நாங்கள் இருப்பது புறநகர்ப் பகுதி. அங்கங்கே காலிமனைகள். கடந்த
சிலநாட்களாக நாட்டில் நல்ல மழை. எங்கள் ஏரியா பக்கமும்தான்.
புதிய பூவிது பூத்தது
மழைக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் காலிமனைகளில்
திடீரெனெ, பெரிய இலைகளுடன் புதிது புதிதாக சில செடிகள் - பூக்கவும் தொடங்கி விட்டன.
இதற்கு முன்னர் இந்த செடிகளை இங்கு பார்த்ததில்லை. ஆனாலும் வேறு
எங்கோ இதே செடிகளை பார்த்ததாக நினைவு. பெயரும் தெரியவில்லை. சிலரைக் கேட்டதில் அவர்களும்
தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். எனவே கிராமத்தில் இருக்கும், தஞ்சையில் தோட்டக்கலை
துறையில் பணிபுரியும், எனது மாமா பையனுக்கு வாட்ஸ்அப்பில் இந்த செடிகளை படம் எடுத்து
அனுப்பி விவரம் கேட்டு இருந்தேன். அவரும் தனது பதிலில், Botany name: martynia
annua, Common name: Devil’s claw, Family name: pedaliaceae என்று தெரிவித்து இருந்தார்
செடியின் பெயர்
அப்புறம் வழக்கம்போல் martynia annua என்று கூகிளில் தேடியதில்
விவரங்கள் கிடைத்தன. இந்த செடியானது தமிழில் புலிநகம், காக்காமூக்கு செடி, என்றும்
பல்வேறு பெயர்களில் இதன் காயின் வடிவத்தை வைத்து அழைக்கப்படுகிறது. பூனைப்புடுக்கு
என்றும் தமிழில் சொல்லுகிறார்கள். இந்த செடியின் காயும் அப்படித்தான் தோன்றுகிறது.
தெலுங்கில் கருடமூக்கு என்று அழைக்கிறார்கள்.
காக்காமூக்கு செடியின்
காய்
(கீழேஉள்ள படங்கள் : கூகிளுக்கு நன்றி)
கீழே உள்ள காக்காமூக்கு செடி காய் படங்களைப் பார்க்கும் போது பெயர்ப்
பொருத்தம் சரியானதாகவே தோன்றுகிறது. காரணப் பெயர் எனலாம். ஆங்கிலத்திலும் இந்த செடியின்
பூவின் தோற்றத்தை வைத்துதான் Tiger’s claw, Devil’s claw, Cat’s claw என்று அழைக்கிறார்கள்.
Unicorn Plant என்பது இதன் பொதுப்பெயர்.
நோய்க்கு மருந்து:
இது ஒரு காட்டு மூலிகை என்றாலும் TB (tuberculosis) எனப்படும் காசநோய்,
தொண்டைப்புண், பாம்புக்கடி, காக்கைவலிப்பு போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படும் என்று
மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பு: தேள்கொடுக்கி என்றும் இந்தசெடி விக்கிபீடியாவில் சொல்லப்பட்டுள்ளது;
ஆனால் தேள்கொடுக்கி என்று வேறொரு மூலிகையை இண்டர்நெட்டில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.
பிற்சேர்க்கை ( 27.செப்.17 - 3.57 p.m )
பிற்சேர்க்கை ( 27.செப்.17 - 3.57 p.m )
புலி
நகம் செடி பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! Martynia annua
எனப்படும் புலி நகம் (காக்காமூக்கு) செடி Martyniaceae எனப்படும் தாவர
குடும்பத்தை சேர்ந்தது. Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தது அல்ல. எள்ளு
(Sesamum indicum) போன்றவகள் தான் Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தவை.
இப்படி பதிவைத் தேத்தினதுக்காகவே உங்களுக்கு த ம போட்டாச்சு.
ReplyDeleteஆனாலும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொண்டேன்.
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Delete// இப்படி பதிவைத் தேத்தினதுக்காகவே .... //
என்னுடைய அம்மாவின் கிராமத்திற்கு சென்று, பெரியவர்களிடம் இந்த செடியைப் பற்றிய விவரம் கேட்க நேரம் இல்லாமல் போய்விட்டது. எனவே பதிவினில் அதிகம் எழுத இயலவில்லை.
இதே செடி இப்போது பெய்த மழைக்குப் பின் நான் நடைப்பயிற்சி செல்லும் பகுதியில் நிறைய வளர்ந்துள்ளது நானும் படம் எடுத்துள்ளேன். பூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. நானும் கூகுளில் போட்டுப் பார்த்தேன் செடியின் படத்தை கூகுள் இமேஜஸில் போட்டுப் பார்த்தேன் தேள் கொடுக்கி என்று விக்கி சொல்லியது. உங்கள் பதிவிலிருந்து கூடுதல் தகவல்கள் அறிந்தேன். ஆனால் நான் காய்கள் படம் எடுக்கவில்லை ஏனென்றால் இன்னும் அதில் காய்கள் எதுவும் தென்படவில்லை. பூக்கள்தான் இருக்கின்றன...அடுத்த படங்கள் பதிவில் இதையும் போடுவதாக இருக்கிறேன்...சகோ
ReplyDeleteமிக்க நன்றி தகவலுக்கு...
கீதா
மேடம் அவர்களுக்கு நன்றி. இந்த காக்காமூக்கு செடி பற்றிய உங்களது பதிவினை, அதிக விவரங்களுடன் எதிர்பார்க்கிறேன். (இன்னும் கொஞ்சநாளில் காய்த்து விடும்)
Delete// நானும் கூகுளில் போட்டுப் பார்த்தேன் செடியின் படத்தை கூகுள் இமேஜஸில் போட்டுப் பார்த்தேன் தேள் கொடுக்கி என்று விக்கி சொல்லியது.//
பெரும்பாலும் தாவரங்களைப் பற்றிய கூகிள் தரும் விவரங்களை, உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் கூகிளில் தேள்கொடுக்கி என்பது வேறொரு செடியையும் காட்டுகிறது.
ஒவ்வொரு பெயரும் ஒவ்வொன்றை மிஞ்சும் விதமாக பொருத்தமாய் இருக்கின்றன ,அதிலும் பூ பு ரொம்ப பொருத்தம் :)
ReplyDeleteநண்பர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.
Delete//அதிலும் பூ பு ரொம்ப பொருத்தம் //
ஜோக்காளி அல்லவா? ரொம்பவே ரசித்து இருக்கிறீர்கள். நானும் ரசித்தேன். எங்கள் ஏரியா பக்கம் திரியும், ஒரு கறுப்பு பூனையைப் பார்த்து பெயர்ப் பொருத்தம் சரிதான் என உறுதியும் செய்து கொண்டேன்.
நீங்க மட்டும் உறுதி செய்து கொண்டால் போதுமா ?ஒரு போட்டோ எடுத்து பதிவில் சேர்க்கிற முயற்சி செய்யுங்க,எல்லோரும் பார்க்க வேண்டாமா :)
Deleteஇச்செடியைப் பற்றி அறிவது இதுதான் முதல் முறை. இதுவரை பார்த்ததில்லை. பதிவின் முலம் புதியதாய் ஒன்றை அறிய முடிந்தது. மிக்க நன்றி
ReplyDeleteதுளசிதரன்
ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteஎங்க வீட்டு எதிர்க்கவும் இதுமாதிரியான செடி உண்டுண்ணே. இன்னிக்குதான் அதோட பேரை தெரிஞ்சுக்கிட்டேன். காயை இதுவரை பார்த்ததில்ல
ReplyDelete
Deleteசகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி. மழை பெய்தவுடன், ஆங்காங்கே இது போல இன்னும் பல செடிகள்.பெயர்தான் தெரியவில்லை.
புதிய தகவல்கள்! நன்றி பகிர்வுக்கு!
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteநல்லதொரு பதிவு.
ReplyDeleteTiger’s claw, Devil’s claw, Cat’s claw என்பதெல்லாம் இச்செடிகான வெவ்வேறு பெயர்களா? அல்லது உருவத்தினை வைது அழைக்கப்படும் பெயர்கள் என உதாரணம் காட்டினீர்களா?
Tiger’s claw என்பது குறிஞ்சிப்பாட்டுப்பூவில் வரும் ஞாழல் எனும் புலினகக்கொன்றை மரம் இல்லையா?
தமிழ் மொழித்தேடலைப்பொறுத்தவரை இணையத்திலும் விக்கிமீடியாவிலும் கிடைக்கும் தரவுகள் நம்பத்தகுந்ததாய் இல்லாமல் இருப்பது உண்மை. யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம் எனும் விதிமுறையில் விக்கிமீடியா தளம் தொடரும் வரை இதற்கு விடிவும் இல்லை.
அதிமதுரமும் குன்றிமணி மரத்தின் வேரும் ஒன்றென இன்னும் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அதிமதுர வேர் மூலிகை தன்மையுடையது. மருந்தாக பயன் படுவது. குன்றிமணியோ கடும் விசத்தன்மை கொண்டது. இங்கே இணையத்தில் தமிழில் தேடினால் இப்படித்தான் தப்பாக வழி காட்டுகின்றது.
நான் என் தேடலுக்கு ஜேர்மன் மொழியையும் துணை சேர்த்துக்கொள்வேன் ஐயா. ஓரளவு நிரம்ப தகவல்களினை ஜேர்மன் மொழியில் இணைத்திருக்கின்றார்கள்.
தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி மேடம்.
Delete// Tiger’s claw, Devil’s claw, Cat’s claw என்பதெல்லாம் இச்செடிகான வெவ்வேறு பெயர்களா? அல்லது உருவத்தினை வைது அழைக்கப்படும் பெயர்கள் என உதாரணம் காட்டினீர்களா? //
நீங்கள் மேலே சுட்டிய ஆங்கிலப் பெயர்கள் யாவும் ஒரே செடிக்கான பெயர்கள்தாம். நானும் மேலே எனது பதிவினில் இவற்றை காரணப் பெயர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
// Tiger’s claw என்பது குறிஞ்சிப்பாட்டுப்பூவில் வரும் ஞாழல் எனும் புலினகக்கொன்றை மரம் இல்லையா? //
மேலே சொல்லப்பட்ட தாவரமானது செடி வகையைச் சேர்ந்தது. காக்காமூக்கு செடி என்பது போல, புலிநகச்செடி. கபிலர் பாட்டில் குறிப்பிடப்படும் ’ஞாழல்’ என்பது கொன்றை மர வகைகளில் ஒன்று. கொன்றைமரம் (மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவன் சிவன்)
// தமிழ் மொழித்தேடலைப்பொறுத்தவரை இணையத்திலும் விக்கிமீடியாவிலும் கிடைக்கும் தரவுகள் நம்பத்தகுந்ததாய் இல்லாமல் இருப்பது உண்மை. //
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. எல்லாவற்றையும் புறம்தள்ள முடியாது. சில தரவுகளில் அப்படித்தான் இருக்கின்றன. நாம்தான் அகராதி, பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் போன்றவற்றின் துணைகொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
// நான் என் தேடலுக்கு ஜேர்மன் மொழியையும் துணை சேர்த்துக் கொள்வேன் ஐயா. ஓரளவு நிரம்ப தகவல்களினை ஜேர்மன் மொழியில் இணைத்திருக்கின்றார்கள் //
பாராட்டுகள். ஜெர்மன் மொழி அறிந்த நீங்கள், ஜெர்மனில் உள்ள இலக்கிய படைப்புகளை தமிழாக்கம் செய்யலாம். வாழ்த்துகள்.
ஆமாம், இந்த காயை நானும் பார்த்திருக்கிறேன். பேய் நகம் என்று சொல்வோம். மழை பெய்ததால் எங்கள் காம்பவுண்டிலும் ஏகப்பட்ட காட்டுச் செடிகள்.
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. இந்த செடிக்கு ‘பேய்நகம்’ என்ற இன்னொரு பெயர் இருப்பதை உங்களின் இந்த கருத்துரை மூலம் அறிந்து கொண்டேன்.
Delete//இந்த செடிக்கு ‘பேய்நகம்’ என்ற இன்னொரு பெயர் இருப்பதை//
Deleteசெடிக்கு அல்ல. தஞ்சையில் இருந்த காலங்களில் (அங்குதான் பார்த்திருக்கிறேன்) அந்த விதையை (கடைசி படத்தில் இருப்பது) அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நண்பருக்கு நன்றி. புலிநகம் செடி, காக்காமூக்கு செடி என்பது போல பேய்நகம் செடி.
Deleteஆகா
ReplyDeleteஅனைத்தையும் ஆய்வுக் கண்கொண்டு பார்க்கிறீர்கள் ஐயா
நன்றி
தம +1
ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇச்செடியைப் பார்த்துள்ளேன். இப்போதுதான் பெருமையை அறிந்தேன். நன்றி.
ReplyDeleteமுனைவரின் கருத்தினுக்கு நன்றி.
Deleteபுலி நகம் செடி பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி! Martynia annua எனப்படும் புலி நகம் (காக்காமூக்கு) செடி Martyniaceae எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தது அல்ல. எள்ளு (Sesamum indicum) போன்றவகள் தான் Pedaliaceae குடும்பத்தை சேர்ந்தவை.
ReplyDeleteமூத்தவலைப்பதிவர் அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கும், திருத்தத்திற்கும் நன்றி. மேலே பதிவிலும் திருத்தம் செய்து விடுகிறேன்.
Deleteஅருமை! த ம 8
ReplyDeleteபுலவர் அய்யா அவர்க்ளுக்கு நன்றி.
Deleteஎங்கள் வீட்டிலு ம் எத்தனையோ பெயர் தெரியாத செடிகள் இருக்கின்றன
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. உங்கள் வீட்டில் உள்ள பெயர் தெரியாத செடிகளை, தாவரவியல் படித்த நண்பர்களிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம். அல்லது மேலே கருத்துரை தந்த கீதா மேடம் அவர்கள் சொன்னது போல, Google images சென்று, படத்தைத் தந்து விவரம் தெரிந்து கொள்ளலாம்.. கீழே வழிமுறை
DeleteGoogle > Google images > Click Camera (Search by image) > Upload an image > Browse …. Select the image from your computer
(இது உங்களுக்கு தெரிந்த முறையாகவும் இருக்கலாம்)
ஒரு நாளைக்கு மூன்று இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி குடிக்க இதயத் தசை அழற்சி குணமாகும். மூன்று நாள் குடிக்கலாம். கார்டியாக் அரெஸட் வராது தடுக்கும்.
ReplyDelete