நாங்கள் இருப்பது புறநகர்ப் பகுதி. இங்கு காலிமனைகள் அதிகம். எனவே அங்குள்ள
புதர்களிலிருந்து பாம்புகள் இரை தேடி வெளியே வரும்போது அருகிலுள்ள வீடுகளுக்கும்
வந்துவிடும். எனவே எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அவரவர் வீட்டைச் சுற்றியும், வீட்டினுள்
காலி இடத்திலுள்ள புல்,பூண்டு செடிகளையும் குப்பைகளையும் அடிக்கடி அகற்றுவது
வழக்கம்.
(மேலே உள்ள படங்களைப் பெரிதாகப் பார்க்க இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK)
மேலே உள்ள ஒருநாள் சம்பளம் என்பது சென்னை போன்ற மாநகரங்களுக்கு (METROPOLITON) பொருந்தும். மற்ற சிறிய நகரங்களுக்கும், ஊர்களுக்கும் தக்கவாறு பார்த்துக் கொள்ளவும். வீட்டு பணியாளர்களுக்கான (DOMESTIC WORKERS) ஊதியம், அரசால் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
மேலும் சில தகவல்கள்:
முன்பெல்லாம் நாங்களே சுத்தம் செய்து விடுவோம். இப்போது இதற்கென்றே அக்கம்
பக்கத்து ஊர்களிலிருந்து வேலை கேட்டு ஆட்கள் வருவதால் அவர்களை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். முன்னரே அதற்கு
கூலி எவ்வளவு என்று பேசிக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் 200 ரூபாய்தான்.
தொடர்ச்சியாக ஒரு பெரியவர் வந்தார். 200 ரூபாய்க்கு பேசியிருந்தாலும் அவருக்கு கூட
50 ரூபாய் போட்டு கொடுப்பதும், பொங்கல் தினத்தன்று வேட்டி , துண்டு எடுத்துக்
கொடுப்பதுமாக இருந்தேன். தீபாவளி காசும் வாங்கிக் கொள்வார். மேலும் அடிக்கடி
“அட்வான்ஸ்” கேட்டு கொண்டே இருப்பார். அவர் திடீரென்று கூலியாக 500 கொடுத்தால்தான் ஆச்சு என்று ஒற்றைக் காலில்
நின்றார். எங்கள் வீட்டு காலி இடத்தைச் சுத்தம் செய்ய மிஞ்சிப் போனால் இரண்டு
அல்லது மூன்று மணி நேரம்தான் ஆகும். நான் இது அதிகம் என்றேன். அவர் கடைசிவரை ஒத்துக்
கொள்ளவில்லை. எனவே அவரை அனுப்பி விட்டு வேலை தேடி வந்த இன்னொருவரை அமர்த்திக்
கொண்டோம். 200 + 50 வாங்கிக் கொள்கிறார். நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவதில்லை.
அதற்காக இந்த குணத்தை வைத்து நம்மை சிலர் ஏமாற்ற முயல்வதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இதுபோல் நாம் நமது வீட்டில் நடக்கும் மராமத்து வேலைகளுக்கு மரம் வெட்டுபவர்,
தேங்காய் பறிப்பவர், எலெக்ட்ரீசியன், குழாய் ரிப்பேர்காரர், கார்பெண்டர்,
பெயிண்டர், கொத்தனார், சித்தாள் போன்றவர்களை அழைக்கிறோம். எல்லோரும் இஷ்டத்திற்கு
ஆளுக்குத் தகுந்தாற் போல சம்பளம் கேட்கிறார்கள். நாம் உத்தேசமாக யோசித்து கொடுக்க
வேண்டி இருக்கிறது. இதிலும் சில ஆட்கள் வாங்கும் பொருட்களிலும், செய்யும் வேலையிலும்
செய்யும் கண்கட்டு வித்தைகள் தனி. நம்பிக்கைதான் வைக்க வேண்டும்.மேலும் இப்போதெல்லாம் பணியாளர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் எந்த வேலைக்கும் வருகிறார்கள். ஒரு வேலைக்கு இவ்வளவு எனறு பேசிக் கொள்கிறார்கள்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) எனப்படும் நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளைக்கான சம்பளம் முன்பு 133 ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.214.ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஊருக்கு ஊர் வேறுபடும். (தகவல் Wikipedia ) இதுபோல் மற்ற வேலைகளுக்கும் ஒருநாள் சம்பளம் எவ்வளவு என்று அரசு ஏதேனும் நிர்ணயித்து இருக்கிறதா என்று கூகிளில் (GOOGLE) தேடினேன். அப்போது கிடைத்த சென்னை நகரம் – ஒருநாள் சம்பளம் பற்றிய தமிழ்நாடு அரசு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) எனப்படும் நூறுநாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளைக்கான சம்பளம் முன்பு 133 ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.214.ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஊருக்கு ஊர் வேறுபடும். (தகவல் Wikipedia ) இதுபோல் மற்ற வேலைகளுக்கும் ஒருநாள் சம்பளம் எவ்வளவு என்று அரசு ஏதேனும் நிர்ணயித்து இருக்கிறதா என்று கூகிளில் (GOOGLE) தேடினேன். அப்போது கிடைத்த சென்னை நகரம் – ஒருநாள் சம்பளம் பற்றிய தமிழ்நாடு அரசு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
(மேலே உள்ள படங்களைப் பெரிதாகப் பார்க்க இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK)
மேலே உள்ள ஒருநாள் சம்பளம் என்பது சென்னை போன்ற மாநகரங்களுக்கு (METROPOLITON) பொருந்தும். மற்ற சிறிய நகரங்களுக்கும், ஊர்களுக்கும் தக்கவாறு பார்த்துக் கொள்ளவும். வீட்டு பணியாளர்களுக்கான (DOMESTIC WORKERS) ஊதியம், அரசால் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
மேலும் சில தகவல்கள்:
Tamil Nadu Minimum Wages w.e.f April 1, 2014 to March 31,
2015
Sr. No.
|
Scheduled Employment
|
Basic Minimum Wages
|
V.D.A.
|
Total Minimum Wages
|
In Rupees Per Day
|
||||
1
|
Agarbathi Industry
|
69.73
|
101.23
|
170.96
|
2
|
Agriculture and works ancillary to Agriculture
|
|||
a) Men Workers for 6 hr
|
100.00
|
0.00
|
100.00
|
|
b) Women Workers for 5 hr
|
85.00
|
0.00
|
85.00
|
|
3
|
Aerated Water Manufactory
|
70.00
|
117.50
|
187.50
|
4
|
Appalam Manufactory
|
93.42
|
136.12
|
229.54
|
5
|
Automobile Workshop
|
109.15
|
138.46
|
247.61
|
6
|
Auto Rickshaw and Taxi
|
138.50
|
101.84
|
240.34
|
7
|
Bakeries and Biscuits Manufactory
|
78.00
|
108.90
|
186.90
|
8
|
Bricks and Tiles Manufactory
|
74.00
|
102.85
|
176.85
|
9
|
Carpentry and Black Smith
|
127.00
|
179.19
|
306.19
|
10
|
Cashew Industry
|
132.50
|
15.20
|
147.70
|
11
|
Chemical and Fertilizers Industry
|
87.42
|
139.61
|
227.03
|
12
|
Cinema Industry
|
128.73
|
188.50
|
317.23
|
13
|
Coaching Academincs that is to say tutorial colleges,
Technical Institudes, Primary Schools, run on commercial lines without Govt.
grant other than those run by Govt. and local bodies as the case may be.
|
51.92
|
67.65
|
119.57
|
14
|
Coconut Peeling Industry
|
79.00
|
114.95
|
193.95
|
15
|
Coir Manufactory
|
90.00
|
121.46
|
211.46
|
16
|
Coffee Curing Works
|
73.00
|
102.85
|
175.85
|
17
|
Construction or Maintenance of Road and in Building
Operations
|
117.00
|
145.20
|
262.20
|
18
|
Cotton Ginning , Pressing and Cotton Waste Industry
|
91.00
|
136.11
|
227.11
|
19
|
Distribution of Liquid Petroleum Gas Cylinders
|
82.69
|
121.00
|
203.69
|
20
|
Electronics Industry
|
91.00
|
132.65
|
223.65
|
21
|
Fire Works Manufactory
|
31.50
|
72.35
|
103.85
|
22
|
Food Processing Industry
|
86.50
|
110.07
|
196.57
|
23
|
Footwear Making Industries
|
72.23
|
49.68
|
121.91
|
24
|
Employment in Forestry
|
39.00
|
151.25
|
190.25
|
25
|
General Engineering & Fabrication Industry
|
104.00
|
160.57
|
264.57
|
26
|
Gold and Silver Articles Manufactory
|
131.00
|
187.55
|
318.55
|
27
|
Granite Industry
|
130.26
|
190.80
|
321.06
|
28
|
Handloom Silk Weaving Industry
|
108.90
|
||
29
|
Gunny Industry
|
163.35
|
||
30
|
Hotel and Restaurants
|
98.85
|
166.38
|
265.23
|
31
|
Hospitals and Nursing Homes
|
107.19
|
136.11
|
243.30
|
32
|
Laundries and Washing Cloths (including Wollen)
|
140.50
|
205.70
|
346.20
|
33
|
Leather Goods Manufactory
|
72.23
|
49.68
|
121.91
|
34
|
Loading and Unloading Operations in markets, shandies
(fairs and market place) and other like places.
|
85.00
|
102.85
|
187.85
|
35
|
Match Manufacturing
|
68.50
|
96.80
|
165.30
|
36
|
Mat Weaving and Basket Making
|
75.00
|
90.75
|
165.75
|
37
|
Medical & Sales representative
|
129.73
|
165.23
|
294.96
|
38
|
Motion Picture Industry
|
103.07
|
150.07
|
253.14
|
39
|
Neera Tapping
|
154.00
|
193.60
|
347.60
|
40
|
Any oil Mill
|
83.00
|
109.38
|
192.38
|
41
|
(a) Paper and other incidental processes connected with
machine made paper Industry
|
87.27
|
110.53
|
197.80
|
(b) Paper and other incidental Processes connected with
Hand Made Paper
|
83.42
|
105.88
|
189.30
|
|
42
|
Plantation
|
|||
a) Tea
|
78.00
|
50.25
|
128.25
|
|
b) Coffee
|
77.00
|
50.25
|
127.25
|
|
c) Rubber
|
81.50
|
50.25
|
131.75
|
|
43
|
Power Loom Industry
|
29.00
|
124.50
|
153.50
|
44
|
Polythene Processing Foam Item and Plastic Manufactory
|
47.12
|
137.30
|
184.42
|
45
|
Printing Presses
|
72.81
|
105.88
|
178.69
|
46
|
Public Motor Transport
|
137.30
|
200.11
|
337.41
|
47
|
Rice Mill, Flour Mills and Dhall mills
|
88.50
|
127.05
|
215.55
|
48
|
Sago Industry
|
94.50
|
100.54
|
195.04
|
49
|
Salt Pans
|
89.00
|
89.10
|
178.10
|
50
|
Sea Food processing Industry
|
79.92
|
83.19
|
163.11
|
51
|
Security Guards
|
90.35
|
93.31
|
183.66
|
52
|
Sericulture Industry
|
95.00
|
99.00
|
194.00
|
53
|
Shops and Commercial Establishments
|
78.88
|
81.88
|
160.76
|
54
|
Silk Twisting Industry
|
97.00
|
99.00
|
196.00
|
55
|
Soap Manufactory
|
122.00
|
133.27
|
255.27
|
56
|
Synthetic Gem Cutting Industry
|
Piece Rate
|
||
57
|
Tailoring Industry
|
70.19
|
72.35
|
142.54
|
58
|
Textile mills (Apprentice)
|
110.00
|
113.85
|
223.85
|
59
|
Timber Industry
|
132.50
|
133.65
|
266.15
|
60
|
Tin Container Manufactory
|
91.00
|
133.11
|
224.11
|
61
|
Tobacco Manufactory
|
|||
(a) Beedi making (other than beedi rolling)
|
96.15
|
116.34
|
212.49
|
|
(b) Beedi Rolling (per 1000 bidies)
|
37.20
|
62.10
|
99.30
|
|
(c) Scented and chewing Tobacco
|
67.50
|
96.80
|
164.30
|
|
(d) Snuff Industry
|
78.00
|
108.90
|
186.90
|
|
62
|
Guaranted Time Rates of Wages Tobacco (including Beedi
making) Manufactory
|
(Guaranted Time Rates)
|
||
63
|
Vessels Utensils Manufactory
|
72.00
|
102.85
|
174.85
|
64
|
Tanneries and Leather Goods Manufactory
|
57.00
|
69.48
|
126.48
|
உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள் ஐயா, நன்றி.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
வணக்கம்
ReplyDeleteஐயா.
விரிவான தகவலுடன் சிறப்பான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதில் கண்டுள்ள படி கூலி கொடுத்தால் யார் வாங்கிக் கொள்வார்கள் ?
ReplyDeleteசமீபத்தில் செப்டிக் டாங்கில் வேர் நுழைந்து அடைப்பு ஆனதால் ,அதை சரிசெய்தவர் கேட்ட கூலி 1500ரூபாய் ..ஒருவர் மட்டுமே ரெண்டு மணி நேரவேலை ஒருநூறு ரூபாய் தப்பைக்கு செலவு செய்திருப்பார் அவர் ,கூலி ரொம்ப அதிகம் என்று பேரம் பேசி 900 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றார் !ஆசிட் ,பினாயில் செலவும் என்னுடையுதே,,,ஒரு வாரத்தில் மீண்டும் அதே பிரச்சினை ,500ரூபாய் மீண்டும் செலவு !
நம் அவசரத்துக்கு ஏற்றாற்போல் அதிகமாகவே கூலி கேட்கிறார்கள் !
த ம 1
அருமையான தகவல்கள். இருப்பினும் சில அவசர அவசிய வேலைகளுக்கு ஆட்களே கிடைப்பது இல்லை. எவ்வளவு பணம் செலவானாலும் ஆள் வந்தால் போதும், வேலை நடந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது.
ReplyDeleteசமீபத்தில் என் வீட்டின் ஒரு குறிப்பிட்ட ரூம் கதவு தாழ்ப்பாள் ரிப்பேர் ஆகி தானே பூட்டிக்கொண்டு விட்டது. எந்த சாவி போட்டும் திறக்க இயலவில்லை. உள்ளே இருவர் மாட்டிக்கொண்டிருந்தனர். இரவு மணி 10 ஐ நெருங்க இருந்தது. A to Z Repair Service என்ற என் நண்பருக்கு [திருவானைக்கோயிலில் இருப்பவர்] போன் செய்தேன். நல்லவேளையாக 10.30க்குள் வருகைம் தந்தார். அவரை ஹாரத்தி சுற்றி வரவேற்கும்படி ஆகிவிட்டது.
அவர் கையில் ஏதோ ஒரு TOOL யை வைத்து லேஸாக நுழைத்ததும் கதவு திறந்துவிட்டது. 1 நிமிட வேலை தான். நானே அவருக்கு ரூ.100 கொடுத்து அனுப்பினேன். இதுபோல குழாய் புட்டுக்கொண்டு கொட்டினால் நீர் வீணாகும். அதுவும் சமையல் அறைக்குழாய் என்றால் வீடு பூராவும் வெள்ளமாகி, பொருட்களும் சேதமாகும். இந்த வேலைகளுக்கெல்லாம் உடனடியாக ஆள் வரவேண்டும். அவர்கள் வந்தால் போதும் பிரச்சனை தீர்ந்தால் போதும் என ஆகிவிடுகிறது. என்ன செய்ய ?
அன்புடன் VGK
உண்மையில் இதுவரை அறியாத தகவல்தான். அதை தேடி எடுத்து வெளியிட்டது பாராட்டத்தக்கது.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் ஐயா.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டு இருப்பதெல்லாம் ஒரு நாள் அதாவது குறைந்த பட்சம் ஐந்து மணி நேர சம்பளம்.
ReplyDeleteஆனால், பல வேலைகளுக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகாது என்றாலும்,
கான்ட்ராக்ட் அடிப்படையில் கூலி கேட்கப்படுவதாலும், வேலையின்
அவசரத்தன்மை உணர்ந்து தான் சம்பளம் கேட்கப்படுகிறது.
பாத் ரூமில் எட்டு டைல்களை எடுப்பதற்கு 1500 ரூபாய் கேட்கிறார்கள்.
அரை மணி நேரம் தான் என்றாலும்
கஷ்டமான வேலையாம்.
அது சரி, இந்த தேரோட்டி, பார்த்தசாரதி ,
பதினெட்டு நாள் அருச்சனனுக்கு தேர் ஒட்டினாரே
என்ன சம்பளம் வாங்கியிருப்பார் ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
மறுமொழி > killergee said...
ReplyDelete// உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள் ஐயா, நன்றி.//
தேவகோட்டை Killergee அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > ரூபன் said...
ReplyDelete// வணக்கம் ஐயா. விரிவான தகவலுடன் சிறப்பான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா//
வணக்கம்! கவிஞர் ரூபன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDeleteசகோதரர் பகவான்ஜீ .K.A அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
// இதில் கண்டுள்ள படி கூலி கொடுத்தால் யார் வாங்கிக் கொள்வார்கள் ? //
யாரும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இது சட்டப்படியான ஒரு அளவுகோல். அவ்வளவுதான். ஒரு தொழிலாளியின் தொழில் திறமைக்கு பணம் என்றுமே சிறந்த அளவுகோல் கிடையாது. உதாரணத்திற்கு ஒரு சட்டைக்கு நாம் கொடுக்கும் பணத்தை வைத்து பருத்தியை விதைத்து, விளைந்த பின் பஞ்சை எடுத்து, நூலாக்கி நெய்து சட்டையாக தைத்து விட முடியாது. மனிதாபிமானம்தான் தேவை.
// சமீபத்தில் செப்டிக் டாங்கில் வேர் நுழைந்து அடைப்பு ஆனதால் ,அதை சரிசெய்தவர் கேட்ட கூலி 1500ரூபாய் ..ஒருவர் மட்டுமே ரெண்டு மணி நேரவேலை ஒருநூறு ரூபாய் தப்பைக்கு செலவு செய்திருப்பார் அவர் ,கூலி ரொம்ப அதிகம் என்று பேரம் பேசி 900 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றார் !ஆசிட் ,பினாயில் செலவும் என்னுடையுதே,,,ஒரு வாரத்தில் மீண்டும் அதே பிரச்சினை ,500ரூபாய் மீண்டும் செலவு ! //
செப்டிக் டேங்கிற்குள் போன ஆள் உயிரோடு வந்தானே என்று சந்தோஷம் அடையுங்கள். ஏனெனில் செப்டிக் டேங்க்கை ஆட்களை வைத்து சுத்தம் செய்ய அரசு தடை விதித்துள்ளது. மீண்டும் அதே பிரச்சினை வராமல் தடுக்க, செப்டிக் டேங்க் அருகிலுள்ள மரத்தை வெட்டுங்கள்.
// நம் அவசரத்துக்கு ஏற்றாற்போல் அதிகமாகவே கூலி கேட்கிறார்கள் ! த ம 1 //
உண்மைதான் சகோதரரே! அந்த நேரம் பார்த்து ஆபிசில் லீவு தரமாட்டார்கள். வீட்டில் நம்மை, சரி செய்ய நாம் முயறசிக்காதது போலவே கேள்விமேல் கேள்வி கேட்பார்கள். இந்த ஆட்கள் நமது டென்ஷனை பார்த்து அதிகமாகவே காசு பார்ப்பார்கள்.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்!
// அருமையான தகவல்கள். இருப்பினும் சில அவசர அவசிய வேலைகளுக்கு ஆட்களே கிடைப்பது இல்லை. எவ்வளவு பணம் செலவானாலும் ஆள் வந்தால் போதும், வேலை நடந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது. //
உண்மைதான் அய்யா! சில வேலைகளுக்கு அவை முடிந்தால் போதும் என்று ஆகி விடுகிறது. பணத்தைப் பார்க்கக் கூடாது.
//சமீபத்தில் என் வீட்டின் ஒரு குறிப்பிட்ட ரூம் கதவு தாழ்ப்பாள் ரிப்பேர் ஆகி தானே பூட்டிக்கொண்டு விட்டது. எந்த சாவி போட்டும் திறக்க இயலவில்லை. உள்ளே இருவர் மாட்டிக்கொண்டிருந்தனர். இரவு மணி 10 ஐ நெருங்க இருந்தது. A to Z Repair Service என்ற என் நண்பருக்கு [திருவானைக்கோயிலில் இருப்பவர்] போன் செய்தேன். நல்லவேளையாக 10.30க்குள் வருகைம் தந்தார். அவரை ஹாரத்தி சுற்றி வரவேற்கும்படி ஆகிவிட்டது.
அவர் கையில் ஏதோ ஒரு TOOL யை வைத்து லேஸாக நுழைத்ததும் கதவு திறந்துவிட்டது. 1 நிமிட வேலை தான். நானே அவருக்கு ரூ.100 கொடுத்து அனுப்பினேன். இதுபோல குழாய் புட்டுக்கொண்டு கொட்டினால் நீர் வீணாகும். அதுவும் சமையல் அறைக்குழாய் என்றால் வீடு பூராவும் வெள்ளமாகி, பொருட்களும் சேதமாகும். இந்த வேலைகளுக்கெல்லாம் உடனடியாக ஆள் வரவேண்டும். அவர்கள் வந்தால் போதும் பிரச்சனை தீர்ந்தால் போதும் என ஆகிவிடுகிறது. என்ன செய்ய ? //
உங்களுக்கும் இதே பிரச்சினையா? இதுபோல் எங்களுக்கும் ஏற்பட்டது. தானாகவே பூட்டிக் கொண்ட கத்வு. உள்ளே அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த எனது மகள். புறநகர்ப் பகுதி என்பதால் அவசரத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. கதவை உடைத்து விடலாமா என்றுகூட யோசித்தோம். அப்புறம் எனக்குத் தெரிந்த ஹார்டுவேர் கடைக்குச் சென்று விவரம் சொன்னோம். அவர்கள் சொன்னதின் பேரில் ஒரு கார்பெண்டர் வந்தார். அவர் ஒரு சின்ன ஸ்க்ரூ டிரைவர் மூலம் ஏதோ செய்து கதவைத் திறந்து விட்டார்.
தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDelete// உண்மையில் இதுவரை அறியாத தகவல்தான். அதை தேடி எடுத்து வெளியிட்டது பாராட்டத்தக்கது. //
சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமோழி > Ramani S said... (1, 2 )
ReplyDelete// பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
tha.ma 3 //
நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த கவிஞர் அய்யாவுக்கு நன்றி!
மறுமொழி > இல. விக்னேஷ் said...
ReplyDelete// மிகவும் பயனுள்ள தகவல் ஐயா. //
தம்பி சுயம்பு – இல.விக்னேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
அரசு நிர்ணயித்துள்ள "விலைப்பட்டியலை"ப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. ஆனானப்பட்ட ஆட்டோவுக்கே நம்மால் அரசு விதித்திருக்கும் தொகையைக் கொடுப்பதில் எவ்வளவு சிரமம்! திடீர் வேலைகளுக்காக அழைக்கப்படும் நபர்களுக்கு அதிக தொகை கொடுத்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை.
ReplyDeletethamizh ilango sir,
ReplyDeletewww.paycheck.in
தளத்தினை சுட்டியாக கொடுத்து முன்னர் விவசாய கூலி குறித்து பதிவிட்டுள்ளேன், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ஒரு குறைந்த பட்ச சம்பள அளவே ,அதனால் அதுவே தான் சம்பள எல்லை எனஎடுத்துக்கொள்ளக்கூடாது.
//விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ
பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)
விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,
சுட்டி:
அரசு சம்பளநிர்ணயம்//
http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html
இத்தள சம்பள விவரங்களை ஒப்பிட்டு கணக்கிட பயன்ப்படுத்திக்கொள்ளலாம், இயல்பில் அச்சம்பளத்திற்கு யாரும் வேலை செய்ய முன் வர மாட்டார்கள் தொழிற்சாலை போன்ற இடங்களில் வேண்டுமானால் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்க உதவலாம்
(பின்னூட்டத்திற்கு என்ன கட்டுப்பாடுகள் என்றே புரியாமல் ,பின்னூட்டம் போட வேண்டியதாயிருக்கு, வந்த நம்ம கணக்கு,வராட்டி கூகிள் கணக்கு அவ்வ்)
என்னத்தான் அரசு கூலியை நிர்ணயித்தாலும் நம் தேவையைத்தான் முதலில் பார்க்கவேண்டி இருக்கிறது. தங்களைப் போலவே, நானும் முடிந்தவரை நியாயமான கூலியைக் கொடுக்கவே முயற்சிப்பேன். கூலித்தொழிலாளிகளிடம் பேரம் பேசுவதில்லை.
ReplyDeleteமுன்னேறிய வெளிநாடுகளில் கூட இவ்வகை பிரச்ச்னைகள், ஏமாற்றுவேலைகள் உண்டு.வெறுமனே நேரத்தை வளத்திவிட்டு பில்லை நீட்டிவார்கள்.
மறுமொழி > sury Siva said...
ReplyDeleteசுப்பு தாத்தாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// நீங்கள் குறிப்பிட்டு இருப்பதெல்லாம் ஒரு நாள் அதாவது குறைந்த பட்சம் ஐந்து மணி நேர சம்பளம். ஆனால், பல வேலைகளுக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகாது என்றாலும், கான்ட்ராக்ட் அடிப்படையில் கூலி கேட்கப்படுவதாலும், வேலையின் அவசரத்தன்மை உணர்ந்து தான் சம்பளம் கேட்கப்படுகிறது.//
மேலே சொன்ன அட்டவணைப்படி யாரும் சம்பளம் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்தான் அய்யா! நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஒரு தகவலுக்காக மட்டுமே மேலே சொன்ன அரசு ஆணையை வெளியிட்டேன
// பாத் ரூமில் எட்டு டைல்களை எடுப்பதற்கு 1500 ரூபாய் கேட்கிறார்கள். அரை மணி நேரம் தான் என்றாலும் கஷ்டமான வேலையாம். //
ஒன்றுமே செய்ய முடியாது அய்யா! அதற்காக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டு செய்து கொண்டு, நமக்கு நாமே என்று இருக்க முடியாது. ரொம்பவும் நுணுக்கி கணக்கு பார்த்தால் நமது வீடு என்றாலே வேலைக்கு யாரும் வர மாட்டார்கள்.
// அது சரி, இந்த தேரோட்டி, பார்த்தசாரதி , பதினெட்டு நாள் அருச்சனனுக்கு தேர் ஒட்டினாரே என்ன சம்பளம் வாங்கியிருப்பார் ? //
அது மாமா மச்சான் கணக்கு அய்யா! அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும்.
இதுவரை அறியாத தகவல்கள் ஐயா
ReplyDeleteஇப்பதிவிற்கு தாங்கள் எடுத்துக் கொண்ட நேரமும் உழைப்பும்
அதிகம் என்பது தெரிகிறது
நன்றி ஐயா
மறுமொழி > ஸ்கூல் பையன் said...
ReplyDeleteஸ்கூல் பையன் அவர்களின் வருகைக்கு நன்றி!
// அரசு நிர்ணயித்துள்ள "விலைப்பட்டியலை"ப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. ஆனானப்பட்ட ஆட்டோவுக்கே நம்மால் அரசு விதித்திருக்கும் தொகையைக் கொடுப்பதில் எவ்வளவு சிரமம்! திடீர் வேலைகளுக்காக அழைக்கப்படும் நபர்களுக்கு அதிக தொகை கொடுத்தே ஆகவேண்டும். வேறு வழியில்லை. //
அரசு நிர்ணயித்த ஒருநாள் சம்பளப் பட்டியல் என்பது சட்ட்ம் – ஒழுங்கிற்காக மட்டுமே. குறைந்த பட்ச கூலி தரவில்லை என்று கோர்ட்டுக்குப் போனால் இந்த அரசு ஆணை முன்வந்து நிற்கும். ஆனானப்பட்ட ஆட்டோ கட்டணத்தை காம்ரேடுகளே கண்டு கொள்வதில்லை. இது பற்றியும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.
நியாயமான கூலியை முதலில் (உறுதியாக) பேசி முடித்து விட்டால் பிரச்சனை எதுவும் வருவதில்லை...
ReplyDeleteஇந்த தகவல்களை சேமித்துக் கொள்கிறேன்... நன்றி ஐயா...
தகவலுக்கு நன்றி! ஆனால் நடைமுறையில் இந்த சம்பளத்தை சென்னையில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. வீட்டு தோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை செய்ய 500 ரூபாய் கேட்கிறார்கள்.
ReplyDeleteஅன்புடையீர்..
ReplyDeleteஎங்கள் பக்கம் எல்லாம் இதைப் போல சின்னச்சின்ன வேலைகளுக்கு ஆட்கள் வருவதுண்டு.. கேட்டதும் கொடுத்ததும் நியாயமாகவே இருந்தது..
இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு பல சிரமங்கள்..
பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டி -
நியாயமான கூலியை முதலில் பேசி முடித்துக் கொள்வதே நல்லது.
தினக்கூலி விவரங்கள் - இதுவரை அறியாதவை.
தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டமைக்கு நன்றி..
மறுமொழி > வவ்வால் said...
ReplyDeleteவாருங்கள் வவ்வால் சார்! வணக்கம்1
// thamizh ilango sir,
www.paycheck.in தளத்தினை சுட்டியாக கொடுத்து முன்னர் விவசாய கூலி குறித்து பதிவிட்டுள்ளேன், அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ஒரு குறைந்த பட்ச சம்பள அளவே ,அதனால் அதுவே தான் சம்பள எல்லை எனஎடுத்துக்கொள்ளக்கூடாது. //
எங்கள் வங்கியின் தொழிற்சங்க நிர்வாகிகளில் நானும் ஒருவனாக இருந்தவன் என்ற முறையில் குறைந்தபட்ச ஊதியம் பற்றி அரசு ஆணை ஒன்று இருப்பது தெரியும். இந்த கட்டுரைக்காக அந்த அரசு ஆணையைத் தேடி கூகிளில் daily wages in tamilnadu - என்று கொடுத்தபோது வந்த அட்டவணைகள்தான் மேலே உள்ளவை.
- - - -
//விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)
விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,
சுட்டி:
அரசு சம்பளநிர்ணயம்//
http://vovalpaarvai.blogspot.in/2011/12/blog-post_16.html
- - - -
உங்கள் கட்டுரை பற்றிய தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி! உங்கள் கட்டுரைக்கு சென்று பார்த்தேன். நானும் கருத்துரை தந்து இருக்கிறேன். அப்போது கட்டுரையை மேலெழுந்தவாரியாக படித்ததோடு சரி. சுட்டிக்குள் செல்லவில்லை. அதனால் அந்த சுட்டி பற்றி ஞாபகம் இல்லை. மறுபடியும் ஒருமுறை உங்கள் கட்டுரையைப் படிக்க வேண்டும்..
// இத்தள சம்பள விவரங்களை ஒப்பிட்டு கணக்கிட பயன்ப்படுத்திக் கொள்ளலாம், இயல்பில் அச்சம்பளத்திற்கு யாரும் வேலை செய்ய முன் வர மாட்டார்கள் தொழிற்சாலை போன்ற இடங்களில் வேண்டுமானால் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்க உதவலாம் //
உண்மைதான் அய்யா! நடைமுறை அப்படித்தான் உள்ளது. நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன்தான்.
/// (பின்னூட்டத்திற்கு என்ன கட்டுப்பாடுகள் என்றே புரியாமல் ,பின்னூட்டம் போட வேண்டியதாயிருக்கு, வந்த நம்ம கணக்கு,வராட்டி கூகிள் கணக்கு அவ்வ்) ///
பின்னூட்டத்திற்கு என்று கட்டுப்பாடுகள் இல்லை. என்னால் முடிந்த அளவிற்கு மறுமொழி தருவேன். சமாளிப்பு வேலை எல்லாம். என்னிடம் கிடையாது. இருப்பினும் படிப்பவர்கள் வார்த்தைகளைக் கண்டு சங்கடப்படாமல். முகம் சுளிக்காமல் இருந்தால் சரி.
மறுமொழி > குட்டிபிசாசு said...
ReplyDeleteகுட்டிப் பிசாசு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// என்னத்தான் அரசு கூலியை நிர்ணயித்தாலும் நம் தேவையைத்தான் முதலில் பார்க்கவேண்டி இருக்கிறது. தங்களைப் போலவே, நானும் முடிந்தவரை நியாயமான கூலியைக் கொடுக்கவே முயற்சிப்பேன். கூலித்தொழிலாளிகளிடம் பேரம் பேசுவதில்லை. //
நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் ந்ல்லெண்ணம் வாழ்க.
// முன்னேறிய வெளிநாடுகளில் கூட இவ்வகை பிரச்ச்னைகள், ஏமாற்றுவேலைகள் உண்டு.வெறுமனே நேரத்தை வளத்திவிட்டு பில்லை நீட்டிவார்கள். //
தங்களின் தகவலுக்கு நன்றி!
இதிலுள்ளதுபோல் கூலி பேசினாலும் ஒழுங்காய் வந்துக்கொண்டிருப்பவனும் ஓடிவிடுவான். நான் குடியிருக்கும் பகுதியில் கூட வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினம். எங்களுடைய வீட்டில் நானும் என்னுடைய மனைவியுமே சுத்தம் செய்துவிடுகிறோம். வேலையும் ஆச்சு உடலுழைப்பும் ஆச்சு. ஒரு மாத காலமாக எங்கள் வீட்டில் ஒரு மர அலமாரி செய்ய ஆசாரியை அழைத்து அழைத்து அலுத்துப்போனதுதான் மிச்சம். இது இங்கு மட்டுமல்ல என் மூத்த மகள் வாழும் மலேஷியாவிலும் இதே பிரச்சினைதானாம். இங்கு நூறு ரூபாயில் முடியும் வேலைக்கு அங்கு ஆயிரம் கொடுத்தாலும் வருவதற்கு ஆள் இல்லை. இது சர்வதேச பிரச்சினை. நாமே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வேண்டியதுதான்:)
ReplyDeleteமறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// இதுவரை அறியாத தகவல்கள் ஐயா இப்பதிவிற்கு தாங்கள் எடுத்துக் கொண்ட நேரமும் உழைப்பும் அதிகம் என்பது தெரிகிறது நன்றி ஐயா //
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// நியாயமான கூலியை முதலில் (உறுதியாக) பேசி முடித்து விட்டால் பிரச்சனை எதுவும் வருவதில்லை...
இந்த தகவல்களை சேமித்துக் கொள்கிறேன்... நன்றி ஐயா... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி >வே.நடனசபாபதி said...
ReplyDelete// தகவலுக்கு நன்றி! ஆனால் நடைமுறையில் இந்த சம்பளத்தை சென்னையில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. வீட்டு தோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலை செய்ய 500 ரூபாய் கேட்கிறார்கள். //
நடைமுறையில் இந்த அட்டவணையில் உள்ள சம்பளத்தை யாரும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களிடம் நியாயமாக இவ்வளவுதான் ஊதியம் என்று பேசிக் கொள்ள இந்த அரசு ஆணை உதவும்.
அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteதஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// அன்புடையீர்.. எங்கள் பக்கம் எல்லாம் இதைப் போல சின்னச்சின்ன வேலைகளுக்கு ஆட்கள் வருவதுண்டு.. கேட்டதும் கொடுத்ததும் நியாயமாகவே இருந்தது.. இந்த நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு பல சிரமங்கள்.. பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டி - நியாயமான கூலியை முதலில் பேசி முடித்துக் கொள்வதே நல்லது. //
ஆமாம் அய்யா! முதலிலேயே பேசிக் கொள்வது நல்லதுதான்.
// தினக்கூலி விவரங்கள் - இதுவரை அறியாதவை.
தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டமைக்கு நன்றி..//
உங்கள் நன்றிக்கு ஒரு நன்றி!
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDeleteஅய்யா டி.பி.ஆர்.ஜோசப் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
//இதிலுள்ளதுபோல் கூலி பேசினாலும் ஒழுங்காய் வந்துக்கொண்டிருப்பவனும் ஓடிவிடுவான். நான் குடியிருக்கும் பகுதியில் கூட வேலையாட்கள் கிடைப்பது மிகவும் கடினம்.//
ஆமாம் அய்யா! இதில் உள்ளது போல் கூலி கொடுக்க முடியாதுதான்.
// எங்களுடைய வீட்டில் நானும் என்னுடைய மனைவியுமே சுத்தம் செய்துவிடுகிறோம். வேலையும் ஆச்சு உடலுழைப்பும் ஆச்சு. ஒரு மாத காலமாக எங்கள் வீட்டில் ஒரு மர அலமாரி செய்ய ஆசாரியை அழைத்து அழைத்து அலுத்துப்போனதுதான் மிச்சம்.//
எல்லா இடத்திலும் இதே பிரச்சினைதான் அய்யா!
//இது இங்கு மட்டுமல்ல என் மூத்த மகள் வாழும் மலேஷியாவிலும் இதே பிரச்சினைதானாம். இங்கு நூறு ரூபாயில் முடியும் வேலைக்கு அங்கு ஆயிரம் கொடுத்தாலும் வருவதற்கு ஆள் இல்லை. இது சர்வதேச பிரச்சினை. நாமே ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வேண்டியதுதான்://
நமக்கு நாமே எல்லா காரியங்களையும் தப்பு தப்பாக செய்வதைவிட, கொஞ்சம் கூட பணம் போனாலும் பரவாயில்லை என்று, வேலை தெரிந்த வேலைக்காரர்களை தேடிக் கொள்ள வேண்டியதுதான்.
நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவதில்லை. அதற்காக இந்த குணத்தை வைத்து நம்மை சிலர் ஏமாற்ற முயல்வதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
ReplyDeleteசரியான செயல் இது
அறியாத தகவல்களை இந்த பகிர்வின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சார்
கூடியவரை நம் வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கிக் கொள்ள வேண்டும் அதற்காக மரம் ஏறவோ தேங்காய் மாங்காய் பறிக்க முடியுமா. எனக்கு அதுதான் பிரச்சனை. முதியோர்களாய் இருப்பதால் ஐயோ பாவம் என்று வேலை செய்து தருபவர்களும் உண்டு. நாங்கள் வேலை செய்பவரை எங்கள் உறவுபோல் நடத்துவோம் நமக்கும் பல வித அனுபவங்கள் உண்டு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமறுமொழி > r.v.saravanan said...
ReplyDelete// நான் பெரும்பாலும் உழைக்கும் மக்களிடம் பேரம் பேசுவதில்லை. அதற்காக இந்த குணத்தை வைத்து நம்மை சிலர் ஏமாற்ற முயல்வதையும் ஏற்றுக் கொள்வதில்லை. சரியான செயல் இது //
// அறியாத தகவல்களை இந்த பகிர்வின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி சார் //
குடந்தையூர் சகோதரர் R,V.சரவணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வலைப் பக்கம் நான் வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன . விரைவில் வருகிறேன்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// கூடியவரை நம் வேலையை நாமே செய்துகொள்ளப் பழக்கிக் கொள்ள வேண்டும் அதற்காக மரம் ஏறவோ தேங்காய் மாங்காய் பறிக்க முடியுமா. எனக்கு அதுதான் பிரச்சனை. //
உண்மைதான் அய்யா! உங்கள் வீட்டில் இருந்த தென்னை மரம் வெட்டுவதற்கு, மரம் அறுக்கும் வேலையாட்கள் வாங்கிய அதிகக் கூலியைப் பற்றி நீங்களும் ஒரு பதிவு எழுதியது நினைவுக்கு வருகிறது.
//முதியோர்களாய் இருப்பதால் ஐயோ பாவம் என்று வேலை செய்து தருபவர்களும் உண்டு. நாங்கள் வேலை செய்பவரை எங்கள் உறவுபோல் நடத்துவோம் நமக்கும் பல வித அனுபவங்கள் உண்டு. //
அன்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் அய்யா!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDelete// பகிர்வுக்கு நன்றி //
கவிஞருக்கு நன்றி!
சரியான பட்டியல் கிடைத்தால் நமக்கும் கொடுக்கச் சௌகரியமாக இருக்கும். ஆனால் கட்டிடத் தொழிலாளர்களிடம் நிறைய ஏமாந்திருக்கிறோம்.இத்தனைக்கும் வெகுபல வருடங்களாக வழக்கமாகச் செய்பவர். வீட்டு வேலை செய்பவர்களுக்கு உணவும் கொடுத்து நல்ல சம்பளமும் கொடுக்கவேண்டும். நமக்கு இருக்கும் விலைவாசிதானெ அவர்களுக்கும். விரிவானபட்டியல் கொடுத்ததற்கு மிக நன்றி.
ReplyDeleteநயா பைசா...எல்லாம் என்ன கணக்கோ ? ஒரு வேலைக்காக பேசி முடிச்ச பிறகு வேலை செய்ய ஒத்துக்கொண்டவர் இன்னொருவரையும் கூட்டி வந்து வேலை செய்வார். கடைசில கூலி அதிகமா கேட்டு தகரார் செய்வாங்க. எப்பவும் சம்பளம் பேசியதற்குமேல் ஐம்பது ரூவா சேர்த்தே வாங்கி போவர்.
ReplyDeleteநல்ல தகவல்கள்.... பல சமயங்களில் சரியான ஊதியம் எது என்று தெரியாமல் குறைவாகக் கொடுக்கிறோமா இல்லை அதிகமா என குழப்பம் ஏற்படுவதுண்டு. இந்த பட்டியல் நிச்சயம் பலருக்கு உதவும்.
ReplyDeleteமறுமொழி > வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஅம்மா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// சரியான பட்டியல் கிடைத்தால் நமக்கும் கொடுக்கச் சௌகரியமாக இருக்கும். ஆனால் கட்டிடத் தொழிலாளர்களிடம் நிறைய ஏமாந்திருக்கிறோம்.இத்தனைக்கும் வெகுபல வருடங்களாக வழக்கமாகச் செய்பவர். வீட்டு வேலை செய்பவர்களுக்கு உணவும் கொடுத்து நல்ல சம்பளமும் கொடுக்கவேண்டும். நமக்கு இருக்கும் விலைவாசிதானெ அவர்களுக்கும். விரிவானபட்டியல் கொடுத்ததற்கு மிக நன்றி. //
மேலே பதிவில் உள்ள அரசு ஆணையும் பட்டியலும் சொன்னபடி யாரும் ஊதியம் கேட்பது கிடையாது. அதன்படி கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் உள்ள அவர்களது சங்கம் என்ன நிர்ணயித்து உள்ளதோ அந்த சம்பளத்தையோ அதற்கு மேலோதான் கேட்பார்கள். நாம்தான் வேலை தொடங்குவதற்கு முன்னர் பேசிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த பட்டியல் உதவும்.
மறுமொழி > கலாகுமரன் said...
ReplyDeleteசகோதரர் கலாகுமரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// நயா பைசா...எல்லாம் என்ன கணக்கோ ? //
அரசு புள்ளியியல் துறை தரும் தகவல்கள் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை எடுக்கும் முடிவுகள் இவை.. ஒருநாள் சம்பளம் என்பது மாதச சம்பளமாக கணக்கிடும்போது பைசாவை எடுத்து விடுவார்கள்.
//ஒரு வேலைக்காக பேசி முடிச்ச பிறகு வேலை செய்ய ஒத்துக்கொண்டவர் இன்னொருவரையும் கூட்டி வந்து வேலை செய்வார். கடைசில கூலி அதிகமா கேட்டு தகரார் செய்வாங்க. எப்பவும் சம்பளம் பேசியதற்குமேல் ஐம்பது ரூவா சேர்த்தே வாங்கி போவர். //
இதுதான் அய்யா எல்லா இடத்திலும் பிரச்சினையே! ஆளுக்கு தகுந்தமாதிரி அடக்கி வாசிப்பார்கள்.வாடகை வீட்டிற்கு குடிவரும் அரசியல்வாதியாக கவுண்டமணி நடித்த ஜோக்கை நினைத்துப் பார்க்கவும்.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// நல்ல தகவல்கள்.... பல சமயங்களில் சரியான ஊதியம் எது என்று தெரியாமல் குறைவாகக் கொடுக்கிறோமா இல்லை அதிகமா என குழப்பம் ஏற்படுவதுண்டு. இந்த பட்டியல் நிச்சயம் பலருக்கு உதவும். //
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் ஒருவர்தான் இந்த பதிவின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள். நன்றி!
பயன் தரும் பதிவு..
ReplyDeleteதொடர்க
http://www.malartharu.org/2014/01/gold-vein.html
த.ம எட்டு
ReplyDeleteமறுமொழி > Mathu S said...
ReplyDeleteசகோதரர் மலர்த்தரு எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!