Monday, 1 July 2013

கூகிள் ப்ளஸ் (GOOGLE PLUS) – சில பிரச்சினைகள்.எனது மின்னஞ்சலில் அடிக்கடி வரும் செய்தி,  இன்னார் உங்களை Google+ இல் சேர்த்துள்ளார் என்பதாகும். எனக்கும் கூகிள் ப்ளஸ்சில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைதான். ஆனால் அதில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக நான் GOOGLE + -  இல் பகிர்ந்து கொள்வதில்லை. பின்னாளில் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். எனவே நண்பர்களே யாரும் என்மீது வருத்தமோ கோபமோ அடையவேண்டாம்.


முகப்பு (PROFILE ) விவரங்கள்:

நான் எந்த பதிவரையும் அவரது பதிவுகளை வைத்தோ அல்லது அவரது PROFILE  விவரங்களை பார்த்த பின்னரோ அவருடைய பதிவில் அல்லது எனது பதிவில் Google நண்பர்கள்  என்ற கணக்கில் ( Google Friend Connect ) சேருவது வழக்கம். ஆனால்  Google+ இல் இந்த விவரங்கள் சரியாக கிடைப்பதில்லை. அவரை வட்டத்தில் சேர்ப்பதன் மூலம் அவரைப் பின்தொடரலாம் மற்றும் அவருடன் பகிரலாம் என்றும், ஆல்பங்கள் பகிரப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவர் இதுவரை உங்களிடம் எதுவும் பகிரவில்லை என்றும் “ செய்திகள் கிடைக்கும். ஒருவரைப் பற்றிய விவரம் தெரியாத நிலையில் அவருடைய வட்டத்தில் நாம் சேருவதோ அல்லது நமது வட்டத்தில் அவர் சேருவதோ யோசிக்க வேண்டிய விஷயம்.


கருத்துரைப் பெட்டி ( COMMENTS BOX )

கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவு ஒன்றில் ( http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_20.html ) நான் இட்ட கருத்துரை இது.

கவிஞருக்கு! நான் எனது கருத்துரைகளை MICROSOFT WORD - இல் பதிந்து கொள்வேன். பின்னர் நகலெடுத்து கருத்துரைப் பெட்டியில் இடுவேன். முன்பு உங்கள் பதிவு GOOGLE BLOGGER - இல் இருந்த போது இவ்வாறு செய்ய முடிந்தது. விரிவாகவும் கருத்துரை தர முடிந்தது. ஆனால் இப்போது நீங்கள் GOOGLE PLUS - இற்கு மாறிய பிறகு அவ்வாறு நகலெடுத்து ஒட்ட இயலவில்லை. கருத்துரையையும் சுருக்கமாக எழுத வேண்டியுள்ளது. மின்வெட்டு எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் இன்னும் சிரமம். மேலும் GOOGLE PLUS இல் பதிவர்களுக்கு பல அசௌகரியங்கள் உள்ளன. ம்ற்றவர்களையும் யோசனையை கேட பின்னர் பழையடியே blogger இற்கு மாறவும். இரண்டையுமே நீங்கள் தொடரலாம்.


சுப்புத்தாத்தா அவர்களது வலைப்பதிவு ஒன்றில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொன்ன கருத்துரை. வருமாறு ... ...

உங்கள் தளத்தில் கருத்து சொல்வதென்றால் எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும்.... ஏற்கனவே சொல்லி உள்ளேன் :

வலைத்தளம் வைத்துள்ள நண்பர்களுக்கு :

சமீபத்தில் கூகிள் பிளஸ், வலைத்தளங்களில் கருத்துரைப்பெட்டி வைக்க எளிதான வழிமுறையை அறிமுகம் செய்தது அனைவரும் அறியலாம்... அதனால்... ?????
1. G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
2. அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது.
3. blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அறிய கீழ் உள்ள எனது நண்பர் தளத்தில் அறியவும்...

http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html


எனவே கருத்துரை இடுவதில் Google+ இல் பல சிரமங்கள் உள்ளன.


சமூக வலைத்தளம் ( SOCIAL NETWORK):


இப்போது இண்டர்நெட்டில் மற்றவர்களோடு நண்பர்களாக இணைந்து கொள்ள ORKUT, FACEBOOK, TWITTER என்ற வரிசையில் இப்போது Google+ வந்துள்ளது. பொதுவாக சமூக வலைத்தளங்களில் ( அதிலும் FACEBOOK - இல் தான்) சேருவதற்கு இளைஞர்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இதற்காகவே FACEBOOK,  GOOGLE + சென்று வந்தேன்.  ஒரு வலைப்பதிவில் ( BLOG )எழுதுவதில் இருக்கும் மனநிறைவு மற்றவற்றில் இல்லை.

இணையம் என்பது ஒரு கத்தியைப் போன்றது. ஆக்கம் அழிவு இரண்டினுக்கும் அதை பயன்படுத்தலாம். மேல் நாட்டினர் சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் நல்ல சமூக செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.  . ஆனால் நமது நாட்டில் தனித்தனி குழுக்களாக இயங்குவதோடு ஜாதி, மதம் இவைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இந்த சமூக வலைத்தளங்களிலும் இப்போது மோசடி பேர்வழிகள் நுழைந்து விட்டனர். நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.  


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 

30 comments:

 1. //ஆனால் அதில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக நான் GOOGLE + - இல் பகிர்ந்து கொள்வதில்லை. பின்னாளில் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். எனவே நண்பர்களே யாரும் என்மீது வருத்தமோ கோபமோ அடையவேண்டாம்.//

  இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது, ஐயா?

  மகிழ்ச்சி அடையுங்கள்.

  நானும் இதுபோன்ற எந்த அழைப்புக்கள் வந்தாலும், அது யாரிடமிருந்து வந்தாலும், DELETE செய்துவிடுவது தான் வழக்கம்.

  Google+ மட்டுமல்ல இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. வரும் எல்லாவற்றையுமே DELETE செய்வது மட்டுமே என் வழக்கம். ஏற்கனவே ஒருசில கசப்பான அனுபவங்களும் இதில் எனக்குக் கிடைத்து விட்டன.

  >>>>>

  ReplyDelete
 2. // இந்த சமூக வலைத்தளங்களிலும் இப்போது மோசடி பேர்வழிகள் நுழைந்து விட்டனர். நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. //

  மோசடிப்பேர்வழிகள் தான் அதிகமாக உள்ளனர் என்பது என் அனுமானம். கவனமாகவே இருப்போம்.

  பகிர்வுக்கும் எச்சரிக்கைக்கும் நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 3. //ஒரு வலைப்பதிவில் ( BLOG ) எழுதுவதில் இருக்கும் மனநிறைவு மற்றவற்றில் இல்லை.//

  யார் என்று தெளிவாகச் சொல்லி வெளிப்படையாக எழுதுவோருக்குப் பிரச்சனை ஏதும் இல்லை.

  இதிலும் பல புனைப்பெயர்கள், ஆணா பெண்ணா எனத்தெரியாமலும், தெரிவிக்காமலும் பலர் ஏதேதோ இந்திரஜித் வேலைகள் செய்து எழுதி வருகிறார்கள். மொத்தத்தில் இதிலும் முகமூடிகள் அதிகம்.

  //இணையம் என்பது ஒரு கத்தியைப் போன்றது. ஆக்கம் அழிவு இரண்டினுக்கும் அதை பயன்படுத்தலாம். //

  ஆமாம். சரியாகவே சொல்லிட்டீங்க, பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. மிகச் சரியாக சொன்னீர்கள். கவனமுடன் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 5. இந்த பிரச்சனையால் சுப்புத்தாத்தா அவர்கள் ஒரு தளத்தையே (http://subbuthatha72.blogspot.in/) புதியதாக ஆரம்பித்து உள்ளார்... அவரின் பழைய தளத்தில் (http://subbuthatha.blogspot.com/) மறுபடியும் பழைய Blooger comment box வரும்படி செய்கிறேன் என்று அவரின் தளத்திலேயே சொல்லி உள்ளேன்... அவரிடமிருந்து பதில் இன்னும் வரவில்லை...

  அவ்வாறு மாற்றினால்... எப்போது அவர் G+ கருத்துரைப்பெட்டி வைத்தாரோ, அதன் பிறகு பகிர்ந்த பதிவுகளில் வந்த கருத்துரைகளை எல்லாம் சேமித்து கொண்டு பிறகு மாற்ற வேண்டும்... பதிவர்கள் பதிவிடும் போது G+ ல் எந்த option செலக்ட் செய்து இட்டார்களோ, அதைப் பொறுத்து, அந்த கருத்துரைகள் அந்தந்த பதிவுகளில் இருக்காது... அதனால் சேமித்து கொண்டு பிறகு மாற்ற வேண்டும்... (அந்த கருத்துக்கள் அவசியம் இருந்தால்...)

  எடுத்துக்காட்டு : சமீபத்தில் ஒரு நண்பருக்கு மாற்றிக் கொடுத்தேன்... கீழே உள்ள தளத்தில் கருத்துரையைப் பாருங்கள்... (நிறைய பகிரவில்லை... புதிய பதிவர்... அதனால் நிறைய கருத்துரைகள் இல்லை...)

  http://kmurugaboopathy.blogspot.com/2013/06/10th.html

  Google Friend Connect என்றோ முடிந்து விட்டது... புது தளத்தில் வைக்க முடியாது...

  G+ Profile ---> உட்பட பல பிரச்சனைகள் உண்டு... அதனால் என் தளத்திலும் கூட G + Profile
  வைக்கவில்லை... இன்னும் நிறைய சொல்லலாம்... சுருக்கமாக முகநூலுக்கு போட்டியான G + : அதிக கவனம் தேவை...

  கருத்திட வருபவர்களுக்கு : Blooger comment box வேண்டுமென்றால், dindiguldhanabalan@yahoo.com தொடர்பு கொள்ளவும்... நன்றி...

  ReplyDelete
 6. பல தகவல்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!

  ReplyDelete
 7. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

  // Google+ மட்டுமல்ல இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. வரும் எல்லாவற்றையுமே DELETE செய்வது மட்டுமே என் வழக்கம். ஏற்கனவே ஒருசில கசப்பான அனுபவங்களும் இதில் எனக்குக் கிடைத்து விட்டன. //

  முதலில் எனக்கும் இவற்றை நீக்கம் செய்வதில் குழப்பம் இருந்தது. FACEBOOK – இல் கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக நானும் இப்போது நீக்கம் (DELETE) செய்து விடுவதுதான் வழக்கம்.

  ReplyDelete
 8. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

  // மோசடிப்பேர்வழிகள் தான் அதிகமாக உள்ளனர் என்பது என் அனுமானம். கவனமாகவே இருப்போம். //

  கவனமாகவே இருப்போம்.

  ReplyDelete
 9. பயனுள்ள பகிர்வு
  வெளிப்படையான விரிவான பகிர்வுக்கு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. // இதிலும் பல புனைப்பெயர்கள், ஆணா பெண்ணா எனத்தெரியாமலும், தெரிவிக்காமலும் பலர் ஏதேதோ இந்திரஜித் வேலைகள் செய்து எழுதி வருகிறார்கள். மொத்தத்தில் இதிலும் முகமூடிகள் அதிகம். //

  ஆமாம் உண்மைதான். ஒரு ஆண் பதிவர் பெண் பெயரில் பதிவை போட்டுக் கொண்டு , PROFILE இல் பெண் படங்களையும் மாற்றி மாற்றி காட்டுகிறார். இதில் அவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

  மூன்று முறை எனது வலைப் பதிவிற்கு வந்து கருத்துரை தந்த அன்புள்ள திரு VGK அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 11. மறுமொழி > Sasi Kala said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 12. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // Google Friend Connect என்றோ முடிந்து விட்டது... புது தளத்தில் வைக்க முடியாது... //

  புதிய செய்தியாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி!
  வலைப் பதிவர்கள் அனைவருக்கும் ந்ல்லெண்ணத்தின் அடிப்படையில் நல்ல கருத்துக்களை வழங்கிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 13. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said.

  ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரியின் பாராட்டுக்கு நன்றி!

  ReplyDelete
 14. மறுமொழி > Ramani S said... ( 1, 2)

  கவிஞரின் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

  ReplyDelete
 15. எந்த ஆய்வும் நான் செய்வதில்லை! என்னால் முடிந்தவரை(வலைதளம், முகநூல் எழுதுவேன்!

  ReplyDelete
 16. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 17. நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற சமூக வலைதளங்கள் ஒரு மேய்ச்சல் மைதானம் போன்றது. உங்கள் பார்வை தான் முக்கியம். நீங்கள் சொன்னது போல வலைபதிவில் எழுதும் சுகம் வேறு எதிலும் கிடையாது. ஆனால் எழுதவற்கான அத்தனை புறச்சூழலும் இந்த சமூக வலைதளங்களில் உள்ளே நுழைந்து வெளியே வரும போது உங்களுக்கு பல விதங்களில் கிடைக்கும். மற்றபடி நட்பு, நட்பில்லை என்பது போன்ற விபரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம்.

  ReplyDelete
 18. கூகிள் பிளஸ் ல் உங்களை இணைத்திர்க்கிறார் என்று வந்தால்
  அவரைப்பற்றி நன்கு நேரடியாகவோ அல்லது மற்ற தொடர்பு மூலமாகவோ
  அறிந்தால் மட்டுமே இணைப்பது நலம்.

  கூகுள் மட்டுமல்ல, தினமுமே, இன்னும் பல தொடர்பு தளங்கிலே தன்னை இனைத்துக்கொண்ட நண்பர்கள் சிலர் தொடர்ந்து செய்தி அனுப்புகிறார்கள்

  இதில் சில ஸ்கில், டயாக ம்பளர், அற்கட், லிங்க் இன், . இவைகளில், தொழில் ரீதியாக செயதவரில் படப்போருக்கு இன்னும் சில அறிமுகங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.

  இருப்பினும், இனி, புதிய தொடர்புகளால் என்ன பயன் ? என்று நீங்கள் என்னும் நேரத்தில் இவற்றினை தவிர்ப்பது சரியே.

  இன்னும் சில போடோ தளங்களும் உள்ளன. துவக்கத்தில் இலவசம் என்று சொல்லி நமது விவரங்களைப் பெற்று அவற்றினை விற்று விடுக்கிறார்கள்.

  எச்சரிக்கை தேவை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 19. வெளிப்படையான பதிவு. எனக்கு தற்சமயம் இருப்பவைகளையே உபயோகிக்க நேரமில்லை. அதுவே எனக்கு போதுமானதாக உள்ளது. தாங்கள் கூறுவதுபோல இணையம் கத்தியை உபயோகப்படுத்துவது போலத்தான். நன்றி

  ReplyDelete
 20. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  // நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற சமூக வலைதளங்கள் ஒரு மேய்ச்சல் மைதானம் போன்றது. உங்கள் பார்வை தான் முக்கியம் //
  ஜோதிஜி சார்! நீங்கள் சொல்வது சரிதான். வாசகருக்கு அலுப்பு தட்டாமல் சொல்லும் முறையையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்..

  // நீங்கள் சொன்னது போல வலைபதிவில் எழுதும் சுகம் வேறு எதிலும் கிடையாது. //

  வலைப்பதிவில் எழுதுவது, அது எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைப்பது, நமக்கு நாமே எழுத்தாளர், எடிட்டர், ஆசிரியர் என்ற எண்ணம் போன்றவற்றில் மனதில் உண்டாகும் அந்த உற்சாகமே தனிதான்.

  // ஆனால் எழுதவற்கான அத்தனை புறச்சூழலும் இந்த சமூக வலைதளங்களில் உள்ளே நுழைந்து வெளியே வரும போது உங்களுக்கு பல விதங்களில் கிடைக்கும். மற்றபடி நட்பு, நட்பில்லை என்பது போன்ற விபரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம் //

  இவற்றில் உள்ள ஏகப்பட்ட விஷயங்கள், எனக்கு நேரமின்மை போன்றவற்றால் முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 21. மறுமொழி > sury Siva said...

  // கூகிள் பிளஸ் ல் உங்களை இணைத்திர்க்கிறார் என்று வந்தால் அவரைப்பற்றி நன்கு நேரடியாகவோ அல்லது மற்ற தொடர்பு மூலமாகவோ அறிந்தால் மட்டுமே இணைப்பது நலம்.//

  தனது வலையுலக அனுபவத்தில் சுப்பு தாத்தா சொன்ன யோசனையை ஏற்றுக் கொள்கிறேன்.

  // இன்னும் சில போடோ தளங்களும் உள்ளன. துவக்கத்தில் இலவசம் என்று சொல்லி நமது விவரங்களைப் பெற்று அவற்றினை விற்று விடுக்கிறார்கள். //

  நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி!


  ReplyDelete
 22. மறுமொழி > Packirisamy N said...

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 23. தகவல்களுக்கு நன்றி ஐயா. கூகிள் ப்ளஸ்க்கு நான் இதுவரை சென்றதேயில்லை... பிளாக்கரோடு சரி...:)

  ReplyDelete
 24. மறுமொழி > கோவை2தில்லி said...
  // தகவல்களுக்கு நன்றி ஐயா. கூகிள் ப்ளஸ்க்கு நான் இதுவரை சென்றதேயில்லை... பிளாக்கரோடு சரி...:) //

  நீங்கள் செய்வது சரிதான். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 25. பல விஷயங்கள் இதில் பிரச்சனை தான்.

  புரியாத விஷயம் என்பதால் நான் G+-ல் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை!.

  ReplyDelete
 26. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 28. // ஒரு வலைப்பதிவில் ( BLOG )எழுதுவதில் இருக்கும் மனநிறைவு மற்றவற்றில் இல்லை.//

  உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 29. மறுமொழி > வே.நடனசபாபதி said...
  // ஒரு வலைப்பதிவில் ( BLOG )எழுதுவதில் இருக்கும் மனநிறைவு மற்றவற்றில் இல்லை.//
  // உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.//

  சூழ்நிலைகள் காரணமாக இந்த பதிவுக்கு நீங்கள் எழுதிய கருத்துரைக்கு மறுமொழி தர விட்டுப் போய் விட்டது. மன்னிக்கவும். இன்றுதான் பார்த்தேன். நான் ஒரு BLOGGER ஆக இருப்பதில் இருக்கும் சந்தோஷம் மற்றவற்றில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  ReplyDelete