இன்று காலை ( 04.05.17
) http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=190620
என்ற நக்கீரன் இணையதளத்தில்
// புதுச்சேரியில்
நேற்று முன்தினம் முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்த ப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதில் திருத்தம் வரலாம் என கூறப்படுகிறது
//
என்ற செய்தியைப் படிக்க நேர்ந்தது..எனக்கு உடனே இன்றைய தி.மு.க
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அப்போது நான் அனுப்பிய மின்னஞ்சல் நினைவுக்கு
வந்தது.
நான் அனுப்பியது கடிதம் அல்ல
மின்னஞ்சல்:
அப்போது ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக இருந்த நேரம். அவர் துணை
முதல்வர் (2011) என்ற வகையில், தன்னிடம் வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் தருவதோடு, சொல்லப்படும்
குறைகளுக்கு தீர்வும் காணப்படும் என்று அறிக்கை வெளியிட்டு ஒரு மின்னஞ்சல் விலாசத்தையும்
அறிவிப்பு செய்தனர். நிறையபேர் அந்த மின்னஞ்சலுக்கு தங்களுடைய குறைகளைச் சொல்லி எழுதினர்.
அந்த தளத்தில் அவற்றுக்கான பதில்களும் தரப்பட்டன. நானும் சும்மா இருக்க மாட்டாமல்,
அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினுக்கு. கட்டாய ஹெல்மெட் சட்டம் சம்பந்தமாக ஒரு மின்னஞ்சலை
(08.02.2011) அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் போய்ச் சேர்ந்தது. அந்த மின்னஞ்சல் இதுதான். ஆனால் எனக்கு பதில் எதுவும் சொல்லப்படவில்லை.
// மரியாதைக்குரிய மாண்புமிகு துணை முதல்வர்
அவர்களுக்கு வணக்கம்! பெரும்பாலான நடுத்தர மக்கள் சொந்த உபயோகத்திற்கு வைத்து இருப்பது
இரு சக்கர வாகனங்களைத்தான்.கடைக்குச் செல்ல,காய்கறிகள் வாங்க,பிள்ளைகளை பள்ளிகளில்
கொண்டு விட,அலுவலகம் செல்ல என்று அனைத்து அவசரமான மற்றும் முக்கிய வேலைகளுக்கும் என்னைப்
போன்ற நடுத்தர மக்கள் மொபட்,ஸ்கூட்டர்,பைக் என்று இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்த
வேண்டியுள்ளது.காவல் துறையினர் எப்போது ஹெல்மெட் போடாதவர்களைப் பிடிப்பார்கள் அல்லது
விடுவார்கள் என்று தெரியவில்லை.சிலபேரை அபராதம் செய்கின்றனர்.சிலபேரை விட்டு விடுகின்றனர்.ஹெல்மெட்
அணிவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.கட்டாய ஹெல்மெட் சட்டம் உண்மையில் மக்களை
அரசின் மீது வெறுப்பு கொள்ளவே செய்கிறது.முன்பு இதே போல் சைக்கிளில் செல்பவர்களிடம்
இருவர் செல்லக்கூடாது என்றும் விளக்கு,பிரேக் உள்ளதா என்றும் தொந்தரவுகள் செய்தனர்.எம்.ஜி.ஆர்
அவர்கள் தனது ஆட்சியில் இந்த விதிமுறைகளை நீக்கி நல்லது செய்தார்.தாங்களும் கட்டாய
ஹெல்மெட் சட்டத்தை நீக்கி மக்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இபபடிக்கு,தங்கள் உண்மையுள்ள...தி.தமிழ் இளங்கோ… … … … திருச்சி … ……. நாள்: 08.02.2011
இபபடிக்கு,தங்கள் உண்மையுள்ள...தி.தமிழ் இளங்கோ… … … … திருச்சி … ……. நாள்: 08.02.2011
ஹெல்மெட் தேவைதான்
எனது இன்றைய எண்ணம், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வேண்டும்
என்பதுதான். ஆனால் இப்போதைய இந்த ஹெல்மெட் நமது நாட்டு மக்களுக்கு ( குறிப்பாக பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் மற்றும் ஐம்பது வயது மேற்பட்டவர்களுக்கும் ) தகுந்த வடிவில் இல்லை
என்பது எனது அபிப்பிராயம். மேலும் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தில், போலீசார் அதி தீவிரம்
காட்டுவதன் நல்ல நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
தொடர்புடைய எனது பதிவு:
ஹெல்மெட்தொல்லைகள்தான் அதிகம் ஐயா
ReplyDeleteஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎன்னவோ.. மக்களுக்கு நல்லது செய்கின்றார்களாமே!..
ReplyDeleteநண்பர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
Deleteஆனால் இப்போதைய இந்த ஹெல்மெட் நமது நாட்டு மக்களுக்கு (குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மற்றும் ஐம்பது வயது மேற்பட்டவர்களுக்கும்) தகுந்த வடிவில் இல்லை என்ற தங்களின் அபிப்பிராயம் பரிசீலிக்கப்பட வேண்டியதே.
ReplyDelete//மேலும் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தில், போலீசார் அதி தீவிரம் காட்டுவதன் நல்ல நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.//
மிக அருமையாக ஆராய்ந்து துணிச்சலுடன் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். எப்படியோ நம் எல்லோருடைய தலைகளும் தப்பினால் சரியே !
பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.
மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகட்டைப் போடுவது எதுக்கு,காசு பார்க்கத்தானே:)
ReplyDeleteநண்பர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteசார்... எனக்கு உங்கள் கருத்து சரி எனத் தோன்றவில்லை. வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். இது சட்டம். தங்களுடைய சௌகரியத்துக்காக, அணியமாட்டேன் என்று சொல்வது தவறு. அது வாகன ஓட்டிகளின் உயிர் காப்பான். அப்படி அணியாமல் விபத்தில் சிக்கிவிட்டு, மற்றவரைக் குறைசொல்வது தவறல்லவா?
ReplyDeleteஇதே மக்கள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும்போது ஒழுங்காக அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை முடிந்த அளவு கடைபிடிப்பது எப்படி?
எந்தச் சட்டம் போட்டாலும், அதில் எப்படி காசு பார்க்கலாம் என்றுதான் பொறுப்பில் உள்ளவர்கள் எண்ணுவார்கள். நம்ம நாட்டு அதிகாரிகளின் எண்ணமும், மக்களின் எண்ணமும் இப்படியாகத்தான் இருக்கிறது. அவர்கள் திருந்தவேண்டும் என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது? நியாயமாகப் பார்த்தால், ஹெல்மெட் போடவில்லையானால், கோர்ட்டில் ஃபைன் கட்டவேண்டும். ஆனால், நம் சௌகரியத்துக்காக 100 ரூ லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க எண்ணுகிறோம். இருவரும் குற்றவாளிகள்தானே.
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவின் கடைசி பத்தியில் உள்ள
Delete// எனது இன்றைய எண்ணம், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான்.//
என்ற எனது கருத்தினையும் பார்க்கவும்.
Nope. You are not right.
ReplyDeleteI have seen my collogue who met an accident and had a severe head injury. She was just driving to vegetable market which is around 0.5 KM. we always have such lame excuses for every rule. isn't it.
I used to walk to places within two KM distances.
Another big risk now a days is, more youngsters with powerful bike & not adhering any traffic rule ( even very well educated & MNC works also ). If they hit you, probably they might under go a small accident case. but for you, its your and your family's future.
Think Twice.
நண்பரின் கருத்துரைக்கு நன்றி. மேலே நண்பர் நெல்லைத் தமிழனுக்கு தந்த மறுமொழியையே இங்கும் சொல்ல விரும்புகிறேன்.
Deleteஇந்த பதிவின் கடைசி பத்தியில் உள்ள
// எனது இன்றைய எண்ணம், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான்.//
என்ற எனது கருத்தினையும் பார்க்கவும்.
குடலுக்கு கொள்ள்ளி வைப்பதனை அரசே
ReplyDeleteவ்யாபாரமாகச் செய்து கொண்டு
நம் தலையை மட்டும் காக்க
சட்டம் இயற்றுவது எத்தனை கேலிக் கூத்தானது
தாங்கள் எழுதியது சரியே
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே டாஸ்மாக் கடையை திறந்து வைத்து கல்லா கட்டுதல்; கட்டாய ஹெல்மெட் சட்டத்தைக் காட்டி வசூல் வேட்டை. இவ்வாறான மக்கள் படும்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். ஹெல்மெட் போடுவதை எதிர்க்கவில்லை.
Deleteதலைக்கவசம் அவசியமானது தான். தங்களது இன்றைய எண்ணம் சரியானது.
ReplyDeleteஎந்த விதியையும் மதிப்பதும் அவமதிப்பதும் நம் கையில்! பெரும்பாலானவர்கள் விதிகளை மதிப்பதில்லை. காவல் துறையும் அப்படியே!
நண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஹெல்மெட் போடுவதும் போடாததும் அவரவர் விருப்பமாக இருக்கலாம். தங்கள் உயிர்மேல் அக்கறை இருப்பவர்கள் போட்டுக் கொள்ளட்டும்.
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமுடிவில் சொன்னது சரி தான் ஐயா.....
ReplyDeleteஎந்த சட்டத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் நம்மில் பலர் காவல் துறைக்குப் பயந்தே கடைப்பிடிக்கிறார்கள்ஜம்பிங் த சிக்னல் போன்றவை போல இந்த ஹெல்மெட் அணிவதும் மீறுதலில்தான் வழக்கமாயிருக்கிறது
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎனது கருத்தும் தலைக் கவசம் அணியவேண்டும் என்பது தான். ஆனால் மக்களை அதை அணியக் கட்டாயப்படுத்து முன் தரமான தலைக் கவசங்களை மக்களுக்கு கிடக்குமாறு செய்ய வேண்டியது அரசின் கடமை. இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் பெரும்பான்மையான தலைக் கவசங்கள் பாதுகாப்பானவை அல்ல என்பது தான் வேதனைக்குரிய உண்மை.
ReplyDeleteஅய்யா வி.என்.எஸ் அவர்களுக்கு நன்றி.
Deleteஹெல்மெட் அவசியமே ஆனால் உங்களது இறுதிக் கருத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteகீதா