Friday, 10 February 2012

வாழ்க்கையே போராட்டமாய்!


குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
இளைஞனின் மனதில் எதிர் காலம்!
முதியவனின் மனதில் கடந்த காலம!
எந்த காலம் என்றாலும்
நம்பிக்கையில்தான் நமது காலம்
நகர்ந்தே செல்கின்றது!

அமைதிப் புறாவைப் படைத்தவன் - ஏனோ
வட்டமிடும் வல்லூறையும் படைத்தான்!
துள்ளித் திரியும் மானைப் படைத்தவன் ஏனோ
அடித்துக் கொல்லும் புலியையும் படைத்தான்!
ஒன்றைத் தின்று ஒன்று வாழும் 
உயிர் வித்தை நித்தம் நடக்கின்றது! 

மேட்டைப் படைத்தவன் அருகே
பள்ளத்தையும் படைத்தான்!
விண்ணை முட்டும் சிகரம் உண்டாக்கியவன் - 
அருகே ஆழ்கடல் அமைதியும் தந்தான்!
நல்லிதயங்கள் நடுவே நச்சு மனத்தினர்!
முரண்பாடுகளே படைப்பாய் இருக்கும்போது
வாழ்க்கையே போராட்டமாய் இருக்கின்றது!















11 comments:

  1. ஓடுவதும் விரட்டுவதுமே வாழ்வாகிப் போனது அருமையான வரிகள் .

    ReplyDelete
  2. // sasikala said...//
    வணக்கம்! சகோதரி “தென்றல்” சசிகலா அவர்களின் கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க..

    ReplyDelete
  4. // யோவ் said... //
    வணக்கம்! கன்னம் கவிதைத் தளத்திலிருந்து என்னை கொஞ்சம் எட்டிப் பார்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
    இளைஞனின் மனதில் எதிர் காலம்!
    முதியவனின் மனதில் கடந்த காலம!
    எந்த காலம் என்றாலும்
    நம்பிக்கையில்தான் நமது காலம்
    நகர்ந்தே செல்கின்றது //!

    அவர் அவர்கள் மன நிலையை சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
    இளைஞனின் மனதில் எதிர் காலம்!
    முதியவனின் மனதில் கடந்த காலம!
    எந்த காலம் என்றாலும்
    நம்பிக்கையில்தான் நமது காலம்
    நகர்ந்தே செல்கின்றது //!

    அவர் அவர்கள் மன நிலையை சொல்லிப் போனவிதம்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அருமை
    அருமை
    அழகாகச் சொன்னீர்கள்..

    ReplyDelete
  8. //Ramani said..//

    வணக்கம்! எனது எண்ணங்களுக்கு எப்போதும் ஆதரவும் ஊக்கமும் தரும் கவிஞரின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  9. // guna thamizh said... //

    வணக்கம்! பேராசிரியர் இரா.குணசீலன் அவர்களின் முதல் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  10. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
  11. Reply to……// சசிகலா said... //

    // வணக்கம்! வலைச்சரத்தினில் “எனது எண்ணங்கள்” என்ற எனது பதிவினை அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி! //

    ReplyDelete