Saturday 4 October 2014

கோயிலில் படம் எடுக்காதே!



சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் உறவினர் பிள்ளைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி. அவர்கள் குல தெய்வமான கருப்பு கோயிலில் நடைபெறும் என்று அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்கள்.   பிள்ளைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு ஆட்டுக் கிடாயை வெட்டினார்கள். இந்த காட்சியை பார்க்கக் கூடாதென்று அந்த சமயம் வேறு பக்கம் சென்று விட்டேன். அப்புறம் நிகழ்ச்சிகள் தொடங்கின. உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளை போட்டோ கிராபர் ஒருவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். (நான் சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து அங்கு சாப்பிடும் போது சைவம் மட்டுமே எடுத்துக் கொண்டேன்)

கருப்பு கோயில்:

நெடுஞ்சாலை ஒன்றின் அருகில் இருந்த கருப்பு கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் அடர்ந்த நிழலில், கூரையில்லாத நான்கு பக்கம் சுவர் எழுப்பிய (10க்கு 10 அளவு உள்ள) சின்ன கோயில். உள்ளே நடுகல் வடிவில் கருப்புசாமி. கோயில் பூசாரி மட்டும் சாமிக்கு அருகில் சென்று தீபாராதனை காட்டுகிறார்.  பக்தர்கள் வெளியே நிற்கிறார்கள். பூசாரி தீபத்துடன் வெளியே வந்து எல்லோருக்கும் திருநீறு குங்குமம் தருகிறார். நானும் பூசாரியின் தட்டில் பணம் வைத்து விட்டு திருநீறு வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டேன். கோயிலுக்கு அருகிலேயே ஒரு பெரிய வெள்ளைக் குதிரை மீது உள்ள கருப்புசாமி சிலை. கையில் சாட்டையுடன் முறுக்கு மீசையுடன் கருப்புசாமியின் இன்னொரு தோற்றம்.  நெடுஞ்சாலை வழியே சென்ற பெரும்பாலான வாகன ஓட்டிகள் கோயிலுக்கு வந்தோ அல்லது வண்டியை சாலையில் ஓட்டியபடியோ கும்பிட்டுச் சென்றார்கள்.

படம் எடுக்காதே:

நான் இது மாதிரி உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சமயம் படம் எடுப்பது வழக்கம். எனவே வெளியில் இருந்தபடி கோயிலையும் ஆலமரத்தினையும் படம் எடுத்தேன். உடனே சிலர் என்னிடம் வந்து கோயிலை போட்டோ  எடுக்கக் கூடாது என்றனர். நான் எல்லா கோயில்களிலும் உள்ளே உள்ளே மூல விக்ரகத்தை மட்டும்தானே படம் எடுக்கக் கூடாது என்பார்கள். நானும் வெளியேதானே படம் எடுக்கிறேன். என்றேன். ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எதற்கு வம்பு என்று கேமராவை பைக்குள் வைத்து விட்டேன்.

கோயில்களில் நம்பிக்கை:

இது போல் கோயிலில் படம் எடுக்காதே என்று பல இடங்களில் சொல்கிறார்கள். எல்லா இடத்திலும் இல்லை. நானும் வலைப் பதிவில் நான் சென்று வந்த சில கோயில்களில் எடுத்த படங்களை பதிவுகளாக வெளியிட்டுள்ளேன். ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரிய திருக் கோயில்களில் படம் எடுக்கலாம். ஆனால் கருவறையை மட்டும் எடுக்க அனுமதி இல்லை. காரணம் கேட்டால் யாருக்கும் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. சிலர் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னார்கள். நான் முதன் முதலில் கேமராவில் படம் எடுக்கத் தொடங்கியபோது, கிராமத்தில் உள்ள வயதானவர்கள் மறுத்து விடுவார்கள்.ஆனாலும் சில பெரியவர்களை அவர்களுக்குத் தெரியாமல், பிளாஷ் இல்லாமல் போட்டோ எடுத்து அவர்கள் பிள்ளைகளிடம் கொடுத்து இருக்கிறேன். போட்டோ எடுத்தால் ஆயுசு குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான் காரணம். இப்போது பிளாஷ் இல்லாமலேயே யாருக்கும் தெரியாமல் போனில் பேசுவது போல் போட்டோ எடுக்கும் செல்போன்கள் வந்துவிட்டன. வம்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நான் எடுத்த படங்கள் சில:

நான் வேறு சில கோயில்களுக்குச் சென்றபோது எடுத்த படங்கள். சிலவற்றை கீழே தந்துள்ளேன். மூலவர்களைப் படம் எடுத்தது இல்லை. இவை ஏற்கனவே எனது பதிவுகளில் வந்தவைதாம்.

(படம் மேலே)  எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள காவல்தெய்வம்


(படம் மேலே) எங்கள் சொந்த ஊர் திருமழபாடி சிவன் கோயிலின் உள்ளே எடுத்த படம்.

(படம் மேலே) ஸ்ரீ ராமானுஜர் சன்னதி (ஸ்ரீரங்கம்)

சில கேள்விகளும் சமாதானமும்:

எனக்குள் சில கேள்விகள். சில பத்திரிக்கைகளில் ஆன்மீகம் சம்பந்தமான கட்டுரைகள் வெளி வரும்போது அவைகளில் மட்டும் கோயிலின் மூலவர் போட்டோக்கள் எப்படி வெளி வருகின்றன? சில டீவி சானல்களிலும் சில கோயில்களின் மூலவரை ஆராதனையுடன் காட்டுகின்றனர்.

கோயிலில் மட்டுமல்ல, பொதுவாகவே முன்பு போல இப்போது எங்கும் கேமராவில் படம் எடுக்க முடிவதில்லை. அங்குள்ள ஆட்கள் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். யார் நீ, எதற்கு போட்டோ எடுக்கிறாய் என்று கேள்விக் கணைகள் வருகின்றன. காரணம் திருட்டு, மத தீவிரவாதம் போன்றவை இப்போது அதிகமாகி விட்டது. ஒரு கோவிலில் நான் மட்டும் தனியாக சென்றபோது, கோயில் ஊழியரிடம் வலைப்பதிவு, BLOG, BLOGGER என்று விவரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இதற்காகவே நான் எங்கு சென்றாலும் IT  PAN CARD, ஓட்டுநர் உரிம அட்டை, பென்ஷன் அடையாள அட்டை என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஓவியர் சில்பி:

பல கோயில்களை கோட்டோவியங்களாக வரைந்தவர் ஓவியர் சில்பி அவர்கள். அந்த ஓவியங்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். (இவற்றை தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக விகடன் வெளியிட்டுள்ளது )




49 comments:

  1. கருவறைகளில் உள்ள மூலவரை ஏன் படம் எடுக்கக்கூடாது என்பது இதுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. சிலை கடத்துவோர் அயல் நாட்டிற்கு அவைகளை கடத்தி விற்றவுடன் அவை நம்முடையது தான் என சொந்தம் கொண்டாடமுடையாமல் போவதற்கு காரணம் நாம் அவைகளை படம் எடுத்து ஆவணங்களில் வைக்காதது தான். நீங்கள்சொன்னதுபோல் ஓவியர் சில்பி அவர்களின் கோட்டோவியங்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் மட்டுமல்ல அவைகள் நம்முடையவைதான் என்பதற்கான சான்றுகள்.

    நீங்கள் எடுத்து பகிர்ந்துள்ள படங்கள் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. புகைப்ப்டம் எடுத்த அனுபவம் அருமை. படங்கள் எல்லாம் அழகு.
    சில்பி அவர்கள் திருவெண்காடு கோவிலை படம் வரைந்து கொண்டு இருந்த போது அவரைப் பார்த்து பேசியது நினைவில் மலருகிறது.

    ReplyDelete
  3. இறைவனை நமது கேமிரா வழியே ஒரு நிழற்படத்திற்குள்ளே
    சிறைப் படுத்திக் கொள்வதை விட, நம் உள்ளத்தில்,
    நிலைப் படுத்திக்கொள்வது
    நிலையான இன்பம் அல்லவோ !!

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  4. உங்கள் மனதிலும் கேள்விகள் முளைக்கத் துவங்கி விட்டன. கோவிலில் மூலவரைப் படம் எடுக்கக் கூடாதென்றால் தொலைக் காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் படங்கள் வெளியாவதெப்படி. அண்மையில் பெங்களூர் அலசூர் கோவிலில் படம் எடுக்க விரும்பி ரூ200/- கொடுத்தேன். மூலவரை எடுக்கவில்லை. காரணங்கள் இல்லாமல் அல்லது தெரியாமல் மூர்க்கத்தனமாகச் சில கொள்கைகளைப் பின் பற்றுபவர்களைக் கண்டால் பற்றிக் கொண்டு வருகிறது. சிதம்பரம் பெருமான்( மூலவரே) விழாக்களின் போது வீதி உலா வரும்போதும் படம் எடுக்கப் போனால் மிரட்டுகிறார்கள். பலரும் வம்பு எதற்கு என்று விட்டு விடுகிறோம்

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    பல கோயில்களில் இதைப்போன்ற சம்வங்கள் உள்ளது.... என்ன காரணம் என்றால் இற்கை ஒளிக்கும் செயற்கை ஒளிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நமது கமராவில் வருவது செயற்கை ஒளி அந்த ஒளி ஓவியங்களில் படும் போது ஓவியத்தின் வர்ணங்கள் மங்கிப் போவதாக தகவல். அதனால் எடுக்க கூடாது என்பார்கள் இது நான் அறிந்த காரணம்.. ஐயா. அருமையாக விளக்கம் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சில்பியின் ஓவியங்கள் எனக்கும் பிடிக்கும் அண்ணா! நல்ல அலசல் அண்ணா! ஆமா இன்னும் ஏன் பல கோவில்களில் போட்டோ எடுக்க விடமாட்டேன்கிறாங்க !!

    ReplyDelete
  7. //பல கோயில்களை கோட்டோவியங்களாக வரைந்தவர் ஓவியர் சில்பி அவர்கள். அந்த ஓவியங்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். //

    ஆம். அவை நம் வரலாற்றுப் பொக்கிஷங்களே தான்.

    //கோயில்களில் படம் எடுக்க அனுமதி இல்லை. காரணம் கேட்டால் யாருக்கும் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. //

    சில கேள்விகளுக்கு என்றும் சரியான பதில் கிடைப்பது இல்லை என்பதும் உண்மையே.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  8. சிந்திக்க வேண்டிய பதிவுகளைத் தருவதில் - தங்களுடைய பாணி தனி!..

    ஓவியர் சில்பி அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..

    தஞ்சை பெரிய கோயிலில் மூலவர் படம் - அங்கேயே விலைக்கு விற்கின்றனர். விசேஷ தினங்களில் மூலவர் அலங்காரம் பல நாளிதழ்களிலும் வெளியாகின்றன.

    அட.. நம்ம ஊர் சாமியாச்சே என்று ஆவலுடன் நாம் புகைப்படம் எடுக்க முயற்சித்தால் - அங்கே உள்ள கோஷ்டியினர் விரட்டி விடுவார்கள்..

    ஆனாலும் - சென்ற சதய விழாவின் போது ராஜராஜசோழனின் சிலையை படமெடுக்க விடாமல் ஒரு போலீஸ்காரர் - என்னை துரத்தியது தான் இன்னும் ஏனென்று புரியவில்லை.


    ReplyDelete
  9. அருமையான படங்களுடன்
    ஆதங்கங்களையும் பதிவு செய்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  10. எனக்கென்னவோ, இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு அவசியமாகி விட்டது

    ReplyDelete
  11. கருவறையை ஏன் படம் எடுக்கக் கூடாது என்பது புரியாத, அறிவியல் ரீதியாக விளக்கப்படாத உண்மையே! ஒரு காலத்தில் பல நல்ல சிற்பங்கள், கோயில் உள் சுவரிலும், தூண்களிலும் உள்ள அழகிய வடிவமைக்கப்ப சிற்பங்களும், நுணுக்கமான வேலைப்படுகளும் படம் பிடிக்கப்பட்டு வெளியானால் அந்த ரகசியங்களும், வடிவமைப்புகளும் காப்பியடிக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தினால் இருக்கலாம். உங்கள் கேள்விகள் சரியே எங்களுக்கும் தோன்றியதுண்டு!

    எது எப்படியோ, சுப்பு தாத்தாத்தா சொல்லுவது கூட சரிதானோ, ஆராய்ச்சிக்கு உட்படுட்துவதை விட, இது நேர்மறை எண்ணம் தானே என்றும் தோன்றுகின்றது!

    தங்கள் படங்கள் அருமை ஐயா!

    ReplyDelete
  12. நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள சில சப்பைக் கட்டுகள் தேவைதான்

    ReplyDelete
  13. த.ம 3

    பொக்கிஷமாக பாதுகாக்க இருக்கலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. கட்டிடக்கலை நுணுக்கங்களை பிற நாட்டினர் காப்பியடிக்ககூடாதென்றும் போட்டோ எடுப்பது தடை செய்யபட்டிருக்கலாம் ...முன்பு மனதில் நிலைத்து நிற்கும் நாம் நேரில் கான்பவை ..இப்போ நினைவுகளை மீட்ட புகைப்படம் ஒரு வழி .நீங்கள் எடுத்த படங்கள் அருமை .இங்கே நாங்க வெளிநாட்டில் எவ்வளவு படங்களை எடுத்தாலும் அனுமதி உண்டு .ஒரு சிறு தொகை டிக்கட்டாக ஒரு சில இடங்களில் கொடுக்கணும் அவ்வளவுதான்

    ReplyDelete
  15. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // கருவறைகளில் உள்ள மூலவரை ஏன் படம் எடுக்கக்கூடாது என்பது இதுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. சிலை கடத்துவோர் அயல் நாட்டிற்கு அவைகளை கடத்தி விற்றவுடன் அவை நம்முடையது தான் என சொந்தம் கொண்டாடமுடையாமல் போவதற்கு காரணம் நாம் அவைகளை படம் எடுத்து ஆவணங்களில் வைக்காதது தான். //

    அய்யா அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சொல்வது சரிதான். வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு அண்மையில் மீட்கப்பட்ட நடராசர் சிலை எந்த கோயிலைச் சேர்ந்தது என்பதை உடனே கண்டறிய முடியவில்லை.

    // நீங்கள்சொன்னதுபோல் ஓவியர் சில்பி அவர்களின் கோட்டோவியங்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் மட்டுமல்ல அவைகள் நம்முடையவைதான் என்பதற்கான சான்றுகள்.
    நீங்கள் எடுத்து பகிர்ந்துள்ள படங்கள் அருமை. வாழ்த்துக்கள்! //

    ஓவியர் சில்பியைப் பற்றி இந்த பதிவில் அதிகம் எழுத இயலாமல் போய்விட்டது. காரணம் அவருடைய படங்களில் உள்ள காப்பிரைட் பிரச்சினைதான். (இப்போது தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.)


    ReplyDelete
  16. மறுமொழி > கோமதி அரசு said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    // புகைப்ப்டம் எடுத்த அனுபவம் அருமை. படங்கள் எல்லாம் அழகு. சில்பி அவர்கள் திருவெண்காடு கோவிலை படம் வரைந்து கொண்டு இருந்த போது அவரைப் பார்த்து பேசியது நினைவில் மலருகிறது. //

    உண்மையிலேயே நீங்கள் பாக்கியம் செய்தவர்தான். அதுவும் ஒரு கோயிலை அவர் படம் வரைந்து கொண்டு இருக்கும் போது
    அவரிடம் உரையாடி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. மனிதனின் ஆயுசு குறைந்து விடும் என்பது அந்த கால மனிதர்களின் நம்பிக்கை .மூலவரின் ஆயுசுமா குறைத்து விடும் ,இதென்ன நம்பிக்கையோ ?
    த ம +1

    ReplyDelete

  18. மறுமொழி > sury Siva said...

    சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கம்.

    // இறைவனை நமது கேமிரா வழியே ஒரு நிழற்படத்திற்குள்ளே
    சிறைப் படுத்திக் கொள்வதை விட, நம் உள்ளத்தில்,
    நிலைப் படுத்திக்கொள்வது நிலையான இன்பம் அல்லவோ !! //

    இறைவனிடம் மனதார வேண்டிக் கொள்வதற்காகத்தான் கோயிலுக்குச் செல்கிறேன். ஒரு பெரிய கோயிலில் இருக்கும் இறைவனை நினைத்து வணங்கும்போது உண்டாகும் ஆத்ம திருப்தி, இறைவனின் புகைப்படத்தை வைத்து கும்பிடும்போது இருப்பதில்லை என்பது மெய்யான அனுபவம்தான் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete
  19. மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )

    அய்யா G.M.B அவர்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

    // உங்கள் மனதிலும் கேள்விகள் முளைக்கத் துவங்கி விட்டன. //

    .மற்றவர்கள் எப்படியோ? உண்மையில் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதனையும், அது நம்மை வழி நடத்திச் செல்கிறது என்பதனையும் அனுபவபூர்வமாக உண்ர்ந்தவன் நான். எனவே கடவுளின் பெய்ரால் (In the name of God) சிலர் செய்யும் சில காரியங்களைப் பார்க்கும் போது சில கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன.

    // கோவிலில் மூலவரைப் படம் எடுக்கக் கூடாதென்றால் தொலைக் காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் படங்கள் வெளியாவதெப்படி. அண்மையில் பெங்களூர் அலசூர் கோவிலில் படம் எடுக்க விரும்பி ரூ200/- கொடுத்தேன். மூலவரை எடுக்கவில்லை. காரணங்கள் இல்லாமல் அல்லது தெரியாமல் மூர்க்கத்தனமாகச் சில கொள்கைகளைப் பின் பற்றுபவர்களைக் கண்டால் பற்றிக் கொண்டு வருகிறது. சிதம்பரம் பெருமான்( மூலவரே) விழாக்களின் போது வீதி உலா வரும்போதும் படம் எடுக்கப் போனால் மிரட்டுகிறார்கள். பலரும் வம்பு எதற்கு என்று விட்டு விடுகிறோம் //

    பணம் பத்தும் செய்யும். நீங்கள் கொடுத்த ரூ 200/= அதிகம். எல்லோரும் கோயிலில் வம்பு எதற்கு என்றுதான் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

    ReplyDelete

  20. மறுமொழி > ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // பல கோயில்களில் இதைப்போன்ற சம்வங்கள் உள்ளது.... என்ன காரணம் என்றால் இற்கை ஒளிக்கும் செயற்கை ஒளிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. நமது கமராவில் வருவது செயற்கை ஒளி அந்த ஒளி ஓவியங்களில் படும் போது ஓவியத்தின் வர்ணங்கள் மங்கிப் போவதாக தகவல். அதனால் எடுக்க கூடாது என்பார்கள் இது நான் அறிந்த காரணம்..//

    அப்படி எல்லாம் விஷேசமான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சில கோயில்களில் அங்கு இருக்கும் ஆசாமிகள் படம் எடுக்க அனுமதி தருவதில்லை சில இடங்களில் அனுமதிக்கிறார்கள் (மூலவரைத் தவிர). ஆட்களுக்குத் தகுந்த மாதிரி அதிகாரம் செல்லும்.

    ReplyDelete
  21. மறுமொழி > Mythily kasthuri rengan said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    // சில்பியின் ஓவியங்கள் எனக்கும் பிடிக்கும் அண்ணா! //

    எனக்கும் அவரது கோட்டோவியங்கள் மிகவும் பிடிக்கும். இந்த பதிவினில் அவரைப் பற்றி சுருக்கமாகவே குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்,.

    //நல்ல அலசல் அண்ணா! ஆமா இன்னும் ஏன் பல கோவில்களில் போட்டோ எடுக்க விடமாட்டேன்கிறாங்க !! //

    எல்லாம் சாமிகளின் பெயரைச் சொல்லி ஆசாமிகள் செய்யும் சலம்பல்தான். அறநிலையத்துறை ஆணை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


    ReplyDelete
  22. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அய்யா திரு V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! ஓவியர் சில்பி அவர்களைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுத வேண்டும்.

    // தஞ்சை பெரிய கோயிலில் மூலவர் படம் - அங்கேயே விலைக்கு விற்கின்றனர். விசேஷ தினங்களில் மூலவர் அலங்காரம் பல நாளிதழ்களிலும் வெளியாகின்றன. //

    தகவலுக்கு நன்றி.

    // அட.. நம்ம ஊர் சாமியாச்சே என்று ஆவலுடன் நாம் புகைப்படம் எடுக்க முயற்சித்தால் - அங்கே உள்ள கோஷ்டியினர் விரட்டி விடுவார்கள்.. //

    எல்லாம் ஆளைப் பொறுத்துதான். கோயில்களை படம் எடுக்கும் வெளிநாட்டுக்காரர்களை விரட்டுவதில்லை.

    // ஆனாலும் - சென்ற சதய விழாவின் போது ராஜராஜசோழனின் சிலையை படமெடுக்க விடாமல் ஒரு போலீஸ்காரர் - என்னை துரத்தியது தான் இன்னும் ஏனென்று புரியவில்லை.//

    நீங்கள் விஷேசமான நாட்கள் அல்லாத நாளில் அந்த சிலையை படம் எடுத்து இருக்க வேண்டும். சாதாரண நாட்களில் அங்கு போலீஸ் காவல் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  24. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > KILLERGEE Devakottai said...
    தேவகோட்டை சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் துளசிதரனுக்கு நன்றி!

    // கருவறையை ஏன் படம் எடுக்கக் கூடாது என்பது புரியாத, அறிவியல் ரீதியாக விளக்கப்படாத உண்மையே! ஒரு காலத்தில் பல நல்ல சிற்பங்கள், கோயில் உள் சுவரிலும், தூண்களிலும் உள்ள அழகிய வடிவமைக்கப்ப சிற்பங்களும், நுணுக்கமான வேலைப்படுகளும் படம் பிடிக்கப்பட்டு வெளியானால் அந்த ரகசியங்களும், வடிவமைப்புகளும் காப்பியடிக்கப்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தினால் இருக்கலாம். //

    அப்படி எல்லாம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. திருட்டு பயம்தான் உண்மையான காரணமாக இருக்க வேண்டும்.

    //உங்கள் கேள்விகள் சரியே எங்களுக்கும் தோன்றியதுண்டு!
    எது எப்படியோ, சுப்பு தாத்தாத்தா சொல்லுவது கூட சரிதானோ, ஆராய்ச்சிக்கு உட்படுட்துவதை விட, இது நேர்மறை எண்ணம் தானே என்றும் தோன்றுகின்றது! தங்கள் படங்கள் அருமை ஐயா! //

    தங்கள் நீண்ட கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! சுப்பு தாத்தா சொவது போல, போனோமா சாமி கும்பிட்டோமோ என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  27. மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )

    அய்யா G.M.B அவர்களின் இரண்டாம் கருத்துரைக்கு நன்றி!

    // நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள சில சப்பைக் கட்டுகள் தேவைதான் //

    புத்தூர் கட்டையே சிலசமயம் , ஒரு சப்போர்ட்டுக்குத்தான் என்று சொல்லி சப்பைக் கட்டு போடுவதும் உண்டு.

    ReplyDelete
  28. மறுமொழி > R.Umayal Gayathri said...

    // த.ம 3 பொக்கிஷமாக பாதுகாக்க இருக்கலாம் என நினைக்கிறேன். //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! சரியாகச் சொன்னீர்கள். சாமியின் மீதுள்ள அலங்கார நகைகளை படமெடுத்து வைத்துக் கொண்டு பின்னர் கொள்ளையடிப்பார்களோ என்ற பயம்தான் காரணம்.

    ReplyDelete
  29. மறுமொழி > Angelin said...

    சகோதரி அவர்களுக்கு நன்றி!

    // கட்டிடக்கலை நுணுக்கங்களை பிற நாட்டினர் காப்பியடிக்ககூடாதென்றும் போட்டோ எடுப்பது தடை செய்யபட்டிருக்கலாம் ...முன்பு மனதில் நிலைத்து நிற்கும் நாம் நேரில் கான்பவை ..இப்போ நினைவுகளை மீட்ட புகைப்படம் ஒரு வழி .நீங்கள் எடுத்த படங்கள் அருமை .//

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ ஒன்று. கண் மூடித்தமான நம்பிக்கை அல்லது திருட்டு பயம். அவ்வளவுதான்.

    // இங்கே நாங்க வெளிநாட்டில் எவ்வளவு படங்களை எடுத்தாலும் அனுமதி உண்டு .ஒரு சிறு தொகை டிக்கட்டாக ஒரு சில இடங்களில் கொடுக்கணும் அவ்வளவுதான் //

    இங்கும் சில கோயில்களில் கேமராவுக்கு என்று கட்டணம் உண்டு. ஆனால் மூலவரை மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை. திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் போது கேமராவுக்கு இவ்வளவு கட்டணம் என்று சொல்லும் அறிவிப்பு பலகை உண்டு..

    ReplyDelete
  30. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் பகவான்ஜீ கே.ஏ அவர்களின் கருத்துரைக்கு நன்றி !

    // மனிதனின் ஆயுசு குறைந்து விடும் என்பது அந்த கால மனிதர்களின் நம்பிக்கை .மூலவரின் ஆயுசுமா குறைத்து விடும் ,இதென்ன நம்பிக்கையோ ? த ம +1 //

    மூலவர் ஆயுசு என்று ஒன்றும் கிடையாது. கேட்கும்போது அந்த நேரத்திற்கு கடவுளின் பெய்ரால் (In the name of God) ஒரு சமாதானம் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  31. கோயில்களின் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு வணிக நோக்கம்தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.பெரிய பெரிய கோயில்களின் மூலவர் படத்தினை விலைக்கு விற்கும் காட்சியினை பார்த்திருப்போம். வியாபாரம் தடைபடும் என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
    ஒரு கோயிலில் பின்பற்றப்படம் நடைமுறையினையே, காரணம் அறியாமல்,அறிந்து கொள்ளவும் விரும்பாமல் மற்ற கோயில்களிலும் பின்பற்றப்படுவதே இதற்குக் காரணம் என்று எண்ணுகின்றேன்

    ReplyDelete
  32. நானும் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொல்வதையே வழிமொழிகிறேன். வணிக ரீதியான காரணங்கள் தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல் காமிராவை கோவிலுக்குள் எடுத்து செல்லாமல் இருப்பதே கேமிராவிற்கும் , நமக்கும் நல்லது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  33. முழுத் திருடர்களும் மூடர்களும் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் ...?
    மூலவரை படம் எடுக்காதே என்பது அதுதான்.

    ஒரு காவல் ஆய்வாளர் , (முருக பக்தர்) புதுகைக் கோவிலில் மூலவரைப் படம் எடுக்க சொன்னார்.

    சில நாட்களில் படம் எடுத்த ஒளிப் பதிவாளர் ஒரு விபத்தில் சிக்க
    இவர் அந்தக் கோவிலில் போய் மன்னித்துக் கொள் என்று மனமுருகி வேண்டினார்.

    அப்படி ஒரு கோவில் இருப்பதே எனக்கு தெரியாது!

    ஒருவழியாய் பல ஆண்டுகள் கழித்து சென்று பார்த்தேன்.

    அது மாமூண்டி கோவில் என அழைக்கப்படுகிறது.

    மூலவர் முருகனாக மாற்றப் பட்டிருக்கிறார். அவர் ஒரு ஆசிவக துறவியாக (நற்கலி கோசலர்?) இருக்கலாம்!

    அந்த விபத்து ஒரு அபூர்வ நிகழ்தகவே ..

    என்னை பொறுத்தவரை படம் எடுப்பது மூலவரைப் பாதுகாக்கும்!

    1975 என்று நினைவு பாண்டிச்சேரி ஆய்வுக் குழு ஒன்று தமிழ்நாட்டின் ஒன்னரை லெட்சம் கோவில்களில் மூலவரைப் படம் எடுத்திருகிறார்கள்!

    இந்தப் படங்கள் தான் இன்று நமது ஆதாரம். இவற்றைக் கொண்டுதான் திருடப்பட்ட சிலைகளை மீட்க முடியும்.

    திருடர்கள் சிலைகளை திருட எடுப்பார்கள் என்பதெல்லாம் சும்மா. அவர்கள் சிலைகளையே திருடுகிறார்கள் படம் எடுப்பது ஒன்றும் அவர்களுக்கு சிரமம் அல்ல!
    அதுவும் ரூபாய்க்கு மூணு ஸ்பைகாம் கிடைக்கும் இக்காலத்தில்.

