கடந்த ஒன்றரை
மாதங்களாக வலைப் பக்கம் சரியாக வர இயலவில்லை. அம்மாவின் மறைவு மற்றும் ஒரு சின்ன
விபத்து (இடது காலில் காயம்) –
இவைதான் காரணம். எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றாவிட்டால் சிலசமயம் சொந்தக் கதை சோகக்
கதையை எழுத வேண்டி உள்ளது.
காலில் ஏற்பட்ட
காயம்:
நான் வேலையில் இருந்த
போது வாங்கி ஓட்ட ஆரம்பித்தது TVS Moped தான். இப்போது TVS 50 XL Super. நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. எனவே பால், தயிர், மளிகை என்று எது
வாங்குவது என்றாலும் கூட இந்த வண்டியில்தான். சைக்கிள் ஓட்டுவது போல, எனக்கு பழகிப் போன
வண்டி. எல்லோரும் கார் வாங்கச் சொன்னார்கள். வசதி வாய்ப்பு இருந்தும், இதுவே
போதும் என்று இருந்து விட்டேன். வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது, ஆட்டோ அல்லது
கால் டாக்ஸி என்ற எண்ணம்தான்.
மறைந்த அம்மாவுக்கு செய்ய
வேண்டிய காரியங்கள் முடிந்த மறுதினம். காலை(06.04.15), பால் வாங்குவதற்காக வழக்கம் போல TVS
50 ஐ எடுத்துச் சென்றேன். போகும் போதே
வண்டியில் பின் சக்கர பிரேக் கைப்பிடி உடைந்து விட்டது. சமாளித்தபடி சென்று
வந்தேன். இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. முதல்நாள் இரவு, மாடியில்,
தங்கி இருந்த எனது உறவினரை எனது அப்பா வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக (எனது TVS
50 ரிப்பேர் என்பதால்) வீட்டில் இருந்த
எனது மகள் விட்டுச் சென்ற ஸ்கூட்டியை எடுத்தேன். அப்போதும் அவர் வண்டியில் உட்கார
யோசனை செய்தார். விதி வலியது. நான்தான் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றேன்.(பெரும்பாலும்
இந்த ஸ்கூட்டியை நான் எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும், டபுள்ஸ் சவாரியை
தவிர்த்து விடுவேன்). ஒரு இடத்தில், சாலை திருப்பத்தில், ஸ்பீடு பிரேக்கர்
இருக்கும் இடத்தில் காலை ஊன்றி வண்டியை எடுத்தேன்.. அப்போது பார்த்து வண்டியின்
பின்னால் உட்கார்ந்து இருந்த உறவினர் சரியாக உட்காருவதற்காக அசைந்து விட்டார்
போலிருக்கிறது. எனவே என்னையும் அறியாமல்
இரண்டு கால்களையும் ஸ்கூட்டியின் இரண்டு பக்கமும் ஊன்றி விட்டேன். இதனால்
யாரும் விழவில்லை. ஆனாலும் வண்டி நகர்ந்த வேகத்தில், இடது குதி காலில் ஸ்கூட்டியின்
(சென்டர் அல்லது சைடு) ஸ்டாண்டுகளில் ஒன்று இடித்தது போன்று இருந்தது. நான்
சமாளித்தவாறு , அவரை கொண்டு போய் அப்பாவின் வீட்டில் விட்டு விட்டு கிளம்பியபோது
பார்த்தால் இடது குதிகாலில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. நான்
கடைக்கு போகாமல் உடனே எங்கள் வீட்டிற்கு திரும்பினேன். ஸ்கூட்டியில் கால் வைக்கும்
இடம் முழுக்க இரத்தமான இரத்தம். உடனே இடது காலில் தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு,
பிரிஜ்ஜில் இருந்து எடுத்த ஐஸ் கட்டிகள் வைத்து கட்டினார்கள். உடனே ஒரு ஆட்டோவை
வரவழைத்து 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு
சர்க்கரை வியாதி இல்லை; எனவே எனக்கு மயக்கம் ஏதும் வரவில்லை.
இருந்தாலும் அவ்வளவு இரத்தம்
வெளியேறியதால் எனக்கு பயம்தான்.
மருத்துவ மனையில்
மருத்துவ மனையில், மயக்க
மருந்து கொடுத்து எனது இடது குதிகாலுக்கு கீழே இருந்த ஆழமான காயத்திற்கு தையல்
போட்டார்கள். அதற்கு முன் வழக்கம் போல, எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை முதலானவை
நடைபெற்றது. நல்ல வேளை குதிகால் நரம்பிற்கோ அல்லது கால் எலும்பிற்கோ ஒன்றும்
ஆகவில்லை.( முன்பு
ஒருமுறை அய்யா V.G.K அவர்கள் கூட (வை.கோபாலகிருஷ்ணன்) வண்டியில்
டவுன் பக்கம் வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருந்தார்கள். எனவே டவுன்
பக்கம் வண்டியில் செல்வதில்லை; எங்கள் ஏரியாவிற்குள் மட்டும்தான்.)
(ஏப்ரல் 6 முதல்)
ஆஸ்பத்திரியில் ஐந்து நாட்கள் இருந்தேன். படுப்பதும் உட்காருவதுமாக பொழுது நகர்வது
கஷ்டமாக இருந்தது. கூடவே எனது மனைவி மட்டும். அவர் செய்த தொண்டு மகத்தானது. முதல்
இரண்டு நாட்கள், ஒற்றை காலால் நடந்து கொண்டு நான் பட்ட அவஸ்தை சொல்ல இயலாது.
அப்புறம் வாக்கர் (walker)
எனப்படும் ஸ்டாண்ட் ஒன்றை வைத்துக் கொண்டு நடந்தேன். அறையில் ஒரே ஒரு ஜன்னல். அதன்
வழியே வெளியே பார்ப்பதோடு சரி. உறவினர்கள்
நண்பர்கள் வந்து ஆறுதல் சொன்னார்கள். சிலர், இதேபோல் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களைப்
பற்றிய அனுபவத்தையும் சொன்னார்கள்.
வலைப்பக்கம்
வந்தேன்:
இப்போது வீட்டிற்கு
வந்து இரண்டு வாரம் ஆகிறது. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மகன்
கல்லூரிக்கும், மனைவி அவரது அரசு அலுவலகத்திற்கும் சென்று விடுகிறார்கள். வீட்டில்
இருக்கும் புத்தகங்களும், டீவியும், கம்ப்யூட்டரும் தான் துணை. வலைப்பக்கம்
அவ்வப்போது வந்து போனேன். அப்படியும் வலியோடு வலியாக சில பதிவுகள், மறுமொழிகள், கருத்துரைகள்
மற்றும் பின்னூட்டங்கள் எழுதினேன். Google Images வழியே ஆறுதலுக்காக
சில பொன்மொ்ழிகளைப் படித்தேன் அப்போது கிடைத்த படங்கள் இவை.
.
நான்கு நாட்களுக்கு
ஒருமுறை மருத்துவமனை சென்று டாக்டரைப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் கால் கட்டை
அவிழ்த்து விட்டு, மருந்து வைத்து புதிதாக ஒரு கட்டு போட்டார். காயம் படிப்படியாக
குணமாகி வந்தது. சென்ற திங்கட் கிழமை (4 ஆம் தேதி) கால் காயத்தில் இருந்த தையலைப்
பிரித்தார்கள். பயப்படும்படி இல்லை. இன்னும் ஒருவாரம் சென்றுதான் முழு குணம்
தெரியும் போலிருக்கிறது. காலின் அருமை காலில் அடிபட்டால் தான் தெரியவரும்
போலிருக்கிறது.
ஸ்கூட்டர், பைக் ஸ்டாண்ட்:
ஸ்கூட்டர் போன்ற
வண்டிகளை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில்வற்றில் சென்டர்
மற்றும் சைடு ஸ்டாண்டுகள் இரண்டும் உண்டு.
நாம் அடிக்கடி இவற்றை பயன்படுத்தும் போது தரையில் படுவதால், அவற்றின் நுனி
தேய்ந்து பிளேடு போல் ஆகி விடுகின்றன. வண்டியை ஓட்டும்போது, திடீரென்று நிறுத்தி
எடுக்கும் போது அவை காலில் இடிக்க வாய்ப்பு அதிகம். சில சமயம் எனக்கு ஏற்பட்டது
போல் பெரியதாக காயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
தங்களுக்கு நேர்ந்த துன்பம் குறித்து வருந்துகின்றேன்.. கவலை வேண்டாம்..
ReplyDeleteவிரைவில் நலமடைய வேண்டுகின்றேன்.. வாழ்க நலம்..
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களுடைய வேதனையையும் பொறுத்துக் கொண்டு -
ReplyDeleteசக நண்பர்களின் கவனத்திற்கென - ஸ்கூட்டர் போன்ற வண்டிகளின் சென்டர் மற்றும் சைடு ஸ்டாண்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தினை அறிவுறுத்தியமை - சிறப்பு!.
(எழுத்துப் பிழையாகி விட்டது.. அதனால் தான்!..)
விரைவில் நலம் பெற்ற இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteதங்களுக்கு நேர்ந்தது கண்டு வருத்தமாக இருக்கிறது. விரைவில்பூரண குணமடைய வேண்டுகிறேன். இருசக்கர வாகனத்தின் சைட் ஸ்டாண்டு குறித்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் நன்றி ஐயா. தம 1
ReplyDeleteஇப்படி ஆகிவிட்டதே என்று தன்னிரக்கம் கொள்ளாதீர்கள். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். நம் உடல் நம்மால் இதற்கு மேல் சகித்துக் கொள்ளமுடியாது என்று நினைப்பதை விட ஆறு மடங்கு சகித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பார். சீயர் அப். சீக்கிரமே நலமடைவீர்கள்.
ReplyDeleteவிரைவில் நலமடைய வேண்டுகின்றேன்.
ReplyDeleteவிரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteகுணமடைந்து தொடர்ந்து எழுதுங்க.
ReplyDelete
ReplyDelete23 ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஒட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த இரு சக்கர வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதுவும் வேகத்தடை உள்ள இடங்களிலும் மணற்பாங்கான இடங்களிலும் அதிகப்படி கவனம் தேவை. நல்ல வேளை. குதிகால் எலும்பிற்கோ அல்லது நரம்பிற்கோ ஒன்றும் ஆகவில்லை. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
தாங்கள் நலமடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteவிரைவில் நலமடைய வேண்டுகின்றேன்.
ReplyDeleteவிரைவில் குணமைடைய இறைவன் துணை புரிவானாக நண்பரே...
ReplyDeleteஅய்யா வணக்கம். பதிவு கண்டு மிகவும் வருந்தினேன்.
ReplyDeleteஉடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தங்கள் ஊக்கம் தொடரவேண்டுகிறேன். ஊக்கச் செயல்பாடே உன்னத மருந்து.
விரைவில் நேரில் தங்கள் வீடு வந்து சந்திப்பேன். நிறையப் பேசுவோம்.
கார் ஓட்டுவதை விட ஸ்கூட்டர் ஓட்டுவது சுலபமாகத் தோன்றும். ஆனால் இந்த மாதிரி விபத்துகள் ஏற்படும்போது கஷ்டப்படவேண்டும் நான் கார் வாங்கின பிறகு கூட ஸ்கூட்டர் உபயோகித்து வந்தேன். பின் பிரேக் சொஞ்சம் சரி இல்லை. ஒரு இடத்தில் கொஞ்சம் மணல் இருந்தது. அந்த இடத்தில் ஸ்கூட்டர் சருக்கி விட்டு நானும் மனைவியும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். எனக்கு மணிக்கட்டில் பிரேக்சர். மனைவிக்கு தலையில் அடி. எப்படியோ சீரியஸ் ஆகாமல் தப்பித்தோம். அதிலிருந்து ஸ்கூட்டரை விட்டு விட்டேன். பக்கத்தில் போவதற்கு நடராஜா சர்வீஸ். ஒரு கிமீ தூரத்திற்கு மேல் போவதாக இருந்தால் கார். ஒரு வயதிற்கு மேல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுவது கட்டாயம்.
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteவிபத்து குறித்த விபரம் அறிந்து மிக வருந்துகிறேன்.
தாங்கள் விரைவில நலமடைந்து பழையது போல் வலையுலகில் இயங்க வேண்டுகிறேன்.
முத்துநிலவன் ஐயாவின் வருகையில் நானும் உடனிருக்க விரும்புகிறேன்.
நன்றி.
ஐயா, வணக்கம். நடந்துள்ளதெல்லாம் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. பட்டகாலிலே படும் என்று சொல்வார்கள்.
ReplyDeleteகூடுமானவரை டூ வீலரில் பிறரை ஏற்றிக்கொண்டோ அல்லது பிறரின் டூ வீலரில் தாங்கள் அமர்ந்துகொண்டோ டபுள்ஸ் போகாதீர்கள். நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி டவுன் பக்கம் டூ வீலரில் சிங்கிள்ஸ் கூட வராதீர்கள்.
Heavy Traffic + பிற வண்டியோட்டிகளின் வேகங்கள் படு மோசமாக உள்ளன. எல்லோருமே தலைதெறிக்க வேக வேகமாக வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். இளம் சிறு வயது என்றால் நாம் ஓரளவு சமாளிக்கலாம். நமக்கு ஓரளவு வயதாகிவிட்டதால் இனி இந்த சோதனைகள் வேண்டாம்.
எவனாவது லேசாக ஒரு இடி இடித்துவிட்டு, ஸாரி எனச்சொல்லிவிட்டுப்போய் விடுவான். நமக்குத்தான் அடுத்த மூன்று மாதம் மிகவும் கஷ்டமாகி விடும்.
பார்த்து ஜாக்கிரதையாக இருங்கோ, சார். இன்று வீட்டில் விசேஷம். பிறகு ஒருநாள் தங்களுடன் பேசுகிறேன். அன்புடன் VGK
விரைவில் முழு நலன் பெற விழைகிறேன்.
ReplyDeleteஇரு சக்கர வாகனம் ஓட்டுகையில் கவனம் தேவை என்ற எச்சரிக்கையை உங்களின் அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டது சிறப்பு! விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteஅண்ணா! விபத்துச்செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். கால் என்பதால் ஆற வெகுநாள் ஆகியிருக்கிறது இல்லையா? உடல் நிலையை நன்கு கவனித்துகொள்ளுங்க. பிசியோ ஏதேனும் பயிற்சி பற்றி சொல்லியிருந்தால் அவசியம் செய்யுங்கள். அந்த படங்கள் உங்கள் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன!! அருமை அண்ணா!
ReplyDeleteசமீபத்தில் தான் ,என் பைக் ஸ்டாண்டின் அரை அடியை வெட்டி விட்டு, நான் புதிய பைப் பற்ற வைத்தது ,எவ்வளவு நல்லது என்று உங்கள் அனுபவத்தைப் படித்த பின் புரிந்து கொள்ள முடிந்தது :)
ReplyDeleteமறுமொழி> துரை செல்வராஜூ said... ( 1 . 2 )
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களின் ஆறுதல் மொழிக்கு நன்றி.
மறுமொழி> கரிகாலன் said...
ReplyDelete// விரைவில் நலம் பெற்ற இறைவனை வேண்டுகிறேன் //
சகோதரர் ‘என் மனவெளியில்’ கரிகாலன் அவர்களது பிரார்த்தனைக்கு நன்றி.
மறுமொழி> R.Umayal Gayathri said...
ReplyDeleteசகோதரி அவர்களது ஆறுதல் மொழிகளுக்கு நன்றி. (தங்களது சமையல் குறிப்பு பதிவுகளுக்கு கருத்துரை தராவிடினும் தொடர்ந்து படிக்கின்றேன் சகோதரி; எனது தங்கையும் உங்களைப் போல சாய்பாபா பக்தைதான்)
மறுமொழி> G.M Balasubramaniam said...
ReplyDelete// இப்படி ஆகிவிட்டதே என்று தன்னிரக்கம் கொள்ளாதீர்கள். எனக்கு ஒரு நண்பர் இருந்தார். நம் உடல் நம்மால் இதற்கு மேல் சகித்துக் கொள்ளமுடியாது என்று நினைப்பதை விட ஆறு மடங்கு சகித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது என்பார். சீயர் அப். சீக்கிரமே நலமடைவீர்கள். //
உற்சாகமூட்டும் வரிகளைத் தந்து, எனக்கு தன்னம்பிக்கை தரும் அய்யா G.M.B அவர்களின் அன்பு மொழிகளுக்கு நன்றி.
மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களின் ஆறுதல் மொழிக்கு நன்றி.
மறுமொழி> Packirisamy N said...
ReplyDeleteஎப்போதும் என்னை மறக்காத சகோதரர் என்.பக்கிரிசாமி அவர்களின் ஆறுதலுக்கு நன்றி.
மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// குணமடைந்து தொடர்ந்து எழுதுங்க. //
சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களது அன்பான வார்த்தைக்கு நன்றி. தங்கள் வாக்கு பலிக்கட்டும்.
மறுமொழி> வே.நடனசபாபதி said...
ReplyDelete// 23 ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஒட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த இரு சக்கர வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதுவும் வேகத்தடை உள்ள இடங்களிலும் மணற்பாங்கான இடங்களிலும் அதிகப்படி கவனம் தேவை. நல்ல வேளை. குதிகால் எலும்பிற்கோ அல்லது நரம்பிற்கோ ஒன்றும் ஆகவில்லை. தாங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.//
தனது நீண்டகால அனுபவங்களோடு, ஆறுதல் மொழி தந்திட்ட அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...
ReplyDelete// தாங்கள் நலமடைய இறைவனை வேண்டுகின்றேன். //
சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் பிரார்த்தனைக்கு நன்றி.
மறுமொழி> sury Siva said...
ReplyDelete// விரைவில் நலமடைய வேண்டுகின்றேன். //
எங்கிருந்தபோதும், என்மீது அன்பு காட்டும் சூரி தாத்தா அவர்களின் பிரார்த்தனை பலிக்கட்டும்.
மறுமொழி> KILLERGEE Devakottai said...
ReplyDelete// விரைவில் குணமைடைய இறைவன் துணை புரிவானாக நண்பரே...//
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் பிரார்த்தனைக்கு நன்றி.
ஓரளவு தேறியது உடல் நலம் என அறிய மகிழ்ச்சி!
ReplyDeleteநாங்களும் கவனமாக இருக்க, தங்கள் இப்பதிவு ஓர் எச்சரிக்கையாக இருக்கும்!
மறுமொழி> Muthu Nilavan said...
ReplyDelete// அய்யா வணக்கம். பதிவு கண்டு மிகவும் வருந்தினேன்.
உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். தங்கள் ஊக்கம் தொடரவேண்டுகிறேன். ஊக்கச் செயல்பாடே உன்னத மருந்து.
விரைவில் நேரில் தங்கள் வீடு வந்து சந்திப்பேன். நிறையப் பேசுவோம். //
அன்புள்ள ஆசிரியர் கவிஞர் முத்து நிலவன் அவர்களின் அன்பான, ஆறுதல் மொழிகளுக்கு நன்றி. தங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறேன். தாங்கள் வரும் முன் செல்போனில் தகவல் தெரிவித்தால் நல்லது அய்யா.
மறுமொழி> பழனி. கந்தசாமி said...
ReplyDelete// கார் ஓட்டுவதை விட ஸ்கூட்டர் ஓட்டுவது சுலபமாகத் தோன்றும். ஆனால் இந்த மாதிரி விபத்துகள் ஏற்படும்போது கஷ்டப்படவேண்டும் நான் கார் வாங்கின பிறகு கூட ஸ்கூட்டர் உபயோகித்து வந்தேன். பின் பிரேக் சொஞ்சம் சரி இல்லை. ஒரு இடத்தில் கொஞ்சம் மணல் இருந்தது. அந்த இடத்தில் ஸ்கூட்டர் சருக்கி விட்டு நானும் மனைவியும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். எனக்கு மணிக்கட்டில் பிரேக்சர். மனைவிக்கு தலையில் அடி. எப்படியோ சீரியஸ் ஆகாமல் தப்பித்தோம். அதிலிருந்து ஸ்கூட்டரை விட்டு விட்டேன்.//
முனைவர் அய்யா அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
// பக்கத்தில் போவதற்கு நடராஜா சர்வீஸ். ஒரு கிமீ தூரத்திற்கு மேல் போவதாக இருந்தால் கார். ஒரு வயதிற்கு மேல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுவது கட்டாயம். //
நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. - ’’ஒரு வயதிற்கு மேல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுவது கட்டாயம்’’- எனக்கும் வயது 60 ஆகி விட்ட படியினால், உங்களுடைய ஆலோசனையை கடைபிடித்தல் நலன் என்று நினைக்கிறேன்.
மறுமொழி> ஊமைக்கனவுகள். said...
ReplyDelete// ஐயா வணக்கம். விபத்து குறித்த விபரம் அறிந்து மிக வருந்துகிறேன். தாங்கள் விரைவில நலமடைந்து பழையது போல் வலையுலகில் இயங்க வேண்டுகிறேன்.//
அன்புள்ள ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களின் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
// முத்துநிலவன் ஐயாவின் வருகையில் நானும் உடனிருக்க விரும்புகிறேன்.நன்றி. //
நானே உங்களையும் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களையும் உங்கள் பள்ளியில் வந்து சந்திப்பதாக இருந்தேன். ஆசிரியர் ஜேம்ஸ் அவர்களிடமும் சொல்லி இருந்தேன். தேர்வுத்தாள் திருத்தும் சென்டரில் தான் இருப்பதாகச் சொன்ன படியினால் வரவில்லை. அதற்குள் எனக்கு இப்படி நேர்ந்து விட்டது. பரவாயில்லை.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என் இல்லம் வரலாம். அன்புடன் வரவேற்கிறேன். அன்பு ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களிடம் எனது செல் எண் உள்ளது. தாங்கள் வரும் முன் செல்போனில் தகவல் தெரிவித்தால் நல்லது
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// ஐயா, வணக்கம். நடந்துள்ளதெல்லாம் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. பட்டகாலிலே படும் என்று சொல்வார்கள்.//
அன்புள்ள V.G.K அவர்களது நீண்ட அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல கடந்த ஒரு வருடமாகவே எனக்கு தொடர்ச்சியாக சோதனை மேல் சோதனை.
// கூடுமானவரை டூ வீலரில் பிறரை ஏற்றிக்கொண்டோ அல்லது பிறரின் டூ வீலரில் தாங்கள் அமர்ந்துகொண்டோ டபுள்ஸ் போகாதீர்கள். நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி டவுன் பக்கம் டூ வீலரில் சிங்கிள்ஸ் கூட வராதீர்கள். //
உங்கள் அறிவுரைப்படி அன்றிலிருந்து டவுன் பக்கம் வண்டியில் வருவதை விட்டு விட்டேன்.
// Heavy Traffic + பிற வண்டியோட்டிகளின் வேகங்கள் படு மோசமாக உள்ளன. எல்லோருமே தலைதெறிக்க வேக வேகமாக வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். இளம் சிறு வயது என்றால் நாம் ஓரளவு சமாளிக்கலாம். நமக்கு ஓரளவு வயதாகிவிட்டதால் இனி இந்த சோதனைகள் வேண்டாம். //
ஆமாம் அய்யா. எனது வயதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது. இப்போது எங்கு சென்றாலும் ஆட்டோ அல்லது கால் டாக்ஸிதான். தொலை தூரத்திற்கு பஸ்ஸில்தான் பயணம்.
// எவனாவது லேசாக ஒரு இடி இடித்துவிட்டு, ஸாரி எனச்சொல்லிவிட்டுப்போய் விடுவான். நமக்குத்தான் அடுத்த மூன்று மாதம் மிகவும் கஷ்டமாகி விடும். பார்த்து ஜாக்கிரதையாக இருங்கோ, சார். இன்று வீட்டில் விசேஷம். பிறகு ஒருநாள் தங்களுடன் பேசுகிறேன். அன்புடன் VGK//
நீங்கள் சொல்வது போல கஷ்டம் நமக்குத்தான். உங்கள் ஆலோசனைப்படி கவனமாக இருப்பேன்.
மறுமொழி> Amudhavan said...
ReplyDelete// விரைவில் முழு நலன் பெற விழைகிறேன். //
அமுதவன் அய்யா அவர்களின் அன்பான ஆறுதல் மொழிக்கு நன்றி.
மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் ஆறுதல் மொழிக்கு நன்றி.
அய்யா வணக்கம். நான் வரும் முன் தங்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு, தங்களுக்கு வாய்ப்பான நேரத்திலேயே வருவோம் - நானும் நம் நண்பர் விஜூவும். அனேகமாக வரும் 12 (அ) 13ஆம் தேதி மாலை. நன்றி அய்யா. நாளை பேசுகிறேன். இப்போது விடிகாலை மணி 5.00.(இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன்)
ReplyDeleteபடிக்கப் படிக்க மனம் வருந்துகிறது ஐயா
ReplyDeleteஉடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா
நன்றி
தம +1
ஐயா கவலை வேண்டாம்... விரைவில் குணமடைந்து விடும்...
ReplyDeleteமறுமொழி> Mythily kasthuri rengan said...
ReplyDeleteஆசிரியை சகோதரி அவர்களது நலம் விசாரிப்பிற்கும் ஆறுதல் மொழிகளுக்கும் நன்றி.
மறுமொழி> Bagawanjee KA said...
ReplyDeleteசகோதரர் அவர்களின் கருத்துரைக்கும் பைக் ஸ்டாண்ட் பற்றிய தகவலுக்கும் நன்றி.
மறுமொழி> அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
ReplyDeleteமாயவரம் சகோதரர் அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின் அன்பான மொழிகளுக்கு நன்றி.
மறுமொழி> Muthu Nilavan said... (2)
ReplyDeleteஆசிரியர் அவர்களின் அன்புக்கு நன்றி.
மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசிலசமயம் வாழ்க்கையில் இப்படி எதிர்பாராதது வருவது ஒரு நியதி போலிருக்கிறது. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் ஆறுதல் மொழிக்கு நன்றி.
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வாக்கு பலிக்கட்டும்.
பட்ட காலில் படும் என்பது உண்மையோ என உங்களின் பதிவைப் படித்ததும் உணர்ந்தேன். இவ்வாறான உடல் நிலையிலும் தாங்கள் ஊக்கமாக இருந்து எழுதுவது என்பது தங்களின் மன தைரியத்தைக் காட்டுகிறது. தங்கள் உடல் நலம் முழுமையாக குணம் பெற வேண்டுகிறேன். முடிந்த வரை ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். முழுமையான மன நிலையும், உடல் நிலையும் இன்னும் நல்ல எழுத்துக்களையும், பதிவுகளையும் வெளிக்கொணர உதவும்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
கலை வேண்டாம் எல்லாம் மனிதனாக பிறந்தால் இன்பம் துன்பம் என்ற இரண்டு சிலுவையை சுமக்க வேண்டும் அதிலும் மூத்த பிள்ளை என்றால் நாலு சிலுவைகள்சுக்க வேண்டும்.... ஐயா
அப்பாவின் உடல் நலம் சரியாக இறைவனை வேண்டுவோம் ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களுக்கு நேர்ந்த விபத்து பற்றி அறிய வருத்தமாக இருந்தது. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள். ஒரு வகையில் இந்த கட்டாய ஓய்வு கூட நல்லனவற்றை சிந்திப்பதற்கும் நல்லனவற்றை நிறைய படிப்பதற்கும் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.
ReplyDeleteவிரைவில் குணமடையும் வருந்த வேண்டாம். இவ் ஓய்வு நல்ல பதிவுகளை தர எதுவாக இருக்கட்டுமே. பதிவுக்கு நன்றி !
ReplyDelete
ReplyDeleteநானும் சமீபத்தில் விபத்தைச் சந்தித்தவன்
என்பதால் அதன் வலி எனக்கு
முழுமையாய்ப் புரியும்
விரைவில் குணமடைய
அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
உங்களுக்கு ஏற்பட்ட விபத்தை அறிய வருத்தமாக இருக்கிறது. சுறுசுறு என்று இருந்தவர்களுக்கு படுத்துக் கொண்டிருப்பது நிச்சயம் தண்டனை தான். கவலைப்படாதீர்கள். வெகு விரைவில் குணமாகி பழையபடி சுறுசுறுப்பாக நடமாடலாம். சிலநாட்களுக்கு பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வும் தேவைதானே? முழுமையாக அதையும் அனுபவியுங்கள். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete