அவன் பித்தனா? என்று ஒரு தமிழ்த் திரைப்படம். நடிகர் எஸ்.எஸ்.ஆர்
கதாநாயகன். இந்த படத்தில், ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கத்தின் மிகுதியால் கதாநாயகன்
ஒரு நூறு ரூபாயை பிச்சையாகக் கொடுத்திட, அவனுக்கு அந்த பிச்சைக்காரன் கொடுத்த பட்டம்
பைத்தியம் என்பதாக ஒரு காட்சி வரும். (1966 இல் வெளிவந்த படம் இது – அன்றைக்கு நூறு
ரூபாய் என்பது பெரிய மதிப்பு ) இதே போல தமிழ் இலக்கியக் காட்சிகளிலும் சிலர் மிகை இரக்கம்
காரணமாக செய்த செயல்களும் உண்டு. ஆனால் அவற்றை யாரும் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லுவதில்லை.
இரண்டு வள்ளல்கள்
அன்றைய பறம்புமலையையும் அதனைச் சுற்றியுள்ள முந்நூறு ஊர்களையும்
தன்னகத்தே கொண்ட பறம்புநாட்டை ஆண்ட மன்னன் வேள்பாரி என்பவன்.
ஒருமுறை அவன் தேரில் செல்லும்போது வழியில் முல்லைக்கொடி ஒன்றைக் கண்டான். பொதுவாகவே காட்டுக் கொடி என்றால், அது அருகே உள்ள
ஒரு செடியையோ அல்லது மரத்தையோ பற்றி படரும். இந்த முல்லைக்கொடிக்கு அது மாதிரி படர
அருகில் எதுவும் இல்லை போலிருக்கிறது. அவன் நினைத்து இருந்தால் வேலையாட்களைக் கொண்டு,
அது பற்றிப் படர ஒரு பந்தலை போட்டு கொடுத்து இருக்கலாம். ஆனால் அந்த பாரி மன்னனோ தான்
வந்த தேரையே அதன் அருகில் நிறுத்தி, அந்த முல்லைக் கொடியை எடுத்து தேரின் மீது படர
விட்டு விட்டு, குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்து விட்டான். விஷயத்தை கேள்விப்பட்ட மக்கள்
மன்னனை ‘முல்லைக்குத் தேர் ஈந்த பாரி’ என்று போற்றினார்கள்.
இந்த கொடையைப் பற்றி கேள்விப்பட்ட, கபிலர் தனது பாடல்களில்
.... .... பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி – (புறநானூறு பாடல் எண்.200)
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
‘கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி – (புறநானூறு பாடல் எண்.200)
என்றும்
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி - (புறநானூறு பாடல் எண்.201)
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி - (புறநானூறு பாடல் எண்.201)
என்றும் சிறப்பித்துப் பேசுகின்றார்.
இதே போல இன்னொரு வள்ளல். மலைசூழ்ந்த ஆவினன்குடியைச் சேர்ந்த பேகன். என்பவன். இவனும் ஒருமுறை தேரில் சென்று கொண்டு
இருக்கும் போது, மயில் ஒன்று தோகை விரித்து ஆடக் கண்டான். எங்கே மயிலுக்கு குளிருமோ
என்று இரக்கப் பட்டவன், தான் மேலுக்கு அணிந்து இருந்த சால்வையையே மயிலுக்கு போர்த்தி
விட்டான். மக்கள் மனதில் ‘மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகன்’ என்று வாழ்த்தினர்.
இந்த இரண்டு வள்ளல்களும் கடையெழுவள்ளல்கள் வரிசையில் வைக்கப்பட்டு பாராட்டப் படுகின்றனர்.
நத்தத்தனார் எனும் புலவர் தனது சிறுபாணாற்றுப்படை (84 – 91) எனும் நூலில்,
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகன் …….. ……
என்று பேகனையும்
…… ….. …. ….
சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி
என்று பாரியையும் சிறப்பித்துப் பேசுகிறார்.
பிற செய்திகள்:
இதே போல ஒரு வள்ளல், அவனை நாடி வந்த, வறுமையில் வாடிய புலவனுக்கு
ஒரு யானையையே பரிசிலாக தருகிறான். அவன் அந்த யானையைக் கட்டி தீனி போட்டானா என்று தெரியவில்லை
இன்னொருவன், பெயர் சிபி சக்கரவர்த்தி. தன்னை நாடி
வந்த புறாவுக்காக அதனைத் துரத்தி வந்த பருந்துவின் பசியை ஆற்ற வேண்டி, தன்னுடைய தொடையையே
அரிந்து கொடுத்தானாம். ( சக்கரவர்த்தி கை தட்டினால், அரண்மனை சமையல் அறையிலிருந்து இறைச்சி தட்டு தட்டாக வரும். ஆனாலும் அவனுக்குள் அப்படி ஒரு அவசரம் )
கொடைமடம்:
இவ்வாறு இந்த வள்ளல்கள் அளவற்ற அன்பு அல்லது அளவற்ற இரக்கம் காரணமாக,
அளவுக்கு மீறி அல்லது கொடை வாங்குவோரின் தகுதிக்கு மீறி செய்வதை கொடைமடம் என்று சொல்கிறார்கள்.
இந்த கொடைமடம் என்ற குறிப்பு பரணர் பாடிய புறநானூறு பாடல் எண். 142 இல் வருகிறது. கொடைமடம்
என்பதற்கு கொடுக்கும்போது இது சரியா என்று எண்ணாது அளவு கடந்து கொடுத்தல் எனலாம். இங்கே
‘ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்’
என்ற நமது. பழமொழியை நினைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் இவை போன்ற செய்திகள் மிகைப்படுத்தப்
பட்டவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
ஆஹா .... கொடைமடம் பற்றி இன்றுதான் அறிந்துகொண்டேன். நேற்று நள்ளிரவே
ReplyDeleteஎனக்கு வழக்கம்போல் தூக்கம் வராததால் இதுபற்றி அறிய மிகவும் முயற்சித்தேன். ஆனாலும் இந்தப்பதிவு ஏனோ பலமணி நேரங்கள் காட்சியளிக்கவில்லை.
>>>>>
கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கு வீட்டில் எனது அப்பாவின் உடல்நிலையை முன்னிட்டு,நான் இரவு படுப்பதற்கு சிலசமயம் அதிகாலை 3 மணி கூட ஆகிவிடும். நேற்று மாலையே எழுதி வைத்து விட்ட இந்த பதிவை நேற்று இரவு Dash Board இல் எடிட் செய்து கொண்டு இருந்தபோது தவறுதலாக வெளியிட்டு விட்டேன். எனவே பதிவை மீண்டும் Draft இற்கு மாற்றி சரிசெய்து காலையில்தான் Publish செய்தேன். இதுவே இந்தப்பதிவு பலமணி நேரம் காட்சி அளிக்காததன் காரணம். மன்னிக்கவும்.
Deleteஅழகான படங்களுடன் அற்புதமாக ஒவ்வொன்றையும் தங்கள் பாணியில் நன்கு விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteதெரிந்த கதைகளே எனினும் இன்று இவை எனக்கு மறந்த கதைகளாகப் போய் விட்டன. புதுப்பித்துக்கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே.
>>>>>
அய்யா V.G.K அவர்களின் மறு வருகைக்கு நன்றி. நான் இந்த கதைகளை தொடக்கப்பள்ளி படிப்பின்போது ‘தேன் தமிழ் வாசகம்’ என்ற தமிழ் பாடநூலில் படித்ததாக நினைவு. கொடைமடம் என்ற சொல்லை பின்னாளில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போது தெரிந்து கொண்டேன்.
Delete1966-இல் வெளிவந்துள்ள அவன் பித்தனா? திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைச் சொல்லியுள்ளது படிக்கும் என்னை சிந்தித்து சிரிக்க வைத்தது. அந்த ஆண்டுதான் நான் S S L C - XI Std. Pass செய்தேன். இந்தப்படம் வெளிவந்ததே எனக்குத் தெரியவில்லை. நான் இந்தப்படத்தைப் பார்க்கவும் இல்லை.
ReplyDeleteநானும் இந்த படத்தை இது வெளிவந்த சமயம் பார்க்கவில்லை. பார்க்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நான் அப்போது 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். பின்னர் பெரியவன் ஆனதும் பழையபட வரிசையில் திருச்சி முருகன் டாக்கீஸில் பார்த்ததுதான்.
Delete//இவ்வாறு இந்த வள்ளல்கள் அளவற்ற அன்பு அல்லது அளவற்ற இரக்கம் காரணமாக, அளவுக்கு மீறி அல்லது கொடை வாங்குவோரின் தகுதிக்கு மீறி செய்வதை கொடைமடம் என்று சொல்கிறார்கள். இந்த கொடைமடம் என்ற குறிப்பு பரணர் பாடிய புறநானூறு பாடல் எண். 142 இல் வருகிறது. கொடைமடம் என்பதற்கு கொடுக்கும்போது இது சரியா என்று எண்ணாது அளவு கடந்து கொடுத்தல் எனலாம்.//
ReplyDeleteஇந்த வரிகளைப் படிக்கும் முன்பே, பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, நான் எனக்குள் நினைத்துக்கொண்டது என்னவென்றால் ..... மடத்தனமான செய்யப்பட்டுள்ள கொடையாகையால் இதற்குப்பெயர் ’கொடைமடம்’ என்று வைத்திருப்பார்கள் என்பதே. :)
நீங்கள் நினைத்தது சரிதான்.
Deleteஎக்ஸ்ட்ரீமிஸ்ட்ஸ்! வேள்பாரி கதைக்கு மாற்றுக கதை - மகளை அரண்மனைக்கு அனுப்பி வேறு தேர் கொண்டு வரச் சொல்வதாக - சமீபத்தில் எங்கோ, எதிலோ படித்தேன். சரியாக நினைவில்லை.
ReplyDeleteஅன்புள்ள ஸ்ரீராம்,
Deleteதிரு. சென்னை பித்தன் அவர்கள் தன் பாணியில் கற்பனை செய்து மாற்றி எழுதி சமீபத்தில் வெளியிட்டிருந்த பதிவு அது. சரித்திரத்தில் அதுபோலெல்லாம் கிடையவே கிடையாது.
அதற்கான இணைப்பு: http://chennaipithan.blogspot.com/2017/05/3.html
Deleteசரித்திரத்தில் அது போலக் கிடையாது என்பதை நானும் நன்றாகவே அறிவேன் வைகோ ஸார்!!!!!!!
Deleteஅந்த மாற்றுக் கற்பனை மனதில் நின்றிருக்கிறது பாருங்கள்!
கருத்துரை தந்த நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கும், அவரோடு நான் சொல்ல நினைத்ததையே கருத்துப் பறிமாற்றம் செய்த அய்யா V.G.K அவர்களுக்கும் நன்றி. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு, இன்று extremists என்பதன் அர்த்தமே வேறு ஆகி விடுகிறதே.
Deleteமுல்லைக்குத் தேர் கொடுத்த பாரி
ReplyDeleteமயிலுக்குப் போர்வையளித்த பேகன்
ஒரு புறாவைக் காப்பாற்ற தன் தொடையையே பருந்துக்கு அறுத்து அளித்த சிபி
ஆகிய வள்ளல்களைப் பற்றி பாடங்களில் மட்டுமே நாம் கேள்விப்பட்டுள்ளோம்.
நம் காலத்தில் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் இதுபோன்ற ஒருசில செயல்களை நேரிலும், செய்திகள் வாயிலாகவும், திரைப்படங்கள் மூலம் பார்த்துள்ளோம்.
உதாரணமாக ‘ஒளி விளக்கு’ என்ற படத்தில் குடி போதையில் தன் வீட்டுக்குத்திரும்பி வரும் நம் ’மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.’ அங்கு ஒரு மரத்தடித் திண்ணையில் குளிரில் நடுங்கி சுருண்டு படுத்துக்கொண்டிருக்கும் சுமார் 90 வயது கிழவிக்கு, தான் அணிந்திருக்கும் தன்னுடைய சூப்பரான கோட் ஒன்றைக்கழட்டி போர்த்தி விட்டுச் செல்வார். :)
>>>>>
அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எம்ஜிஆர் பட பார்முலாவே அவரை நல்லவராகவும் ஏழைப்பங்காளனாகவும் காட்டுவதுதானே.
Deleteகொடை மடம்
ReplyDeleteஅறியாத வார்த்தை
தங்களால் அறிந்து கொண்டேன்
நன்றி ஐயா
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//இதே போல ஒரு வள்ளல், அவனை நாடி வந்த, வறுமையில் வாடிய புலவனுக்கு ஒரு யானையையே பரிசிலாக தருகிறான். அவன் அந்த யானையைக் கட்டி தீனி போட்டானா என்று தெரியவில்லை//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
’யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ... இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று ஒரு பழமொழி சொல்வார்களே. அதனால் அந்த வறுமையில் வாடிய புலவர் யானையை பிச்சை எடுக்க வைத்து பிழைத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ.
நம் ஆட்கள் பேங்க் லோன் கிடைக்கிறது என்றால், தேவையிருக்கோ தேவை இல்லையோ, எந்தப் பொருளையும் வாங்கிவிடத் துடிப்பார்கள்.
ஒரு சின்ன நகைச்சுவை கதை சொல்ல நினைக்கிறேன்.
-=-=-=-
ஒருநாள் ஒரு யானை வியாபாரி ஓர் ஏழையிடம் வருகிறான்.
“யானை விலைக்கு வேண்டுமா?” எனக் கேட்கிறான்.
“யானையை வைத்து என்னால் எப்படித் தீனி போட்டு வளர்க்க முடியும்? அதனால் வேண்டாம் ஐயா” என்கிறான், அந்த ஏழை.
”உடனடியாக நீர் காசு ஏதும் தர வேண்டாம். கடனாகத் தருகிறேன். மெதுவாகப் பணத்தை சுலபத் தவணைகளில் கொடுத்தால் போதும்” என்கிறான் அந்த யானை வியாபாரி.
“அப்போ ஒரு யானைக்கு இரண்டு யானைகளாக என் வீட்டு வாசல் அருகே உள்ள மரத்தில் கட்டிவிட்டுப்போ” என்கிறான் அந்த ஏழை.
-=-=-=-
அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி. நல்ல நகைச்சுவையான கதை. உங்கள் ஃபேஸ்புக்கில் இந்த் சிறுகதையை வெளியிடுங்கள்.
Delete//‘ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்’//
ReplyDeleteஇதுதான் மிகச்சிறப்பான பழமொழியாகும். அதனால் என் பின்னூட்டங்களை இங்கு மேலும் மேலும் போடாமல் இத்துடன் விடை பெற்றுக்கொள்கிறேன். :)))))
அன்புடன் VGK
நன்றி அய்யா.
Deleteநன் கொடை வசூலிக்கவரும் அன்பர்கள் நோட்டுபுத்த்கத்தை கொடுப்பார்கள் , அதில் முன் கொடுத்தவர்கள் விவரம் இருக்கும், கொஞ்சமாய் கொடுத்து இருப்பது முன் இருந்தால் எல்லோரும் அது போலவேதான் கொடுப்பார்கள்.
ReplyDeleteமுன் கொடுத்த்வர் நிறைய கொடுத்து இருந்தால் தானும் அது போல் கொடுக்க எண்ணுவார்கள், அல்லது அதற்கு மேல் கொடுத்து பேர் வாங்க ஆசை படுவார்கள்.
அது போல் தான் கொடை கதைகளும் . மக்கள் அதை எல்லாம் படித்தால் நாமும் தேர் கொடுக்க வில்லை யென்றாலும் ஒரு குச்சியை நட்டு அதில் முல்லை கொடியை ஏற்றி விடுவோம்.
சிபி சக்கரவர்த்தி போல் தொடை அறுத்து கொடுக்க வில்லையென்றாலும் பற்வையின் பசிக்கு உணவு தருவோம், குளிருக்கு நடுங்கி பாதையோரம் இருக்கும் ஏழைகளுக்கு உதவ போர்வை கொடுக்க
மனம் வரலாம் எந்று சொல்லப்பட்ட கதைகள்.
நீங்கள் சொல்வது போல் அவர் அவர்களுக்கு முடிந்த உதவிகளை அளவுடன் செய்து மகிழலாம்.
சித்தன்னவாசல் அருகில் இருக்கும் ஒரு பூங்க்காவில் பேகன் மயிலுக்கு போர்வை கொடுக்கும் படத்தை நானும் எடுத்து இருக்கிறேன்.
விரிவான கருத்துரை தந்த மேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல நீதிபோதனைக் கதைகளாகவெ எடுத்துக் கொள்ளலாம்.
Deleteபழங்கதைகள் எல்லாம் படித்து மகிழும்போது சுவைக்கும் காரண காரியங்களை ஆராய முற்பட்டால் பித்துதான் பிடிக்கும்
ReplyDeleteஅய்யா ஜீஎம்பி அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
Deleteகொடை மடம் என்பதற்கான பொருளை இப்பொழுதுதான் அறிந்தேன். நுணுக்கமான குறிப்புகளுடன் அருமையான பதிவு.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Delete"பெரும்பாலும் இவை போன்ற செய்திகள் மிகைப்படுத்தப் பட்டவை" - நான் அப்படி நினைக்கவில்லை. உணர்ச்சி, அறிவை மிஞ்சியது. தர்க்கவாதத்தையும் மிஞ்சியது. குலசேகர மன்னன், ராமர் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, தானே உடனே படையெடுத்து வருகிறேன் என்று எழுந்த மாதிரி. நாமளும், ஒரு கதையைப் படிக்கும்போதோ, அல்லது ஒருத்தர் அவரோட கஷ்டத்தைச் சொல்லும்போதோ, தானாகவே கண்ணீர் வடிக்கிறோம். அந்தக் கஷ்டம் நமக்கா? இல்லை.. ஆனால் அதை உணர்கிறோம். குழந்தை கீழே விழுந்துவிட்டது. அது அழுகிறது. உடனே நாம என்ன செய்கிறோம்? 'சே. உன்னைத் தள்ளிடுத்தா, அடி அடி என்று' தரையை அடிக்கிறோம். குழந்தை சமாதானமடைகிறது. அறிவுள்ள நாம் ஒரு குழந்தையைப் போல்தானே நடந்துகொள்கிறோம். தலைவர்கள் இறந்தால், தானாகவே நாம் ஏன் வருத்தப்படுகிறோம்? (அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லாதபோது). ஆள், அம்பு வைத்திருக்கிற அம்பானியே, தன் குழந்தை கீழே விழுந்தால், ஆபீசுக்கு கோட் சூட்டோட ரெடியா இருந்தாலும், உடனே கீழே குனிந்து குழந்தையைத் தூக்குவார். இது உணர்ச்சி. 'கொடைமடம்'-சரியான சொல்லாடல்.
ReplyDeleteநண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி. எந்த விஷயமானாலும் உணர்ச்சி வயப்படுதல் தமிழர் இயல்பு.
Deleteகொடைமடம் பற்றி நானும் இப்போது தான் அறிகிறேன். பதிவு மிகவும் சுவாரஸ்யம். சின்ன வயதில் கேட்ட கதைகளை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்! இந்த மாதிரி சில கதைகளை பின்னாளில் நினைத்துப்பார்க்கும்போது, ஈகை, கருணை, தானத்தின் உயர்வு போன்ற நற்செயல்கள் பரவ வேன்டுமென்பதற்காக இவை புனையப்பட்டதோ என்று தோன்றும், இப்போதும்கூட நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அப்படியே வாழ்க்கையில் பொருந்துவதைப்போல!
ReplyDelete'அவன் பித்தனா' திரைபப்டத்தை இன்னும்கூட நினைவில் வைத்திருப்பது மிகவும் ஆச்சரியம்! 'கிழக்கு வெளுத்தடி, கீழ்வான சிவந்ததடி!' போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த படம் அது!
மேடம் அவர்களுக்கு நன்றி. நம்மை வழிநடத்த நமது முன்னோர்கள் சொன்ன நீதிபோதனைக் கதைகளாகவே எடுத்துக் கொள்ளலாம்.
Deleteஅவன் பித்தனா? திரைப்படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். இந்த படத்தில் அவரது நறுக்குத் தெரித்த வசனங்களை அருமையாக உச்சரித்து நடித்தவர்கள் எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி ஜோடி. இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் ”இறைவன் இருக்கின்றானா?” ஏன்ற பாடல். இந்த பாடலில் விஜயகுமாரியின் நடிப்பு குறிப்பிடத் தக்க ஒன்று.
கொடைமடம் தந்து ஆள்வோர் வாழ்ந்த மண் ,இப்போ. .கொடநாட்டில் அரண்மனை போல் வீடு கட்டி ஆண்ட மண்ணாகி போச்சே :)
ReplyDeleteநண்பர் பகவான்ஜீ எதனையுமே ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பவர் என்பதில் மிக்க மகிழ்ச்சிதான். நன்றி ஜீ.
Deleteகொடை மடம் பற்றி அருமையான விளக்கமும் பாடல் வரிகளும் அருமை ஐயா .பல நேரம் உணர்ச்சி மிகுதியாலேயே சில விஷயங்களை செய்து விடுவோம் அதற்கு அரசனும் ஆண்டியும் விதிவிலக்கல்ல ..தேர் கொடுத்தது மயிலுக்கு போன்றவை பொத்தியது கூட பரவாயில்லை ..தனது தொடையை வெட்டியா சிபி சக்கரவர்த்தி !!! வெட்டும்போது வலித்திருக்காதா ? என்னே ஒரு அவசரம் ..
ReplyDeleteஅழகான பதிவு பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் ..தம .2
மேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteவிளக்கம் நன்று...
ReplyDeleteஆனாலும் முடிவில் சொன்ன பழமொழி - எடுத்துக் கொண்ட விதம் - அவரவர் சிந்தனைக்கு ஏற்றாற்போல்...
முந்தைய (பழைய) எனது பதிவில்... வேண்டாம், ஏற்கனவே நீங்கள் வாசித்து இருப்பீர்கள்...
நன்றி...
நண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபால அவர்களுக்கு நன்றி.
Delete// முந்தைய (பழைய) எனது பதிவில்... //
ஏன் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள். எந்த பதிவு என்றால் நான் படிக்க சவுகரியமாக இருக்கும்.
அக்கால மன்னர்கள் கொடைமடம் கொண்டவர்களே தவிர படை மடம் அறியாதவர் அறியாதவர்கள் என்பது புலவர்கள் கூற்று! (மடம்- அறியாமை)
ReplyDeleteமரியாதைக்குரிய புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
Deleteகொடை மடம் என
ReplyDeleteபடிக்க வந்தேன்
பல தகவலைக் கற்றேன்
அருமையான பதிவு
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.
Deleteஇதுவரை அறியாத சொல்
ReplyDeleteசொல்லின் விளக்கமாய் விரிவாகப்
படங்களுடன் பகிர்ந்த பதிவு
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்களுடன்...
கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅவன் பித்தனா என்று படம் வந்ததே இப்போத் தான் தெரியும்! :) கொடைமடம் குறித்த தகவல்களுக்கு நன்றி. நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பது சரியானது என்றே தோன்றுகிறது. எனக்கும் கிட்டத்தட்ட அதே கருத்து என்றாலும் தமிழர்கள் உணர்ச்சி வசப்படுவதில் ரொம்பவே அதிகம் தான்! எளிதில் உணர்ச்சி வசப்படுகின்றனர். :( அறிவு பூர்வமான சிந்தனைகள் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. வைகோ அவர்களின் யானைக்கதையைப் போல் தான் இப்போதெல்லாம் நடக்கிறது.
ReplyDelete