Wednesday, 3 July 2013

திருச்சியில் மூத்த பதிவர் திரு GMB அவர்களோடு ஒரு இனிய சந்திப்புசென்ற வாரம் ஞாயிறு (30.ஜூன்.2013),  மாலை எனது மின்னஞ்சலைத் திறந்தபோது ஒரு செய்தி எனக்காக காத்து இருந்தது. திரு VGK (வை கோபாலகிருஷ்ணன்) ( http://gopu1949.blogspot.in   )  அவர்களிடமிருந்து வந்து இருந்தது. செய்தி இதுதான். மூத்த வலைப்பதிவர் திரு G M பாலசுப்ரமணியம் (gmb writes) ( http://gmbat1649.blogspot.in )அவர்கள் புண்ணிய தலயாத்திரை (PILGRIMAGE) (திருச்சி, வைத்தீஸ்வரன் கோயில், மற்றும் சிதம்பரம் ) வரும்போது திருச்சியில் தங்குகிறார்; பெங்களூரிலிருந்து இரண்டாம் தேதி புறப்பட்டு திருச்சியில் மூன்றாம் தேதி வந்து சமயபுரம் கோயில் , ரங்கநாதர் கோயில் திருவானைக்கா எல்லாம் போக உத்தேசம். அவரும் அவரது மனைவியும் , மூத்த மகனும் வருகிறார்கள். அப்போது திருச்சியிலுள்ள பதிவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார் என்பதுதான். நல்ல செய்திதான். நான் இருவருக்கும் மின்னஞசலில் மறுமொழி கொடுத்து காத்து இருந்தேன்.

இன்று காலை (03.07.2013 புதன்) திரு GMB அவர்களை செல் போனில் தொடர்பு கொண்டபோது. காலையிலேயே திருச்சி வந்துவிட்டதாகவும் ,திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள  PL.A.KRISHNA INN – இல் தங்கி இருப்பதாகவும்.  இப்போது ஸ்ரீரங்கம் சென்று இருப்பதாகவும், மாலையில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். . திரு VGK (வை கோபாலகிருஷ்ணன்) அவர்களோடு செல்போனில் பேசியதில் அவரும் மாலையில் திரு GMB அவர்களை விடுதியில் சந்திக்கலாம் என்று சொன்னார்.

சொன்னபடியே மாலை திரு GMB அவர்களை சந்திக்க அவர் தங்கி இருந்த இடத்திற்குச் சென்றேன். அதற்கு முன்னர் அந்த விடுதியினை எதிரே இருந்த கட்டிடத்திலிருந்து ஒரு படம் எடுத்துக் கொண்டேன். நான் அவர் தங்கியிருந்த அறைக்கு (மூன்றாவது மாடி, அறை எண் 317) சென்றபோது எனக்கு முன்னதாகவே திரு VGK அவர்கள் வந்து விட்டார். என்னை திரு VGK,  திரு GMB மற்றும் GMB அவர்களின் மனைவி மூவரும் என்னை வரவேற்றனர். திரு GMB அவர்களுக்கு  திரு VGK அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தார். பின்னர் அவர் எழுதிய புத்தகம், மற்றும் மணிபர்ஸ் ஒன்றினையும் (எனக்கும் அதே போல்) தந்தார்.மேலும் திரு VGK (வை கோபாலகிருஷ்ணன்)  அவர்கள் தனது திருமண நாள் என்பதால் இனிப்பு சாக்லேட் அனைவருக்கும் தந்தார். நான் மூத்த பதிவர்கள் இருவருக்கும் புத்தகங்களை அன்புப் பரிசாகத் தந்தேன். சற்று நேரத்தில் GMB அவர்கள் ஆர்டர் செய்த காபியும் நொறுக்குத் தீனியும் வந்தன. மூத்த பதிவர்களோடு பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. பேசிக் கொண்டு இருந்தபோதே  GMB அவர்களின் மூத்த மகனும் அவரது நண்பரும் வந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு VGK அவர்களும் நானும் விடைபெற்றுக் கொண்டோம். 

அப்போது எடுத்த புகைப்படங்கள் கீழே. ( திரு GMB அவர்களின் மனைவி,  தனது புகைப்படம் பதிவுகளில் வருவதை விரும்புவதில்லை என்பதால் அவரது புகைப்படம் எதுவும்  இங்கு பதியவில்லை )

 படம்.1 (மேலே) திரு GMB அவர்கள் திருச்சியில் தங்கிய விடுதி PL.A.KRISHNA INN

 
படம்.2 (மேலே) திரு VGK அவர்கள் திரு GMB அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார்.

படம்.3 (மேலே) திரு GMB அவர்களுக்கு நான் அளித்த நூல் ஒன்று.

  படம்.4 (மேலே) திரு VGK, திரு GMB மற்றும் அடியேன்

படம்.5 (மேலே) திரு VGK அவர்கள் திரு GMB அவர்களுக்கு மணிபர்ஸ் ஒன்றை பரிசாக வழங்குகிறார்.

படம்.6 (மேலே) திரு VGK அவர்கள் எனக்கு மணிபர்ஸ் ஒன்றை பரிசாக வழங்குகிறார்.

படம்.7 (மேலே) திரு VGK அவர்களுக்கு நான் பரிசாக அளித்த நூல் ஒன்று


பின்குறிப்பு: 
இதில் இடம் பெறாத சில படங்களை வை.கோபாலகிருஷ்ணன் (திரு VGK ) அவர்கள் வெளியிடும்  பதிவில் எதிர்பார்க்கலாம்

 

42 comments:

 1. மூத்த பதிவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!அவரின் வழிக்காட்டுதல் நமக்கு தேவை

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா, அங்கு அளிக்கப்பட்ட சூடான சுவையாக தூள் பக்கோடாக்கள் போலவே, சுடச்சுடச் செய்திகளை வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  >>>>>

  ReplyDelete
 3. திருச்சி வலைப்பதிவர்கள் சார்பில் நானும் நீங்களுமாவது, பெரியவர் திரு. GMB ஐயா அவர்களை நேரில் சந்தித்துப் பேசி வரவேற்பு அளித்தது நமக்கும் சந்தோஷமாக இருந்த்து.

  நம்மை சந்தித்ததில் அந்த தம்பதியினருக்கும் மிகுந்த சந்தோஷம் என்பதை நம்மால் நன்கு உணர முடிந்தது.

  >>>>>

  ReplyDelete
 4. //பின்குறிப்பு:
  இதில் இடம் பெறாத சில படங்களை வை.கோபாலகிருஷ்ணன் (திரு VGK ) அவர்கள் வெளியிடும் பதிவில் எதிர்பார்க்கலாம்//

  ;))))) ஆஹா, அதுபோல ஏதும் விடுபட்ட படங்கள் என் கேமராவில் சிக்கியுள்ளதா எனப்பார்த்து, 05.07.2013 வெளியிட்வுள்ள என் அடுத்த பதிவினில் கொண்டுவர முய்ற்சிக்கிறேன்.

  சூடான சுவையான தங்களின் இந்தப்பதிவுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

  >>>>>

  ReplyDelete
 5. திரு. GMB ஐயாவின் விருப்பப்படி, திரு ரிஷபன் அவர்களையும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களையும் நான் போனில் தொடர்புகொண்டு, இந்த சந்திப்புக்கு அவர்களையும் அழைத்துவர எவ்வளவோ முயற்சித்தேன்.

  அவர்கள் இருவருக்குமே வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது.

  விசேஷ நாளான 3rd July யில், காலை எழுந்த்து முதல், இரவு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டின்னர் வரை பலவித Tight Schedules என் பிள்ளைகளால் திட்டமிட்டிருந்தும், மாலை 4.15 முதல் 5.45 வரை சுமார் 90 நிமிடங்கள் பல்வேறு விஷயங்களை நம்மால் மனம் விட்டுப்பேச முடிந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

  ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இரவு விருந்துக்குத் தங்களையும் அழைக்கத்தான் ஆசைப்பட்டேன்.

  நீங்கள் எல்லோருமே வேறு சில அவசர வேலைகள் இருப்பதாகச்சொல்லி விட்டதால், 5 STAR CHOCOLATE உடன் சிம்பிளாக நிறுத்திக்கொண்டு விட்டேன். ;)))))

  ReplyDelete
 6. இனிய சந்திப்பு... மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. இதுபோன்ற சந்திப்புகள் தொடரட்டும்... நன்றி...

  ReplyDelete
 8. மூத்த பதிவர்களின் சந்திப்பில் நேரில் கலந்துகொண்டதுபோன்ற உணர்வு தங்கள் பதிவைப் படித்ததும். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி > ராஜி said...

  // மூத்த பதிவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!அவரின் வழிக்காட்டுதல் நமக்கு தேவை //

  திரு GMB அவர்களும் பேசும்போது சிலவற்றைச் சொன்னார். தனது பதிவுகளில் சினிமா, அரசியல் இவர்களைத் தவிர்த்துவிடுவதாகச் சொன்னார். திரு VGK அவர்களும் “ அவைகளை எழுதுவதற்கென்று சிலர் இருக்கும் போது நாம் வேறு ஏன் எழுதவேண்டும் “ என்றார்.

  ReplyDelete
 10. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
  // வணக்கம் ஐயா, அங்கு அளிக்கப்பட்ட சூடான சுவையாக தூள் பக்கோடாக்கள் போலவே, சுடச்சுடச் செய்திகளை வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. //
  திரு VGK அவர்களுக்கு வணக்கம்! அங்கு அளிக்கப்பட்ட சூடான சுவையாக தூள் பக்கோடாக்களை நன்கு ருசித்து சாப்பிட்டதைப் போலவே, உடனுக்குடன் எனது வலைப் பதிவில் கருத்து சொன்னதற்கு நன்றி!

  ReplyDelete
 11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

  // திருச்சி வலைப்பதிவர்கள் சார்பில் நானும் நீங்களுமாவது, பெரியவர் திரு. GMB ஐயா அவர்களை நேரில் சந்தித்துப் பேசி வரவேற்பு அளித்தது நமக்கும் சந்தோஷமாக இருந்த்து. நம்மை சந்தித்ததில் அந்த தம்பதியினருக்கும் மிகுந்த சந்தோஷம் என்பதை நம்மால் நன்கு உணர முடிந்தது. //

  உண்மைதான்! திருச்சியில் உள்ள பதிவர்கள் அனைவரும் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இந்த பதிவை காணும் திருச்சி பதிவர்கள் தங்கள் விவரஙளைத் தெரிவித்தால், பிறிதொரு நாளில் அனைவரும் சந்திக்க தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

  // ;))))) ஆஹா, அதுபோல ஏதும் விடுபட்ட படங்கள் என் கேமராவில் சிக்கியுள்ளதா எனப்பார்த்து, 05.07.2013 வெளியிடவுள்ள என் அடுத்த பதிவினில் கொண்டுவர முய்ற்சிக்கிறேன். //

  அன்று உங்கள் கேமராவில் எடுத்த அனைத்து படங்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் உங்களைப் போல நகைச்சுவையோடு எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அந்த சந்திப்பை என்னால் எழுத இயலவில்லை. மேலும் உங்கள் வாசகர் வட்டம் பெரியது. அனைவரும் நீங்கள் இந்த சந்திப்பை எப்படி எழுதப் போகிறீர்கள் என்று உங்களையே எதிர்பார்ப்பது போல் எனக்கு ஒரு பிரமை. தனிப் பதிவாக போடவும்..

  ReplyDelete
 13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 )

  // ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இரவு விருந்துக்குத் தங்களையும் அழைக்கத்தான் ஆசைப்பட்டேன்.
  நீங்கள் எல்லோருமே வேறு சில அவசர வேலைகள் இருப்பதாகச்சொல்லி விட்டதால், 5 STAR CHOCOLATE உடன் சிம்பிளாக நிறுத்திக்கொண்டு விட்டேன். ;))))) //

  உங்கள் அன்பிற்கு நன்றி! உங்கள் குடும்பவிழாவில் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரத்தை பயன்படுத்தியது நல்ல விஷயம்தான்.

  நேற்று (03.07.2013) உங்களது திருமண நாள்! நேற்றே நேரில் மூத்த பதிவர் திரு GMB அவர்களின் சந்திப்பின்போது எனது வாழ்த்துக்களைச் சொல்லி விட்டேன்! இருந்தாலும் மறுமுறையும் இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்! தங்களுக்கு, எனது உளங்கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மறுமொழி > பழனி. கந்தசாமி said...
  // நல்ல சந்திப்பு. //
  அய்யா! உங்களையும் சந்திக்க வேண்டும்! நன்றி!

  ReplyDelete
 15. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  // இனிய சந்திப்பு... மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்... //
  சகோதரரின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 16. அருமையான படங்களுடன் அன்பான சந்திப்பு. பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 17. திரு GMB ஐயா அவர்களின் திருச்சி விஜயம் பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட என் பதிவினிலும் வெளியிடப்பட்டுள்ளன.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  http://gopu1949.blogspot.in/2013/07/20.html

  அன்புடன் VGK

  ReplyDelete
 18. பதிவர்கள் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி ஐயா. படங்களும் அருமை. வாய்ப்பு கிடைக்கும் போது அனைவரும் சந்திக்கலாம்.

  ReplyDelete
 19. இனியதொரு மாலைப் பொழுதில் நிகழ்ந்த சந்திப்பு மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுததுகின்றது அய்யா. எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றேன். இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் அய்யா.

  ReplyDelete
 20. மறுமொழி > ஸ்கூல் பையன் said...
  // இதுபோன்ற சந்திப்புகள் தொடரட்டும்... நன்றி... //
  தொடர்ந்தால் நல்லதுதான்.

  ReplyDelete
 21. மறுமொழி > வே.நடனசபாபதி said...
  // மூத்த பதிவர்களின் சந்திப்பில் நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு தங்கள் பதிவைப் படித்ததும். பகிர்ந்தமைக்கு நன்றி! //
  எப்போதும் இனிய கருத்துக்களைக் கூறும் வங்கி உயர் அதிகாரி திரு வே நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > Sasi Kala said...
  சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
  // திரு GMB ஐயா அவர்களின் திருச்சி விஜயம் பற்றிய செய்திகள் கீழ்க்கண்ட என் பதிவினிலும் வெளியிடப்பட்டுள்ளன. //
  அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! விரவில் வருகிறேன்!

  ReplyDelete
 24. மறுமொழி > கோவை2தில்லி said...
  சகோதரிக்கு நன்றி! தங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.

  ReplyDelete
 25. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
  ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி! விரைவில் உங்கள் வலைப்பக்கம் வருவேன்.

  ReplyDelete
 26. பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. அருமையான படங்களுடன் சந்திப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.
  Eniya vaalththu.
  Vetha.Elangathilkam.

  ReplyDelete

 28. அன்பின் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு, இன்று காலைதான்வீட்டிற்கு வந்தேன். உண்மை சொல்லப் போனால் உங்கள் அன்பில் சிக்குண்டு நெகிழ்ந்து போனேன் என்பதே நிஜம். பதிவுலகில் எனக்கென்று ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த உமக்கும் திரு வைகோ வுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. பெங்களூர் வர சந்தர்ப்பம் கிடைத்தால் தெரிவிக்கவும். . மீண்டும் சந்திப்போம்.

  ReplyDelete
 29. பதிவுலகில் இதைபோன்ற நட்புக்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. திரு GMB அவர்களுடன் சேர்ந்து நானும் உங்களை எங்களூருக்கு அழைக்கிறேன். திரு VGK அவர்கள் இங்கு வந்திருந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அதேபோல திருமதி மஞ்சுவையும் சந்திக்க முடியவில்லை.

  எல்லோரையும் சந்திக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
  புகைப்படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 30. படிக்கப் படிக்க பரவசம்
  மன ரீதியாக இணைந்தபின் நேரில் சந்திப்பது
  நிச்சயம் அதிக மகிழ்வைத் தரும்
  படங்களுடன் பதிவு அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
  // பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி. //
  பாராட்டிய சகோதரருக்கு நன்றி!

  ReplyDelete
 32. மறுமொழி > kovaikkavi said...
  இனிய வாழ்த்து சொன்ன சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 33. மறுமொழி > G.M Balasubramaniam said...
  இந்த பதிவின் நாயகர் பெரியவர் திரு GMB அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 34. மறுமொழி > Ranjani Narayanan said...
  // எல்லோரையும் சந்திக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
  புகைப்படங்கள் பார்த்து மகிழ்ந்தேன். //
  சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
 35. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
  கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
 36. Profile படத்திற்கும் இந்த படத்திற்கும் உங்கள் உருவம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் ரசித்தேன்

  ReplyDelete
 37. மறுமொழி > Ramani S said... (1, 2 )
  // படங்களுடன் பதிவு அருமை பகிர்வுக்கு வாழ்த்துக்கள் )
  கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
 38. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
  // Profile படத்திற்கும் இந்த படத்திற்கும் உங்கள் உருவம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் ரசித்தேன் //

  தன்விவரம் (PROFILE) புகைப்படம் எடுத்து ஒருவருடம் ஆகிறது. இப்போது எனது வயது 58 முடிந்து 59 நடந்து கொண்டு இருக்கிறது. எனக்கு தலை நரைக்கவில்லை. (பரம்பரை) ஆனால் மீசை மட்டும் எனக்கு நரைத்து விட்டது. உடல் பருமன் கூடும்; குறையும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 39. நான்தான் உங்களை சந்திக்கும் இனிய வாய்ப்பை இழந்துட்டேன். வரும் மாதம் அவசியம் வருகிறேன். சந்திப்பு விவரங்களை படங்களுடன் படித்தது மகிழ்ச்சி. நான் வடிவமைத்த மகாபலிபுரம் புக்கை நீங்க பரிசளித்தது கண்டு கூடுதல் மகிழ்ச்சி.

  ReplyDelete
 40. மறுமொழி > பால கணேஷ் said..

  // நான்தான் உங்களை சந்திக்கும் இனிய வாய்ப்பை இழந்துட்டேன். வரும் மாதம் அவசியம் வருகிறேன். சந்திப்பு விவரங்களை படங்களுடன் படித்தது மகிழ்ச்சி. நான் வடிவமைத்த மகாபலிபுரம் புக்கை நீங்க பரிசளித்தது கண்டு கூடுதல் மகிழ்ச்சி. //

  உங்களை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் திரு VGK அவர்களுக்கு கொடுத்த ” மகாபலிபுரம் “ என்ற நூல் நீங்கள் வடிவமைத்த நூல் என்று அறிய மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்லிய பிறகுதான் என்னிடம் இருந்த புத்தகத்தில் பார்த்தேன்.
  ( நூல் வடிவமைப்பு: பா.கணேஷ் ) நன்றாக வடிவமைப்பு செய்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete