Monday 6 October 2014

புதுக்கோட்டை - நா.முத்துநிலவன் நூல்கள் வெளியீடும் வலைப்பதிவர்கள் சந்திப்பும்



நேற்று ( 05.10.2014, ஞாயிறு ) மாலை, 6 மணி அளவில் புதுக்கோட்டை, நகர்மன்றத்தில், வலைப்பதிவரும் கவிஞரும் ஆன ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, கம்பன் தமிழும் கணினித் தமிழும்”,  மற்றும் “புதிய மரபுகள் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (புதுக்கோட்டை) சார்பாக நடைபெற்றது.


(படம் மேலே) விழா நடந்த புதுக்கோட்டை, நகர்மன்றம்

விழா தொடங்குவதற்கு முன்பு எடுதத புகைப்படங்களை இங்கு தந்துள்ளேன். மற்றைய முழு நிகழ்வுகளின் தொகுப்பை  ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் தனது பதிவினில் விவரமாகத் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.


(படங்கள் மேலே ) அரங்கம் நிறைந்த காட்சிகள்   

வரவேற்பு பலகைகள்:





நான் விழா நடக்கும் இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் (மாலை 5 மணிக்கு) முன்னதாகவே சென்று விட்டேன். எனவே அங்கு அரங்கத்தின் வாயிலில் இருந்த ப்ளக்ஸ் பேனர்களையும் அரங்கத்தின் உள்ளே எழுதி வைக்கப்பட்டு இருந்த கவிதை வரிகளையும் நன்கு ரசிக்க முடிந்தது. மேலும் கூட்டம் சேருவதற்கு முன்னரே அவற்றை படம் எடுக்கவும் முடிந்தது.





வலைப் பதிவர்கள்:

மேலும் அங்கு வந்து இருந்த வலைப் பதிவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது. உள்ளே சென்றவுடனேயே முதன் முதல் என்னை அன்புடன் வரவேற்றவர் விழாவின் மய்ய நாயகன், ஆசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்.

(படம் மேலே) நான் அய்யா முத்துநிலவன் அவர்களுடன்

(படம் மேலே) முதலில் நிற்பவர் முத்துநிலவன் அவர்களது மகள் லட்சியா, அடுத்து இருப்பவர் சுபாஷிணி (வலைப்பதிவர் மகாசுந்தர் மகள்)

புதுக்கோட்டை வலையுலகம் சார்ந்த விழா என்றாலே வலைத் தம்பதியினர் கஸ்தூரி ரெங்கன் (மலர்த்தரு), மைதிலி (மகிழ்நிறை) இருவரும் இல்லாமலா? இருவரும் தங்களது அன்புக் குழந்தைகளுடன் வந்து இருந்தனர். மேலும் வலைப் பதிவர்கள்  மு.கீதா( தென்றல்),  சுவாதி, மகா சுந்தர், ராசி பன்னீர் செல்வம், ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெங்களூரிலிருந்து சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் தனது கணவருடன் வந்து இருந்தார்.  தஞ்சை மண்ணிலிருந்து வந்த அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுடன் நீண்ட நேரம் மனம் விட்டு உரையாட முடிந்தது.


(படம் மேலே) லட்சியா, மு.கீதா, மல்லிகா முத்துநிலவன், தேன் மதுரத் தமிழ் கிரேஸ், முத்துநிலவன், கிரேசின் கணவர்

(படம் மேலே) நகர் மன்ற வாயிலில் கவிஞர் கவிவர்மன்,  ஆசிரியர் முத்துநிலவன், நா,மு.ஆர்.நீலா, மு.கீதா மற்றும் வரிசையாக மைதிலி அவர் கணவர் கஸ்தூரி ரெங்கன், இவர்களது குழந்தை மற்றும் நான்.

(படம் மேலே) நான், கவிஞர் நந்தலாலா (இரண்டாவதாக இருப்பவர்) முத்துநிலவன், ஸ்டாலின் சரவணன் ஆகியோருடன்.

ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களோடு எனது கேமராவில் நான் புகைப்படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே அவருடைய செல் போனில் எடுத்த படத்தை எனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு இருந்தேன், அவரும் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி!

கீழே படத்தினில் நான், கரந்தை ஜெயக்குமார், மைதிலி(தனது குழந்தைகளுடன்), கிரேஸ் தனது கணவருடன்,

(மேலே)படம் உதவி ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார்


ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் எனக்கு நேற்று ஒரு இனியநாள் ஆகும். எனது 200 ஆவது பதிவாக இந்த வலைப் பதிவு  அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி!

விழா நிகழ்ச்சிகளை சுருக்கமாக விவரித்து சகோதரி தென்றல் மு.கீதா அவர்கள் மற்றும் மணவை ஜேம்ஸ் ஆகியோர் எழுதிய பதிவுகளைக் காண்க!


http://manavaijamestamilpandit.blogspot.in/2014/10/blog-post_20.html



நூல்கள் வெளியீடு:
அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007

தொலைபேசி : 04362 239289
 


 


57 comments:

  1. விழாவினை நேரில் கண்டதைப் போன்ற மகிழ்ச்சி..

    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  2. தங்களின் வெற்றிகரமான 200வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  3. நேற்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான படங்களும், பதிவும் மிகவும் கலக்கலாக உள்ளன.
    விழாவினை தங்களுடனேயே நேரில் கண்டதைப் போன்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.


    >>>>>

    ReplyDelete
  4. அரங்கத்தின் உள்ளே எழுதி வைக்கப்பட்டு இருந்த கவிதை வரிகளைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளன. ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. தங்களது 200 ஆவது பதிவை ஒரு பிரபல வலைப்பதிவர் பற்றிய செய்தியோடு வெளியிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி! படங்களும் அருமை அவைகளில் எழுதப்பட்டிருந்த வரிகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி! தாங்கள் விரைவில் 1000 ஆவது பதிவை எட்ட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. தங்களின் 200ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.எனது பதிவை சுட்டியமைக்கு நன்றி.தகள் அனுமதியுடன் புகைப்படங்களை சுட்டுக்கொள்கின்றேன்..உங்களை எல்லாம் பார்த்த மகிழ்வில் நான் போட்டோ எடுக்கல..அதனால்...நன்றி சகோ..

    ReplyDelete
  7. நினைவில் நிற்கவைக்கும் படங்களுடனான 200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பல வலைப் பதிவ்ர்களை சந்திக்க முடிவது மகிழ்ச்சிதரும் விஷயமல்லவா,

    ReplyDelete
  8. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகைத் தந்த திருப்தியை தந்தது, தங்களது புகைபடமும் பதிவும்!.
    200வது பதிவுக்கு எனது வாழ்த்துகள்!.

    ReplyDelete
  9. பதிவர் விழா அதில் இளங்கோ சார் அவர்கள் கலந்து கொள்கிறார் என்றால் நிச்சயம் மிக தெளிவான
    பட விளக்கத்துடன் ஒரு பதிவு இருக்கும் என நினைத்து வந்த என்னை ஏமாற்றாமல் அழகாக தொகுத்து தந்த உங்களுக்கு பாராட்டுக்கள் உங்களின் 200 வது பதிவிற்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. அய்யா,
    உங்கள் நடையே நடை. எத்தனை தெளிவான விவரணை!!!! நேற்றைய நிகழ்ச்சிகளை கண்முன் கொண்டுவந்திருகிறது பதிவு!!!! கீதா அக்கா சொன்னது போல் எங்கள் புகைபடக்கருவிகளை நாங்கள் உபயோகிக்கவே இல்லை என்பதை விழா இப்போது தான் உணர்கிறோம்!! என்றாலும் நீங்கள் எங்களோடு சாப்பிடாமல் சென்றது மிக வருத்தமே:(( கிரேஸ் தோழியை வழியனுப்பிவிட்டு வந்து பார்த்தால் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக எங்களோடு உணவருந்த வேண்டும். இது இந்த சிறியவளின் அன்புகட்டளை. அப்புறம் என் பதிவுக்கு உங்கள் படங்களை சுட்டுவிட்டேன்:)) படித்துவிட்டு கருத்துச்சொல்லுங்கள். மீண்டும் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி!!

    ReplyDelete
  11. ஒரு சின்ன திருத்தம் அய்யா. நிலவன் அண்ணாவின் மகள் பெயர் லட்சியா!!!

    ReplyDelete
  12. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா.
    அரங்கப் படங்கள் எல்லாம் போட்டு அருமை ஐயா. வெளியே இருந்த போர்ட்களை படம் எடுக்க முடியவில்லை, இங்கிருந்து எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

    இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  13. சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3 )

    // தங்களின் வெற்றிகரமான 200வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

    அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களே நான் இன்று 200 ஆவது பதிவை எட்டி இருப்பதற்கு நீங்கள் எனக்களித்த ஊக்கமும் ஒரு காரணம். தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் பாராட்டிற்கும், விரைவில் 1000 ஆவது பதிவை எட்ட வாழ்த்தியமைக்கும் நன்றி! உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்!

    ReplyDelete
  17. மறுமொழி > Geetha M said... ( 1, 2 )

    // தங்களின் 200ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.எனது பதிவை சுட்டியமைக்கு நன்றி.//

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    // தங்கள் அனுமதியுடன் புகைப்படங்களை சுட்டுக் கொள்கின்றேன்..//

    மிக்க மகிழ்ச்சி சகோதரியாரே!
    // உங்களை எல்லாம் பார்த்த மகிழ்வில் நான் போட்டோ எடுக்கல..அதனால்...நன்றி சகோ.. //

    கூட்ட நெரிசலில், என்னாலும் அரங்கத்தினுள் நிறைய படங்கள் எடுக்க முடியாமல் போயிற்று.

    ReplyDelete
  18. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // நினைவில் நிற்கவைக்கும் படங்களுடனான 200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பல வலைப் பதிவ்ர்களை சந்திக்க முடிவது மகிழ்ச்சிதரும் விஷயமல்லவா, //

    அய்யா G.M.B அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! ஆம் அய்யா! பதிவர்களை சந்திப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியை விவரிக்க இயலாது.

    ReplyDelete
  19. மறுமொழி > தோழன் மபா, தமிழன் வீதி said...

    தோழன் மபா. தமிழன் வீதி அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > Avargal Unmaigal said...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைத்தளம் வந்து கருத்துரையும், பாராட்டும் சொன்ன சகோதரர் மதுரைத் தமிழன் அவர்களுக்கு நன்றி! மீண்டும் வருக!

    // பதிவர் விழா அதில் இளங்கோ சார் அவர்கள் கலந்து கொள்கிறார் என்றால் நிச்சயம் மிக தெளிவான பட விளக்கத்துடன் ஒரு பதிவு இருக்கும் என நினைத்து வந்த என்னை ஏமாற்றாமல் அழகாக தொகுத்து தந்த உங்களுக்கு பாராட்டுக்கள் உங்களின் 200 வது பதிவிற்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் //

    என்னைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ப்ராயம் வைத்ததற்கும் நன்றி!


    ReplyDelete
  21. 200 வதுபதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா. விழா அரங்கை நாங்களே வலம் வந்தது போல உணரச் செய்து விட்டீர்கள். விழா நாயகன் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மறுமொழி > Mythily kasthuri rengan said... ( 1 )

    // அய்யா, உங்கள் நடையே நடை. எத்தனை தெளிவான விவரணை!!!! நேற்றைய நிகழ்ச்சிகளை கண்முன் கொண்டுவந்திருகிறது பதிவு!!!! //

    சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // கீதா அக்கா சொன்னது போல் எங்கள் புகைபடக்கருவிகளை நாங்கள் உபயோகிக்கவே இல்லை என்பதை விழா இப்போது தான் உணர்கிறோம்!! என்றாலும் நீங்கள் எங்களோடு சாப்பிடாமல் சென்றது மிக வருத்தமே:(( கிரேஸ் தோழியை வழியனுப்பிவிட்டு வந்து பார்த்தால் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக எங்களோடு உணவருந்த வேண்டும். இது இந்த சிறியவளின் அன்புகட்டளை. //

    நானும் முதலில் புகைப்படம் எடுப்பதா வேண்டாமா என்ற எண்ணத்திலேயே இருந்தேன். அப்புறம் அங்குள்ள பேனர்கள், படங்கள், கவிதை வரிகள் மற்றும் நூற்றாண்டு பாரம்பரியம் உள்ள நகர்மன்றக் கட்டிடம் ஆகியன என்னை படம் எடுத்தே ஆக வேண்டும் என்ற உணர்வைத் தந்துவிட்டன..

    // அப்புறம் என் பதிவுக்கு உங்கள் படங்களை சுட்டுவிட்டேன்:)) படித்துவிட்டு கருத்துச்சொல்லுங்கள். மீண்டும் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி!! //

    மிக்க மகிழ்ச்சி சகோதரி அவர்களே! மணவை ஜேம்ஸ் அவர்கள் உங்கள் சுட்டி மாஜிக் செய்ததாக எழுதி இருந்தார். அது என்ன மாஜிக்? அடுத்தமுறை சந்திக்கும்போது தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  23. மறுமொழி > Mythily kasthuri rengan said... ( 2 )

    // ஒரு சின்ன திருத்தம் அய்யா. நிலவன் அண்ணாவின் மகள் பெயர் லட்சியா!!! //

    எனது பதிவினில் இருந்த தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! பதிவினில் திருத்தம் செய்து விட்டேன்.

    ReplyDelete
  24. மறுமொழி > தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

    // உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா. அரங்கப் படங்கள் எல்லாம் போட்டு அருமை ஐயா.//

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    // வெளியே இருந்த போர்ட்களை படம் எடுக்க முடியவில்லை, இங்கிருந்து எடுத்துக் கொள்கிறேன். நன்றி.//

    மிக்க மகிழ்ச்சி! சகோதரி அவர்களே!

    // இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா. //

    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரரின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  26. இனிய வாழ்த்துகள். புத்தகம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 200 விரைவில் 2000 ஆகட்டும்.

    ReplyDelete
  27. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அன்று மதுரையில் முடிக்க வேண்டிய பல வேலைகள் இருந்ததால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை...

    200-வது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  28. பதிவர்கள் அனைவரையும் உங்கள் புகைப்படங்கள் வழியாகப் பார்க்க முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனிய நன்றி!!

    200- வது பதிவிற்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. //அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களே நான் இன்று 200 ஆவது பதிவை எட்டி இருப்பதற்கு நீங்கள் எனக்களித்த ஊக்கமும் ஒரு காரணம்.//

    அடடா, மிக்க நன்றிகள், ஐயா. இதைக்கேட்க மனதுக்கு சந்தோஷமாக உள்ளது ஐயா.

    இன்று என் வலைத்தளத்தினில் ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் ’நேயர் கடிதம்’ வெளியாகியுள்ளது. தங்களுக்கு நேரமிருக்கும் போது வந்து பாருங்கள், ஐயா. http://gopu1949.blogspot.in/2014/10/4.html

    அன்புடன் VGK

    ReplyDelete
  30. நிகழ்ச்சிக்கு அருகில் இருந்து பார்த்த திருப்தியை தந்த தங்கள் படங்கள் அருமை. கிரேஸ் அவர்களை படத்திலாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஒரு விழாவுக்கு செல்வாதாக இருந்தால் மெயில் மூலம் எனக்கு தகவல் தந்திருக்கலாம் யாருமில்லாமல் நாம் எப்படி தனியாக செல்வது என நினைத்தேன். வலைப்பதிவர்கள் நாம் எல்லாம் ஒரு குடும்ப உறவுகள் போல என்ற உரிமையில் கேட்டேன். தவறாக நினைக்கமாட்டீங்க என நினைக்கிறேன்.

    ReplyDelete
  31. லைவ் ஸ்ட்ரீமிங் போல் அருமையான வர்ணனையாக உங்கள் பதிவு செம சார், நேரில் கண்டதைப் போன்ற ஒரு உணர்வு...

    ReplyDelete
  32. வணக்கம்
    ஐயா.
    பதிவை பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி பொங்கியது நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளதை அறிய முடிகிறது. மற்றும் பலரை புகைப்படம் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  33. அன்புள்ள திரு.தமிழ் இளங்கோ அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். தங்களது 200 -ஆவது பதிவு...முத்திரைப் பதிவு அய்யா...அசத்திவிட்டீர்கள்...மிகமிக அருமை. வாழ்த்துகள்.
    புதுக்கோட்டை - நா.முத்துநிலவன் நூல்கள் வெளியீடும் -வலைப்பதிவர்களையும் புகைப்படங்களின் மூலம் காண்பித்து இருப்பது நன்றாக இருந்தது, மிகுந்த பாராட்டுதலுக்குரியது. மேலும் அங்கு வரைந்திருந்த ஓவியங்கள் அருமையாக இருந்தன... அந்த ஓவியங்களில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அருகில் சென்று படிக்கஇயலவில்லை (நிகழ்ச்சி தொடங்கும் பொழுதுதான் வந்தோம்)...அதைக் படம்பிடித்துக் காட்டியது சபாஷ்...அந்த வரிகள் அர்த்தம் பொதிந்த வரிகள்....!

    எனது பதிவினையும் தங்கள் வலைத்தளத்தில் சுட்டிக்காட்டியதற்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அய்யா...பேச்சு பேச்சாவே இருக்கட்டும்...எல்லாரும் படத்தைச் சுட்டுக் கொள்கிறேன்...சுட்டுக் கொள்கிறேன்... என்கிறார்கள்..எனக்கு இதுவரை அதுபோல சுட்டுப் பழக்கமில்லை...முடிந்தால் சுட்டுக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதியுடன்....
    முயன்று பார்க்கிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா!

    மிக அருமையாக உள்ளந்தொட்ட பதிவாக இருக்கின்றதையா
    உங்களின் இப்பதிவு!
    படங்கள் அட்டகாசம்! அத்தனை பேரையும் இன்னின்னார் என
    விலாவாரியாக விபரித்துச் சுட்டிக் காட்டியதற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!

    எல்லோரையும் இப்படிப் பார்க்கக் கிடைத்ததே பெரும் மகிழ்வுதான்!
    தங்களின் அரிய பெரிய செயலுக்கு மிக்க நன்றி ஐயா!

    இருநூறாவது பதிவிற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
    இன்னும் பல பதிவுகள் உங்களிடமிருந்து கிடைக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  35. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரரின் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! என்னால் உங்களைப் போல மதுரைப் பக்கம் அடிக்கடி செல்ல இயலவில்லை என்னும் ஏக்கம் இருக்கிறது. மதுரையில் கவிஞர் S. ரமணி அவர்கள் எவ்வாறு இருக்கிறார்?

    ReplyDelete
  38. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    ரொம்பவும் நன்றி அய்யா! உங்கள் தளத்தினில் கருத்துரை பதிந்து விட்டேன்.

    ReplyDelete
  40. மறுமொழி > Sasi Kala said...

    நீண்ட நாட்களுக்குப் பின் என் வலைத்தளம் வந்து கருத்துரை தந்த சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி!




    // நிகழ்ச்சிக்கு அருகில் இருந்து பார்த்த திருப்தியை தந்த தங்கள் படங்கள் அருமை. கிரேஸ் அவர்களை படத்திலாவது பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. //

    படங்களைப் பற்றிய பாராட்டினுக்கு நன்றி!


    //ஒரு விழாவுக்கு செல்வதாக இருந்தால் மெயில் மூலம் எனக்கு தகவல் தந்திருக்கலாம் யாருமில்லாமல் நாம் எப்படி தனியாக செல்வது என நினைத்தேன். வலைப்பதிவர்கள் நாம் எல்லாம் ஒரு குடும்ப உறவுகள் போல என்ற உரிமையில் கேட்டேன். தவறாக நினைக்கமாட்டீங்க என நினைக்கிறேன். //

    தங்கள் அன்பினுக்கு நன்றி! நீங்கள் சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன் (மகிழ்நிறை) அவர்களை தொடர்பு கொண்டு இருக்கலாம். புதுக்கோட்டையிலிருந்து மதுரை வலைப்பதிவர் மாநாட்டினுக்கு அம்மாவட்ட வலைப் பதிவர்கள் ஒரு வேனில் செல்ல இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வலைப் பதிவர்கள் மு.கீதா, மைதிலி, சுவாதி ஆகியோரும் வருவார்கள் என்று நினைக்கிறேன்.


    ReplyDelete
  41. மறுமொழி > J.Jeyaseelan said...

    தம்பி ஜே ஜெயசீலனுக்கு நன்றி! உங்கள் வலைப்பக்கம் நான் விரைவில் வருவேன்..

    ReplyDelete
  42. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! உங்களைப் போன்று கடல் கடந்து இருக்கும் சகோதரர்களுக்கு எனது பதிவு மகிழ்ச்சி அளித்ததில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  43. மறுமொழி > manavai james said...

    அன்புள்ள ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு
    வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நிகழ்ச்சி தொடங்கும்போது நகர்மன்ற வாசலில நுழையும் இடத்தில் இருந்த நாற்காலியில்தான் அமர்ந்து இருந்தேன்.

    // அய்யா...பேச்சு பேச்சாவே இருக்கட்டும்...எல்லாரும் படத்தைச் சுட்டுக் கொள்கிறேன்...சுட்டுக் கொள்கிறேன்... என்கிறார்கள்.. எனக்கு இதுவரை அதுபோல சுட்டுப் பழக்கமில்லை...முடிந்தால் சுட்டுக் கொள்ளட்டுமா? உங்கள் அனுமதியுடன்.... முயன்று பார்க்கிறேன். //

    மிக்க மகிழ்ச்சி அய்யா! நகல் செய்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பகிர்ந்தும் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. மறுமொழி > இளமதி said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // படங்கள் அட்டகாசம்! அத்தனை பேரையும் இன்னின்னார் என
    விலாவாரியாக விபரித்துச் சுட்டிக் காட்டியதற்கும் உளமார்ந்த நன்றி ஐயா! //

    சிலருடைய பெயர்கள் தெரியாததாக் சுட்டிக் காட்ட இயலாமல் போய்விட்டது. பாலா டிரேடிங் ஹவுஸ் என்று இருக்கும் ப்ளக்ஸ் பேனர் படத்தில் தனது கணவருடன் இருப்பவர் வலைப்பதிவர் சுவாதி என்று சொன்னார்கள்

    இருநூறாவது பதிவிற்கும் உளமார வாழ்த்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  45. விழா நிகழ்வுகளும், தங்களைச் சந்தித்ததும், வலைப் பதிவர்களுடன் உரையாடியதும் மறக்க இயலாத நிகழ்ச்சிகள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  46. 200 வது பதிற்கு வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் எழுத்துலகப் பணி தொடரட்டும் சிறக்கட்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  47. மிக மகிழ்வாக இருந்தது பலரைக்கண்டது.
    மிக நன்றி.
    இருநூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  48. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )

    // விழா நிகழ்வுகளும், தங்களைச் சந்தித்ததும், வலைப் பதிவர்களுடன் உரையாடியதும் மறக்க இயலாத நிகழ்ச்சிகள் //

    ஆம் அய்யா! உண்மைதான். இனிமேல் புதுக்கோட்டை என்றாலே இந்த இனியநாள் மலரும் நினைவுகளாக மலரும்!

    // 200 வது பதிற்கு வாழ்த்துக்கள் ஐயா தங்களின் எழுத்துலகப் பணி தொடரட்டும் சிறக்கட்டும் //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  49. மறுமொழி > kovaikkavi said...

    // மிக மகிழ்வாக இருந்தது பலரைக்கண்டது.
    மிக நன்றி. இருநூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்!//

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  50. தங்கல் பதிவு மிகவும் தெளிவாக, விளக்கமுடன் அருமையான படங்களுடன் அதுவும் பேர்களுடன் விளக்கமாக இருக்கின்றது ஐயா! அருமை!

    புதுக்கோட்டை வலையுலகம் சார்ந்த விழா என்றாலே வலைத் தம்பதியினர் கஸ்தூரி ரெங்கன் (மலர்த்தரு), மைதிலி (மகிழ்நிறை) இருவரும் இல்லாமலா? // எமது நண்பர்களையும் அவர்களது குட்டீசையும் கண்டதும் ரொம்ப மகிழ்வாக இருந்தது! பலவலைத்தளங்களில் இந்த நிகழ்வைக் கண்டாலும், மீண்டும் பார்க்க மிகவும் மிகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

    நம் அன்பு வலைப்பதிவர்கள், அதுவும் இலக்கியம் பேசும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயரிக்கும் தேன்மதுரக் கிரேஸ் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா! இதுவரை படத்தில் காணாத நண்பர்களைக் கண்டது மிக்க மகிழ்வு!

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! ஒரு சிறிய வேண்டு கோள். எங்களைப் போன்று தாங்களும் எல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் சந்தோஷம் ஆச்சரியம்....தாங்கள் எடுத்துள்ள அந்தக் கவி வரிகள் வரைபடங்களை நாங்கள் முக நூலில் பகிர்ந்து கொள்ளலாமா ஐயா? ஏனென்றால் அவை மிக அழகான, சிந்த்திக்க வைக்கும் வரிகள்! தங்கள் அனுமதி அளித்தால் பகிர்ந்து கொள்கின்றோம், தங்கள் வலைப்பூவின் பெயருடன்...

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  51. 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  52. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் V துளசிதரன் அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! இந்த பதிவினைப் பற்றிய பாராட்டுக்கள் அனைத்தும் அய்யா ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கே சேரும்!


    // ஐயா! ஒரு சிறிய வேண்டு கோள். எங்களைப் போன்று தாங்களும் எல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் சந்தோஷம் ஆச்சரியம்....தாங்கள் எடுத்துள்ள அந்தக் கவி வரிகள் வரைபடங்களை நாங்கள் முக நூலில் பகிர்ந்து கொள்ளலாமா ஐயா? ஏனென்றால் அவை மிக அழகான, சிந்த்திக்க வைக்கும் வரிகள்! தங்கள் அனுமதி அளித்தால் பகிர்ந்து கொள்கின்றோம், தங்கள் வலைப்பூவின் பெயருடன்...//

    இந்த பதிவினையும், இதில் உள்ள படங்களையும் உங்கள் முகநூலில் பகிர்ந்து கொள்வதில் எந்தவிதமான மறுப்பும் எனக்கும் இல்லை. மிக்க மகிழ்ச்சியே! மீண்டும் நன்றி!


    ReplyDelete
  53. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    // 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா! //

    சகோதரருக்கு மீண்டும் நன்றி! தங்களைப் போன்றவர்கள் தந்த ஊக்கம் மற்றும் பாராட்டுக்களினால்தான் 200 பதிவுகளை என்னால் எழுத முடிந்தது.

    ReplyDelete
  54. 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    நூல்களின் வெளியீட்டு விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி.
    பதிவர்கள் சந்திப்பு பற்றியும், அவர்களின் படங்களும் அங்கு வைக்கபட்ட வாசகங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  55. அய்யா வணக்கம். எனது ஒரு நாள் நிகழ்வைத் தங்கள் பதிவின் வழியாக நிலையாக எல்லாருடைய நெஞ்சிலும் நிற்கும்படி எழுதிவிட்டீர்கள் அய்யா. மிக்க நன்றி.
    கருத்துச் சொன்ன அனைத்துப் பதிவர்க்கும் தங்கள் வலைவழியாகவே நன்றியையும் வணக்கத்ததையும் தெரிவித்துக் கொள்கிறேன். முகம் தெரியாத நட்பு வலைப்பதிவர் அனைவரையும் மதுரையில் சந்திக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன். தங்களைப் போலும் அன்புநிறைந்த வலைப்பதிவர்களின் வாழ்த்துடன், வெளியிடப்பட்ட நூல்கள் ஒரே நாளில் ரூ.75,000 வரை விற்றிருப்பது பதிப்பகத்தார்க்கு மகிழ்வையும் எனக்கு நெகிழ்வையும் தந்திருக்கிறது. என் எழுத்துகளை வரவேற்கும் தமிழ் உலகத்திற்கு மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தரவேண்டும் என்னும்உறுதி என் நெஞ்சில் எழுகிறது. திருச்சியிலிருந்து விழாவிற்கு வந்து சிறப்பித்ததுடன், வலைப்பதிவிலும் எழுதியிருக்கும் தங்களின் அன்பிற்கு என் இதயம் பணிந்த நன்றி அய்யா.

    ReplyDelete
  56. தங்களின் 200ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துகள் அய்யா. மேலும் மேலும் தமிழ்உலகம் பயன்பெற உங்கள் பதிவுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்திப்போம் அய்யா.வணக்கம்.

    ReplyDelete