Thursday 18 May 2017

ஹேக் செய்யப்பட்ட தமிழ் திரட்டி



ஒரு பக்கம் ரேன்சம்வேர் (Ransomware) என்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி விட்டது; இன்னும் சில தின தினங்களில் இந்திய வங்கிகளை வளைத்து விடும்; யாரும் ஏடிஎம் பக்கம் போகாதீர்கள், பணம் எடுக்காதீர்கள் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் இணையத் தாக்குதல் என்று வரிசையாகப் பட்டியல்.

தேன்கூடு

தமிழ் வலைத் திரட்டிகளில் தமிழ்மணம் போன்று தேன்கூடு என்பதும் சிறப்பான ஒன்று. தமிழ்மணத்தில் இணைந்த புதிய வலைப்பதிவர்கள் தமது பதிவுகள் வெளிவர காத்திருக்க வேண்டும். ஆனால் தேன்கூடு புதிய, பழைய பதிவர்களின் பதிவுகளை உடனுக்குடன் வெளியிட்டு விடும். வாசகர் வட்டமும் பெரிது.

எனவே நான் எனது பதிவுகளை தமிழ்மணம் அடுத்து தேன்கூடு, இண்டிப்ளாக்கர் என்று இணைத்து வந்தேன். வழக்கம்போல, சென்ற வாரமும் எனது பதிவு ஒன்றினை, எனது வலைத்தளத்தில் இருந்தே தேன்கூடுவின் WIDGET மூலமாக அந்த திரட்டிக்கு இணைத்தேன். ஆனால் ERROR CODE என்று வந்தது. சில சமயம் தேன்கூடு திடீரென்று காணாமல் போய் விடும். அப்புறம் வந்துவிடும் ஆனால் இந்த தடவை. திரும்பத் திரும்ப சென்றாலும் அதே பிரச்சினை. ஏதோ புதிதாக ஒரு பிரச்சினை என்று எண்ணிய நான் http://thenkoodu.in/என்ற அதன் தளத்திற்கு நேரேயே சென்று பார்த்தேன். அங்கே HACKED BY INNOC3NT KING H4CK3R என்று ஒரு செய்தி வந்தது. கண்ணாடி டீசர்ட்டுடன் ஒரு பெரியவர், இரண்டு கைகளையும் நெறித்துக் கொண்டு, மார்பில் அடித்துக் கொள்வதைப் போல ஒரு வீடியோ; பின்னணியில் எனக்கு புரியாத மொழியில் ஒரு பாடல் ஒலித்து கொண்டு இருந்தது. மேலும் Message for Indian Army என்று , நமது இந்திய ராணுவத்தை திட்டியும், சவாலுக்கு அழைத்தும் சில வார்த்தைகள். மேலும் திரைக்கு அடியில், பாகிஸ்தானை வாழ்த்தி Cyber Team Warriors என்ற லோகோவும் இருந்தது. 

உடனடியாக நான் எனது வலைத்தளம் சென்று  தேன்கூடுவின் WIDGET ஐ நீக்கி விட்டேன். இவ்வாறு தேன்கூடு என்ற இணையத் திரட்டி ஹேக் செய்யப்பட்டது குறித்து எந்த வலைப்பதிவிலும் அல்லது மற்ற செய்தி இணைய தளங்களிலும் தகவல் ஏதும் இல்லை.                                                  

சரி ஏனைய தமிழ் திரட்டிகளின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று, எனக்குத் தெரிந்தவற்றின் இணைய முகவரிகள் சென்று வந்தேன். 

நின்று போனவை:


ஹாரம் www.haaram.com  இந்த தளம் இப்போது இல்லை. விற்பனைக்கு என்று தகவல் வருகிறது.

தமிழ் சிட்டி www.tamilchetee.com இந்த தளமும் இப்போது இல்லை.

உலவு www.ulavu.com வலைப்பதிவு நண்பர்கள் பலர் இதில் இணைந்து இருந்தனர். என்னையும் சேரச் சொன்னார்கள். நான் சேரவில்லை. நாளடைவில் இந்த திரட்டியானது திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது; இதனாலேயே பலருடைய வலைத்தளங்கள் இதே பிரச்சினையில் சிக்கித் தவித்தன. இந்த திரட்டியும் சிறிது நாட்களிலேயே நின்று விட்டது.

வலைப் பூக்கள் www.valaipookkal.com வந்த புதில் ரொம்பவும் பிரமாதமாக அனைவரையும் கவர்ந்தது. அப்புறம் வழக்கம்போல மற்ற தமிழ் திரட்டிகளைப் போலவே இதுவும் படுத்து விட்டது.

தமிழ் ராஜா www.tamilraja.com இதுவும் இப்போது இல்லை. இணையதள முகவரிக்கு சென்றால் The domain tamilraja.com may be for sale. Click here to inquire about this domain. என்று விற்பனை அறிவிப்பு வருகிறது.

பூங்கா www.poongaa.com இதுவும் ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்தது இப்போது அங்கே போனால்  ‘ 404 - Component not found ‘ என்று வருகிறது.

தமிழ் ப்ளாக்ஸ் http://tamilblogs./com  இதுவும் நின்று விட்டது.

மரத்தடி www.maraththadi.com  இதுவும் ஒரு காலத்தில் விமரிசையாகவே போய்க் கொண்டு இருந்தது. இப்போது நின்று விட்டது. Buy this domain. என்று வருகிறது

தோழி www.thozhi.com  இந்த இணையதளத்தில் இப்போது Thozhi.com is for sale என்று அறிவிப்பு வருகிறது.

கில்லி http://gilli.com இதுவும் இப்போது இல்லை.

தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org இதுவும் இப்போது இல்லை.

வல்லினம் http://vallinam.com  இந்த தளத்திற்குப் போனால் ValliNam.com is for sale (Valli Nam) என்று பதில்.

போகி www.bogy.in இப்போது இல்லை.

மாற்று www.maatru.net பழைய பதிவுகளோடு 2011 முதல் அப்படியே நிற்கிறது.

இண்ட்லி http://ta.indli.net   இதில் இப்போது 500 Internal Server Error என்று காட்டுகிறது. இதுவும் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒன்று.

சங்கமம் http://isangamam.com – பழைய திரட்டிகளில் இதுவும் ஒன்று. திடீரென்று காணாமல் போய் மீண்டும் வந்துள்ளது. ஆனால் அப்டேட் இல்லை. பழைய பதிவுகளே அப்படியே நிற்கின்றன.

தமிழ் நண்பர்கள் http://tamilnanbargal.com   இந்த தளமும் துவங்கிய காலத்தில் ஓஹோ என்று ஓடியது. இப்போது இங்கே சென்றால்  Sorry, the page you are looking for is currently unavailable. என்ற பதிலே கிடைக்கிறது.
 

இப்போது உள்ளவை: 

தமிழ் மணம் www.tamilmanam.net இப்போதைய தமிழ்திரட்டிகளில் சிறப்பானது. இதன்  தமிழ்மணம் தர வரிசைப் பட்டியல் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். ஆனாலும் இது பழைய நிலைமையில் இல்லை. முன்பெல்லாம் நமது பதிவுகளை இதில் இணைத்தால் உடனுக்குடன் வெளியாகும். இப்போது ரொம்பவும் தாமதமாகவே திரட்டி வெளியிடுகிறது. இதில் உள்ள தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில், பிற பதிவர்களுக்கு வாக்களித்தால் சட்டென்று முடிவதில்லை. இணையம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சில சமயம் நீங்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டிர்கள் என்று வரும்; போய் பார்த்தால் அவ்வாறு இருக்காது.

இண்டிப்ளாக்கர் www.indiblogger.in/languagesearch.php?lang=tamil  இந்த தமிழ்திரட்டியும் சிறப்பான ஒன்று. தமிழ்மணம் போன்றே ரேங்க் பட்டியல் இதிலும் உண்டு. தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று பிற மொழிகளிலும் இதன் திரட்டிகள் உண்டு. அடிக்கடி வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு ஸ்பான்சராக இருந்து வருகிறார்கள். தமிழ் வலைப்பதிவர்களுக்கும்  இவ்வாறு ஸ்பான்சர் செய்து வருகின்றனர். ஒருமுறை உணர்ச்சி வசப்பட்ட தமிழ்வலைப் பதிவர்கள் சிலரால் பிரச்சினை என்று கூட செய்தி வந்தது.

திண்ணை http://www.thinnai.com தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற முகப்பு வரிகளோடு உள்ள, இதுவும், இணையதள வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் இணையதளம் இது இப்போது http://puthu.thinnai.com என்ற இணைய முகவரியில் இயங்கி வருகிறது.

தமிழோவியம் www.tamiloviam.com ஆசிரியர் மீனா கணேஷ் – பதிப்பாளர் கணேஷ் சந்திரா என்று வெளிப்படையான தளம்.

நிலாசாரல் www.nilacharal.com இதுவும் அப்டேட் ஆகாமல் அப்படியே இருக்கிறது.

முத்தமிழ் மன்றம் www.muthamilmantram.com எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன் வலம் வரும் இந்த தளம் ஒரு பல்துறைக் கருத்துக் களம். அனைத்து தமிழ் வலைப்பதிவர்களும் சென்று பார்க்க வேண்டும்.
வல்லமை www.vallamai.com தமிழின் முன்னணி எழுத்தாளர்களும், மூத்த வலைப் பதிவர்களும் இந்த தளத்தில் தங்களது படைப்புகளை இணைப்பது இதன் சிறப்பு.

தமிழ் களஞ்சியம் www.tamilkalanjiyam.com  இந்த வலைத்தளம் இப்போது http://www.tamilsurangam.com தமிழ்ச் சுரங்கம் என்ற பெயரில் இயங்குகிறது.

வலையகம் www.valaiyakam.com இந்த வலைத்தளம் இப்போது https://www.facebook.com/valaiyakam என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது

தமிழ் நாதம் www.tamilnaatham.com  இந்த வலைத்தளமும் இப்போது https://www.facebook.com/tamilnaatham என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது.

தமிழ் 10 www.tamil10.com என்ற இந்த வலைத்தளமும் இப்போது https://www.facebook.com/tamil10com என்ற ஃபேஸ்புக் தளத்தில் இயங்குகிறது.

பதிவர் திரட்டி http://www.pathivar.net என்ற தமிழ் வலைத்திரட்டி நமது வலைப்பதிவர்களிடையே பிரபலமாக இருக்கிறது.. இதில் இணைந்து நமது பதிவுகளை வெளியிடுவதில் உள்ள சில இடர்ப்பாடுகள் காரணமாக நான் சேரவில்லை.

இன்னும் நிறைய வலைத்தளங்கள் இப்போது வந்து இருக்கலாம். நண்பர்கள் தெரியப் படுத்தினால் எனக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.



39 comments:

  1. ஆஹா ..... தங்கள் பாணியில் மிகவும் நல்லதொரு அலசல்.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள ஏராளமான திரட்டிகளில் இண்ட்லி + தமிழ் மணம் ஆகிய இரண்டும் பற்றி மட்டுமே ஏதோ கொஞ்சமாக எனக்குத் தெரியும்.

    2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஆறு மாதங்கள் மட்டும் வேறுசில பதிவர்களின் உதவியால் என் வலைத்தளம் இவற்றில் இணைக்கப்பட்டிருந்தன.

    அதற்குள் 2011-நவம்பரில் நான் தமிழ்மண நட்சத்திரப்பதிவராகவும் ஆக்கப்பட்டிருந்தேன். தினசரி நான்கு பதிவுகள் வீதம் கொடுத்து ஒரே வாரத்தில் 28 பதிவுகள் வெளியிட்டு, அந்த வாரத்தின் TOP 20 LIST இல் முதலிடமும் பிடித்து சாதனை நிகழ்த்தியிருந்தேன்.

    இதோ அதன் ஆரம்பப் பதிவுக்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html

    நான் தமிழ்மணத்தில் அந்த வாரம் முதலிடம் பிடித்திருந்த தகவல் இதோ இந்தப்பதிவினில் நண்பர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது:

    http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html

    01.01.2012 முதல் இன்றுவரை நான் என் எந்தப்பதிவுகளையும், நானாகவே எந்தவொரு திரட்டிகளிலும் இணைப்பது இல்லை.

    என் ஒருசில பதிவுகளை தாங்களே தமிழ்மணத்தில் இணைத்துள்ளதாக எனக்கு அவ்வப்போது தகவல் கொடுத்திருந்ததும் என் நினைவினில் உள்ளது.

    இந்தப் பகிர்வுக்கு நன்றிகள், ஸார்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. இது நம்ம ஏரியா இல்லை. இன்டெரெஸ்டிங் தளங்களின் திரட்டு இருந்தால் பகிரவும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா.. சிரிப்புத்தான் வருகுதையா. அம்பீஸ் கபேக்குள் நுழைந்து ஆம்லேட்டுக்கு ஆர்டர் போட்டால் எப்படி? உங்கள் நகைச்சுவைக்கு நன்றி.

      Delete
  3. நின்றவை போக இருப்பவை இத்தனையா?

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.

      Delete
    2. மலேசியாவிலிருந்து உதயமகும் இந்த வலைத்தளத்தினைக் காண:
      www.tamilnetmmalaysia. net

      Delete
  4. இத்தனை இருந்தது
    இத்தனை இருப்பது
    எதுவும் எனக்குத் தெரியாது

    வை.கோ அவர்கள்சொல்வதைப்போல
    தமிழ்மணத்தில் மட்டும் இணைக்கிறேன்

    அவர்கள் தரவரிசை குறித்து
    அக்கறை கொள்வதில்லை
    அதனால் அதை எடுத்து என் பக்கத்தில்
    பதியவில்லை

    விரிவான அருமையானப் பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் S.ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் எல்லா வலைத் தளங்களிலும் எனது பதிவுகளை இணைப்பது கிடையாது. அந்தப் பக்கம் படிப்பதோடு சரி. நீங்கள் உங்கள் வலைத்தளத்தை தமிழ்மணத்தோடு இண்டிப்ளாக்கரிலும் இணைக்கலாம்.

      Delete
  5. திரட்டிகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வே நடத்தியிருக்கிறீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. இந்த திரட்டிகள் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்குப் புதிது ஆரம்பமுதலே தமிழ்மணம் மட்டும்தான் நடுவில் திரட்டி என்ற ஒன்றில் சேர்த்தேன் வலையகம் என்பதிவுகளுக்கு பங்கம் விளைவிப்பதால் டிடி உதவியுடன் நீக்கி விட்டேன் இப்போதுதமிழ்மணம் மட்டும்தான் தரவரிசை பற்றிக் கவலைப் படுவதில்லை

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. தமிழ் திரட்டிகள் பற்றி திரட்டி தந்தமைக்கு நன்றி!

    கீழே தந்துள்ள திரட்டிகளையும் நின்றுபோனவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
    1. வலையகம்
    2. வலைப்பூக்கள்
    3. நிகண்டு
    4. தின பதிவு
    5. ஒட்டி
    6. இனிய தமிழ்
    7. தமிழன் திரட்டி
    8. Tamil bm

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. எங்களுக்கு இத்தனைத் திரட்டிகள் இருப்பதே தெரியவில்லை. உங்கள் ஆய்வு பிரமிக்க வைக்கிறது. நல்ல அலசல். தமிழ்மணம் தெரியும். இண்டிப்ளாகர் இருந்தது எடுத்துவிட்டோம். தளம் திறக்க நேரம் ஆகிறது என்று. பதிவர்.நெட் இணைந்தோம் ஆனால் அதில் இப்போது இணைப்பது இல்லை. இணைப்பது கடினமாக இருப்பதால்....இப்போது தமிழ்மணம் மட்டுமே ஆனால் அதுவும் இப்போது தகராறு செய்கிறதுதான்.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் கேரளத்திலும் ஒரு இணையதளம் இந்த விதமான பாடல் வீர முழக்கங்களுடன் ஹேக் செய்யப்பட்டது. அதைப் பற்றி எங்கள் தளத்திலும் எழுதியிருந்தோம்.

    தமிழ்மணத்தில் தரவரிசை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. எத்தனை ஓட்டுகள் விழுகிறது என்பதையும் பார்ப்பதில்லை. ஏனென்றால் எங்களால் பல தளங்களில் ஓட்டுப் போடுவதும் இயலவில்லை. பெட்டிகள் தெரியாததால். ஆனால் தெரிந்தால், இயன்றால் போட்டுவிடும் வழக்கமுண்டு...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.ஆராய்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை. கம்ப்யூட்டரும் இண்டர்நெட் இணைப்பும், எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு அடிக்கடி நான் பார்வையிட்ட வலைத்தளங்கள்தான் இவை.

      கேரளத்தில் முடக்கம் செய்யப்பட்ட இணையதளம் பற்றிய உங்கள் பதிவு என்னால் படிக்க முடியாமல் விட்டுப் போயிருக்கலாம். உங்கள் வலைப்பக்கம் போய்ப் பார்க்கிறேன்.

      Delete
  9. வியப்பாக இருக்கிறது ஐயா
    இத்தனை திரட்டிகள் இருப்பதே,தங்களின் பதிவினைப் பார்த்தபிறகுதான் தெரிகிறது.
    நான் ஒன்றிரண்டு திரட்டிகளை மட்டுமே இதுநாள் வரைபயன்படுத்திவருகிறேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. எல்லா திரட்டிகளிலும் இணைக்க வேண்டியதில்லை. அவ்வாறு இணைத்தால் நமது வலைத்தளத்தை மற்றவர்கள் பார்வையிடும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

      Delete
  10. "நல்ல எழுத்திற்கு / பதிவிற்கு திரட்டி என்பது தேவையே இல்லை" என்று எழுதிய பதிவு தான் "நமக்கான திரட்டி எது...?" என்கிற பதிவு...

