புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ஒரு கவிதை
நூலை ரொம்ப நாட்களாக வாங்க முயற்சி செய்து, சென்ற மாதம்தான், புதுக்கோட்டை புத்தகத்
திருவிழாவில் வாங்க சந்தர்ப்பம் அமைந்தது. அந்த கவிதை நூலின் பெயர் ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்பதாகும். நூலை வாங்கி,
வீட்டிற்கு வந்தவுடனேயே படிக்கத் தொடங்கி படித்தும் முடித்து விட்டேன்.
ஆசிரியர் பற்றி
தேவதைகளால் தேடப்படுபவன் என்ற இந்த நூலின் ஆசிரியர் கவிஞர் தங்கம்
மூர்த்தி அவர்களை நான் நேரில் சந்தித்தது புதுக்கோட்டை வீதி இலக்கிய கூட்டங்களில் தான்.
ஒருமுறை புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ் பயிற்சி முகாமில் முனைவர் B.ஜம்புலிங்கம்
அய்யா அவர்கள், தமிழ் விக்கிபீடியாவில் இவரைப் பற்றி எழுதி, தொடங்கி வைத்தார். பின்னர்
அவரே அங்கு விரிவாக்கமும் செய்துள்ளார்.
தங்கம் மூர்த்தி தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த
ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். புதுக்கோட்டை
மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில்
19 ஆகஸ்டு 1964இல் பிறந்தார். இவரது தந்தை கே.கே.தங்கம், தாய் ஜெயலட்சுமி. சிறந்த இலக்கியவாதி
மற்றும் கல்வியாளர் என்ற நிலையிலும் இவர் அரும்பணியாற்றிவருகிறார். சுமார் 10 கவிதை
நூல்களை எழுதியுள்ளார். இவருடைய கவிதைகள் இலக்கிய மட்டும் பட்டிமன்ற மேடைகளில் மேற்கோளாகக்
காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இவரது நூல்கள் பாடத் திட்டத்தில்
உள்ளன. இவரது கவிதை நூல்கள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், தெலுங்கு,
கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ
விருது, செல்வன் காக்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மத்திய அரசின்
தேசிய நல்லாசிரியர் விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது உள்ளிட்ட பல
விருதுகளைப் பெற்றுள்ளார். ( நன்றி https://ta.wikipedia.org )
மனதைத் தொட்ட கவிதை
இந்த கவிதை நூலைத் திறந்ததுமே சிறு முன்னுரையாய் ஒரு கவிதை. என்
மனதைத் தொட்ட வரிகள். வெள்ளந்தியாய் அந்த கிராமத்து மக்கள் பேசும் இயல்பான நடையில்.
வார்த்தை ஜாலம் ஏதுமில்லை. கவிஞரின் மனதிலிருந்து விழுகின்றது கண்ணீர் அருவி.
பார்வை
மங்கலாய்த்
தெரியுதேப்பா
என்றார்
அறுவை
சிகிச்சைக்குப் பிறகு
இவ்வளவு
வெளிச்சமானதா
இவ்வுலகம்
என்றார்
இப்போது
மங்கலாய்த்
தெரிகிறதெனக்கு
அம்மா
இல்லா
இவ்வுலகு (இந்நூல் பக்கம்.3)
கவிதையைப் படித்தவுடன், எனது அம்மா நினைவில் வந்தார்– என்னவென்றே
நான் எழுதுவது. கனத்த மனத்தோடு அடுத்து நகர்ந்தேன்
.
சித்தர் ஞானம்
காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடி வைத்தான்
ஒரு கவிஞன். வாழ்க்கை என்றால் என்ன என்று உங்களுக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.
நிச்சயம் சரியாகச் சொல்ல முடியாது. நமது கவிஞரும் ‘மெய் உணர்தல்’ என்ற தலைப்பில் ஒரு
கவிதையைச் சொல்லி இருக்கிறார்.
எல்லாம்
அடைந்துவிட்டதைப்
போலிருக்கிறது
எல்லாம்
இழந்துவிட்டதைப்
போலவும் இருக்கிறது
…….
……. ……. …….
நன்றாய்
வாழ்ந்ததைப்
போலிருக்கிறது
என்றோ
செத்ததைப்
போலவும் இருக்கிறது. (இந்நூல் பக்கம்.3)
இங்கே இவர் எழுதிய வரிகள் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம் என்று
உணர்த்துவது போல் இருக்கிறது.
திருவிழாக்கள்
விழா என்றாலே மகிழ்ச்சிதான். ஒவ்வொரு ஆண்டும் விழாக்கள் வருகின்றன.
சின்ன வயது சந்தோஷம் இப்போதும் இருக்கின்றதா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.. இன்றும்
திருவிழா என்றால், புத்தாடை அணிந்து இனிப்புடன் குதூகலிப்பது குழந்தைகள்தாம். கவிஞரின்
வரிகள் இவைகள்.
திருவிழாக்களை
வரவேற்று
அழைத்து
வருகிறார்கள்
குழந்தைகள்
குழந்தைகளைக்
கண்டதும்,
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள் (இந்நூல் பக்கம்.14)
எதார்த்தமான உண்மைகள்
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் சொல்லும் பெரும்பாலான கவிதைகள் எதார்த்தமானவைகளாக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மைகளாக
உள்ளன. இதனை தமிழ் இலக்கியத்தில் ‘இயல்பு நவிற்சி அணி’ என்பார்கள்.
இப்போதெல்லாம் உடற்பயிற்சியின் வரிசையில் நடைப்பயிற்சி (Walking)
என்பது ரொம்ப ரொம்ப அவசியம் ஆகி விட்டது. அதிலும் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும்
நிறையவே ஆலோசனைகள்.. இந்த நடத்தல் (Walking) குறித்து கவிஞர் கண்ட காட்சி இது.
நடைப்பயிற்சி
செய்வோரில்
பலரும்
நடைப்பயிற்சி
செய்வதில்லை
…..
…. …. …. ….….. …. …. …. ….
அலைபேசியில்
பேசியே
அத்தனை
சுற்றும்
முடிப்போருண்டு
……
…. … … ….. …..….. …. …. …. ….
மருத்துவருக்கு
பயந்தும்
மனைவிக்கு
பயந்தும்
வருவோருண்டு
……
…. … … ….. …..….. …. …. …. ….
பாதியில்
நிறுத்தி
பழங்கதை
உரைத்து
கெடுப்போருண்டு
……
…. … … ….. …..….. …. …. …. ….
என்போல்;
எப்போதாவது
நடப்போருண்டு
……
…. … … ….. …..….. …. …. …. ….
என்று நிறையவே சொல்லிச் செல்கின்றார். (இந்நூல் பக்கம் .49 -
50)
இப்போதெல்லாம் ‘தோட்டி முதல் தொண்டைமான் வரை’ எல்லோரும் விசிட்டிங்
கார்டு அடித்து வைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டு ‘சாப்பாடு பிரமாதம் … யார் சமையல்?” என்று சொல்லி விட்டால் போதும், உடனே அந்த
சமையல் மாஸ்டர் அல்லது காண்டிராக்டர் நம் முன்னே வந்து அவருடைய விசிட்டிங்
கார்டை தந்து விட்டு, “சார் யாரும் கேட்டால் சொல்லுங்கள்” என்று தருகிறார். இதுவாவது
பரவாயில்லை. ஏதேனும் துக்க நிகழ்ச்சிக்கு போகும்போது, அங்கே ஆடி பாடி பறையோ அல்லது
ட்ரம்மோ அடிப்பவர்களைப் பார்த்து “எந்த ஊர் செட்” என்றவுடனேயே ஒரு கார்டை நீட்டி “சார்
நாங்க திருவிழாவிற்கும் அடிப்போம் “ என்று சொல்லுகிறார்கள். எனக்கு இது மாதிரியான விசிட்டிங்
கார்டு அனுபவங்கள் நிறையவே உண்டு.
கவிஞர் தனது அனுபவத்தை நகைச்சுவையாகவே சொல்கிறார்.
அந்த
மரண
ஊர்வலத்தின்
முன்
பகுதியில்
பறையடித்துச்
சென்றவர்களில்
ஒருவன்
என்னிடம் தந்தான்
அக்குழுவின் விசிட்டிங் கார்டை
அக்குழுவின் விசிட்டிங் கார்டை
பரிந்துரைக்கச்
சொல்கிறானா
பயன்படுத்தச்
சொல்கிறானா (இந்நூல் பக்கம் 57)
குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே அரசாங்கம் மதுக்
கடைகளை திறந்து வைத்து குடிக்கச் சொல்லுகிறது. இப்போது குடிப்பது என்பது பேஷனாகி விட்டது
சிலருக்கு.. ‘குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது பழமொழி. கவிஞரின் வரிகள்
கீழே.
குறைந்த
ஒளியின்கீழ்
ச்சியர்ஸ்
சொல்லிக்
கொள்கின்றன
கோப்பைகள்
திரவத்துளி
பட்டதும்
மெல்ல
நழுவி
வெளியேறுகின்றன
பொய்கள்
உண்மைகளோ
தள்ளாடியபடி
தவிக்கின்றன (இந்நூல் பக்கம் 40)
இதுபோன்ற தள்ளாடல்கள் இக்கவிதையில் நிறையவே உண்டு குடித்துப் பார்க்கவும்
. மன்னிக்கவும் படித்துப் பார்க்கவும்.
நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களைப் பற்றி இரண்டு பக்கக் கவிதையும் இந்நூலில் உண்டு.
இன்னும் வளர்ப்பு வண்ண மீன்கள், தொட்டிச் செடிகள், செல்லப் பிராணிகள், பறவைகள், மனுக்கள் படும்பாடு,
திருட்டு புளியம்பழம் – என்று நிறையவே தொட்டுச் செல்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி
அவர்கள்.
எனக்குத் தெரிந்து கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் புதுக்கோட்டை
புரவலர். இன்னும் கல்விப் புரவலர் என்றும் சொல்லலாம். புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இரண்டு புத்தகத் திருவிழாக்களின் வெற்றிக்கு இவரது ஆர்வமும் முனைப்புமே முக்கிய காரணம்
எனலாம். இவரது மேடைப் பேச்சை நிறைய சந்தர்ப்பங்களில் ரசித்து கேட்டு இருக்கிறேன். வாசிப்பு
அனுபவம் உள்ளவர். இவருக்குள் நிறையவே அனுபவங்கள். எனவே இவர் கவிதை படைப்பதோடு நின்றுவிடாமல்,
நிறைய கட்டுரைகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எழுதி, அவற்றையும் நூல்களாக வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
நூலின்
பெயர்: தேவதைகளால் தேடப்படுபவன்
நூலின் வகை: கவிதை நூல்
ஆசிரியர்: தங்கம் மூர்த்தி
நூலின்
விலை:
ரூ
60 பக்கங்கள்: 70
பதிப்பகம்:
படி வெளியீடு, சென்னை –
600078 பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், Ph 044 65157525 – Mobile 91
8754507070
எடுத்துக் காட்டிய கவிதைகள், தொகுப்பு முழுவதையும் வாசிக்கத் தூண்டுகிறது. அதிலும் அம்மா பற்றிய கவிதை மனதைத் தொட்டது.
ReplyDeleteநல்லதொரு அறிமுகம். நன்றி.
நண்பர் வெங்கட் நாகராஜின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபடித்துள்ளேன், படிக்கவேண்டிய தொகுப்பு. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteஇவரைப் பற்றி புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ் பயிற்சி முகாம் நடந்துகொண்டிருந்தபோதே புகைப்படம் எடுத்து உடனடியாக விக்கிபீடியாவில் பதிந்த அனுபவம் வித்தியாசமானது.
ReplyDeleteமுனைவர் அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. புதுக்கோட்டை கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி - ஒருநாள் முகாம் மறக்க முடியாத இனிய அனுபவம்.
Deleteஇந்நூலினை படித்துள்ளேன் ஐயா
ReplyDeleteகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வெறும் கவிதையோடு சுருங்கிவிடக் கூடாது என்பதுதான் எனது எண்ணமும் ஐயா.
நன்றி
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபுதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு வந்திருந்தாரா அறிமுகமிருக்கவில்லை உங்கள் நூல் விமரிசனமெனக்குள் ஒரு ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது என்றால் புரிகிறது என்று நினைக்கிறேன்
ReplyDeleteமரியாதைக்குரிய ஜீ.எம்.பி அய்யா அவர்களின் வருகைக்கும், கோடிட்டுக் காட்டிய உங்களது மின்னூல் பற்றிய குறிப்புக்கும் நன்றி. அச்சிட்டு வெளியான ‘வாழ்வின் விளிம்பில்’ – என்ற உங்களது நூலைப் பற்றிய எனது பார்வையை உடனே எழுதிய என்னால், தொழில் நுட்பப் பிரச்சினை காரணமாக, ஏனோ உங்களது மின்னூல் பக்கம் எனது பார்வையை திருப்ப முடியவில்லை. எனக்கும் உறுத்தலாகவே இருக்கிறது. மீண்டும் முயற்சி செய்கிறேன்.
Deleteநினைவில் நீ என்னும் நாவலின் பிரதியை அனுப்பட்டுமா அதுவே மின்னூலானது
Deleteநல்லது அய்யா. அனுப்பி வையுங்கள்.
Deleteஅழகிய கவிதைகளை எடுத்துக் காட்டிய தங்களது விமர்சனம் அருமை நண்பரே கவிஞர் திரு. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteகவிதைத் தொகுப்பை சிறப்பாக விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் பகிர்ந்துகொண்ட கவிதைகள் நன்றாக இருந்தது.
ReplyDelete"பரிந்துரைக்கச் சொல்கிறானா பயன்படுத்தச் சொல்கிறானா " - ரசித்தேன்.
நல்ல அறிமுகம். எழுதிய உங்களுக்குப் பாராட்டுகள்.
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. அவருடைய மற்ற கவிதைத் தொகுப்புகளையும் விலைக்கு வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலில் நானும் இருக்கிறேன்.
Deleteநீங்கள் பகிர்ந்து கொண்ட பக்கத்திலிருந்து கிடைத்த அத்தனை கவிதைகளும் அருமை.. என்னை இரு தடவைகள் படிக்க வைத்தது கவிதைகளுக்காகவே.
ReplyDelete// அத்தனை கவிதைகளும் அருமை.. என்னை இரு தடவைகள் படிக்க வைத்தது கவிதைகளுக்காகவே. //
Deleteபரவாயில்லை அவருடைய கவிதை வரிகள், உங்களை எனது வலைத்தளத்தில் கருத்துரை எழுத வைத்து விட்டது. சகோதரிக்கு நன்றி.
புத்தகத்தின் பெயரே வசீகரிக்கின்றது. பகிர்ந்து கொண்ட கவிதைகள் எல்லாம் அருமை நன்றி அறிமுகநூலுக்கு.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// புத்தகத்தின் பெயரே வசீகரிக்கின்றது //
வாசகர் புத்தகத்தின் தலைப்புக் கவிதையை, புத்தகத்தில் படித்துப் பார்க்க வேண்டும் என்பதனால் நான் இங்கு அதனை இப்பதிவினில் சொல்லவில்லை.
அவரும் வசீகரமானவர்தான், சுவையான கவிதைப் பேச்சிலும்.. ஜெயா தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு 2017 சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் வசீகரப் பேச்சை இங்கு கண்டு கேட்டுப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=B37YpFkgngU&list=PLAuWpI6cTioq6ep9TEk-XBTGmSa3kzFQH
மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள், மின்னஞ்சல் வழியே தனது கருத்துரைகளைத் தந்து இருக்கிறார்.
ReplyDeleteதிரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(1)
நூலாசிரியர் பற்றிய தங்களின் அறிமுகம், படத்திலுள்ள அவர்களின் தோற்றத்தைப்போலவே மிகவும் அழகாகவும், அருமையாகவும், கம்பீரமாகவும் உள்ளது. சபாஷ்!
- VGK
>>>>>
அன்புள்ளம் கொண்ட திரு V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மேலே பூவிழி அவர்களுக்கு நான் தந்த மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.
Deleteதிரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(2)
முன்னுரைக் கவிதையைப் படித்ததும், எனக்கு நான் செய்துகொண்ட கண் அறுவை சிகிச்சை நினைவுக்கு வந்து மகிழ்வித்தது.
http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html
- VGK
>>>>>
தங்களின் இந்த பதிவினைப் படித்ததும், எனது கண் சிகிச்சை சம்பந்தமாக தங்களிடம் போனில் ஆலோசனை கேட்டதும், எனக்கு நினைவில் வருகிறது.
Deleteதிரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete3)
’சித்தர் ஞானம்’ மற்றும் ’திருவிழாக்கள்’
இயல்பாகவும் மகிழ்வூட்டுவதாகவும் உள்ளன.
- VGK
>>>>>
திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(4)
'எதார்த்தமான உண்மைகள்'
மிகவும் யதார்த்தமாகவும், கடைசி வரிகள் என்னைக் குறிப்பிட்டுச் சொல்வது போலவும் உள்ளது :)
- VGK
>>>>>
தி.தமிழ் இளங்கோWednesday, December 27, 2017 7:43:00 pm
Deleteஎன்போல்;
எப்போதாவது
நடப்போருண்டு -
என்ற கவிஞரின் கவிதை வரிகளைச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் இந்த வரிகள் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(5)
//பரிந்துரைக்கச் சொல்கிறானா
பயன்படுத்தச் சொல்கிறானா//
என்று முடியும் இந்தக்கவிதை சம்திங் வெரி ஸ்பெஷல். !!!!!!!!!!!!!
அதற்கு தாங்கள் அளித்துள்ள விளக்க வரிகளும் மிக அருமையாக உள்ளன.
- VGK
>>>>>>
தங்களின் பாராட்டினுக்கு நன்றி. எல்லோரையும் இந்த கவிதை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்து விட்டதாகவே நினைக்கிறேன்.
Deleteதிரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(6)
திரவத்துளி பட்டதும்
மெல்ல நழுவி
வெளியேறுகின்றன
பொய்கள்
உண்மைகளோ
தள்ளாடியபடி
தவிக்கின்றன //
இதனைப் படித்ததும் உண்மையிலேயே எனக்கும் சூப்பர் ‘கிக்’ ஆகிவிட்டது !
- VGK
>>>>>
நன்றி அய்யா. தங்கம் மூர்த்தியின் கவிதையைப் படித்ததும், தமிழ் 'கிக்'. மன்னிக்கவும். தமிழ் இன்பம்!
Deleteதிரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துரை
ReplyDelete(7)
நூல் ஆசிரியர் கவிஞர் திரு. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
’தேவதைகளால் தேடப்படுபவன்’ ஆக இருப்பினும் கிடைப்பதற்கு அரிய கவிஞர் இவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது, என்னாலும்.
வழக்கம்போல் தங்களின் தனிப்பாணியில், இந்தக் கவிஞரைப் பற்றியும், அவரின் மிகச்சிறப்பான இந்த நூலினைப்பற்றியும் எழுதி, எங்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.
தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் தங்கள் VGK
-oOo-
நூல் விமர்சனம் என்றாலே பல வலைப் பதிவர்களுக்கு எட்டியாக கசக்கிறது. எட்டிப் பார்ப்பதில்லை. ஆனாலும் நீங்கள் பொறுமையாக, அடியேனின் இந்த நூல் விமர்சன பதிவிற்கு இதுவரை ஏழு பின்னூட்டங்களை அளித்து ஊக்கம் தந்ததற்கு நன்றி அய்யா.
Deleteமறைந்த என் அம்மாவை நினைவு படுத்துகிறது அம்மா இல்லா உலகு. அதன் தொடர்ச்சியாய்த் தெரிகிறது எல்லாம் அடைந்து விட்டது போலவும், இழந்து விட்டது போலவும் வரும் கவிதை வரிகள். என் மனதில் அப்போது அப்படி ஒரு உணர்வு தோன்றியது.
ReplyDeleteநன்றி மேடம். உங்களின் கூகிள் பக்கம் வந்தால், விவரம் ஏதும் இல்லை.
Deleteஅருமையான எடுத்துக்காட்டுகளுடன் சிறந்த நூல் அறிமுகம்
ReplyDeleteவிமர்சனம் அருமை. தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅய்யா,
ReplyDelete‘தேவதைகளால் தேடப்படுபவன்’ கவிஞரின் தங்கமான வரிகளுக்கு வாழ்த்துகளும் அறியத் தந்தமைக்கு நன்றிகளும்.
நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.
Deleteகவிஞர் திரு தங்கம் மூர்த்தி அவர்களுக்கு இந்த பதிவினை வாட்ஸ்அப் வழியே அனுப்பி இருந்தேன். அவரும் நன்றி தெரிவித்து, அதே வாட்ஸ்அப் வழியே நன்றி தெரிவித்து இருந்தார். அந்த குறுந்தகவல் கீழே. ( கவிஞருக்கு நன்றி )
ReplyDelete27/12/2017, 16:12 - Thangam Moorthy:
தங்கள் அரும்பணிக்கு வணக்கம். நேற்றே அய்யா நிலவன் அனுப்பிவைத்தார். குடும்பமே படித்து மகிழ்ந்தோம். நண்பர்களுக்கு பகிர்ந்தேன். தங்கள் அன்பு அளவிட இயலாத அன்பு.
நன்றியுடன் தங்கம் மூர்த்தி
நல்ல விமர்சனம். விமர்சனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து கவிதை வரிகளும் [குறிப்பாக ' மெய் உணர்தல்' வரிகள்] மிக அருமை!!
ReplyDeleteநன்றி மேடம்
Deleteஉங்களின் விமர்சனத்தோட அந்த கவிதைகளை படிக்கும் போது மிக அருமையாக இருக்கிறது.....புத்த்கம் வாங்கி படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது.......ஹும்ம்ம்
ReplyDeleteநண்பர் மதுரைத்தமிழன் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நண்பர்களுக்கு அன்பளிப்பாக தருவதற்காக, கவிஞர் தங்கம் மூர்த்தியின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' என்ற இந்த கவிதை நூலின் சில பிரதிகளை வாங்கலாம் என்று இருக்கிறேன். சந்தர்ப்பம் அமையும் போது உங்களுக்கும் அன்பளிப்பாக தரலாம் என்று இருக்கிறேன்.
Delete