Friday, 1 May 2015

மே தினம் – வாழ்த்துக்கள்!




மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் தோழர்கள் சுதந்திர தினம் போன்று கொடியேற்றுவார்கள்,  கூட்டம் நடத்துவார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே உரிய தினமாக இருந்த நிலைமை இன்று மாறி விட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்  ( ‘WORKING MEN OF ALL COUNTRIES UNITE’) என்ற இந்த வாசகம், மேதினம் எனப்படும் இன்று உலகம் முழுக்க முழக்கமிடப் படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் அறைகூவல் விட்டு அழைக்கப்பட்ட இந்த வாசகத்தை உச்சரிக்கவே பயந்த காலமும் உண்டு. இன்று தொழிலாளர் வர்க்கம் எங்கெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கிறதோ அங்கெல்லாம், இந்த மேதின அறைகூவல் எழுகின்றது. அனைத்து தொழிற்சங்கங்களும் மேதின நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அனைத்து அரசியல்வாதிகளும் மேதின வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த மேதின வாழ்த்துக்கள்!

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் ‘மறக்க முடியாத இலங்கை வானொலி யில், பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில், அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிபரப்பினார்கள். அவர்கள் மேதினம் என்ற உலக தொழிலாளர்கள் தினத்தன்று ஒலிபரப்பிய பாடல்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன. அவற்றை நினைவு படுத்தி இங்கு சில பாடல்களின் வரிகள்.

கம்யூனிசம் என்றால்:

பொதுவுடமைதான் என்ன? என்ற கேள்விக்கு விடை சொல்ல பல்வேறு அறிக்கைகள், பலபல புத்தகங்கள் நாட்டில் இருக்கின்றன. இப்போது இட்லி கம்யூனிசம் என்று (உபயம்: கத்தி படம்) வேறு கலக்குகிறார்கள். நமது  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ரொம்பவும் எளிமையாக தான் எடுத்த “கறுப்புப் பணம் என்ற படத்தில், தான் எழுதிய பாடல் வரிகளில் சொல்லுகிறார்.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

        - பாடல்: கண்ணதாசன் படம்: கறுப்புப் பணம்

எம்.ஜி.ஆர் படப் பாடல்கள்:

பெரும்பாலான எம்.ஜி.ஆர் படங்களில், தனியாக அவர் பாடும் பாடல்களில் உழைக்கும் தொழிலாளர் குரல் ஒலிக்கக் காணலாம். எம்ஜிஆரும் இதுமாதிரி கருத்தமைந்த பாடல்களை தனது படங்களில் இருப்பதை விரும்பினார். மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எம்ஜிஆர் நடித்த திருடாதே என்ற படத்திற்காக, எழுதிய ஒரு பாடல் திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்து விடாதே . இதில் அவர்,

கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!

என்ற தனது கனவினைச் சொல்லுகிறார்.

கவிஞர் கண்ணதாசனும் எம்ஜிஆரும் திரைப்பட உலகில் நண்பர்களாக இருந்து பிரிந்தவர்கள். அப்புறம் இருவரும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். எம்ஜிஆர் படம் ஒன்றினுக்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது.

ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

            - (படம்: பணக்கார குடும்பம்) 

எம்ஜிஆருக்காகவே பல சிறப்பான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. பாடல்களை எழுதியது வாலி என்றாலும், எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள் என்றே அவற்றை வெளியிட்டார்கள். மீனவராக வந்து எம்ஜிஆர் மக்களை கவர்ந்த படம் ‘படகோட்டி. அந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கைச் சூழலை “கரைமேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்  என்ற பாடலில் கவிஞர் வாலி எளிமையாககச் சொல்லி உள்ளம் நெகிழ வைத்தார். அந்த படத்தில்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

என்று தொடங்கும் பாடலில் 

எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

என்று முத்தாய்ப்பாக சொல்லுகிறார்.

சிவப்பு மல்லி:

1980 இல் ஆந்திராவில் ஒரு தெலுங்கு படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக, சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் எர்ர மல்லி . ஆந்திர மாநிலக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய படம். ... ... ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்குத் தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து ‘சிவப்பு மல்லி என்ற படத்தை 1981 இல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் ராம.நாராயணன். ….   ‘சிவப்பு மல்லி படத்தில் செங்கொடிகளுடன் ஊர்வலம். ஓர் பாடல். பாரதிராஜா இளையராஜாவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் பல்லவியில்

ரத்தச் சாட்டை எடுத்தால் கையை
நெரிக்கும் விலங்கு தெறிக்கும்

என்ற வரிகளை , சென்னை சென்சார் போர்டார் நீக்கச் செய்தார்கள். “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் என்பதாகப் படத்தில் அந்த வரிகள் மாற்றப்பட்டன. ( தகவல்: நன்றி அறந்தை நாராயணன் - “தமிழ் சினிமாவின் கதை  பக்கம் 714 & 716 தமிழ் சினிமாவின் ஆரம்ப கால வரலாற்றை அறிய விரும்பும் நண்பர்கள் இந்த நூலை அவசியம் படிக்கவும்). 


விஜயகாந்த், அருணா, சந்திரசேகர் நடித்த சிவப்பு மல்லி என்ற படத்தில் வந்த,  இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK )


பாடல் வரிகள்:

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்

சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டி விட்டது
உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமை கையை கட்டி விட்டது
கண்ணீர் ஊற்று விட்டது
ரத்தம் இங்கே வேர்வையாக கொட்டி விட்டது
உயிர் வற்றி விட்டது
காலம் இங்கே ஊமை கையை கட்டி விட்டது
கண்ணீர் ஊற்று விட்டது

ஏரு பிடித்தவர்
இரும்பை இளைத்தவர்
வேர்வை விதைத்தவர்
பயிரை அறுத்தவர்
தட்டி கேட்ட்கும் காலம் வந்தால்
தர்மங்கள் தூங்காது

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர்சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எரிமிசம் என்பதை எட்டிவிடு
எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்
விதிவசம் என்பதை விட்டுவிடு
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எரிமிசம் என்பதை எட்டிவிடு
காலம் சுருண்டு படுக்கும்
நம் கண்ணீர் துளியை துடைக்கும்
காலம் சுருண்டு படுக்கும்
நம் கண்ணீர் துளியை துடைக்கும்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர்சீதனம்

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஏழை வர்க்கம் வேர்வைகுள்ளே முத்து குளிக்கும்
பின்பு செத்து பிழைக்கும்
உழவன் வீட்டு தேனும் கூட உப்பு கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்
ஏழை வர்க்கம் வேர்வைகுள்ளே முத்து குளிக்கும்
பின்பு செத்து பிழைக்கும்
உழவன் வீட்டு தேனும் கூட உப்பு கரிக்கும்
அதில் கண்ணீர் மிதக்கும்
நெருப்பென உழைத்தவர்
வரப்பென இளைத்தவர்
சுட சுட அழுதவர்
அடிக்கடி மிரண்டவர்
வெற்றி சங்கு ஊதும் போது
தர்மங்கள் கொண்டாடு

எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

மே தினம் உழைப்பவர் சீதனம்
மே தினம் உழைப்பவர் சீதனம்

   - பாடல் கவிஞர் வைரமுத்து

                              
                                ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )

  

35 comments:

  1. 250ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். மே தினத்தன்று தங்களது உழைப்பின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது இப்பதிவு. மே தின விளக்கம், கவிதை, திரைப்படம் என்ற நிலையில் அருமையான பதிவு. தொடர்ந்து மென்மேலும் உங்களது பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    250வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேதினக்கவிதைகள் ஏனைய விடயங்கள் எல்லாம் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.
    இனிய மேதின வாழ்த்துக்கள். த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..

    திரைப்படப் பாடல்களின் வழியே - பதிவினை அமைத்தது இனிமை!..
    மேலும் பல நூறு பதிவுகளை வழங்க வேண்டிக் கொள்கின்றேன்..

    (எழுத்துப் பிழையானது..அதனால் மீண்டும் ..)

    ReplyDelete
  4. மே தினத்துக்கு ஏற்ப படப் பாடல்களைத் தேர்வு செய்து பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள்250 என்பது ஒரு குறியீடே. மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மே தினத்திற்கு பொருத்தமான பாடல்களை தொகுத்து அளித்தமைக்கு நன்றி! 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. மிக அருமையான பொருத்தமான பாடல்களுடன் ‘மே’ தினத்திற்கு அற்புதமான பதிவினைக்கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஆஹா ! 250வது பதிவா !! சந்தோஷம். இப்போது தான் கீழேயுள்ள அதனைப்பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். ஸ்பெஷல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. Best wishes on your 250th blog. Hope you publish your 1000th soon.

    Jayakumar

    ReplyDelete
  9. உங்கள் 250 வது பதிவு ,மே தின சிறப்பு பதிவாய் அமைந்து இருப்பது சாலப் பொருத்தமே !

    ReplyDelete
  10. பாடல் தொகுப்பு அருமை!
    உங்கள் 250 வது பதிவு மேலும் வளர வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. மறுமொழி> Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி> ரூபன் said...

    தொடர்ந்து, எனக்கு உற்சாகம் தரும் பின்னூட்டம் தந்து ஊக்குவிக்கும் கவிஞருக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி> துரை செல்வராஜூ said...

    நான் ஆன்மீகம் எழுதினாலும், சினிமா பற்றி எழுதினாலும் எனக்கு நல்லாதரவு தந்து வரும், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி> G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    எனக்கு தொடர்ந்து நல்லாதரவும், கட்டுரைகளில் தேவையான சுட்டிக் காட்டுதல்களும் தந்து நெறிப்படுத்தும் அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2 )

    மரியாதைக்குரிய மூத்த வலைப்பதிவர் திரு V.G. K அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. முதலில் 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    பல்லாயிரம் பதிவுகள் பகிர வேண்டும்
    தொடர்ந்து எழுதுங்கள்

    உழைப்பாளர் நாள் பதிவு
    சிறப்பாக அமைந்து இருக்கிறது
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

  18. மறுமொழி> jk22384 said...

    // Best wishes on your 250th blog. Hope you publish your 1000th soon.
    Jayakumar //

    சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. மறுமொழி> Bagawanjee KA said...

    // உங்கள் 250 வது பதிவு ,மே தின சிறப்பு பதிவாய் அமைந்து இருப்பது சாலப் பொருத்தமே ! //

    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவிற்கு நன்றி.

    ReplyDelete
  21. உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
  22. 250 வது பதிவுக்கு வாழ்த்துக்களும், உழைப்பாளர் தின வாழ்த்துக்களும் நண்பரே
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  23. 250 பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    அனைத்து பாடல்களும் அருமை... சில பாடல்கள் உற்சாகம் தருபவை....

    உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. 250வது பதிவிற்கும் உழைப்பாளர் தினத்திற்குமாய் வாழ்த்துக்கள்! உழைப்பின் சிறப்பை உணர்த்தும் பாடல் வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி. மே தினத்திற்குப் பொருத்தமான இலக்கிய மேற்கோள்கள் எடுத்து எழுதுவதாக இருந்தேன். இயலவில்லை. எனவே அவசரத்திற்கு எழுதிய பதிவு. இருந்தாலும் பாடல்கள் உணர்ர்சி மயமானவை.

    ReplyDelete
  28. மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  29. 250 பதிவும் அருமை. இந்தியாவில் மே தினம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஆயின் இங்குள்ள தொழில் சங்கங்கள் அந்த அளவு ஈடுபாடு காட்டுவதில்லை. உழைப்பாளி மகிழ்ந்தால் உற்பத்தி பெருகும் என எவருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில், பழைய பாடல்கள் மூலம் மே தின விளக்கம் மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete
  30. 250வது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

    உழைப்பாளர் தினத்துக்காக முத்து முத்தான பாடல்கள்! தேர்வு மிக அருமை!

    ReplyDelete
  31. மறுமொழி> Paramasivam said...

    அய்யா பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி> மனோ சாமிநாதன் said...

    சகோதரி அவர்களின் முத்தான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. பெரும்பாலும் உங்கள் கட்டுரைகள் அதன் உழைப்பு அனைத்தும் ஒரு பிஹெச்டி கட்டுரை சமர்பிப்பது போல உள்ளது. தெளிவான முயற்சிக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete

  34. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர்said...

    // பெரும்பாலும் உங்கள் கட்டுரைகள் அதன் உழைப்பு அனைத்தும் ஒரு பிஹெச்டி கட்டுரை சமர்பிப்பது போல உள்ளது. தெளிவான முயற்சிக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துகள். //

    ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete