பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்து பேதை-
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
- வில்லிபாரதம்
கடந்த ஒரு வார
காலமாக தென் தமிழ்நாட்டில் ஐப்பசி மழை! ” மதுரைக்குப் போகாதீங்க”
என்பது போல, மாநாட்டிற்கு முதல்நாள்
இரவும் திருச்சியில் மழை கொட்டி தீர்த்தது. என்ன மழை பெய்தாலும் மதுரைக்கு எப்படியும் போய்த் தீருவது என்ற முடிவில் நான் இருந்தேன். அப்போதெல்லாம் கட்சி கூட்டம் நடக்கும்போது, மழை பெய்தால் கழகக் கண்மணிகளில் ஒருவர் மேடையில் ஏறி ”அடாது மழை பெய்தாலும் விடாது கூட்டம் நடக்கும்” என்று பேசிவிட்டு செல்வார். அதுபோல,
மழையை நினைத்து எங்கே பதிவர்கள் வராமல் போய் விடுவார்களோ என்று நினைத்து “மழையில்லை... வாருங்கள் வலைப்பதிவர்களே” என்ற பதிவினை திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
ஒரு அவசரமான முக்கிய பதிவை வெளியிட்டார்.
மறுநாள் (26.10.2014 ஞாயிறு) அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்து விட்டு
மதுரைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லார் விட்ட பாணத்திற்கு பயந்தோ என்னவோ மழை
இல்லை! விழா நடந்த வண்டியூர் தெப்பக்குளம் மேற்குக் கரையினில் இருக்கும் ”கீதா நடன கோபால நாயகி மந்திர்”
அரங்கத்திற்கு முன்னதாகவே போய் விட்டேன்.
அங்கு
மண்டபத்தினுள் அய்யா அன்பின் சீனா, அவர்களது மனைவி திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள்
மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், பகவான்ஜி (ஜோக்காளி), மகேந்திரன், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பம்பரமாக
சுழன்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு இருந்தனர். அதன் பின்னர் நிகழ்ச்சி நிரலில்
சொன்னபடி விழா தமிழ்த்தாய் வணக்கத்துடன்
இனிதே தொடங்கியது. முற்பகல் சிறப்பு சொற்பொழிவாளராக அறிவிக்கப்பட்டு இருந்த
பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்
வரவில்லை. புதுக்கோட்டையிலிருந்து வந்த ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பத்திரிகை செய்திகளில் வருவது போல “திடீர் மணமகன் “ ஆனார். கவிஞர் அய்யா
அவர்கள் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர். நல்லதொரு சொற்பொழிவைத் தந்தார். எல்லோரும்
எதிர்பார்த்த மதுரை ஜிகர்தண்டா எல்லோருக்கும் வழங்கப்பட்டது.
உணவு
இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை செய்தார். வலைப்பதிவர்
சந்திப்பு நிகழ்ச்சியின் போது குடந்தை ஆர்.வி சரவணன் அவர்கள் எழுதி இயக்கிய ”சிலநொடி சிநேகம்” என்ற குறும்படம், மற்றும் வலைப் பதிவாளர்கள் கரந்தை
ஜெயக்குமார், கிரேஸ் பிரதிபா (தேன்மதுரத் தமிழ்), மு.கீதா (வேலு நாச்சியார்) P.R.ஜெயராஜன் (சட்டப் பார்வை) ஆகியோர் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
நன்றியுரை சொல்ல, தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிந்தது.
உவப்பத்
தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
அனைத்தே புலவர் தொழில்.
– திருவள்ளுவர்
(குறள். 394)
அடுத்த
ஆண்டு (2015)
வலைப்பதிவர்கள் சந்திப்பினை புதுக்கோட்டையில் நடத்தும் பொறுப்பினை புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரங்கத்தில்
நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படங்களை எடுக்க தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு
இருந்தன. இவற்றை முழு விவரமாக சிறப்புற தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
மேலும் பல பதிவர்கள் இந்த நிகழ்ச்சியை தங்களது வலைத்தளத்தில் சிறப்பாக வெளியிட
வேண்டும் என்பதற்காக தங்களது கேமராக்களில் எடுத்துக் கொண்டு இருந்தனர். அய்யா பேராசிரியர் தருமி தனது பெரிய கேமராவினால் இளைஞனாக மாறி படங்களை எடுத்தார். எனவே இந்த
சந்திப்பு சம்பந்தமாக நிறைய பதிவுகளை எதிர் பார்க்கலாம் என்பதால், நான் எடுத்த சில படங்களை
மட்டும் இங்கு வெளியிட்டுள்ளேன்.
(படம்: மேலே) நுழைவு வாயிலில்
வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்
(படங்கள்: மேலே) மேடையில் வைக்கப்பட்டு இருந்த ப்ளக்ஸ் பேனர்கள்
(படம்: மேலே) அன்பின் சீனா, கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), பகவான்ஜி
(ஜோக்காளி), மற்றும் தருமி அய்யா
(படம்: மேலே) கவிஞர் ரமணி (தீதும் நன்றும்), தருமி அய்யா, நான் மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி
(படம்: மேலே) துளசி கோபால் தம்பதியினரை வரவேற்கும் அன்பின் சீனா தம்பதியினர்
(படம்: மேலே) அய்யா G.M.B (G.M. பாலசுப்ரமணியம்) அவர்கள் தனது மனைவி மகனுடன்
(படம்: மேலே) பகவான்ஜி (ஜோக்காளி), பால.கணேஷ் (மின்னல் வரிகள்), கவிஞர் ரமணி
(தீதும் நன்றும்), தேவகோட்டை கில்லர்ஜி மற்றும் கரந்தை ஜெயக்குமார் தனது மனைவி,
மகளுடன்
(படங்கள்:மேலே) கூட்டம் துவங்கிய போது
(படம்: மேலே) தேவகோட்டை கில்லர்ஜி, மணவை ஜேம்ஸ் ஆகியோருடன் நான்
(படங்கள் – மேலே) அரங்கத்தினுள்
(படம்: மேலே) எனக்கு அளிக்கப்பட்ட
நினைவுப் பரிசு
குறிப்பு: இன்றுமுதல், இந்த விழாவினைப் பற்றி வெளியாகும்
பதிவுகளின் இணைப்புகள் அவ்வப்போது இந்த பதிவினில் தொடர்ந்து இணைக்கப்படும் (UPDATE) என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவருடைய பதிவேனும் விட்டுப் போயிருப்பின்,
யார் தெரிவித்தாலும் இதில் இணைத்து
விடுகிறேன்.
( கீழே உள்ள
ஒவ்வொரு பதிவின் முகவரியிலும் (web address ) ”க்ளிக்” செய்வதன் மூலம் இங்கிருந்தே அந்த பதிவுகளைக் காணலாம்)
மதுரை
- மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா -
மதுரை
வலைப்பதிவர் விழா அனுபவங்கள்
முகநூல்
வலைப்பூவை அழிக்கிறதா?
796. 3-ம் பதிவர் திருவிழா -- 1
ஒரு
கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா
மதுரையில்
மகிழ்ச்சி வெள்ளம்
797. 3-ம் பதிவர் திருவிழா -- 2
பதிவர்
சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை
மூன்றாம்
ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014
எப்படி?
மதுரையை
கலக்கியது யாரு?
சுடச்சுடப்பதிவு.
ReplyDeleteசுவையான செய்திகள்.
அருமையான படங்கள்.
அற்புதமான பகிர்வு.
மிக்க நன்றி, ஐயா.
நேரில் தங்களுடன் கலந்துகொண்டது போலவே ஓர் மகிழ்ச்சி ! மிக்க நன்றி, ஐயா.
அன்பு சகோதரர் அவர்களுக்கு..
ReplyDeleteதங்களுக்கே உரிய நடையில் விழாவினை காட்சிப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி..
வாழ்க நலம்..
உடனடியாக விபரங்கள்தந்திருப்பதற்கு அன்பு கனிந்த நன்றி!! மதுரை பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்ததறிய மிகவும் மகிழ்ச்சி!
ReplyDeleteAsathi vitteerkal Enakku Velai Illaiyo ?
ReplyDeleteபடங்கள் அருமை
ReplyDeleteமுன்னுரை போன்று செய்தி தொகுப்பு
நினைவுப் பரிசுக்கு வாழ்த்துக்கள்.
விபரங்கள் பற்றிய அறிவிப்பு தொடரும் என்பது மகிழ்ச்சி.
அடுத்தவருடம் புதுக்கோட்டையிலா ... நன்றி ஐயா.
த.ம 1
நேரில் வந்து கலந்துகொள்ள இயலவில்லையே என வருத்தப்பட்டாலும் காணொளிக் காட்சி மூலம் பதிவர் விழாவை காணலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக காண முடியவில்லை. அந்த குறையை தங்களது பதிவு போக்கிவிட்டது. படங்களை வெளியிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteஅற்புதமான பகிர்வு.
மிக்க நன்றி, !
அருமையான படங்கள்.
ReplyDeleteஅற்புதமான பகிர்வு.
மிக்க நன்றி, !
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
ReplyDeleteஅனைத்தே புலவர் தொழில்.
உவகை மிகுந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!
விழாவினை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசுடச்சுட பதிவிற்கான தனது கருத்துரையையும், பாராட்டையும் தந்த அன்பின் அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி! அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பினில் நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
மறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி! மதுரை என்பதால் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// Asathi vitteerkal Enakku Velai Illaiyo ? //
சகோத்ரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கென்று ஒரு எழுத்து நடை இருக்கிறது. எனவே நீஙகள் நன்றாகவே அசத்தலாம். மேலும் படம் எடுப்பதற்காக உங்கள் சகோதரி மகன் வைத்து இருந்த கேமராவும் பெரியது; படங்களும் தெளிவாக இருக்கும். நான் வைத்து இருந்தது சிறிய கேமராதான். எனவே நீங்கள் சிறப்பாகவே செய்யலாம். உங்களுடைய பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDeleteசகோதரி அவர்களின் பாராட்டுரைக்கும், தமிழ் மணம் வாக்களிப்பிற்கும் நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா அடாது மழை பெய்தாலும் நீங்கள் விடாது நிச்சயம் மதுரைக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். தங்களது பாராட்டுரைக்கு நன்றி!
மறுமொழி> ரிஷபன் said...
ReplyDeleteநீங்களும் மதுரைக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் திரு V.G.K அவர்கள் என்னை, நீங்கள் மட்டும்தான் போகும்படியாக இருக்கும் என்று முன்பே சொல்லி இருந்தார். சகோதரர் எழுத்தாளர் ரிஷபன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!
மறுமொழி> sury Siva said...
ReplyDeleteசூரி தாத்தாவின் பாராட்டுரைக்கு நன்றி!
மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரி அவர்களது தமிழார்வத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!
விபரங்கள்தந்திருப்பதற்கு அன்பு கனிந்த நன்றி!! மதுரை பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்ததறிய மிகவும் மகிழ்ச்சி!
ReplyDeleteVetha.Langathilakam.
வலைப்பதிவர் திருவிழாவில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருகின்றது. கட்டுரை பதிவும் அருமையாக உள்ளது. நன்றி ஐயா..
ReplyDeletehttp://sattaparvai.blogspot.in/2014/10/2014.html
நிகழ்ச்சியை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்ப்பது போல
ReplyDeleteமிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அசத்தல் பகிர்வு அண்ணா ! புகைப்படங்கள் அனைத்துமே அருமை !!
ReplyDeleteநேரில் அங்கிருந்து பார்த்தது போன்ற உணர்வு ..பகிர்வுக்கு நன்றி
புகைப்படங்களுடன் விழா தொகுப்பு பகிர்வு மிக அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
தங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...
மிகவும் சந்தோசம் ஐயா...
ReplyDeleteஇந்த பதிவு புதுப்பிக்கம்படும் போதும் தொடர்கிறேன்...
அன்புள்ள அய்யா,
ReplyDeleteதிரு.தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம்.
மதுரையில் வலைப்பதிவர்கள் திருவிழாவின் பொழுது தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. புகைப்படத்துடன் நல்லதொரு வர்ணனையைச்செய்திருந்தீர்கள். அருமையாக இருந்தது. ஓர் இளைஞனைப்போல் நீங்கள் ஓடிப்போய் பணியாற்றியது உள்ளபடியே என்னை மெய் சிலிர்க்க வைத்தது. பாராட்டுகள்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மதுரைப் பதிவர் திருவிழாவை
ReplyDeleteஒளிப்படங்களுடன் பார்த்தேன்
அருமைான பதிவு
தொடருங்கள்
மதுரை நிகழ்வினை மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். தங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. மதுரை விழா தொடர்பான பிற நண்பர்களின் இணைப்புகளையும் தாங்கள் இணைத்துள்ளவிதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேரில் கண்டது போல படங்கள் அனைத்தும் அருமை!
ReplyDeleteமறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரர் ‘தளிர்’ சுரேஷ் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
ReplyDeleteமறுமொழி> kovaikkavi said...
சகோதரிக்கு நன்றி!
மறுமொழி> Advocate P.R.Jayarajan said...
ReplyDeleteஅட்வகேட் அய்யா அவர்களுக்கு நன்றி! வலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருகின்றது.
மறுமொழி> Ramani S said...
ReplyDeleteவலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஏனெனில் உங்கள் பதிவினில் நீங்கள் போட்டு இருக்கும் போட்டோவிற்கும் நேரில் பார்த்ததற்கும் நிறைய வித்தியாசங்கள். சட்டென்று அடையாளம் காண இயலவில்லை.
ReplyDeleteமறுமொழி> Angelin said...
சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மேலே உள்ள உலக வரை படத்திலே வேண்டுமென்றே எங்கள் தங்க கலிபோர்னியாவை வெட்டி விட்டதற்காக வரும் பிப் 31 அன்று அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய போராட்டம் என்று அறிவித்து கொள்கிறேன். இந்த விஷயத்தில் நியூ யார்கை சேர்ந்த நண்பர்கள் மதுரயில் தமிழனும் அல்பி என்னும் பரதேசியும் வேண்டும் என்றே எங்கள் ஊரை வெட்ட சொன்னதாக ஒரு கிசுகிசுவும் ஓடி கொண்டு இருகின்றது என அறிவேன்.
ReplyDeleteஅருமையான பதிவு. புது கோட்டை நிகழ்ச்சி மிச்சயம் வற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆஹா அழகாக கூறியுள்ளீர்கள் ..சார் என் பதிவை இணைத்தமைக்கு நன்றி..
ReplyDeleteமறுமொழி> தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteசகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி! இந்த வலைப்பதிவர் சந்திப்பு வெற்றி பெற நீங்கள் ஆற்றிய பணி மகத்தானது.
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி! இந்த வலைப்பதிவர் சந்திப்பில் நீங்கள் உங்கள் உடல் நலத்தைப் பற்றியும் எண்ணாது அலைந்து இருக்கிறீர்கள். கீழே விழுந்ததால் கையில் அடிபட்டும் வெளியே காட்டாமல் ஆர்வத்துடன் பணியாற்றிய உங்கள் உறுதியையும் ஆர்வத்தையும் என்னவென்று சொல்வது?
மறுமொழி> manavai james said...
ReplyDeleteஆசிரியர் அய்யாவிற்கு நன்றி!
மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசகோதரருக்கு நன்றி!
மறுமொழி> Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி! அன்று உங்களோடு உரையாட சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.
மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களுக்கு நன்றி!
அட அட்டகாசமான படத்தொகுப்பு அய்யா...
ReplyDeleteதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. படங்கள் சொல்லிவிட்டன நிகழ்ச்சியின் சிறப்பை
ReplyDeleteஅத்தனையும் அருமை....ரத்த சம்பந்த திருமணம் போன்ற நெருக்கம் ஒவ்வொருவர் முகங்களிலும்!
ReplyDeleteநேரில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் உங்கள் பதிவுகள் மூலம் தான் தீரப் போகிறது.....
ReplyDeleteஅடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் - இப்பவே ஒரு சீட்டு புக் பண்ணிடுங்க - இந்த தில்லி பதிவருக்கு! :)
மதுரை நிகழ்வினை மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.& பாராட்டுக்கள் உங்களிடம் இருந்து இன்னும் அதிகமான புகைபடங்களை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே யானை பசிக்கு சோளப்பொரி கொடுத்த மாதிரி இருந்தது..
ReplyDeleteமறுமொழி > விசுAWESOME said...
ReplyDeleteநகைச்சுவையாக கருத்துரை சொன்ன சகோதரர் விசு அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > சீனு said...
ReplyDeleteசகோதரர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி! பதிவர்கள் பலரையும் (குறிப்பாக சென்னைப் பதிவர்கள்) சந்திக்க வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து காலையிலேயே வண்டியூர் தெப்பக்குளம் வந்து விட்டேன். திண்டுக்கல் தன்பாலனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்தசமயம் அவர் எடுக்கவில்லை. நீங்களும் மற்றைய நண்பர்களும் முதல் நாளே வந்து தங்கியிருந்தது எனக்கு தெரியாது. தெரிந்து இருந்தால் நேரே அங்கு வந்து இருப்பேன்.
வண்டியூர் தெப்பக்குளம் வடக்கு வீதி ரோட்டில், காலை டிபன் சாப்பிட நடந்து திரிந்ததுதான் மிச்சம். அந்த பகுதியில் டிபன் கடைகள் எதுவும் திறந்து இருக்கவில்லை. எனவே டிபன் சாப்பிட மதுரை அண்ணா நகருக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வர வேண்டியதாயிற்று. இது தனிக் கதை என்ப்தால் நான் எழுதவில்லை.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteஆமாம், சகோதரரே, நானும் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இருந்தாலும் மற்றவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலின் காரணமாக உங்களோடு அதிக நேரம் பேச இயலாமல் போய்விட்டது.
மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
// அத்தனையும் அருமை....ரத்த சம்பந்த திருமணம் போன்ற நெருக்கம் ஒவ்வொருவர் முகங்களிலும்! //
ஆமாம் அய்யா! ஜாதி, மதம் கடந்த உண்மையான அன்பு ஒவ்வொரு வலைப் பதிவர் முகத்திலும் காண முடிந்தது.
உங்களுடைய “ஆரண்ய நிவாஸ்” என்ற நூலை திரு G.M.B அய்யா மற்றும் திருமதி துளசி கோபால் இருவருக்கும் எனது நினைவுப் பரிசாக கொடுத்தேன்.
மதுரை என்பதால் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெறும் விழாவிற்கு அவசியம் வாருங்கள்.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநீங்கள் மதுரையில் கலந்து கொள்ளாதது குறித்து எனக்கும் வருத்தம்தான். இருந்தாலும் உங்கள் உத்தியோகம், சூழ்நிலை அவ்வாறு இருக்கிறது. அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் மாநாட்டில் இப்பவே உங்கள் வலைப்பதிவர் குடும்பத்திற்கு மூன்று சீட்டுகள் ரெடி!
மறுமொழி > Avargal Unmaigal said...
ReplyDeleteசகோதரர் ” அவர்கள் உண்மைகள் “ மதுரைத்தமிழன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி!
// மதுரை நிகழ்வினை மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.& பாராட்டுக்கள் உங்களிடம் இருந்து இன்னும் அதிகமான புகைபடங்களை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே யானை பசிக்கு சோளப்பொரி கொடுத்த மாதிரி இருந்தது..//
தங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக நான் அதிக புகைப்படங்களை வெளியிடாமல் போனதற்கு மன்னிக்கவும்!
அரங்கத்தில் நிகழ்ச்சிகள் முழுவதையும் தனியே போட்டோகிராபர்கள் படமெடுத்துக் கொண்டு இருந்தனர். இவற்றை தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் வெளியிடுவார். மேலும் பல வலைப்பதிவர்களும் தங்களது கேமராக்களில் படங்களை எடுத்துக் கொண்டு இருந்தனர். மேலும் பெண் பதிவர்களைப் படமெடுத்தால் அவர்கள் அனுமதியோடு படங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ( நூல் வெளியீட்டு விழா செய்த வலைப்பதிவர்கள் படங்களுடன் தங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்) எனவே மற்றவர்கள் எடுக்கும் அதே காட்சிகளை நானும் எடுத்து, அதனைப் பதிவில் போட்டு மற்றவர்களை சலிப்படையச் செய்ய விரும்பவில்லை. எனவே விழா தொடங்குவதற்கு முன்பு எடுத்த படங்களையே வெளியிடும்படி ஆயிற்று.
சகோதரர் மதுரைத்தமிழனுக்கு மீண்டும் நன்றி!
அசத்தலான படங்களுடன் அன்றைய நிகழ்வை தொகுத்த விதம் வெகுசிறப்பு.
ReplyDeleteஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL
ReplyDeleteசொல்ல நினைத்ததை எழுதுகின்றேன்! = மதுரையில் வலைப்பதிவர்கள்! = தி.தமிழ் இளங்கோ =
” மதுரைக்குப் போகாதீங்க” = மழை பயமுறுத்தலையும் மீறி வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வந்ததை அருமையாக விவரிக்கிறார் திரு தி.தமிழ் இளங்கோ = படங்களுடன் அற்புதமான பதிவு, சந்திப்பு பற்றிய மற்ற பதிவுகளின் இணப்புகளும் இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் தி.தமிழ் இளங்கோ =
மறுமொழி > Sasi Kala said...
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு மறக்காமல் வந்து கருத்துரையும் பாராட்டும் சொன்ன சகோதரிக்கு நன்றி!
மறுமொழி > Rathnavel Natarajan said...
ReplyDeleteஅய்யா உங்களை நான் மதுரையில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சியான தருணம், அது. தங்களது வலைப்பக்கத்தில் எனது பதிவினைப் பகிர்ந்ததற்கு நன்றி அய்யா!
ஆரம்பம் முதல் முடிவு வரை படங்களுடன் அருமையான தொகுப்பு நன்றி ஐயா
ReplyDeleteதமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த தங்கள் பதிவு அருமை. உலகின் தொன்மையான நகராக மதுரையில் இந்த விழா நடைபெற்றது இன்னும் சிறப்பு. நன்றி.
ReplyDelete- சித்திரவீதிக்காரன்
மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா
http://maduraivaasagan.wordpress.com/2014/11/04
அட்டகாசமான புகைப்படங்களுடன் அருமையான தொகுப்பு... தங்களை மதுரையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா, அதிகம் உரையாட முடியவில்லை.... என்னுடைய பதிவையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
ReplyDelete