Sunday 17 May 2015

உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (டாக்டர் M.K.முருகானந்தன்) - மின்நூல் விமர்சனம்



       TODAY - 2015 - 17 May - World Hypertension Day



எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் உள்ள மின் நூலகத்தில் (E LIBRARY) மின்நூல்கள் பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும்போது அவற்றை படிப்பது வழக்கம். எனக்கு இரத்த அழுத்தம் (PRESSURE) இருப்பதால், டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் எழுதிய உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்  என்ற மின்நூலினை அண்மையில் எடுத்து படித்தேன். டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். மூத்தவர். நிறைய படித்தவர். நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம் என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல் விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று. அந்த நூலைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே.

டாக்டர் M.K.முருகானந்தன்



நூலாசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள் பற்றி வலையுலகில் அறிமுகம் தேவையில்லை. இலங்கை குடும்ப மருத்துவரான இவரது மருத்துவக் கட்டுரைகள் படிக்கும் அனைவருக்கும், இவரது ஹாய் நலமா? என்ற வலைத்தளம்
( http://hainallama.blogspot.in ) தெரிந்த ஒன்று. மேலும் முருகானந்தன் கிளினிக் ( https://hainalama.wordpress.com) என்ற வலைத்தளத்திலும் மருத்துவம், இலக்கியம், அனுபவம் என பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.

நூலைப் பற்றி:

இந்த நூலில், நூலின் ஆசிரியர் டாக்டர் M.K.முருகானந்தன் அவர்கள், இரத்த அழுத்தம் (PRESSURE) என்பது, தலைச்சுற்று, தலைவலி, களைப்போ சோர்வோ எந்தவித அறிகுறிகளற்ற நோய் என்று குறிப்பிட்டு , இந்நோயை ‘அமைதியான கொலையாளி ( Silent Killer) என்று எச்சரிக்கை செய்கிறார். ஆயினும் கடுமையான தலைவலி, மூக்கில் இரத்தம் வடிதல், பார்வை மங்குதல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவை பிரஸர் அதிகமானதின் அறிகுறியாகும்;மேலும் எந்தெந்த வயதினில் இந்த நோய் தீவிரம் அடைகிறது, என்று சொல்லிவிட்டு, இந்நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள பரிசோதித்துக் கொள்வதே (குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு அவசியம்)  நல்லது என்கிறார். இந்நோயை மருத்துவத் துறையில் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION) என்று சொல்கிறார்கள்.

இந்த நூலில்

1.கவனத்தில் எடுக்க வேண்டிய நோய், 2.உலகளாவிய பிரச்சனை,
3.தொடர்ச்சியான கணிப்பீடும் கண்காணிப்பும் அவசியம், 4. அளவிடுவது எப்படி?,  5.உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்,  6. வேறு நோய்களின் விளைவான உயர் இரத்த அழுத்தம்,  7.உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்து கொள்ளல்,  8.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்,  9.உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்,  10.உயர் இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிடின் என்ன நடக்கும்?,  11.பெண்களும் உயர் இரத்த அழுத்தமும்

என்ற தலைப்புகளில் டாக்டர் இந்த உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி விரிவாக கூறுகிறார்.

பிரஸரை அளப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை;

தானாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், வேறு நோய்களின் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்;

யார் யாருக்கு இந்த நோய் வரும்?;

இரத்த அழுத்தம் என்றால் என்ன?; வருவதற்கான காரணங்கள் என்ன/; அதனைக் கட்டுப்படுத்தும் முறை;

சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 mm Hg. – இது 140/90 க்கு மேல் உயர்ந்தால் உயர் இரத்த அழுத்தம் (HYPERTENSION); 120/80 இற்கும் 139/89 இற்கும் இடையில் இருந்தால் அது முன் உயர் இரத்த அழுத்தம் (PRE HYPERTENSION); 130/85 என்றால் டாக்டரை பார்த்தல் அவசியம், 140/90 இற்கு மேற்பட்டால் டாக்டர் மேற்பார்வையில் சிகிச்சை அவசியம் வேண்டும்;

உயர் இரத்த அழுத்தம்  குறைப்பதற்காக உடல் எடையைக் குறைத்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள்; உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள்;


புகைபிடித்தலால் வரும் தீமைகள்;
மாரடைப்பிற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்த நோயிற்கான மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள்; பெண்களுக்கான ஆலோசனைகள்;

என்று பலவிதமான தகவல்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நூலின் இறுதியில், உங்கள் இரத்த அழுத்தத்தையும், உங்கள் எடையையும், நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளையும் ஒரு பதிவேட்டில் ஒழுங்காகக் குறித்து வைப்பது அவசியம்.   என்று சொல்லும் டாக்டர், ஒரு உதாரண அட்டவணையையும் தந்துள்ளார்.

பிரஸர் எனப்படும் இரத்தஅழுத்த நோயைப் பற்றி அறிந்து கொள்ள, அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய

இலங்கைத் தமிழ் மக்களின், எழுத்தாவணங்கள், தகவல் களஞ்சியங்கள், நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் என்று  பலவற்றை நூலகம்(NOOLAHAM FOUNDATION) என்ற நிறுவனம் தொகுத்து வைத்துள்ளது, அந்த நிறுவனத்தின் www.noolaham.org  என்ற இணையதளத்தில் இந்த நூலினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.                                                                  
நூலகம் > குறிச்சொற்கள் > நுட்பவியல்> 610 மருத்துவமும் நலவியலும் > உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் (6.68 MB) (PDF வடிவம்)

நூலின் பெயர்:
உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்
நூலாசிரியர்:
டாக்டர் M.K.முருகானந்தன் M.B.B.S (Cey), D.F.M (SL), M.C.G.P (SL)
பக்கங்கள்: 41
நூல் வெளியீடு: (நூலகம் / மின்நூல்) 





30 comments:

  1. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுத் தகவல்களை அழகாக அருமையாக தகுந்த இணைப்புக்களுடன் கொடுத்துள்ளீர்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே நானும் டாக்டரின் பதிவுகளை தொடர்ந்து கொண்டுதான் வருகிறேன்.
    தமழ் மணம் 1

    ReplyDelete
  3. டாக்டர் திரு. எம்.கே. முருகானந்தம் அவர்களுக்கும் நம் நன்றிகள். இன்றைய தினத்திற்கு ஏற்ற மிகச்சிறப்பான பகிர்வு இது. பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  4. பல சமயங்களில் எனக்கு ignorance is bliss என்று தோன்றும் சில தகவல்கள் பீதியைக் கிளப்பிவிடுகிறது.அதற்காக தகல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. எதுவும் அளவோடு இருப்பது நலன் பயக்கும்

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    யாவருக்கும் பயன் பெறும் தகவல்.. விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர் வாழ்த்துக்கள்.த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நாங்கள் டாக்டரின் தளத்திற்கு சென்று அவரது பதிவுகளை வாசிப்பதுண்டு. மிகவும் அருமையாங்க விளக்கங்களுடன் தருவார். பயனுள்ள பதிவுகளாகத் தனது டயக்னாசிஸ், அனுபவம் எல்லாம் எழுதுகின்றார் ஐயா.

    நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பயனுள்ள தகவல்கள். என்றாலும் பல சமயங்களில் இது போன்ற மெடிக்கல் விளக்கங்கள் நமக்கு பயத்தைக் கிளப்புகின்றன. ஏதேனும் ஒரு வலி வந்தால் இது அதுவாக இருக்குமோ இதுவாக இருக்குமோ என்று கற்பனை செய்து பயம் ஏற்படுகின்றது. விழிப்புணர்வு இருப்பது நல்லதுதான். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் னஞ்சுதானே....பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  7. அருமையான தகவல். நானும் மருத்துவர் முருகானந்தன் அவர்களின் பதிவுகளைப் படிப்பதுண்டு. அனைவரும் தெரிந்துகொள்ள இந்த மின் நூலை அறிமுகப்படுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. தரவிறக்கம் செய்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  9. மருத்துவர் முருகானந்தன் அவர்களின் பதிவுகளைத் தவறாது படிப்பேன்! அவர் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!

    ReplyDelete
  10. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2 )

    கருத்துரை தந்த அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி > G.M Balasubramaniam said...

    கருத்துரை தந்த அய்யா G.M B அவர்களுக்கு நன்றி.

    // பல சமயங்களில் எனக்கு ignorance is bliss என்று தோன்றும் சில தகவல்கள் பீதியைக் கிளப்பிவிடுகிறது.அதற்காக தகல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. எதுவும் அளவோடு இருப்பது நலன் பயக்கும் //

    பேப்பரில் படிக்கும் பல செய்திகளைப் பார்க்கும் போது “அறியாமை பேரின்பம் ( ignorance is bliss )” என்றுதான் தோன்றுகிறது.

    அப்போதெல்லாம் ஒரு தலைவலி வர எத்தனை காரணங்கள் என்பதனையும், அதனை ஒரு தலைவலி மாத்திரை எத்தனை வழிகளில் நீக்குகிறது என்றும் விளம்பரம் வரும். படித்தாலேயே நமக்கு ஏதேனும் ஒரு வழியில் நிச்சயம் தலைவலி வருவது போன்ற பிரமை ஏற்பட்டு விடும். இதனாலேயே எனது இளமைக் காலத்தில் நான் மருத்துவ விளம்பரங்களையும், மருத்துவ கட்டுரைகளையும் படிப்பதில்லை. ஆனால் இப்போது நீங்கள் சொல்வது போல, அளவோடாவது தகல்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது

    ReplyDelete
  13. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    நீண்ட கருத்துரை தந்த சகோதரர் மற்றும் சகோதரிக்கு நன்றி. அய்யா G.M B அவர்களுக்கு நான் தந்த கருத்துரையையே இங்கும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // தரவிறக்கம் செய்து விட்டேன்... நன்றி... //

    சகோதரருக்கு நன்றி. அந்த தளத்தில் இன்னும் பல நூல்கள் உண்டு.

    ReplyDelete
  17. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  18. நல்லதொரு நூல் அறிமுகம்! இன்று எல்லோரையும் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம் என்பதால் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது! நன்றி!

    ReplyDelete
  19. அருமையான, பயனுள்ள நூலைப் பற்றிய விமர்சனம். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  20. தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி அய்யா..

    ReplyDelete
  21. இரத்த அழுத்தம் ப‌ற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ள‌ விரும்புபவர்களுக்கான சிறந்த தகவல் இது!

    ReplyDelete
  22. மிக்க நன்றி.
    உங்கள் விமர்சனக் கட்டுரை மூலம் எனது நூல் பற்றிய அறிமுகத்தை பரந்த வெளிக்குக் கொண்டு சென்றுள்ளீர்கள்
    மனம் மகிழ்கிறேன்
    உங்கள் இலக்கியப் பணிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகக்கள்

    ReplyDelete
  23. நோயாளியை மிரட்டாது தீர்வு சொல்வதில் டாக்டர் முருகானந்தன் வல்லவர்.

    ReplyDelete
  24. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    நீங்கள் சொல்வதைப் போல இந்த உயர் ரத்த அழுத்தம் என்பது பரவலாக வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கின்றது என்பது வருத்தமான விஷயம்தான்.

    கருத்துரை தந்த சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி > Mathu S said..

    அன்பு ஆசிரியர் எஸ்.மது என்கிற கஸ்தூரி ரெங்கன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. மறுமொழி > Muruganandan M.K. said...

    // மிக்க நன்றி. உங்கள் விமர்சனக் கட்டுரை மூலம் எனது நூல் பற்றிய அறிமுகத்தை பரந்த வெளிக்குக் கொண்டு சென்றுள்ளீர்கள் மனம் மகிழ்கிறேன் உங்கள் இலக்கியப் பணிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகக்கள் //

    பல்வேறு பணிகளுக்கு இடையிலும், எனது வலைத்தளம் வந்து கருத்துரையும் வாழ்த்துக்களையும் தந்த டாக்டர் ( இந்த நூலின் ஆசிரியர்) அவர்களுக்கு எனது நன்றி. “பேறு பெற்றேன்”

    ReplyDelete
  29. மறுமொழி > வர்மா said...

    சகோதரர் வர்மா அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

  30. மருத்துவர் முருகானந்தன் ஐயாவின் உளநலக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். பயனுள்ள அவரது நூலை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுகள். அவரது மின் நூலைப் பதிவிறக்க வழிகாட்டியமை மிகவும் பயனுள்ளது.

    ReplyDelete