Tuesday, 19 September 2017

தான் பொய்யாத தண்தமிழ்ப் பாவை – காவேரி



       பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
         கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
         கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
         தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை”
-    ( மணிமேகலை: 5.25 )

இப்போது திருச்சியில், காவிரியில் மகா புஷ்கர விழா என்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கடந்த 12–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த மகா புஷ்கர விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு காவிரியில் நீர்ப் பெருக்கு. கல்லணையிலும் நீர் நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளதாக செய்தி. காய்ந்து போய், வறண்டு கிடந்த கல்லணையைப் பற்றி சென்றமுறை பதிவு ஒன்றை எழுதிய எனக்கு, இந்தமுறை, 17.09.17 ஞாயிறு அன்று தண்ணீர் நிரம்பிய காவிரியை சென்று பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. 

நடந்தாய் வாழி காவேரி

காவிரி என்றாலே இளங்கோ அடிகளுக்கு அதன்மீது அப்படி ஒரு காதல். புகார்க்காண்டத்தில் காவிரியை அப்படி புகழ்ந்து இருப்பார். நமக்கும் காவிரி என்றாலே, தண்ணீரும் காவிரியே என்று பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சிதான். அன்றுமாலை, எனது அம்மாச்சியின் ஊருக்கு(புதகிரி) சென்று விட்டு, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அகரப்பேட்டை வழியாக கல்லணைக்கு வந்தேன். விடுமுறை நாள் என்பதால் அணைநீர் வெளியேறுவதைக் காண, வந்த மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கூடவே காவிரியில் கடலை போட வந்த செல்பி ஜோடிகள். போலீஸ்காரர் ஒருவர் மைக்கில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். ஆங்காங்கே இரண்டிரண்டு போலீஸ்காரர்கள்.

(படம் மேலே) கல்லணையிலிருந்து நீர் வெளியேறும் காட்சி.

(படம் மேலே) எந்த படத்தையும் ஒரு பின்னணியோடு எடுத்தால், அந்த காட்சி ரசிக்கத் தோன்றும். ஒரு மரத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

(படம் மேலே) எனது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ ( சில நொடிகள் மட்டும் )

(படம் மேலே)  நடந்தாய் வாழி காவேரி

(படம் மேலே) இதுவும் அது

(படம் மேலே)  திறந்து விடப்படாத மதகின் அருகே, ஒதுங்கும் அடித்து வரப்பட்ட  குப்பைகள், கழிவுகள்






(படங்கள் மேலே) நீர் நிரம்பிய கல்லணை 

கல்லணை சிற்பிகள்

படம் மேலே - கல்லணையை நிர்மாணித்த கரிகால் சோழன்                        

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனின் பெருமையையும், அணையின் நுட்பமான பெருமையையும் வெளி உலகுக்கு தெரியச் செய்தவர் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர். இவர் கல்லணையை ஆய்வு செய்து மணற்போக்கிகளை அமைத்தார்..கல்லணைக்கு Grand Anicut என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே. 

படம் மேலே சர் ஆர்தர் காட்டன் நினைவாக ( கல்வெட்டில் உள்ள வாசகம்: SIR ARTHUR COTTON. The Engineer Who Designed & Constructed the under sluices across Coleroon during 1839 – Statue installed on 09.01.2005 )

அதேபோல இன்னொரு ஆங்கிலேயர் கர்னல் W.M..எல்லிஸ். இவர் சர் ஆர்தர் காட்டன் கனவு கண்ட காவேரி மேட்டூர் திட்டத்தை வடிவமைத்தவர். இவரே கல்லணைக்கும் வடிவமைத்துள்ளார். அவரைப் பாராட்டும் விதமாக குதிரை வீரன் சிலை அருகே ஒரு கல்வெட்டு.

படம் மேலே - கர்னல் W.M..எல்லிஸ் நினைவாக (கல்வெட்டில் உள்ள வாசகம்: CAUVERY METTUR PROJECT – GRAND ANICUT CANAL DESIGNED BY COL.W.M.ELLIS. C.I..E-R.E HEAD SLUICE STARTED 1929 COMPLETED 1931)

மற்ற காட்சிகள்

காவிரி புஷ்கரத்தை முன்னிட்டு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப் பட்டாலும், கல்லணையில் உள்ள மற்ற வெண்ணாறு, புதுஆறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பி, இங்கு நீர் வந்ததும் இந்த ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படும். ( காவிரி பெருக்கெடுக்கும் சமயங்களில் மட்டும் கொள்ளிடத்தில் நீர் திருப்பி விடப்படும். )

(படம் மேலே) எனது சிறு வயதில், கல்லணைக்கு முதன் முதல் வந்தபோது நான் பார்த்த அந்த அகத்தியர் சிலை

(படம் மேலே) தேங்கிய குளமாய் காட்சி அளிக்கும் வெண்ணாறு

(படம் மேலே) பூங்காவில்

(படம் மேலே) எச்சரிக்கைப் பலகை

தொடர்புடைய எனது பிற பதிவு:
வறண்டாய் வாழி காவேரி! http://tthamizhelango.blogspot.com/2017/07/blog-post.html



33 comments:

  1. அழகிய படங்கள் கண்ணுக்கு விருந்தளித்தன வாழ்த்துகள் நண்பரே
    த.ம.பிறகு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. கல்லணையின் படங்கள் கண்டு ரசித்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. கரைபுரண்டு ஓடும் காவிரியை படமெடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி! குதித்து ஓடும் காவிரியை காணொளியில் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குடகில் மழை பொழியட்டும்! நம் காவிரி நிரம்பி வழியட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் கருத்தினுக்கு நன்றி. மொழிவாரி மாநிலம் பிரிக்கையில், குடகு மக்கள் தங்களை சென்னை மாநிலத்தோடேயே சேர்க்குமாறு கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அப்போதைய தலைவர்கள் ஏனோ இதனை செய்யவில்லை. குடகு தமிழ்நாடோடு இணைந்து இருந்தால், இப்போதைய காவிரிப் பிரச்சினை இவ்வளவு தீவிரம் அடைந்து இருக்காது.

      Delete
  4. அழகிய படங்கள் ஐயா...
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பரிவை சே.குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. முதல் இரண்டு படங்களும் மிக அட்டகாசம்... நீர் ஒடிவருவதை பார்பது மனதிற்கு மிக சந்தோஷமும் சில சமயங்களில் பயத்தையும் கொடுக்கதான் செய்யும்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் அவர்களுக்கு நன்றி.

      // நீர் ஒடிவருவதை பார்ப்பது மனதிற்கு மிக சந்தோஷமும் சில சமயங்களில் பயத்தையும் கொடுக்கத்தான் செய்யும்` //

      எனக்கும் இந்த பயம் உண்டு. கோடைகாலத்தில் மட்டும் காவிரியின் நடு ஆற்றிற்கு சென்று குளித்த அனுபவம் உண்டு.

      Delete
  6. படங்களைக் கண்டு களிததேன் த ம 5

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவுக்கு நன்றி.

      Delete
    2. கல்லணை காவிரி. .படங்கள் நேரில் பார்க்கும் ஆசையைத் தூண்டுகின்றன

      Delete
  7. #ஒரு மரத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்#
    மரமே selfi எடுத்துக் கொண்டது அழகாய் இருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஜோக். நண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கல்லணையை புகைப்படத்தில் பார்க்கிறேன் அழகிய படங்களுடன் காட்சிகளை கண்முன் நிறுத்தியமைக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
  9. ஆஹா..ஆஹா....

    கண் கொள்ளா காட்சி.....

    ReplyDelete
  10. கல்லணைக்கு ரெண்டு முறை சென்றிருக்கிறேன். ரெண்டு முறையும் தண்ணி இருந்துச்சு, ஆனா, இந்தளவுக்கு இல்ல. செம்யா இருக்குண்ணே. எம்புட்டு தண்ணி?!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கடந்த சில வருடங்களாகவே காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் கல்லணையிலும் நீர் இல்லை. இப்போது குடகு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதிலும் இந்த புஷ்கரம் நிகழ்ச்சிக்காக இந்த தண்ணீரை காவிரியில் மட்டும் திறந்து விட்டு இருக்கிறார்கள்.

      Delete
  11. காவிரியில் நீரைப் பார்த்துதான் எத்தனை நாட்களாகிறது? படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. கல்லணைக்குச் சென்று ஆகிவிட்டன அநேக ஆண்டுகள் கல்லணை துயர நினைவுகளையும் கொடுக்கும் நண்பரொருவர் புதை மணலில் சிக்கி இறந்தார் பதிவாக்கி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய அந்த பதிவை படித்து இருக்கிறேன்.

      Delete
  13. கண்கொள்ளா அற்புதக் காட்சி
    நாங்களும் இரசித்து மகிழும்படி
    அற்புதமானப் படங்களாகவும்
    காணொளியாகவும் பதிவு செய்துத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. கண்களுக்கும் மனதிற்கும் விருந்தளித்த பதிவு. எங்கள் பள்ளிக்காலத்தில் கும்பகோணத்தில் காவிரியாற்றில், திறந்துவிடப்பட்ட தண்ணீர் வரும்போது நுரை நுரையாக பரந்து விரிந்து வரும் ஓடி ஓடி காலை வைத்துக் குதிப்போம். முதலில் தரையில் அத் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விடும். தொடர்ந்து அது வரும் அழகு, தண்ணீரின் வேகத்திற்குத் தகுந்தாற்போல நாங்கள் ஓடும் ஓட்டம் அனைத்தும் நினைவிற்கு வந்தன.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி. நல்ல மகிழ்ச்சியான நினைவலைகள்.

      Delete
  15. கண்ணுக்குக் குளிர்ச்சியான காவிரி படங்கள். பார்த்தால், "விரைந்தாய் வாழி காவேரி" என்று பாடத் தோன்றுகிறது.

    ReplyDelete