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

    புரிந்தால் மகிழ்ச்சி... புரியாவிட்டால் செத்துப் போன தமிழ்மணம் போன்ற பலவற்றை கட்டி அழ வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. நீங்கள் மேலே சொன்ன உங்களது பதிவை அப்போதே படித்தும் கருத்துரையும் தந்து இருக்கிறேன் அதில் நீங்கள் குறிப்பிட்ட feedly பற்றி நிறையவே கேள்விகள். முக்கியமாக இந்த திரட்டியை தமிழ் மொழியில் எப்படி பார்ப்பது அல்லது இணைப்பது என்று தெரியவில்லை. மீண்டும் சென்று பார்க்கிறேன்.

      Delete
  11. தகவல்களிற்கு மிக நன்றி உறவே
    http://kovaikkavi.wordpress.com
    http://kovaikkothai.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கு நன்றி. தாங்கள் தொடங்க இருக்கும் வேதாவின் வலை.2 என்ற புதிய வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த தளத்தினை Blogger இல் தொடங்கினால் நன்றாக இருக்கும். ஏனெனில் wordpress இல் கருத்துரை எழுதுவதில் இருக்கும் சிரமம் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

      Delete
  12. தகவல்களிற்கு மிக நன்றி உறவே
    http://kovaikkavi.wordpress.com
    http://kovaikkothai.wordpress.com

    ReplyDelete
  13. திரட்டிகள் பற்றிய அலசல் நன்று.

    தற்போதைய எனது தளம்
    தமிழ் மணத்தில் இல்லை!
    ஆயினும்
    facebook, google+ இல் பகிர வரும்
    வாசகருக்குக் குறைவு இல்லை!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் கருத்துரைக்கு நன்றி. தங்களுடைய வலைத்தளத்தை அடிக்கடி ஃபேஸ்புக்கில்தான் நானும் பார்க்கிறேன்.

      Delete
  14. உடான்ஸ் திரட்டி ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தது :)

    ReplyDelete
    Replies
    1. நினைவூட்டிய தோழர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. தங்கள் ஆழமான ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி நண்பரே! வருமானம் இல்லாத காரணத்தால் ஆர்வலர்கள் நடத்தும் இம்மாதிரியான திரட்டிகள் காலப்போக்கில் நின்றுபோய்விட நேர்கிறது. இருக்கும் ஒன்றிரண்டு திரட்டிகளையாவது நாம் ஆதரிக்கவேண்டும். இல்லையேல் அவையும் அழிந்துவிடும். என்னுடைய கருத்து என்னவென்றால், திரட்டியில் இணைப்பதற்கு வருடக்கட்டணம் நூறு ரூபாய் என்று வைக்கலாம். மின்சார செலவுக்காவது தேறும். ஒழுங்காக நடத்தவேண்டும் என்ற கட்டாயமும் கடமைப்பாடும் ஏற்படும். இலவசமாகவே எல்லாமும் எல்லா நாளும் தரவேண்டும் என்ற கட்டாயமில்லை. 'தமிழ்மணம்' சிந்திக்குமா?

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிகமிக விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா நியூஜெர்சி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன திரட்டியில் இணைப்பதற்கு வருடக்கட்டணம் நூறு ரூபாய் நல்ல யோசனை.

      Delete
  16. பிரமித்து போனேன் ஐயா இவ்வளவு திரட்டிகள் உள்ளன என்பதையும் அறிந்து கொண்டேன்.
    பயனுள்ள வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.நன்றி ஐயா.

    ReplyDelete
  17. அருமையான ஆய்வு!வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவுக்கு நன்றி.

      Delete
  18. ஆமாம் நானும் தேன் கூடை தேடி..தேடி அலுத்து விட்டேன். நீங்கள் மட்டும்தான் குறிப்பிட்டுள்ளீர்கள். தேன் கூட்டை யாரோ கலைத்து விட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  19. இப்போது எந்த திரட்டியும் செயல்படுவதில்லை என்று நினைக்கிறேன். ஆகவே அந்த கஷ்டத்தை போக்க உருவாகிவிட்டது வலை ஓலை. வாருங்கள், மீண்டும் எழுதலாம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. வாருங்கள், புதிய வலையுலகம் படைப்போம்.

    ReplyDelete