நம்ப ஆட்களை கணக்கு காட்டு என்றால் கவலையே பட மாட்டார்கள். எப்படியும்
ஒரு கணக்கை காட்டி விடுவார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால், குதிரைக்கு குர்ரம் அவ்வளவுதான்.
பல இடங்களில் இரண்டு கணக்கு பேரேடு இருக்கும். ஒன்று வெள்ளை. இன்னொன்று கறுப்பு. இப்போது
அப்படி கூட இல்லை. வெளிப்படையாகவே அடிக்கிறார்கள். செய்யாத வேலைக்கு செய்ததாக கணக்கு
காட்டுகிறார்கள்.
தெர்மாக்கோல் கணக்கு
அண்மையில் அமைச்சர் ஒருவர், வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல்
இருக்கும் பொருட்டு, தெர்மாகோல் அட்டைகளை வைத்து மூடும் முயற்சியில் இறங்கினார் என்றும்,
ஆனால் அம் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.
அம்மா இருந்தவரை பம்மிக் கிடந்த பலரும், அந்த அமைச்சரை ,நெட்’டில் காய்ச்சி எடுத்து
விட்டனர். அவரும் வேறு வழி இல்லாது சமாளித்து அறிக்கை வெளியிட்டு விட்டார். முதலில்
அந்த திட்டத்திற்கு 10 லட்சம் என்று செலவுக்கணக்கு சொன்னவர்கள், பிற்பாடு, இல்லையில்லை
ரூபாய் எட்டாயிரம் மட்டுமே என்று சொன்னார்கள்.
தயிர்க் கணக்கு
ரெயில்வே கேண்டீன்கள், ரெயில்வே சமையலறைகள், ரெயில்வே மளிகை சாமான்கள்
குடோன் என்று, மத்திய ரெயில்வேயின் கேட்டரிங் பிரிவிற்கு சமையல் சாமான்கள் அனைத்தும்
ரெயில்வே கேட்டரிங் துறைதான் வாங்கிப் போட்டு விநியோகம் செய்யும். இதன் தலைமையிடம்
இருப்பது மும்பாயில். அவர்கள் எப்போதும் நஷ்டக் கணக்கையே எழுதி வந்தார்கள். பார்த்தார்
ஒருவர். அவர் பெயர் அஜய் போஸ். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு மட்டும் ஏன் என்ற
பராசக்தி பட வசன ஸ்டைலில், அவருக்கு. வந்தது அக்கறை. வழக்கம் போல தகவல் அறியும் உரிமைச்
சட்டம் கீழ் கணக்கை கேட்டு எழுதிப் போட்டார். அவர்கள் அசைவதாக இல்லை. இவரும் விடுவதாக
இல்லை. ஒரு வழியாக பதில் தந்தார்கள். அந்த பதிலில்,ஒரு கிலோ தயிர் ரூ 9720 இற்கும்,
ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ1241 இற்கும், ஒரு பாக்கெட் உப்பு ரூ 49 இற்கும், கூல்
ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்று ரூ 59 இற்கும் வாங்கியுள்ளதாக தெரிவித்து இருந்தார்கள்.
கணக்கு கேட்டார். கொடுத்து விட்டார்கள். அப்புறம் டைப் செய்ததில் பிழை என்றார்கள்.
யானைக்கு அல்வா
மேலே சொன்ன எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக ஒரு கணக்கை
சர்க்கஸ் மானேஜர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இந்த நகைச்சுவை காட்சி வரும் அந்தக் கால
ஜெமினியின் பிருமாண்டமான படம் ‘சந்திரலேகா’. வெளிவந்த வருடம். 1948. இந்தி. தெலுங்கு
என்று மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது. அதில் சர்க்கஸ் கம்பெனி ஒன்று
படம் முழுக்க வரும். இந்த சர்க்கஸ் கம்பெனி மானேஜராக நடிகர் எல்.நாராயண ராவ் நடித்து
இருக்கிறார். கணக்கப் பிள்ளையாக டி.ஏ.மதுரம். அந்த வசனம் இங்கே
ராவ் : (அதிகார தோரணையில்)
எழுதினியா? இன்னுமா முடியல… ஆண்களுக்கு
எளநீர் வாங்கிக் கொடுத்தது முந்நூத்து அம்பது ரூபாய்னு எழுதிக்க
எத்தனை நாழி எழுதற. உன்னையும் ஒரு
கணக்குப்பிள்ளைன்னு நான் வச்சிக்கிட்டு இருக்கிறேன்.
ம்.. சீக்கிரம் எழுது
இன்னும் ஐநூறு ஒதைக்குதே… ம்… யானைக்கு அல்வா வாங்கி போட்டது ஒரு எறநூறு
… என்ன மொறக்கிற … நான் சொல்றபடி எழுதுறியா இல்லையா … இல்லைனா … உன்னை வேலையிலிருந்து
தொலச்சிபிடுவேன். ஹ .. ஹ
..
யானைக்கு அல்வா வாங்கி போட்டது எறநூறு
எழுதியாச்சா … புலிக்கு புல்லு வாங்கி கொடுத்தது நூத்து அம்பது ….. இன்னும் நூத்து
அம்பதுக்கு கணக்கு சரியா வரலியே
(பெண் கணக்குப்பிள்ளை டி.ஏ.மதுரம்
சிரிக்கிறார் )
மதுரம்:
மொத்தக் கணக்கையும் எழுதட்டுமா ..
ஆளப்பாரு ஆளை – ஆனைக்கு அல்வாவாம் புலிக்கு புல்லாம் … ஒன்ன தலைக்கு மூளை வாங்கிக்
வச்சதுனு எழுதறேன்
ராவ்:
எழுதேன் … எனக்கு எப்படியாவது … கணக்கு
சரியாகனும் …
மதுரம்:
ம் .. அப்படில்லாம் எழுத முடியாது
ராவ்
கோவிச்சுக்காதே … மீனாட்சி நிஜமா ஐநூறு
செலவழிஞ்சிருக்கு .. கணக்கு ஞாபக மறதியாச்சு
இந்த நகைச்சுவை காட்சியைக் கண்டு கேட்டு ரசித்திட கீழே உள்ள யூடியூப்
திரையை அல்லது இணையதளத்தினை சொடுக்கிப் ( CLICK ) பார்க்கவும்.
நன்றி: https://www.youtube.com/watch?v=eljZv4L9dGA
நன்றி: https://www.youtube.com/watch?v=eljZv4L9dGA
யாநைக்கு அல்வா.... நல்ல நகைச்சுவை.....
ReplyDeleteகணக்கு காட்ட அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete’யானைக்கு அல்வா வாங்கி போட்ட கணக்கு’ உள்பட அனைத்தும் மிகவும் அருமை.
ReplyDelete’எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். திடீரென்று வந்து கணக்குக்கேட்க, எஸ்டேட் கணக்குப்பிள்ளை தங்கவேலு சொல்லும் கணக்குகள் இதே போல நகைச்சுவையாக இருக்கும். :)
மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட ’எங்க வீட்டுப் பிள்ளை - கணக்குப்பிள்ளை தங்கவேலு சொல்லும் கணக்கை, நேரம் கிடைக்கும்போது யூடியூப்பில் சென்று பார்க்கிறேன்.
Deleteஹா... ஹா...
ReplyDeleteம்.....
நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
Deleteஏமாறும் மக்கள் உள்ளவரை ஏமாற்றும் அரசியல் வியாதிகளை ஒழிக்க முடியாது பொருத்தமான காணொளி
ReplyDeleteசெல்லில் வருவதால் த.ம. இடுவதற்கு இயலவில்லை நண்பரே...
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. ( இப்போது முன்புபோல் தமிழ்மணத்தில் ஓட்டு போட முடிவதில்லை. ஒரு ஓட்டு போடுவதற்கு அதிக நேரம் செலவாகிறது. )
Deleteஆகா
ReplyDeleteஆசிரியருக்கு நன்றி
Deleteவிஷயம் வெளில தெரியலைனா பத்து லட்சம் சுவாஹாதான். இன்னும் எத்தனை போடாத ரோடுகளுக்குத் தூர்வாராத கண்மாய்களுக்கும் அரசியல்வாதிகள் கணக்கெழுதியிருக்கிறார்களோ.
ReplyDeleteஉங்களுக்குத்தெரியுமா .. சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் வருடத்துக்கு ஒரு தடவை யானைகளுக்கு நிஜமாவே கிலோ கணக்கில் அல்வா வழங்கி மகிழ்வார். (தென்காசி)
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.நீங்கள் குறிப்பிட்ட,
Delete//உங்களுக்குத்தெரியுமா .. சொக்கலால் ராம்சேட் பீடி அதிபர் வருடத்துக்கு ஒரு தடவை யானைகளுக்கு நிஜமாவே கிலோ கணக்கில் அல்வா வழங்கி மகிழ்வார். (தென்காசி)//
என்ற சுவையான, எனக்கு புதியதான தகவல் தந்தமைக்கும் நன்றி.
நீங்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் எழுதும் பின்னூட்டங்களைப் படிக்கும் போதெல்லாம், இந்த நெல்லைத்தமிழன் அவர்கள், ஒரு வலைப் பதிவராகவே வெளியே வந்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது எனக்குள் எழும் எண்ணம். நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
பத்து லட்சம் என்று முதலில் மந்திரியே பேட்டியில் சொல்கிறார் ,அப்புறம் அவரைக் காப்பாற்ற அதிகாரிகள் 'நாங்கள்தான் எங்கள் செலவில் அதை செய்தோம் 'என்கிறார்கள் !இதுக்கு செலவு செய்கிறார்களாம் அதிகாரிகள் ,அந்த செலவை யார் தலையில் கட்டுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா :)
ReplyDeleteத ம 2 ... எனக்கு போடத் தெரிந்ததெல்லாம் இந்த த ம கணக்குதான் ,டாலி பண்றது உங்க கடமை :)
நண்பர் பகவான்ஜீயின் கருத்துரைக்கு நன்றி.உங்கள் பதிவை அதிகாலையில் படித்தவுடனேயே, உங்களுக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போடுவதை வழக்கமாக வைத்து இருந்தேன். இப்போது அவ்வாறு தமிழ்மணத்தில் ஓட்டு போட இயலவில்லை. இணையம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு ஓட்டு அளிப்பதற்குள், அந்த நேரத்தில் ஐந்து பதிவுகளைப் படித்து விடலாம். எனவே எனக்கு இருக்கும் சில சூழ்நிலை காரணமாக, தமிழ்மணத்தில் இப்போது வாக்களிப்பதில்லை. மீண்டும் தமிழ்மணம் பழைய நிலைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
Deleteநான் போடும் ஒட்டு நொடியில் விழுகிறதே!
Deleteஎப்பொழுதாவது இப்படி சுற்றிக் கொண்டே இருந்தால் back சென்று மீண்டும் ஒட்டு போடுவேன் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றும் ,'சன்னலை மூடு' என்று வருவதுதான் பிடிக்காது :)
இந்தக் கணக்கக் காட்ட
ReplyDeleteமெத்தப் படித்த அதிகாரிகள் வேறு
துணை இருப்பார்கள்
அதுதான் அதிக எரிச்சல் தரும்
கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteயானைக்கு அல்வா கொடுத்ததாக சொல்லி சக மனிதர்களுக்கும் 'அல்வா' கொடுக்கும் கூட்டம் அல்லவா?
ReplyDeleteகவிஞர் பி.பிரசாத் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயானைக்கு அல்வா கொடுத்தல் என்ன தவறு? யானை என்பது இறைவனின் அவதாரம். அல்வா மட்டுமென்ன ஜாங்கிரி, பேடா, ரசமலாய், திரட்டுப்பால், சூர்யகலா, சந்திரகலா, பாதுஷா, இருட்டுக்கடை அல்வா, ...முதலிய இனிப்புகள் யானைக்கு மிகவும் பிடிக்கும் என்று மனோனமணீயம் சுந்தரனார் பல்கலையில் ஆய்வு செய்திருக்கிறார்களாமே!
ReplyDeleteஇதுக்கு காலையில் பதில் எழுதினேன். காணாமல்போய்விட்டது.
Deleteசெல்லப்பா சார்.. மனோன்மணீயம் பல்கலைக் கழகத்தை கலாய்க்கறீங்களே.
பறவைகளுக்கு தானியம் தரலாம் (அதுலயும் நான் வைக்கும்போது, முதலில் சிறிய சோளத்தைத்தான் எல்லாரும் சாப்பிடும். அப்படியும் பசி இருந்தால் கோதுமை சாப்பிடும். அதுக்கு அப்புறம்தான் அரிசி. நிறையபேர் அதுகளுக்கும் நல்லது செய்யறோம்னு மிஞ்சின பிரியாணி, சாதம், பழைய பிரெட் இதெல்லாம் போடுவாங்க- இங்கு ரோடு ஜங்ஷனில் அங்கங்கு இருக்கிற சில பிளாட்ஃபார்மில் ரெகுலராக நிறைய புறாக்கள் வரும் . அங்கு தானியமோ எதுவோ யாரும் போடலாம்.- அதுகள் விரும்பிச் சாப்பிடுவதைப் போடுவதுதானே தானம். மிஞ்சினதைப் போடுவது அல்லது அதற்குத் தேவையில்லாத்தைப் போடுவது நியாயமா? யானைக்கு கரும்பு, கரும்பு தோகை, வாழை (பழமல்ல, தண்டு. ரொம்பப் பழம் கொடுத்தால் யானைக்கு வயிறு அப்செட் ஆகும்னு பக்கத்துல இருக்கற பாகனுக்குத் தெரியும்) சோளத் தோகை போடலாம். அதைவிட்டு காசு இருக்கேன்னு லாலா கடை ஸ்வீட்ஸ் போட்டா? தவழ்ற குழந்தைக்கு அன்பைக் காண்பிக்கிறேன்னு எண்ணெய் ஒழுகற பஜ்ஜியைத் திணிக்கலாமா?
மூத்த வலைப்பதிவர் - இராய செல்லப்பா நியூஜெர்சி, அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteநண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மீள் வருகைக்கு நன்றி.
Delete// இதுக்கு காலையில் பதில் எழுதினேன். காணாமல்போய்விட்டது.//
மேற்படி நீங்கள் குறிப்பிடும் பதில் எதுவும் எனது பதிவுக்கோ அல்லது எனது மின்னஞ்சல் உள்பெட்டியிலோ இல்லை. நீங்கள் கருத்துரைப் பெட்டியில் எழுதும்போது இண்டர்நெட் இணைப்பு விட்டுப் போயிருக்கலாம். சிலசமயம் ப்ளாக்கரில் முதல் தடவை எழுதும் கருத்துரை காணாமல் போய்விடும்.
அருமையான கணக்குகள்
ReplyDeleteசுவையான பதிவு
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteஅந்த நகிச்சுவைக் காட்சியில் நடித்தவர் என் எஸ் கிருஷ்ணன் என்று நினைத்திருந்தேன். ஆனால் சந்திரலேகா இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்!
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. யானைக்கு அல்வா நகைச்சுவையில் நடிகர் சாரங்கபாணி நடித்து இருப்பதாகக் கூட எழுதி இருந்தனர். இந்த படம் நான் பிறப்பதற்கு முன்னரே வந்த படம். இந்த கட்டுரைக்காக யூடியூப்பில் இந்த சந்திரலேகா படத்தைப் பார்க்க போன போது, அது மொத்தம் 14 பாகங்கள் என்று நினைக்கிறேன். எனவே இந்த நகைச்சுவை பதிவை மட்டும் தனியே பார்த்து ரசித்தேன். மேலும் குறிப்புகளும் இந்த படத்தில் சர்க்கஸ் மானேஜராக நடித்தவர் எல்.நாராயணராவ் என்றும் தெரிவிக்கின்றன. என்.எஸ்.கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.
Deleteபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
ReplyDeleteயானைக்கு அல்வா. ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். இருந்தாலும் தங்கள் எழுத்தின் மூலமாக வாசிக்கும்போது இன்னும் ரசனையாக இருந்தது.
முனைவர் அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நானும் இரண்டு மாதமாக வலைப்பக்கம் சரியாக வர இயலவில்லை.
Deleteகொண்டைக் கடலை ரூ 50
ReplyDeleteமூக்குக் கடலை ரூ 75
காஞ்ச மிளகாய் ரூ 10
குண்டு மிளகாய் ரூ 8
கறி வேப்பிலை ரூ 5
தாளிக்க எண்ணெய் ரூ 22
OK ஆயில் ரூ 25
கல் உப்பு ரூ 10
டேபிள் சால்ட் ரூ 15
பூ வாங்கியது 150
புஷ்பம் ரூ 100
கதம்பம் ரூ 150
மாலை ரூ 250
- இப்படியெல்லாம் கூட கணக்குகள் இருக்கின்றன...
அப்போதெல்லாம் கணக்கு வழக்கு என்பார்கள்..
உண்மையிலேயே கணக்கு அதன்பின் வழக்கு தான்!..
நண்பர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நடைமுறையில் சொல்லும்போது கூட ‘கணக்கு வழக்கு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
Deleteயானைக்கு அல்வா காணொளி ரசித்தேன் அதுவும் டி ஏ மதுரத்தின் கணீர்குரலில் சிரித்தேன் ரசித்தேன் ஞாபக மறதி கணக்கு ..
ReplyDeleteஎப்படில்லாம் கணக்கு காட்டறாங்க அதிகாரிகள் !!
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஇந்த மாதிரி இரட்டை கணக்குகளைக் காட்ட நான் வற்புறுத்தப்பட்டிருக்கிறேன் அது குறித்து என் தளத்தில் எழுதியும் இருக்கிறேன்மனசுக்கு ஒவ்வாததால் அந்த வேலையை விட்டு விட்டேன்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. மேலே நீங்கள் சொன்ன நிகழ்ச்சியை உங்கள் பதிவில் படித்து இருக்கிறேன்.
Deleteகாணொளியை இரசித்தேன். கணக்கில் தில்லுமுல்லு செய்யும் வழக்கம் அந்த காலத்திலும் இருந்திருக்கிறது போலும். பீகாரில் தீவன ஊழல் பற்றி விசாரிக்கும்போது தீவனத்தை ஏற்றி சென்ற சரக்குந்து (Lorry) வின் எண்ணை சரிபார்த்தபோது அது ஒரு இரு சக்கர வண்டியின் எண்ணாக இருந்ததாம். இது போன்று தப்பு கணக்குகளை எழுதுவது நம்மவர்களுக்கு கைவந்த கலைதானே!
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநான் படமே பார்த்திருக்கிறேன்!
ReplyDeleteபுலவர் அய்யாவுக்கு நன்றி. நான் பிறப்பதற்கு முன்பே வந்த படம் சந்திரலேகா. நான் இன்னும் பார்க்கவில்லை. யூடியூப்பில் போய் பார்த்தபோது பெரிய படமாக, நீண்டநேரம் ஓடும்போல் தெரிகிறது. ஒருநாள் பொறுமையாக பார்க்க வேண்டும்.
Deleteஹஹஹ் நல்ல நகைச்சுவை!க் கணக்கு. காணொளியும் ரசித்தோம். நம்ம அரசியல்வியாதிகளுக்கும் அதிகாரிகளும் பொய்க்கணக்கு காட்டுவதற்குச் சொல்லித் தரணுமா என்ன.சில வீடுகளில் கூட நடப்பதுண்டு....
ReplyDelete