யார்
வேண்டுமானாலும் என்ன தப்பு வேண்டுமாலும் செய்யலாம். ஆனால் வாத்தியார் மட்டும் எந்த
தப்பையும் செய்யக் கூடாது. ஆசிரியர் மீது அவ்வள்வு மரியாதை. கிராமத்தில் ஒரு ஆசிரியர் எல்லோருக்கும்
தெரிந்தவராக இருப்பார். அவர் அவசரத்துக்கு கூட ஒரு மூலையில் ஒதுஙகக் கூடாது.
கையில் நாலு பேருக்கு தெரிய சிகரெட்டைக் தொடக் கூடாது. வாத்தியாருக்கே இப்படி
என்றால் டீச்சருக்கு கேட்கவே வேண்டாம். டீச்சர் என்றால் அது ஆசிரியை மட்டுமே
குறிக்கும். வாத்தியார் என்றால் அது ஆசிரியரைத்தான் குறிக்கும்.
அவ்வளவு ஏன் – நான் பள்ளி விடுமுறையில் எங்கள் அம்மாச்சி
( அம்மாவின் அம்மா) ஊருக்கு செல்லும்போது, எனது தாத்தா, மேய்ச்சலுக்கு சென்று
திரும்பிய மாடுகளை கட்டுத்தறியில் கட்டச் சொல்வார். அவை எனக்கு நன்றாகவே டேக்கா
கொடுக்கும். அப்போது கூட எனது தாத்தா என்னை திட்ட மாட்டார். “ மாட்டைப்
புடிச்சி கட்டத் தெரியல ... பள்ளிக் கூடத்திலே என்னாத்த சொல்லித் தர்ராங்க” என்றுதான் சொல்லுவார்.
பிள்ளைகளை
அடித்தல்:
(PICTURE – COURTESY: www.thebetterindia.com )
அப்பொழுதெல்லாம்
பிள்ளைகளைப் பற்றி சொல்லும்போது “ அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி
வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும் “ என்று சொல்லுவார்கள். பிள்ளைகளை
பள்ளியில் கொண்டு வந்து விடும்போதே “ சார் நீங்க என் மகனை தலைகீழா கட்டி வைச்சு
அடிச்சு வேணுமானாலும் சொல்லிக் கொடுங்க. நான் எதுவும் கேட்க மாட்டேன். என்னோட
பிள்ளைக்கு படிப்பு வந்தா போதும் “ என்று சொன்ன பெற்றோர்களும் உண்டு. ஆசிரியர்
அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் உடல் வலிமை மன வலிமை அன்றைய பிள்ளைகளுக்கு
இருந்தது. அவ்வளவு ஏன், நண்பர்களுக்குள் பள்ளி இடைவேளையின் போது உடைத்த பாதி
வேப்பங் கொட்டையை விரல் முட்டிகளில் வைத்து, இன்னொரு கையால் ஓங்கி அடித்து வலுவை
சோதித்து விளையாடியதும் ஒரு காலம்.
ஆனால் இப்போதோ
பிள்ளைகள் கெட்டுப் போக வீட்டிலேயே எத்தனையோ சமாச்சாரங்கள். டீவி, செல்போன்,
இண்டர்நெட், சினிமா என்று கவனத்தை ஈர்க்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள்.
இவற்றையெல்லாம் மீறி மாணவனை ஆசிரியர்
படிக்கச் செய்ய வேண்டும். இந்த காலத்து பிள்ளைகளை ஒரு சொல் சொல்ல முடியாது.
அப்புறம் அடித்தால் என்னாவது.? இந்த காலத்து பிள்ளைகளுக்கு அவ்வளவாக மனவலிமையோ,
உடல் வலிமையோ இல்லை என்பதே உண்மை. பள்ளியை நடத்துபவர்களும், பெற்றோர்களும் எதற்கெடுத்தாலும்
ஸ்டேஷன், கோர்ட் என்று சென்று கல்விக் கூடங்களை நுகர்வோர் பொருட்களாக மாற்றி விட்டனர்.
(PICTURE – COURTESY: www.moneyandshit.com/walkman )
அன்றைய
படிப்பு:
அன்றைய படிப்பு
தமிழ் மீடியமாக இருந்தாலும் ஆங்கில மீடியமாக இருந்தாலும் வாழ்க்கைக் கல்விக்கும்
உதவியது. ஆசிரியராக இருந்தாலும் மாணவராக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு சுய
கட்டுப்பாடு இருந்தது. விலகிச் சென்றவர்கள் மட்டுமே வாழ்க்கை என்னும் ஓட்டப்
பந்தயத்தில் ஓட முடியாமல் நின்று விட்டார்கள்.
இன்றும் ஏதாவது
ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம் - என்ற ஔவைப் பாட்டியின் ஆத்திச்சூடி போன்றவை முன் வந்து
நிற்கின்றன. அன்று நான் படித்த (ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த) கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல் முறைகள்கள்தான் (மனப்பாடமாக) இன்றும் எனது வாழ்க்கையில்
பெரும் பங்கு வகிக்கிறது. வங்கிப் பணி செய்த போதும் இந்த எளிய முறைகள்தான் உதவின.
இன்று ஒரு சாதாரண கணக்கிற்கு கூட, இன்றைய பிள்ளைகளில் பெரும்பாலானோர் கால்குலேட்டர் தேடும் காலமாக உள்ளது.
மேலே சொன்ன
அனைத்தும் 50 வருடங்களுக்கு முந்திய, நான் பள்ளிப் படிப்பை தொடங்கிய காலத்து
சமாச்சாரங்கள். நான் சொன்னதற்கு காரணம், இவை அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல.
அன்றைக்கு சூழ்நிலை அப்படி இருந்தது என்பதனை பதிவு செய்தேன். அவ்வளவுதான். மாற்றம்
ஒன்றே மாறாதது என்பதனையும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை ஆசிரியர்கள் மட்டுமே
மாணவர்கள் மனதில் விதைக்க முடியும் என்பதனையும் மறுக்க இயலாது.
(PICTURE – COURTESY: http://commons.wikimedia.org)
(சென்ற ஆண்டு
ஆசிரியர் தினத்தன்று வெளியிட வைத்திருந்த கட்டுரை. ஏனோ மேற்கொண்டு இதில் மேலும்
விவரித்து எழுத முடியாமலும், அன்றே வெளியிட முடியாமலும் போனது)
அந்தக் கால ஆசிரியர் மாணவர் பற்றி நன்றாகவே ஆய்வு செய்திருக்கிறீர்கள். மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார் செய்வது ஆசிரியர்களின் கடமை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇந்தக் கால ஆசிரியர்கள் அந்தத் தொழிலுக்கு வேண்டிய அர்ப்பணிப்புடன் வருவதில்லை என்பது மிகப்பெரிய குறை.
//மாற்றம் ஒன்றே மாறாதது என்பதனையும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் மனதில் விதைக்க முடியும் என்பதனையும் மறுக்க இயலாது.//
ReplyDeleteஇப்போது எல்லாமே அடியோடு மாறிவிட்டது என்பதை சொல்லாமல் ... அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அப்போது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது மிகவும் எளிதாக இருந்தது. ஆசிரியர்களும் கடமைக்காக இல்லாமல் ஓரளவுக்கு உண்மையாக உழைத்தார்கள். மாணவர்களுடன் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டாலும், மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் நீதி போதனை வகுப்புக்களும்கூட சேர்த்து போதிக்கப்பட்டன. மாதா, பிதா, குரு, தெய்வம் என அன்றைய ஆசிரியர்கள் போற்றப்பட்டனர்.
இன்று இருதரப்பினருமே முற்றிலும் மாறிவிட்டனர். இன்று ஆசிரியர் ஆக தேர்வாகவும், மாணவர் ஆக அட்மிஷன் கிடைக்கவும் பணம் மட்டும்தான் தேவைப்படுகிறது.
இதெல்லாம் இவ்வாறு இருக்க ஒழுக்கமற்ற கல்வியை மட்டும்தான் நாமும் எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்துடன் கூடிய பாடத்தினை மாணவ மாணவிகளுக்கு போதிக்க வேண்டிய ஆசிரியர் / ஆசிரியைகளே ஒழுக்கமில்லாமல் தவறாக நடந்துகொள்ளும் பல்வேறு செய்திகளை தினமும் நாமும் படித்துவருகிறோம்.
இருப்பினும் அனைவரும் யோசிக்க வேண்டிய நல்லதொரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
காலம் மாறுகிறது. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. யாரை நோவது என்று தெரியவில்லை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்கள் மனதில் விதைக்க முடியும்
ReplyDeleteஉண்மை ஐயா
ஆனால் இன்றைய ஆசிரியர்களால் செயல்படி முடியவிலலை
செயல் பட இடம் தர மறுக்கிறார்கள்
தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடு என்று சொல்லி
மாணவனை மதிப்பெண் பெற வைக்கம் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்
இதில் பெரும் பங்கு பெற்றோர்களையே சாரும்
நன்றி ஐயா
தம +1
நீங்கள் சொல்வது போல இன்று கல்வி நுகர் பொருள். ஆசிரியர் சம்பளத்திற்காக தன கடமையை செய்பவர் அவ்வளவே.அரசு பெற்றோர் சமூகம் என் ஆசிரியரே கூட அதே சிந்தனையோடுதான் செயல்படுகிறார்கள். ஆசிரியர் தொழில் வேலை வாய்ப்ப்பு தரும் ஒரு தொழில் அவ்வளவே. கண்டிப்பு என்பதை அரசு பள்ளிகளில் காட்டவேமுடியாது. முன்பெல்லாம் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை ஆசிரியராக்கவே விரும்புவார்கள். இன்று யாரும் தன் வாரிசுகளை ஆசிரியாராக்க முனைவதில்லை.
ReplyDeleteஎப்போது வெளியிட்டாலும் பொருத்தமான பதிவே
//“சார் நீங்க என் மகனை தலைகீழா கட்டி வைச்சு அடிச்சு வேணுமானாலும் சொல்லிக் கொடுங்க. நான் எதுவும் கேட்க மாட்டேன். என்னோட பிள்ளைக்கு படிப்பு வந்தா போதும் “ என்று சொன்ன பெற்றோர்களும் உண்டு.//
ReplyDeleteஉண்மைதான். அப்போது இருந்த ஆசிரியர்கள் மேல் இருந்த நம்பிக்கையால் பெற்றோர்கள் அவ்வாறு சொன்னதுண்டு. நம்மைப்போன்ற மாணவர்களும் ஆசிரியர் அடித்தாலும் வீட்டில் வந்து சொன்னதில்லை.அப்படியே சொன்னாலும் ஆசிரியர் செய்தது சரிதான் என்று சொல்லி வீட்டில் நம்மைத்தான் கண்டிப்பார்களே தவிர ஆசிரியரிடம் வந்து எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது உள்ள நிலையே வேறு. காலம் மாறிவிட்டது என இருக்கவேண்டியதுதான்.
சவால்களை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தை முதலில் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்றைக்கு ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.. பள்ளிக்கூடம் - மரத்தடியில் என்றாலும் கோயிலாக விளங்கியது..
ReplyDeleteசிந்தனைக்கு இனிய பதிவு.. வாழ்க நலம்.
கல்வி அரசின் வசம் இருந்தவரை ஆசிரியர்களும் மாணவர்களும் ஒழுக்கத்தோடு இருந்தது போல் தெரிகிறது. கல்வி வியாபாரம் ஆனபோது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
ReplyDeleteஅற்புதமான பதிவு!
த ம +1
இந்தக் காலத்தில் ஆசிரியர்களை ஆ “சிரி “ யர்களாகவே பார்க்கிறொம் ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு. பெற்றோர்களும் பெருமளவு பொறுப்பாளர்களே
ReplyDeleteஅன்றைய மாணவர்கள் மற்றும் இன்றைய மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் குறித்து சிறப்பான அலசல்! அன்று ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தந்த பெற்றோர்கள் இன்று பிள்ளைகளுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்! ஏனென்றால் கோடிகளை கல்விக்காக இரைக்கிறார்கள் அல்லவா?
ReplyDeleteமாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலை பற்றிய ஒரு நல்ல ஒப்புமை. 50 ஆண்டுகளில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அம்மாற்றங்கள் மூலமாக நல்லது என்பது குறைவாக இருப்பதையே காணமுடிகிறது. இதுதான் காலத்தின் கோலமோ?
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள் வித்தியாசத்தை இனி மாற்ற முடியுமா 80 கேள்விக்குறியே
ReplyDelete6 மனமே 6 தமிழ் மணம்
மத்திய அரசு ,கல்வி பாடத்திட்டம் ஒன்றை மட்டும் நாடு முழுவதும் இலவசமாக வழங்கும் முறை அமுலானால் இந்நிலை மாறக்கூடும் !
ReplyDeleteமறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDeleteஅந்தக் கால இந்தக் கால ஆசிரியர்கள் பற்றி சுருக்கமாகவே குறிப்பிட்டாலும் விளக்கமான கருத்துரைடாகத் தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎப்போதும் போல., எனது வலைத்தளம் வந்து நீண்ட கருத்துரை தந்து, எழுதுவதற்கு உற்சாகம் தந்த அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDeleteகருத்துரை தந்த முனைவர் அய்யாவிற்கு நன்றி.
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் அவர்களுக்கு வணக்கம். கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// உண்மை ஐயா ஆனால் இன்றைய ஆசிரியர்களால் செயல்படி முடியவிலலை செயல் பட இடம் தர மறுக்கிறார்கள்
தேர்ச்சி விழுக்காடு தேர்ச்சி விழுக்காடு என்று சொல்லி
மாணவனை மதிப்பெண் பெற வைக்கம் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள் இதில் பெரும் பங்கு பெற்றோர்களையே சாரும்//
ஆசிரியர்கள் படும் கஷ்டம் ஆசிரியராகிய உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். நன்றாகவே சொன்னீர்கள். தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteகல்வி அலுவலர் சகோதரர் டி.என்.முரளிதரன் - மூங்கில் காற்று அவர்களின் அனுபவ பூர்வமான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா V.N.S அவர்கள் சொல்வது போல, இப்போது உள்ள நிலையே வேறு. காலம் மாறிவிட்டது என இருக்க வேண்டியதுதான். அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களது கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > S.P. Senthil Kumar said...
ReplyDeleteசகோதரர் எஸ்.பி. செந்தில் குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
// கல்வி அரசின் வசம் இருந்தவரை ஆசிரியர்களும் மாணவர்களும் ஒழுக்கத்தோடு இருந்தது போல் தெரிகிறது. கல்வி வியாபாரம் ஆனபோது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
அற்புதமான பதிவு! //
நீங்கள் சொன்னது சரிதான். இருந்தாலும் ஒரு சிறு திருத்தம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை கல்விமுறை, ஆசிரியர்கள் மாற்றம் யாவும் சரியாகவே நடந்தன என்பதில் ஐயமில்லை.( இப்போது பழைய காங்கிரஸ் இல்லை.)
சொல்லொண்ணா மன நெருகடிகளோடு தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பி வேலை செய்வதால், பெரும்பான்மையான பிள்ளைகளால் தொந்தரவு இல்லை. அவர்கள் மரியாதையோடும், நட்போடும் இருக்கிறார்கள். சகவாசம் சரியில்லாத, பெற்றோர் தவறுகளை ஊக்குவிக்கிற பிள்ளைகளை தான் சமாளிப்பது சிரமமாக இருக்கிறது. மற்றபடி நீதி போதனை வகுப்பால் வெகு குறைவு, மார்க் பின்னாடி ஓடுங்க என கோல் வைத்து துரத்துகிறது காலம்:((( நல்ல பதிவண்ணா ! மிக்க நன்றி!
ReplyDeleteமறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
// இந்தக் காலத்தில் ஆசிரியர்களை ஆ “சிரி “ யர்களாகவே பார்க்கிறொம் ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு. பெற்றோர்களும் பெருமளவு பொறுப்பாளர்களே //
உங்கள் கருத்துரையில் உள்ள நகைச்சுவையை ரசித்தேன். இந்த காலத்ஹில், மாணவர்கள் வளர்ச்சியில் பெற்றோர்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது என்பது எனது கருத்து அய்யா.
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் எளிமையான கருத்துரைக்கு நன்றி.
// அன்று ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தந்த பெற்றோர்கள் இன்று பிள்ளைகளுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்! ஏனென்றால் கோடிகளை கல்விக்காக இரைக்கிறார்கள் அல்லவா? //
சரியாகச் சொன்னீர்கள்.
மறுமொழி >Dr B Jambulingam said...
ReplyDelete// மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலை பற்றிய ஒரு நல்ல ஒப்புமை. 50 ஆண்டுகளில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அம்மாற்றங்கள் மூலமாக நல்லது என்பது குறைவாக இருப்பதையே காணமுடிகிறது. இதுதான் காலத்தின் கோலமோ? //
ஆம் அய்யா! இன்று அதிக சம்பளம் சம்பாதித்து தரும் படிப்புக்கு மவுசு அதிகம். ஒரு காலத்தில் ‘காமர்ஸ்’ படிப்பிற்கு நிறைய போட்டி இருந்தது நினைவுக்கு வருகிறது. கருத்துரை தந்த முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// மத்திய அரசு ,கல்வி பாடத்திட்டம் ஒன்றை மட்டும் நாடு முழுவதும் இலவசமாக வழங்கும் முறை அமுலானால் இந்நிலை மாறக்கூடும் ! //
உங்கள் புதிய சிந்தனை யோசிக்க வைத்தது. மாற்று சிந்தனைகள், புதிது புதிதாக ஜோக்குகள் சொல்லும் தாங்கள் எங்களைப் போல் ஒரு பக்க கட்டுரைகளையும் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.
கருத்துரை தந்த கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி > Mythily kasthuri rengan said...
// சொல்லொண்ணா மன நெருகடிகளோடு தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பி வேலை செய்வதால், பெரும்பான்மையான பிள்ளைகளால் தொந்தரவு இல்லை. அவர்கள் மரியாதையோடும், நட்போடும் இருக்கிறார்கள். சகவாசம் சரியில்லாத, பெற்றோர் தவறுகளை ஊக்குவிக்கிற பிள்ளைகளை தான் சமாளிப்பது சிரமமாக இருக்கிறது. மற்றபடி நீதி போதனை வகுப்பால் வெகு குறைவு, மார்க் பின்னாடி ஓடுங்க என கோல் வைத்து துரத்துகிறது காலம்:((( நல்ல பதிவண்ணா ! மிக்க நன்றி! //
இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் படும்பாட்டை, ஒரு ஆசிரியை என்ற முறையில் விளக்கமாக வெளிப்படையாகச் சொன்னதற்கு நன்றி. இங்கு வலைப்பதிவில் எழுதும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அனைவரும் எழுதும் எழுத்துக்களிலிருந்து, பொதுவாகவே தமிழக ஆசிரியர்கள் அனைவரும் சமூக நலனில் அக்கறை உள்ளவர்களாகவே இருப்பது தெரிகிறது.
கருத்துரை தந்த சகோதரி ஆசிரியை மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களுக்கு நன்றி.
ஒரு மருத்துவர் தவறுசெய்தால் ஒரு மனிதர் ஆறடியில் புதைக்கப்படுவார்
ReplyDeleteஒரு வழக்குரைஞர் தவறு செய்தால் ஒருமனிதர் ஆறடியில் தொங்கவிடப்படுவார்
ஆசிரியர் ஒருவர் தவறுசெய்தால், ஒரு சமூகமே 50ஆண்டு பின்னுக்கு இழுக்கப்படும் என்பார்கள். இதை ஆசிரியர் உணரவதை விட அரசும் உணர வேண்டும்.
“படித்தவன் பாடம் நடத்துகிறான்,
படிக்காதவர் பள்ளிக்கூடம் நடத்துகிறான்“ என்றால் கல்வி எப்படி இருக்கும்?
கல்வியை செலவீனத்தில் வைத்திருக்கிறது அரசு. அதையே வருமானத்திற்கான வழியென்று வைத்திருக்கிறது தமிழ்க்குடும்பம். எதிர்காலச்சமூகத்திற்கான முதலீடு என்று புரிந்துகொண்டாலன்றி “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. என்னைச் சொல்லிக் குற்றமில்லை..“ கதைப்பாடல்தான்! நல்ல் பதிவு நண்பரே.
தங்களுக்கே உள்ள எழுதும் நடையும் அருமை..
ReplyDeleteஇப்போது ஒரு மாணவனை ஆசிரியர் முறைத்துப் பார்த்தாலே முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்பது தங்களுக்கு தெரியுமா?
தம +
ReplyDeleteமறுமொழி > Muthu Nilavan said...
ReplyDeleteமறுமொழி > Mathu S said...
கருத்துரைகள் தந்த அன்புள்ள ஆசிரியர்கள் அய்யா முத்துநிலவன் மற்றும் எஸ். மது இருவருக்கும் நன்றி.
நான் எழுது வேண்டும் என்று நினைத்து விசயங்கள் இது. எழுதுவேன்.
ReplyDeleteநண்பர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றி.
DeleteWe offer the best treatment for common sexual problem like Prostate cancer, frozen shoulder treatment, prostate cancer treatment, men sexuality etc.
ReplyDeletebest homeopathy doctor in india.