புதுக்கோட்டை - கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் “இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறை“ சென்ற வாரம் சனி,ஞயிறு
ஆகிய இரண்டு நாட்களிலும் (17 & 18
- MAY - 2014) காலை 9 மணி முதல் மாலை 5
மணி வரை நடைபெற்றது.
முதல்நாள் (17.05.2014 – சனி)
முனைவர்
நா.அருள்முருகன் (முதன்மைக்கல்வி
அலுவலர், புதுக்கோட்டை)
அவர்கள் தலைமை
ஏற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.பின்னர் கல்லூரி முதல்வர் எஸ்.கலியபெருமாள், கல்லூரித் தலைவர் கவிஞர் திரு ஆர்.எம்.வீ. கதிரேசன், பேராசிரியர் முனைவர்
மு.பழனியப்பன் மற்றும் பேராசிரியர் முனைவர் பா. மதிவாணன் ஆகியோர் உரை
நிகழ்த்தினார்கள்.
(படம் மேலே)இணையத்தமிழ்ப்பயிற்சிப்
பட்டறையில், சர்மாவின்
“எளிய தமிழ்த்தட்டச்சு முறை“ கையேடடை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருன்
வழங்க, ஆசிரியரும்
எழுத்தாளருமான மு.கீதா பெற்றுக்கொள்கிறார். அருகில் முனைவர் பா.மதிவாணன்,
முனைவர் மு.பழனியப்பன், கல்லுரி நிர்வாகிகள் ஆர்.எம்.வீ.கதிரேசன்,பி.கருப்பையா, முதல்வர் கலியபெருமாள், மற்றும் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர். (நன்றி: இந்த புகைப்படம் எடுத்தவர் - டீலக்ஸ் ஞானசேகர் / செய்தியும் படமும் தினமலர்)
(படம்
மேலே) கல்லூரி
முதல்வர் எஸ்.கலியபெருமாள் அவர்கள் உரை
நிகழ்த்துகிறார். அமர்ந்து இருப்பவர்கள் :கல்லூரித் தலைவர் கவிஞர் திரு ஆர்.எம்.வீ.கதிரேசன், முதன்மைக் கல்வி அலுவலர்
நா.அருள்முருகன், பேராசிரியர் முனைவர் பா. மதிவாணன், பேராசிரியர் முனைவர்
மு.பழனியப்பன் ஆகியோர்
(படம் மேலே) பயிற்சி வகுப்பில்
(படம் மேலே) பயிற்சி வகுப்பில்
(படம் மேலே) ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா நன்றி கூறுகிறார்
இரண்டாம் நாள் (18.05.2014 – ஞாயிறு)
இரண்டாம் நாள் பயிற்சிவகுப்பு
முதல்நாளைப் போலவே கலகல்ப்பாகத் தொடங்கியது.
(படம் மேலே) அமர்ந்து இருப்பவர்கள்: முனைவர் B. ஜம்புலிங்கம், திண்டுக்கல் தனபாலன், மூங்கில்காற்று டி.என்.முரளிதரன்,
தி.தமிழ் இளங்கோ, நா.முத்துநிலவன் – நிற்பவர்கள்: குருநாத சுந்தரம், கரந்தை ஜெயக்குமார், மகா சுந்தர்
(படம் மேலே) அமர்ந்து இருப்பவர்கள்: முனைவர்.B. ஜம்புலிங்கம், திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன்,
அ. பாண்டியன், நா.முத்துநிலவன், கஸ்தூரி ரங்கன், மதி – நிற்பவர்கள்: குருநாத சுந்தரம்,
கரந்தை ஜெயக்குமார், மகா சுந்தர், மு.கீதா,
மாலதி,பானுமதி
(படம் மேலே) ”ராசராசன் பெருவழி” என்ற தனது ஆய்வுக்
கட்டுரை பற்றிய விளக்கத்தை முனைவர் நா.அருள்முருகன் (முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை) அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
(படம் மேலே) இரட்டைக்குழல் துப்பாக்கியாக மூங்கில் காற்று
டி.என்.முரளிதரன், திண்டுக்கல் தனபாலன் இருவரும் பயிற்சி தருகின்றனர்.
அன்புடையீர்..
ReplyDeleteநாமும் நேரில் கலந்து கொண்டதைப் போன்று இருக்கின்றது. தினமும் பல தளங்களில் காணும் நண்பர்களை ஒன்றாகக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இனிய பதிவு. வாழ்க நலம்!..
அருமையான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇந்த ஒன்றுகூடலானது ஒரு குடும்ப நிகழ்வுபோல் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது
ReplyDeleteஅனைவரையும் நேரில் கண்டது போல் ஒரு மனத் திருப்த்தி கிட்டியது தங்களின்
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .
அருமையான படங்களுடன்
ReplyDeleteவிளக்கத்துடன் பதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha,ma 2
ReplyDeleteஇணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளாவிடினும், கலந்துகொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்ததும். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்களுடன் அசத்தி விட்டீர்கள்... உங்கள் புகைப்பட ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன் ஐயா...
ReplyDeleteஐயா தினத்தந்தியில் வருமே...“இந்தப்படத்திற்கு வசனம் தேவையில்லை”
ReplyDeleteஅதுபோல கட்டடம் முதற்கொண்டு, அனேகமாக எல்லாருடைய முகங்களும் தெரிவது போல படம் எடுத்துத் தந்துவிட்டீர்கள்... திருச்சியிலிருந்து வந்து பயிற்சிமுகாமில் கலக்கிய உங்களின் சுறுசுறுப்பு இங்குள்ள எல்லாராலும் கவனிக்கப்பட்டுள்ளது அய்யா. வருகைக்கும் வரைவுக்கும் இரட்டை நன்றிகள் அய்யா. எனது வலையிலும் இதனை மேற்கோளிடுகிறேன். மீண்டும் நன்றி.
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள்
ReplyDeleteஉண்மைதான்
புகைப்படங்களுக்கு நன்றி..
வாழ்த்துக்கள்
அப்புறம்
(பெயர் நினைவில் இல்லை = மதி)
நல்ல படங்கள். திருச்சியில் இருந்தபோதும் இங்கே வந்து கலந்து கொள்ள முடியவில்லை......
ReplyDeleteசிறப்பான பயிற்சிப் பட்டறை நடத்திய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// அன்புடையீர்.. நாமும் நேரில் கலந்து கொண்டதைப் போன்று இருக்கின்றது. தினமும் பல தளங்களில் காணும் நண்பர்களை ஒன்றாகக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. //
ஆமாம் அய்யா! வலைப்பதிவின் திரையில் மட்டுமே உரையாடிய நண்பர்களை நேரில் சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
//இனிய பதிவு. வாழ்க நலம்!..//
கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// அருமையான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். //
அய்யா V.G.K அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...
ReplyDelete// இந்த ஒன்றுகூடலானது ஒரு குடும்ப நிகழ்வுபோல் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது அனைவரையும் நேரில் கண்டது போல் ஒரு மனத் திருப்த்தி கிட்டியது தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா //
சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > Ramani S said... ( 1,2)
ReplyDelete//அருமையான படங்களுடன் விளக்கத்துடன் பதிவினைத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //
கவிஞர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளாவிடினும், கலந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்ததும். பகிர்ந்தமைக்கு நன்றி! //
அய்யா வே.நடனசபாபதி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// அருமையான படங்களுடன் அசத்தி விட்டீர்கள்... உங்கள் புகைப்பட ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன் ஐயா... //
நீங்களும் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களும் வருகிறீர்கள் என்ற செய்தி கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன் அய்யா! தங்கள் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > நா.முத்துநிலவன் said...
ReplyDelete// ஐயா தினத்தந்தியில் வருமே...“இந்தப்படத்திற்கு வசனம் தேவையில்லை” அதுபோல கட்டடம் முதற்கொண்டு, அனேகமாக எல்லாருடைய முகங்களும் தெரிவது போல படம் எடுத்துத் தந்துவிட்டீர்கள்... திருச்சியிலிருந்து வந்து பயிற்சிமுகாமில் கலக்கிய உங்களின் சுறுசுறுப்பு இங்குள்ள எல்லாராலும் கவனிக்கப்பட்டுள்ளது அய்யா. வருகைக்கும் வரைவுக்கும் இரட்டை நன்றிகள் அய்யா. எனது வலையிலும் இதனை மேற்கோளிடுகிறேன். மீண்டும் நன்றி. //
புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்புற நடத்திய உங்களுக்கு நன்றி! உங்களோடு எனக்கு அதிகம் தொடர்பு இல்லையென்ற போதிலும் விருந்தினனாக வந்த என்னை உங்களில் ஒருவனாகவே எண்ணி பழகிய உங்கள் அனைவரது நட்பும் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வலையில் எனது பதிவை தாங்கள் மேற்கோள் இடுவதற்கு எனது நன்றி!
மறுமொழி > Mathu S said...
ReplyDelete// ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள்
உண்மைதான் புகைப்படங்களுக்கு நன்றி..வாழ்த்துக்கள்//
சகோதரருக்கு நன்றி!
// அப்புறம் (பெயர் நினைவில் இல்லை = மதி) //
பதிவினில் சரி செய்து பெயரினைச் சேர்த்து விட்டேன். தகவலுக்கு நன்றி!
நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
ReplyDeleteஇந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
நிகழ்வை நடத்தியோர்
நிகழ்வின் பங்காளிகள் என
எல்லோருக்கும் நன்றிகள்!
நிழற்படங்களின் வழியே நாங்களும் கலந்துகொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது அன்பரே..
ReplyDeleteதொடர்க தங்கள் பணி. வாழ்த்துக்கள்.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// நல்ல படங்கள். திருச்சியில் இருந்தபோதும் இங்கே வந்து கலந்து கொள்ள முடியவில்லை...... சிறப்பான பயிற்சிப் பட்டறை நடத்திய நண்பர்களுக்கும் வாழ்த்துகள். //
சகோதரர் வெங்கட் நாகராஜ் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
மறுமொழி > Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteநிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
நிகழ்வை நடத்தியோர்
நிகழ்வின் பங்காளிகள் என
எல்லோருக்கும் நன்றிகள்!
-----
சகோதரர் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...
ReplyDelete// நிழற்படங்களின் வழியே நாங்களும் கலந்துகொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது அன்பரே.. தொடர்க தங்கள் பணி. வாழ்த்துக்கள். //
பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி!
அன்பின் ஐயாவிற்கு வணக்கம்
ReplyDeleteதங்களை நேரில் கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி ஐயா. தங்களின் எளிமை குணமும் குழந்தை மனமும் அனைவரையும் கவர்ந்தது. தங்களின் புகைப்படம் ஆர்வம் கண்டு கூடுதல் மகிழ்ச்சி. பயிற்சி அனைவருக்கும் உதவியதும், இரு நாட்களும் நண்பர்களோடு இணைந்து பழகியதும் என்றும் மறக்க முடியாத தருணமாகி விட்டது. இப்பயிற்சியை ஒருங்கிணைத்த முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க ஐயா.
புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறையை
ReplyDeleteசிறப்புற நடத்திய மைக்கு வாழ்த்துகள்..பாராட்டுகள்.!
நல்ல பணி. ஊரில் இருந்தால் நிச்சயம் கலந்துகொண்டிருந்திருப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி >அ. பாண்டியன் said...
ReplyDelete// அன்பின் ஐயாவிற்கு வணக்கம் தங்களை நேரில் கண்டு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி ஐயா. தங்களின் எளிமை குணமும் குழந்தை மனமும் அனைவரையும் கவர்ந்தது. தங்களின் புகைப்படம் ஆர்வம் கண்டு கூடுதல் மகிழ்ச்சி. பயிற்சி அனைவருக்கும் உதவியதும், இரு நாட்களும் நண்பர்களோடு இணைந்து பழகியதும் என்றும் மறக்க முடியாத தருணமாகி விட்டது. இப்பயிற்சியை ஒருங்கிணைத்த முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க ஐயா. //
தம்பி மணவை அ.பாண்டியன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete//புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறையை சிறப்புற நடத்தியமைக்கு வாழ்த்துகள்..பாராட்டுகள்.! //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி >Packirisamy N said...
ReplyDelete// நல்ல பணி. ஊரில் இருந்தால் நிச்சயம் கலந்துகொண்டிருந்திருப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி. //
நிச்சயம் ஒருநாள், தமிழ்நாட்டில் பதிவர்கள் மாநாட்டில் பலரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
நண்பர்களைப் புதுக்கோட்டையில் சந்திக்க இந்த நிகழ்வு அதிகம் உதவி புரிந்தது. இவ்வாறான முயற்சியை மேற்கொண்ட திரு முத்துநிலவன் அவர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteமறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDelete// நண்பர்களைப் புதுக்கோட்டையில் சந்திக்க இந்த நிகழ்வு அதிகம் உதவி புரிந்தது. இவ்வாறான முயற்சியை மேற்கொண்ட திரு முத்துநிலவன் அவர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி. //
ஆமாம் அய்யா! உண்மைதான் அய்யா! எல்லோரையும் ஓர் இடத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிதான்.
பயிற்சிப் பட்டறையில் தங்களை முதன் முதலாகச் சந்தித்தது இன்னும் மனக்கண் முன்னே நிற்கின்றது ஐயா.
ReplyDeleteதிரு திண்டுக்கல் தனபாலன் அவர்களையும், மூங்கில் காற்று திரு டி.என் முரளிதரன் ஐயா அவர்களையும், தங்களையும் முதன் முறையாக சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா
நன்றி
வலைப் பதிவில் தங்கள் புகைப்படத்தை மட்டுமே பார்த்து அறிந்த நான் தங்களை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தங்களை சந்தித்ததில் மிக்கமகிழ்ச்சி அடைந்தேன் .
ReplyDeleteதங்கள் சுறுசுறுப்பை எண்ணி வியந்து போனேன்.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// பயிற்சிப் பட்டறையில் தங்களை முதன் முதலாகச் சந்தித்தது இன்னும் மனக்கண் முன்னே நிற்கின்றது ஐயா.//
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களையும், மூங்கில் காற்று திரு டி.என் முரளிதரன் ஐயா அவர்களையும், தங்களையும் முதன் முறையாக சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் ஐயா
நன்றி //
உங்களிடமும், திண்டுக்கல் தனபாலன் மற்றும் மூங்கில் காற்று டி.என் முரளிதரன் இருவரிடமும் எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது. பதிவர்கள் சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அய்யா ஆசிரியர் கவிஞர் நா.முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி!
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDelete// வலைப் பதிவில் தங்கள் புகைப்படத்தை மட்டுமே பார்த்து அறிந்த நான் தங்களை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. தங்களை சந்தித்ததில் மிக்கமகிழ்ச்சி அடைந்தேன் தங்கள் சுறுசுறுப்பை எண்ணி வியந்து போனேன். //
சகோதரர் மூங்கில் காற்று டி.என் முரளிதரன் அவர்களின் அன்புக்கும் பாராட்டுரைக்கும் நன்றி! உங்களிடமும், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடமும் சில சந்தேகங்கள் கேட்கவேண்டும் என்று இருந்தேன். முடியாமல் போய்விட்டது.