Wednesday, 12 June 2013

குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு:



நான் வழக்கமாக டீ சாப்பிடும் கடை. அந்த கடைக்காரர் டீ வியாபாரத்தோடு ஒரு பெட்டிகடை வியாபாரமும் செய்து வருகிறர்ர். டீக்கடையில் மற்ற பொருட்களைவிட குட்கா, பான் மசாலா பொருட்களை மட்டும், கடைக்கு வந்தவுடனேயே பார்வையில் தெரியும்படி தோரணங்களாக தொங்க விட்டிருப்பார். ஒரு ஆட்டோ டிரைவர் வருகிறார். பான்பராக் ஐந்து அல்லது ஆறு பாக்கெட்டுகளை வாங்குகிறார். ஒரு பாக்கெட்டை கடையிலேயே பிரித்து போட்டுக் கொள்கிறார். ஏற்கனவே அவரது வாய் அந்த பாக்கையோ புகையிலையையோ மென்று மென்று பற்கள், ஷோலே படத்தில் வரும் வில்லன் கப்பர்சிங் பற்களைப் போன்று காவியேறி உள்ளன. இந்த ஆட்டோ டிரைவர் போன்று மற்ற டிரைவர்கள், மாணவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் ( குறிப்பாக வட இந்திய தொழிலாளர்கள் ) என்று நிறையபேர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு எத்தனை பாக்கெட் வாங்குகிறார்கள்  என்று  தெரியவில்லை.  யாரும் பான்பராக், பான்மசலா, குட்கா போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்வதால் ஏற்படும் ( வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற  ) தீமைகளை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. கடைக்காரருக்கு  விற்றவரை  லாபம்  தயாரிப்பாளர்களுக்கு கொள்ளை லாபம்.


தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு:   

  

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,  சென்னை, மே. 8, 2013 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை 19.11.2001 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள், குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக கூறி, 2.8.2004 அன்று அறிவிக்கையை ரத்து செய்தது.

தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தன.

தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்என்ற தனித்துறையை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும் புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக்கூடாது என்றும் விதிமுறை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு::

அதிரடியான முடிவுகளை  துணிச்சலாக எடுப்பதில் ந்மது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிகர் யாரும் கிடையாது.  ஒருகாலத்தில் தமிழ்நாடெங்கும் லாட்டரி சீட்டு விற்பனை தமிழக மக்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்தது. ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் இதில் பணத்தை இழந்து கொண்டிருந்தனர். வாங்குகிற தினக் கூலியை, லட்சாதிபதியாகும் அவசரத்தில் அப்படியே இழந்தவர்கள் நிறையபேர். இந்த லாட்டரி சீட்டினை தடை செய்து  (2003 ஆம் ஆண்டு) உத்தரவு போட்டவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.

அன்று ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்தது போலவே இப்பொழுதும் எடுத்து இருக்கிறார். அதைப் போலவே இப்பொழுது மக்கள் நலன் கருதி குட்கா, பான் மசாலா  போன்றவற்றை தடை செய்து உத்தரவு போட்டு இருக்கிறார். துணிச்சலான இந்த நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பாராட்டு.

( முன்பே எழுதி வைத்த பதிவு. எடிட் செய்து இப்போதுதான் பதிவிட முடிந்தது )
 
( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )

23 comments:

  1. அப்படியே டாஸ்மாக்-கும் மூடி விட்டால் பல குடும்பங்களுக்கு நிம்மதி...

    முதல் தடைக்கு...தமிழக முதல்வர்க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு, பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  3. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தை வழி மொழிகின்றேன்.

    ReplyDelete
  4. நல்ல செய்தி. அவசியமான பகிர்வு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் .
    அப்படியே டாஸ்மாக்-கும் மூடி விட்டால் பல குடும்பங்களுக்கு நிம்மதி.//

    en karuththum athuthaan
    pakirvukku vaazhththukkaL

    ReplyDelete
  6. சமூக நோக்கோடு செய்யும் எல்லா காரியங்களையும் பாராட்டத்தான் வேண்டும்

    ReplyDelete
  7. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // அப்படியே டாஸ்மாக்-கும் மூடி விட்டால் பல குடும்பங்களுக்கு நிம்மதி... //

    அதனையும் அவரே செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  8. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    திரு VGK அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தை வழி மொழிகின்றேன். //

    எல்லோருடைய எதிர்பார்ப்பும் இதுவேதான். கருத்துரை தந்த திண்டுக்கல்லாருக்கும் உங்களுக்கும் நன்றி !

    ReplyDelete
  10. மறுமொழி > மாதேவி said...

    // நல்ல செய்தி. அவசியமான பகிர்வு. வாழ்த்துகள் //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    // en karuththum athuthaan pakirvukku vaazhththukkaL //

    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    // சமூக நோக்கோடு செய்யும் எல்லா காரியங்களையும் பாராட்டத்தான் வேண்டும் //

    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. பார்க்கலாம் எந்தளவுக்கு நடைமுறைக்கு வருதுன்னு?!

    ReplyDelete
  14. குட்கா, பான் மசாலா தடை செய்த தமிழக முதல்வர் நிச்சயமாகப் பாராட்டுக்கு உரியவர். பாராட்டுவோம்.

    ReplyDelete
  15. மறுமொழி > ராஜி said...

    // பார்க்கலாம் எந்தளவுக்கு நடைமுறைக்கு வருதுன்னு? //

    உண்மைதான். எல்லாம் அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது.


    ReplyDelete
  16. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    ஆமாம்! எல்லோரும் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவோம்.

    ReplyDelete
  17. இதே போல மதுவிலக்கையும் கொண்டு வந்தால் நல்லது

    ReplyDelete
  18. அம்மா அவர்களை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.. இப்போது எந்தக் கடையிலும் இல்லை ... மீறி விற்றால் அபராதம்.... கட்டுரைக்கு நன்றி..

    ReplyDelete
  19. மறுமொழி > T.N.MURALIDHARAN said...

    / இதே போல மதுவிலக்கையும் கொண்டு வந்தால் நல்லது /

    நல்லதுதான். மூங்கிற்காற்று முரளிதரன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > Advocate P.R.Jayarajan said...

    // அம்மா அவர்களை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.. இப்போது எந்தக் கடையிலும் இல்லை ... மீறி விற்றால் அபராதம்.... கட்டுரைக்கு நன்றி..//

    அட்வகேட் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! மீண்டும் ஒருமுறை அட்வகேட் P R Jayarajan அவர்களுக்கு, எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. நல்ல விஷயம்.

    தில்லியிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னமும் கடைகளில் கிடைக்கிறது. நடைமுறை செய்வதில் உள்ள பிரச்சனைகள் இவர்கள் இப்படிச் செய்யக் காரணமாக இருக்கிறது.

    குடியையும் ஒழித்தால் நல்லது. ஆனால் செய்வார்களா? சந்தேகம் தான்.

    ReplyDelete
  22. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // குடியையும் ஒழித்தால் நல்லது. ஆனால் செய்வார்களா? சந்தேகம் தான். //

    எல்லோருக்கும் சந்தேகம்தான்! இதில் தனிப்பட்ட யாரையும் மட்டும் குற்றம் சாட்ட இயலாது. கறுப்பு ஆடுகள், நடைமுறைச் சிக்கல் என்று பல தடைகள்.

    ReplyDelete