnesia என்று மெடிகல் அகராதி எதைச் சொல்லுகிறதோ அதில் இருந்து வெகு தூரம் அந்த வார்த்தைகளின் present day பொருள் சிதைந்து விட்டது.

    இன்றைய நாட்களில், இதன் பொருள்
    Selective Amnesia
    A popular term for amnesia for certain events. As commonly used, selective amnesia refers to a deliberate inability (unwillingness) to recall an event’s details

    இந்தப் பொருளிலே தான் தற்கால மு. அ இதை சொல்லியிருக்கிறார் என நான் நினைக்கிறேன்.

    உண்மையில், செலக்டிவே அம்னீசியா என்பது,

    ஒரு விபத்தோ (தலையில் அடிபடுதல், அல்லது ட்ரூமா அல்லது ஒரு ஸ்ட்ரோக் ஏற்படும் அல்லது நிகழும் நேரத்திலிருந்து, திரும்பவும் மூளை தனது நினவு ஆற்றலைத் திரும்பப் பெரும் வரை உண்டான கால கட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை திரும்பபெற இயலாது. :

    ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நடந்தவைகளை, அனுபவித்தவர் ஒன்று அப்படி நடக்கவே இல்லை எனவோ அல்லது வேறு விதமாக நடந்தது எனவோ சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

    அதைத் தான் மூளை நரம்பியல் மருத்துவத்தில் செலக்டிவ் ஆம்நீசியா என்பர்.

    நன்றாக குடித்துவிட்டு நினைவு இழந்தவனுக்கும் இந்த எஸ்.ஏ . ஏற்படுவது உண்டு.

    இந்த அம்னீசியா அன்றி மற்ற பல மறதிகளும் இருக்கின்றன.

    anterograde amnesia அண்ட் retrograde amnesia.
    circumscribed amnesia l
    continuous amnesia l
    dissociative amnesia

    இவை செலக்டிவ் அம்னீசியா வை விட சுவாரசியமானவை.

    இந்த அனுபவங்கள் மனித வாழ்வில் எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

    பெரியபெரிய தத்துவ ஆசிரியர்கள் கூட இந்த எஸ். ஏ வினால் அவதி உற்று இருக்கிரார்கள். ஆச்மீர் நோய் கொஞ்சம் வேறு பட்டது. அதை என்னுடைய ஒரு பதிவில் விளக்கி இருந்தேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  28. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடைசியில் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  29. மறுமொழி > வவ்வால் said...

    // சார் உங்கள நினைச்சா சிரிப்பா வருது, இதுவே உங்களுக்கு இடும் கடைசி பின்னூட்டம், வயது முதிர்ந்த காலத்துல நிம்மதியா பதிவு போட்டு வாழ்வாங்கு வாழவும்! வாழ்த்துக்கள்!
    என்ன கொடுமை சார் இது அவ்வ்! //

    வவ்வால் சாருக்கு ! நான் எழுதும் பதிவையும் அதில் வரும் கருத்துரைகளையும் எனது நண்பர்களும், உறவினர்களும் படிக்கிறார்கள். படிக்கும் வாசகர்களில் பெண்களும் உண்டு. எனவே இஷ்டத்திற்கு எழுதி விட முடியாது.

    இதற்கு முன்னர் நீங்கள் கொடுத்த கருத்துரை சம்பந்தமாக ....

    நீங்கள் தந்த கருத்துரை
    வவ்வால் said...
    தி.தமிழ் இளங்கோ சார்,
    அம்மையார் மட்டுமல்ல அய்யாவும் இப்படியான பேச்சுகளுக்கு பேர் பெற்றவர், சட்டமன்றத்துலவே ஒரு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவை பார்த்து ('………. ………) டபுள் மீனிங்கில் முத்தமிழ் வித்தவர் பேசியிருக்கார் அவ்வ்!

    எனது மறுமொழி > வவ்வால் said...
    ( இங்கு வவ்வால் அவர்களின் கருத்தை எடிட் செய்து (அடைப்புக் குறிக்குள் உள்ளவற்றை நீக்கிவிட்டு) வெளியிட்டுள்ளேன்.

    வவ்வால் சாருக்கு! நீங்கள் எழுதிய கருத்துரையை வைத்து இருப்பதா நீக்குவதா என்று தெரியவில்லை! நீங்கள் சொல்ல வந்ததை வேறு விதமாகவும் சொல்லி இருக்கலாம். எனவே உங்கள் கருத்துரையில் சில சொற்களை நீக்கிவிட்டு இங்கு வெளியிட்டுள்ளேன்.

    நன்றி! மீண்டும் சந்திப்போம்!


    ReplyDelete
  30. மறுமொழி > sury Siva said...

    சூரி சிவா என்கிற சுப்பு தாத்தா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! செலக்டீவ் அம்னீஷியா(SELECTIVE AMNESIA) சம்பந்தமாக உங்களது முந்தைய பதிவு ஒன்றில் படித்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  31. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடைசியில் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நானும் உங்கள் இருவரது கருத்துரையையும் ஆமோதிக்கிறேன்.
    “பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்” என்ற பழமொழி எக்காலத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  32. அனுபவமிக்க பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்பது அவசியம்.i

    ReplyDelete
  33. சாய்வுநாற்காலியில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஒருவர் மாதிரி தான் அம்மாவும்.

    தமிழகத்தில் பெரியவங்களை நேரிலேயே இழிவாக பேசும் அவலம் தாராளமா நடைபெறுகிறது.வேறு நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் இந்த இழிநிலை தெளிவாக தெரிகிறது.

    ReplyDelete
  34. நீங்க கூட ஏன் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை என்று கேட்டுருந்தீங்க. இவங்க ரெண்டு பேரும் மாறி மாறி லாவணிக் கச்சேரி பாடிக்கொண்டு மொத்த தமிழ்நாடும் பாழாய் போய்க் கொண்டிருப்பது தானே மிச்சம்.

    ReplyDelete
  35. யார் சுகவாசி என்பதில் போட்டியா...? உண்மையில் இவர்கள் இருவரும் சுகவாசிகளாக இருக்க மக்களாகிய நாம்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  36. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    // அனுபவமிக்க பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்பது அவசியம்.i //

    அரசியலில் அனுபவமிக்க பெரியோர்களே என்றாலும் அவர்கள் எதிர்க் கட்சியில் இருந்தால் போட்டியாளர்களாகவே ( RIVALS ) கருதப்படுவர். கருத்துரை தந்த கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி >வேகநரி said...

    // சாய்வுநாற்காலியில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஒருவர் மாதிரி தான் அம்மாவும். தமிழகத்தில் பெரியவங்களை நேரிலேயே இழிவாக பேசும் அவலம் தாராளமா நடைபெறுகிறது.வேறு நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தான் இந்த இழிநிலை தெளிவாக தெரிகிறது. //

    இந்த அவலம் எல்லா நாடுகளிலும்தான் இருக்கிறது. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // நீங்க கூட ஏன் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை என்று கேட்டுருந்தீங்க. //

    நீங்கள் ஏற்கனவே நிறைய கட்டுரைகளில் அரசியல் சம்பந்தமாக எழுதிக் கொண்டு இருப்பதால், நான் இதுமாதிரி கேட்டேனா என்று நினைவில் இல்லை.

    //இவங்க ரெண்டு பேரும் மாறி மாறி லாவணிக் கச்சேரி பாடிக்கொண்டு மொத்த தமிழ்நாடும் பாழாய் போய்க் கொண்டிருப்பது தானே மிச்சம். //

    நன்றாகச் சொன்னீர்கள். இரண்டு தலைமுறையாக நாம் இந்த கச்சேரியைப் பார்க்க வேண்டிய அவலம் நமக்கு. கருத்துரை தந்த சகோதரர் திருப்பூர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > பால கணேஷ் said...

    // யார் சுகவாசி என்பதில் போட்டியா...? உண்மையில் இவர்கள் இருவரும் சுகவாசிகளாக இருக்க மக்களாகிய நாம்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். //

    உண்மைதான் அய்யா! நீண்ட இடைவெளிக்குப் பின் வந்து கருத்துரை தந்த சகோதரர் பால கணேஷ் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  40. இந்த அவலம் எல்லா நாடுகளிலும்தான் இருக்கிறது. அப்படியென்கிறீர்கள்!
    சொந்த வீட்டுகளிலேயே ஏய் கிழவி ஏய் கிழடு என்று சாதாரணமா அழைப்பதையும் பஸ் நடத்துனர்களால் பெரியவர்கள் சாதாரணமா அவமானபடுத்தபடுவதையும் நான் வேற்று நாட்டில் பார்த்ததில்லை.வயதானவர்களுக்கு பஸ்நடத்துனர்கள் உதவி செய்ததை வேற்று நாட்டில் பார்த்திருக்கேன்.

    ReplyDelete
  41. மறுமொழி >வேகநரி said... ( 2 )
    // இந்த அவலம் எல்லா நாடுகளிலும்தான் இருக்கிறது. அப்படியென்கிறீர்கள்! சொந்த வீட்டுகளிலேயே ஏய் கிழவி ஏய் கிழடு என்று சாதாரணமா அழைப்பதையும் பஸ் நடத்துனர்களால் பெரியவர்கள் சாதாரணமா அவமானபடுத்தபடுவதையும் நான் வேற்று நாட்டில் பார்த்ததில்லை.வயதானவர்களுக்கு பஸ்நடத்துனர்கள் உதவி செய்ததை வேற்று நாட்டில் பார்த்திருக்கேன். //

    மீண்டும் வந்து எனது தவற்றினைச் சுட்டிக் காட்டிய வேகநரி அவர்களுக்கு நன்றி! சமாளிக்க விரும்பவில்லை. மன்னிக்கவும்!

    வெளி வேலைகள், மின்வெட்டு காரணமாக உடன் பதில் அளிக்க இயலவில்லை. தாமதம் ஆகி விட்டது.

    ReplyDelete
  42. நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை எதுமில்லை ஐயா.
    மற்றவங்களோடு ஒப்பிட்டு பார்த்தபோ மனதை பாதித்ததை,இங்கே நிறைய திருந்தணும் என்று விரும்பியதை தெரிவித்தேன். நன்றி.

    ReplyDelete
  43. மறுமொழி > வேகநரி said... (3)

    // நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவை எதுமில்லை ஐயா. மற்றவங்களோடு ஒப்பிட்டு பார்த்தபோ மனதை பாதித்ததை,இங்கே நிறைய திருந்தணும் என்று விரும்பியதை தெரிவித்தேன். நன்றி. //

    கருத்துரை தந்த வேகநரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  44. அரசியல் ரொம்பவே மோசமாகி விட்டது. :(

    ReplyDelete
  45. சௌகரியத்துக்கு ஏற்ப சில விஷ்யங்களை வேண்டுமென்றே மறப்பது போல் இருப்பதே செலெக்டிவ் அம்னீஷியா என்று தற்காலப் பொருள் என நினைக்கிறேன் சினிமாவின் பாதிப்பால் இப்போது அடிக்கடி கேட்கும் ஒரு சொற்தொடர் ; என்ன லூசா நீ’

    ReplyDelete
  46. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // அரசியல் ரொம்பவே மோசமாகி விட்டது. :( //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! நம்மைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது அவர்களைவிட நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  47. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // சௌகரியத்துக்கு ஏற்ப சில விஷ்யங்களை வேண்டுமென்றே மறப்பது போல் இருப்பதே செலெக்டிவ் அம்னீஷியா என்று தற்காலப் பொருள் என நினைக்கிறேன் //

    சரியாகச் சொன்னீர்கள். அம்மையார் அத்வானியைத் தாக்கியது இந்த அர்த்ததில்தான்.

    // சினிமாவின் பாதிப்பால் இப்போது அடிக்கடி கேட்கும் ஒரு சொற்தொடர் ; என்ன லூசா நீ’ //

    சரிதான்!


    ReplyDelete
  48. சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் முதியோரைப் பராமரிப்பதில் இந்தியா 69 இடத்தில் உள்ளது. பக்கத்து இலங்கை 43 இடத்தில் உள்ளது. ஈராக் 87 வது, பாகிஸ்தான் 91வது இடத்தில் நிற்பதோடு நினைச்சு திருப்திபட்டுக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  49. மறுமொழி > வேகநரி said...

    வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete