Sunday 28 July 2013

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை



எனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இருப்பது தஞ்சை மாவட்டத்தில். பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் உடம்புக்கு ஏதாவது என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில் பார்ப்பார்கள். உடல்நிலை ரொம்பவும் மோசம் என்றால் உடனே நோயாளியை எடுத்துச் செல்லும் இடம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை( THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL )தான். இவர்களுக்கு மட்டுமல்ல தஞ்சை மாவட்டம் அதைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டக்காரர்களுக்கும் மிகவும் நம்பிக்கையான மருத்துவமனை இதுவே ஆகும். விபத்து அல்லது விஷம் குடித்தல், வெட்டு குத்து போன்ற நிலைகளில் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் நேரே இங்குதான். ஒரு அரசு மருத்துவமனை மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது நல்ல விஷயம்தான். எல்லோரும் இந்த மருத்துவமனையை “மெடிக்கல்” (MEDICAL) என்றுதான் அழைக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை இந்த மெடிக்கலில் ஒருவரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பஸ் ஸ்டாப்பில் ஒருவர் சொன்னது “ சார்! நான் மட்டும் இங்கு மெடிக்கலுக்கு வரவில்லை என்றால் செத்தே போயிருப்பேன் சார்! நன்றாக பார்க்கிறார்கள். மருந்து எல்லாமே இலவசம். வெளியில் பார்த்துக் கொள்ள எனக்கு வசதி இல்லை.“ என்றார். அவர் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்காரர். அந்த மருத்துவமனைக்கு வரும் பலரும் இதுமாதிரி  சொல்லக் கேட்கலாம்.  வசதி படைத்தவர்களும் இங்கு வருகிறார்கள். உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் என்று எப்போதும் மக்கள் கூட்டம்.

இவ்வளவு மருத்துவ வசதியை இலவசமாக செய்து தரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வருகின்ற மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம். இதனைக் கண்கூடாகக் காணலாம். அங்கு வரும் மக்களிடம் சுத்தம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மருத்துவமனை வரலாறு:

1958- இல் அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி (THANJAVUR MEDICAL COLLEGE) க்கு அடிக்கல் நாட்டினார். அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ A Y S பரிசுத்தம் நாடார் அவர்கள் கல்லூரிக்கான வைப்புத் தொகையையும். கல்லூரிக்கான 89 ஏக்கர் இடத்தையும் தஞ்சை ரோட்டரி சங்கம் (ROTARY CLUB OF THANJAVUR) சார்பாக தந்தார். அப்போது சென்னை மாகாண முதன் மந்திரியாக இருந்த தலைவர் கு காமராஜ் அவர்கள் இந்த தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல் தந்தார். 1959 இல் தஞ்சை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் ,அங்கு பயின்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் (பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள) ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை ( Govt. Raja Mirasdar Hospital ) இல் பயிற்சி டாக்டர்களாக பயிற்சி பெற்றனர்.

பின்னர் மக்கள் தொகை, பயிற்சி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக 1964 இல் (இப்போதும் சென்னை மாகாண முதன்மந்திரியாக இருந்தவர் தலைவர் கு காமராஜ் அவர்கள்)  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (THANJAVUR MEDICAL COLLEGE HOSPITAL ), பிரிக்கப்படாத தஞ்சாவூர், நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை   மாவட்ட மக்களுக்காக தொடங்கப் பட்டது.  அன்றிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த மருத்துவ மனையைப் பயன்படுத்தி வருகின்றனர். மக்களால் மறக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் சாதனைகளில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று.

புகைப் படங்கள்:

இரண்டு வாரங்களுக்கு முன், எனது உறவினர் பையன் ஒருவன் பள்ளி இடைவேளையின்போது பெஞ்சுகளின் மீது ஏறி விளையாடியபோது கீழே விழுந்து விட்டான். அவனுக்கு அடி வயிற்றில் நல்ல அடி. 108 ஆம்புலன்சு மூலம் இங்கே கொண்டு வந்தார்கள். அவனை இரண்டு முறை சென்று பார்த்தேன். மறுபடியும் சென்ற வாரம் அங்கு சென்றபோது மெடிக்கலில் சில கட்டிடங்களை படம் எடுத்தேன்.

படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பகால கட்டிடம்


படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம்



படம்: (மேலே) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  புதிய கட்டிடம் ( புற நோயாளிகள் பிரிவு )





49 comments:

  1. அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள், ஐயா.

    தஞ்சை மருத்துவமனைக்கு என்று ஒரு நல்ல் பெயர் இப்போதும் மக்களிடையே நிலவுவது மகிழ்ச்சியான செய்தி தான்.

    பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. படங்களுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. பொதுவாக நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வோம். ஆனால் நாமே நம் சொத்து என்பதையும் பொதுச் சொத்து என்பதையும் பாகுபடுத்திப் பார்த்து பொதுச் சொத்து என்றால் எங்கே வேண்டுமானாலும் காறித்துப்பலாம் என்கிற அளவுக்குத்தான் நம் குணங்களை வளர்த்து இருப்போம். இங்கே உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப்படித்தான் உள்ளது. மக்களின் எண்ணங்கள் மாறாத வரைக்கும் இங்கே மாற்றங்கள் என்பது நெடுந்தொலைவில் தெரியும் வெளிச்சமே.

    ReplyDelete
  4. நல்ல புகைப்படங்கள்.....

    அலுவல் விஷயமாக ஒரு வாரம் தஞ்சாவூரில் இருந்து தினம் தினம் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு அனுபவங்கள் அங்கே.....

    அவற்றை நினைவிற்குக் கொண்டு வந்தது உங்கள் பகிர்வு.......

    ReplyDelete
  5. படங்களும்விளக்கமும்நன்று

    ReplyDelete
  6. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    திரு VGK அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    சகோதரரின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...// இங்கே உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் இப்படித்தான் உள்ளது. மக்களின் எண்ணங்கள் மாறாத வரைக்கும் இங்கே மாற்றங்கள் என்பது நெடுந்தொலைவில் தெரியும் வெளிச்சமே. //

    மக்கள் மத்தியில் பொதுசுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சி இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  9. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...
    நீண்ட இடைவெளிக்குப் பின் வந்த பேராசிரியருக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete

  12. நாங்கள் திருச்சியில் இருந்த சமயம் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஒரு உடற்கூறு எக்சிபிஷன் நடத்தினார்கள். மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. சுற்றுப்புற மக்கள் எல்லோரும் கண்டு பயனடைந்தார்கள். இப்பதிவு படிக்கும்போது அதுவே நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  13. தஞ்சையில் 1970 ல் டாக்டர் கருணாகரன் அவர்கள் சிவில் சர்ஜனாகவும் டாகர் எம். கிருஷ்ணசுவாமி அவர்கள் கார்டியலாஜிஸ்ட் மற்றும் ஜெனெரல் மேடிசின் வல்லுனராகவும் செயல்பட்டார்கள்.

    ஒரு சமயம் , ஒரு நபர் கத்தியால் தனது லிவரில் மிகவும் மோசமாக குத்தப்பட்டு உயிர் பிரியும் நிலையில் வந்து அட்மிட் ஆனார். அவரை உடனடியாக இரவு 2 மணிக்கு அவசர சர்ஜரி செய்து பிழைக்கசெய்தவர் டாக்டர் கருணாகரன் அவர்கள். இவர் இப்பொழுது அமெரிக்காவில் மிச்சிகன் ல் தனது இரு பெண்கள், இருவருமே டாக்டர்கள் ஒருவர் கார்டியாலஜிஸ்ட், இன்னொருவர் ஜைனகாலஜீஸ்ட் , மூவரும் கருணாகர மெடிக்கல் அச்சொசியட்ஸ் என்று நிறுவி தொண்டு புரிகின்றனர்.

    இன்னொருவர் நல்ல பாம்பு கடித்து அட்மிட் ஆனவர். ஒவ்வொரு இருபது நிமிட நேரத்திற்கும் அவருக்கு ஒரு ஊசி போட்டு, இரவு மட்டுமல்ல, அடுத்த 48 மணி நேரமும் அவர் கூடவே இருந்து அவரை பிழைக்கவைத்தவர் டாக்டர் எம்.கிருஷ்ணசுவாமி. இவர் மகன் மஹாதேவன். அவர்களும் டாக்டர். அவரது பெண்ணை சமீபத்தில் நடந்த ஒரு ப்ளாகர் பதிவு ஹையாத் ரேஜென்ஷி யில் நடந்தது. அவர்களிடம் பேசும்போது நினைவு கூர்ந்தேன்.

    தஞ்சையில் ஒரு தடவை எனக்கு செஸ்ட் பைன் என்று அவரிடம் கன்சல்டேஷனுக்கு சென்றேன். என்னை பரிசோதித்த பின்,இ.சி.ஜி. எல்லாம் எடுத்தார். உள்ளே சென்றார். ஒரு 30 நிமிட நேரம் கழித்து தான் வந்தார். வந்து ஒரு புத்தகம் தந்தார். என்னவென்று பார்த்தேன்.

    வைத்தியநாத சுவாமி ஸ்தோத்திரம். வைத்தீஸ்வரன் கோவில் சுவாமி அவர்கள் குல தெய்வம்.

    நான் ஏதோ மருந்து எழுதி தருவீர்கள் என்று பார்த்தால் ஒரு தோத்திர புத்தகம் தருகிறீர்களே என்றேன்.

    இப்போதைக்கு இது போதும். உங்களுக்கு உடம்பு மருந்து சப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. டூர் போகும்போது செஸ்ட் பின் வந்தால் இதை படியுங்கள். என்றார். நானும் அப்படித்தான் செய்கிறேன் என்றார்.

    புத்தகத்தை திறந்து பார்த்தேன்.

    சம்போ மகா தேவ தேவா சிவா
    சம்போ மகா தேவ தேவேச சம்போ.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பற்றிய தகவல்கள் மற்றும் அதன் வரலாறு அறிந்தேன்.படித்தவர்கள் கூட பொது இடங்களை எந்தவித குற்ற உணர்வும் இன்றி அசுத்தம் செய்கின்றனர்.

    ReplyDelete
  15. தஞ்சை மருத்துவக் கல்லூரி பற்றிய விவரங்கள் அருமை அய்யா. சுத்தம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் அவசியம் தேவை அய்யா.அடுத்த முறை தஞ்சைக்கு வரும் பொழுது தங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன் அய்யா. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு எதிரில்தான் என் இல்லம் உள்ளது. அடுத்த முறை தஞ்சை வரும்பொழுது அன்போடு தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன்.
    எனது அலைபேசி எண்
    94434 76716
    தாங்கள் கூறியபடி கணினியுடனான எனது அனுபவங்களை எழுதிவிட்டேன் அய்யா. இரண்டொரு நாளில் பதிவிடுகின்றேன். நன்றி அய்யா

    ReplyDelete
  16. மறுமொழி > G.M Balasubramaniam said... // இப்பதிவு படிக்கும்போது அதுவே நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு நன்றி. //
    பழைய நினைவினைச் சொன்ன GMB அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > sury Siva said...// இப்போதைக்கு இது போதும். உங்களுக்கு உடம்பு மருந்து சப்பிடும்படியாக ஒன்றும் இல்லை. டூர் போகும்போது செஸ்ட் பின் வந்தால் இதை படியுங்கள். என்றார். நானும் அப்படித்தான் செய்கிறேன் என்றார். //

    நீங்காத நினைவுகளைச் சொன்ன சுப்பு தாத்தாவிற்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > T.N.MURALIDHARAN said..
    மூங்கிற் காற்று முரளிதரனுக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்புக்கு நன்றி! தங்களின் கணினி பற்றிய அனுபவக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சந்தர்ப்பம் அமையும் போது சந்திக்கிறேன். நன்றி!

    ReplyDelete

  20. தஞ்சை மருத்துவக்கல்லூரி பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி. எனது மாமா மகன் அந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது 1964 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை அங்கு சென்றிருக்கிறேன். அப்போது புதிதாய் ஆரம்பித்து இருந்தததால், மருத்துவ மனையும் மாணவர் விடுதியும் படு சுத்தமாய், அழகாய் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது பொதுமக்கள் அதை சுத்தமாக வைத்திருக்க உதவவில்லை எனக் கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  21. நானும் தஞ்சையில் மூன்றாண்டுகள் (1981-84) பணியாற்றியிருக்கிறேன். அங்கு எங்களுடைய வங்கி கிளையை துவக்க முடிவு செய்து என்னை மேலாளராக நியமித்தனர். டவுனுக்குள் வீடு எதுவும் கிடைக்காததால் மருத்துவக்கல்லூரிக்கு அருகில் அப்போது புதிதாக முளைத்திருந்த காலனியில்தான் குடியிருந்தேன். டவுனுலிருந்து சுமார் 12 கிமீ. இருசக்கர வாகனம்தான். அப்போது தஞ்சை சாலைகளில் சைக்கிள்கள்தான் மிகவும் பிரசித்தம். முழு சாலையையும் அடைத்துக்கொண்டு செல்வார்கள். அவர்களாக பார்த்து விட்டால்தான் ஸ்கூட்டருக்கு வழி. ஒருநாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு வங்கிக்கு வாடகைக்கு தருவதாக கூறிய ஒருவரை சந்திக்க அவசரமாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் எதிரில் வந்த சைக்கிள் சிறுவனுடன் மோதி முட்டியில் காயம். ஒரு நாள் முழுவதும் தஞ்சை மருத்துவமனையில்தான் இருந்தேன். அப்போது செல்ஃபோன் இல்லாமல் மனைவிக்கும் விவரம் தெரிவிக்க முடியாமல் பட்டப்பாடு உங்களுடைய பதிவைப் படித்ததும் மீண்டும் நினைவுக்கு வந்தது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தஞ்சை போன்ற நகரில் வாழ்ந்தது ஒரு புதிய அனுபவம். அதை மறக்கவே முடியாது.

    ReplyDelete
  22. இப்போது பொதுமக்கள் அதை சுத்தமாக வைத்திருக்க உதவவில்லை எனக் கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கிறது. //

    எண்பதுகளிலேயே அந்த நிலைதான். ஒரு நாள் முழுவதும் அந்த சூழலில் படுக்கையில் ப்ல்லைக்கடித்துக்கொண்டு இருந்துவிட்டு விடிந்தால் போதும் என்று மருத்துவர்களை நிர்பந்தித்து டிஸ்சார்ஜ் பெற்றுக்கொண்டு வெளியேறினேன்.

    ReplyDelete
  23. மறுமொழி > வே.நடனசபாபதி said... // எனது மாமா மகன் அந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது 1964 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை அங்கு சென்றிருக்கிறேன். அப்போது புதிதாய் ஆரம்பித்து இருந்தததால், மருத்துவ மனையும் மாணவர் விடுதியும் படு சுத்தமாய், அழகாய் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது பொதுமக்கள் அதை சுத்தமாக வைத்திருக்க உதவவில்லை எனக் கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கிறது. //
    இப்போதும் புதிய கட்டிடங்கள் ஓரளவு சுத்தமாக இருக்கின்றன. பழைய கட்டிடங்களில்தான் இந்த நிலைமை. இருந்தாலும் அங்கு வரும் மக்கள் சகித்துக் கொள்கிறார்கள். காரணம் நல்ல சிகிச்சைதான்.

    ReplyDelete
  24. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... ( 1, 2 )
    தாங்கள் தஞ்சையில் இருந்த காலத்தை நினைவுபடுத்தி சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  25. நற்சேவை ஆற்றும் மருத்துவமனை மக்களால் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  26. நல்ல மருத்துவமனை. மக்களும் உணர்ந்து நடந்தால் மேலும் சிறப்புறுமே.

    ReplyDelete
  27. மறுமொழி > சென்னை பித்தன் said...
    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி > மாதேவி said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. தஞ்சை மருத்துவக்கல்லூரி பற்றிய தகவல்களையும் சிறப்பம்சங்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  30. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. தமிழ் இளங்கோ அய்யா, தங்களது மெயில் ஐடியை senthilkkum@gmail.com, pattikattaan@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பி வைத்தால் விவரங்களை தங்களுக்கு அனுப்ப தோதுவாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  32. மறுமொழி > ஆரூர் மூனா செந்தில் said...
    ஆரூர் மூனா செந்தில் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் இருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி!

    ReplyDelete
  33. அன்றைய ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் இலங்கைக்கு விஐயம் செய்த போது எங்கள் பாடசாலையுடன் தெருவில் வரிசையாக நின்று கொடி ஆட்டி அவரை வரவேற்றது நினைவு வருகிறது. தொடர் பதிவு எழுதிப் போடுகிநேன் .அழைப்பிற்கு மிக்க நன்றி.
    இந்த ஆக்கம் பல தகவல்கள் நிறைந்தது. பதிவிற்கு நன்றி.
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. மறுமொழி > kovaikkavi said...

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > Mondia dinaex said...
    தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  36. அன்பின் தமிழ் இளங்கோ

    நான் பிறந்தது தஞ்சை மாநகரம். 1950-1962 தஞ்சையில் வசித்த காலம். தஞ்சை மாநகரத்தினைப் பற்றி சில பதிவுகள் நான் வலைப்பூ துவங்கிய காலத்தில் எழுதி இருக்கிறேன்.

    http://cheenakay.blogspot.co.uk/2007/08/4.html

    இப்பதிவினில் அரசு பொது மருத்துவ மனையினைப் பற்றீ எழுதி உள்ளேன்.

    நகரின் அரசு பொது மருத்துவ மனையின் விபத்து மற்றும் அவசரப் பிரிவு இருந்த கட்டடத்தின் பெயர் தாமஸ் ஹால். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தஞ்சையை விட்டு செல்லும் வரை அதனை நானும் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தாஜ் மகால் என்று தான் அழைத்தேன். அங்கு பல தடவை சென்ற அனுபவம் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டில் யாரையாவது ஏதாவது பூச்சி அல்லது தேள் கடித்துவிடும். உடனே தாஜ் மகாலுக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். அந்த மருத்துவ மனையைச் சார்ந்த மருத்துவர்களின் நட்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை எனக்குப் பிடித்த ஒன்று. தற்கால பொது மருத்துவ மனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மருத்துவம் செய்யும் முறை தற்காலச் சூழ்னிலைக்கேற்ப பல மாற்றங்களை அடைந்து விட்டது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  37. அன்பின் தமிழ் இளங்கோ - பதிவு அருமை - தஞ்சை மருத்துவ மனையினைப் பற்றிய பதிவு - விளக்கங்களும் படங்களும் அருமை. அப்படியே மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  38. அன்பின் தமிழ் இளங்கோ

    http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html

    இனறைய வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன் - படித்தேன் - மறுமொழி இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  39. அன்புடையீர்!.. வணக்கம். வலைச்சரம் மூலமாக வந்தேன்!..தஞ்சை மருத்துவக்கல்லூரியினைப் பற்றிய அருமையான பதிவு!.. நகரின் மையத்தில் உள்ள தாமஸ் ஹாலும் புறத்தே உள்ள மெடிக்கலும் தாங்கள் கூறியுள்ளபடி மக்களின் மனங்களுடன் கலந்து விட்டவை!.. மருத்துவக் கல்லூரியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்த காலமும் ஒன்று உண்டு!.. மீண்டும் அந்த நிலையை அடைந்திட வேண்டும் என்பதே ஆவல்!..

    ReplyDelete
  40. மறுமொழி> cheena (சீனா) said... (1)
    // நான் பிறந்தது தஞ்சை மாநகரம். 1950-1962 தஞ்சையில் வசித்த காலம். தஞ்சை மாநகரத்தினைப் பற்றி சில பதிவுகள் நான் வலைப்பூ துவங்கிய காலத்தில் எழுதி இருக்கிறேன்.
    http://cheenakay.blogspot.co.uk/2007/08/4.html
    இப்பதிவினில் அரசு பொது மருத்துவ மனையினைப் பற்றீ எழுதி உள்ளேன். //
    அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவை மீண்டும் படித்தேன். உங்களது அந்தக்கால தஞ்சை எனது சிறுவயது நினைவலைகளைத் தொட்டது. தாமஸ்மகால் என்பது தாஜ்மகால் ஆனது சுவையான விஷயம்தான்.

    ReplyDelete
  41. மறுமொழி> cheena (சீனா) said... (2)
    // அன்பின் தமிழ் இளங்கோ - பதிவு அருமை - தஞ்சை மருத்துவ மனையினைப் பற்றிய பதிவு - விளக்கங்களும் படங்களும் அருமை. அப்படியே மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    உங்கள் தஞ்சை பற்றிய மலரும் நினைவுகளை மீண்டும் படிக்க வேண்டும். எனது அம்மாவின் ஊர் தஞ்சை மாவட்டம் என்ற வகையில் நானும் அந்த மண்ணின் மைந்தன் ஆகிவிடுகிறேன்.


    ReplyDelete

  42. மறுமொழி> cheena (சீனா) said... (3)
    // இனறைய வலைச்சரம் மூலமாக இங்கு வந்தேன் - படித்தேன் - மறுமொழி இட்டுள்ளேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    மறுமொழியும் நல்வாழ்த்துக்களும் சொன்ன வலைச்சரம் பொறுப்பாசிரியரான உங்களுக்கு எனது நன்றி! என்னை அறிமுகம் செய்த சகோதரி அகிலாவுக்கும் நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி> துரை செல்வராஜூ said...
    // அன்புடையீர்!.. வணக்கம். வலைச்சரம் மூலமாக வந்தேன்!..தஞ்சை மருத்துவக்கல்லூரியினைப் பற்றிய அருமையான பதிவு!..//

    தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு வணக்கம்! தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // நகரின் மையத்தில் உள்ள தாமஸ் ஹாலும் புறத்தே உள்ள மெடிக்கலும் தாங்கள் கூறியுள்ளபடி மக்களின் மனங்களுடன் கலந்து விட்டவை!.. மருத்துவக் கல்லூரியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருந்த காலமும் ஒன்று உண்டு!.. மீண்டும் அந்த நிலையை அடைந்திட வேண்டும் என்பதே ஆவல்!.. //

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீண்டும் தூய்மையாக மாற வேண்டும் என்பது அனைவரது ஆசை. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  44. அன்பின் தமிழ் இளங்கோ - ஏற்கனவே இப்பதிவின்னை இரசித்துப் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். இருப்பினும் தஞ்சை நான் பிறந்த ஊர் என்பதனால் அவ்வூரைப் பற்றிய பதிவுகள் என்றால் உடனே படித்து மகிழ்வேன். அதனால் மறுபடியும் மறுபடியும் படித்தேன். பதிவு அருமை.

    மறுமொழிகளைப் பார்க்கையில் வங்கிப் பணியாற்றி பணி நிறைவு செய்த நண்பர்கள் வே.நடன சபாபதி, டி. ஆர். பி ஜோசஃப், தாயின் வழியில் தஞ்சை மைந்தனாகிய தாங்கள், மற்றும் நானும் தஞ்சையில் சில காலம் வசித்திருக்கிறோம் - இன்றும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கிறோம் என எண்ணி மகிழ்கிறேன்.

    நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  45. அன்பின் தமிழ் இளங்கொ - சுப்பு தாத்தாவின் மறு மொழி - அவர் தஞ்சையில் வசித்த காலத்தில் ( 1970) இருந்த மருத்துவ நண்பர்களை நினைவு கூர்ந்து - நிகழ்வுகளை மறுமொழியில் எழுதி மகிழ்ந்தது நன்று - வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாத சுவாமியின் ஸ்தோத்திரப் புத்தகத்தை அளித்த மருத்தவ நண்பரை நினைவில் வைத்து எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  46. மறுமொழி > cheena (சீனா) said...

    அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்!

    // அன்பின் தமிழ் இளங்கோ - ஏற்கனவே இப்பதிவின்னை இரசித்துப் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். இருப்பினும் தஞ்சை நான் பிறந்த ஊர் என்பதனால் அவ்வூரைப் பற்றிய பதிவுகள் என்றால் உடனே படித்து மகிழ்வேன். அதனால் மறுபடியும் மறுபடியும் படித்தேன். பதிவு அருமை. //

    நானும் உங்களைப் போல தஞ்சையைப் பற்றிய பதிவுகள் என்றால் ஆர்வத்துடன் படிப்பேன். வங்கி வேலையில் சேர்ந்ததும் திருவையாறு பக்கம் மாற்றல் வாங்கி போக ஆசைப்பட்டதுண்டு. ஆனால் வீட்டில் பெற்றோர்கள்தான் விடவில்லை. அவர்களுக்கு திருச்சிதான் பிடித்தது.

    // மறுமொழிகளைப் பார்க்கையில் வங்கிப் பணியாற்றி பணி நிறைவு செய்த நண்பர்கள் வே.நடன சபாபதி, டி. ஆர். பி ஜோசஃப், தாயின் வழியில் தஞ்சை மைந்தனாகிய தாங்கள், மற்றும் நானும் தஞ்சையில் சில காலம் வசித்திருக்கிறோம் - இன்றும் மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்திக்கிறோம் என எண்ணி மகிழ்கிறேன். //

    எல்லோருக்கும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் தஞ்சை நினைவுகள் உண்டு. நானே சிலசமயம் தஞ்சையை மட்டும் குறிப்பிடும் உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தது உண்டு.

    ReplyDelete
  47. மறுமொழி > cheena (சீனா) said...

    // அன்பின் தமிழ் இளங்கோ - சுப்பு தாத்தாவின் மறு மொழி - அவர் தஞ்சையில் வசித்த காலத்தில் ( 1970) இருந்த மருத்துவ நண்பர்களை நினைவு கூர்ந்து - நிகழ்வுகளை மறுமொழியில் எழுதி மகிழ்ந்தது நன்று - வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாத சுவாமியின் ஸ்தோத்திரப் புத்தகத்தை அளித்த மருத்தவ நண்பரை நினைவில் வைத்து எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    சூரி என்கிற சுப்பு தாத்தாவின் கருத்துரைகளையும் மறுமொழிகளையும் தொகுத்தாலே நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளலாம். அவர் பதிவுகளை படிக்கும்போது மனச்சோர்வுக்கு ஆறுதல் கிடைப்பதை உணரலாம்.

    அன்பின் சீனா அவர்களுக்கு மீண்டும் நன்றி!

    ReplyDelete