Saturday 25 April 2015

கடந்த 20 வருடங்களில் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை



இண்டர்நெட்டில் அடிக்கடி பழைய சமாச்சாரங்களையும் தோண்டி எடுத்து பார்ப்பது வழக்கம். அப்படித்தான் ஒருமுறை பார்த்து கொண்டு இருந்த போது  கடந்த 86 வருடங்களில் தங்கம் என்ன விலைக்கு விற்றது என்ற பட்டியல் கிடைத்தது. அதனை மையமாக வைத்து தங்கம் விலை – 86 வருட பட்டியல். என்ற ஒரு பதிவினை http://tthamizhelango.blogspot.com/2012/10/86.html வெளியிட்டேன். வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. COPY & PASTE பதிவர்கள் அந்த பதிவினை அப்படியே அல்லது தங்களுக்கு தகுந்தவாறு மாற்றியோ தங்கள் தளங்களில் வெளியிட்டுக் கொண்டார்கள்.

சென்ற மாதம் சில காரணங்களை முன்னிட்டு இண்டர்நெட்டில் வாகன வேட்டை நடத்தியபோது, எல்லோரும் பயன்படுத்தும் பெட்ரோல். கெரசின், டீசல் மற்றும் எல்பிஜி (எரிவாயு) ஆகியவற்றின் (1989.ஏப்ரல் முதல் ஜூன்.2010 வரை உண்டான) விலைப் பட்டியல் கிடைத்தது. (நன்றி: REUTERS) இதனை வலைப்பதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

TABLE-Fuel prices in India's capital since 1989

YEAR        PETROL  KEROSENE    DIESEL     LPG  
 --------------------------------------------------
 Apr 1  1989     8.50    2.25       3.50      57.60
 Mar 20 1990     9.84     --        4.08       -- 
 Oct 15 1990    12.23    2.77       5.05       -- 
 Jul 25 1991    14.62    2.52        --       67.90
 Sep 16 1992    15.71     --        6.11      82.75
 Jan 12 1994      --      --         --       98.30
 Jan 14 1994      --      --         --       93.05
 Feb 02 1994    16.78     --        6.98       -- 
 Jul 03 1996    21.13     --        9.04     119.95
 Jul 07 1996      --      --        8.02       -- 
 Sep 02 1997    22.84     --       10.34     136.00
 Nov 07 1997      --      --       10.29       -- 
 Dec 12 1997      --      --       10.39       -- 
 Mar 01 1998      --      --       10.25       -- 
 Apr 04 1998      --      --       10.01       -- 
 May 20 1998      --      --        9.87       -- 
 Jun 03 1998    23.94     --         --        -- 
 Jan 09 1999      --      --        8.89       -- 
 Feb 01 1999      --      --         --      152.00
 Feb 28 1999    23.80     --        9.94     146.00
 Apr 20 1999      --      --       10.37       -- 
 Oct 06 1999      --      --       13.91       -- 
 Jan 15 2000#   25.94     --       14.04       -- 
 Mar 23 2000      --     5.55        --      196.55
 Apr 03 2000*   26.07     --         --        -- 
 Sep 30 2000    28.44    8.35      16.55     232.25
 Nov 03 2000**  28.70     --         --        -- 
 Nov 22 2000      --     7.35        --      222.25
 Mar 03 2001***   --      --       17.06       -- 
 Jan 12 2002    27.54     --       17.09       -- 
 Mar 01 2002    26.54    8.98      16.59     259.95
 Mar 17 2002      --      --         --      240.45
 Jun 04 2002    28.94     --       17.99       -- 
 Jun 16 2002    29.18     --       18.23       -- 
 Aug 16 2002    29.00     --       18.05       -- 
 Sep 01 2002    29.20     --        8.34       -- 
 Sep 16 2002    29.66     --       18.68       -- 
 Oct 01 2002    29.91     --       18.91       -- 
 Oct 17 2002    30.24     --       19.23       -- 
 Nov 01 2002    30.26     --       19.25     241.20
 Nov 16 2002    29.57     --       18.57       -- 
 Dec 01 2002    28.91     --       18.06       -- 
 Jan 03 2003    29.93     --       19.07       -- 
 Jan 16 2003    30.33     --       19.47       -- 
 Feb 01 2003    30.71     --       19.84       -- 
 Mar 01 2003    32.10     --       21.21       -- 
 Mar 16 2003    33.49     --       22.12       -- 
 Apr 16 2003    32.49     --       21.12       -- 
 Apr 27 2003    31.49     --       20.12       -- 
 May 01 2003    31.50     --       20.13       -- 
 May 16 2003    30.40     --       19.18       -- 
 Jun 01 2003    30.30     --       19.08       -- 
 Jun 26 2003     --      9.01        --        -- 
 Sep 01 2003    32.40     --       20.33       -- 
 Oct 01 2003     --       --         --      241.60
 Oct 16 2003    31.70     --       19.73       -- 
 Dec 16 2003    32.70     --       20.73       -- 
 Jan 01 2004    33.70     --       21.73       -- 
 Mar 01 2004    33.71     --       21.74       -- 
 Jun 16 2004    35.71     --       22.74     261.60
 Aug 01 2004    36.81     --       24.16       -- 
 Nov 05 2004    39.00     --       26.28     281.60
 Nov 16 2004    37.84     --         --        -- 
 Jun 21 2005    40.49     --       28.45       -- 
 Jun 25 2005      --     9.08        --        -- 
 Sep 07 2005    43.49     --       30.45       -- 
 Apr 01 2006    43.51     --       30.47       -- 
 May 25 2006      --     9.09        --        -- 
 Jun 06 2006    47.51     --       32.47       -- 
 Nov 30 2006    44.85     --       31.25       -- 
 Feb 16 2007    42.85     --       30.25       -- 
 Mar 01 2007    42.85     --       30.25       -- 
 Jun 06 2007    43.52     --       30.48       -- 
 Sep 27 2007      --     9.16        --        -- 
 Feb 15 2008    45.52     --       31.76       -- 
 May 24 2008    45.56     --       31.80       -- 
 Jun 05 2008    50.56     --       34.80     346.30##
 Jul 18 2008    50.62     --       34.86       -- 
 Sep 12 2008     --      9.22        --        -- 
 Dec 06 2008    45.62     --       32.86       -- 
 Jan 29 2009    40.62     --       30.86     279.70
 Jul 02 2009    44.63     --       32.87     281.20
 Oct 27 2009    44.72     --       32.92       -- 
 Feb 27 2010    47.43     --       35.47       -- 
 Apr 01 2010### 47.93     --       38.10@    310.35@
 Jun 26 2010    51.43    12.22     40.10     345.35

NOTE: Petrol, diesel and  kerosene prices are in rupees per litre, while LPG prices are per cylinder of 14.2 kilograms.
COURTESY:



                      ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )




27 comments:

  1. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கள் என்பன எப்பொழுது நம் பொருளாதாரத் தளத்திற்குள் நுழைந்ததோ அப்போதே இவை போன்ற நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன. வேறு வழியில்லை. அனைத்து சிரமங்களையும் நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

    ReplyDelete
  2. 20 வருடங்களில் கூடியது இன்னும் ஐந்தே வருடங்களில் கூடலாம்...!

    ReplyDelete
  3. நம் நாட்டவர்கள் டாலரில் சம்பளம் பெற தொடங்கிவிட்டார்கள். இனி டாலரில் செலவு செய்ய வேண்டியத்தானே. என்னவொரு சங்கடம் டாலரில் சம்பளம் வாங்குபவர்கள் வெறும் 3% தான். செலவு செய்பவர்கள் அனைவரும் என்பதுதான் கொடுமை.
    த ம 3

    ReplyDelete
  4. விலை வாசி உயர்வு பயப்படுத்துகிறது.

    ReplyDelete
  5. எனக்கு நான் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. ஐந்துக்கும் குறைவாக வாங்கிய நினைவு. விலை வாசி உயர்வு பற்றிக் கூறும்போது அப்போதிருந்த வரவு பற்றியும் கூறவேண்டும் 1990 ல் ரூ.ஆயிரம் வாங்கியோர் இன்று வாங்கும் சம்பளம்கணிசமாகக் கூடி இருப்பதும் மறுக்க முடியாது. என்ன வித்தியாசம் என்றால் விலைவாசி கூடி இருக்கும் அளவு சம்பளம் கூடவில்லை. செந்தில் குமார் எழுதி இருப்பதையும் கவனிக்க வேண்டும் வசதி இருப்பவர்கள் மேலும் வசதி பெறுகிறார்கள் ஏற்றதாழ்வுகள் கூடுகின்றது

    ReplyDelete
  6. 1968 இல் [எனக்கு அப்போது 17-18 வயது மட்டுமே] நான் ஒரு தனியார் நிறுவன முதலாளியிடம் வேலை பார்த்து வந்தேன். அவருக்கு பல இடங்களில் பல வியாபாரங்கள். அதில் ஒரு ESSO PETROL BUNK கும் உண்டு.

    எனக்கான பல வேலைகளில் தினமும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள், மேற்படி பெட்ரோல் பங்க்குப் போய் கணக்குகளை சரி பார்க்க வேண்டும். பெட்ரோல், டீசல், என்ஜின் ஆயில், மேலும் அங்குள்ள வேறுசில வியாபாரப் பொருட்களை தினமும் நான் ஸ்டாக் எடுத்து, முதல் நாள் ஸ்டாக் + மறுநாள் ஸ்டாக், இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை, ஒழுங்காக பில் போட்டு கணக்கில் கொண்டு வந்துள்ளார்களா என நான் போய் ஆடிட் செய்ய வேண்டும்.

    அப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் விலை :
    ONE RUPEE & ONE PAISE ONLY.
    ரூ. 1-01 மட்டுமே.

    டீசல் ஒரு லிட்டர் விலை
    வெறும் 65 நயாபைசாக்கள் மட்டுமே.
    ரூ. 0-65

    லாரிகளுக்கு காற்று அடிக்கவும், 25 பைசாக்கள் வாங்கி அதற்கும் வண்டி நம்பருடன் பில் போட வேண்டும் என்பதும் முதலாளியின் கட்டளை. இதில் மட்டும் அங்குள்ளவர்கள் கொஞ்சம் தில்லுமுல்லு செய்வார்கள். தினமும் சும்மாவாவது பெயருக்கு ஒரு 7-8 பில் மட்டுமே போடுவார்கள். மீதி வசூலைத் தங்கள் பையில் போட்டுக்கொள்வார்கள். :)

    அதையெல்லாம் மிகச்சரியாக ஆடிட் செய்யவே முடியாது. ஏனெனில் நான் அங்கு இருப்பதோ தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே. அந்த நேரத்தில் வரும் லாரிகளுக்கு காற்றடித்தால் மட்டுமே, எனக்கு நேரில் உடனே பில் போடுவார்கள், அங்கு வேலை பார்த்த பையன்கள். :)

    விலைவாசி உயர்வுகள் பற்றிய தங்களின் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. விலை வாசி போற வேகம் கண்ணைக் கட்டுதே!

    ReplyDelete
  8. தகவல் களஞ்சியம் அருமை நண்பரே...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  9. 1970 ஆம் ஆண்டு வங்கியில் நான் சேர்ந்தபோது பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் பத்து காசுகள் மட்டுமே. அப்போது நான் வைத்திருந்த ஜாவா மோட்டார் சைக்கிளுக்கு 14 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாலே Tank நிரம்பிவிடும். 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று சொச்சமாக இருந்தது. ம்.ம். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வயிற்றெரிச்சல் தான் வரும். எனவே பழைய விலையை தற்போதைய விலையோடு ஒப்பிடாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  10. அட்டவணை அருமை. நன்றி.

    ReplyDelete
  11. ஒப்பீடு பல செய்திகளை உணர்த்துகிறது.
    நன்றி அய்யா.

    த ம கூடுதல் 1

    ReplyDelete
  12. மறுமொழி > Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // உலகமயமாக்கல், தனியார்மயமாக்கள் என்பன எப்பொழுது நம் பொருளாதாரத் தளத்திற்குள் நுழைந்ததோ அப்போதே இவை போன்ற நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன. வேறு வழியில்லை. அனைத்து சிரமங்களையும் நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். //

    உலகமயமாக்கல் என்ற பெயரில் மக்களை சுரண்டுவது அதிகமாகி வருவது வேதனைக்குரிய விஷயம்தான்.

    ReplyDelete
  13. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // 20 வருடங்களில் கூடியது இன்னும் ஐந்தே வருடங்களில் கூடலாம்...! //

    ஏறிய விலைவாசி இனிமேல் இறங்கப் போவதில்லை. நான் எனது சிறு வயதில் பத்து பைசாவுக்கு ஒரு டீயை கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது ஒரு டீ எட்டு ரூபாய் அல்லது பத்து ரூபாய்.

    கருத்துரை தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மறுமொழி > S.P. Senthil Kumar said...

    சகோதரர் S.P செந்தில் குமார் அவர்களது ‘டாலர்’ கருத்துரைக்கு நன்றி.

    //நம் நாட்டவர்கள் டாலரில் சம்பளம் பெற தொடங்கிவிட்டார்கள். இனி டாலரில் செலவு செய்ய வேண்டியத்தானே. என்னவொரு சங்கடம் டாலரில் சம்பளம் வாங்குபவர்கள் வெறும் 3% தான். செலவு செய்பவர்கள் அனைவரும் என்பதுதான் கொடுமை.
    த ம 3 //

    கடைசி வாக்கியத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. வாக்கியம் முற்றுப் பெறவில்லை.

    ReplyDelete
  15. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    // விலை வாசி உயர்வு பயப்படுத்துகிறது. //

    முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி > G.M Balasubramaniam said...

    G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    // எனக்கு நான் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. ஐந்துக்கும் குறைவாக வாங்கிய நினைவு. விலை வாசி உயர்வு பற்றிக் கூறும்போது அப்போதிருந்த வரவு பற்றியும் கூறவேண்டும் 1990 ல் ரூ.ஆயிரம் வாங்கியோர் இன்று வாங்கும் சம்பளம்கணிசமாகக் கூடி இருப்பதும் மறுக்க முடியாது. என்ன வித்தியாசம் என்றால் விலைவாசி கூடி இருக்கும் அளவு சம்பளம் கூடவில்லை.//

    நீங்கள் சொல்வது சரியான காரணம் அய்யா. வாங்கும் சம்பளத்தை விட விலைவாசி அதிகம் உயருகிறது. சம்பள உயர்வு என்பது எப்போதுமே எல்லா இடத்திலும் 10% தான். ஆனால் விலைவாசி உயர்வு என்பது 15% மேல் போய்விடும். அதிலும் இந்த பெட்ரோல் உயர்வு நமது பர்ஸை இளைக்க வைத்துவிடுகிறது.
    // செந்தில் குமார் எழுதி இருப்பதையும் கவனிக்க வேண்டும் வசதி இருப்பவர்கள் மேலும் வசதி பெறுகிறார்கள் ஏற்றதாழ்வுகள் கூடுகின்றது //

    ஆமாம் அய்யா! அவரவர் பொருளாதார தேவைக்கு ஏற்ப சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள்.

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அய்யா V.G.K அவர்களின், மலரும் நினைவுகளுடன் கூடிய நீண்ட கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சகலகலா வேலை தெரிந்தவர். எங்கள் ஸ்டேட் வங்கியிலும் வேலை பார்த்து இருக்கிறீர்கள். பெல்லில் சேருவதற்கு முன்பு இன்னும் என்னென்ன உத்தியோகம் பார்த்தீர்கள்?

    // அப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் விலை : ONE RUPEE & ONE PAISE ONLY. ரூ. 1-01 மட்டுமே. //

    ஆவென்று நான் வாயைப் பிளந்து ஆச்சரியம் அடைய வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  20. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதைப் போல, பழைய விலையை தற்போதைய விலையோடு ஒப்பிடாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  21. மறுமொழி >mageswari balachandran said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி. உங்கள் PROFILE- இல் இன்னும் கொஞ்சம் மேலதிக தகவல்கள் தந்தால் நல்லது.

    ReplyDelete
  22. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

    ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  23. 2004ல் 35 ரூபாய் விற்ற பெட்ரோல் 2014ல் பத்துவருடத்தில் இருமடங்காய் ரூ 70 ஐ தாண்டி தற்போது பத்து ரூபாய் குறைந்துள்ளது. இந்த பத்து வருடங்களில்தான் விலைவாசி மிகவும் கூடியுள்ளதாய் தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    கருத்துரை தந்த சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. இந்த புள்ளி விவரமெல்லாம் கம்பெனிகள் தருபவை. ஏழைபடும் பாட்டை யாரறிவார்?

    ReplyDelete
  25. விலையேற்றப் புள்ளி விபரம்
    பலரைச் சிந்திக்க வைக்குமே
    நம்மாளுகளின்
    வருவாயேற்றப் புள்ளி விபரம்
    இப்படி அதிகரிக்காதே!

    ReplyDelete
  26. அருமையான புள்ளிவிவரங்கள் அண்ணா....

    அந்த காலத்துக்கே போயிரலாம் போலிருக்கு...

    ReplyDelete
  27. பெட்ரோல் விலை குறித்து நீங்க கொடுத்துள்ள தகவல்கள் புதிது எனக்கு. நன்றி.

    ReplyDelete