Monday 18 December 2017

கலப்படம் கலப்படம்



நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், அப்போதைய நாளிதழ்களில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தவர்களைக் கண்டறிந்து, தண்டனை கொடுத்ததாக செய்திகள் வரும். ஆனால் இப்போது அது மாதிரியான செய்திகள் அதிகம் வருவதில்லை. அப்படியானால் நாட்டில், கலப்படம் குறைந்து விட்டதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் முன்பு போல சிறுசிறு கடைகளை விட, இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளும் ஷாப்பிங் மால்களும் பெருகி விட்டன. இங்கு விற்கப்படும் பாக்கெட் பொருட்களைப் பற்றி யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. சில இடங்களில், காலாவதியான பொருட்களைக் கூட சந்தடி சாக்கில் அல்லது தள்ளுபடி என்ற பெயரில் தள்ளி விடுகின்றனர். 

கலப்படம் எத்தனை

கலப்படம் என்றால் என்ன? “ ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிவான வேறொரு பொருளை விதி முறைகளுக்கு மாறாகக் கலந்துவிடும் செயல்; adulteration (in foodstuff, etc.) (நன்றி: க்ரியா – தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதி) 

எவ்வெவற்றில் எந்தெந்த பொருட்கள் கலப்படம் செய்கிறார்கள் என்று பார்ப்போமானால் தலை சுற்றும்.

அரிசி (சிறு சிறு கற்கள்); மிளகு (பப்பாளி விதைகள்); பால் (தண்ணீர், சோயா பால், ஸ்டார்ச் கரைசல், சலவைத்தூள், யூரியா உரம்): ஐஸ் க்ரீம் (சலவைத்தூள்); சர்க்கரை, வெல்லம் (சாக் பவுடர், வாஷிங் சோடா); தேன் (தண்ணீர், மொலாசிஸ்); காபி (சிக்கரி, புளியங்கொட்டைத் தூள் அல்லது பேரீச்சை விதைத் தூள்); டீத்தூள் ( பிற இலைகள் அல்லது பயன்படுத்தப்பட்ட டீத் தூள்); மிளகாய்ப் பொடி (செங்கல் தூள், காய்ந்த மாட்டுச் சாணம் அல்லது குதிரைச் சாணம் ); நெய் (வனஸ்பதி) கல் உப்பு (சிறு வெள்ளை கற்கள்)

இன்னும் சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் குளிர் பானங்கள் இவற்றில் என்று நிறையவே சொல்லலாம். இந்த கலப்பட உணவுப் பொருட்களால் ஏற்படும் உடல் சுகாதாரக் கேடுகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

என்ன தண்டனை?

என்னதான் பலரும் எடுத்துச் சொன்னாலும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர் மீதான தண்டனை என்பது குறைவாகவே இருக்கிறது. கடுமையாக இல்லை. இவ்வாறு குற்றம் செய்யும் பலரும் அந்த நேரத்தில் ஒரு அபராதத் தொகையினைக் கட்டிவிட்டு மீண்டும் தொடர்கிறார்கள்.

திரைப்படப் பாடல்

இப்போதெல்லாம் நாட்டில் நடக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றி எழுதினால் கூட, ஏதோ தேச விரோதம் என்ற அளவிற்கு போய் விடுகிறார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் சர்க்கார் ஆட்சியின் போது இருந்த கலப்படத்தைப் பற்றி ஒரு பாடல் திரும்பிப்பார் (1953 இல் வெளிவந்த) என்ற படத்தில் வருகிறது.

இந்த பாடலில், எப்படியெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்து நையாண்டி செய்யப்படும். பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன் - பாடியவர் : எஸ் சி கிருஷ்ணன் - இசை: ஜி.ராமநாதன் - நடிப்பு : குலதெய்வம் ராஜகோபால். - இந்த படத்திற்கு கதை - வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்க விஷயம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரிபாய், கே.ஏ.தங்கவேலு நடித்தது. – கீழே பாடல் வரிகள்.

கலப்படம் கலப்படம்
எங்கும் எதிலும் கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்
கலப்படம் கலப்படம்
கஷ்டப்படும் தொழிலாளரோடு –
கருங் காலிக் கூட்டம் கலப்படம்
முதலைக் கண்ணீர் வடிக்கும் தலைவன்
முதலாளியிடம் கலப்படம்   - (கலப்படம்) 
                                                                                             
ஆழாக்குப் பாலினிலே
அரைப்படி தண்ணீர் கலப்படம்
அரிசியிலே மூட்டைக்கு
அரை மூட்டை கல்லு கலப்படம்
அருமையான நெய்யினிலே
சரிபாதி டால்டாவும் கலப்படம்
காப்பிக் கொட்டையில் புளியங்கொட்டையும்
முழுக்க முழுக்க கலப்படம் -   (கலப்படம்) 

இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ மேலே உள்ள திரையை கிளிக் செய்யுங்கள். ( நன்றி: Youtube - https://www.youtube.com/watch?v=BG2McFL6QEY  )

தொடர்புடைய எனது பதிவு:

அன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_8.html

 

27 comments:

  1. >>> இப்போதெல்லாம் நாட்டில் நடக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றி எழுதினால் கூட, ஏதோ தேச விரோதம் என்ற அளவிற்கு போய் விடுகிறார்கள். <<<

    நிதர்சனமான உண்மை..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. இப்போ கலப்படம் கொஞ்சம் குறைவுதான்னு நினைக்கறேன். ஆனால் காலாவதியான பொருட்களை ரீபேக் செய்வது நடக்கிறது. பாலில் நம்ம ஊரில் 60 சத்த்துக்குமேல் கலப்படம்தான். சூப்பர்மார்கெட் கான்செப்ட் வந்தபிறகு கலப்படத்துக்கு வாய்ப்பு குறைவு. எல்லாம் பிராண்டட் பொருட்கள். தரம் குறைவென்றால் பிராண்ட் அடிபடும்.

    அரசியல் பற்றி எழுதினாலும் மத சம்பந்தப்பட்டது எழுதினாலும், நீங்கள் சொல்வதுபோல்தான் நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // ஆனால் காலாவதியான பொருட்களை ரீபேக் செய்வது நடக்கிறது. //

      ஒன்று வாங்கினால் அல்லது ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசமாகத் தரப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில் இந்த தில்லுமுல்லு நடப்பதை, அந்த பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளின் சுவையையும்,வெளிறிய நிறத்தையும்
      வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

      //அரசியல் பற்றி எழுதினாலும் மத சம்பந்தப்பட்டது எழுதினாலும், நீங்கள் சொல்வதுபோல்தான் நடக்கிறது.//

      நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

      Delete
    2. //ஒன்று வாங்கினால் அல்லது ரெண்டு வாங்கினால் ஒன்று இலவசமாகத் தரப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளில்// - இல்லை சார். இது Short Expiry ஆகப்போகும் உணவுப் பண்டங்களைத் தள்ளிவிடுவதற்காக நடப்பது. அதை வாங்குபவர்கள் காலாவதிக்கு முன்னால் உபயோகப்படுத்தினால் நல்லது. பெரும்பாலும் அப்படி நிகழ்வது இல்லை. 'பயனாளிகளில் புரிதலின்மையை' வைத்து இப்படி எல்லா சூப்பர்மார்க்கெட்டுகளிலும் செய்கிறார்கள். (ஏழைகள் இதனை வேறு வழியில்லாமல் வாங்குவதும் நடக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில், சிக்கன், காலாவதியாகும் ஒரு நாள் முன்பு மிக மிகக் குறைந்த விலையில் தள்ளிவிடுவார்கள். அதனை ஏழைகள் வாங்கி, குளிர்சாதனத்தில் வைத்து உபயோகப்படுத்துவார்கள்). எப்போவுமே, இலவச உணவு என்று ஒன்று கிடையாது. கடைக்காரர்கள் ஆஃபர் கொடுத்தால் அதில் ஏதோ விஷயம் இருக்கும். இல்லாமலா 1 புடவைக்கு 2 புடவை இலவசம் என்று சொல்கிறார்கள்?

      Delete
    3. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கும், விவரமான தகவல்கள் தந்தமைக்கும் நன்றி.

      Delete
  3. இப்போதெல்லாம் கலப்படத்தின்
    இலக்கணம் வேறுவிதமாக
    மாறிவிட்டது எனக் கூடச் சொல்லலாம்
    தரம் குறைந்ததில் கொஞ்சம் தரமானதைக்
    கூட்டுவது மாதிரி
    தண்ணீரில் பால் போல
    பாடலுடன் பதிவு அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மதுரைக் கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  4. கலப்படத்தைக் கூட ப்யூஷன் நாகரிகத்தில் உள்ளடக்கி விடுவார்கள் போலிருக்கு.

    உற்பத்தி இடத்திலிருந்து உபயோகிப்போர் கைக்கு வந்து சேர்வதற்குள் 5 கைகள் மாறி வருவதாகச் சொல்கிறார்கள். எங்கே யார் கலப்படம் பண்ணினாங்கங்களோ தெரியாது. ஏதோ கலர் மேட்சிங் மாதிரி எதோடு எதைக் கலக்கலாம் என்று கலையழகோடு தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
    கலப்படப் பொருட்களை உருவாக்குவதற்கே தனித்தனி தொழிற்சாலைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எல்லா மட்டங்களிலும் ஊழல். எதுவும் சொல்வதற்கில்லை. நாடா இது காடான்னு கவிஞர் புலமைப்பித்தன் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி.

      // கலப்படத்தைக் கூட ப்யூஷன் நாகரிகத்தில் உள்ளடக்கி விடுவார்கள் போலிருக்கு. //

      உணவு விடுதிகளில், நாக்கு ருசிக்காக, கலத்தல் (Fusion) என்ற பெயரில் சுவையைக் கூட்டும் போது, அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் கலப்படம் இல்லாதவையா என்று அறிய முடியாதுதான் அய்யா.

      கலப்படம் செய்வதற்கு என்றே நிறைய தொழிற்சாலைகள் இருக்கின்றன; முன்பெல்லாம் இவைகள் சீல் வைக்கப் பட்டதாக செய்திகள் வந்து படித்து இருக்கிறேன். இப்போது எல்லாவற்றிலும் அரசியல் குறுக்கீடு.

      Delete
  5. கலப்படம் அதிகமாகி இருக்கிறது. ஆனால் வெளியில் தெரிவதில்லை. கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து விடுகிறார்கள். இணைக்கப்பட்டிருக்கும் பாடல் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. நன்கு வெளிப்படையாக கலப்படம் தெரிவது பாலில்தான் அரிசியில் கல் எவ்வளவுதான் கலக்க முடியும் மற்றபடி காஃபியில் சிக்கரி என்பது கலப்படமாகுமா இவ்வளவு கலப்பு இருந்தால் சுவை கூடும் என்று நினைப்பவர் இருக்கிறார்களே பிற பொருட்களில் கலப்படம் செய்டால் எளிதில் கண்டு பிடிக்க முடியாதே

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. எங்கும் எதிலும் கலப்படம். பாடல் சிறப்பாக இருந்தது.

    சூப்பர் மார்க்கெட்டுகளில் தள்ளுபடி என்றாலே, காலாவதியான எதையாவது தள்ளிவிடுகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. கலப்படத்தின் பொருட்களை படிக்கும் பொழுது சாப்பிடவே பயமாக இருக்கிறது நண்பரே பொருத்தமான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பருக்கு வாழ்த்துகள். கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. பாடல் அருமை! கலப்படம் இன்றும் நடக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. கலப்படங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதத்தைத் தொலைத்துவிட்டு வணிக நோக்கில் இந்த அவலம் தொடர்வது வேதனையே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லாம் வியாபாரத்தில் மனசாட்சி என்பதே இல்லாமல் போய் விட்டது.

      Delete
  11. கலப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
    பணம் மனிதாபிமானத்தை... மனிதத்தை வென்று விடுகிறது.
    வேதனைக்குரியது அய்யா...

    ReplyDelete
  12. கருப்பு வெள்ளை காலத்தில் பாடிய பாடல், கலர் படம் காலத்திற்கும் ஒத்துபோகிறது. கருப்பும் வெள்ளையும் கலப்படம் தான் எல்லாமே ! தண்டனைகளுக்கும் தள்ளுபடி...!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  13. இவ்வளவு கலப்பட உணவுகள் இருப்பதால் தான் மருத்துவத் துறையில் உலகம் முன்னேற முடியும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நீங்கள் இப்போது இருப்பது அமெரிக்காவிலா சென்னையிலா?

      Delete