    மூலவரைப் படம் எடுத்தால் அவரது பூர்வாசிரமம் வெளிப்பட்டுவிடும் இன்று மலைமேல் உள்ள கோவில்களில் முருகன் பெருமாளாக அருள்புரிவதும், மலைக்காளி மூக்கு வரை நாமம் போட்டுக் கொண்டு பெருமாள் என மாறுவேடம் பூண்டிருப்பதும் அம்பலப் பட்டுவிடும்.

    எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது..

    மடியில் கணம் எனவே ...
    நீ படம் எடுக்காதே என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள் புத்திசாலி திருடர்கள், முட்டாள் மூடர்கள் அதை பின்பற்றுகிறார்கள்

    ReplyDelete
  34. But I have a different take as follows.

    There is a difference between taking photos for professional reasons like TN Govt taking for the purpose of archives, or foreign journalists for writing in their journals for foreign readers.

    In our case, we go to temples as bhaktas only. We have deep and abiding devotion to the God in the temple. We worship and come back; not to take photos like a tourist. There is no need at all for us to take photos.

    Suppose we want to send such photos to a friend living far away who has no chance of visiting this temple, we can use the photos already published by some professional or TN Govt.

    If you want to go to a temple just to know about it, and write in your blog, you are not a bhakta. In that case, you may take a prior permission from concerned authorities by stating your purpose and paying any fees charged there. No problem.

    On the other hand, a hundreds of devotees are worshiping the Moolavar, and you hide yourself pretend to be a bhakta in the crowd, and exploit the opportunity and take the photo. You are insulting the very idea of worship, the temple, and the devotees. You are breaching the trust. Your act is akin to speaking against the God like an atheist standing in front of the Moolavar! How dare you are !!

    You can respond in Tamil.

    ReplyDelete
  35. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )

    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!

    // கோயில்களின் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு வணிக நோக்கம்தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.பெரிய பெரிய கோயில்களின் மூலவர் படத்தினை விலைக்கு விற்கும் காட்சியினை பார்த்திருப்போம். வியாபாரம் தடைபடும் என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.//

    வணிக நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. நேரில் இதுமாதிரி விஷயத்தை உணர்ந்தவன் என்ற அடிப்படையில், அந்த இடத்தில் அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு ஈகோதான் காரணம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு சொன்ன மறுமொழியைப் பார்க்கவும். ஆசிரியை சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  37. மறுமொழி > Mathu S said...

    ஒரு நீண்ட கருத்துரையைத் தந்த ஆசிரியர் மதுவுக்கு நன்றி!

    // எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது..மடியில் கனம் எனவே ...
    நீ படம் எடுக்காதே என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள் புத்திசாலி திருடர்கள், முட்டாள் மூடர்கள் அதை பின்பற்றுகிறார்கள் //

    இறுதியில் நீங்கள் சொன்ன பதில் “நச்” சென்று இருக்கிறது.

    ReplyDelete

  38. மறுமொழி > Anonymous said..

    அனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! பக்தன், பக்தி என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பக்திமானாக இருந்து கொண்டு கடவுளரின் பட வியாபாரமும் செய்கிறார்கள்.

    எனக்கு வயது 59. இந்த வயதில் நான் ஒரு பக்தனாகவே எல்லா கோயில்களுக்கும் செல்கிறேன். நான் அறிந்த செய்திகளை படங்களோடு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் சிறப்பு என்பதால் புகைப்படம் எடுக்கிறேன். எங்கும் வீண் சர்ச்சைக்கு இடம் கொடுப்பதில்லை.

    ReplyDelete
  39. நான் மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் கருவறையைப் படம் பிடித்தேன்.ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவில் கர்ப்பக்கிருகத்தைப் படம் எடுத்தேன். ஒருவரும் தடுக்கவில்லை. நம்ம ஊரில் கடவுளை என்ன வேண்டுமானாலும் சொல்லித் திட்டலாம். ஆனால் படம் எடுத்தால் மட்டும் புனிதம் கெட்டு விடுமாம். இதே கர்ப்பக்கிருகத்தை போலீஸ் படம் எடுக்கட்டும். வாலைச்சுருட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள். நீங்களே ஆயிரம் ரூபாய் பார்ப்பானிடம் கொடுத்தால் படம் எடுக்கலாம்.

    என்னுடைய இன்றைய பதிவில் இரண்டு படத்தையும் பிரசுரித்திருக்கிறேன்

    ReplyDelete
  40. எனக்கும் இது மூடநம்பிக்கையாகவே தோன்றுகிறது! நான் பூஜை செய்யும் கோயில் மூல்வரை படம் எடுத்துள்ளோம்! டீவியிலும் வந்துள்ளது! இறைவனைத் தேடி பக்தன் வரவேண்டும் பக்தனை நாடி இறைவன் வரக்கூடாது. கோயிலில் இருக்கும் தூய்மை வீட்டில் இருக்காது. அதனால் படம் எடுக்க கூடாது என்றெல்லாம் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

    ReplyDelete
  41. தங்களது ஆதங்கத்தை தாங்கள் எடுத்த படங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...
    எதற்காக இப்படிச் சொல்கிறார்கள் அல்லது நாம் பின்பற்றுகிறோம் என்பதற்கு தெளிவான விளக்கம் யாருக்கும் தெரிவதில்லை...

    ReplyDelete
  42. நமது கோவில்கள் பழங்கால பண்பாட்டு சின்னங்கள். அதில் உள்ளிருக்கும் மூலவர்கள் பொக்கிஷங்கள். அவர்களை அனாவசியமாக யாரும் பார்க்கக்கூடாது என்ற காரணத்தால் தான் படம் எடுக்கக்கூடாது.

    இதைச் சொன்னவர் ஒரு பிரென்சு தோழி தான்.

    ReplyDelete
  43. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    எனது பதிவினைப் பற்றி சொல்லி தனி ப்திவு ஒன்றினைத் தந்த அய்யா அவர்களுக்கு நன்றி! நேற்றே உங்கள் பதிவினைப் பார்த்து விட்டேன். நேற்று வலைப்பதிவர் ஆசிரியர் முத்து நிலவன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவினுக்கு புதுக்கோட்டை சென்றுவிட்ட படியினால் எனது பதிவினில் உடன் மறுமொழியும், உங்கள் பதிவினில் கருத்துரையையும் எழுத இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    அய்யா அவர்களின் நீண்ட கருத்துரைக்கும் நன்றி! நீங்கள் சொல்வது சரிதான். நம்நாட்டில் பல விஷயங்களில் பல இடங்களில் பணப்பிரயோகம்தான் காரியசித்திக்கு வழி வகுக்கிறது.


    ReplyDelete
  44. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > சே. குமார் said...

    சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்வது போல இதற்கு தெளிவான விளக்கம் இல்லை.

    ReplyDelete
  46. மறுமொழி > அருணா செல்வம் said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // நமது கோவில்கள் பழங்கால பண்பாட்டு சின்னங்கள். அதில் உள்ளிருக்கும் மூலவர்கள் பொக்கிஷங்கள். அவர்களை அனாவசியமாக யாரும் பார்க்கக்கூடாது என்ற காரணத்தால் தான் படம் எடுக்கக்கூடாது. இதைச் சொன்னவர் ஒரு பிரென்சு தோழி தான். //

    பிரெஞ்சுத் தோழி சொன்ன காரணம் சரியானதாகத் தெரியவில்லை. ஈகோவும், மூடநம்பிக்கையுமே காரணம் என்று நினைகிறேன்.

    ReplyDelete
  47. மூலஸ்தானத்தில் புகைப்படம் எடுப்பது தவறு. ஏனெனில், கருவறையில் உள்ள அருட்பேராற்றல் சக்தி-காந்தக்கதிர்கள், காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியை , புகைப்படம் எடுப்பதால் புகைப்பட கருவி மூலம் வெளியேறும் புற ஊதாக்கதிர்களால் எதிர் வினை ஏற்படும். மேலும் நாளடைவில் இறை அருட் பேறாற்றல் முழுமையாக மறைந்து விட வாய்ப்புகள் அதிகம். காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியை கருவறைக்கு மேல் உள்ள கோபுர கலசத்தின் மூலமாக ஆகர்ஷணம் செய்யப்பட்டு கருவறையில் உள்ள இறை உருவ விக்கிரகத்துக்கு அனுப்பப்படும். விக்கிரகத்துக்கு கீழ் அந்தந்த மூர்த்திக்கு ஏற்ப சக்தி யந்திரம் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த சக்தி யந்திரம், கோபுர கலசம் வழியாக மூலஸ்தானத்திற்குள் வரும் பிரபஞ்ச சக்தியை இறை அருட் பேறாற்றலாக மாற்றி, கோயிலுக்கு ஒரு நிலைப்பட்ட மனதுடன் வரும் பக்தர்கள் அருட் பிரசாதமாக பெற வழி வகுக்கும்.
    கற்பூர ஆரத்தி, தீர்த்தம், பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், நெய்வேத்யம் இது போன்ற பொருட்களை கருவறையிலிருந்து எடுத்து வரும் போதும் கண்ணிற்கு புலப்படாத காந்த சக்திகள் கலந்து வரும். எனவேதான் மின்சார விளக்கும் போடுவதில்லை. கருவறையின் மேலுள்ள கோபுரமும் இறை சக்தியுடையவை. அதன் மேலும் மின் விளக்குகள் கண்டிப்பாக போடக்கூடாது.
    இந்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். கி.ஸ்ரீநிவாசன் வாஸ்து ஆலோசகர்.

    ReplyDelete