Friday 14 June 2013

வெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ


இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது மனைவியும், மகளும் நர்சரியில் இருந்து ஒரு பூச்செடியை வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். வீட்டின் முன்பக்கம், சுற்றுச் சுவருக்கு உட்புறம், செடியை நட்டு வைத்தார்கள். என்ன செடி என்று கேட்டதற்கு இட்லிப் பூ செடி என்று சொன்னார்கள்.  எனது மகளுக்கு திருமணம் முடிந்து அவரது கணவர் வீடு, சென்று விட்டார். அதன்பிறகு அந்த செடிக்கு நானும் எனது மனைவியும் தண்ணீர் விட்டு கவனித்துக் கொண்டோம். சென்ற ஆண்டு செடி நன்கு பெரிதானதும் பூக்கள் பூத்தன. பூக்கள் சிவப்பாக, நன்கு பெரிதாக இட்லி வடிவத்தில் இருந்தன. அந்த இட்லிப் பூக்களை யாரும் பறிப்பதில்லை. செடியிலேயே பூத்து, செடியிலேயே இருந்து விட்டு, நாளடைவில் காய்ந்து உதிர்ந்து விடும். மனித வாழ்க்கையும் இப்படியேதான் போய் விடுகிறது.

வெட்சிப் பூ:

சிலநாட்களுக்கு முன்னர் வலைப் பதிவில் ஒரு இலக்கியக் கட்டுரை எழுத வேண்டி இருந்தது. தமிழர்களின் போர்முறைகள் பற்றிய கட்டுரை அது. அதில் வெட்சி, கரந்தை என பன்னிரண்டு துறைகளைப் பற்றியும், அந்த மலர்களைப் பற்றியும் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு இருந்தேன். . கல்லூரி நாட்களிலிருந்து வெட்சி , கரந்தை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் அந்த மலர்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது.. படித்த போது இலக்கிய ஆசிரியர்களும் காட்டியதில்லை. நாங்கள் படித்த காலத்தில், இப்போது இருப்பதுபோல்  இவ்வளவு புத்தகங்களோ அல்லது இண்டர்நெட் வசதியோ கிடையாது. குறிப்புகள் எடுக்க எதுவாக இருந்தாலும் நூலகம்தான் ஓட வேண்டும். அதற்கும் நேரம் இருக்காது.  இப்போது வீட்டிலேயே இண்டர்நெட் வந்து விட்டது. எனவே சங்க இலக்கிய மலர்கள் பலவற்றைக் கூகிள் ( GOOGLE ) துணையோடு தேடினேன்.

அப்போது அங்கு தெரிந்த மலர்களில் ஒரு மலர் எங்கள் வீட்டில் உள்ள இட்லிப் பூவாக இருந்தது. அதன் இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப் பூ. இத்தனை நாட்கள் எங்கள் வீட்டில் இருந்து வரும் இட்லிப் பூ, தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் வெட்சிப் பூ என்பதிலும் ஒரு மகிழ்ச்சிதான். வெண்ணிற வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை. எங்கள் வீட்டில் இருப்பது செந்நிற வெட்சி.

எங்கள் வீட்டில் உள்ள வெட்சி செடி:



 




முதற் படம் மற்றும் மேலே உள்ள அனைத்துப் படங்களும் CANON - POWER SHOT A800  என்ற கேமராவால் இன்று (14.06.2013) எடுக்கப்பட்டவை.   

கீழே உள்ள படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னால் NOKIA X2 செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டவை.






இலக்கிய மலர்: 

பண்டைத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாக (நாடுகளாக) இருந்தனர். ஒரு நாட்டினரிடம் இருந்த ஆநிரைகளை கொள்ளையடிக்க,  மற்ற நாட்டினர் தொடுத்த போர் வெட்சிப் போர் எனப்பட்டது. அப்போது வீரர்கள் அடையாளமாக  வெட்சிப் பூவை அணிந்தனர். இலக்கண நூல்கள் வெட்சித் திணை என உரைத்தன.

தமிழ் இலக்கியத்தில் மலர்கள் என்றாலே கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டுதான் நினைவிற்கு வரும். ஆரிய மன்னன் பிரகத்தத்தன் என்பவனுக்கு தமிழைப் பற்றிச் சொல்லும்போது,  அந்த பாட்டில் கபிலர் பல்வேறு மலர்களைப் பற்றி சொல்லுகிறார். வெட்சிப் பூவை 63 ஆவது வரியில் சொல்லுகிறார்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், வெட்சிப் பூவைப் பற்றி வேட்டுவ வரியில் குறிப்பிடுகிறார்.

திருமுருகாற்றுப்படையில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்செங்கால் வெட்சி “ ( வரி எண்.21 ) என்று சிறப்பிக்கிறார்..இதன் பொருள் சிவந்த கால்களை உடைய வெட்சிஎன்பதாகும்.

குறுந்தொகை  209 ஆவது பாடலில் பாலை பாடிய பெருங்கடுங்கோ “ முடச்சினை வெட்சி “ (வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சி) என்று விவரிக்கிறார்.

  இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி “ என்று அகநானூறு (133) சொல்கிறது. 14-8.  ( சிவலின் ( சிவல் - ஒருவகைப் பறவை ) காலிலுள்ள முள்ளை ஒத்த,  அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்) பாடலாசிரியர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்

ஏறு தழுவலின் போது வெட்சிப்பூவை வீரர்கள் சூடிக் கொண்டார்கள். அதனைப் பற்றிச் சொல்ல வந்த புலவர் புல்லிலை வெட்சி “ என்று கலித்தொகையில் (103) சிறப்பிக்கிறார். முல்லைக் கலி - ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்



50 comments:

  1. ஐயா, வணக்கம்.

    நீங்கள் படத்தில் காட்டியுள்ளது மிகவும் அருமையான கலரான பூ. அதை நாங்கள் “இரக்ஷிப்பூ” எனக்கூறுவோம்.

    சிவபெருமானுக்கு சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூ இது. நான் வேலைபார்த்த BHEL CASH SECTION அருகில் இது நிறைய பூத்திருக்கும்.

    கொத்துக்கொத்தாக இருக்கும். பார்க்கவே மிக அழகாக இருக்கும். நான் அவ்வப்போது பூஜைக்கு பறித்து வருவதும் உண்டு.

    பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கீழிருந்து 4 முதல் 7 வரை காட்டியுள்ள படங்களே நான் மேலே சொல்லியுள்ள “இரக்ஷிப்பூ”.. மற்றபடங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது, ஐயா.

    ReplyDelete
  3. வில்வ இலை, சொரக்கொன்னை எனப்படும் மஞ்சள் நிற பூக்கள் + இந்த இரக்ஷிப்பூ ஆகிய மூன்றுமே சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூக்கள்.

    அந்தச்செடியோ / மரமோ உள்ள இடத்தின் கீழே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விடணும் என்று எனக்கு மிகுந்த ஆவலாக உள்ளது, ஐயா.

    ReplyDelete
  4. நானும் இன்றுதான் தெரிந்துகொண்டேன்...தகவலுக்கு மிக நன்றி..

    ReplyDelete
  5. இதுதான் வெட்சி மலரா?! தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனம் வெட்சி மலர் ஆக மலரட்டும் 🙏🌹🌹🌹🙏

      Delete
  6. பூக்களைப் பார்த்தாலே மனதிற்கு இதம்... சந்தோசம்... தங்களின் விளக்கங்கள் அற்புதம்...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வெட்சிப் பூ.... நாங்களும் இதை இட்லிப் பூ என்று தான் சொல்வோம்.

    தகவல்களும் படங்களும் மிக நன்று.

    ReplyDelete
  8. இலக்கியப் பெயர் வெட்சி என அறிந்ததில் மகிழ்ச்சி.

    எங்கள் வீட்டில் வெள்ளை ,சிவப்பு இரண்டுமே இருந்தன இந்த மலரை எங்கள் ஊரில் அலம்பல் மல்லிகை என அழைத்தார்கள்.
    நாங்கள் எக்சோரா என்கின்றோம். மரூன், ரோஸ்,மஞ்சள் எனஇருக்கின்றன. இதில் பல சிறிய இனங்களும் சில காலங்களாக உள்ளன.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. this flower has many medical benefits also

    ReplyDelete
  10. மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )

    திரு VGK அவர்களுக்கு வணக்கம்!
    // நீங்கள் படத்தில் காட்டியுள்ளது மிகவும் அருமையான கலரான பூ. அதை நாங்கள் “இரக்ஷிப்பூ” எனக்கூறுவோம். //

    வெட்சிமலர் எனப்படும் இட்லிப்பூவின் இன்னொரு பெயர், “இரக்ஷிப்பூ” என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    // சிவபெருமானுக்கு சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூ இது. நான் வேலைபார்த்த BHEL CASH SECTION அருகில் இது நிறைய பூத்திருக்கும். கொத்துக்கொத்தாக இருக்கும். பார்க்கவே மிக அழகாக இருக்கும். நான் அவ்வப்போது பூஜைக்கு பறித்து வருவதும் உண்டு. //
    சிவனுக்கு உகந்த பூ என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

    ReplyDelete
  11. மறுமொழி > மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    // கீழிருந்து 4 முதல் 7 வரை காட்டியுள்ள படங்களே நான் மேலே சொல்லியுள்ள “இரக்ஷிப்பூ”.. மற்றபடங்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது, ஐயா. //

    இந்த படத்தில் உள்ள அனைத்து படங்களும் ஒரே செடியின் படங்களே! அனைத்தும் ஒரே செடியின் மலர்களே! வெவ்வேறு நிலைகளில் எடுக்கப் பட்டவை.

    ReplyDelete

  12. நாங்கள் இந்த பூவை வ்ருட்சிப்பூ என்றே அழைக்கிறோம்.

    இதன் இலக்கியப்பெயர் வெட்சிப்பூ ஆ ? சிலப்பதிகாரத்தில் நீங்கள் குறிப்பிடும் வரியை நான் படித்திருப்பினும்
    இந்தப்பூவுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்ததில்லை.

    வெட்சிப்பூ எங்கள் தஞ்சை வீட்டிலும், நான் எனது நிறுவனக்கல்லூரி வளாகத்திலும், இப்பொழுது எங்கள் சென்னை வளசரவாக்கம் சீப்ராஸ் வளாகத்திலும் நிறைய பார்க்கிறோம். இந்த பூ சிவப்பு மட்டுமல்ல, வெள்ளை, மஞ்சள் நிறங்களிலும் இருக்கிறது.

    திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லுவது போல சிவனுக்கு இதை அர்ப்பணிப்பது கண்டிருக்கிறேன்.

    மிக்க நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  13. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (3)

    // வில்வ இலை, சொரக்கொன்னை எனப்படும் மஞ்சள் நிற பூக்கள் + இந்த இரக்ஷிப்பூ ஆகிய மூன்றுமே சிவபூஜைக்கு மிகவும் விசேஷமான பூக்கள். //

    மிக்க மகிழ்ச்சியான தகவல்.

    ReplyDelete
  14. மறுமொழி > ezhil said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மனம் மலர்ந்த ஆராய்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா..
    மகளின் நினைவாக மலரும் மலர் மனதை மகிழ்விக்கிறது ..

    ReplyDelete
  16. Ixora - இட்லிப்பூ.

    கோவை பகுதியில் பூஜைக்கு உபயோகப்படுத்தி பார்த்ததில்லை.

    ReplyDelete
  17. இன்றுதான் இந்தப் பூவைப் பார்க்கிறேன்
    சிவப்பு இட்லிப்பூ எனச் சொல்லலாம் போல உள்ளது
    படங்களுடன் விரிவான பதிவு அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வெட்சிப்பூ வீட்டுக்கு வந்ததோ
    விருந்தளிக்க மனதில் நின்றதோ
    மகிழ்வைத் தேடி வந்ததால்
    மனதில் இன்பம் தந்ததோ

    ReplyDelete
  19. பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்ட வெட்சி பூக்கள் பற்றிய விரிவான பதிவை தந்தமைக்கு நன்றி. மேலும் சில தகவல்கள். Rubiaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதனுடைய தாவரவியல் பெயர் (Botanical Name) Ixora coccinea ஆகும். இது மலையாளத்தில் செத்திப்பூ என்றும் தெலுங்கில் ராம பாணமு என்றும் கன்னடத்தில் கெம்புலகிடா என்றும் இந்தியில் ருக்மிணி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்டு முழுதும் பூக்கக்கூடிய இந்த தாவரம் பல வண்ணங்களில் பூக்களை உடையது. இதில் மட்டும் 400 வகைகள் உள்ளனவாம்.

    தமிழ் இலக்கியத்தில் உள்ள மலர்கள் பற்றி ஒரு விரிவான தொடரை நீங்கள் எழுதலாமே!

    ReplyDelete
  20. மறுமொழி > ராஜி said...

    // இதுதான் வெட்சி மலரா?! தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி //

    நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. ஓ ! இது தான் வெட்சி பூவா? பல முறை பார்த்து பழகிய இப்பூ தான் சங்கப் பாடலில் வரும் பூ என்பதை அறியாமல் போய்விட்டோமே. இதனை நாங்கள் தேன் பூ என்போம். :) மலையாளத்தில் செத்திப் பூ என்பார்கள்.

    ReplyDelete
  22. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // பூக்களைப் பார்த்தாலே மனதிற்கு இதம்... சந்தோசம்... தங்களின் விளக்கங்கள் அற்புதம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்.. //

    சகோதரரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!.

    ReplyDelete
  23. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > மாதேவி said...

    // இந்த மலரை எங்கள் ஊரில் அலம்பல் மல்லிகை என அழைத்தார்கள். //

    இந்த பூவின் இன்னொரு பெயர், அலம்பல் மல்லிகை என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Siev P said...

    // this flower has many medical benefits also //

    சகோதரரின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > sury Siva said...

    // நாங்கள் இந்த பூவை வ்ருட்சிப்பூ என்றே அழைக்கிறோம். //

    ஒவ்வொருவரும் இந்த பூவின் பல பெயர்களையும் தெரிவிக்கின்றனர். இன்னொரு பெயர், ” வருட்சிப் பூ “ என்பதனை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்

    // திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லுவது போல சிவனுக்கு இதை அர்ப்பணிப்பது கண்டிருக்கிறேன். //

    கருத்துரை சொன்ன சூரி சிவா என்ற சுப்பு தாத்தா அவர்களின் அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    //மனம் மலர்ந்த ஆராய்ச்சிப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள் ஐயா.மகளின் நினைவாக மலரும் மலர் மனதை மகிழ்விக்கிறது//

    “ மகளின் நினைவாக மலரும் மலர்” – சரியாகச் சொன்னீர்கள். மகளின் பெயரும் மலர்தான். சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி >பழனி. கந்தசாமி said...

    // கோவை பகுதியில் பூஜைக்கு உபயோகப்படுத்தி பார்த்ததில்லை. //

    அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி >. Ramani S said... ( 1, 2 )

    // இன்றுதான் இந்தப் பூவைப் பார்க்கிறேன் //

    மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமான, மதுரையில் இருக்கும் கவிஞர் இவ்வாறு சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது! பார்த்து இருப்பீர்கள். பெயர் தெரியாமல் இருந்திருக்கலாம்! கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  30. ஆநிரைகளைக் கவர்தல் வெட்சி
    மீட்டல் கரந்தை
    என்று படித்திருக்கின்றேன் அய்யா.
    ஆனால் வெட்சிப் பூ
    எப்படி இருக்கும் என்று
    தெரியாதிருந்தேன் அய்யா.
    வெட்சிப் பூவை
    அடையாளம் காட்டியமைக்கு
    நன்றி அய்யா.

    ReplyDelete
  31. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    என் பதிவிற்காக நாலுவரி கவிதையைத் தந்த கவிஞருக்கு நன்றி!


    ReplyDelete
  32. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // மேலும் சில தகவல்கள். Rubiaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதனுடைய தாவரவியல் பெயர் (Botanical Name) Ixora coccinea ஆகும். இது மலையாளத்தில் செத்திப்பூ என்றும் தெலுங்கில் ராம பாணமு என்றும் கன்னடத்தில் கெம்புலகிடா என்றும் இந்தியில் ருக்மிணி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்டு முழுதும் பூக்கக்கூடிய இந்த தாவரம் பல வண்ணங்களில் பூக்களை உடையது. இதில் மட்டும் 400 வகைகள் உள்ளனவாம். //

    மேலும் சில தகவல்கள் தந்த வங்கியாளர் அவர்களுக்கு நன்றி!

    // தமிழ் இலக்கியத்தில் உள்ள மலர்கள் பற்றி ஒரு விரிவான தொடரை நீங்கள் எழுதலாமே! //

    ஏற்கனவே சங்க இலக்கியத்தில் மலர்கள் என்ற தலைப்பில் நூல்கள் வந்துள்ளன. வலைப் பதிவுகளிலும் எழுதியுள்ளனர். எனவே எனது வாழ்வியல் அனுபவத்தில் சம்பந்தப்பட்டவைகளை மட்டுமே எழுத் உள்ளேன். படிப்பவர்களுக்கும் புதிதாக இருக்கும். தங்கள் ஆலோசனைக்கும் அன்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > Niranjan Thampi said...

    // ஓ ! இது தான் வெட்சி பூவா? பல முறை பார்த்து பழகிய இப்பூ தான் சங்கப் பாடலில் வரும் பூ என்பதை அறியாமல் போய்விட்டோமே. இதனை நாங்கள் தேன் பூ என்போம். :) மலையாளத்தில் செத்திப் பூ என்பார்கள். //

    தங்கள் தகவல் மூலம், இந்த பூவின் வேறு இரண்டு பெயர்கள் ( தேன் பூ, செத்திப் பூ) தெரிந்து கொண்டேன். சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // வெட்சிப் பூவை அடையாளம் காட்டியமைக்கு
    நன்றி அய்யா. //

    கரந்தை ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  35. விருட்சிப்பூ என்றும் சொல்வோம். இட்லிப்பூ என்றும் சொல்வோம். வெந்நிற வெட்சி இதுவரை பார்த்ததில்லை.
    படங்கள் அழகாக உள்ளன.

    ReplyDelete
  36. ஆம் இந்த மலரை உரில் கண்டுள்ளேன் .
    தங்கள் படங்களும் மிக அழகு.
    தகவலும் சிறப்பு. மிக மிக நன்றி.
    இதில் வேறு நிறங்களும் உண்டு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  37. “பிச்சி, இருவாச்சி எங்கே மணக்குது?” – இந்த மலரை இருவாச்சி என்று அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த மலருக்கு மணம் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை.

    ReplyDelete
  38. மறுமொழி > கோவை2தில்லி said...

    // விருட்சிப்பூ என்றும் சொல்வோம். இட்லிப்பூ என்றும் சொல்வோம்.//

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி >kovaikkavi said...

    சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > Packirisamy N said...

    // “பிச்சி, இருவாச்சி எங்கே மணக்குது?” //

    ஒரு கவிதை வரியைத் தெரிந்து கொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  41. வெட்சிப்பூப் பற்றிய இப்பதிவைப் படித்த அன்றே கருத்திட நினைத்து மறந்துபோனேன். சங்க காலப் பாடலில் வரும் வெட்சிப்பூவை இட்லிப்பூ என்றே நாங்களும் சொல்லிவந்தோம். கருவிளம், செருவிளை, சேடல், செம்மல் என்று கபிலர் சுட்டிய பல மலர்கள் நம் தோட்டத்து மலர்கள்தாம் என்று ஒரு தளத்தின்மூலம் அறிந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அழகான படங்கள்! எங்களோடு பகிர்ந்தமைக்கும் இலக்கியத் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  42. மறுமொழி > கீத மஞ்சரி said...

    // அழகான படங்கள்! எங்களோடு பகிர்ந்தமைக்கும் இலக்கியத் தகவல்களுக்கும் மிக்க நன்றி ஐயா. //

    சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  43. Today, while I was at work, my cousin stole my iPad and tested to see
    if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation.
    My iPad is now broken and she has 83 views.
    I know this is entirely off topic but I had to share it with someone!


    Also visit my blog; golf shot gps

    ReplyDelete
  44. REPLY > Anonymous said...
    Dear anonymous (http://golf-tips4u.com/golf-gps ) , thank you for your visit.

    ReplyDelete
  45. இதை பிச்சிப்பூ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பூவாக எடுக்கலாம். இந்த பூக்களை வாயில் வைத்து உறிஞ்சினால் சிறிது இனிப்பாக இருக்கும். அதனால் இதை தேன் பூ என்போம்.

    மிகவும் அழகான மலர்கள். இலக்கியத்திலிருந்து நீங்கள் இந்தப் பூக்கள் பற்றி சொல்லியிருப்பது சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  46. மறுமொழி > Ranjani Narayanan said...

    // இதை பிச்சிப்பூ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பூவாக எடுக்கலாம். இந்த பூக்களை வாயில் வைத்து உறிஞ்சினால் சிறிது இனிப்பாக இருக்கும். அதனால் இதை தேன் பூ என்போம். //

    இது பிச்சிப்பூ கிடையாது. பிட்சிப்பூ என்பது வேறு. வெட்சிப்பூ என்பது வேறு.
    இதன் இன்னொரு பெயர் தேன்பூ என்பதனை சொன்னமைக்கும், கருத்துரைக்கும் சகோதரிக்கு நன்றி.

    ReplyDelete
  47. இதன் மற்றொரு பெயர் பிச்சிப்பூ.
    இதன் பூ மற்றும் இலை தோலில் தோன்றும் அரிப்பு மற்றும் பிப்பு
    ஏற்ற அருமையான மருந்து
    by-
    agriprabu1976@gmail.com

    ReplyDelete
  48. மறுமொழி > Anonymous said... (2)

    // இதன் மற்றொரு பெயர் பிச்சிப்பூ. இதன் பூ மற்றும் இலை தோலில் தோன்றும் அரிப்பு மற்றும் பிப்பு
    ஏற்ற அருமையான மருந்து by- agriprabu1976@gmail.com //

    அன்புள்ள சகோதரர் அக்ரி பிரபு அவர்களுக்கு இது பிச்சிப்பூ கிடையாது. பிட்சிப்பூ என்பது வேறு. வெட்சிப்பூ என்பது வேறு என்றுதான் நினைக்கிறேன். காரனம், கூகிளில் பிச்சிப்பூ என்று தேடினால் வேறு ஒரு பூவின் படம்தான் வருகிறது. தங்கள் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete