Saturday, 20 July 2013

எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” எழுத்து வடிவ கட்டிடங்கள்      ( தமிழ் பல்கலைக் கழகம்” Photo thanks to www.thehindu.com )

ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமது வலைப்பதிவில் “ கரந்தை தமிழ்ச் சங்கம் “ வரலாற்றினை தொடராக எழுதி வருகிறார். அண்மையில் எழுதிய பதிவில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ எடுத்துக் கொண்ட தகவல்களை எழுதியுள்ளார். (கரந்தை - மலர் 16  http://karanthaijayakumar.blogspot.com/2013/07/16.html ) அந்த கட்டுரையைப் படித்ததும் தமிழ் பல்கலைக் கழகம் குறித்த சில நினைவுகள் வந்தன.


Tamil university library building open ceremony  (Opened by Chief Minister  Dr. M.G.R )

                              
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு இவைகளை ஆராய்ச்சி செய்ய தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம் நிறுவ  ஆவன செய்தார். சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் ( அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று) உருவாக்கப்பட்டது. 
  
இங்கு  குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று.  தமிழ் பல்கலைக் கழகம் அமைந்த இடம் வாகையூர் என்று அழைக்கப் படுகிறது. அங்குள்ள கட்டிடங்களின் அமைப்பு வானத்திலிருந்து பார்க்கும்போது தமிழ் நாடு என்ற எழுத்துக்கள் தோன்றும்படி தொடங்கப்பட்டது. ஆனால் மி மற்றும்  ழ் என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. என்ன காரணத்தினாலோ ( வேறு என்ன? எல்லாம் அரசியல்தான்.) மற்ற எழுத்துக்களின் வடிவில் கட்டடங்கள் கட்டப்படவே இல்லை. அப்போது இண்டர்நெட் வசதி இப்போது உள்ளது போல் கிடையாது. செய்தித் தாள்கள் மூலம் விவரம் அறிந்ததோடு சரி. இப்போது இருக்கும் கட்டிடங்களை  விக்கிமேப்பியாமூலம் காணலாம். மி மற்றும் ழ்என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே  கட்டிடங்கள் இருப்பதைக் காணுங்கள். இங்கே க்ளிக் செய்யுஙகள்.

இங்கு எம்ஜிஆர்  தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினைக் .காணலாம். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக் கழகத்தில், விட்டுப் போன எழுத்துக்கள் வடிவங்களில் கட்டிடங்களை கட்டினால் தமிழ் நாடு நிறைவுறும்.

இது பற்றிய விவரங்களை இணையத்தில் தேடியபோது இந்த செய்தி விவரமாக எங்கும் இல்லை. சென்ற மாதம் வெளியான DECCAN CHRONICLE – இல் (23 ஜூன் 2013) “ Tamil letters shape varsity building “ என்ற தலைப்பில் ப்ரமிளா கிருஷ்ணன் என்பவர் எழுதிய கட்டுரையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதில் வெளிவந்த படம் இது. ( http://www.deccanchronicle.com/130623/news-current-affairs/article/tamil-letters-shape-varsity-building )
 தமிழ் பல்கலைக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில் இந்த செய்தியோ, தமிழ் பல்கலைக் கழகம் தொடங்க எம்ஜிஆர் செய்த உதவிகளைப் பற்றியோ, புகைப் படங்களோ, வரலாறு எதுவும் இல்லை. இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்போது நடக்கும் அரசு எம்ஜிஆர் வழிவந்த அரசு. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழ் பல்கலைக் கழக வளாகத்தில் எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு என்ற வடிவில் அமையும் கட்டிட அமைப்பை முடிக்க வேண்டும் மேலும் தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் எம்ஜிஆர் தொடங்கிய வரலாற்றினையும், துவக்ககால புகைப் படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.கட்டுரை எழுத துணை நின்றவை: (நன்றியுடன்)


www.sthapatimps.org/gallery.html   

 


31 comments: 1. //தமிழ் பல்கலைக் கழக வளாகத்தில் எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” என்ற வடிவில் அமையும் கட்டிட அமைப்பை முடிக்க வேண்டும்.//

  தங்களின் வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதே என் ஆசையும் கூட. தெரியாத தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 2. அறியாத தகவல்
  விரிவான பகிர்வுக்கும் வேண்டுகோளுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அறியாத தகவல்கள் . அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒருவரின் சாதனைகளை அடுத்தவர் மறைப்பது தமிழ்நாடு பெற்ற சாபக்கேடாகும்.. ஆளும் அரசு இப் பணிகளை செவ்வனே நிறைவேற்றவும், வரலாறுகளை வெளிக் கொணரவும் முன்வரல் வேண்டும்.

  ReplyDelete
 4. அறியாத தகவலை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா...

  ReplyDelete
 5. அய்யா தங்களின் பகிர்வும் , வேண்டுகோளும் மனதிற்கு மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. எனது வலைப் பூவில், தமிழ்ப் பல்கலைக் கழகத் தோற்றம் குறித்த செய்திகளைத் திரட்டுவதற்காக, தமிழ்ப் பலகலைக் கழகத்தின் இணைய தளத்திற்கு சென்று பார்த்தேன். அதிர்ச்சிதான் மிஞ்சியது. தமிழ்ப் பல்கலைக் கழக இணைய தளத்தில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை எவ்வளவு தேடியும் கண்டே பிடிக்க முடியவில்லை. தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் துவக்கியவரின் பெயரே இல்லை அய்யா.
  பல ஆண்டுகளுக்கு முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராக இருந்தவர் எனது ஆசிரியர் புலவர் மீனா.இராமதாசு என்பவர். அவர் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப் படத்தினை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்டிட வேண்டும் என்பதே அத்தீர்மானம் ஆகும். தீர்மானம் நிறைவேறியது.ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவப் படம் இன்றுவரை மாட்டப் பட்டதாகத் தெரியவில்லை அய்யா.நினைக்க நினைக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யா.

  ReplyDelete
 6. புதிய தகவல்கள்.பல விஷயங்கள் இது போன்ற பகிர்வுகள் மூலம்தான் அறியப்படுகின்றன. நன்றி

  ReplyDelete
 7. மறுமொழி >வே.நடனசபாபதி said...
  //தங்களின் வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதே என் ஆசையும் கூட. தெரியாத தகவல்களைத் தந்தமைக்கு நன்றி! //
  எல்லோருடைய ஆசையும் அதுவே. நிறைவேற வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 8. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
  // அறியாத தகவல். விரிவான பகிர்வுக்கும் வேண்டுகோளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //
  கவிஞரின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி > நிரஞ்சன் தம்பி said...
  // அறியாத தகவல்கள் . அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒருவரின் சாதனைகளை அடுத்தவர் மறைப்பது தமிழ்நாடு பெற்ற சாபக்கேடாகும்.. ஆளும் அரசு இப் பணிகளை செவ்வனே நிறைவேற்றவும், வரலாறுகளை வெளிக் கொணரவும் முன்வரல் வேண்டும். //

  சரியாகச் சொன்னீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது நம் தமிழ்நாட்டை பிடித்த சாபக்கேடே! சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  //அறியாத தகவலை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி ஐயா... //
  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 11. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
  //அய்யா தங்களின் பகிர்வும் , வேண்டுகோளும் மனதிற்கு மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. //

  ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

  // எனது வலைப் பூவில், தமிழ்ப் பல்கலைக் கழகத் தோற்றம் குறித்த செய்திகளைத் திரட்டுவதற்காக, தமிழ்ப் பலகலைக் கழகத்தின் இணைய தளத்திற்கு சென்று பார்த்தேன். அதிர்ச்சிதான் மிஞ்சியது. தமிழ்ப் பல்கலைக் கழக இணைய தளத்தில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை எவ்வளவு தேடியும் கண்டே பிடிக்க முடியவில்லை.//

  நானும் இந்த கட்டுரைக்காக தமிழ்ப் பல்கலைக் கழக இணைய தளத்தில் மட்டுமன்றி இணையத்தில் GOOGLE SEARCH வழியாகவும் தேடிப் பார்த்து விட்டேன். தமிழ் பல்கலைக்கழகம் தொடர்பாக எம்ஜிஆர் பற்றிய செய்திகள் எங்குமே இல்லை. திட்டமிட்டே வரலாற்றை மறைத்து இருக்கிறார்கள்.

  // தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் துவக்கியவரின் பெயரே இல்லை அய்யா. //

  எவ்வளவு வேதனையான விஷயம் பாருங்கள்.

  //பல ஆண்டுகளுக்கு முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராக இருந்தவர் எனது ஆசிரியர் புலவர் மீனா.இராமதாசு என்பவர். அவர் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப் படத்தினை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்டிட வேண்டும் என்பதே அத்தீர்மானம் ஆகும். தீர்மானம் நிறைவேறியது.ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவப் படம் இன்றுவரை மாட்டப் பட்டதாகத் தெரியவில்லை அய்யா.நினைக்க நினைக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யா. //

  உங்கள் கருத்துரையில் ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றை வேதனையோடு சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 12. மறுமொழி > T.N.MURALIDHARAN said...
  // புதிய தகவல்கள்.பல விஷயங்கள் இது போன்ற பகிர்வுகள் மூலம்தான் அறியப்படுகின்றன. நன்றி //

  உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பார்கள். அது இதுதான் என்று நினைக்கிறேன். மூங்கிற் காற்று முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 13. தமிழ் பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட முதல் சில ஆண்டுகள் நான் எங்களுடைய வங்கி தஞ்சை கிளையில் பணியாற்றியிருக்கிறேன். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பல ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் என்னுடைய கிளையில் கணக்கு வைத்திருந்தனர். அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலம். பல்கலைக்கழகத்தின் பொன்னான காலம் அது. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை சென்றிருந்தபோது எனக்கு அறிமுகமான பலரும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். காரணம் அப்போதிருந்த அரசு பல்கலைக்கழகத்தை சிறப்புடன் நடத்திச் செல்ல போதிய மானியத்தை ஒதுக்கீடு செய்யாததே காரணம் என்றனர். அங்கு அதுவரை நடந்து வந்திருந்த பல தொந்தமிழ் ஆய்வுகள் அரைகுறையாய் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் எம்.ஜீ.ஆர் அவர்களுடைய படங்களையும் அகற்றியிருக்க வாய்ப்புண்டு. எல்லாவற்றிற்கும் இந்த பாழாப்போன அரசியல்தான் காரணம்.

  ReplyDelete
 14. கேள்விப்பட்டுள்ள ஆனால் இவ்வளவு விபரமாகத் தெரியாத தகவல்கள்.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு ந்ன்றிகள், ஐயா.

  ReplyDelete
 15. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
  // எல்லாவற்றிற்கும் இந்த பாழாப்போன அரசியல்தான் காரணம். //
  எதிலும் அரசியல் என்ற, இந்த பாழாய்ப்போன அரசியல் என்று முடியும் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
  அன்புள்ள திரு VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 17. அரசியல் என்பதும் ஒரு வியாபாரம், பிழைப்புக்கு ஒரு வழி என்றானபின் யாரைச் சொல்லி என்ன செய்ய? தெரிந்திராத தகவல்களை அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 18. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழ் பல்கலைக் கழக வளாகத்தில் எம்ஜிஆர் கட்ட நினைத்த “தமிழ் நாடு ” என்ற வடிவில் அமையும் கட்டிட அமைப்பை முடிக்க வேண்டும் மேலும் தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் எம்ஜிஆர் தொடங்கிய வரலாற்றினையும், துவக்ககால புகைப் படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.

  ஆவன செய்தால் நன்றாக இருக்கும். புதிய தகவல் அக்கட்டிடங்களை புகைப்படத்திலாவது காணும் ஆவல் மேலிடுகிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 19. மறந்துபோனதை நினைவு கூர்ந்தமை எல்லோருக்குமே ஆர்வத்தையும் எம்.ஜி.ஆர். பற்றிய நினைவும் அவரின் தமிழ் பற்றும் புரிகிறது.தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 20. தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
  கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > கோவை2தில்லி said...
  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 23. பல அறியாத செய்திகள். அதிர்ச்சியளித்த செய்திகளும் கூட. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் இருக்கும்வரை தமிழின் நிலையும் தமிழன் நிலையும் கவலைக்குரியவையே.

  ReplyDelete
 24. பல அறியாத தகவல்கள்..எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கிடையில் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக் கழகமாவது அதன் பணியை செவ்வனே செய்யப் பிரார்த்திப்போம்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 25. மறுமொழி > கீத மஞ்சரி said...
  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > G.M Balasubramaniam said...
  // பல அறியாத தகவல்கள்..எத்தனையோ எதிர்பார்ப்புகளுக் கிடையில் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக் கழகமாவது அதன் பணியை செவ்வனே செய்யப் பிரார்த்திப்போம்.பகிர்வுக்கு நன்றி. //

  நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்! GMB அவர்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 27. கரந்த ஜெயக்குமாரின் பதிவை நானும் படித்தேன். அவரின் தளத்தில் கருத்திடத்தான் விடமாட்டேனென்கிறது... என்ன பிரச்சனையோ? இப்போது உங்களின் அழகான விரிவான கட்டுரையின் மூலம் உலகத்தமிழ் மாநாட்டை தமி்ழ்நாடே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டிய அந்த வள்ளல் குறித்த பல புதிய செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 28. அறியாத தகவல்....

  இங்கே எல்லாமே அரசியல் தான்! :(

  ReplyDelete
 29. மறுமொழி > பால கணேஷ் said...
  மின்னல்வரிகள் பால கணேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 30. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete