Friday, 17 February 2012

மின்வெட்டு >>>>>


அன்றைக்கு கிடைத்த அரிக்கேன் விளக்கு
இன்றைக்கு கிடைக்க வில்லை!

மெழுகு வர்த்தியும் தீப்பெட்டியும் பெரும்பாலான
கடைகளில் இருப்பு இல்லை!

இரவில் நேரங்கெட்ட நேரங்களில்
முழிப்பும் முணுமுணுப்பும் தொடர்கதை ஆயிற்று!

மின்னல் வெட்டின் ஜாலம்
மனதில் ரசிக்க முடிந்தது!
மின்வெட்டின் காலம்
சபிக்கத்தான் தோன்றுகிறது!
வேறு என்ன செய்ய முடியும்!

இருட்டினில் கிடைத்த இந்திய சுதந்திரம்
இருட்டிலேயே இன்னமும் இருக்கின்றது! 

(Photo thanks to Photo_ Dictionary (Google)

11 comments:

  1. தி.த.இளங்கோ,

    //இருட்டினில் கிடைத்த இந்திய சுதந்திரம்
    இருட்டிலேயே இன்னமும் இருக்கின்றது! //

    அழகாக சொல்லி இருக்கீங்க, அரிக்கேன் விளக்கு படம் அருமை!

    நல்லா சொன்னிங்க, இருட்டிலாவது சுதந்திரம் இருக்கே, சுத்தமா இல்லாம போக போனால் என்னாவது?

    ReplyDelete
  2. காலம் வந்தாலும் கூடி வரவில்லை என்றுதான் கூறத் தோன்றுகின்றது .சிறப்பு கவிதை .வாழ்த்துகள்

    ReplyDelete
  3. // மதுரை சரவணன் சொன்னது //

    வணக்கம்! பள்ளிக் கல்வி சிந்தனைகளை வலைப் பதிவில் வழங்கி வரும் மதுரை சரவணன் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  4. // வவ்வால் சொன்னது //
    வணக்கம்! என்னை எழுத ஊக்கம் அளித்து வரும் வவ்வால் அவர்களின் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி!படம் கூகிள் உதவி!

    ReplyDelete
  5. // சந்திரகௌரி சொன்னது //
    வணக்கம்! இலக்கியச் சிந்தனைகளோடு வனப்பின் அக்கறையையும் சுட்டிக் காட்டும் சகோதரி சந்திரகௌரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. இருப்பு இருந்தாலும் எத்தனை எத்தனை மெழுகுவர்த்திகளை வாங்குவது . அருமையான ஆதங்க வரிகள் .

    ReplyDelete
  7. சரித்திரக் கதை எழுதி நாம் நம் பண்டைச் சிறப்பை
    அறியச் செய்வதுபோல்
    இருளில் நம்மை மூழ்கவிட்டு நாம் மூதாதையர்
    வாழ்வு குறித்து அறியச் செய்ய முயல்கிறார்களோ
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சரித்திரக் கதை எழுதி நாம் நம் பண்டைச் சிறப்பை
    அறியச் செய்வதுபோல்
    இருளில் நம்மை மூழ்கவிட்டு நாம் மூதாதையர்
    வாழ்வு குறித்து அறியச் செய்ய முயல்கிறார்களோ
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Reply to … // Ramani said //

    கவிஞர் ரமணி அவர்களுக்கு வணக்கம்! நீங்கள்
    “ இருளில் நம்மை மூழ்கவிட்டு நாம் மூதாதையர்
    வாழ்வு குறித்து அறியச் செய்ய முயல்கிறார்களோ ”
    என்று சொன்னது போல இதனையும் வாழ்வியலில் ஒரு பயிற்சிப் பாடமாக செய்தாலும் செய்து விடுவார்கள். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete