Wednesday 6 December 2017

வணக்கம் சொல்லுதல் தமிழ் மரபா?



ரொம்ப நாளாகவே, படிக்கும் காலத்தில் இருந்தே எனக்குள் ஒரு சந்தேகம். நமக்குள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லுதல் தமிழ் மரபா என்பதே.. ஏனெனில் நானறிந்த வரையில் நான் படித்த பழைய தமிழ் இலக்கியங்களில் எங்கும், மக்கள் ‘வணக்கம்’ என்று சொல்லிக் கொண்டதாகவே  தெரியவில்லை.

ஆனால் இப்போது நாம் வணக்கம் என்ற சொல்லை நன்றாகவே பயன் படுத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் அல்லது மேடைப் பேச்சாளர்கள் பலரும், தொடங்கும்போது வணக்கம் சொல்லி விட்டு, முடிக்கும் போது, நன்றி – வணக்கம் என்று அமர்கின்றனர். வடக்கிருந்து எந்த தலைவராவது இங்கு பேச வந்தால், இந்த பத்திரிகைகள் தலைப்பில் போடும் செய்தி, தமிழில் பேசினார் என்பதுதான். அவர்கள் அப்படி எவ்வளவு நேரம் தமிழில் பேசினார்கள் என்று படித்துப் பார்த்தால், அவர்கள் ‘வணக்கம்’ சொன்னதைத்தான் இவர்கள் இப்படி தலைப்பாக போட்டு இருப்பது தெரிய வரும்.. நிற்க.

‘வணக்கம் சொல்லாதே’ – பேராசிரியர் நன்னன்

அண்மையில் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் “வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல” என்று சொல்லுகிறார். அவருடைய கருத்து இங்கே.

// நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்கிறோம். அது தவறு, வணக்கம் சொல்வது முட்டாள்தனம், தமிழர் வரலாற்றில் எங்குமே வணக்கம் என்ற குறிப்பே கிடையாது. சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது கூட மக்கள் அனைவரும் வாழ்த்து தான் சொன்னார்களேத் தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ' அதாவது வாழ்க அரசர் என்று தான் சொன்னார்கள். ஆரிய பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரைஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது. //

என்று சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற போது நன்னன் உரையாற்றினார். ( நன்றி: tamil.oneindia.com  Dt 07.11.17 )

VIDEO COURTESY: https://www.youtube.com/watch?v=o7jLiUO0z7s பெரியார் வலைக்காட்சி - 

ஆங்கிலேயர் மரபும் தமிழர் வழக்கமும்

முதலில் ஒரு சில இலக்கிய மேற்கோள்களை இங்கு பார்ப்போம்.
கூடா நட்பு பற்றி பேச வந்த, திருவள்ளுவர்,

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.  ( திருக்குறள் .827 )

என்று சொல்லுகிறார். ( இதற்கு மு.வரதராசனார் உரை: “வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது” ) இந்த திருக்குறளில் வணக்கம் என்ற சொல், ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ளுதல் என்ற பொருளில் இல்லை. இங்கு வணங்குதல் என்ற வினையின் செயலை மட்டும் குறிக்கிறது.

‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூலின் தலைப்பே வணக்கம் என்று அமைந்துள்ளது. இந்த நூல் 20.10.1578 இல் தமிழில் வந்த முதல் அச்சு நூல் ( Printed book ); இந்திய மொழிகளிலும் இதுவே முதல் அச்சுநூல் ஆகும். போர்த்துகீசியமொழியில் எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ சமய போதனை நூலை, தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட்டவர் அண்ட்ரிக் அடிகளார் (Hendrique Henriques) இந்த நூல், கிறிஸ்தவ இறைவணக்கம் என்ற பொருளில், வணக்கம் என்ற சொல்லை கையாண்டு இருக்கிறது எனலாம்.

சிந்தாமணி நிகண்டு என்பது அருஞ்சொற் பொருள் கூறும் அகராதி ஆகும். இதனை எழுதியவர் இலங்கை, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ச.வைத்தியலிங்கம் பிள்ளை என்பார். இந்த நூல் 1876 இல் இயற்றப்பட்டது ஆகும். இந்த,சிந்தாமணி நிகண்டில் வணக்கம் என்ற சொல்லிற்கு நிகரான இரண்டு சொற்கள் காணப்படுகின்றன. 1.உபாசிதம் 2. சம்மானனம் ( தகவல்: விருபாவின் ‘சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி’ ) இவை இரண்டும் வடமொழி சொற்கள்.

பொதுவாகப் பார்க்கும்போது, ஒருவரைப் பார்த்து ஒருவர் வணக்கம் சொல்லுதல் தமிழர் வழக்கமன்று. வாழ்த்து தெரிவித்தல் மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி இங்கு வந்த பிறகு அவர்களுடைய மரியாதைகளில் ஒன்றான Good Morning, Good Evening, Good Night கூறும் வழக்கம் இங்கும் புகுந்தது. இதற்கு மாற்றாக ‘நமஸ்காரம்’ என்று சொல்ல ஆரம்பித்தனர்.

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தனித்தமிழ் இயக்கம், மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்நாட்டில் தோன்றிய போது பல வடமொழிச் சொற்கள் தமிழ் வடிவம் பெற்றன. எனவே அப்போது எழுத்திலும், பேச்சிலும் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர், பிரஜை போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர், குடிமகன் என்றாயின. பாராளுமன்றம் நாடாளுமன்றம் ஆயிற்று நமஸ்காரம் மறைந்து ‘வணக்கம்’ வழக்கில் வந்தது இப்படித்தான். (முன்பெல்லாம் தமிழ் சினிமாவில், படம் முடிந்தவுடன் ‘சுபம்’ என்று போடுவார்கள்; பிற்பாடுதான் ‘வணக்கம்’ என்று போட ஆரம்பித்தனர்.)

வணக்கம் சொல்லுவோம்:

எது எப்படி இருந்த போதிலும், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற நன்னூலின் கருத்தினுக்கு ஏற்ப, வணக்கம் என்ற சொல், ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ளும், அன்பைத் தெரிவித்துக் கொள்ளும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு பொது தமிழ்ச் சொல்லாக, தமிழர்கள் மனதினில் ஆழமாக பதிந்து விட்டது. எனவே நாம் வணக்கம் சொல்லிக் கொள்வதில் தவறேதும் இல்லை. வணக்கம்!

50 comments:

  1. வணக்கம் ஐயா. :)

    இப்படிச் சொல்வது நமக்குப் பழகி விட்டது. மாற்றுவது கடினம்..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  2. தமிழ் அல்லாத பல சொற்களை, நாம் தமிழ்ச்சொற்கள் என்றே கருதுகிறோம். வணக்கத்தை விட்டிக்கொடுக்க முடியாது.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. ஒரு வார்த்தை என்ன பொருளில் கூறப்படுகிறது என்பதே முக்கியம் ஆகவே வணக்கம் என்னும்சொல்லையும் தமிழ் என்றே கருதலாம்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // ஒரு வார்த்தை என்ன பொருளில் கூறப்படுகிறது என்பதே முக்கியம் //

      நீங்கள் குறிப்பிடுவது போல, ஒரு சொல் அல்லது வார்த்தை என்ன அர்த்தத்தில் சொல்லப் படுகிறது என்பதே முக்கியம்தான். ஏனெனில் தமிழில் ஒரு பொருள் குறித்த பல சொற்கள், பல பொருள் குறித்த ஒரு சொல் என்று, நிறையவே சொற்கள் உள்ளன.

      Delete
  4. வணக்கம், வாழ்க வளமுடன்.
    நல்ல ஆராய்ச்சி.

    ReplyDelete
  5. வணக்கம் தமிழ்ச்சொல்தான். எப்போது முதல் இந்த சொல் ஒருவரை சந்திக்கும்போது சொல்ல பயன்படுத்தப்பட்டது என்பதுதான் கேள்வி இப்போது. தாங்கள் அதை விரிவாக விளக்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      // வணக்கம் தமிழ்ச்சொல்தான். எப்போது முதல் இந்த சொல் ஒருவரை சந்திக்கும்போது சொல்ல பயன்படுத்தப்பட்டது என்பதுதான் கேள்வி //

      தமிழர்கள், நமஸ்காரம் போன்ற, வடசொற்களை தமிழ் சொற்களில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, தனித்தமிழ் இயக்க மாநாடு ஒன்றில் தீர்மானம் நிறைவேற்றியதாக படித்து இருக்கிறேன். அந்த தீர்மானம் பற்றிய தகவல்களை இந்த பதிவினில் எழுதுவதற்காக புத்தகங்களிலும், இணையத்திலும் தேடினேன் கிடைக்கவில்லை.

      Delete
    2. Dear Ve.Nadamasabapathi!
      இப்பதிவு வணக்கம் ஒரு தமிழ்ச்சொல்லா இல்லையா என்ற கேள்வியைப்பற்றியா? அல்லது வணக்கம் சொல்வது தமிழர் மரபா இல்லையா என்ற் கேள்வியைப்பற்றியா?

      Delete
    3. திரு P விநாயகம் அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வணக்கம் என்பது தமிழ்ச் சொல்தான் என்பதில் ஐயமில்லை. பதிவிலும் அதனையே சொல்லி இருக்கிறேன். ஆனால் ஒருவருக்கு ஒருவர் 'வணக்கம்' என்று சொல்லும் வழக்கம் பிற்பாடு வந்தது என்பதனை விளக்கியே இந்த பதிவு. இதனையேதான் திரு V.நடனசபாபதி அய்யா அவர்களும் "எப்போது முதல் இந்த சொல் ஒருவரை சந்திக்கும்போது சொல்ல பயன்படுத்தப்பட்டது என்பதுதான் கேள்வி" என்று கேட்டுவிட்டு, அதற்கான விளக்கம் இங்கு தரப்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

      Delete
  6. இந்த 'குட்மார்னிங்' விஷயமே அலாதியானது. அலுவலங்களிலெல்லாம் பதவிகளில் கீழானோர் மேனிலை பதவியில் உள்ளோருக்கு முதலில் மார்னிங் சொல்வார்களே தவிர மேனிலையில் உள்ளோர் கீழ் நிலையில் உள்ளோருக்கு முதலில் சொல்லாதவாறு பழக்கப்பட்டிருக்கும். ப்யூன் கிளார்க்கு குட்மார்னிங் சொல்வார்; கிளார்க் தனக்கு மேலான மேனேஜருக்கு குட்மார்னிங் சொல்வார். கிளார்க் ப்யூனுக்கு மார்னிங் சொல்ல மாட்டார். இப்படியாக. அதே மாதிரியாக இந்த வணக்கமும் மாறிப் போனது. யாருக்கு யார் முதலில் காலை வணக்கம் சொல்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் பதவி பாகுபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்களுடன் பணிபுரியும், சக பெண் ஊழியர்களுக்கு குட்மார்னிங் சொன்னாலே விநோதமாக பார்த்த காலமும் உண்டு.

      Delete
    2. ஆம். தாங்கள் சொல்வது உண்மை தான். 'பெண்ணுக்கு ஆண் குட்மார்னிங் சொல்வதாவது?' என்ற நினைப்பில் விளைவது இது.
      பெண்கள் தமக்கு சரி சமமாக வேலைக்கு வந்து விட்டார்களே என்று காழ்ப்புணர்ச்சியையும் பலரிடம் பார்த்திருக்கிறேன். அந்த காழ்ப்புணர்ச்சி பல்வேறு விதங்களில் அதிகார தோரணைகளில் வெளிப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இப்படியானவர்கள் மனைவிமார்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களாய் இருப்பார்கள்.

      Delete
    3. Dear Jeevi!

      மேலதிகாரி உள்ளுழையும்போது பொதுவாக குட்மார்னிங் என்று சொல்லிக்கொண்டே போவார். அல்லது குட்மார்னிங் எவ்ரிபடி என்று சொல்வது வழக்கம்.

      மேலதிகாரி ஒரு கீழ்நிலை ஊழியனைப் பார்த்து குட் மார்னிங் என்றால், அவ்வூழியனே அவரை மதிக்க மாட்டான்.

      Delete
  7. எனது அலுவலக வாழ்க்கையில் இதை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டு செயல்பட்டதுண்டு. அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே வாசலில் காவல் பணியில் இருக்கும் தோழருக்கு அவர் எனக்கு வணக்கம் சொல்வதற்கு முந்திக் கொண்டு நான் அவருக்கு வணக்கம் சொன்னதுண்டு. ஒரு நாள் இதைப் பார்த்த என் நண்பர் ஒருவர் "என்ன அவரைக் கிண்டல் செய்கிறாயா?" என்று கேட்கும் நிலைக்கு இந்த வணக்கம் சொல்லும் முறை, யார் யாருக்கு முதலில் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு அவலப்பட்டுப் போயிருப்பதை உணர்ந்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.வி அவர்களின் அன்பான இரண்டாம் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  8. //ஆரிய பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரைஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது. //

    எதற்கும் ஆரியர் என்று தனித்துக் காட்டிச் சொல்லாவிட்டால் சிலருக்கு பொழுதே போகாது.

    நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில் இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின் அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீ.வி அவர்களின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // எதற்கும் ஆரியர் என்று தனித்துக் காட்டிச் சொல்லாவிட்டால் சிலருக்கு பொழுதே போகாது.//

      பேராசிரியர் நன்னன் அவர்கள் பெரியார் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர். எனவே அவர் அப்படி (ஆரியர் – தமிழர் என்று) பேசியதில் வியப்பேதும் இல்லை. இந்த பதிவினில், வாழ்த்துதல் மட்டுமே தமிழர் வழக்கம், வணக்கம் சொல்லுதல் அன்று, என்று அவர் சொன்னதற்காக மேற்கோள் காட்டுவதற்காக மட்டுமே இங்கு எடுத்து சொல்லப்பட்டது.

      Delete
    2. ஆம்! பொழுது போகாதததுதான் :-) பாரதியாருக்கு பொழுதே போகவில்லை. கட்டுரைகள் ஆரியமென்றே எழுதுவார். இந்தியா ஓர் ஆரிய சம்பத்தே என்று முழங்குவார். போக்கத்தவர். சம்பந்தரோ, ஆரியம் வாழ்க என்று ஒரு பதிகமே போட்டுவிட்டார். காரணம் அவருக்கும் பொழுது போகவில்லை. இப்படி பலர் தமிழகத்தில் பொழுதைப்போக்க முடியாமல் அலைந்தார்கள். அவர்களுள் ஒருவர் நன்னன் எனலாம்.

      முதலில் ஆரியம் என்றால் என்ன பொருளில் எடுக்கப்பட்டது இவர்களால் என்றறிய வேண்டும். வடமொழி, வைதீக மதம் (வேதங்கள். புராணங்கள், உபநிடத்துக்கள், இரு காவியங்கள், சாத்திரங்கள் - வடமொழியில் எழுதப்பட்ட வைதீக சமய நூல்கள்) வடவர்கள் வாழ்க்கை பண்பாடு. இவை வானத்திலிருந்து தமிழர்கள் தலைமேல் விழவில்லை. வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை மறுப்பவன் பித்தலாட்டம் பண்ணுகிறான்.

      இவைதான் ஆரியம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. இவற்றையே ஆரிய சம்பத்து என்கிறார் பாரதியார். இவற்றுல் காணப்படும் கருத்துக்களே ஆரியக்கருத்துக்கள் என்ப.

      ஆக, பிரச்சின அச்சொல்லில்தான், அச்சொல் வைக்கும் பொருட்கள் அல்லவே அல்ல. ஆரியம் என்ற சொல் வேண்டாவெனில் வேறொரு சொல் அதே பொருட்களை வைக்கும்படிதான் சொல்லவேண்டுமே தவிர அப்பொருட்களே இல்லை என்று வாதிட்டால்....?

      Delete
  9. வணக்கம் என்பது தமிழ் சொல்தான். மரபு என்பது நாளடைவில் புழக்கத்தில் ஒன்றி விடும் ஒரு செயலாக்கம்தான் . கனிவு courtesy எனும் குணம் தமிழனுக்கு ஒவ்வாதாதா என்ன. பின் ஏன் அதை தமிழ் மரபல்ல என மறுக்க வேண்டும்.
    தமிழ் மற்றும் தமிழரிஞர்கள் குறித்து திரு பசுபதி ஐயா அவர்கள் பற்பல அரிய தகவல்களை தம் பதிவுகளில் தந்து வருகிறார். தாங்களும் அவற்றை படித்து கருத்திட்டால் அத்தகு முயற்சிகட்கு ஊக்கமாக இருக்கும்.http://s-pasupathy.blogspot.com/
    நன்றி -பாபு

    ReplyDelete
    Replies
    1. அன்பர் பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. ஒருவரை ஒருவர் ஒரு நாளில் முதலாவதாகப் பார்க்கும்போது ஏதாவது சொல்லித்தானே உரையாடலை ஆரம்பிக்க முடியும். எங்க ஊர்ல தெரிஞ்சவங்க யாரையாவது பார்த்த உடனே, 'என்னங்க, நல்லா இருக்கீங்களா' அப்படீன்னுதான் ஆரம்பிப்போம். இங்கிலீஷ்காரன் How do you do? என்று கேட்பான். எல்லா இனங்களிலும் இந்த முகமன் வழக்கத்தில் இன்றும் இருக்கிறது. இது நெருக்கமானவர்களுடன் சந்திக்கும் போது பரிமாறப்படும் முகமன் ஆகும். அதிகம் பார்த்திராவர்களை அறிமுகம் செய்து வைக்கும் போது வணக்கம் சொல்வது பழக்கமாகப் போய்விட்டது. கூடவே கையைக் கூப்பியும் வணக்கம் சொல்வது இயல்பாக மாறி விட்டது.

    இது பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்னும் சூத்திரத்தின் கீழ் அடங்கும்.

    ReplyDelete
    Replies
    1. // 'என்னங்க, நல்லா இருக்கீங்களா' //

      முனைவர் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. "வணக்கம்" என்று தொடங்கி
    "நன்றி" என்று முடிக்கிற
    பண்பாட்டை வழக்கப்படுத்திய பின்
    மாற்றம் ஏற்படுத்த இயலாதே!
    "வணக்கம்" என்று கைகுலுக்கி
    "நன்றி" என்று விடைபெறும்
    பண்பாட்டை வழக்கப்படுத்திய பின்
    மாற்றம் ஏற்படுத்த இயலாதே!
    "வணக்கம்" என்று
    உறவை உருவாக்கி/ புதுபித்து - பின்
    "நன்றி" என்று
    மலர்ந்த/ பழகிய உறவைப் பேணி
    சந்திப்பதும் பிரிவதும் என்ற
    தமிழர் உறவு முறைப் பழக்கத்தை
    மாற்றவும் இயலாது - மாற்ற முயன்றால்
    நல்ல தமிழ் பண்பாடு சீரழியுமே!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய கருத்துதான் எனது கருத்தும். இதனையே இந்த பதிவின் இறுதியிலும் சொல்லி முடித்து இருக்கிறேன் அய்யா.

      Delete
    2. ஐயா கவிஞர் யாழ்பாவாணன்,
      உங்க நாட்டவருடவர்கள் சிலருடன் நான் கனடாவில் பேசியபோ சொன்னார்கள், இலங்கையில் தமிழர்களிடம் வணக்கம் சொல்லும் முறையே முன்பு இருந்தது இல்லை. மேடை பேச்சுக்களின் போதும் மட்டுமே வணக்கத்தை பயன்படுத்தினார்களாம்.இந்திய தமிழ் திரைபடங்களை பார்த்தே வணக்கம் செலுத்துவது மரபு அதன் தாக்கமே இலங்கையில் அதிகமாகி வருகிறது என்றார்கள்.

      Delete
  12. வணங்குவதுதானே 'வணக்கம்'. இதை ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சொல்லிக்கொண்டால் என்ன? எதை எடுத்தாலும் 'ஆரியர்' என்று 'புதிய கதை' சொல்லவேண்டும்? இந்த 'ஆரியர்' என்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தீர்கள் என்றால் 'திராவிடர்' என்ற பதத்துக்கு எதிர்ப்பதமாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கண்டுபிடித்தவர்கள். ஏன் 'திராவிடர்கள்' என்று சொன்னார்கள்? ஏன் 'தமிழர்' என்று சொல்லவில்லை? யோசித்துப்பார்த்தால் விளங்கும்.

    நல்லவேளை, இந்தத் தமிழறிஞர்கள், 'குட் மார்னிங்' என்பதுதான் சங்கத் தமிழ் என்று ஒரே போடாகப் போடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துரைக்கு நன்றி.

      // வணங்குவதுதானே 'வணக்கம்'. இதை ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சொல்லிக்கொண்டால் என்ன? எதை எடுத்தாலும் 'ஆரியர்' என்று 'புதிய கதை' சொல்லவேண்டும்? //

      தமிழ்நாட்டில், திராவிட இயக்கத்தினர், பிராமண எதிர்ப்பு என்ற பெயரில், ஆரியர் திராவிடர் என்ற கோட்பாடு காரணமாக, பல தமிழர் இறை வழிபாட்டு முறைகளையும், தமிழர் விழாக்களையும், ஆரியர் கலாச்சாரம் என்று ஒதுக்கி விட்டனர். பங்கேயா கண்டம் மற்றும் இலெமூரியா கண்டம் கோட்பாடுகள் என்று நுணுகிப் பார்த்தால் எல்லோருமே தமிழினம்தான்.

      Delete
    2. தமிழ் இளங்கோ சார்... இந்த சப்ஜெக்டை எழுதினா, தேவையில்லாத கருத்து மோதலாயிடக்கூடாதுன்னு எழுதலை. இப்போ, சிவனடியார்கள் (ஓதுவார்கள்) இருக்காங்க, அவங்க சொல்வது (ஓதுவது) எல்லாம் தமிழ்ல உள்ளவைகள், வைணவர்களுக்கும் தமிழ்ல உள்ள திவ்யப்ப்ரபந்தம்தான் முழுமுதல் நூல். இந்த இரண்டு பிரிவிலும், பிராமணர்களும் இருக்காங்க. அப்போ, தமிழர்கள் என்பவர்கள் 'இறை வழிபாடே' இல்லாமல் இருக்கறவங்கதானா? பஹ்ருளி ஆறு, இலெமூரியா கண்டம்-இவைகளெல்லாம், அறிவியல்பூர்வமாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் ஒத்துக்கொள்கிறோம், ஆனால் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற தமிழர் நூல்களையும் 'ஆரியர் கதைகள்' என்று ஒதுக்கமுடியுமா?

      இப்போ உள்ள பசங்கள்ட, தமிழர்களின் காலை உணவு எதுன்னு கேட்டுப்பாருங்க, 'இட்லி தோசை' என்றுதான் நூற்றுக்கு 99 பேர் சொல்வார்கள். இதுவா நம் உணவு, 60 வருடங்களுக்கு முன்பு?

      எங்க அப்பா சொல்லுவார், பேராசிரியர் நன்னன் அவர்கள் மிகுந்த திறமைசாலி என்று (அவரும் ஆசிரியப் பணியில் இருந்தவர்தாம்). அதுபோல் நன்னன் அவர்கள் தொலைக்காட்சியில் (அந்தக் காலத்தில்) தமிழ் அருமையாக சொல்லித் தருவார் (எதிர்ல நிஜமாகவே நாம மாணவர்கள் இருப்பதாக நினைப்பதுபோல்). ஆனால் அவருடைய இத்தகைய கருத்துகள்தான் எனக்குப் பிடிப்பதில்லை.

      Delete
    3. வடகலைப் பிராமணர்களுக்கு ஆழ்வார்களின் பிரபந்தம் முதனூல் இல்லை. எது முதனூல்? வடமொழி வேதங்களா? இல்லை, ஆழ்வார்களின் தமிழ்ப்பாடல்களா? என்ற கேள்வியே வைணவத்தில் பெரும்பிணக்கை உருவாக்கிய கதை நன்கு தெரிந்துமா, வைணவர்களுக்கு பிரபந்தம் முத்னூள் என்று பேசுகிறீர்கள்?

      திருக்குறளை ஆரிய நூல் என்று எவரேனும் சொன்னதுண்டா? திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒன்றாக வைத்து பேசுவதே குறும்புத்தனம். சிலப்பதிகாரம் சஙக்ம மருவிய காலத்தில் (அதாவது காப்பிய காலம்) எழுதப்பட்டது. சிலர் அதற்கும் பின் எழதப்பட்டது என்றும் சொல்வர். ஆனால் எவருமே வள்ளுவர் காலத்தில் இளங்கோ வாழ்ந்தார் என்று சொல்லவே இல்லை.

      சோ-கால்ட் ஆரிய கருத்துக்கள் நன்கு விரவப்பட்டு எழுதப்பட்டதே சிலப்பதிகாரம். இளங்கோ காலத்தில் தமிழர் வாழ்க்கையில் வைதீக இந்துமதம் தழைத்தோங்கியது. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தீவலம் வந்து பார்ப்பனர்கள் மந்திரம் ஓத நடந்ததுதான் கண்ணகி-கோவலன் மணம். மாடல மறையோன் என்ற வைதீக பாத்திரத்தையே வைத்துவிட்டார் இளங்கோ. எனவே திராவிடர் எனத் தங்களை அடையாளம் கண்டோர், சிலப்பதிகார்த்தை ஆரிய நூல் என்றால் வியப்பேது? பெரியாரின் கடுங்கோபத்துக்கு சிலப்பதிகாரம் ஆனதற்கு காரணம் அதன் ஆரிய கருத்துக்களே. (திருக்குறளிலும் உள; ஆனால் இவ்வளவு பட்டவர்த்தனமாக புகுத்தப்படவில்லை)

      இளங்கோ ஒரு சமணர். அவர்கள் சமயம் வடக்கிலிருந்து வந்தது; அதன் வடிவமும் வாழ்க்கையும் வடபண்பாட்டில் ஊறியவையே. பிறப்பால் தமிழர்களாயினும் அவர்களுக்குத் தமிழருக்கென ஒரு பண்பாடு இருந்ததா? அதை நாம் கவனிக்க வேண்டுமே என்ற அக்கறையில்லை. வடமொழியைப்பேணியவர்கள் அவர்கள். அவர்களிடமிருந்த நன்றிகெட்ட வடமொழி வடபண்பாட்டு காதல் மற்றவருக்கும் தொற்றியது. சிலப்பதிகாரம் இவ்வேலையை நன்கு செய்தது. 11ம் நூற்றாண்டின் மணிப்பிரவாளம் ஓர் எடுத்துக்காட்டு.

      Delete
    4. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // தமிழ் இளங்கோ சார்... இந்த சப்ஜெக்டை எழுதினா, தேவையில்லாத கருத்து மோதலாயிடக்கூடாதுன்னு எழுதலை. //

      நானும் இந்த பதிவு எழுதும்போதே, அதிலும் பேராசிரியர் நன்னன் அவர்களின் கருத்தினை எடுத்தாளும்போதே, என்னென்ன கருத்துக்களை யார் யார் சொல்லுவார்களோ என்று எண்ணியே பதிந்தேன். தமிழ், தமிழன் என்றாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ விவாதம் தொடங்கி விடும்

      // இப்போ, சிவனடியார்கள் (ஓதுவார்கள்) இருக்காங்க, அவங்க சொல்வது (ஓதுவது) எல்லாம் தமிழ்ல உள்ளவைகள், வைணவர்களுக்கும் தமிழ்ல உள்ள திவ்யப்ப்ரபந்தம்தான் முழுமுதல் நூல். இந்த இரண்டு பிரிவிலும், பிராமணர்களும் இருக்காங்க. அப்போ, தமிழர்கள் என்பவர்கள் 'இறை வழிபாடே' இல்லாமல் இருக்கறவங்கதானா? பஹ்ருளி ஆறு, இலெமூரியா கண்டம்-இவைகளெல்லாம், அறிவியல்பூர்வமாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் ஒத்துக்கொள்கிறோம், ஆனால் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற தமிழர் நூல்களையும் 'ஆரியர் கதைகள்' என்று ஒதுக்கமுடியுமா? //
      இங்கே நீங்கள் மேலே குறிப்பிட்ட யாவும் எனது கருத்துக்களோ அல்லது அவைகளை ஆதரித்து இந்த பதிவினில் சொல்லப்பட்டவையோ அல்ல. லெமூரியாக் கண்ட கோட்பாடு மட்டுமல்ல, மற்ற எந்த கோட்பாடும், மனித இனத்தின் தோற்றம் பற்றிய இறுதியான முடிவு அல்ல.

      // இப்போ உள்ள பசங்கள்ட, தமிழர்களின் காலை உணவு எதுன்னு கேட்டுப்பாருங்க, 'இட்லி தோசை' என்றுதான் நூற்றுக்கு 99 பேர் சொல்வார்கள். இதுவா நம் உணவு, 60 வருடங்களுக்கு முன்பு? //
      எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

      // ஆனால் அவருடைய இத்தகைய கருத்துகள்தான் எனக்குப் பிடிப்பதில்லை. //

      பேராசிரியர் நன்னன் அவர்களுடைய கருத்தை இங்கு சொன்னதாலேயே, அவருடையை எல்லா கருத்துக்களையும் நான் ஏற்றுக் கொண்டு விட்டதாக அர்த்தம் இல்லை. நான் இறை நம்பிக்கை உள்ளவன்.

      Delete
    5. விநாயகம் - உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. முதல் முறையாக (என்று நினைக்கிறேன்) தமிழில் உங்கள் பின்னூட்டம் காண்கிறேன். மகிழ்ச்சி.

      உங்கள் வாதங்கள் சரியாகத்தான் தோன்றுகிறது. திருக்குறள் ஆரிய நூல் என்று திராவிடர்கள் ஒத்துக்கொண்டிருந்தால், 'தமிழர்களுக்கு' என்று ஒரு நூலும் இல்லை என்று சொன்னதாகிவிடும்.

      'அந்தணர் என்போர் அறவோர்' என்பதும், 'மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்று சொன்னதும், 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்றதும் 'நற்றாள் தொழார் எனின்' என்றதும் வள்ளுவனே.

      மிக்க நன்றி, அர்த்தபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு.

      Delete
  13. 150 ஆண்டுகளுக்கு மேலாக நம்மை ஆண்ட ஆங்கிலேயரின் வழக்கங்களையும், பழக்கங்களையும் நாம் தத்து எடுத்துக் கொண்டு விட்டோம். ஆங்கிலேயருக்கு ஆலவட்டம் வீசியவர்களுக்கு பண்பாடு, பழக்க வழக்கம் என்று ஆங்கிலேயரின் வழி முறைகளை கைக்கொள்வது தேனாக இனித்தது. ஆரிய வெறுப்பில் மிதந்தவர்கள், ஆங்கில பழக்க வழக்கங்களை அதற்கு மாறாகக் கைக்கொண்டனர். அரசாங்க நிர்வாக இயந்திர செயல்பாடுகளிலும் Class I, Class II, Class III, Class IV என்று பிரித்தாளுவதற்கு பழக்கப்பட்டவன் பிரித்தான். இன்றும் Class IV ஊழியர்களைக் குறிப்பிடுவதற்க்காக 'கடைநிலை ஊழியர்' என்று வெட்கமில்லாமல் அடையாளம் காட்டுகிறோம். Class IV-க்கு தமிழாக்கம் கடைநிலை ஊழியராம்!

    ReplyDelete
    Replies
    1. அன்பான எழுத்தாளர் ஜீவி அவர்களின் மறுவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
    2. படிநிலைகள் என்பது hierarchy என்று பொருள்படும். ஒரு நிறுவனம் படிநிலைகளைக் கொண்டதுவே. அப்படி இல்லாமலிருக்க வேண்டுமானால், ஓராசிரியப்பள்ளிக்குத்தான் போய்ப்பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட படிநிலைகளில் முதல், இடை, கடை இல்லாமல் எப்படி இருக்க முடியும். படிநிலைகளில் கடைசிப்படியில் இருப்பவன் கடை நிலை ஊழியன் தானே?

      Delete
    3. படிநிலைகள் என்பது ஆங்கிலேயர் வழி வந்தது. ஆங்கில சொற்களைத் தமிழாக்கம் செய்யும் பொழுது தமிழில் ஒரு புதுச் சொல்லை உருவாக்காமல் ஆங்கிலச் சொல்லின் நேரடி பெயர்ப்பாக இருக்கிறதே என்பது தான் நான் சொல்ல வந்தது.

      ஊட்டி மலைப் பகுதியில் நீங்கள் அறிவிப்பு பலகைகளைப் பார்த்திருக்கிறீர்களா?..

      Hairpin bends கொண்டை ஊசி வளைவு என்றும்

      Blind curve என்பதனை குருட்டு வளைவு என்றும்

      நேரடியாக ஆங்கில வார்த்தைகளுக்கு அப்படியே தமிழாக்கம் செய்யும் அவலத்தைத் தான் குறிப்பிட்டேன்.

      Delete
  14. வணக்கத்திற்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா அப்ப நாம் 'வாழ்க வளமுடன்' என்பதை சொல்ல வேண்டுமில்லையா ஆனாலும் கடைசியில் வணக்கம் என்பது புதியன புகுத்ததலில் வருகிறது என்று காப்பாறிவிட்டீர்கள் நன்றி, வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களது கருத்தினுக்கு நன்றி. ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், ஒரு வரலாறு ஒளிந்து இருக்கும்.

      Delete
    2. //பொதுவாகப் பார்க்கும்போது, ஒருவரைப் பார்த்து ஒருவர் வணக்கம் சொல்லுதல் தமிழர் வழக்கமன்று. வாழ்த்து தெரிவித்தல் மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி இங்கு வந்த பிறகு அவர்களுடைய மரியாதைகளில் ஒன்றான Good Morning, Good Evening, Good Night கூறும் வழக்கம் இங்கும் புகுந்தது. இதற்கு மாற்றாக ‘நமஸ்காரம்’ என்று சொல்ல ஆரம்பித்தனர்.//

      குட்மார்னிங், ஈவ்னிங், நைட் என்பனவும் க்ரீட்டிங்க்ஸே. அதாவது வாழ்த்துகள். ஆங்கிலேயர்கள் இயற்கையைப் பற்றிக்குறிப்பிடும் வழக்கமுடையோர். அதாவது அன்றாட பேச்சிலும். ஒரு ஆங்கிலேயரும் இன்னொரு ஆங்கிலேயரும் ஒரே பெட்டியில் பயணிக்கும் போது பேசிக்கொள்வதில்லை. பேசினால் அளவுக்கு மீறி பேசமாட்டார்கள் எனப்தைத்தான் Britishi stiff upper lip என்ப.

      பேசவேண்டுமென்ற நெருக்கடி வரும்போது அவர்கள் அமைதிப்பயணத்தை உடைத்து பேச்சைத் தொடங்க, முதலில் எடுப்பது: இன்று நல்ல தட்பவெட்பம் நிலவுகிறது. இல்லையா? என்பதுதான். எனவே ஆங்கில சொல்வடை (இடியம்) breaking the ice or thaw. Idioms and phrases are mirrors to their culture.

      நாம் இருவகை மனிதர்களைப்பார்க்கிறோம். ஒருவர், தெரிந்தவர்கள்; மற்றவர்கள். அறிமுகமில்லாதவர்கள். ஆனால் பேசியாக வேண்டும். முன்னவர் பற்றி பிரச்சினையே இல்லை. எப்படி இருக்கிறீர்கள்? எல்லாரும் நலமா? அல்லது ஏதாவது சிறப்பா (விசேசமா); நெல்லை வழக்கத்தில் ''தூராமா? (எங்கே போகிறீர்கள் என்றால் அபசகுனமாம். எனவே தூரமா?). ஆங்கிலேயரும் ஹவ் டு யு டூ என்று தெரிந்தவர்களைத்தான் கேட்பார்கள். அது ஒரு முகமன் மட்டுமே. ஏனெனில் அதற்கான பதில் அதே கேள்விதான் என்று நர்சரி மிஸ் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருப்பார்.

      இப்போது அறிமுகமில்லாதவரிடம் எப்படி முதற்பேச்சைத்தொடங்க வேண்டும் எனப்துதான் கேள்வி. அதை எப்படி வாழ்த்து என்று சொல்லமுடியும்? எப்படி பழந்தமிழர் அறிமுகமில்லாதவரிடம் பேச்சைத்தொடங்கினார்கள்? இக்கேள்வியைத்தான் ஆராய வேண்டும். வடமொழி ''நமஸ்காரம்'' அறிமுகமில்லாதவரிடன் பேச்சைத்தொடங்க சரி. தமிழருக்கு எது சரி? வாழ்க வளமுடன் என்றால் அதிகப்பிரசிங்கித்தனம். வணக்கம் என்றால், அது ஆரிய வழக்கம். பின் ? எப்படி தமிழர்கள் தொடங்கினார்கள்?

      Delete
    3. திரு P விநாயகம் அவர்களின் விரிவான கருத்துரைகளுக்கு நன்றி. மேலே மற்ற நண்பர்களின் கருத்துரைகள் மற்றும் எனது மறுமொழிகளிலேயே நிறையவே அலசப்பட்டு விட்டது. எனவே சுருக்கமாகவே முடித்து விட்டேன்.

      Delete
  15. வணக்கம் என்பது தமிழ் சொல்தான் ஐயா
    ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவிப்போம்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. வணக்கம் என்பது தமிழ்ச் சொல்தான் என்பதில் ஐயமில்லை. பதிவிலும் அதனையே சொல்லி இருக்கிறேன். ஆனால் ஒருவருக்கு ஒருவர் 'வணக்கம்' என்று சொல்லும் வழக்கம் பிற்பாடு வந்தது என்பதனை விளக்கியே இந்த பதிவு.

      Delete
  16. வணக்கம் என்பது சரியாகத் தோன்றுகிறது. என் நண்பர் திரு சிவசூரியன் தொலைபேசியில் பேசும்போது வணக்கம் என்றே பேச்சை ஆரம்பிப்பார். அந்த முறையை நான் தொடர்ந்து கடைபிடிக்கிறேன். நேரில் பேசும்போதும் தொடரகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

      Delete
  17. முனைவர் அவர்கள் பின்னூட்டம் படித்துத் தான் நினைவுக்கு வந்தது.

    பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களும் ராமாவரம் தோட்டத்தில் இருந்து
    அவரே தொலைபேசியை எடுத்து விட்டால், "வணக்கம். தோட்டம்.." என்றே தன் பேச்சை ஆரம்பிப்பார்.

    ReplyDelete
  18. ‘வணக்கம் சொல்லாதே’ – பேராசிரியர் நன்னன் அய்யாவின் சிந்தனை அவசியம் அனைவரும் சிந்திக்க வேண்டியது.

    நன்றி.

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. //நானறிந்த வரையில் நான் படித்த பழைய தமிழ் இலக்கியங்களில் எங்கும், மக்கள் ‘வணக்கம்’ என்று சொல்லிக் கொண்டதாகவே தெரியவில்லை.//
    உங்க பதிவு மூலம் வணக்கம் சொல்லுதல் தமிழர்கள் மரபு கிடையாது என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி.
    மனிதனை மனிதன் வணங்குவது என்பது ஒரு நல்ல செயல் கிடையாது.
    அதுவும் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் வருமானதிதிற்கு ஏற்படி வருமானம் குறைந்த ஊழியர்களுக்கு குட்மார்னிங் கூட சொல்ல விரும்பாத மேலதிகாரிகள் கொண்ட ஒரு நாட்டில்:(
    அறிமுகமில்லாதவர்களிடம் உரையாடலை ஆரம்பிக்க தயக்கமாக இருந்தால், கந்தசாமி ஐயா சொன்னது போல் என்னங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்டு பேச்சை ஆரம்பிக்கலாம். சமவயதை சேர்தவர்களிடம் ஹலோ, அல்லது ஹாய் என்று சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம்.
    //வணக்கம் சொல்லுதல் தமிழ் மரபா?//
    வணக்கம் சொல்லுதல் திராவிடர்களின் மரபாக இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வேகநரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // மனிதனை மனிதன் வணங்குவது என்பது ஒரு நல்ல செயல் கிடையாது. //

      நான் ஒருமுறை, வயதான முஸ்லிம் பெரியவர் ஒருவரைப் பார்த்து வணக்கம் சொன்னபோது, அவரும் இதே கருத்தினைதான் எதிரொலித்தார். அவர் சொன்னது “ நாம் அல்லா ஒருவருக்குதான் வணங்க வேண்டும் "

      // வணக்கம் சொல்லுதல் திராவிடர்களின் மரபாக இருந்திருக்கலாம். //

      நண்பரே சிலரைப் போல சும்மா அடிச்சு விடக் கூடாது.

      Delete