ஏற்கனவே கழுத்தில் தொங்க விட்டுக் கொள்ளாத குறையாக, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பென்ஷனர் ஐடி, PAN கார்டு, ஹெல்த் இன்சூரன்ஸ் ஐடி, ஏ.டி.எம் கார்டு, லைப்ரரி ஐடி என்று நிறையவே அடையாள அட்டைகள். பெரும்பாலும் எல்லா அட்டைகளும் பர்ஸில் இருக்கும். பத்தாதற்கு வீட்டில் ரேஷன் கார்டு, ஆர்.சி புத்தகம் என்று டாகுமெண்ட் ஐடிகள்.
காங்கிரசும் பிஜேபியும்
மேலே சொன்ன அடையாளங்கள் எல்லாம் போதாது என்று, அப்போது ஆட்சியில்
இருந்த, ஐக்கிய முன்னணி (காங்கிரஸ்) அரசு, எல்லோருக்கும் ஆதார் எண் என்ற திட்டத்தை
கொண்டு வந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன. இதில் கட்டாயம்
ஏதும் இல்லை என்பதால், அலைச்சலுக்கு பயந்து கொண்டு நான் ஆதார் பக்கம் போகவில்லை.
மத்தியில் பி.ஜே.பி ஆளும் கட்சியாக வந்தவுடன், காங்கிரஸ் கொண்டு
வந்த ஆதார் எண் திட்டத்தை, அப்போது கடுமையாக எதிர்த்த இந்த ஆதாரையே இப்போது எதற்கெடுத்தாலும்
கட்டாயப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
// ஆதார் அடையாள அட்டை வாங்க வேண்டும் என, நாட்டின் குடிமக்கள்
யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் வழங்குவதற்கு, அந்த அடையாள
அட்டை அவசியம் என, நிர்பந்திக்கக் கூடாது. மேலும், பிற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக
ஊடுருவியவர்களுக்கு, கட்டாயம், இந்த அடையாள அட்டை வழங்கப்படக் கூடாது //
என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தபோதும் அதனை, இந்த மோடி
அரசாங்கம் ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை.
இன்றும் ( 12.05.2017 வெள்ளி ) உச்ச
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல
என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி
உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு
விளக்க வேண்டும்" என்று கேட்டுள்ளனர்.
ஆதாருக்கு அலைச்சல்:
நாங்கள் குடியிருப்பது புறநகர் பகுதி என்பதால், ஆதார் எண்ணுக்காக
டவுனுக்கு அடிக்கடி அலைய வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் இப்போது இருப்பது போல் ஆதார்
எண் பெறுவது சுலபமாக இருக்கவில்லை. சட்டசபை தொகுதி வாரியாக, நகரின் மத்தியில் உள்ள,
ஒரு கல்லூரியின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு வந்து பதியச் சொன்னார்கள். நானும் அங்கு
சென்றேன். ஒரு பெரிய விண்ணப்ப பாரத்தைக் கொடுத்து அடுத்தநாள் குடும்ப உறுப்பினர்களையும்
அழைத்து வரச் சொன்னார்கள். எனது மனைவி அலுவலகத்திற்கும் மகன் கல்லூரிக்கும், சென்று
விட்ட படியினால் நான் மட்டும் சென்றேன். சரியான கும்பல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
சரியான திட்டமிடல் இல்லை. வரிசையில் ரொம்பநேரம் நின்று விட்டு திரும்பி விட்டேன்.
திடீரென்று ஒருநாள் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போட்ட பள்ளியில்
ஆதார் எண் பதிவதாக பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். நானும் பரவாயில்லையே வீட்டிற்கு
அருகில் என்று ஆவலாய்ச் சென்று வரிசையில் நின்றேன். ஒரு பத்து பேர்தான்., எனக்கு முன்னே
பர்தா அணிந்த பெண்கள் நான்கு பேர். நான் போன நேரம், அவர்களில் ஒருவர் போன் செய்ய ஒரு
வேனில் வந்த, அவரது உறவினர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அவருக்குப் பின் நின்று கொண்டார்கள்.,
இது கதைக்கு ஆகாது என்று திரும்பி விட்டேன்.
கிடைத்தது ஆதார்:
ஒரு கட்டத்தில், இனிமேல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதார் பதியப்படும் என்றார்கள். நானும் கொஞ்சநாள் ஆகட்டும் என்று இருந்தேன். எனது மனைவி அந்த அலுவலகத்திற்கு பதியச் சென்றபோது, கும்பலே இல்லை என்று சொன்னவுடன், அப்புறம் நானும் பொறுமையாக
சென்று ஆதார் எண்ணை பதிந்து வந்தேன். என்னைத் தொடர்ந்து எனது மகனும் பதிந்தார். அப்புறம்
தபாலில் ஆதார் அட்டைகள் வீடு தேடி வந்தன.
வங்கிக் கணக்குகள்:
நான் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் என்பதால், எனது எல்லா
கணக்குகளும் அந்த வங்கியில்தான். எனவே முதல் வேலையாக எனது பெயரில் உள்ள எல்லா கணக்குகளுக்கும்
( கூட்டுக் கணக்குகள் உட்பட) ஒரே ஐடி எண் (CIF) இருக்கும்படி, கடிதம் கொடுத்து மாற்றிக்
கொண்டேன். பின்னர் அந்த ஐடியோடு எனது ஆதார் எண்ணை இணைத்தேன்.
ரேஷன் கார்டு:
எங்களது குடும்ப கார்டு வெள்ளை நிறம்; சர்க்கரை மட்டும்தான். முன்பு
இந்த கார்டுதான் எங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, வாகனம்
வாங்க, பாஸ்போர்ட் எடுக்க என்று எல்லாவற்றிற்கும் அடையாளமாக பயன்பட்டது. இந்த ரேசன்
கார்டிலும், குடும்ப உறுப்பினர்களது அனைவரது ஆதார் எண்களையும் இணைக்க வேண்டும் என்றார்கள்..
ஒரு வழியாக இதிலும் இணைத்தாகி விட்டது. இப்போது இந்த ரேசன் கார்டுக்குப் பதிலாக ஸ்மார்ட்
கார்டு தரப்படும் என்று இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகக் கூடி அலைச்சலும்,
கியூ வரிசையில் நிற்பதும் என்று நிறையவே நேரம் வீணாக போகின்றது.
உண்மை நண்பரே டிஜிடல் இந்தியா என்ற பெயரில் நடுத்தர வர்க்க மக்கள் படும் அல்லல் கொஞ்சநஞ்சமல்ல...
ReplyDeleteத.ம.
த.ம. இணைய மறுக்கிறது நண்பரே.
Deleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.டிஜிடல் இந்தியா என்ற பெயரில் மக்களை வேறு எதனைப் பற்றியும் யோசிக்க முடியாத அளவிற்கு திசை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
Deleteசனநாயகத்தின் பெருமையே வரிசையில் நிற்பதும், காத்திருப்பதும்தான் ஐயா
ReplyDeleteநண்பர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களே, வாழ்க ஜனநாயகம் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
Deleteஎந்த வேளையில் பிறந்ததோ இந்த ஆதார் எண் அட்டை, ஆரம்பத்திலிருந்தே இது பற்றி விதவிதமான விமரிசனம் தான்.
ReplyDeleteசென்னையில் இப்பொழுது சின்னச் சின்ன கடைகள் போன்ற இடங்களில் இந்த ஆதார் அவஸ்தைகளை சுலபமாக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற, முகவரியை மாற்ற என்ற அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு சாதாரண மக்களுக்கு உதவி செய்கிற விதத்தில் ஆயாசங்களை எளிமையாக்கி விட்டார்கள், நாமே ஆன்-லைனில் இந்த மாற்ரங்களைச் சுலபமாகச் செய்யலாமாம். நண்பர் ஒருவர் சொன்னார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற பெண்களின் நலனுக்கான திட்டங்களில் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பது மேலும் சுலபத்தையும் நிச்சயத்தன்மையையும் மக்களின் ஆதரவைக் கூட்டுவதாக அமைவதைப் பார்க்கிறேன். வருமானவரி கணக்குக்கான ரிடர்ன் சமர்ப்பிப்பதற்கு உதவி செய்வதற்காக கூட இந்த மாதிரியான ஏற்பாடுகள் அமைந்தால் அது பெருத்த ஆதரவைப் பெறும்.
ஆக எல்லா விஷயங்களும் அது இயல்பாகிப் போகும் வரை அலைச்சலும், எளிமையற்ற தன்மையும் இருந்து கொண்டு நம்மை வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த மாதிரியான கட்டுரைகளில் சொல்ல வேண்டியதை சுலபமாக்குகிற லேசான நகைச்சுவை கலந்த உங்கள் நடையை நான் மிகவும் ரசிக்கிறேன். வாழ்த்துக்கள், நண்பரே!
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி. எந்த ஒரு திட்டத்தையும் ஒரு பயமுறுத்தலோடேயே தொடங்குவது வழக்கமாய் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட
Delete// ஆக எல்லா விஷயங்களும் அது இயல்பாகிப் போகும் வரை அலைச்சலும், எளிமையற்ற தன்மையும் இருந்து கொண்டு நம்மை வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. //
என்ற கருத்தில், இந்த ஆதார் விஷயமும் ஒத்து போவதைக் காண முடிகிறது. பல திட்டங்களை அறிமுகப் படுத்துவதில், ஆளுங்கட்சியின் நன் மதிப்பைப் பெற வேண்டும் என்ற அவசரத்தில் பல அதிகாரிகள் செயல்படுவது கண்கூடு.
இப்போது 80 வயதிற்கு மேல் ஆதார் அட்டை அவசியமில்லை :மத்திய அரசு அறிவிப்பு என்று செய்தி வெளி வந்துள்ளது. இதனை முன்பே செய்து இருந்தால், இந்த முதியோர்களுக்கான அலைச்சல் இல்லாது போயிருக்கும்.
ஆமாம் இப்போது ஆதார் குறித்த எல்லா விஷயங்களையும் ஆன்லைனில் செய்துவிடலாம். எளிதாக இருக்கிறது. இளங்கோ சகோ மற்றும் ஜீவி சார் சொல்லியிருப்பது போல் //ஆக எல்லா விஷயங்களும் அது இயல்பாகிப் போகும் வரை அலைச்சலும், எளிமையற்ற தன்மையும் இருந்து கொண்டு நம்மை வதைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.// உண்மை....
Deleteகீதா
திட்டம் செயலாக்க முயலும்போதே
ReplyDeleteமக்கள் துயருறாமல் பயன்படுத்தும் வண்ணம்
ஏன் இவர்களுக்கு யோசிக்க வருவதில்லை எனத்
தெரியவில்லை
இதே பாட்டை நானும் பட்டேன்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் S.ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் மேலே சுலபமாக ஒரு பக்கக் கட்டுரையாக எழுதி விட்டாலும், நான் இந்த ஆதார் எண் வாங்குவதிலும், அதனை மற்ற சேவைகளோடு இணைப்பதிலும், நிறையவே அலைய வேண்டி இருந்தது.
Deleteஆதார்...இப்ப எல்லாத்துக்கும் ஆதார்.
ReplyDeleteநமக்கு பேஜார்
மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இப்போது, ஆதார் எண், அனைவருக்கும் சட்டப்படி கட்டாயமா இல்லையா என்றே தெரியவில்லை. இப்போது 80 வயதிற்கு மேல் ஆதார் அட்டை அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்
Deleteரிடையர் ஆகி சும்மாதானே இருக்கிறீர்கள். நாலு இடத்திற்குப் போனால்தான் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகும். நல்லா தூக்கம் வரும். இதுக்கெல்லாம் புலம்பக்கூடாது. புலம்பறதுக்குன்னு வேற விஷயங்கள் நெறய இருக்கு. அத அப்பறம் பாத்துக்கலாம்.
ReplyDeleteஐயா... நாங்களெல்லாம் எங்க போறது ஆதாருக்கு.
Deleteமரியாதைக்குரிய முனைவர் பழனி.கந்தசாமி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ரிடையர்டு ஆன பிறகுதான் , இப்போது நிறையவே வேலைகள் மற்றும் அலைச்சல் என்று ஓய்வு இல்லை. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால், கோபம் கொள்ள வைக்கும் “ரிடையர் ஆகி சும்மாதானே இருக்கிறீர்கள்.” என்ற அதே வார்த்தையை, நீங்களும் சொல்லலாமா? ( சும்மா ஒரு நகைச்சுவைக்காக)
Deleteஇவர்கள் ஆரம்பத்திலேயே, ஆதாருக்கு ஆன் லைன் மையங்கள், இதற்கு சேவைக் கட்டணம் இவ்வளவு என்று, பான் கார்டுக்கு இருப்பது போல் கொண்டு வந்து இருந்தால் இவ்வளவு அலைச்சல் வந்து இருக்காது.
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
Deleteகந்தசாமி சார்... ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வாங்க அலைய நேரம் இருக்கும் என்று சொல்கிறார். அப்போ ஓய்வு பெறாதவர்களெல்லாம் ஆதார் கார்டுக்கு எங்க போகிறது என்று கேட்டேன். @கந்தசாமி சார் என்பது விட்டுப்போய்விட்டது.
Deleteதாங்கள் பட்ட பாடு அனைத்தையும் நாங்களும் பட்டுவிட்டோம். இப்போது அடுத்ததாக ஸ்மார்ட் கார்டு என ஏதேதோ சொல்கிறார்கள். இன்னும் எங்களுக்கு அதற்கான தகவல் ஏதும் வரவே இல்லை. என்னவோ போங்கோ. புதிதாக ஒவ்வொன்றையும் பற்றிக் கேட்டால் மிகவும் எரிச்சலாகத்தான் வருகிறது.
ReplyDeleteவழக்கம்போல அழகான அலசி எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அழகான அலசி = அழகாக அலசி
Deleteமரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. ஆதார், பான்,ரேசன், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாளம் என்று எல்லாவற்றையும் ஒரே கார்டில் பதிந்து கொள்ளும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும்.
Deleteவெளிநாட்டில் வசிக்கும் எங்களால், விடுமுறைக்கு வந்தாலும் குறைவான நாட்களுக்குள் இதை பெற்றுக் கொள்ள முடிவதேயில்லை!
ReplyDeleteஅன்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதார் எண் பெறுவதில் அதிக சிரமம் இல்லை என்று கேள்விப் பட்டேன்.
Deleteஆதார் அட்டை இல்லாமல் ரோட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லும் காலமும் வரத்தான் போகிறது ,அப்போதும் உச்ச நீதிமன்றம் 'எப்படி சொல்லலாம் இப்படி 'என்று கேட்டுக் கொண்டே இருக்கும் !
ReplyDeleteநீதியரசர் கர்ணனுக்கு போட்ட மாதிரி, இதற்கும் ஒரு தடை உத்தரவை போடவேண்டாமா உச்சநீதி மன்றம் :)
நண்பர் பகவான் ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// ஆதார் அட்டை இல்லாமல் ரோட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லும் காலமும் வரத்தான் போகிறது //
உங்கள் வாக்கு பலித்து விடப் போகிறது.
நாலுமுறை படிவங்களை பூர்த்தி செய்துகொடுத்தும் தாலுகா ஆபீசில் ஒரு நடவடிக்கையும்இல்லை. ஆகவே டேட்டா எண்ட்ரி நிறுவனத்தை
ReplyDeleteஎங்கள் குடியிருப்புக்கே வரவழைத்து எங்கள்சுமார் 500 பேருக்கும் பதிவு செய்தோம் அதன்பிறகு அதிகாரிகள் செய்ய ஒன்றுமில்லை. வெறும் கையெழுத்து போடும் வேலைதான்! ஒரே வாரத்தில் ஆதார்கிடைத்துவிட்டது. செலவு ஏதும் செய்தீர்களா என்று கேட்கவேண்டாமே!
மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா நியூஜெர்சி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி
Deleteமுதலில் மிகவும் சிரமப்பட்டாலும், பின்னர் ஒரு வழியாக நாங்களும் ஆதார் வேலையை முன்னரே முடித்து விட்டோம். மாதச் சம்பளம் பெறுவதற்கே ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்று சம்பளக் கணக்கு அலுவலகத்தில் வாங்கி கொண்டார்கள்.
ReplyDeleteஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து இன்று 13-5-2017 கூட ஒரு புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Deleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteசில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் எப்போதும் சற்றே அதிகமாக!
ReplyDeleteநண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு சிலர் எல்லா விஷயங்களையுமே பெரிது படுத்துவதாகவே தோன்றுகிறது.
Deleteஆதாரின் உபயோகம் அதிகம். நம்ம நாட்டுல மக்கள்தொகை அபரிமிதமா இருக்கறதுனால, இந்த மாதிரி கார்டு இஷ்யூ பண்ணறதுல நிறைய சிக்கல் இருக்கு. எந்தத் திட்டம் வந்தாலும், நிறைவேத்தறவங்க என்ன என்ன கோல்மால் பண்ணி காசு சம்பாதிக்கலாம் என்றுதான் பார்க்கறாங்க.
ReplyDeleteஎல்லோருக்கும் ஆதார் கார்டு வந்துவிட்டால், 50% போலி ரேஷன் கார்டுகள் ஒழியும். எத்தனை எத்தனைபேர் ஏய்த்து சம்பாதிக்கிறார்கள் என்பதும் தெரியும்.
உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் விவசாயத்திற்காக வழங்கப்படும் மானியம், இன்கம் டேக்ஸ் தள்ளுபடி போன்றவைகளை அனுபவிப்பது 80 சதவிகிதம், விவசாயத்துக்குச் சம்பந்தமில்லாத தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மூத்த நடிகர்கள்/நடிகைகள் என்று? இதில் சரத்பவார் முதற்கொண்டு அமிதாப்பச்சன் முதற்கொண்டு பலரும் உண்டு. விஜய் மால்யாவும் இருந்தால் ஆச்சரியப்படவேண்டாம்.
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பல அரசியல்வாதிகள் தங்கள் தொழில் விவசாயம் என்றே சொல்லி இருப்பதை பத்திரிகை செய்திகள் வழியாக தெரிந்து கொள்ளலாம். அம்மா கூட தன்னை ஹைதராபாத் திராட்சைப் பழத் தோட்ட விவசாயி என்று சொல்லிக் கொண்டதாக கேள்வி.
Deleteஆம் நான் சொல்ல நினைத்த கருத்துகள் நெல்லைத்தமிழன் சொல்லிவிட்டார். மட்டுமின்றி இதற்கு முந்தைய
Deleteதங்கள் கருத்தையும் //எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு சிலர் எல்லா விஷயங்களையுமே பெரிது படுத்துவதாகவே தோன்றுகிறது.// வழிமொழிகிறேன்..
கீதா
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா நகரில் ஒரு வங்கியில் பதிவு செய்வது நடந்துகொண்டு இருந்தபோது கூட்டம் இல்லாத நேரமாக பார்த்து நானும் என் மனைவியும் சென்று பதிந்து வந்துவிட்டோம். சில நாட்களில் அட்டையும் பதிவு அஞ்சலில் வந்து சேர்ந்தன. எனவே தாங்கள் கஷ்டப்பட்டதுபோல் நான் கஷ்டப்படவில்லை.
ReplyDeleteஎதிர்க்கட்சியாக இருந்த இன்றைய ஆளுங்கட்சி அன்று எதிர்த்க்ட்டுவிட்டு இன்று கட்டாயப்படுத்துகிறதே எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ‘மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்’ என்ற பழமொழி தெரியாதவரல்லர் நீங்கள். எல்லாம் அரசியல்!
எது எப்படியோ. இந்த அட்டை மூலம் போலி பங்கீட்டு அட்டைகள் ஒழிந்தால் சரிதான்.
மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஆதார் எண் பெறுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை. எனது மகன் என்னைப் போல அலையவில்லை. ஒரேநாளில் பதிவு செய்து, ஒரு மாதம் கழித்து ஆதார் அட்டையை தபாலில் பெற்றுக் கொண்டார்.
Deleteதங்கள் துயரம் புரிகிறது.
ReplyDeleteஆள் அடையாளம் தேவை தான் - அது
ஆதார் அட்டையாக இருக்கட்டுமே!
யுபிஎ ஆட்சி இருந்தபோதே ஆதார் கார்ட் வாங்கி விட்டோம் அதை முதலில் கடுமையாய் எதிர்த்து விமர்சனம் செய்த இப்போதைய ஆட்சியினரே அதைக் கட்டாய அமலாக்குவதில் முனைப்பு காட்டுகிறார்கள் எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியை குறை சொல்வது இப்போது அதிகமாய் விட்டது
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. மோடி அரசாங்கம் எதைச் செய்தாலும் ஒரு மிரட்டல் மற்றும் கட்டாயம் செய்தே தொடங்குகின்றனர். அதிலும் நினைத்து, நினைத்து சொல்கிறார்கள் அல்லது மாற்றம் செய்கிறார்கள்.
Deleteமிகவும் சிரமம் தான் ஐயா...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் ஆதார் கார்டு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருப்பூரில் தற்போது இவர்கள் உருவாகும் பிரசச்னைகள் குறைவு. உடனடியாக அடையாளம் கண்டு பிடித்து விட முடிகின்றது.
ReplyDeleteநண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எப்படியோ நல்லதை நாடு கேட்கும்.
Deleteஆரம்பத்தில் ஒவ்வொன்றிலும் சிரமம்தான்...பிறகு... அது பழகிவிடும் நமக்கு.. உண்மைதானே ஐயா?
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது ஆதார் எண் பெறுவதில், முந்தைய சிரமங்கள் இல்லை.
ReplyDeleteஇந்த ஆதார் பெற நாங்களும் முதலில் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது எனது தந்தைக்கு வாங்க எளிதாகி வாங்கிவிட்டோம். இப்போது ஆன்லைனில் வந்துவிட்டது.
ReplyDeleteஅமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எண் என்று இருப்பது போல் இங்கும் ஆதார் எண்ணைக் கொண்டு வரும் முயற்சி. பார்க்கப் போனால் நலல் திட்டம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கலானது. மக்கள் தொகை அதிகம்...மொழி வாரி என்று பல பிரச்சனைகள்...
கீதா