”வலையுலகுக்கு டாட்டா ,பை பை :(’ என்ற தலைப்பை எனது டேஷ்போர்டிலும்,
தமிழ்மணத்திலும் நண்பர் பகவான்ஜி அவர்களின் இன்றைய காலைச் செய்தியாக படித்தேன். நீண்டகாலமாக,
அதுவும் ஜோக்குகளை மட்டுமே எழுதி தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருந்த பிரபல வலைப்பதிவர்
திடீரென வலையுலகை விட்டுச் செல்வேன் என்பது வலைப்பதிவர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்தான்.
இப்போது மூத்த வலைப்பதிவர்கள் நிறையபேர் வலைப்பக்கம் எழுதுவதும்
இல்லை வருவதும் இல்லை. சிலர் ஃபேஸ்புக் பக்கம் நண்பர்கள் குழுக்களில், லைக்கை விரும்பியும்,
குறுஞ்செய்திகளை எழுதுவதில் ஆர்வமாயும், சென்று
விட்டனர். ஆனாலும் வலைப்பக்கம் ஆர்வம் உள்ளவர்கள் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களில் மதுரை நண்பர் பகவான்ஜி அவர்களும் ஒருவர். இப்போது பகவான்ஜி ( ஜோக்காளி http://www.jokkaali.in ) அவர்களும் டாட்டா சொல்லி
இருக்கிறார். ( இன்னும் சில நண்பர்கள் வலைத்தளம், ஃபேஸ்புக் என்று இரண்டிலும் சிறப்பாக
எழுதி வருவதைப் பார்க்கலாம்.) இப்படியே போனால் தமிழ் வலைப்பக்கம் எழுதுபவர்களும், படிப்பவர்களும்
நிறையவே குறைந்து விடுவார்கள்.
நண்பர் பகவான்ஜியின் நகைச்சுவை முழுக்க முழுக்க, வாழ்வில் நாம்
எதார்த்தமாக சந்திக்கும், குடும்பம் மற்றும் பொதுவாழ்வு குறித்தே அமைந்து இருக்கும்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கருத்துகள் கொண்டவை. இருந்தபோதிலும், பெண்களின்
செயல்பாடுகள் குறித்த நையாண்டியே அதிகம். நானும் இதுபற்றி, மதுரையில்(2014) நடந்த வலைப்பதிவர்கள்
சந்திப்பில் அவரிடம் நேரில் சொல்லி இருக்கிறேன். அவரும் இதனை ஜோக்காகவே எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று சொன்னார்.
படம் மேலே: மதுரை வலைப்பதிவர் மாநாட்டில் (2014) (இடமிருந்து வலம்)
வலைச்சரம் ஆசிரியர் அன்பின் சீனா, கவிஞர் ரமணி, பகவான்ஜி மற்றும் பேராசிரியர் தருமி
படம் மேலே: புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் (2015) (இடமிருந்து
வலம்) T.N.முரளிதரன், தில்லைக்கது துளசிதரன்,
மணவை ஜேம்ஸ் மற்றும் பகவான்ஜி
தமிழ் வலையுலகில், நகைச்சுவை எழுத்தாளராக இவர் மட்டுமே எழுதிக்
கொண்டு இருந்தார். தமிழ்மணத்தில் தொடர்ந்து ஒருவர் முதலிடத்திலேயே இருந்தார் என்பது
பெரிய விஷயம்தான். பகவான்ஜி அவர்களிடம் நல்ல எழுத்துத் திறமையும், வலையுலகின் மீது
ஆர்வமும் இருக்கிறது. அவர் இந்த ஜோக்காளி வலைத்தளத்தில் தொடர்ந்து ஜோக்குகளை எழுதுவதை,
கஷ்டம் என்று நினைத்தால், பகவான்ஜி என்ற பெயரில் புதிதாக ஒரு வலைத்தளம் தொடங்கி தொடர்ந்து
வலைப்பக்கம் வரவேண்டும் என்பது எனது வேண்டுகோள்
தொடர்புடைய எனது பிற பதிவு:
அவர் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உங்களோடு நானும் இணைகிறேன்
ReplyDeleteகவிஞரின் கருத்துரைக்கு நன்றி. பகவான்ஜி தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்பதனை தெரியப் படுத்தவே இந்த பதிவு.
Deleteநண்பர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் ஐயா
ReplyDeleteதம +1
ஆசிரியர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteதிரு பகவான்ஜி அவர்கள் எடுத்த இந்த முடிவை மாற்றிக்கொண்டு திரும்பவும் பதிவுலகம் வரவேண்டுமென தங்களோடு சேர்ந்து நானும் விழைகின்றேன்.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களுக்கு நன்றி.
Deleteபகவானே... இதென்ன சோதனை?
ReplyDeleteபகவான் எப்போதும் நம் பக்கம்தான்.
Deleteநண்பர் திரு. பகவான்ஜி மீண்டும் எழுதுவார் அவரை விரைவில் நேரில் சந்தித்து பேசுவேன்.
ReplyDeleteவலையுலகம் தளர்ச்சி பெரும் சமயத்தில் அவரும் இப்படி செய்வது முறையில்லை.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. அவரது வலைப்பதிவில் “ ஜி என்ன பிரச்சனை ? இது சரியில்லை அலைபேசிக்கு வருகிறேன்.... “ - என்று சொல்லி இருந்தீர்கள். பேசி விட்டீர்களா?
Deleteபலமுறை முயன்றும் அவர் செல்பேசியை எடுக்கவில்லை.
Deleteநண்பர் தொடர்ந்து எழுத வேண்டும்
ReplyDeleteதமிலில் கனனி தகவல்
அன்பர் மொஹமது அவர்களுக்கு. கையால் எழுதும்போது பெரும்பாலும் பிழையின்றி எழுதி விடுவோம். ஆனால் Phonetic முறையில் தட்டச்சு செய்யும்போது, பிழை செய்து விடுகிறோம். உங்கள் கருத்துரையில் உள்ள ’தமிலில் கனனி தகவல்’ போன்ற பிழையான தட்டச்சில் கவனம் தேவை.
Deleteகருத்துரைக்கு நன்றி
Deleteமன்னிக்க வேண்டும் சகோ மொபைலில் type செய்ததால் கவனிக்க வில்லை
Deleteநண்பர் பகவான் ஜி அவர்கள் தொடர்ந்து எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்..
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரைசெல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
Deleteஉங்கள் விருப்பம்தான் என் விருப்பமும்.
ReplyDeleteமரியாதைக்குரிய பசி - பரமசிவம் அய்யா அவர்களுக்கு நன்றி. இருவரது விருப்பமும் நிறைவேற வேண்டும்.
Deleteவருவார் நிச்சயமாக வருவார் " திரும்ப வந்துட்டேனு சொல்லு " என்கிற தொனியுடன் நம்புவோமாக !
ReplyDeleteவிமல் அவர்களுக்கு நன்றி. உங்கள் இணையப்பக்கம் போனால் ” Profile Not Available” என்று வருகிறது. வாருங்கள் வலைப்பக்கம். நீங்களும் எழுதலாம்.
Deleteஐயா அவர்களுக்கு வணக்கம், உங்களது அழைப்புக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் உங்களைப்போன்ற பெரியவர்களின் அனுபவத்தால் வெளிப்படும் எழுத்துக்களின் பட்டறிவையே கற்றுக்கொள்ள விரும்புகிறேன் மற்றபடி எழுதும் அளவிற்கு எனக்கு திறமை போதாது என்றே நினைக்கிறேன் . எனவே தூரத்தில் இருந்தே உங்களை போன்ற பெரியவர்களின் அனுபவ அறிவை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் நன்றியுடன் - விமல் -
Deleteத.ம. இன்னும் இணையவில்லையே... செல்லில் வருகிறேன்.
ReplyDeleteநண்பர் கில்லர்ஜி அவர்களின் மீள் வருகைக்கும், வாக்களிப்பிற்கும் நன்றி. தமிழ்மணத்தில் மீண்டும் தொழில்நுட்ப பிரச்சினை போல் தெரிகிறது. இந்த பதிவை இன்று காலை, தமிழ்மணத்தில் இணைப்பதற்குள், போதும் போதும் என்று ஆகி விட்டது.
Deleteஜோக் ஏதும் அடிக்கவில்லையே, பகவான் ஜி! ஏனிந்த திடீர் விலகல்?
ReplyDeleteநண்பர் ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி.
Deleteசிரிப்பவர் பாக்கியசாலி, சிரிக்க வைப்பவர் அதைவிட பாக்கியசாலி என்பார்கள். இத்தனை நாட்கள் பாக்கியசாலியாக இருந்த அவர் இனியும் தொடர விரும்புகிறேன்.
ReplyDeleteதஞ்சை கண்டமங்கலம் சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎனக்காக பதிவையே போட்டிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteபோன் மூலமாகவும் .கருத்துக்களைக் கூறியிருக்கும் அனைவருக்கும் நன்றி :)
அன்புடன் கருத்தைத் தெரிவித்து இருக்கும் அனைவருக்கும் நன்றி !
வலையில் எழுதுவது இன்பச் சுமையாக இருந்தது ,சமீப காலமாக் இன்பம் போய் சுமையாகத் தோன்ற ஆரம்பித்து விட்டதால் ,ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு, அப்பாலிக்கா வர்றேன் :)
நண்பர் பகவான்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் இந்த பதிவை எழுதியதன் நோக்கம் நிறைவேறி விட்டது. நீங்கள் மீண்டும் வலைப்பக்கம் தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
Deleteமீண்டும் வருவார் பகவான் ஜி!! என்று எழுத நினைத்த போது இதோ அவரே சொல்லியிருக்கிறார்! அப்பாலிக்கா வரேன் அப்படினு!!! ஸோ ஜோக்காளி புதுப் பொலிவுடன் வந்துவிடுவார்!!!
ReplyDeleteதுளசி, கீதா
நண்பர்கள் இருவருக்கும் நன்றி.
Deleteஉங்களுடைய பதிவையும் அதற்கான திரு பகவான்ஜியின் மறுமொழியையும் கண்டேன். அவர் வருவார், தொடர்ந்து எழுதுவார். அவரால் எழுதாமல் (நம்மை சிரிக்க வைக்க முடியாமல்) இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
Deleteசற்றே இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வேண்டும்.... அவரே “அப்பாலிக்கா வரேன்” என்று கருத்துரைத்திருப்பது பார்த்து மகிழ்ச்சி.
ReplyDeleteஎந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யும்போது சற்றே அலுப்பு வரத்தான் செய்கிறது. இந்த இடைவெளி நல்லதோர் புத்துணர்வைத் தரட்டும்.
த.ம. +1
நண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎழுத முற்பட்டவன் கை எழுதாமல் இருக்க முடியாது ஒரு வேளை அவரைப் பற்றி யர் யார் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் உத்தியோ; இல்லை யாராவது அவரைக் காயப்படுத்தி ஏதாவது எழுதினார்களோ இல்லை ஒரு வேளைதமிழ்மண மகுடத்துக்கு நிறைய போட்டி வந்து விட்டதோ. எது எப்படி ஆனாலு எழுதுவதா வேண்டாமா என்பதைஒ அவரே முடிவு செய்ய வேண்டும் எனக்கென்னவோ இந்த தமிழ்மண மகுடம்தான் காரணம் என்று தோன்று கிறது
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதங்களின் பதிவின் வேண்டுகோளை ஏற்று பகவான் அவர்களின் “ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு, அப்பாலிக்கா வர்றேன் ”என்று வாக்குரைத்த வைத்தமைக்கு தங்களுக்கு நன்றி!!!
ReplyDeleteதோழரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமீண்டும் வந்துவிட்டார் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி
ReplyDelete