Monday 29 January 2018

தமிழ்மணம் ரேங்க் – மறுபடியும் முதலில் இருந்து



நான் ஒரு மூத்த குடிமகன் (Senior Citizen). எனவே தினமும் காலையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, எங்கள் வீட்டு கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இண்டர்நெட்டை பார்க்கத் தொடங்கினால், முதலில் பார்ப்பது கூகிள் (Google); அப்புறம் தமிழ்மணம், மின்னஞ்சல் …. … என்று போகும். அதிலும் நம்ப தமிழ்மணத்தை தினமும் பார்த்து விட்டுத்தான் எழுந்து போவேன். காரணம் இன்றைக்கு நமது வலைப்பதிவு நண்பர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள், நாட்டு நடப்பைப் பற்றி இன்றைய சூடான விமர்சனம் என்ற ஆவல்தான். தமிழ்மணம் சிறப்பைப் பற்றியும், அது ஏன் எல்லோராலும் விரும்பப் படுகிறது என்பதனையும் இங்கு விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை.

திடீர் சுணக்கமும் பராமரிப்பும்

சில மாதங்களாகவே தமிழ்மணத்தில் ஒரு சுணக்கம். தளத்தைப் படிக்க உட்கார்ந்தால், அது திறக்கவே ரொம்பநேரம் ஆகி விடும். நண்பர்களின் பதிவைப் படித்து விட்டு, ஓட்டுப் பட்டையைத் திறந்து ஓட்டு போடுவதற்குள் , வேர்ட்பிரஸ்சில் கமெண்ட் எழுதும் கணக்காக, போதும் போதும் என்று ஆகி விடும். திடீரென்று ஒருநாள் தமிழ்மணத்தில் நுழையவே முடியவில்லை. சம்பந்தா சம்பந்தம் இன்றி ஒரு தளம் வரும். அப்புறம் ஒருநாள், 

// தளம் பராமரிப்பு வேலை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தளத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். விரைவில் தமிழ்மணம்/திரைமணம் தளங்கள் செயல்பட தொடங்கும் //

என்று ஒரு அறிவிப்பு வந்தது. அப்பாடி என்று ஒருவித மகிழ்ச்சி.

நம்ப புலவர் சா.இராமானுசம் அய்யா அவர்கள் கூட, புலவர் கவிதைகள் என்ற தனது வலைத்தளத்தில்,

எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
   எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது  இல்லையது தமிழ்மணமே-பலரும்
   ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
   தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது உன்சேவை தமிழ்மணமே-மேலும்
   செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே

என்று ( http://www.pulavarkural.info/2018/01/blog-post_22.html ) எழுதினார்.

புதிய பட்டியல்

ஒருவழியாக தளம் பராமரிப்பிற்குப் பின்னர், தமிழ்மணம் மீண்டும் மின்னத் தொடங்கி விட்டது. ஆனாலும் பாவம், இந்த தமிழ்மணம் ரேங்க்தான், இப்போது  பலரையும் (என்னையும் சேர்த்துதான்) உசுப்பி இருக்கும். என்னதான் வெளியில் பலரும் நான் தமிழ்மணம் ரேங்க் பட்டியலைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று உதார் விட்டாலும், ஒவ்வொருவரும் அவரவர் ரேங்க் என்ன என்று எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றனர். தமிழ்மணம் ரேங்கிற்காக அடிதடியே நடந்து இருக்கிறது என்றால் சொல்ல வேண்டியதில்லை.

// தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும் //

என்று தமிழ்மணம் சொன்னாலும், இப்போது எல்லாமே தலைகீழாக போய் விட்டது. என்ன கணக்கு, ஏன்  எப்படி இப்படி ஆனது என்று தெரியவில்லை.
சென்ற ஆண்டு (2017) கடைசி அல்லது இந்த வருடம் (2018) முதல் வாரத்தில் முதல் ரேங்கில் இருந்த ‘எங்கள் ப்ளாக்’ இப்போது 20 ஆவது ரேங்கில் இருக்கிறார்கள்.. புலவர் அய்யா அவர்கள் 98 இல் இருக்கிறார். எண் 5 இல் இருந்த G.M.B அவர்கள் இப்போது 266 ஆவது ரேங்க். எனது தளத்தினை எடுத்துக் கொண்டால், 9 அல்லது 12 என்று மாறி மாறி ரேங்கில் இருந்த நான் (இன்று) இப்போது 210 ஆவது ரேங்க்கிற்கு வந்து விட்டேன்..
  
மறுபடியும் முதலில் இருந்து

இருந்த போதும், இப்போதுள்ள தமிழ்மணம் பட்டியலில், பழைய பதிவர்கள் பலரையும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சிதான்.

எனவே தமிழ்மணம் ரேங்க் பற்றி கவலைப் படுபவர்கள், மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் அல்லது இயல்பாகவே பழைய நிலைக்கு தமிழ்மணம் வந்துவிடும் என்று எப்போதும் போல் எழுத வேண்டும். மறுபடியும் ஒரு வருடம் கழித்து, பராமரிப்பு என்றால், ரேங்க் கணக்கு அவ்வளவுதான். நடிகர் வடிவேலு காமெடி ஒன்றில் சொல்லும் “மறுபடியும் சியர்ஸா?” என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

32 comments:

  1. தம சரியாகி வருவதில் மகிழ்ச்சி. திடீரென ஒருநாள் எங்கள் பிளாக் ஒன்றாம் எண்ணிலிருந்து 79 க்கு சென்றது. பின்னர் மாறி மாறி எண்ணிக்கைக் காட்டுகிறது. ஒன்றோ, முன்னதாகவோ வந்தால் சந்தோஷம்தான். பின்னால் சென்று விடுவதால் நாம் எழுதாமல் இருக்க முடியுமோ... நம் கடமையைச் செய்து, நம் எழுத்து ஆசையை நாம் தீர்த்துக் கொண்டே இருப்போம். என்ன வருகிறதோ வரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் 'எங்கள் ப்ளாக்' ஶ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எப்படியோ தமிழ்மணம் மீண்டும் வெளிவந்த வகையில் மிக்க மகிழ்ச்சிதான். இன்னும் அதில் பராமரிப்பு பணிகள் முடியவில்லை என்றே நினைக்கிறேன்.

      Delete
  2. ///என்னதான் வெளியில் பலரும் நான் தமிழ்மணம் ரேங்க் பட்டியலைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று உதார் விட்டாலும், ஒவ்வொருவரும் அவரவர் ரேங்க் என்ன என்று எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றனர். //

    ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை.. இதில் ஒளிச்சு மறைக்க என்ன இருக்கு... அத்தோடு மகுடம் கிடைக்கும்போது உண்மையில் மகிழ்வைத்தருது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழ்மணம் ரேங்க் பட்டியலில் ரொம்பவும் உச்சத்திலும் இல்லாமல், அதே சமயம் ரொம்பவும் கீழே போகாமலும் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.

      Delete
  3. தமிழ்மணம் இன்னும் திருத்தி முடிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன், அதனால்தான் ராங் குழம்பிப்போயிருக்கு. இங்கு ராங் என்பது இத்தனை காலமும், போஸ்ட் போடப்படும் வேகத்தைப் பொறுத்தே இருந்தது எனத்தான் நினைக்கிறேன், அதிகம் போஸ்ட் போட்டால் முன்னணியில் வரும்... வேறு எதனையும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை, இனி பல மாற்றங்கள் வரக்கூடும்.. பொறுத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்கள் சொல்வது சரிதான். தமிழ்மணத்தில் இன்னும் மாற்றங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

      Delete
  4. முதலில் இணைப்புக்கான காத்து இருப்பேருக்கு தக்க பதில் தரட்டும் தமிழ் மணம். டைமன் மாற்றிய பின் இணைப்புக்கு இன்னும் காத்து இருக்கின்றேன் ஐயா! நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது பழைய, புதிய பதிவர்கள் அனைவரின் பதிவுகளும், ஒன்றிணைக்கப்பட்டு வருவதாக நினைக்கிறேன். பார்ப்போம்.

      Delete
  5. //என்னதான் வெளியில் பலரும் நான் தமிழ்மணம் ரேங்க் பட்டியலைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று உதார் விட்டாலும், ஒவ்வொருவரும் அவரவர் ரேங்க் என்ன என்று எட்டிப் பார்க்கத்தான் செய்கின்றனர். தமிழ்மணம் ரேங்கிற்காக அடிதடியே நடந்து இருக்கிறது என்றால் சொல்ல வேண்டியதில்லை.// நான் தமிழ்மணத்தை விட்டு வெளியேறியே ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகின்றன. ஆனாலும் இரண்டாம் இடத்தில் என்னுடைய பெயர் இருப்பதாக ஶ்ரீராம் மற்றும் சிலர் கூறினார்கள். அது எப்படி சாத்தியம்? என்னுடைய பதிவை நான் இணைப்பதும் இல்லை. என் பதிவுகளில் தமிழ்மணம் இணைப்பும் இல்லை! ஆகவே ஏதோ தொழில் நுட்பக் கோளாறு காரணமாகத் தான் மாற்றிக் காட்டுகிறது என எண்ணுகிறேன். விரைவில் தானாகவே சரியாகலாம்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எது எப்படி இருந்த போதிலும், தானியங்கியான தமிழ்மணத்தில், உங்களுடைய பதிவுகள் வருவதிலும், தாங்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதிலும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். எழுத்தாளர் ஜீவியின் பதிவைக் கூட இங்கு பார்த்தேன். அவரும் உங்களைப் போலவே தமிழ்மணத்தை விட்டுப் போனவர்தான்.

      Delete
  6. இப்போது பதிவுகளை தமிழ்மணம் தானாகவே உறிஞ்சிக் கொள்கிறது! சப்மிட் செய்ய வழியில்லை. மேலும் முதல் நாள் கீதா அக்கா இரண்டாம் இடத்தில இருந்தார் என்று கில்லர்ஜி சொன்னார் (நான் பார்க்கவில்லை) இப்போது வேறு லிஸ்ட்.

    புதியவர்களை இணைக்கும் பணி நடக்கிறது என்றே நினைக்கிறேன். நடந்தால்தான் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிடுவதைப் போல, இன்னும் தள பராமரிப்பு பணி முடியவில்லை என்றே தோன்றுகிறது.

      Delete
  7. தமிழ் மணம் புதிய பொலிவு பெறட்டும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  8. அனைவரையும் பாடாய் படுத்திவிட்டது தமிழ் மணம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. தமிழ்மணம் பற்றிய விசயங்களை மனம் மறந்து விட்டு எழுதினால் நல்ல பதிவுகளை எழுத முடியும் இது எனது நிகழ்கால அனுபவ கருத்து.

    3-ல் இருந்த எனது பட்டியல் ஒரே நொடியில் 43-க்கு சென்று விட்டது.

    "வந்ததை வரவில் வைப்போம்
    போனதை செலவில் வைப்போம்
    அன்றுபோல் என்றும் எழுதி
    கொண்டாடுவோம்"

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நானும் உங்கள் வழிதான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  10. தமிழ்மணம் என்பதை கவனத்தில் கொண்டால், பதிவு குளறுபடியாகிவிடும். படிக்கின்றவர்களுக்கும் தேவையில்லாத பிரச்சனை. வெறும்ன, வாக்குகளை வைத்து தமிழ்மண RANKஐ என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 15-20பேர் வாக்களித்தால் அந்த இடுகை முதல் ரேங்க் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால், எத்தனை பேர் அந்த இடுகையைப் படிக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டுதான், தமிழ்மண ரேங்க் வரவேண்டும். அதுபோல, திரும்பத் திரும்ப ஒரே இடுகையை, தமிழ்மணத்தில் பரிந்துரை செய்வதும் அவ்வளவு நன்றாக இல்லை. கடைசி ஒரு வாரம் பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் என்று chronology order ல் போட்டால் பரவாயில்லை.

    எல்லாவற்றையும்விட, படிப்பவர்கள் மனதில், இந்த இந்த பிளாக்குகளைத் தொடர்ந்து படிப்போம் என்ற எண்ணம் வரவழைப்பதில்தான் அந்த அந்த ஆசிரியர்களின் திறமை இருக்கிறது என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.

      // 15-20பேர் வாக்களித்தால் அந்த இடுகை முதல் ரேங்க் என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. //

      நீங்கள் சொல்வது சரிதான். ஏதாவது விடுமுறை தினம் அல்லது சேர்ந்தாற் போல வரும் விடுமுறை நாட்களில், நமது பதிவினை வெளியிட்டால், எப்போதும் நமக்கு வாக்களிக்கும் பலர் வாக்களிப்பதில்லை. இது மாதிரியான சமயங்களில் தமிழ்மணம் ரேங்க் என்பது பின்னுக்கு தள்ளிப் போய் விடும்.

      // எல்லாவற்றையும்விட, படிப்பவர்கள் மனதில், இந்த இந்த பிளாக்குகளைத் தொடர்ந்து படிப்போம் என்ற எண்ணம் வரவழைப்பதில்தான் அந்த அந்த ஆசிரியர்களின் திறமை இருக்கிறது என்பது என் எண்ணம் //

      என்ற கூற்றை அப்படியே வழி மொழிகின்றேன்.

      Delete
  11. கேட்டு வாங்கி பரிந்துரைக்கப்பட்டு முதல் ராங் என்பதை விட மற்றபடி எந்த அடிப்படயில் ராங் வருகிறது என்பது புரியவில்லை, அதனால்தான் தமிழ்மணம் புஹிர் மணம் என்றேன் கடந்த மூன்று மாதங்களில் வரும் ராங் போன பதிவுக்கு முன் இருந்தராங் 266. கடந்தபதிவில் 144 என்று உயர்ந்து விட்டது ராங்குக்காக எழுதவில்லை எறாலும் தற்போதைய ராங்கை அறிந்து கொள்ள ஏனோ ஒருஆர்வம்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. புஹிர் மணம்? > புதிர் மணம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் புதிர்மணம்தான். யார் இப்போது நடத்துகிறார்கள், இதற்கான செலவுகளை எப்படி எதிர் கொள்கிறார்கள், ரேங்க் பட்டியல் என்பது எப்படி கணக்கிடப் படுகிறது - என்றேல்லாம் ஒரே புதிர் மயம்தான்.

      Delete
  12. Dear Elango:
    I read your blog regularly...
    TamilManam should [immediately] get rid off the voting system as it functions with a simple logic, in my opinion; apologies if I am wrong--If I vote for you, you (are bound to) vote for me. This is wrong!

    Next is Vaasagar Parinthurai...Again it revolves with votes! This is also wrong!

    Can it(Vaasagar Parinthurai) be with the number of readers reading the post? No! because a lousy post (such as mine) maybe selected for the numbers alone which is also wrong. So?

    So, in my opinion, both voting system as well as Vaasagar Parinthurai MUST be removed--in TamilManam-forever!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும். நானும் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகன்தான்.

      // So, in my opinion, both voting system as well as Vaasagar Parinthurai MUST be removed--in TamilManam-forever!//

      போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்மணத்தில், ரேங்க் பட்டியலை மட்டும் வைத்து விட்டு, இனி ஓட்டுப் பட்டையையே எடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

      Delete
  13. //எழுத்தாளர் ஜீவியின் பதிவைக் கூட இங்கு பார்த்தேன். அவரும் உங்களைப் போலவே தமிழ்மணத்தை விட்டுப் போனவர்தான்.//

    என்னை நினைவு கொண்டதற்கு நன்றி, நண்பரே!

    தமிழ்மணத்தில் விதவிதமான அரசியல்கள் இருந்த காலம் அது. ஒத்து வராததால் தான் வெளியேறினேன். நல்ல எழுத்துக்கும், கருத்துக்களுக்கும் பாராட்டுகள் என்ற நிலையை விட எந்த ராங்கும் உயர்ந்ததில்லை!

    இந்த ராங்க் அரசியலுக்காகவே தான் எழுதுகிற பொருளையும், எழுதுகிற பொருளின் தலைப்பையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன்.
    இந்த ராங்க் தான் பதிவர்களை என்ன பாடுபடுத்துகிறது, பாருங்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      //இந்த ராங்க் அரசியலுக்காகவே தான் எழுதுகிற பொருளையும், எழுதுகிற பொருளின் தலைப்பையும் மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன் //

      நீங்கள் சொல்வது சரிதான். தலைப்புகளை சரிவர கையாளத் தெரியாத படியினால், நான் எழுதியவற்றுள், அதிகம் பேர் படித்த, அதிக பின்னூட்டங்களைப் பெற்ற, பல பதிவுகள் தமிழ்மணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றதில்லை.

      Delete
  14. தமிழ்மணத்தில் சில நாட்களாக திருத்தல் வேலைகள் நடைபெறுவதாக அறிவித்தல் வந்தது. 2018 நல்லது நடந்தால் மகிழ்ச்சி.
    //நான் ஒரு மூத்த குடிமகன்//
    நீங்க ஒரு தமிழ் மகன் என்றபடியால் உலகின் மூத்த குடிமகன் தானே.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  15. தமிழ்மனம் தமிழ் வலைப்பதிவர்களுக்கான சிறந்த திரட்டிதான். ஐயமில்லை. இந்தச் சுனக்கம் தற்காலிகமானதே. புதுப்பொலிவடன் மாற்றங்காணும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  16. தமிழ்மணத்தில் திருத்தல் வேலைகள் எல்லாம் நடைபெறுகிறது, முன்பை விட நன்றாக இருக்க போகிறது என்று மகிழ்ச்சியாக இருந்தால், உள்ளதும் இல்லாமல் போய்விட்தே (:
    சில தினங்களாக "தகவல் காணப்படவில்லை" என்ற அறிவித்தலே வருகின்றது. தமிழ் உலகத்துடன் தொடர்புகள் துண்டிக்கபட்ட போன்ற உணர்வு.

    ReplyDelete
  17. எனக்கும் சில நாட்களாக தமிழ்மணம் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் வந்து விட்டாலும் எனது தளத்தை மீள சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. என்ன கொடுமை இது?

    http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html - சிகரம் பாரதி - 100 மகிழ்ச்சியான நாட்கள் #100happydays

    ReplyDelete