Friday 24 February 2012

வலைப்பதிவும் விருதும்


சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்கள் ( http://veesuthendral.blogspot.in )  தமிழார்வம் மிக்க நல்ல கவிஞர். சினனச் சின்ன வரிகளில் அழகின் சிரிப்பையும் மனித இயல்புகளையும் கவிதையாக தருபவர். அவர்கள்   VERSATILE  BLOGGER AWARD -  என்ற விருதினை எனக்கு தந்து என்னை பெருமைப் படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியும், மகிழ்ச்சியும்.

இந்த விருதினைப் பெற்றவர்கள் தனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்வதோடு இந்த விருதினையும் ஐந்து பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். எனக்கு பிடித்தமான ஏழு விஷயங்கள். 1. புத்தகம் படித்தல். 2. பழைய தமிழ் சினிமா பாடல்கள். 3.பயணம் செய்தல் 4.போட்டோகிராபி 5. வலைப் பதிவு 6. மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவி. 7. காபி (COFFEE)

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் நன்றாகவே பதிவுகள் எழுதுகின்றனர். பதிவர்கள் அனைவரும் அவரவர் வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள். வலைப் பதிவின் மூலம் எனக்கு அறிமுகமான பலர் ஏற்கனவே இந்த விருதினை பெற்றுள்ளனர். யாருக்கென்று தருவது? சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்கள் தனக்கு கிடைத்த விருதினைப் பகிர்ந்தளித்ததைப் போல அவர் முலம் எனக்கு கிடைத்த  VERSATILE  BLOGGER  AWARD   என்ற இந்த விருதினை கீழ்க் கண்ட ஐவருக்கு அளிப்பதில்  மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

1.திரு. ஞானவெட்டியான்.( ஆலயங்கள் http://koyil.siththan.com திருச்சியில் நான் பணிபுரிந்த அரசு வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்தவர். இப்போது வலைப் பதிவுகளில் ஆன்மீகக் கருத்துக்களை எழுதி வருகிறார்.)

2.திருமதி. T.V. தங்கமணி (எமது கவிதைகள http://kavidhaithuligal.blogspot.in இவரது முழு விவரம் தெரியவில்லை. தானுண்டு தன் கவிதையுண்டு என்று எதனையும் எதிர்பாராது வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடுகிறார். எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றியும் பாடி இருக்கிறார்.

3.பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் ( வேர்களைத் தேடி http://gunathamizh.blogspot.in  வலைப் பதிவில் தமிழ் இலக்கிய மணம் கமழ பதிவுகள் தருபவர் )

4.மதுரை சரவணன். ( http://veeluthukal.blogspot.in ஆசிரியர். கல்வி சம்பந்தமான நல்ல சிந்தனைகள் தருபவர். )

5.வவ்வால். ( http://vovalpaarvai.blogspot.in  திடீர் திடீரென்று வந்து புள்ளி விவரக் கட்டுரை களைத் தருவார். இவர் முழு விவரமும் தெரியவில்லை. சுருக்கென்று பின்னூட்டமும் தருவார்.)

ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்திற்கு என்று ஒளி தொடர்வதைப் போன்று அனைவருக்கும் விருதுகள் பரவட்டும்.

மேலே சொன்ன பதிவர்களும் இந்த விருதை ஏற்று நீங்களும் ஐந்து பேருக்கு இந்த விருதினை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடர் பதிவு போல பதிவர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் விருதுகள் தந்து கொள்வதில் தவறில்லை.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
                    _ பாடல்: வாலி ( படம்: படகோட்டி )



12 comments:

  1. தாங்கள் விருது பெற்றமைக்கும்
    விருதினை நல்ல பதிவர்களாகத் தேர்ந்தெடுத்து
    பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Reply to // கவிதை வீதி... // சௌந்தர் // said...//

    வணக்கம், கவிதை வீதி சௌந்தர் அவர்களே! வாழ்த்துக்கு நன்றி! முந்தைய எனது பதிவில் ( புதுக் கவிதையின் வடிவம் ) உங்களது கவிதையை மேற்கோள் காட்டியுள்ளேன். உங்கள் கருத்தினையும் கேட்டு இருந்தேன்.

    ReplyDelete
  3. Reply to // Ramani said //

    கவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. விருதினை நல்ல பதிவர்களாகத் தேர்ந்தெடுத்து
    பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்புள்ள தி. தமிழ் இளங்கோ,
    எனக்கும் விருது அளித்ததற்கு
    மகிழ்வுடன் மிக்கநன்றி!சசிகலாவுக்கு என்நன்றி!
    விருதுபெற்ற மற்ற தம்பிகளுக்கும் என்வாழ்த்துகள்!
    நான் எழுபத்துயிரண்டு வயதானவள்.

    அன்புடன்,
    தங்கமணி

    ReplyDelete
  6. Reply to // Sasikala said //

    வணக்கம்! சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. Reply to // திருமதி T.V. தங்கமணி said //

    வணக்கம்! விருதினை ஏற்றுக் கொண்டமைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  8. தமிழ் இளஙிகோ அவர்களுக்கு!

    வவ்வால் பதிவில் யாருடைய பின்னூட்டமென்றே நினைவில்லாமல் நகைச்சுவைக்காக சொன்னது.நானெல்லாம் திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுகிட்டாலும் பரவாயில்லைங்கிற மாதிரி கேசு.எனவே எனது பின்னூட்டத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    மொத்தப் பின்னூட்டத்தின் சாரம் பதிவர் வவ்வால் தளத்தில்.

    ReplyDelete
  9. Reply to // ராஜ நடராஜன் said...//
    வணக்கம்! எல்லாம் நன்மைக்கே! உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete