Friday, 24 April 2015

கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்.



இலக்கிய உலகில் சர்ச்சை என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். அஞ்சு தமிழ்ப் புலவர்கள் இருக்கும் இடத்தில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் தேவைப்படும் என்று கிண்டலடித்த காலமும் உண்டு. அதாவது அந்த அளவிற்கு அவர்களுக்கு இடையில் வாதங்கள் அனல் பறக்கும் என்பதுதான். அந்த வகையில் இப்போது சிக்கி இருப்பவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். கவிஞருக்கு என்று இருக்கும் புகழ் மற்றும் மரியாதைக்கு அவர் தானாக விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். 

     (ஒரு விழாவில் கமல்ஹாஸன், ஜெயகாந்தன், வைரமுத்து) 

குமுதத்தில் வந்த கடிதம்:

கவிஞர் வைரமுத்துவும், மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனும் இலக்கிய நண்பர்கள். இலக்கிய உலகில் ஒரு எழுத்தாளரின்  நூலுக்கு இன்னொரு எழுத்தாளர் பாராட்டி அணிந்துரை தந்து கொள்வது என்பது புதிய விஷயமன்று. அந்த வகையில், குமுதம் (27.04.2015) வார இதழில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகளை ஜெயகாந்தன் பாராட்டி எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. அத்தோடு அதுதான் ஜெயகாந்தனின் கடைசி எழுத்தும் என்று சொல்லி இருந்தார்கள்.



 
பேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் :

விஷயம் அத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இது விஷயமாக எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி அவர்கள், அப்படி ஒரு கடிதம் அப்பா எழுதவில்லை, அப்பாவே பாராட்டி கையெழுத்து போட்டது போன்று வெளியிட்டு விட்டார்கள் என்பதாகும். இதற்கு அவர் சொல்லும் காரணம், கடந்த ஓராண்டு காலமாகவே எழுத்தாளர் ஜெயகாந்தன் எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளவோ எழுதவோ அல்லது வாசிக்கவோ முடியாத நிலையில் இருந்தார் என்பதுதான். தீபா லட்சுமி அவர்கள் தனது பேஸ்புக்கில் (FACEBOOK) https://www.facebook.com/deepajoe கொடுத்த விளக்கம் இது.


கேட்டு வாங்கும் பாராட்டுக்கள்:

சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்  என்ற தலைப்பினில் (http://mvnandhini.com/2015/04/22 )ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காலம் காலமாக நடந்துவரும், இதழியல் துறை சாராத, மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். சகோதரி மு.வி.நந்தினி அவர்கள் எழுத்தாளர், வலைப்பதிவர் மற்றும் ஊடக பணியில் ஒன்பதாவது ஆண்டினை எட்டி இருப்பவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. அவர் மேலே சொன்ன தனது பதிவினில்,

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்

என்று கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதில் நான் எழுதிய கருத்துரை இது.


 மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

// காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

இலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ? தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.
  
எனவே கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக்  கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்.

                    ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




36 comments:

  1. எனது Fb -யிலும் இந்த தகவல் வந்தது..

    இப்படி ஒரு நடை முறை தெரியாத - ஜெயகாந்தனின் மகள் தீப லட்சுமி - என்பது ஆச்சரியம்..

    //...பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது!?...//

    கூனிக் குறுகிச் செல்ல - இப்படியும் ஒரு குறுக்கு வழி!..

    ReplyDelete
  2. // காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

    அப்படியானால் - நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா?...

    ஒரு குறிப்பு:- இந்த குமுதம் வாசிப்பதை நிறுத்தி இருபது ஆண்டுகளாகின்றன..

    ReplyDelete
  3. பாராட்டு அல்ல... இழுக்கு...!

    ReplyDelete
  4. For any book (literature/science), it's author will get somebody letter to publicize it. But the way kumudam did in this case is dirty. Because jeyakantan was in dead bed as his daughter said.

    ReplyDelete
  5. தாங்கள் கூறுவதுபோல் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும். விளக்குவார் என நம்புவோம்.

    ReplyDelete
  6. மறுமொழி> துரை செல்வராஜூ said... ( 1 )

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // எனது Fb -யிலும் இந்த தகவல் வந்தது.. இப்படி ஒரு நடை முறை தெரியாத - ஜெயகாந்தனின் மகள் தீப லட்சுமி - என்பது ஆச்சரியம்..//

    இந்த நடைமுறை சகோதரி மு.வி.நந்தினியின் பதிவினைப் படித்த பிறகே நிறையபேருக்கு தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன். இருந்தாலும் படிக்கவே முடியாத ஒருவர் படிப்பது போன்று புகைப்படம் எடுத்து வெளியிட்டமை உறுத்தலான விஷயம்தான்.

    XXX //...பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது!?...//
    கூனிக் குறுகிச் செல்ல - இப்படியும் ஒரு குறுக்கு வழி!.. // XXX

    எல்லோருடைய நூல்களிலும் (நமது பதிவர்கள் வெளியிட்ட நூல்களிலும்) அவரவருக்குத் தெரிந்த பிரபலங்களிடம் அவர்கள் கைப்படவே எழுதி வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். இது தவறு இல்லை.


    ReplyDelete
  7. மறுமொழி> துரை செல்வராஜூ said... ( 2 )

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    XXX // காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

    அப்படியானால் - நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோமா?... XXX

    இது ஒரு நடைமுறை அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். நீங்களோ நானோ எழுத்தாளரின் எழுத்தில் உள்ள சரக்கைதான் பார்ப்போம்.

    ReplyDelete
  8. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. மறுமொழி> NewWorldOrder said...

    // For any book (literature/science), it's author will get somebody letter to publicize it. But the way kumudam did in this case is dirty. Because jeyakantan was in dead bed as his daughter said. //

    I agree with you. I have also mentioned this in my reply to Durai Selvaraju. Thank you for your comments, sir!

    ReplyDelete
  10. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // தாங்கள் கூறுவதுபோல் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும். விளக்குவார் என நம்புவோம். //

    யாரோ ஒருவர் செய்த ஆர்வக் கோளாறு தூண்டுதலில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சிக்கி விட்டார் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. உங்களது கருத்தும் நந்தினி அவர்களின் பார்வையும் சரியே.இந்த சர்ச்சையின் மூலம்தான் ஜேகே அவர்களுக்கு மகள் இருப்பதே பலபேர்களுக்கு தெரிய வந்தது.கவிஞர் விளம்பரம் தேடினாரோ இல்லையோ ஜேகே அவர்களின் மகள் தேடிவிட்டார்.அடிமனதில் இருக்கும் சாதிசார்ந்த வெறுப்புணர்வே இளையராசாவோ வைரமுத்துவோ சிவாஜியோ ஏ ஆர் ரஹ்மாநோ சர்ச்சையில் சிக்கும்போது தரம் தாழ்ந்து விமர்சிக்க காரணம்.இத்தகைய போக்கு மாறவேண்டும்.
    மறத்த்மிழன்

    ReplyDelete
  12. வைரமுத்து மவுனம் கலைத்தால்தான் உண்மை பிறக்கும்.

    ReplyDelete
  13. மறுமொழி> Anonymous said...

    அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி> S.P. Senthil Kumar said...

    சகோதரர் S.P. செந்தில் குமார் அவர்களின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. இந்த சலசலப்புக்கள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாகிவிட்டது! இரு பிரபலங்கள் இப்படித்தான் பிரபலமாகவேண்டுமா? மவுனம் கலைவாரா வைரமுத்து! காத்திருப்போம்!

    ReplyDelete
  16. பத்திரிக்கை உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறதுவைர முத்துவை ஜெயகாந்தன் பாராட்டவில்லை என்றா கூறுகிறார்கள் வைர முத்துவே மௌனம் கலைத்தாலும் அதன் நம்பகத்தன்மையும் கேள்வி கேட்கப்படும் இருவரில் ஒருவர் மறைந்து விட்டாரே.

    ReplyDelete
  17. மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இன்னொரு சலசலப்பு வந்ததும் இதுவும் மறக்கப் பட்டு விடும்.

    ReplyDelete
  18. மறுமொழி> G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // பத்திரிக்கை உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது//

    பத்திரிகைகள் என்றாலே இப்போது பரபரப்புதானே.

    //வைரமுத்துவை ஜெயகாந்தன் பாராட்டவில்லை என்றா கூறுகிறார்கள் வைர முத்துவே மௌனம் கலைத்தாலும் அதன் நம்பகத்தன்மையும் கேள்வி கேட்கப்படும் இருவரில் ஒருவர் மறைந்து விட்டாரே. //

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான்.

    நரசிம்மராவ் பல பிரச்சினைகளை தனது மவுனத்தினாலேயே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

    ReplyDelete
  19. வைரமுத்துவின் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது .
    ஜெயகாந்தன் சமீபத்தில் கூட புதிய தலை முறையில் சுய சரிதைத் தொடர் எழுதித்தான் வந்தார். அதுவும் அவருக்கு தெரியாமல் எழுதப் பட்டிருக்குமா? எனபது தெரியவில்லை. ஆனால் வைரமுத்து சிறுகதைகளை பிரபலப் படுத்த குமுதம் முயற்சிகள் எடுத்து வருகிறது என்பது உண்மை. இவை பற்றி குமுதத்தில் சில பிரபலங்களின் கலந்துரையாடல் இரண்டு வாரங்களாக வெளி வந்தது.
    உண்மையில் கட்டாயப் படுத்தி வாழ்த்து பெற்றிருந்தால் அது நிச்சயம் வைரமுத்துவுக்கு பெருமை சேர்க்காது.

    ReplyDelete
  20. தங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே நான் அனைத்து விஷயங்களையும் ஓரளவுக்கு அறிந்துகொண்டுள்ளேன். இவை அனைத்துமே எனக்குப் புதிய செய்திகள் மட்டுமே.

    மிகப்பெரிய சர்ச்சைக்குரிய பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. வணக்கம்
    ஐயா
    இந்த தகவலை நான் படித்தேன். சில நாட்கள். எல்லாவற்றுக்கும் வைரமுத்து வாய் திறந்தால் பதில் கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. மௌனம் தான் கலைத்தாரே ... அதை பற்றி அடியேனின் தளத்தில் எழுதிள்ளேன்.

    ReplyDelete
  23. மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் > மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.. தங்களின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.

    // தங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே நான் அனைத்து விஷயங்களையும் ஓரளவுக்கு அறிந்துகொண்டுள்ளேன். இவை அனைத்துமே எனக்குப் புதிய செய்திகள் மட்டுமே.
    மிகப்பெரிய சர்ச்சைக்குரிய பகிர்வுக்கு நன்றிகள். //

    சர்ச்சைக்குரிய பதிவுதான். எழுத்து சம்பந்தப்பட்டது என்பதனால் எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  25. மறுமொழி> ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு காலை வணக்கம்!

    // ஐயா இந்த தகவலை நான் படித்தேன். சில நாட்கள். எல்லாவற்றுக்கும் வைரமுத்து வாய் திறந்தால் பதில் கிடைக்கும்.பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம3 //

    சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி> RJ விசுAwesome said...

    அன்பு சகோதரர் RJ விசுAwesome அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.


    // மௌனம் தான் கலைத்தாரே ... அதை பற்றி அடியேனின் தளத்தில் எழுதிள்ளேன். //

    நேற்று இரவே, படுக்கப் போகும் முன், உங்களுடைய இந்த பதிவினைப் படித்து விட்டேன். மீண்டும் விரைவில் உங்கள் தளம் வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  27. சில நடிகர்கள் தாம் நடித்த திரைப்படம் வெளியாகும் முன் செயற்கையாக ஒரு சர்ச்சையை உண்டாக்கி விளம்பரம் தேடிக்கொள்வர். அவ்வாறே இது ஒருவகையான விளம்பரம் தேடல் உத்தியே.

    ReplyDelete
  28. என்னவோ போங்க! இந்த மாதிரி சர்ச்சைகள் ஊடகங்களில் மிகவும் பிரபலம். இந்த சர்ச்சைகள் நல்ல முடிவைத் தருகின்றனவா, இல்லையா என்பதை விட நல்லதொரு விளம்பரமாக உதவுகின்றது. அதுவரை யாரென்றே அறிந்திராத பலரதுமுகங்கள் தெரிய வருகின்றன. இதுதான் நிதர்சனம்.

    கேட்டு வாங்கிப் பெற்றுதான் ஒரு தொடரைப் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் அதை விட மோசமானது எதுவுமில்லை....இகழ்வே!

    ReplyDelete
  29. வைரமுத்துவின் மெளனம் கலையும் சூழ்நிலை இல்லை,தொடரைப் பிரபலப்ப்படுத்த பிரபலங்களின் விமர்சனத்தை கேட்டு வாங்குவது உசிதமாகப் படவில்லை

    ReplyDelete
  30. வாழ்த்துச் செய்தியினைக் கேட்டுப் பெறுவதில் த்வறில்லை
    ஆனால் கொடுக்கப் படாத வாழத்துச் செய்தியை, படித்தார் மகிழ்ந்தார், கடைசி கடிதம் என ஆவணப் படுத்தும் முயற்சி தவறாகத் தெரிகிறது
    தம +1

    ReplyDelete
  31. மறுமொழி> Dr B Jambulingam said...

    முனைவர் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...

    ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  33. மறுமொழி> வர்மா said...

    // வைரமுத்துவின் மெளனம் கலையும் சூழ்நிலை இல்லை,தொடரைப் பிரபலப்ப்படுத்த பிரபலங்களின் விமர்சனத்தை கேட்டு வாங்குவது உசிதமாகப் படவில்லை //

    சகோதரர் வர்மா அவர்கள் சொல்வது சரிதான். அவர் இதனைப் பற்றி ஒன்றும் சொல்லாது அப்படியே வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதில் சென்றுவிடுவார் என்று நினைக்கிறேன். கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // வாழ்த்துச் செய்தியினைக் கேட்டுப் பெறுவதில் தவறில்லை
    ஆனால் கொடுக்கப் படாத வாழத்துச் செய்தியை, படித்தார் மகிழ்ந்தார், கடைசி கடிதம் என ஆவணப் படுத்தும் முயற்சி தவறாகத் தெரிகிறது தம +1 //

    இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. கையில் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு படம் எடுக்கும் போது அங்குள்ள யாரும் ஏன் தடுக்கவில்லை என்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  35. "கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது மவுனத்தைக் கலைத்து உண்மை என்ன என்பதனை விளக்க வேண்டும் எது எப்படியோ பேஸ்புக்கில் வலம் வந்த ஜெயகாந்தன் மகளை ஊடகங்கள் இனிமேல் பிரபலமாக்கி விடும்." என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

    சகோதரி மு.வி.நந்தினி அவர்களின் ”குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான்” என்ற கருத்தையும் வரவேற்கிறேன்.

    சர்ச்சையில் சிக்க வைப்போரும் சிக்குவோரும் இருப்பது தொடர்கதை தான். சர்ச்சையைத் தொடரவிடாமல் தடுப்பது சர்ச்சைக்கு உள்ளாவோரின் பதிலில் தான் இருக்கிறது.

    ReplyDelete
  36. வைரமுத்துவுக்கு இதற்கு மேலாக புகழ் வேண்டுமா?

    ReplyDelete